கதைகள் சொல்லும் வீடு
பழைய வீட்டின் மீது நாலு மரம் வளர்த்து இருக்கிறது. முருங்கை மரம், ஆலமரம், அரசமரம், புங்கமரம் வளர்ந்து இருக்கிறது.காலத்தின் சுவடுகளை தாங்கி நிற்கும் இந்த வீட்டில் எத்தனை கதைகள் இருக்கும் !
கடை முழுக்கு சமயம் படித்துறைக்குப் போன போது அதன் அருகில் இருந்த இந்த பழைய வீடு கண்ணில் பட்டது. புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன் நேற்று. அதற்கு அழகாய் இன்று கவிதை வடித்து விட்டார்கள் கீதமஞ்சரி.
கீதமஞ்சரியின் அருமையான கவிதையை நீங்களும் படிக்க இங்கு :-
சந்தடியற்று என்னை அநாதையாக்கிப் போனவர்களின்
எச்சங்கள் இப்போது எங்கோ வெகுதொலைவில்!எங்கிருந்தோ தொலைதூரத்திலிருந்து வந்த
பறவைகளின் எச்சங்கள் இதோ பத்திரமாய் என் தலையில்!
பழகிய உயிர்மூச்சுகளின் பிரிவெண்ணி
பாழ்நினைவுகளால் தடுமாறிடும் பொழுதுகளிலெல்லாம்
வருடிக்கொடுகின்றன இலைக்கரங்களால் கிளைகள்!
சுவர்பிளந்து உள்ளேகுகின்றன வேர்க்கால்கள்!
நானிருந்த இடத்தில் நாளையிருக்கலாம்
ஆலும் அரசும் புங்கையும் முருங்கையும்!
ஆனாலும் என்னை நீங்கள் அடையாளம் காணலாம்
வந்தமரும் பட்சிகளின் ஆரவார ஒத்திசைவில்!
நன்றி கீதமஞ்சரி.
கேட்டீர்களா? வீடு பாடும் கவிதையை.
வாழ்க வளமுடன்.
- ------------------
இப்படி ஒரு வீட்டிலிருந்து இன்று
பதிலளிநீக்குஅதை விடுத்து (அந்த வீடும் இப்போது
இப்படித்தான் இருக்கிறது )
நகரச் சூழலில் வாழும் எனக்கு
தங்கள் புகைப்படமும் கீத மஞசரி அவர்களின்
அற்புதமான கவிதைகளும் கூடுதல் பாதிப்பை
ஏற்படுத்திப் போகிறது
tha.ma 1
பதிலளிநீக்குவருடிக்கொடுக்கும்
பதிலளிநீக்குஆரவார நினைவலைகள்...
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா.
மனிதன் வாழ்ந்த வீடு இன்று மரங்களின் வாழ்க்கை.. அழகிய புகைப்படங்கள் கவிதையும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதை அசைக்கிற படம். உருக்கமான கவிதை. இருவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குகல்மனம் கொண்டு மரம் வெட்டும் மனிதர்கள் வாழ்ந்த கல்வீடு மரங்களை வளர்க்கிறது.
பதிலளிநீக்குபிராயச்சித்தம்.
கீதமஞ்சரியின் கவிதையை ரசித்தேன்.
படத்திலுள்ள வீட்டைப் பார்த்தால், அதனுள்ளும் “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம் போன்று ஒரு ஜமீன் கதை ஒளிந்து இருப்பது போல் தெரிகிறது. நீங்கள்தான் அதனைத் தெரிந்து எழுத வேண்டும்.
பதிலளிநீக்குபடம் பார்த்து கவிதை படித்த கீதமஞ்சரி, வீட்டை நேரில் பார்த்தால் இன்னும் உருகிவிடுவார் போலிருக்கிறது.
த.ம.2
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநீங்கள் எடுத்த புகைப்படமும் அதற்க்கு கீதாவின் கவிதையும் மிக அருமை .
பதிலளிநீக்குஅந்த வீட்டின் ஜன்னல்கள் முன்பு ஒரு காலத்தில் திறந்து வைக்கபட்டு காற்றை சுவாசித்திருக்கும்..எத்தனை ஜீவன்கள் அங்கு வாழ்ந்திருக்கும் .ஊரில் எங்கள் வீடும் இருக்கு சுற்றிலும் மரங்கள் ஆனால் அவ்வபோது பராமரிக்கிறோம் .அநாதையாக்க மனம் வரல்லை எனக்கும் தங்கைக்கும் ..
படமும் அதற்கேற்ற கீதமஞ்சரியின் கவிதையும் வெகு சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநலமா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.
வணக்கமிராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன். இலங்கை சென்று இருந்த போது இது மாதிரி வீடுகள் நிறைய பார்த்தேன். மனது மிகவும் சங்கடமானது.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், கீதமஞ்சரியின் கவிதையை, புகைபடத்தை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன். பாழடைந்த வீட்டைப் பார்த்தால் நெஞ்சம் மறப்பதில்லை படம் நினைவுக்கு வருவது டைரக்டர் ஸ்ரீதர் அவர்களின் படத்திற்கு கிடைத்த வெற்றி.
பதிலளிநீக்குகீதமஞ்சரியின் இளகிய உள்ளத்தில் எழுந்த கவிதை போல் நேரில் பார்த்தால் இன்னும் கவிதை பெருகும்
உங்கள் கருத்துக்களுக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.
வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடம், கவிதை இரண்டையும் பாராட்டியதற்கு நன்றி.
’யானை அசைந்து அசைந்து திங்கும், வீடு அசையாமல் திங்கும் ”என்பார்கள்.. வீடு என்று இருந்தால் அதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும், பழுதுகள் பார்த்து அடிக்கடி வெள்ளை அடிக்க வேண்டும் அப்போது தான் வீடு வீடாய் இருக்கும் இல்லையென்றால்
பாழ்டைந்தவீடாகி விடும்.
//அவ்வபோது பராமரிக்கிறோம் .அநாதையாக்க மனம் வரல்லை எனக்கும் தங்கைக்கும் ..//
அது தான் நல்லது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சுரேஷ்.
இரண்டு மூன்று தினங்களுக்கு முன் ஒரு செய்தி கண்டேன். பழைய நகரத்தார் வீடுகள் இடிக்கப் பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப் போகிறார்களாம். வீட்டின் உடைமையாளர்கள் மனம் வேதனைப்படாதா.?இதைத்தான் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது என்கிறார்களோ.?
பதிலளிநீக்குநீங்கள் எடுத்த அழகிய புகைப்படம் கீதமஞ்சரிக்கு ஒரு அருமையான க்விதையாகி விட்டது! யார் கண்டது? கவிதை போல் வாழ்ந்தவர்கள் அங்கிருந்திருக்கலாம்!
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநகரத்தார் வீடுகள் பராமரிப்பது கஷ்டமான காரியம் இப்போது.
முன்பு தூணில் உள்ள பித்தளை தூண்களை துடைக்க ஆள், மரத்தூண்களை பாலிஷ் செய்ய ஆட்கள் என்று இருந்த போது முடிந்த காரியம் அது.
நான்கு ஐந்து தட்டு (உள் அமைப்பு) கொண்டது, நிறைய அறைகள் இருக்கும். எந்த ஊரில் இருந்தாலும் அவர்கள் வீட்டு திருமணத்தை அவர்கள் பரம்பரை வீட்டில் வைத்துக் கொள்வார்கள் இப்போது எல்லாம் அது இயலாத காரியம் ஆகி விட்டது.
குழந்தைகள் வெளி நாட்டில் பெற்றோர்கள் அங்கும், இங்கும் இருக்கிறார்கள். அதனால் திருடர்கள் அவர்கள் வீடுகளில் தங்கி பொங்கி சாப்பிட்டு சவகாசமாய் திருடி செல்கிறார்கள். அதில் இருக்கும் பர்மா தேக்கு கதவு, ஜன்னல்களை கலை அம்சம் நிறைந்த கதவு, ஜன்னல்கள்.
பரம்பரை வீடுகள் சில சினிமா, நாடகம் ஷூட்டிங் நடக்கும் இடங்களாக மாறி வருகிறது.
காலத்தின் மாற்றங்களை ஏற்று ஆக வேண்டிய கால கட்டம், வேதனை அடையத்தான் செய்யும் மனம். ஆனால் அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?
நாம் குடி இருக்காவிட்டால் மரங்கள் தான் தன் விழுதுகளையும், வேர்களையும் பரப்பி வளரும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
வாங்க மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். கவிதையாக வாழ்ந்தவர்கள் இருந்ததால் தான் கீதமஞ்சரியின் இதயத்தை வருடி செல்லும் அழகிய கவிதை கிடைத்து இருக்கிறது.
உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
எத்தனை எத்தனை மங்கலங்களைக் கண்டிருக்கும் அந்த வீடு!?..
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை சந்தோஷங்களைத் தந்திருக்கும் அந்த வீடு!?..
வேரோடி விழுதுகளுடன் விளைந்த உள்ளங்கள் எங்கே?..
வேரோடி விழுதுகளுடன் சிதைந்த இல்லம் தான் இங்கே?..
- தங்களின் படமும் கீதமஞ்சரி அவர்களின் கவிதையும் அருமை..
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் சந்தோஷங்களை, மங்கலங்களை கண்டிருக்கும் அந்த வீடு.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
மரங்களைப் பார்க்க மகிழ்ச்சி. மரங்களுக்கு இடம் கொடுத்த வீட்டிற்கு நன்றி. அழியும் முன்னால் வேறோரு உயிருக்கு இடம் கொடுத்துவிட்டது இந்தவீடு. படமும் பாடலும் மிக அருமை கோமதி. கீதாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் வல்லிஅக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதும் நன்றாக தான் இருக்கிறது.ஒன்றின் அழிவு மற்றொன்றுக்கு பிறப்பு.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
வருடிக்கொடுக்கும் ஆரவார நினைவலைகள் ....
பதிலளிநீக்குதங்களின் படமும் கீதமஞ்சரி அவர்களின் கவிதையும் அருமை..
Congratulations to both of you.
>>>>>
//யார் கண்டது? கவிதை போல் வாழ்ந்தவர்கள் அங்கிருந்திருக்கலாம்!
பதிலளிநீக்கு- Mrs. Mano Swaminathan Madam.//
Superb ! :)
//யார் கண்டது? கவிதை போல் வாழ்ந்தவர்கள் அங்கிருந்திருக்கலாம்!
பதிலளிநீக்கு- Mrs. Mano Swaminathan Madam.//
Superb ! :)
கவிதையை ரசித்தேன்...
பதிலளிநீக்குஇதே போலக் கைவிடப்பட்ட வீடுகள் மூன்றை இங்கே http://tamilamudam.blogspot.in/2012/10/abandoned-pit.html பதிவு செய்திருக்கிறேன். நேரமிருக்கையில் பாருங்கள். தலைப்புக்காகத் தேடிச் சென்று எடுத்த படங்கள். சமீபத்தில் அவை இடிக்கப்பட்டுவிட்டன.
பதிலளிநீக்குவணக்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஊருக்கு நலமாக சென்று ஓய்வு எடுத்தீர்களா?
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மனோ சாமிநாதன் அருமையாக சொன்னதை பாராட்டியதற்கு நன்றி.
பேத்தியின் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமைந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகவிதையை ரசித்தமைக்கு நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகைவிடப்பட்ட வீடுகளை அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
தேடி சென்று எடுப்பது எவ்வளவு கஷ்டம்.
எங்கள் ஊரில் இப்படிப் பட்ட வீடுகள் நிறைய இருக்கு ராமலக்ஷ்மி.
நீங்கள் காட்டிய வீடுகளில் கதவு ஜன்னல்களை எடுத்து சென்று விட்டார்கள் போலும் விற்க.(ஆள் இல்லாத செட்டிநாட்டு வீடுகளில் பர்மா தேக்கில் செய்தகதவு ஜன்னல்களை திருடர்கள் எடுத்து சென்று விடுவார்களாம் விற்க்)
இடிக்கப்பட்ட இடத்தில் கடைகள், அல்லது அடுக்குமாடி வீடுகள் வரப்பபோகிறதா?
உங்கள் கருத்துக்கும் கவனிக்கபடாத வீடுகளின் சுட்டி கொடுத்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
படத்தைப் பார்த்ததும் சட்டென்று என் உள்ளத்தில் பரவிய வலியை வார்த்தைகளாய்ப் பதிவு செய்தேன். அதைத் தாங்கள் வலையேற்றி சிறப்பு சேர்த்துவிட்டீர்கள். மனம் நிறைந்த நன்றி கோமதி மேடம். இங்கு படத்தோடு என் வரிகளையும் பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடத்திற்கு உங்கள் கவிதை பெருமை சேர்த்தது. சட் என்று கவிதை பிறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது அல்லவா! அப்படி பட்ட கவிதையை எல்லோரும் படிக்கவே இங்கு பகிர்ந்தேன்.
உங்கள் வரவுக்கு நன்றி கீதமஞ்சரி.