வியாழன், 14 மே, 2020

மணிக்கொழுக்கட்டை

                                                    
                                                                                                              மணிக்கொழுக்கட்டை 


"சுவையான சிற்றுண்டி வகைகள்" என்ற புத்தகம்- எல். சகுந்தலை என்பவர் எழுதியது- வாங்கி வைத்து இருந்தேன்.
அதை ஒரு நாள் எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். 

என் அம்மா செய்யும் சிறு கொழுக்கட்டையில் தேங்காய் , சிவப்பு மிளகாய், உப்பு வைத்து அரைத்து கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத்  தாளிதம் செய்வார்கள் .    அது போல் இருக்கே!  இதற்கு பேர் மணிக் கொழுகட்டையா ! என்று படித்துப் பார்த்தால், பிள்ளையார் சதுர்த்திக்கு உளுந்து  கார பூரணம் செய்வோம் இல்லையா ? அதை இப்படி சிறு கொழுக்கட்டையுடன்  தாளித்து   இருந்தார்கள். செய்து பார்ப்போம் என்று செய்தேன். நன்றாக இருந்தது.

எல்லோருக்கும் தெரிந்ததுதான் புதுசு இல்லை என்று நினைக்கிறேன்.


தேவையான பொருட்கள்:-


பச்சரிசி மாவு  - 2 ஆழாக்கு
உளுத்தம்பருப்பு  200 கி
மிளகாய்-  10
பெருங்காயம் சிறிதளவு
கடுகு  - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்  - தாளிக்கத் தேவையான அளவு

உளுந்தம் பருப்பை ஊற வைக்க வேண்டும். ஊறிய பருப்பை மிளகாய் , உப்பு , பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பின் உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 தண்ணீரைத் தேவையான அளவு உப்பு போட்டுக் கொதிக்கவைத்து  அரிசி  மாவில் ஊற்றி, சிறிது நல்லெண்ணெய் விட்டுக்  கெட்டியாக மாவைக் கிளறிப் பின்  சிறு சிறு உருண்டையாக (மிகவும் வழு வழு என்று உருட்டக் கூடாது) கிள்ளிப் போட்டது போல் உருட்ட வேண்டும். (அப்போதுதான் கொழுக்கட்டை  நன்றாக இருக்கும்.)உருட்டிய கொழுக்கட்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு வாணலியில் எண்ணெய் வைத்து  கருவேப்பிலை கடுகு மட்டும்  போட்டுத் தாளித்து உதிர்த்து வைத்த உளுந்துக் கலவையைப் போட்டுக் கிளறி அதன்பின் கொழுக்கட்டைகளையும் அதனுடன் போட்டுப் பிரட்டி எடுக்க வேண்டும். அவ்வளவுதான்! மணிக்கொழுக்கட்டை ரெடி.!

விரத நாட்கள் என்றால் இப்படி பச்சரிசி மாவில் செய்யலாம், மற்ற நாட்கள் என்றால் புழுங்கல் அரிசியில் செய்யலாம். இன்னும் நன்றாக இருக்கும். தேங்காய்ப்பூ போடவில்லை இவர்கள். நான் தேங்காய்ப்பூ போட்டேன் 

நான் அவர்கள்  கொடுத்த அளவில் பாதி எடுத்துக் கொண்டு செய்தேன்.

புழுங்கல் அரிசியை ஊறவைத்துக் கொஞ்சம் கொறகொறப்பாய் (பிறு பிறு)  கெட்டியாகஅரைத்துக் கொண்டு  இருப்புச்சட்டியில் போட்டு வாட்டி சிறு கொழுக்கட்டை செய்யலாம்.  


                                                         



                                                               

              






வீட்டில் அரிசி மாவு, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவை இருக்கும் வீட்டில் இருப்பதை வைத்துச் செய்து விடலாம்.


தினம் விளக்கு ஏற்றும் போது விளக்குநாச்சியாரிடம்  ""உனக்கு ஊற்ற எண்ணெயும், எங்களுக்குச் சாப்பிட அரிசியும் படி அளம்மா " என்று வேண்டிக் கொண்டு  விளக்கு ஏற்றுவார்கள் .அப்படி வேண்டிக் கொள்ளும் போது உலக மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கவேண்டும் என்று சேர்த்து வேண்டிக் கொள்வோம். உணவுத் தட்டுப்பாடு  இருக்கக் கூடாது. 




பறவைகளுக்கு - குறிப்பாய் குருவிகளுக்கு  உணவு கொடுக்கும் ஜாடியை மகன், மருமகள் தேர்வு செய்து வாங்கி அனுப்பினார்கள். வீட்டில் இருந்த கம்பு தானியத்தைப் போட்டு வைத்து இருக்கிறேன். இங்குள்ள பறவைகள் இனிதான் பழக வேண்டும்  . குருவியை மட்டும் தான் இது தாங்கும்- புறாக்கள் உட்கார முடியாது. பார்ப்போம்.  மற்ற பறவைகள் வழக்கமாய்  டிரேயில் வைக்கும்  உணவைச் சாப்பிட்டுவிட்டுப் போகிறது இதை இன்னும் பார்க்கவில்லை .

                                              
                                         மகன் வீட்டில் உள்ளது. குருவிகள் வந்து சாப்பிடுகிறது அரிசியை.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


========================================================================
                  

73 கருத்துகள்:

  1. நாங்கள் இதை அம்மிணிக் கொழுக்கட்டை என்போம்.   பிள்ளையார் சதுர்த்தி போன்ற நாட்களில் சாதாரணமாய் செய்யும் கொழுக்கட்டை மாவு அல்லது பூரணம் மிஞ்சினால் அதைச் சேர்த்து இப்படிச் செய்வோம்.  பின்னர் எப்படியும் இதைச் செய்வதே ஒரு வழக்கமாகியும் போனது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நான் நினைத்தேன் சிலர் இந்த கொழுக்கட்டையை அம்மிணிக் கொழுக்கட்டை என்று சொல்வார்களே! என்று, நீங்கள் சொல்லிவிட்டீர்கள். அதுதான் சொன்னேன் எல்லோருக்கும் தெரிந்த சமையல் குறிப்பாகத்தான் இருக்கும் என்று.
      காரபூரணம் மிஞ்சினால் இப்படி செய்துவிடலாம்.

      இனிப்பு பூரணம் மிஞ்சினால் போளி செய்துவிடலாம்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஆஆஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் 1ஸ்ட்டு இல்லை:(.. ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      நீக்கு
    4. ஹா... ஹா... ஹா... கொழுக்கட்டை என்ற உடன் மூக்கில் வேர்த்து ஓடி வந்து விட்டேன்!

      நீக்கு
  2. இதற்காகவே தனியாய் செய்திருப்பது அழகை வந்திருக்கிறது.  படத்தில் அழகாய்க் காட்சி தருகிறது.  எங்கள் வீட்டில் கொழுக்கட்டையே செய்ய வேண்டும் என்கிற பிளான் இருந்து கொண்டே இருக்கிறது.  நேரம் வரவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கொழுகட்டையை செய்து படம் எடுத்து பதிவு எழுதி நாள் ஆகி விட்டது.ஏஞ்சல், அதிரா எல்லாம் சமையல் குறிப்பு போட்டவுடன் போட ஆசை வந்து விட்டது.

      இரண்டு நாட்களுக்கு முன் மகனும் மருமகளும் அனுப்பிய பரிசையும் சேர்த்து பதிவாக்கி போட்டு விட்டேன்.

      பதிவை போட நேரம் வந்தது போல் கொழுக்கட்டை செய்யவும் நேரம் வரும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நேரம் உண்டு . மகனுக்கு சின்ன கொழுக்கட்டையில் சீனீ, தேங்காய்பூ போட்டு நெய்விட்டு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவான்.

      நீக்கு
  3. பறவைகளின்மேல் அக்கறைகொண்டு நீங்கள் அதை பெரிய விஷயமாய் செய்துகொண்டிருப்பது பாராட்டத்தக்கது.  அதுதான் பறவைகள் உங்கள் வீட்டைத் தேடி வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது இந்த பறவைகள்தான் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. மகன், மகளிடம் இதைப்பற்றியே பேசுகிறேன். அதுதான் அவர்கள் இதை அனுப்பி வைத்து இருக்கிறார்கள். முன்பு பறவைக்கு தண்ணீர் வைக்கும் மண் தொட்டி வாங்கி அனுப்பினாள் மருமகள். உணவு வைப்பது இரண்டு வாங்கி அனுப்பி இருக்கிறார்கள். இன்னொரு பால்கனியில் மாட்ட வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.


      நீக்கு
  4. நேற்று காலைதான் நான் இனி சில நாட்களுக்கு கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வதில்லை (வெயிட் ஏறிக்கிட்டே போகுது) என்று சொல்லி, அரிசியைத் தவிர்த்தேன். மனைவி இரவில் மணிக்கொழுக்கட்டை செய்தால் (ம்..நான் சாப்பிடவில்லை). அடுத்த முறை செய்யும்போது படங்கள் எடுத்து எபிக்கு அனுப்பணும்னு நினைத்தேன்.

    மணிக்கொழுக்கட்டை படம் அருமை. பார்க்கும்போதே ருசி தெரிகிறது.

    பறவைக்கான உணவு கொடுக்கும் ஜாடி - இப்போதான் பார்க்கிறேன். எடை தாங்குமான்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      இதில் உளுந்தும் இருக்கே அரிசி கொஞ்சம் தானே!
      மனைவி செய்த மணிக்கொழுக்கட்டையை கொஞ்சம்கூட சாப்பிடவில்லையா?
      நீங்கள் செய்து அனுப்புங்கள் . கொழுக்கட்டை படமே நன்றாக இருக்கா மகிழ்ச்சி, நன்றி.
      அமெரிக்காவில் விதவிதமாய் இருக்கிறது. இது இங்கு அமேசானில் வாங்கி அனுப்பி இருக்கிறான். தேன்சிட்டுக்கு தண்ணீர் குடிக்கும் ஜாடி , ஒவ்வொரு பற்வைகளுக்கு ஏற்றமாதிரி உணவு ஜாடிகள் இருக்கிறது. குருவிக்கு என்று வாங்கி அனுப்பி இருக்கிறான்.குருவி இப்போதுதான் குஞ்சு பொரித்து அவைகளுடன் பறந்து போயிருக்கு இனி அடுத்து முட்டையிடதான் வரும். புள்ளி சில்லை குருவி, புல் புல் வருகிறது அவை வந்து பார்த்து சாப்பிடுகிறதா என்று பார்க்க வேண்டும்.

      நீக்கு
  5. அது சரி..இதை வைத்து பால் கொழுக்கட்டை செய்திருக்கலாமே. ரொம்ப ருசியாக இருந்திருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கணவருக்கு இனிப்பு பிடிக்காது. இப்போது சாப்பிடவும் கூடாது.

      என் மகன் தான் இனிப்புக்கு ஆசை படுவான். யாராவது வீட்டுக்கு வந்தால்தான் பால்கொழுக்கட்டை , இனிப்புகள் செய்வேன். இவர்களுக்கு காரம் மட்டுமே!
      எனக்கு இனிப்பு பிடிக்கும், ஆனால் எனக்கு என்று தனியாக செய்து கொள்ள சோம்பல்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. ஆஆஆஆஆஅ அதுக்குள் ஸ்ரீராமோடு நெ தமிழனும் வந்திட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

    கொழுக்கட்டை பார்க்க அப்படியே சாப்பிடோணும் போல இருக்குது கோமதி அக்கா, இப்படி உறைப்புக் காரம் தான் எனக்குத் தேவை, மிக அழகாக, சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைபோல, குறிப்பில் இருப்பதைப்போலவே செய்து அசத்திட்டீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      கொழுக்கட்டை நன்றாக இருக்கா? மகிழ்ச்சி.
      அதில் உள்ளது போல் தான் அதில் தேங்காய்பூ போடவில்லை. நைஸாக அரைக்க சொல்லி இருக்கிறார் நான் கொஞ்சம் கொற கொறப்பாக அரைத்து இருக்கிறேன்.
      நீங்களும் காரபிரியர்தான். உங்களுக்கு இந்த காரம் பிடிக்கும்.

      நீக்கு
  7. குருவிச் சாப்பாட்டை வீட்டுக்குள்ளே வைச்சிருக்கிறீங்கபோல இருக்கே, உள்ளே வருவினமோ?
    மகன் வீட்டில் சாப்பிடும் சிட்டுக்கள் அழகு.. என்ன ஒரு ஒய்யாரமாகப் பயமின்றி உண்கின்றனர் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே இல்லை பால்கனியில்தான் மாட்டி இருக்கிறேன் அதிரா. துணி காயப்போடும் கம்பியில் தொங்கவிடலாம் ஆனால் வெயில் அதிகம். பிளாசிடிக் இல்லையா வெயிலில் சூடு ஏறிவிடும். பழகைனால்தான் வரும் பார்ப்போம் வரும் என்று நம்புகிறேன்.
      மகன் வீட்டில் சாப்பிடும் சிட்டுக்கள் படம் நிறைய முன்பு பகிர்ந்து இருக்கிறேன். குருவிகளுக்கு உள்ள சாப்பாட்டை அணிலார் காலி செய்வார் விரைவில் அந்த படமும் போட்டு இருக்கிறேன் முன்பு.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆனால் அலுப்புப் பார்க்காமல் இவ்வளவு மெனக்கெடுவதற்கே உங்களைப் பாராட்ட வேண்டும்.

      நீக்கு
    3. மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு. ஜன்னலில் மாட்டி தந்தவர் சார்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
      ஜன்னலில் மாட்டி தந்தவர் சார். பாராட்டு அவர்களுக்கும்.

      நீக்கு
  8. கொழுக்கட்டை படம் அழகாக இருக்கிறது.
    சிற்றுயிருக்கும் உங்கள் குடும்பம் வாழ்க வளர்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்
      கொழுக்கட்டை படத்தை ரசித்து குடும்பத்தையும் வாழ்த்தியதற்கு நன்றி ஜி.

      நீக்கு
    2. //சிற்றுயிருக்கும் உணவளிக்கும் உங்கள் குடும்பம்//

      என்று படிக்கவும்.

      நீக்கு
    3. புரிந்து கொண்டேன் ஜி
      அப்படியேதான் படித்தேன்.
      நன்றி.

      நீக்கு
  9. நமக்கு என்னமோ கொழுக்கட்டை என்றாலே இனிப்பாதான் இருக்கணும்னு ஒரு பீலிங். பார்க்க அருமையாக உள்ளது. விளக்குமா (மாவிளக்கு ?) எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்களேன். அதை சாப்பிட்டு தான் எம்புட்டு நாள் ஆச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விசு, வாழ்க வளமுடன்
      உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

      இனிப்பு கொழுக்கட்டைதான் பிடிக்குமா? சரி சரி.
      மாவிளக்கு பதிவு போட்டு விடலாம். மிகவும் எளிதுதான்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. மேடம், சீக்கிரம் அந்த மாவிளக்கு செய்முறை பதிவை போடுங்க। ப்ளீஸ்!

      நீக்கு
    3. மிகவும் அவசரமா செய்முறைக்கு ? இறைவனுக்கு ஏதும் வேண்டுதலா?
      மாவிளக்கு செய்து கும்பிடுகிறேன் என்று.

      போடுகிறேன்.

      நீக்கு
    4. நமக்கு இறைவனுக்கு வேண்டிக்குற பழக்கம் எல்லாம் இல்லைங்க! "தன்னை போல் பிறரை நேசி" அது ஒன்னு தான் என் இறையாண்மை. அதை கடைபிடிக்குறதுக்கே தகிடத்தம் போடுன்னு இருக்கேன்.

      இந்த மாவிளக்கு இனிப்பை பல வருடங்களுக்கு முன் உண்டு இருந்தாலும் அந்த சுவை இன்னும் மனதில் அப்படியே இருக்கின்றது. இதை செய்து சாப்பிட வேண்டும் என்று நெடு நாள் ஆசை. இந்த கொரோனா நாட்களில் நேரம் அதிகம் இல்லத்தில் செலவு செய்ய படுவதால் செய்யலாமே என்று ஒரு ஆசை.

      நீக்கு
  10. தங்களின் படங்களும் பகிர்வும் மணிக்கொழுக்கட்டையினைச் சுவைக்கத் தூண்டுகிறது
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இன்று என்ன செய்யாலாம் என்று நினைத்த போது உங்கள் பதிவை பார்த்தேன் என் பெண்ணிடம் சொல்லி செய்து தரச் சொல்லனும், படம் மிக அழகாக வந்திருக்கிறது பதிவிற்கு அது மிகவும் மெருகூட்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்

      உங்கள் பெண் செய்து தரப்போவது மகிழ்ச்சி.
      குழந்தைகள் செய்து கொடுத்தால் அப்பா, அம்மாவிற்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
      அதுவும் அப்பாக்களுக்கு கேட்கவே வேண்டாம். என் அப்பா நான் செய்து கொடுத்ததை சாப்பிட்டு விட்டு வாயார புகழ்வார்கள்.
      படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி.
      உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      நீக்கு
  13. மணிக்கொழுக்கட்டை பார்க்கவே நன்றாக இருக்கிறது. தில்லிக்குக் கொஞ்சம் பார்சல் அனுப்பிடுங்கம்மா! :)

    பறவைகளுக்கான உணவுக்கு வைத்திருக்கும் சாதனம் ரொம்பவே சிறப்பு.

    தொடர்கிறேன் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      பார்சல் அனுப்பிடுவோம்.
      வெயிலில் சமையல் அறையில் சமையல் செய்யவே பிடிக்காது இல்லையா இப்போது?
      இங்கேயும் வெயில் அதிகமாக இருக்கிறது.சமையல் செய்யவே பிடிக்கவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. சுவையானதும் கூட.. மணிக்கொழுக்கட்டைகள் அழகான படங்களுடன் செய்முறை விளக்கங்களும் படிப்படியாக கூறி பதிவிட்டிருக்கிறீர்கள்.

    நானும் இப்படித்தான் விரத நாட்களில் நேவேத்தியத்திற்கு கார கொழுக்கட்டைகள் செய்தது போக மிஞ்சும் மாவை இப்படி அம்மணி கொழுக்கட்டையாக செய்து சாப்பிடுவோம். மாவின் உள்ளே பூரணத்தை வைத்து கொழுக்கட்டைகள் செய்வது போக மிகுதியானவற்றை இப்படியும் செய்யலாம். இது ஒரு மாலை, அல்லது காலை நேர சிற்றுண்டி மாதிரியும் ஆயிற்று.

    தங்கள் பக்குவம் நன்றாக வந்துள்ளது. இது போல் விரைவில் செய்யும் ஆசையை தூண்டுகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தங்கள் மகன் பரிசாக வாங்கி அனுப்பியிருக்கும் குருவிகள் பசியாறும் உணவு ஜாடி அழகாக உள்ளது. அதிலேயே அவைகளுக்கு தண்ணீரும் வைக்க முடியுமா?

    தங்கள் மகன் வீட்டிலும் இதேப் போல் ஜாடி வைத்து அதில் குருவிகள் பசியாறுவது கண்ணுக்கு நிறைவாக உள்ளன. உங்கள் குடும்பத்துக்கு பறவைகளிடம் இருக்கும் பாசத்தை கருணையை பார்க்கும் போது, மனசுக்கு நெகிழ்வாக உள்ளது. வாழ்க உங்கள் தொண்டு...! என மனதாற பாராட்டுகிறேன். தங்கள் மகனுக்கும் எனது பாராட்டை தெரிவியுங்கள்.

    இறைவன் படைத்த உயிர்களுக்கு தொண்டு செய்வது அவனுக்கே செய்வது போலத்தான்.அவன் அருள் உங்களுக்கு எப்போதும் நீடித்து நிலைத்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //இது ஒரு மாலை, அல்லது காலை நேர சிற்றுண்டி மாதிரியும் ஆயிற்று.//

      நான் காலை நேரசிற்றுண்டியாக செய்தேன்.
      எல்லோருக்கும் தெரிந்த பதிவு தான் நான் செய்ததை படம் எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவேன். அப்படியே இங்கேயும் பகிர்ந்து விட்டேன். பெரும்பாலும் தோசை, இட்லி, சப்பாத்தி தான், பூரி மற்றும் இது போன்றவை எப்போதாவது சாப்பிட பிடிக்கும் என் கணவருக்கு. குழந்தைகள் இருந்தால், பேரப்பிள்ளைகள் இருந்தால் அடிகடி செய்யலாம்.
      நீங்கள் செய்து கொடுங்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிட்டால் வேலை தொந்திரவு கூட தெரியாது.

      //தங்கள் மகன் பரிசாக வாங்கி அனுப்பியிருக்கும் குருவிகள் பசியாறும் உணவு ஜாடி அழகாக உள்ளது. அதிலேயே அவைகளுக்கு தண்ணீரும் வைக்க முடியுமா?//

      தண்ணீர் வைக்க முடியாது.தண்ணீர் தேன்சிட்டுக்கு தண்ணீர் வைக்க வேறு மாதிரி இருக்கும் அதை மகனை படம் எடுத்து அனுப்ப சொல்கிறேன்.

      உங்கள் பாராட்டுக்களை, வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன் மகன் மருமகளுக்கு.
      ஏதோ நம்மால் ஆன சிறு உதவி. என் அம்மாவிடமிருந்து எனக்கு வந்தது. காலை மதியம், மாலை என்று எல்லா நேரமும் நேரம் தவறாமல் உணவு வைப்பார்கள். காலை குஞ்சுகளை வீட்டில் விட்டுவிட்டு இரை தேடி வருகிறது பாவம் என்று வைப்பார்கள். மதியம் நாம் சாப்பிடும் முன் ஒரு கை உணவு முதல் உணவு காக்கைக்குதான் என்பார்கள். மாலை பாவம் கூடு போகுது கொஞ்சம் வை உணவு என்பார்கள்.

      இறையருள் எப்போது உண்டு என்று நீங்கள் சொல்வது மகிழ்ச்சி தருகிரது, எல்லோருக்கும் இறையருள் கிடைக்கட்டும்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.





      நீக்கு
  15. மணிக்கொழுக்கட்டை அழகாக செய்து உள்ளீர்கள் அம்மா... நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. அன்பு கோமதி,
      அம்மிணிக் கொழுக்கட்டைகள் மிக அழகாய்ப் படம்
      எடுத்துப் போட்டு இருக்கிறீர்கள்.

      உளுந்துக்கே தனி வாசம் உண்டு.
      சிறு கொழுக்கட்டையோடு இந்த உப்பு,காரம் சேர்ந்தால்
      கேட்க வேண்டுமா.
      இந்த அம்மிணி கொழுக்கட்டையைப் பால் கொழுக்கட்டையாகப்
      பாலில் சர்க்கரையிட்டு ,வேக வைத்துச் செய்தால்
      இன்னும் சுவையாக இருக்கும்.
      உங்க சார் மாதிரி என்னாலும் சாப்பிட முடியாது.
      உடல் நலத்துடன் வாழ்க வளமுடன்.
      ஓ, அந்தப் பறவை உணவுக்கூடு.
      இங்கே வெய்யில் காலம் வந்தால் கூடும் குருவிகள் ,மைனாக்கள்,
      பல வண்ணப் பறவைகள் கூட்டம் தாங்காது.
      அணில் வந்து எல்லாவற்றையும் விரட்டிவிடும்.
      ஒவ்வொரு நாளும் பறவைக்கான தானியங்களை
      நிரப்ப வேண்டும்.

      நீக்கு
    3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      நீங்கள் சொல்வது போல் உளுந்துக்கே தனி வாசம்தான் வேலை காரணமாக செய்ய முடிவது இல்லை. பிள்ளையார் சதுர்த்தியோடு சரி.

      பால் கொழுக்கட்டை நன்றாகத்தான் இருக்கும். சாப்பிட்ட காலங்கள் நினைவுக்கு வந்து மகிழ்ச்சி படுத்துகிறது.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
      //ஒவ்வொரு நாளும் பறவைக்கான தானியங்களை
      நிரப்ப வேண்டும்.//

      மகன் சொல்வான் இவைகளுக்கு மூட்டை மூட்டையாக வாங்க வேண்டும் என்று.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.


      நீக்கு
  16. உலக மக்கள் அனைவருக்கும், பறவைகளுக்கும் உணவு கிடைக்கவேண்டும் எனும் எண்ணத்திற்கும் செயலுக்கும் வணங்குகிறேன் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      எல்லோரும் நலமாக இருந்தால் நாமும் நலமாக இருப்போம் இல்லையா தனபாலன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. மணிக்கொழுக்கட்டை  நல்லா இருக்கு கோமதியக்கா .நான் உளுந்து சேர்த்ததில்லை இதுவரை ..உடம்புக்கு நல்லது இல்லையா ....இதற்க்கு தொட்டுக்க தக்காளி சட்னி சுவையா இருக்கும் .கொழுக்கட்டை உருட்டும் டெக்கனிக்கும் குறித்துக்கொண்டேன் .இதுவரைக்கும் அது கோழிமாதிரி உருண்டையா வரணும்னு நினைச்சு உருட்டோ உருட்டுன்னு இடவலமா திருப்பி திருப்பி உருட்டுவேன் :) இனி கிள்ளி போடறேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      உளுந்து சேர்ப்பது உடம்புக்கு நல்லதுதான் ஏஞ்சல். முதுகு, இடுப்புக்கு பலம். பண்டிகை காலங்களில் உடம்புக்கு பலம் சேர்ப்பது போல் தான் இது போல் உளுந்து சேர்க்கும் பலகாரங்கள் உண்டு. வடை, உளுந்தங்களி , உளுந்தம்புட்டு, என்று செய்து கொடுப்பார்கள் அதுவும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்பார்கள்.

      சீடை உருட்டும் போதும் கிள்ளிதான் போட வேண்டும் அப்போ மிகவும் பொரு பொருப்பாக இருக்கும். மிகவும் வழு வழு என்று உருட்டினால் கொஞ்சம் பொரு பொருப்பு குறைவாக இருக்கும் ஏஞ்சல்.

      இதில் காரம் எல்லாம் இருப்பதால் தொட்டுக்க எதும் வேண்டாம், மேலும் காரம் வேண்டுமென்றால் நீங்கள் சொல்வது போல் தக்காளி சட்னி தொட்டுக்கலாம்.

      நீக்கு
  18. வெளிநாட்டு பறவைகள் சரியா பெர்ட் feeder இருக்குமிடம் தெரிஞ்சு வரும் .நம்மூரில் ஒன்ஸ் பார்த்துட்டா ஓடி வருவாங்க :) அந்த தட்டு பகுதில கொஞ்சம் தானியங்களை சிதறி விடுங்க கண்ணில் பட்டதும் அங்கேதான் இருப்பாங்க .புறாக்களுக்கு தரை தட்டுதான் சரி .அந்த feeder வெயிலுக்கு ஒன்றும் ஆகாதுக்கா .. சிலர் கொக்கோகோலா பாட்டிலில் எல்லாம் செய்றாங்க இது அதைக்காட்டிலும் தடிமனான பிளாஸ்டிக் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு பழகி விட்டதால் வந்துவிடும்.
      நம்மூரில் பழக வேண்டும் தட்டில் கொஞ்சம் கம்பை போட்டு வைத்து இருக்கிறேன் ஏஞ்சல்.

      நிறைய புறாக்கள் வருவதால் அதில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று புறாக்கள், காகம் உட்கார்ந்தால் தாங்காது. புல் புல், குருவிகளுக்கு மட்டும் இருகட்டும் என்று பால்கனிகுள் மாட்டி இருக்கிறேன். நாமே செய்யலாம் என்ற வீடியோ பார்த்தேன்.(பாட்டிலில் செய்யும் வீடியோக்கள்.)

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  19. முதலில் உங்கள் மகன், மருமகள் இருவருக்கும் வாழ்த்துகளைப் பிடியுங்கள். இப்படி ஒரு சாதனம் இருப்பதையும் இப்போவே அறிந்தேன். இங்கேயும் பறவைகள் வருகின்றன. மண்ணால் ஆன சின்னத் தட்டில் தண்ணீர் வைக்கிறோம். பக்கத்திலேயே உணவுகளைப் போடுவோம். என்ன போட்டாலும் காராபூந்தி, ஓமப்பொடி இருந்தால் தான் தொட்டுக்கொண்டு சாப்பிடும். ஆனால் கதவைத் திறக்க முடியாது. திறந்தால் பறந்துவிடுகின்றன. ஆகையால் தொந்திரவு செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களை பிடித்துக் கொண்டேன் மகன், மருமகளுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன்.
      நம் ஊரில் தின்பண்டங்கல் சாப்பிட்டு பழகி விட்டது. வடை, தின்பண்டங்கள் போட்டால் உடனே தட்டு காலி.
      தண்ணீர் மண் பாத்திரத்தில் வைப்பதுதான் நல்லது.

      நீக்கு
  20. மணிக்கொழுக்கட்டை, அம்மிணிக்கொழுக்கட்டை என்று தான் நாங்களும் சொல்வோம். அம்மா அடிக்கடி பண்ணுவார். இங்கே இவருக்குஅவ்வளவு பிடித்தம் இல்லை. இம்மாதிரி உளுத்தம்பூரணம் செய்து கொண்டு அதை சேவையில் கூடக் கலப்பேன். அதுவும் அவ்வளவு சாப்பிட மாட்டார். பால்கொழுக்கட்டையும் இப்போது இனிப்புக் கூடாது என்பதால் பண்ண முடிவதில்லை. ஆனாலும் இது செய்வதில் சிரமம் ஒன்றும் இருப்பதில்லை. என்றானும் ஒரு நாள் கொஞ்சமாகப் பண்ணவேண்டும் என்னும் ஆவல்! பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எல்லோருக்கும் தெரிந்த பல்காரம், காலை உணவாக அம்மாவும் கொழுக்கட்டைகள் வித விதமாக செய்வார்கள்.
      இவர்களுக்கு பிடிக்காது ஏதோ ஒரு நாள் என்றால் சாப்பிடுவார்கள்.
      இங்கும் சாருக்கு இனிப்பு கூடாது என்பதால் இனிப்பே செய்வது இல்லை.
      கொஞ்சமாக செய்வது இப்போதுதான் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  21. மணிக்கொழுக்கட்டை...ரொம்ப நல்லா வந்து இருக்கு மா,


    பார்க்கவே ஆசையா இருக்கு இப்படி உளுந்து சேர்த்து இது வரை செய்தது இல்லை.

    போன வாரம் தான் பால் கொழுக்கட்டை செய்த்தேன்...

    குருவிகளுக்கு உணவு கொடுக்கும் ஜாடி...அருமையா இருக்கு..


    மிக மகிழ்ச்சி மா...உங்களின் அன்பு கண்டு..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      பால் கொழுக்கட்டை செய்தீர்களா ? பிள்ளைகளுக்கு பிடித்தது.
      //பார்க்கவே ஆசையா இருக்கு இப்படி உளுந்து சேர்த்து இது வரை செய்தது இல்லை.//

      செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  22. அம்மணி கொழுக்கட்டை பார்க்கவே வாயில் நீர் ஊரும் படி நன்றாக இருக்கிறது. எங்களுக்கெல்லாம் இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை, அப்படியே சாப்பிட்டு விடுவோம். பறவைகளுக்கு உணவு வைப்பதற்கான ஜாடி அழகாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே பறவைகள் மீது என்ன ஒரு பாசம்! சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க வளமுடன். 

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பானுமதி வெங்க்டேஷ்வரன், வாழ்க வளமுடன்
    அம்மணி கொழுக்கட்டை நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி.
    நாங்களும் அப்படியே தான் சாப்பிடுவோம். திட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
    அம்மா தேங்காய், சிவப்பு மிளகாய், உப்பு வைத்த சட்னி போட்டு தாளித்து தருவார்கள் சிறு கொழுக்கட்டையில் அதுவும் நன்றாக இருக்கும்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி பானு.

    பதிலளிநீக்கு
  24. இது என் கணவருக்கு ரெம்ப பிடிக்கும். செய்ய சொல்லி கேட்பார். நான் பார்த்ததில் வீடியோ) பலவிதமா இருக்கு. இன்னும் செய்யவில்லை. இப்ப ஆபத்பாந்தவனா நீங்க குறிப்பு தந்து இருக்கீங்க. செய்துபார்க்கிறேன் அக்கா. அம்மணிக்கொழுக்கட்டை என சொல்வார். ஆனா இப்ப இதுவும் அதுவேதான். விளக்கமா சொன்னதுமில்லாமல் ஒரிஜனலையும் தந்து இருக்கீங்க அக்கா. க்ரேட்.
    ஆஹா பறவைகளுக்கு உணவு feeder. வையுங்க அக்கா வீட்டுக்கு இனி வைருந்தாளிங்க வருவாங்க. அணிலார் கண்டால் விடமாட்டாரோ என நினைக்கிரேன். இங்கு சம்மர் எனறபடியால் உணவு வைக்க சாதாரணமா தடை. ஏனென்றா அவங்களாகவே தேடவேண்டும்.(பின் சோம்பலாகி போயிடுவினம் என. கடைகளிலும் உணவு விற்காயினம். வீட்டில் வளர்க்கும் பறவைகளுக்கு மட்டுமே விற்பாங்க. நான் அதை வாங்கிவைப்பேன்.) விண்டரில் வைக்கலாம். ஆனாலும் அவங்க வந்து தலை சரித்து பார்க்கும்போது பாவமா இருக்கும்.
    மகன் வீட்டுகுருவிகள் அழகு.நன்றி அக்கா குறிப்புக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      உங்கள் கணவருக்கு பிடித்தமானதா? மகிழ்ச்சி.
      செய்து கொடுங்கள் அம்மு.

      சம்மர் என்றால் அவைகளே உணவு தேட வேண்டுமா! தேடாமல் கிடைத்தால் சோம்பலாகிவிடும் தான்.
      வீட்டில் வளர்க்கும் பறவைகளுக்கு விற்பதை பார்த்து இருக்கிறேன்.

      //ஆனாலும் அவங்க வந்து தலை சரித்து பார்க்கும்போது பாவமா இருக்கும்.//

      கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது அம்மு.

      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.


      நீக்கு
  25. என் அம்மா செய்யும் சிறு கொழுக்கட்டையில் தேங்காய் , சிவப்பு மிளகாய், உப்பு வைத்து அரைத்து கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிதம் செய்வார்கள் . //

    கோமதிக்கா ஆஹா எங்கள் வீட்டில் ஃபேவரைட் இது

    அக்கா மணிக்கொழுக்கட்டை சூப்பரா வந்திருக்கு....நாவூறுது அப்படியே எடுத்துக் கொள்கிறேன். !!!!!! இதுவும் நம் வீட்டில் ஃபேவரைட். நம் வீட்டில் எல்லாமே பிடிக்கும்...

    அது போல நீங்கள் சொல்லியிருக்கும் மணிக்கொழுக்கட்டையும்.. இதே மணிக்கொழுக்கட்டையை உளுந்திர்குப் பதில் பருப்பு உசிலி செய்வது போலவும், அதாவது உளுந்திற்குப் பகில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஊற வைத்து அரைத்து உசிலித்து அதில் கொழுக்கட்டையைப் போட்டுப் பிரட்டி மற்றதெல்லாம் இதே தான். அதுவும் சூப்பராக இருக்கும் அக்கா.

    நம் வீட்டில் பிள்ளையார்க்கொழுக்கட்டை செய்யும் போது இந்த மணிக்கொழுக்கட்டை வெரைட்டிஸும் இடம் பெற்ற காலம் உண்டு. அது போல இந்தக் கொழுக்கட்டையை கேரளத்துப் பாணியில் பாயாசம், செட்டிநாட்டு ஸ்டைலில் பாயாஸம்..

    .தேங்காய்ப்பால் சீனி/தேங்காய்ப்பால் வெல்லம், பால் சீனி, பால் வெல்லம் காம்பினேஷனில் செய்வதுண்டு அக்கா. ஆனால் இப்ப எல்லாம் குறைந்துவிட்டது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      கைவலி எப்பிடி இருக்கிறது குணம் என்று நினைக்கிறேன்.

      //ஆஹா எங்கள் வீட்டில் ஃபேவரைட் இது//

      நீங்களும் எங்கள் அம்மா ஊர் இல்லையா அது தான் அது பிடிக்கிறது.
      அடிக்கடி செய்வேன்.

      சிறு கொழுக்கட்டையை செட்டி நாட்டுபாணியில் கேரளத்து பாணியில் எல்லாம் நானும் செய்து இருக்கிறேன் கீதா. இப்போது இனிப்பே செய்வது இல்லை.
      பிள்ளையார் சதுர்த்திக்கு வித விதமாய் கொழுக்கட்டை, மோதகம் உண்டு. இப்போது பண்டிகை எல்ல்லாம் எளிமையாக மாறி விட்டது சாப்பிட ஆள் இல்லை, செய்யவும் முடியவில்லை ஒற்றையில்.

      நீக்கு
  26. அக்கா புழுங்கல் அரிசியிலும் நீங்கள் சொல்லி இருப்பது போல் செய்யலம. தேங்காய்ப்பூ சேர்ப்பேன் நானும். ரொம்ப சுவையாக இருக்கும்..

    அப்படியே சாப்பிட்டுவிடலாம்.

    ஆஹா அக்கா பறவைகளுக்குத் தானியம் வைக்கும் ஜாடி செம ஸ்டைலிஷா இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா புழுங்கல் அரிசியில் கொழுக்கட்டை செய்து ஆவியில் வேக வைக்காமல் நீர் கொதிக்க வைத்து அதில் போட்டு வேக வைத்து எடுத்து விட்டு அந்த தண்ணீரில் வெல்லம், ஏலக்காய், தேங்காய்பூ போட்டு கொதிக்க வைத்து தருவார்கள் கொழுக்கட்டை சாப்பிட்டு கொழுக்கட்டை வேகவைத்த நீரை சூடாய் குடித்தால் கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும். கொழுக்கட்டையில் வேறு தேங்காய்பூ இருக்கும்.

      திருவனந்தபுரத்தில் திரளி இலை கிடைக்கும் அதில் இலை கொழுக்கட்டை செய்வார்கள் அதிலும் இனிப்பி, உப்பு கொழுக்கட்டை செய்வார்கள் . திரளி இலையின் வாசம் மிக அருமையாக இருக்கும்.

      திருச்செந்தூர் பக்கம் பனைஓலையில் மாவை வைத்து கொழுக்கட்டை செய்வார்கள் அதுவும் செய்து இருக்கிறேன். நன்றாக இருக்கும்.
      ஜாடி மாட்டியாச்சு பறவைகளின் வரவுக்கு காத்து இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  27. பறவைகளுக்கு உணவு வைக்கும் ஜாடி இப்படி எல்லாமும் இருக்கிறதா? அழகான வடிவமைப்பு. நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வகை பறவைகளுக்கும் ஏற்றார் போல் இருக்குமோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன் , வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் பறவைகளுக்கு ஏற்றார் போல் உணவு ஜாடி இருக்கிறது.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  28. மணிக்கொழுக்கட்டை குறிப்பு நன்றாக இருக்கிறது. இதை சில மாறுத‌ல்களுடன் அம்மிணிக்கொழுக்கட்டை என்றும் செய்வார்கள். படங்கள் அனைத்தும் அருமை! குருவிகள் உணவுண்ணும் காட்சி மிகவும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  29. மணிக் கொழுக்கட்டையோ
    முத்துக் கொழுக்கட்டையோ!..

    எங்கள் பக்கத்தில் நீர் உருண்டை என்பார்கள்..
    உப்புக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை என்றெல்லாம் சொல்லப்படுவது -- இந்த திவ்ய பட்சணமே...

    எனக்கு மிகவும் பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      எங்கள் பக்கம் நீர் கொழுக்கட்டை என்று சொல்வார்கள்.
      ஆவியில் வேகவைக்கவில்லையென்றால் எல்லாம் நீர் கொழுக்கட்டைத்தான்.

      நீங்கள் சொல்வது போல் "திவய பட்சணம்" தான் உடலுக்கு எந்த கேடும் தராது.
      உங்களுக்கு பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  30. குருவிக் குணவு
    குன்றாது இடுக..
    குறையும் தீரும்..
    குருவியும் வாழும்..

    குணங்கண்டு இரங்கி
    குன்றினில் வைக்கும்
    குவலயத் தலைவன்
    குளிர்ந்துடன் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  31. பறவைகள் பதிவுக்கு அதுவும் குருவி என்றால் கவிதை உடனே வந்து விடுகிறது உங்களிடமிருந்து.

    உங்கள் கவிதை வாழ்த்துக்கு நன்றி. மகனுக்கும் அனுப்புகிறேன்.

    உங்கள் கருத்துக்கும், கவிதைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. சுவையான காரக் கொழுக்கட்டை. படங்களும் நன்று. பறவைகளின் உணவு ஜாடி அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  33. நான் பிடிக் (காரக்) கொழுக்கட்டையாக உளுத்தம்பருப்பு சேர்க்காமல் அடிக்கடி செய்வதுண்டு. இந்த முறையில் செய்து பார்க்கிறேன். நன்றி.

    Bird feeder அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      செய்து பாருங்கள் நன்றாக இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு