பொன்திரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடல் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை ய்கலம்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன நுண்ணிடை யரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாய்வெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே
-திருஞானசம்பந்தர் தேவாரம்
அச்சரப்பாக்கம் கோவிலுக்குப் போன மாதம் 10 தேதி சென்றோம். சென்னைக்கு உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று இருந்தோம். .தேவாரத்தில் இது அச்சிறுபாக்கம் என்று கூறப்படுகிறது.
நாங்கள் போன அன்று சங்கடஹரசதுர்த்தி. இந்தக் கோவிலில் விநாயகர் மிக முக்கியமானவர். அன்று எதிர்பாராமல் சங்கடஹர சதுர்த்தி அமைந்து விட்டது. கோபுர வாயிலுக்குள் நுழையும் போதே வெல்லக் கொழுக்கட்டை
பிரசாதம் தந்தார்கள். விநாயகரின் அருள் கிடைத்த மகிழ்ச்சி.
இக் கோவில் மதுராந்தகத்திலிருந்து தெற்கே 16 கி.மீ . தொலைவில் உள்ளது.
இராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் கொண்ட கோவில். இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு அம்பாள்கள் இருக்கிறார்கள்.
ஸ்வாமி பேர் எமையாட்சீசர், அம்மன் சுந்தரநாயகி. (பாலசுகாம்பிகை எனும் இளங்கிளியம்மை என்பன வேறு பெயர்கள்.)
பாண்டிய மன்னன் பிரதிஷ்டை செய்த ஸ்வாமிக்கு உமையாட்சீசர், அம்மன் மெல்லியலாள்.
எமையாட்சீசர் பழமையானவர் ,சுயம்பு மூர்த்தி. பாண்டிய மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உமையாட்சீசர் பின்னர் வந்தவர்.
கண்ணுவமுனிவர், கெளதமமுனிவர்,பூஜித்த தலம்.
கொடிமரமும் நந்தியும் கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் சற்றுத் தள்ளி உள்ளன.
ஊரின் பெயர்க் காரணம்:-
1. சிவபெருமான் திரிபுர தகனத்தின் போது பிள்ளையாரை வணங்காமல் போனதால் அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தாகவும், பின்
சிவபெருமான் விநாயகரை நினைத்தபின் அச்சு சரியானதாகவும் சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறிந்த இடம் என்பதால் இத்தலம் அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
2.சிவபெருமான் திரிபுரதகனம் செய்யும் பொருட்டுத் தேரில் ஏறிச்சென்ற போது தேர்வடிவாக தேவர்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவனுக்கு துணைசெய்வதை எண்ணி அகந்தை கொண்டதால் இறைவன் அச்சுமுறியச் செய்தார். அதனால் இத்தலம் அச்சிறுபாக்கம் என்றும் கூறப்படுகிறது.
3. பாண்டிய மன்னன் தனது நாட்டில் திருக்கோவில் பிரதிஷ்டைக்கு வேண்டிய பொருட்கள், கங்கை மணல் ஆகியவற்றை ஏற்றி வரும் போது இத்தலத்தின் இடத்தில் அச்சுகள் முறிந்தன. மன்னன் இறைவனது அசரீரி வாக்கினைக் கேட்டு, இத்தலத்தில் திருப்பணிகள் செய்து தன் நாடு திரும்பினார் என்ற வரலாறும் உண்டு. வண்டிகள் அச்சுமுறிந்த இடம் இவ்வூருக்கு அருகில் உள்ள வண்டிக்குப்பம்.
கருவறையில் சுவாமியும் அம்பாளும் சிலைவடிவில் இருக்கிறார்கள்
முன் இருப்பது - எமையாட்சீசர் பழமையான மூர்த்தி
வெளிப் பிரகாரம்
அரசும் வேம்பும் இணைந்து இருக்கும் இடத்தில் பிள்ளையார், நாகங்கள்
அம்மன் சன்னதியில் ஓரத்தில் உள்ள சாஸ்தா
திருஞானசம்பந்தர் பாடல்கள்
உள் கோபுர வாயில்
தீர்த்தம்:-தேவ,பானு சங்கு தீர்த்தங்கள். பானுதீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது.
கோவில் அருகில் ஒரு தேரும், கோவில் எதிரில் ஒரு தேரும் உள்ளது
அச்சு முறிந்த சக்கரங்கள்( இவை பிற்காலத்தில் முறிந்த சக்கரங்கள்)
தலமரம் - கொன்றை. தலவிருட்சத்தின் அடியில் சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், நந்தி
கோபுர வாசல் அருகில் உள்ள இளங்கிளிஅம்மன்
நான்கு காலபூஜை, 10நாட்கள் சித்திரை மாதத்தில் திருவிழா நடக்கிறது.
உள்ளே இருக்கும் ஸ்வாமி சன்னதிக்கு, வெளியே பெருமாளும் இருக்கிறார்
அலுமேலுத் தாயார்
மூன்று தேவியர்- நவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுமாம்.
சித்திரைத் திருவிழா நடைபெறும்போது சுவாமி எழுந்தருளும் வாகனங்கள்.
ஓதுவார் ஞானப்பிரகாசம் அவர்கள் தேவாரங்கள் பாடி, கோவில் வரலாற்றைச் சொன்னார். அவர், ”தினமும் நமச்சிவாயமந்திரம் சொல்லுங்க நலம் அடைவீர்கள் ”என்றார் .
மனநிறைவுடன் அவரிடம் விடைபெற்றுப் பின் சென்னை வரும் வழியில் மேல்மருவத்தூர் அம்மனை நன்றாகத் தரிசனம் செய்து சென்னை வந்து சேர்ந்தோம்.
=====================
வாழ்க வளமுடன்.
படத்துடன் ஒவ்வொரு விளக்கமும் பரவசம் அம்மா...
பதிலளிநீக்குஅச்சிறுபாக்கம்!..
பதிலளிநீக்குஅழகான படங்களுடன் - அருமையான தொகுப்பு..
அங்கே மூலஸ்தானம் வரை படம் எடுப்பதற்கு விடுகின்றார்களா!?...
இங்கே எங்கள் ஊர் பெரிய கோயிலில் - நாலுகால் பாய்ச்சலில் வருகின்றார்கள் கேலக்ஸியைப் பிடுங்குவதற்கு!..
ஆனால் - அதே மூலவர் உள்ளூர் நாளிதழ்களில் அலங்காரத்துடன் வருகின்றார்..
வேண்டப்பட்டவர்களின் Facebook ல் பிரியமுடன் வருகின்றார்.
(இதில் ஏதோ உள்குத்து இருக்கின்றது என எண்ணுகின்றேன்!..)
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநானும் யாராவது தடுப்பார்கள் என்று தான் நினைத்தேன். தடுக்கவில்லை. வெளிப்படங்கள் காமிராவில், கருவரை படங்கள் ஐ-போனில்.(தூரத்திலிருந்து தான் எடுத்தேன்)
நம்மை எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டு பத்திரிக்கைகாரர்களுக்கு , தொலைக்காட்சிக்கு எல்லாம் பர்மிஷன் கொடுப்பார்கள் அவர்கள் கோவிலுக்கு கூட்டம் வரும் இல்லையா? அது தான். நானும் இணையத்தில் கோவிலைபற்றி எழுதுவதாக சொல்லி தான் எடுத்தேன்.
சில கோவில்களில் உள்ளயே அனுமதி கிடையாது வாங்கி வைத்துக் கொள்வார்கள் காமிரா, போனை எல்லாம்.
நமக்கு கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கவில்லையா பத்திரிக்கை , சுவரொட்டி இப்படி ஏதாவது படம் கிடைக்கும். கிடைத்தவரை மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மிக அருமையாக தரிசனம் செய்த நிறைவு..பாராட்ட்டுக்கள்.
பதிலளிநீக்குநேரில் தரிசிப்பதைப் போன்ற உணர்வை
பதிலளிநீக்குஏற்படுத்திப் போகும் அற்புதமான பதிவு
மற்றும் புகைப்படங்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅச்சரபாக்கம். ஒரு காலத்தில் அமைதியான ஊர். இப்போது பரபரப்பான ஊராகிவிட்டது. ஊரின் முக்கிய சிவன் கோயிலைப் பற்றிய தகவல்களும், படங்களும் சிறப்பாக உள்ளன.
த.ம.3
படங்கள் அருமை. ஏனோ உங்கள் பதிவில் படங்கள் எல்லாமே திறக்க நேரமாகின்றன.
பதிலளிநீக்குஅச்சிறுப்பாக்கம் என்றால் எனக்கு கூடவே ருஷ்யேந்திரமணி என்று மனதில் நினைவுக்கு வருகிறது! :)))))
//அரசும் வேம்பும்//
எங்கள் வீட்டுக்குப் பின்புறம் அரச மரமும், வலது புறம் வெப்ப மரமும், இடது புறம் நிலவேம்பு மரமும் இருக்கின்றன! ('இப்ப, அதனால் என்ன?' என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!!)
கோவில் குளத்தில் கொஞ்சமாவது தண்ணீர் காணப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இந்தப் பாடல் பெற்ற ஸ்தலத்தை பார்த்து விட வேண்டும். உங்கள் பதிவினைப் படித்ததும் எம்பெருமானை தரிசனம் செய்தேயாக வேண்டும் என்று மனம் விரும்புயறது. . எம்பெருமான் மனம் வைக்க வேண்டுமே
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
தகவல்களுடன் பகிர்வு அருமை. கோவிலைச் சுற்றி வந்து அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள். அரசும் வேம்பும் நாகத் தெய்வங்களும் விநாயகருடன் அழகான காட்சி.
பதிலளிநீக்குவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅந்தக்கால நடிகை ருஷ்யேந்திரமணி அவர்களுக்கு அச்சிறுப்பாக்கமா?
நீங்கள் நினைத்த ருஷ்யேந்திரமணி யார்?
ஏன் நினைவு வந்தது என்று சொன்னால் தெரியதவர்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு.
உங்கள் வீட்டுக்கும் பின் அரசும், வேம்பும் இருந்ததால்தான் குட்டி பாம்பு வந்தது என்கிறீர்களா?
நிலவேம்பு காய்ச்சலுக்கு காஷாயம் வைத்து குடிக்க சொல்கிறார்களே அதுவா?
குளத்தை சுற்றி வீடுகள், அப்புறம் தண்ணீர் எங்கு இருந்து வரும் ஸ்ரீராம்?
ஏன் படம் திறக்க மாட்டேன் என்கிறது உங்களுக்கு? பெரிதாக இருப்பதாலா? காரணம் தெரியவில்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநாம் அவனை நோக்கி செல்ல நினைத்தால் அவர் மனம் வைத்து அழைத்து விடுவார்,
சென்று வாருங்கள்.
அமைதியான சுத்தமான கோவில்.
மனதுக்கு நிம்மதி தருகிறது.
வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தகவலுக்கு நன்றி.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சிறப்பான தலத்தை பற்றி சிறப்பான படங்களுடன் பதிவு அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஊரின் பெயர்க் காரணங்கள் கற்பனை வளத்துக்கு நல்ல உதாரணங்கள். அப்பப்பா... எத்தனை கதைகள். உம் என்றால் ஒரு கதை இச் என்றாலொரு கதை. படங்கள் எல்லாம் அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிருத்தலம் பற்றி தெளிவாக அறிந்துகொண்டோம்...
பதிலளிநீக்குவணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவரலாறு உண்மையும், பொய்யும் நிறைந்தது தான். மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட சொல்வதில் தப்பில்லை.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அழகான படங்கள்
பதிலளிநீக்குகோயிலைச் சுற்றி வந்த ஓர் உணர்வு
நன்றி சகோதரியாரே
வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அச்சரபாக்கம் குறித்து அறிந்து கொண்டேன். விபரமான புகைப்படங்களும், தளம் குறித்த செய்திகளும் அருமை சகோ.நன்றி
பதிலளிநீக்குவணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.