பெண்களுக்கென உடைமாற்றும் அறை உண்டு.
கரையில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது
புராண வரலாறு
ஈழத்து சிவாலயங்களில் வரலாற்றுப் புகழ் மிக்கதாகவும், நாயன்மார்களால் பாடல் பெற்று, மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளைத் தாங்கி உள்ளது.
’ஈழத்துத்திருக்கோயில்கள்-வரலாறு மரபும் ’,’திருக்கேதீச்சரத் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர்’ முதலிய நூல்கள் வாயிலாக இத்தலச்சிறப்புக்கள் எங்களுக்குத் தெரியவந்தன
//ஆதியில் கேதுவினால் பூசிக்கப் பட்டதால் திருகேதீச்சரம் என்றும், பின் மகா துவட்டா என்னும் தேவதச்சன் பூசித்து திருப்பணி புரிந்ததனால் ’மகாதுவட்டாபுரம்’ என்றும் பெயர் பெற்றது என்று கந்தபுராணம், தட்சிண கைலாய மான்மியம் ஆகியவை கூறுகின்றன..
மகாதுவட்டாபுரமே காலப் போக்கில் ”மாந்தோட்டம்” ஆனது.//
சிவபக்தனான் இராவணனைக் கொன்றதால், இராமன் பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க, முன்னேசுவரத்தில் பொன் லிங்கமும், திருகோணேசுவரத்தில் இரத்தினலிங்கமும், திருகேத்தீச்சரத்தில் வெள்ளிலிங்கமும் , பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் இராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார். திருக்கேதிச்சரம் இராமேஸ்வரத்திற்கு முற்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
மேலும் இத்தலத்து இறைவனை அகத்தியமுனிவர், மண்டோதரி, அருச்சுனன் முதலியோர் வழிபட்டதாய் கூறப்படுகிறது. அருச்சுனன் தீர்த்தயாத்திரையின் போது ஈழநாட்டிலுள்ள இத்தலத்தை வணங்கி, பின் நாகர் இனப்பெண்ணை மணந்தார் என்றும் புராணம் கூறுகிறது.
கேதீச்சரநாதனை கெளரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர், தென்கயிலாயநாதர், மத்யசேதுநிவசர், நாகநாதர், இராஜராஜேவரர், நித்தியமணவாளர், பெருந்துறை ஈசன், எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறார்
இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகிய பாலாவி ஆறு பற்றி சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் “மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே” என்றும், சுந்தரர் அருளிய திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ”பாலாவியின் கரைமேல்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. ”பன்வினை போக்கும் பாலாவி” என்றும், ”பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி”என்றும் திருக்கேதீச்சரப்புராணம் கூறுகிறது.
திருக்கோயில் வரலாறு
மாந்தோட்டம் முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியது.மாந்தை துறை முகமென்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது.உரோமர்,பாரசீகர், அரேபியர், சீனா, இந்தியர் முதலிய பல
தேசத்தவர்களுடன் வர்த்தகத தொடர்புகள் மாந்தை துறைமுகத்துக்கு இருந்துள்ளன.
//தந்தையால் நாடு கடத்தப்பட்டு மாந்தைத் துறைமுகத்திற்கு வந்த கலிங்க இளவரசன் விஜயன் ”திருக்கேத்தீச்சரர் கோயில் திருப்பணியை திருத்தமுற செய்வித்தான்” என்று மகாவம்சத்திலே கூறப்ப்டுகிறது.
விஜயன் காலம் கிமு 543. இதிலிருந்து இக் கோயிலின் பழமை தெரியும்.
திருவாசகம் குயிற்பத்திலுள்ள, ”ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பளித்த பெருந்துறை மேயபிரான்” என்பது மாந்தையை குறிக்குமென்பர்.
கி.பி1028ல் இராசேந்திரசோழன் ஆட்சிசெய்த போது இவ்வாலயத்தில் ஏழுநாள் விழாவெடுத்து வைகாசி விசாகத்தில் தீர்த்தவிழா நடத்தியதாகவும், அவன் காலத்தில் கோயில் பெயர்
இராஜராஜேஸ்வரம் என்றும், ஊர் பெயர் இராஜராஜபுரம் என்றும் வழங்கி பாதுகாப்புக்காக கோயிலை சுற்றி நன்னீர், கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது என்றும் இராசேந்திர சோழன் கல்வெட்டு கூறுகிறது.
கி.பி 13ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தர பாண்டியன் இவ்வாலயத்தில் சிற்பவேலைகள செய்தான், 4வது மகிந்தனின் ஆட்சிகாலத்தில் திருகேத்தீச்சுவரம் புண்ணியதலம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பின் விஜயநகர பேரரசர் காலத்திலும் திருக்கேத்தீச்சரம் சிறப்போடு விளங்கியது.//
//கி.பி 1505 ஆம் ஆண்டு போத்துக்கேயர்கள் கோயிலை அழித்து பொருட்களை கொள்ளை அடித்து கோயில் மதில் ,கோபுரம் ஆகியவற்றின் கற்களை கொண்டு ம்ன்னார் துறைமுகத்தை கட்டினர். இதன் பின் மண் மாரியால் கோயில் மண்ணால் மூடப்பட்டு அடர்ந்த காடாய் மாறியது //
//கோயில் நகரம் எனப் புகழ் பெற்ற பெருநகரமாகிய மாதோட்டம் என்னும் நகரமும் பாலாவியாறும் கி.பி 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீசிய பெரும்புயலால் முற்றிலும் அழிந்து சிதைந்தன.
பாலாவி என்னும் ஆறு மேடாகி குளமாகியது
போத்துக்கேயரால் அழிக்கப்பட்டபின் சுமார் மூன்று நூற்றாண்டுகளாகத திருகேத்தீச்சுர ஆலயமும், மாந்தோட்டநகரும் மக்களால் மறக்கப்பட்ட இடமாக மாறியது. //
//கி.பி. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் தோன்றி ஞானபானுவாக விளங்கிய ஆறுமுக நாவலர் இலங்கை மாந்தோட்டத்தின் ஒரு பகுதியில் ‘மறைந்து போய் ஒரு மருந்து இருக்கின்றது”, ஒரு திரவியம் இருக்கின்றது”, தேன் பொந்தொன்று இருக்கின்றது” என்று திருக்கேதீஸ்வரத் திருத்தலத்திலெழுந்தருளிய் திருக்கேதீஸ்வர நாதனை இலங்கைச் சைவமக்களுக்கும் சைவ உலகுக்கும் முதன் முதலில் நினைவூட்டி, உணர்வூட்டி, பிரசாரம் செய்து, அறிக்கை ஒன்றையும், துண்டு வெளியீடுகளையும் வெளியிட்டருளினார்கள். இவ்வாறாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நினைவை மக்களுக்கு அறிவித்து உண்ர்த்திய பெருமை ஆறுமுக நாவலர் பெருமான் அவர்கட்கே உரியதாகும்.
அவர் சைவ அன்பர்கள் பலரையும் கூட்டி திருக்கேதீச்சரத்தை கண்டறியச் செய்தார். அன்பர்கள் நகரின் சிதைவுகளை அகற்றிக் கோயிலை புனர்நிர்மாணம் செய்தனர்.
மறைந்தாகக் கருதப்பட்ட40 ஏக்கர் நிலம் 3100 ரூபாவிற்கு ஏலத்தில் சைவமக்கள் சார்பாக வாங்கி சைவப்பெரியார்கள் நிலத்தில் புதைந்த திருவுருவங்களை கண்டுபிடித்து திருப்பணிகள் செய்தனர். 1903ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
1919 ஆம் ஆண்டு ஆரம்பித்து பலமுறை அன்பர்கள் பலராலும் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அன்பர் திரு. நமசிவாயத்தின் அயராத முயற்சியால் ஆலயம் சிறப்புடன் 2003ல் கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது//
//இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர்மடம், சுந்தரர் மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார் மடம், அம்மன் மடம், பசுமடம், பூநகரி மடம், சபாரத்தினசாமிமடம், சிவராத்திரிமடம், திருவாசக மடம், , திருப்பதி மடம், கெளரீசர்மடம், நாவலர்பெருமான் மடம், விசுவகன்ம மடம், திருக்குறிப்புத்தொண்டர் மடம், என பல மடங்கள் 1990ஆம் ஆண்டு வரை காணப்பட்டன. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் அரசுப்படைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, ஒரு மடம்கூட மிஞ்சவில்லை அழகிய வேலைப்பாடு மிகுந்த தேரும் குண்டுவீச்சில்
தப்பவில்லை. 2003லிருந்து பூஜைகள் நடந்து வருகிறது//
//இலங்கையில் ஆட்சி செய்த சோழ, பாண்டிய மன்னர்களால் சிறப்புடன் விளங்கியது. திருக்கேதீச்சரத்தின் உயர்வு தாழ்வுகளுக்கேற்ப இலங்கை வாழ் மக்கள் வாழ்வும் தாழ்வும் ஏற்பட்டது//என சொல்கிறார்கள்
திருக்கோயில் அமைப்பு
இக்கோயில் ஐந்து நிலைகளுள்ள இராசகோபுரத்தைக் கொண்டுள்ளது.
அதன் மேலே ஐந்து கலசங்கள் விளங்குகின்றன. இராஜகோபுரத்தின் அருகில் அமைந்துள்ள உயரமான கோபுரத்தில் இரண்டு டன் எடையுள்ள வெண்கல் ஆலயமணி காணப்படுகிறது.இது இசைக்குறிப்பில் காணப்படும் ’இ’ என்ற நாத ஒலியமைப்பில் இது உருவாக்கப்பட்டதென்கிறார்கள்
கோபுரத்தின் உள் நுழையுமுன் வலதுபுறம் குணவாசல் பிள்ளையார்,இடது புறம் குணவாசல் சுப்பிரமணியர் சந்நிதிகள் உயரமாய் அமைந்துள்ளன. நடுவில் நந்திமண்டபம் பெரிதாக இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் ,கோபுரத்தின் இரு புறமும் சூரிய சந்திரர்களின் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம்,பலிபீடம்,நந்தி முதலியவை சுவாமி சந்நிதிக்கு நேரே அமைந்துள்ளன, துவார பாலகர்கள் வாயிலில் இருக்கிறார்கள். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
திருக்கேதீச்சரம் இறைவன் பெயர்- திருகேத்தீச்சர நாதர்
இறைவி பெயர்- கெளரிஅம்மை,
தீர்த்தம்- பாலாவி.
தலவிருட்சம் - வன்னி..
கர்ப்பகிரகம்,அர்த்தமண்டபம்,மகாமண்டபம் ஆகியவை உள்ளன.மஹாமண்டபம் அஸ்பெஸ்டாஸ் கூரையோடு விளங்குகிறது.
மூலவர் சிறிய இலிங்கத்திருமேனியுடன் விளங்குகிறார்.
விமானம் 3 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.உள்ளே நுழைந்ததும் தென்பிரகாரத்தில் பதிகம் பாடிய சம்பந்தர், கேதுபகவான், சமயக்குரவர் நால்வர், சேக்கிழார், சந்தானகுரவர், திருமுறைகள் வேதாகமம், பதிகம் பாடிய சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.மேற்குப் பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், சோமாஸ்கந்தர், பஞசலிங்கம், சோமாஸ்கந்தர் ,மகாவிஷ்ணு, மகாலிங்கம், மகாலட்சுமி ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன.
வடக்குப்பிரகாரத்தில் தெற்கு நோக்கி ஆறுமுகர் வள்ளி தெய்வயானை உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். வடகிழக்கில் யாகசாலை,பைரவர் சந்நிதி,பள்ளியறை,நவக்கிரக சந்நிதி ,நடராசர் சந்நிதி , கருவூலம், அமைந்துள்ளன. கர்ப்பகிரகத்தின் வெளிச் சுவரின் தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோற்பவர், வடக்கில் பிரம்மா துர்க்கா, சண்டேசர். ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.63 நாயன்மார்கள், சேக்கிழார், நால்வர், சந்தானக் குரவர்கள், நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோருக்குச் சிலைகள் உள்ளன. ராசராசனது கையில் திருமுறை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன.
கோயிலுக்கென தேர்கள் உள்ளன.வசந்த மண்டபம் உள்ளது
திருஞானசம்பந்தர் தேவாரம்:
//விருது குன்றமா மேருவி னாணரவாவன லெரியம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றறைபதி எந்நாளும்
கருது கின்றவூர்க் கனைகடல் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரம் கைதொழக் கடுவினை யடையாவே.//
சுந்தரர் தேவாரம்:
//கறையார் கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயும் கேதீச்சரத் தானை
மறையார்புக ழூரன்னடித் தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொல்லக் கூடாகொடு வினையே//
விழாக்கள்
ஐந்து பெரிய தேர்கள் வைகாசி விசாகத்தின் போது பவனி வரும். மகாசிவராத்திரி சமயம் பாலாவி நீர் எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதனை தீர்த்தக்காவடி என்பர்.
அம்மனுக்குக் கேதார கெளரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாலாவி குளத்தில் குளித்து மக்கள் திருகேத்தீச்சரநாதரை வழிபடுகிறார்கள். நாங்கள் போன போது உச்சிகால பூசை நடந்து கொண்டு இருந்ததது அதனால் நேரே கோவில் போய் விட்டோம். பூசைசெய்யும் கட்டளைக்காரர்கள் மட்டும் தான் உள்ளே அனுமதி நாங்கள் வெளியிலிருந்து –மகாமண்டபத்திலிருந்து இறைவனை வணங்கினோம். இத்தலத்திற்குரிய தேவாரப்பாடல்களை சந்நிதியில் நின்று பாடினோம்.
உள்பிரகார வழிபாடு முடியவும் கோயில் நடை சார்ர்த்தும் நேரம் வந்தது..
பின் பாலாவி குளத்திற்குச் சென்று தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு அங்கு இருக்கும் பாலாவிப் பிள்ளையாரை வணங்கி வந்தோம். திருகேத்தீச்சர கோவில் வாசலில் புத்தக கடை, மாலைகள்,கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. என் கணவர் திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சனப் பெருவிழா மலர், திருக்கேதீச்சர தலவரலாறு, புத்தகங்கள் வாங்கினார்கள்.
மதிய உணவுக்காக ,சைவ உணவகத்தை தேடித் தேடி போய் மன்னார் கிராண்ட் பஜாரில் உள்ள கமலா உணவகம் போய் உணவு சாப்பிட்டோம்.
பிறகு அன்றிரவு தம்பல்ல என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.அடுத்த நாள் நாங்கள் திருக்கோணேஸ்வரம் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்..
வாழ்க வளமுடன்.
அருமையான பகிர்வு. உங்க கூட வந்து நாங்களும் பார்த்த மாதிரி உணரும் படி எழுதி இருக்கீங்க... படங்கள், அழகு.
பதிலளிநீக்குநீலவானப் பின்னணியில் படங்கள் யாவும் வெகு அழகு. தகவல்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவெண்கல ஆலயமணியைப் படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லையோ தெரியாது. ஆனால் விவரித்த விதத்திலேயே கற்பனை செய்து கொள்ள முடிகிறது.
முதல் படத்தை பெரிது செய்துப் பார்த்தால் ஓரளவு மணிக்கூண்டும், மணியும் தெரியும் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி.
மாதோட்டம் , பொன்னியின் செல்வனில் படித்துள்ளேன். சைவ மூவரில் ஒருவர் இங்கு வந்துள்ளதாக கேள்வி பட்டுள்ளேன்
பதிலளிநீக்கு'மாதோட்டம்' -- இதுதான் எண் கண்ணில் முதலில் / பெரியதாக பட்டது.
பதிலளிநீக்குகாரணம்.. எல்.கே சொன்ன அதே காரணம்.. .
உங்கள் இறைப் பயணம் சிறப்பாக இருக்கிறது.. மேன்மேலும் தொடரட்டும்..
ஆம் தெரிகிறது:)!
பதிலளிநீக்குமற்ற படங்களையும் இப்போது பெரிது படுத்தி பார்த்து ரசித்தேன்.
நன்றி.
படங்களுடன் நல்ல பகிர்வு. நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியது அம்மா.
பதிலளிநீக்குதிருகேத்தீச்சர நாதர் அருமையான தலவரலாறு, ஆலயஅமைப்பு, இறைவன் மகிமை, பாலாவி தீர்தம், என பூரணமான பதிவு.
பதிலளிநீக்குஎம்மையும் மீண்டும் தர்சிக்கச் செல்ல தூண்டுகிறது. மிக்க மகிழ்ச்சி.
நானும் கல்கியின் பொன்னியின் செல்வனில் படித்து இருக்கிறேன் மாதோட்டத்தைப்பற்றி, சரித்திர நிகழ்வுகளை அவரை மாதிரி யார் எழுத முடியும்!
பதிலளிநீக்குநன்றி எல்.கே.
வாங்க மாதவன் , உங்களுக்கும் பொன்னியின் செல்வன் நினைவுக்கு வந்ததா? மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமக்கள் டி.வியில் கதை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் பொன்னியின் செல்வனைப் பற்றி.
சரித்திர நாவல் நாடகமாய் வரப்போகிறது மக்கள் டி.வியில், மணிரத்னம் சினிமா எடுக்க போகிறார் என்ற செய்திகள் காதில் விழுகிறது .
அந்த கதாபாத்திரங்களின் சிறப்பை கெடுக்காமல் எடுத்தால் சரி.
நன்றி மாதவன்.
ராமலக்ஷ்மி, நீங்கள் படங்களை பெரிதுப் படுத்தி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நன்றி ஆதி.
பதிலளிநீக்குமாதேவி, நீங்கள் மீண்டும் திருகேத்தீச்சர நாதரை தரிசித்து உங்கள் பார்வையில் எழுதுங்கள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
கண்ணாரக் கண்டு களித்தேன். படங்கள் நாமும் அங்கிருப்பதான உணர்வினைத் தோற்றுவித்தது. உங்களின் விவரிப்புகளோ ஆத்மார்த்தமாக அமைந்து நேரில் இங்கெல்லாம் சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தியது. மிக்க நன்றி.
பதிலளிநீக்குஜி.வி சார், உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி.
பதிலளிநீக்குதரிசிக்கும் ஆவலை தந்ததில் மகிழ்ச்சி.
இலங்கையில் நிற்பது மாதிரி ஒரு உணர்வையே ஏற்படுத்தினீர்கள்.நன்றி.
பதிலளிநீக்குபலினோ, உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குpresent ,
பதிலளிநீக்குhttp://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_21.html
appadiyee konsjam ingka vaangka
அழ்கான படங்கள்.அருமையான ப்கிர்வு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி.
பதிலளிநீக்குஅழகான படங்கள் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குஆத்மார்த்தமான அழகிய படங்களுடனான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅம்பாளடியாள், உங்கள் முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்குமீண்டும் வருக.
ஈழத்து சிவாலயங்களில் வரலாற்றுப் புகழ் மிக்கதாகவும், நாயன்மார்களால் பாடல் பெற்று, மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளைத் தாங்கி உள்ளது.
பதிலளிநீக்குசிறபாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அருமையான பதிவு. இவ்வளவு விரிவாகச் சொன்னது நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதிருத்தலங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் படங்களுடன்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முருகானந்தன் அவர்களே.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி M.R.
பதிலளிநீக்குநண்பர்கள் தின வாழ்த்துக்கு நன்றி.
இராஜராஜேஸ்வரிக்கு நன்றி.
பதிலளிநீக்குஇடுகையா.. படங்களா??.. எது அழகுன்னு ரெண்டும், ஒண்ணுக்கொண்ணு போட்டி போடுது. அருமை.
பதிலளிநீக்குவாங்க அமைதிச்சாரல், உங்கள் பாரட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
பதிலளிநீக்குநன்றி M.R.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்.
நன்றி, Dr. எம்.கே. முருகானந்தன்
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் , கருத்துக்கும்.
இனிய வணக்கம் மேம்,
பதிலளிநீக்குஉங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!
இனிய வணக்கம்,
பதிலளிநீக்குஉங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!
ஆறுமாக நாவலர் பற்றி தமிழ் துணைப்பாட நூலில் படித்தது உண்டு. அவர் இத்தகைய பெரிய சைவ கைங்கரியம் செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅழகிய படங்கள் விவரங்களுடன் திருகேத்தீச்வர தரிசனத்திற்கு மிக்க நன்றி
பழைய பதிவை மீள் பதிவு செய்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குபடித்ததில்லை. இன்று படித்து இன்புற்றேன்.
நீங்க, ஓதுவார்கள் பாடும் தேவாரம் காணொளி இணைத்திருக்கலாம்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஇன்று அதிரா இலங்கை பதிவு சுட்டி கொடுங்கள் என்றார்கள் அது எடுக்க போகும் போது எடிட்க்கு போய் விட்டது, அதை ப்பளிஸ் செய்தேன் அது புதிதாக போவது போல் போய் விட்டது. இரண்டு சுட்டி கொடுத்தேன் இரண்டு பதிவு வந்து இருக்கும் பாருங்கள்.
நான் செய்து இருந்தால் மீள் பதிவு என்று போட்டு இருப்பேன். இது தவறுதலாக வந்து இருக்கிறது.
இந்தக் கோவில் நீங்கள் தரிசித்தபோது உங்கள் மாமனார் இருந்தார் இல்லையா? (மறையவில்லை அல்லவா). அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஆமாம், எங்கள் மாமனார் இருந்தார்கள். அவர்களும் 1950ல் போய் இருக்கீரார்கள் அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் போய் வந்ததை சொன்ன போது மகிழ்ந்தார்கள். அவரிகளிடம் ஆசீர்வாதம் பெற்றே போனோம்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
"இலங்கைத் திருக்கோயில்" என்று இன்னொரு பதிவும் வந்து இருக்கிறது நெல்லை
நீக்குஅதையும் படித்துப் பாருங்கள்.
இலங்கைத் திருக்கோயில்கள்
நீக்குஅழகான படங்களுடன் நிறைய வரலாற்று விசயங்கள் அறிந்தேன் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அழகானப் படங்களுடன் அருமையானப் பதிவு
பதிலளிநீக்குநன்றி சகோதரி
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நானும் மீள் பதிவோ என்று பார்த்தேன். இப்போதுதான் படித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஇது மீள் பதிவுதான். 2012 ல் போட்டது.
நீங்கள் இதை படிக்கவில்லை போலும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அருமையான பதிவு அன்பு கோமதி மா.
பதிலளிநீக்குசிலசமயம் தவறாக பட்டனை அழுத்துவதால் நன்மை எங்களுக்குத் தானம்மா.
எத்தனை விவரங்கள். மகா பொறுமை உங்களுக்கு.
இன்று ஈஸ்வர தரிசனம் எங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் எழுப்பிய கோயில் வரலாறும்
தெரிய வருகிறது.
நம் தமிழ் மன்னர்கள் பராமரிப்பில் இலங்கையில்
கோயில்கள் இருந்தது மிக மகிழ்ச்சிதரும் செய்தி.
நன்றி கோமதிமா.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதவறுதலாக வந்து விட்டது. அதையும் மகிழ்ச்சியாக படித்து கருத்து சொல்லி விட்டீர்கள்.
சிற்றுண்டியும், வற்றலும் தான் நேற்று புதிதாக போட்டேன் அக்கா.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மீண்டும் கண்டுகொண்டேன் மகிழ்கிறேன்.
பதிலளிநீக்குஓரிரு வருடங்களுக்குள் இரண்டு தடவை சென்று தரிசித்து வந்தோம். இந்திய கலைஞர்களின் உதவியுடன் கோவில் திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் மகிழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆஆஅவ்வ்வ்வ் கோமதி அக்கா, மீள் பதிவாகப் போட்டதும் நல்லதே... பார்க்க ஆசையாக இருக்கு ஆனால் ஒரு புதினம் தெரியுமோ.. நான் மட்டும் எங்கள் குடும்பத்தில், இந்தக் கோயிலுக்குப் போகவில்லை...
பதிலளிநீக்குஇன்னொன்று என் காலத்தில் ஒரே பிரச்சனை என்பதனால அப்போ சுற்றுலா ஏதும் இல்லாமல் போச்சு.
படங்கள் பார்க்க, நானும் போய் வந்த பீலிங்காக இருக்கு..
அழகாக நான் படிக்காத வரலாற்றை எல்லாம் தொகுத்து எழுதியிருக்கிறீங்கள்.. நன்றி.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்களுக்கு சுட்டி அனுப்ப மதிவை திறந்தேன். இப்போது நிறைய மாற்றம் உள்ளது நினைவாய் செய்ய வேண்டியதை மாற்றி செய்து விட்டேன். அதனால் புது போஸ்ட் போல வந்து விட்டது.
உங்களுக்கு படிக்க வேண்டும் என்று இருக்கிறது.
நாங்கள் போனபோதே யாழ்பாணம் போக முடியவில்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அப்போது எல்லாம் படம் நிறைய போட்டால் திறக்க நேரம் ஆகிறது என்பார்கள்.
அதனால் அளவான படங்கள்.
நிறைய படங்கள் இருக்கிறது ஒரு நாள் போடுகிறேன்.
///நாங்கள் போனபோதே யாழ்பாணம் போக முடியவில்லை.//
நீக்குஓ நோஓஓஒ கோமதி அக்கா, ஏன் எங்கள் ஊரைப் பார்க்காமல் விட்டீங்கள்...
யாழ்பாணம் போக அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு இடங்களும் அனுமதி பெற்றே சுற்றிப்பார்த்தோம். நாங்கள் போன சமயத்தில் அனுமதி இல்லை.
நீக்குஎன்ன இது இரு பதிவுகள் என்று நினைத்தேன்... கருத்துரைகள் மூலம் அறிந்தேன்...
பதிலளிநீக்குதகவல்கள் வெகு சிறப்பு அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குடேஸ்போர்ட் புது மாற்றத்தால் வந்த குழப்பம். இப்போது கவனம் வைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி .
இப்போதுதான் படித்தேன். அருமையான கோயில் உலா.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
திருக்கேதீச்சரம் கோவில் உலா சென்று வந்தோம். மிக அருமை கோமதி மேம்.
பதிலளிநீக்குவணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
இந்தப் பதிவுகளில் இருந்து தான் உங்கள் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஆனால் நான் அப்போதெல்லாம் அதிகம் கருத்திடவில்லை. என்றாலும் படிச்சிருக்கேன். பதிவு மீண்டும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி. மறுபடி வரேன். உங்கள் மருமகளுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் ஆன்மீக கட்டுரைகள் படிக்கிறேன், எங்கள் ஊருக்கு எப்போது வரப் போகிறீர்கள் என்று கேட்டீர்கள் ஒரு பதிவில். நினைவு இருக்கிறது.
அதிராவிற்கு சுட்டி கொடுக்க போன போது இப்படி தவறுதாலாக பப்ளிஸ் ஆனது.
மருமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
நேற்றே இந்தப் பதிவை வாசித்து விட்டேன்...
பதிலளிநீக்குகருத்துரைப் பெட்டி திறக்கவில்லை...
ஈழ நாட்டுத் திருத்தலங்களுள் முக்கியமானது...
அழகிய படங்களுடன் தங்களால் தரிசனம் செய்து கொண்டேன்...
தவிரவும் உடல் நலம் இன்னும் சீராகவில்லை..
ஜூர வேகம் இல்லையென்றாலும் பத்து நாட்களுக்கும் மேலாக வெறுங் கஞ்சி தான்..
சிறு உணவகங்கள் அடைக்கப்பட்டு விட்டதால்
நாவுக்கு இதமாக நம்முடைய உணவுகள் கிடைப்பதில்லை...
கம்பெனி கொடுப்பதை வாயில் வைக்க விளங்காது...
இதையும் கடக்க வேண்டும் என்பது விதியாகி விட்டது..
இறைவன் துணை..
வணக்கம் சகோ துரைசெலவராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குநேற்று தவறுதலாக வந்து விட்டது பழைய பதிவு இது.நான் மாற்றம் செய்ய முடியுமா என்று பார்த்து கொண்டு இருக்கும் போது நீங்கல் கருத்துரை போட முயற்சி செய்து இருப்பீர்கள் அதனால் திறக்கவில்லை போலும்.
//தவிரவும் உடல் நலம் இன்னும் சீராகவில்லை..
ஜூர வேகம் இல்லையென்றாலும் பத்து நாட்களுக்கும் மேலாக வெறுங் கஞ்சி தான்..//
இதை படித்து கவலையாக இருக்கிறது, உடல் பூரண நலம் பெற வாழ்த்துக்கள். இறைவனிடம் தினம் வேண்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.
இதுவும் கடந்து போகும்.
இறைவன் துணை இருப்பார், கவலை வேண்டாம்.
பதிவுகள் மூன்று வந்து விட்டது. சிற்றுண்டியும், வற்றலும், இலங்கை கோவில்கள் .
உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தங்களைப் போன்ற நல்லோர்களின் ஆறுதல் மொழிகளால் மனம் இலகுவாகின்ற்து...
நீக்குவாழ்க நலம்...
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் மொழிகள் சொல்லி கொள்ள வேண்டிய காலம். ஊரில் இருக்கும் சொந்தங்களிடம் செல்ல முடியவில்லை, அவர்கள் நம்மிடம் வர முடியவில்லை.உள்ளூரில் இருப்பவர்களையே பார்க்க முடியவில்லை.
நீக்குவிரைவில் எல்லாம் நலமாக வேண்டும்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
இலங்கை சென்று வர வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. அழகான படங்கள் விவரணமும்
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குபார்க்கவேண்டிய ஊர்தான், வாய்ப்பு கிடைக்கும் போது பாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா இரண்டு பதிவுகளும் பார்த்துக் குழம்பி....தேதி நேற்று வெளியானது என்றது ஆனால் பதிவின் தேதி பழையது குறிப்பாக வந்த கருத்துகளை நான் கருத்து இட்ட பிறகுதான் பார்த்தேன் பார்த்தால் எல்லாம் பழையதாக இருந்தது நம்ம ஏஞ்சல் பிஞ்சு, கீதாக்கா ஸ்ரீராம் நெல்லை யாரும் காணலை ஆனால் துரை அண்ணா மட்டும் இருந்தர்.
பதிலளிநீக்குதுளசிக்கும் குழப்பம். ஆனால் கருத்து அனுப்பியிருந்தார். அதைப் போட்டுவிட்டு எனது கருத்தையும் பொட்டுவிட்டு பார்த்தேன் அப்புறம் உங்கள் விளக்கமும் பார்த்தேன்.
தவறானது இல்லை கோமதிக்கா நல்லதே நாங்கள் படங்கள் பார்த்து வாசிக்க உதவியதே எனவே எல்லாம் நல்லதுக்கே கோமதிக்கா.
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான், எல்லாம் நன்மைக்கே!
பழைய பதிவை படிக்காதவர்கள் படிக்க முடிந்தது.
இதுவும் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. ஆனால் நிறைய மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. நான் சொல்லுவது எனது 2 ஆம் வகுப்பு 3 ஆம் வகுப்பு சமயத்தில்.
பதிலளிநீக்குபம்பலப்பட்டி எல்லாம் சொல்லியிருந்தீங்க மீண்டும் போக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மகன் விசா மாற்ற வேண்டி 2018ல் ஒரே வாரம் வந்தான் அப்போது அபுதாபி வழி வந்து ஸ்ரீலங்கா வந்து சென்னை வந்தான். ட்ரான்ஸிட்தான். ஸ்ரீலங்காவில் முடிந்தால் வெளிய போய் பாருடா என்றேன். ஆனால் செலவாகும் என்று அவன் செல்லவில்லை. அப்புறம் அவன் வேலையில் சேர்ந்த பிறகு என்னையும் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். நான் இருந்த இடம் எல்லாம் பார்க்க வேண்டுமாம் அவனுக்கு.
இலங்கை நினைவுகள் மீண்டும் அலைமோதுகிறது கோமதிக்கா. என் மனதோடு ஒட்டிய ஊர் அக்கா அது. இலங்கை ஹோட்டல்களில் இடியாப்பம் சொதி சாப்பிட்டது எல்லாம் நினைவு வருகிறது.
கீதா
கீதா
உங்கல் மகன் உங்களை அழைத்துசெல்லும் நாள் விரைவில் வரட்டும். பழைய இடங்களை நீங்கள் வாழ்ந்த இடங்களை பார்த்து வாருங்கள்.
நீக்குஇலங்கை ஓட்டலில் இடியாப்பம், சொதி எல்லாம் நன்றாக இருக்கும்.
இலங்கையின் அழகு மனதோடு ஒட்டிவிடும்தான். இயற்கை அழகு நிறைந்த இடம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதிருகேத்தீச்சரம் கோவில் பற்றிய கட்டுரை மிகவும் அழகாக உள்ளது.
பெரிய கோவில் போலும். சரித்திர பிண்ணனிகள் விபரமாக தொகுத்து தந்துள்ளீர்கள். படிக்கவே இனிதாக உள்ளன. நீங்கள் எழுதிய விபரங்களில் உங்களுடன் கோவிலை சுற்றிப் பார்த்து தரிசித்த உணர்வு வந்தது. இலங்கையெல்லாம் சென்று சுற்றிப் பார்த்து வந்திருக்கிறீர்கள்? வாழ்த்துக்கள். இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு செல்லும் போது பயணம் மனதுக்கு நல்லதாக அமையும்.. சொந்த பந்தங்களுடன் சென்று வந்தீர்களா ?
நல்ல பகிர்வு. நேற்றே பார்த்தேன் உடனே வரவேண்டுமென நினைத்தேன். ஆனால் இங்கு மழையினால் அடிக்கடி கரண்ட் போய் விற்கிறது. அதனால் வர இயலவில்லை. என் பதிவுக்கு நீங்கள் வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி. எனக்கும் இன்னமும் அனைவருக்கும் முழுமையாக பதிலளிக்க இயலவில்லை. கரண்ட், நெட் என மாறிமாறி படுத்துகிறது என் பதிவில்
தங்களுக்கும் தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னித்துக் கொள்ளவும். தங்களின் இன்னொரு பதிவையும் படித்துப் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஇலங்கைக்கோவில்கள் பதிவு படிக்கவில்லையா?
அதுவும் இதனுடன் வந்து இருக்கிறது.
ஆமாம், உறவினர்களுடன் சென்று வந்தோம்.
இங்கும் மழை, கரண்ட்கட் எல்லாம் இருக்கிறது ஆனால் ஜெனரேட்டர் போட்டு விடுவார்கள் அதனால் பாதிப்பு இல்லை.
ஆறு நாள் சுற்றுபயணம் முடிந்தவரை பார்த்தோம். பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
திருக்கேதீச்சரம் திருக்கோயில்..
பதிலளிநீக்குதிருகேத்தீச்சர நாதர் ,கெளரிஅம்மை தரிசனம் கிடைத்தது மா ..
இவ்வாறு மீள்பதிவு இல்லையென்றால் நான் படிக்கும் வாய்ப்பு தவறி இருக்கும் ...
மீண்டும் படிக்க தந்தமைக்கு நன்றிகள் மா...
வணகம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமீள் பதிவு படிக்காதவர்கள் படிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி அனு.
தெரியாத பல விடயங்கள். இக்கோவில் நானும் போகவில்லை. வீட்டில் அனைவரும் போயிருக்கினம். அழகான படங்கள். திரும்ப பதிவு போடதால் வாசிக்க கிடைத்தது. நன்றி அக்கா.
பதிலளிநீக்குவணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.
மீண்டும் வாசிக்க ஒரு வாய்ப்பு.
பதிலளிநீக்குநாங்கள் இலங்கை சென்றது இருநாள் பயணமாக. மீண்டும் ஒருமுறை அனைத்துத் தலங்களுக்கும் சென்று வரும் எண்ணம் உள்ளது.
வணக்கம் ராமலக்ஷ்க்ஷ்மி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமீண்டும் இலங்கை சென்று பல இடங்களை தரிசனம் செய்து அழகிய படங்களுடன் பகிர வாழ்த்துகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.