Wednesday, November 19, 2014

மெல்ல விடியும் பொழுது

காலை பொழுதின் அழகை நின்று ரசிக்க  நேரம் இல்லாமல்  ஓடிக் கொண்டு இருந்த காலங்கள் ஒன்று உண்டு. காலை மாலை இரண்டு நேரமும் வானத்தை பார்ப்பது அழகுதான். மீண்டும் நேரம் கிடைத்த  போது நான் கண்ட காட்சிகளை  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

                   

கார்த்திகை பனி மூட்டத்தில்  சூரியன் எழுவது கடலலையின் மேல் சூரியன் காட்சி அளிப்பது போல் இல்லே!

பறவையும் , மரமும், சூரியனும் 


ஓவியர்கள் நிலா, மரம், பறவை வருவது போல் பெரும்பாலும் வரைந்து இருப்பார்கள்   அது போன்ற ஒருகாட்சி   கிடைத்தது.

மேக மூட்டத்தில் நிலவை போல் காட்சி அளிக்கும் சூரியன்


காலை நேரத்தில் சூரியன் சந்திரன் போல் தோன்றும் ,  அந்த மாயத்தோற்றத்தை  ஒரு விடியலில் கண்ட காட்சியை பதிவாக்கி இருக்கிறேன்.

முழுநிலா வரும் காலமும் அது தேயும் போது ஒவ்வொறு தோற்றமும் அழகுதான். மூன்றாம் பிறையை சீக்கிரம் பார்த்துவிட வேண்டும் சிறிது நேரத்தில் மறைந்து விடும். 

நிலவோ! சூரியனோ!


பவுர்ணமி நிலா போல் இருக்கிறதா?


பனியை விலக்கி வெளி கிளம்பும் சூரியன்

காலை பனியை விலக்கி கொண்டு தன் இளம்கதிரை வீசி பனி மூட்டத்தை வெளி கிளம்பி வரும் காட்சி இரவு மேகங்களுடன் மறைந்து மறைந்து விளையாடும்  நிலவை போல் இருக்கிறது அல்லவா?


உணவும் தண்ணீரும் எடுக்க வரும் பறவைகள்உணவு உண்ணும் மைனா

                                       
                                             இது என்ன பறவை கண்டு பிடியுங்கள்?


காலை நான் வைக்கும் உணவை எடுக்க வந்த பறவைகளை கண்டு களித்தீர்களா?

                                                            வாழ்க வளமுடன்.
=======================================================================

45 comments:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமைங்க... வாழ்த்துகள்.

ரூபன் said...

வணக்கம்
அம்மா.

மனதுக்கு இதமான படங்கள் அதற்கான விளக்கங்கள் சிறப்பு பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சுந்தரா said...

படங்கள் அத்தனையும் உங்கள் ரசனையைச் சொல்லுகின்றன.

கடைசிப் படம் காகம் தானே?

வருண் said...

பறவைகளை எல்லாரும் இத்தனை ரசிப்பதில்லை- என்னையும் உங்களையும் தவிர! :)

கீழே உள்ளது புறாவா? :)))

நமக்குப் பிடித்த பறவைதானே நம் கண்களுக்குத் தெரியும்? :)

குயிலாகவும் இருக்கலாம்னு தோனுது. :)

மனோ சாமிநாதன் said...

ரசனை மிகுந்த, அழகிய புகைப்படங்கள்!

அம்பாளடியாள் said...

கா ...கா ..கா என் மனதைக் கவர்ந்த காக்காக் கூட்டமே என்னையும் இங்கே
அழைத்து வந்துள்ளது போலும் !:) வாழ்த்துக்கள் தோழி இயற்கையோடு
ஒன்றி வாழும் வாழ்வே இன்ப மயமானது இவை தொடரட்டும் .பகிர்வுக்கு
மிக்க நன்றி .

இராஜராஜேஸ்வரி said...

கண்கொள்ளாக்காட்சிகள்...

ஸ்ரீராம். said...

உணவுண்ணும் மைனாவை ஃபேஸ்புக்கில் பார்த்து மகிழ்ந்தேன்.

முதல் படத்தில் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் தெரிகிறது.

கடைசிப் பறவை குயில் அல்லது காக்கை!

நிலாமகள் said...

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! நன்றி தோழி... காலைப் புத்துணர்ச்சிக்கு.

துரை செல்வராஜூ said...

காலை இளம்ப்னியுடன் இனிய விடியல்..

படங்கள் அருமை..
வாழ்க நலம்!..

கே. பி. ஜனா... said...

இயற்கையில் இப்படி எத்தனையோ அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன... நல்ல காட்சிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு...

ரசித்தேன்...

தி.தமிழ் இளங்கோ said...

கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்! …. அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே! – என்று பாடத் தோன்றியது. உங்களுக்கு இருக்கும் போட்டோக் கலைக்கு வாழ்த்துக்கள்.
த.ம.2 கருத்துரைப் பெட்டியில் இருக்கும் Word Verification ஐ எடுத்து விடவும்.

புதுகைத் தென்றல் said...

படங்கள் அழகு

G.M Balasubramaniam said...


பல பாராக்கள் சொல்ல இயலாததைச் சில படங்கள் சொல்லி விடுகின்றன. உங்கள் ரசனையும் மெனக் கேடும் ரசிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

வரவர ராமலட்சுமி அக்காவுக்குப் போட்டியா வர்றீங்க - புகைப்படம் எடுப்பதில். :-)

//சூரியன் எழுவது கடலலையின் மேல் சூரியன் காட்சி அளிப்பது போல் /

எனக்கு மலைகள் பின்னிருந்து வருவது போல தோன்றுது. போலவே, நிலவா சூரியனா என்ற சந்தேகம் எழுந்தது. நீங்க கரெக்டாச் சொல்லிட்டீங்க!!

கோமதி அரசு said...

வணக்கம் பவளசங்கரி, வாழ்க வளமுடன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சுந்தரா, வாழ்க வளமுடன்.
ஓ! என் ரசனையை தெரிந்து விட்டதா?
உங்கள் பதில் சரியே.
கடைசிப் படம் அண்டம் காக்காதான் .

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. சரியான பதில் சொன்னதற்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் வருண், வாழக் வளமுடன்.
நீங்களும் பறவை ரசிகரா?


உங்களுக்கு சமாதான பறவை புறாவும் இனிமையாக கூவும் குயிலும் பிடிக்குமா?

அந்த பறவை அணடங் காக்கா.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

சூர்யோதயப் படங்கள் அனைத்தும் பிரமாதம். பறவை விருந்தாளிகள் மனதுக்கு உற்சாகம். காணொளி பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளடியாள், வாழக வளமுடன்.

காக்கா கூட்டம் அழைத்து வந்ததா? காக்கா கூட்டத்திற்கு நன்றி.
நீங்கள் சொல்வது போல் இயற்கையோடு ஒன்றி வாழவது இன்ப மயமானது தான்.

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். மைனா பார்த்து மகிழந்தது அறிந்து மகிழ்ச்சி.

சூரிய அஸ்தமன சமயத்தில் கடலுக்கு உள் மறைய ஆரம்பித்த தோற்றம் எனக்கு தெரிந்தது. உங்களுக்கும் தெரிந்தது மகிழ்ச்சி.

கடைசி படம் அணடங் காக்கை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

கோமதி அரசு said...

வணக்கம் நிலாமகள் , வாழ்க வளமுடன்.காலைப் புத்துணர்ச்சியோடு பாரதி பாடியதை சொல்லி ரசித்தமைக்கு நன்றி நிலா.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தமைக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், ரசிப்புக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
நாலயிர திவ்யபிரபந்த பாடலுடன் கதிரவனை ரசித்தமைக்கு நன்றி.
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், தமிழமண வாழ்த்துக்கும் நன்றி.

கருத்துரைப் பெட்டியில் இருக்கும் Word Verification ஐ நான் வைக்க வில்லை சார்.
எனக்கும் சிலர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட போகும் போது இப்படி காட்டும் அப்புறம் போய் விடும். அது தானக சில சமயம் வருகிறது எப்படி என்று தெரியவில்லை.கோமதி அரசு said...

வணக்கம் புதுகை தென்றல், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு, கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன், நீங்கள் சொல்வது சரிதான், அந்தக் காலத்தில் படம் பார்த்து கதை சொல் என்ற பாட திட்டம் உண்டு. படத்தைப் பார்த்தே கதை சொல்லலாம்.


உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

இது என்ன புகழ்ச்சி? ஹுஸைனம்மா?
ராமலக்ஷ்மி போல் வர முடியுமா?

//எனக்கு மலைகள் பின்னிருந்து வருவது போல தோன்றுது.//

ஓ அப்படியா?

//நிலவா சூரியனா என்ற சந்தேகம் எழுந்தது. நீங்க கரெக்டாச் சொல்லிட்டீங்க!!//

இதில் இருவருக்கும் ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி, நன்றி.


கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

ஆறு மாததிற்கு முன்பு பெருவிரலில் அடிப்பட்டதிலிருந்து கால்வலி இருப்பதால் சிறிது காலம் அதிகாலை மொட்டை மாடி நடை இல்லை.

இரண்டு தினங்களுக்கு முன் மரஸ்டூலில்( அதே கால் ஆனால் வேறுவிரல்) கால்விரலில் இடித்து இரத்தம் கட்டிக் கொண்டது, டாகடரிடம் போன போது அவர் இரத்தம் கட்டி இருப்பதற்கு மருந்து கொடுத்தார்.

கால்வலிக்கு தினம் வேகமாய் காலையில் நடைபயிற்சி செய்யுங்கள் என்றார். மீண்டும் மொட்டை மாடிக்கு நடக்க சென்றதால் அருமையான சூர்யோதயப் படங்கள் கிடைத்தன, உங்களிடமும் பாராட்டு பெற முடிந்தது. உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
டாக்டருக்கும் நன்றி.
காணொளியை மெதுவாய் எப்போது முடியுமோ அப்போது பாருங்கள் சின்னது தான்.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

கோமதி அரசு said...

வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

இளமதி said...

பார்க்கும்போதே மனதிற்கு அத்தனை மகிழ்வான காலைக் காட்சி அக்கா!

மனதைக் கவர்ந்தன அனைத்துப் படங்களும்!
மிக அருமை! வாழ்த்துக்கள் அக்கா!

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
காலை காட்சி மனதுக்கு மகிழ்வை அளித்தமை அறிந்து மகிழ்ச்சி.
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி இளமதி.

Ranjani Narayanan said...

காலை வேளையைப் புகைப்படத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள். சூரியனை இதைப்போலப் பார்த்ததேயில்லை. பறவைகளையும் அருமையாக புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!

Ramani S said...

காலைப் பொழுதின்
அதி உன்னத உணர்வைத் தந்து போனது
தங்கள் அற்புதமான படங்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 4

ராமலக்ஷ்மி said...

காணொளி அருமை.

கோமதி அரசு said...

வணக்கம் ரஞ்சனி வாழ்க வளமுடன்.
உங்கள் உற்சாகமூட்டும் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும் நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

தமிழ்மண வாக்கிற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
காணொளியை ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.