வெள்ளி, 28 நவம்பர், 2014

கனவில் வந்த காந்திஜி

                                                       

 தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் கனவில் தேசபிதா வந்து இருக்கிறார் . வந்து 10 கேள்விகளை கேட்டு இருக்கிறார். அவர் அதற்கு அழகான பதில்களை சொல்லி விட்டு  மேலும் ஒரு பத்து பேர்களிடம் அதே கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்லி இருக்கிறார். அப்படி அவர் அழைத்தவர்களில் ஒருவர் தஞ்சையம்பதி  என்ற வலைத்தளம் வைத்து ஆன்மீக பதிவுகளை அளித்து வரும்   திரு .துரைசெல்வாராஜூ அவர்கள்.  என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர் அழைப்பை ஏற்று  கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை பதில் அளிக்கிறேன்.

இப்படி அழைப்பார்கள் என்று தெரிந்தோ என்னவோ, நான் ஒரு முறை காந்திஅடிகளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் போலும்!அது தான் இந்த படம்.(இது அமெரிக்காவில் வாக்ஸ் மியூசியத்தில் எடுத்தபடம்)

1. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
வணக்கம் காந்திஜி , வாழ்க வளமுடன்.
நான் இருக்கும் வீட்டை சுற்றி கணபதி இருக்கிறார்.  அவரை வணங்கினால்  துன்பம், கர்மவினைகள், மீண்டும், மீண்டும் பிறந்து துன்புறுவது  எல்லாம் கிடையாது  என்று   விவேக சிந்தாமணி நூல் கூறுகிறது.அதனால் அவரை தினம் வணங்குவதால்   காந்திஜி! எனக்கு மறுபிறவி கிடையாது.

அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால் ? சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

முதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

3.இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ? என்ன செய்வாய்?

நம் நாட்டுக்கு நலம்பயக்கும் அந்த திட்டத்தை அவர்கள் எதற்கு எதிர்க்கிறார்கள். நல்ல திட்டத்தால் அவர்களே இங்கு வந்து விடுவார்கள்.

4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால்  நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களில் ஏழை முதியோர்கள்,
 ஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்க கூடாது என்று அரசாங்கமே  அவர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க  உணவு, உடை, மருத்துவ வசதி,  அன்பாக பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளும்.


5.அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
அரசியல்வாதிகள் எல்லாம் மனிதநேயப்பண்பு, சேவை மனப்பான்மை  எளிமை, இனிமை  கொண்டிருக்கவேண்டும்.அவர்கள் மட்டுமே தேர்தலில் ஈடுபடப் புதிய திட்டம் போடப்படும்.

6.மதிப்பெண்கள் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்கு போனால்?
அவர் அவர் தகுதி அவரவர்களுக்கு தெரியும். சரியான மதிப்பெண்கள் வரவில்லை என்றால் மேல் நீதி மன்றம் போவதற்கு உரிமை தேவை.

7.விஞ்ஞானிகளுக்கென்று  ஏதும் இருக்கிறதா?
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்  இணைந்த வாழ்க்கை தான் வாழ்கிறோம், அதனால் விஞ்ஞானிகளிடம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும், வாழ்வின் சிறப்புக்கும், ஏற்றவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும், விளைநிலங்கள் முழுவதும் வீட்டுமனை ஆகி வருகிறது. அதனால் வருங்காலத்தில் விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை  விளைவிக்கும் வித்தை அல்லது உணவு இல்லாமல் உடலைப்பேணி வளர்க்கும் விஞ்ஞானத்தை  உடனே கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொள்வேன். கண்டுபிடிப்புக்கு வேண்டிய வசதிகளை விஞ்ஞானிகளுக்கு செய்து கொடுக்கும், அரசாங்கம்.

8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?,

 நலத்திட்டங்களை முந்திய அரசு செய்தவற்றைப், பிறகு வரும் எந்த அரசும் மறுக்க முடியாது . மறுத்தால் தோல்வி நிச்சயம். வேண்டும் என்றால் விஞ்ஞானிகளை  இன்னும் அதிகப்படியாக  இரண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க உத்தரவு இடும்.


9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக? 

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். பணக்கார நாடாக இருந்தாலும் வீடு இழந்தோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆட்சிக்கு  வரும் அனைவரும், சொல்லி ஓட்டு கேட்பது ஏழ்மையை ஒழிப்போம், கல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது தான்.
அதை நடைமுறைக்கு கொண்டு வந்தாலே புதுமை செய்தமாதிரிதான்.
மற்ற நாடுகள் ஏற்கனவே நம் மக்களின் அறிவுத் திறமையைக் கண்டு வியக்கிறது,   இல்லாமை, கல்லாமை இரண்டையும்  ஒழித்த புதுமையைச் செய்து விட்டால் எல்லா நாடுகளும் நம் புதுமை கண்டு வியக்கும்.


10.எல்லாமே  சரியாகச் சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய் உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன  பிறவி வேண்டுமென
இறைவன் கேட்டால்?

காந்திஜி ! முதல்கேள்வியிலேயே சொல்லிவிட்டேன் , எனக்கு மறுபிறவி கிடையாது என்று . அப்படியும் இறைவன் கொடுத்தால் அவன் விருப்பம்.  என்னை எப்படி படைக்கவேண்டுமோ அப்படிப் படைத்துக் கொள்ளட்டும்.

இந்த தொடர் பதிவை அனைவரும் எழுதி இருப்பார்கள் நான் காலதாமதமாய் எழுதுவதால் எழுத அன்பர்கள் இருந்தால், விருப்பம் இருந்தால் எழுதலாம்.
                                                                      ---------------
                                                           வாழ்க வளமுடன்.




.

48 கருத்துகள்:

  1. இரண்டவாது : அப்படிச் சொல்லுங்க...

    ஏழாவது : சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. காந்தி 'எங்கள்' கனவிலும் வந்தாரே..... துளசிதரன் சொல்லி அனுப்பி இருந்தார்!!!!

    பதிலளிநீக்கு
  3. கனவில் வந்த காந்தி அதற்கு முன்னே உங்களுடன் போட்டோ எடுத்திருக்கிறார்... நல்ல பதில்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  4. காந்தி முன்னரே போட்டோவில் வந்துவிட்டார் போல! அருமையான பதில்கள்

    பதிலளிநீக்கு

  5. உங்கள் “அக்மார்க் “ வாழ்த்துக்களுடன் காந்தியின் கேள்விகளுக்குப் பதில் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதில்கள் சகோதரியாரே
    கனவில் வந்த காந்தியுடன் போட்டோவும் எடுத்திருக்கிறீர்கள்
    மகிழ்ச்சி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  7. அருமையான மனம் திறந்த
    சரியாகச் சொன்னால் ஆத்மார்த்தமான பதில்கள்
    காந்தியுடன் நின்று பதில் சொன்னதை
    மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. காந்தியின் படத்தோடு பதில்களும் சிறப்பாக அளித்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. கேள்விக்கான பதில்கள் அனைத்தும் அருமை ! வாக்ஸ் மியூஸியம் காந்தியுடன் எடுத்த புகைப்படம் அற்புதம் !

    பதிலளிநீக்கு
  10. நிறைய கேள்விகளுக்கும் காந்திஜிக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லையே, கோமதிம்மா? :))

    காந்திஜி உயிராக நேசித்த கொள்கைகளுக்கு ஏற்புடையதாக கேள்விகள் இருந்திருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும் இல்லையா?..

    (உ.ம்) இலட்சியங்களும் அவற்றை அடைவதற்கான நேர்மையான வழிகளும் பற்றி காந்திஜி கொண்டிருந்த கருத்து உலகத் தலைவர்களில் எவரும் கொண்டிராத கருத்தாய் இருந்தது.

    இரண்டாவது: தான் செயல்படும் எதற்கும் தானே தகுந்த எடுத்துக் காட்டாய் இருப்பது.

    மூன்றாவது: சுயபரிசோதனை. காந்திஜி தன்னைக் களனாகக் கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபட்டு தனக்கு சரி என்று பட்ட பின்னரே எதையும் பொதுவில் வைத்தார்.

    நான்காவது: பொது நன்மைக்காக தன்னை வருத்திக் கொள்ளல்.

    இப்படி நிறைய.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதில்கள்.....

    ரசித்தேன் அம்மா...

    பதிலளிநீக்கு
  12. பதில்கள் அனைத்துமே மிகவும் ரசனையுடன் இருந்தது. நான் மிகவும் ரசித்தது, வெளிநாட்டினர் நம் நாட்டின் வலம் கண்டு இங்கு வருவார்கள் என்று நீங்கள் எழுதியிருப்பதைத் தான். இது ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் பதில் சொன்னதை இப்போது தான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.

    2012 லில் எடுத்த படம் அவரை நேரில் பார்க்காத வருத்தம் அவருடன் படம் எடுத்துக் கொண்டதில் மறைந்து விட்டது.(நான் பிறக்கும் முன்பே அவர் மறைந்து விட்டார்)
    உங்கள் கருத்துக்கு நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் தனிமரம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    பொது நன்மைக்காக தன்னை வருத்திக் கொள்ளல்., தன்னலம் பாராமல் பொதுநலம் பேணல், எல்லாம் அண்ணல் காந்தியுடன் போய் விட்டதே சார்.

    உங்கள் அருமையான கருத்துகளுக்கு நன்றி சார்.








    பதிலளிநீக்கு
  23. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும்,கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.

    வெளிநாட்டில் உள்ள நம் மக்கள் இங்கு நல்லவைகளை கண்டு வருவார்கள் ஒருநாள்.

    நம்பிக்கைகள் வீண்போகது தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. படத்தை முதலில் பார்த்தபோது, மகாத்மா காந்தி வேடமணிந்த ஒருவர்தான் உங்களுடன் நின்று கொண்டு இருக்கிறார் என்று நினைத்தேன். அப்புறம் நீங்கள் சொல்லிய பிறகுதான் மெழுகு பொம்மை உருவம் என்று தெரிந்தது. அவ்வளவு அச்சு அசல்.

    பரவாயில்லை! நீங்களும் மறுபிறவி விரும்பாதவராகவே இருக்கிறீர்கள். மற்ற கேள்விகளுக்கான பதில்களும் உங்களை ஒரு சமத்துவவாதியாகவே காட்டுகின்றன. தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம - 5

    பதிலளிநீக்கு
  26. கேள்விகளும் பதில்களும் ரசனை.
    மிக்க நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. தமிழ்மணவாக்கு அளித்தமைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. குவைத்தில் விடியற்காலை. மணி 5.45. இப்போது தான் வேலை முடித்து வந்தேன்.

    இப்படி ஒரு வினா விடைக்காக முன்னதாகவே தீர்க்க தரிசனம்!..

    காந்திஜி சிலையின் அருகில் என்றாலும் - இந்த பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்!..

    //முதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.//

    காந்திஜி அசந்து போய் விட்டதாகத் தகவல்!...

    தங்கள் விருப்பப்படியே - அனைத்தும் நடக்கட்டும்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் துரைசெல்வராஜூ சார்,வாழ்கவளமுடன்.

    இரவு முழுவதும் பணி, அதிகாலை வந்து ஒய்வு எடுக்காமல் பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. இது மாதிரி கேள்வி பதில் வரும் எனத்தெரிந்தே காந்தி முன்பே உங்களுடன் படம் எடுத்துக் கொண்டார் போல. நல்ல புகைப்படம்.

    இயல்பான பதில்கள் நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  32. கனவில் வந்த காந்தியை நாங்களும் காண அழைத்து வந்து விட்டீர்கள். படங்களும் பதில்களும் அருமை.

    /விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை விளைவிக்கும் வித்தை/
    கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு விரைவில் தள்ளப்படுவோம் என சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.

    ஆம், இப்படி பின்னால் கேள்வி கேட்பார்கள் என்று முன்பே உணர்ந்துதான் காந்தியடிகளுடன் எடுத்துக் கொண்டேன் போலும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    காந்தியடிகளை நீங்களும் கண்டு மகிழத்தான் இங்கும் வந்து விட்டார் என்னுடன். சிறியவர் முதல்பெரியவர்கள் வரை விரும்பும் காந்தி தாத்தா அல்லவா!

    எங்கள் ஊரில் நாங்கள் வந்தபோது இருந்த வயல்கள் எல்லாம் வீட்டுமனை ஆகி விட்டது. ஊரை விட்டு வெகுதூரத்தில் இருந்த வயல்களும் இப்போது வீட்டுமனை விற்பனைக்கு என்ற விளம்பரபலகை தாங்கி நிற்கிறது.
    அதனால் ஏற்பட்ட நினைவுதான். அந்தபதில்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  35. முதலில் மறுபிறவி இல்லை என்று சொல்லிவிட்டு கடைசியில் பின்வாங்கிவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் ரஞ்சனி , வாழ்க வளமுடன்.
    முதலில் உறுதியாக சொன்ன பிறகும் காந்திஜி கேட்கிறார் அவர் மனம் நோகமால் இருக்க அவ்வாறு சொன்னேன். வேறு ஒன்றும் இல்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. படமும் பதில்களும் அருமை கோமதி.மிக யோசித்துக் கருத்தாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். எல்லோருடைய பதிவிலும் நேர்மை பளிச்சிடுகிறது. உங்களது இறையுணர்வு மனம் நெகிழ வைக்கிறதுமா. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  39. அத்தனையும் அருமையாகச் சொல்லிட்டீங்க... ஆனா 10 ஆவது பதில் எங்கேயோ இடிக்குதே:) அதெப்பூடி அவ்ளோ கரீட்டாச் சொல்லிட்டீங்க:) மறுபிறப்பு கிடையாது என:)... சரி சரி கிடைச்சால் ஒரு பூஸாகோணும் என வேண்டிக்கோங்க:).

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    எல்லா பிறப்பும் பிறந்து கடைசியில் தான் மனித பிறவி என்கிறது புராணம்.

    சரி, அப்படி பிறந்தால் உங்கள் விருப்பம் போல் பூஸாகோணும் என்று வேண்டிக்கிறேன். மகிழ்ச்சியா?

    உங்கள் வரவுக்கு ம், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. 'பூஸாகோணும்' என்றால் என்ன? புரியவில்லையே!

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    அதிரா பூனை பிரியர். அதனால் அடுத்தபிறவியில் பூஸாகோணும்'என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.
    உங்கள் மறுவருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. அந்த நான்காவது பதில் முதியோர்களுக்கான வசதிகள் ஸர்க்காரே செய்து தர வேண்டும்.
    மேல் நாட்டைப்போல இது நடநதால்
    விடுதலை, விடுதலை
    பெற்றவர்களுக்கும்,பிறந்தவர்களுக்கும்
    விடுதலை,விடுதலைதான். இந்த
    பதில் என்னைக் கவர்ந்தது. மற்றவைகளும் நல்லவைகளே. ஒரு வயதான வூதாட்டியின் கோணத்தில்தான் இதை மிக்க வரவேற்க முடிந்தது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சிறு பெண் போல் அழகாய் பதிவுகள் எழுதி எல்லோரையும் அசத்தி வருகிறீர்கள்.
    உங்களிடம் இளையவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.


    உங்களின் வரவுக்கும், கருத்து நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு

  45. வணக்கம் நான் கில்லர்ஜி எவ்வளவு பெரிய தவறு என்னுடையது ச்சே நினைக்கவே வெட்கமாக இருக்கிறது அத்தனை தாமதமாக வந்து இருக்கிறேன் நான் காந்திஜியுடன் ஃபோட்டோ எடுக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு தோன்ற விலல்லையே,,, தாங்கள் தூக்கதில்கூட கவனமாக ஃபோட்டோ எடுத்து இருக்கிறீர்கள் .
    பதில்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள் இனி தங்களைத் தொடர்கிறேன்...
    அன்புடன் தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    பதிலளிநீக்கு

  46. ஆனாலும் தாங்கள் எனது ''காந்தி'' பதிவுக்கு வரவில்லை போலயே....

    பதிலளிநீக்கு
  47. நான் இணைப்பில் இணைத்துக்கொண்டேன் இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு