சனி, 18 செப்டம்பர், 2021
வியாழன், 16 செப்டம்பர், 2021
பிரவுன் த்ரஷர் பறவை ( Brown Thrasher Bird)
பிரவுன் த்ரஷர் ஜார்ஜியாவின் மாநிலப் பறவை.
மகள் வீட்டுத்தோட்டத்திற்கு இன்று காலை வந்த பறவை. மழை சிறு தூறலாக பெய்து கொண்டு இருந்தது. அதை வேடிக்கைப்பார்க்க நின்று கொண்டு இருந்தேன். இந்த பறவை வந்தது. உடனே காமிராவை எடுத்து வந்து எடுத்து விட்டேன்.
ஞாயிறு ஒரு இடத்திற்கு போய் இருந்தோம். அங்கு வரக்கூடிய பறவைகளைப் பற்றி போட்டு இருந்தார்கள். அதில் ஒன்று இந்த பறவை. அங்கும் இந்த பறவையை படம் எடுத்தேன் . அந்த இடத்தைப்பற்றி எழுதும் போது அங்கு பார்த்த பறவை படத்தை போடலாம் என்று வைத்து இருக்கிறேன்.
தேடல் ஆரம்பித்து விட்டது
ஒன்றும் கிடைக்கவில்லை
மீண்டும் அங்கும் இங்கும் பார்வை
சிறிய காணொளிதான் பாருங்கள். புல்லில் விழுந்து கிடக்கும் சிவப்பு இலைகளை கொத்தி கொத்திப் போட்டு தேடுகிறது உணவை. இங்கு உள்ள பறவைகள் எல்லாம் அதிகமாக சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது.
1970 இல் ஜார்ஜியா சட்டமன்றத்தால் அதிகாரப்பூர்வ மாநிலப் பறவையாக அங்கீகரிக்கப்பட்ட பறவையாம். கூகுளில் தேடிய போது கிடைத்தது. நன்றி கூகுளுக்கு.
இதன் பாடும் குரலை நான் பதிவு செய்ய முடியவில்லை. நான் உணவு தேடும் போது காணொளி எடுத்தேன், பறவை அப்போது பாடவில்லை. இந்த காணொளி youtube ல் பார்த்து பகிர்ந்து இருக்கிறேன். சிறிய காணொளிதான் நேரம் இருந்தால் பார்க்கலாம். மேலே உள்ள காணொளியில் பார்க்க முடியவில்லை என்றால்
https://www.youtube.com/watch?v=6-yTbJen4UQ&t=36s இந்த சுட்டி மூலம் பார்க்கலாம்.
மகன் ஊரில் இதே பறவை அந்த ஊருக்கு ஏற்ற வண்ணத்தில் இருந்தது. முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு, 12 செப்டம்பர், 2021
அந்தி வானம்!
ஆவணி மாதம் ஞாயிறு சிறப்பு. அதனால் சூரியன் படங்கள், செய்திகள் இடம்பெறுகிறது.
இதற்கு முன்பு போட்ட பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
இந்த பதிவில் மாலைச்சூரியன்.
மாலைச் சூரியன் மறையும் காட்சியைப்பார்க்க போய் இருந்தோம். மகன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த இடம். அங்கு எடுத்த சூரியன் படங்கள் பகிர்வாய் இந்த பதிவில்.
வெள்ளி, 10 செப்டம்பர், 2021
வாக்குண்டாம் நல்ல மன முண்டாம்
பத்து நாட்களுக்கு முன் பேரன் வரைந்த பிள்ளையார்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு
-ஒளவையார்
பிள்ளையார் சதுர்த்தி அன்று இந்த பதிவில் நிறைய பிள்ளையார் பார்க்கலாம் வாங்க.
வியாழன், 9 செப்டம்பர், 2021
பறவைகள் பலவிதம்
மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். ஞாயிறு வந்தேன் . மகள் வீட்டில் இருக்கும் மரங்களில் புல்வெளிகளில் வந்து அமர்ந்த பறவைகள் படம் இந்த பதிவில்.
வீட்டைச்சுற்றி பெரிய பெரிய மரங்கள், புல்வெளி என்று இருக்கிறது. பறவைகள் வித விதமாக வருகிறது. ஆனால் அவற்றை படம் எடுப்பதுதான் கஷ்டம் எல்லாபறவைகளும் மரத்தில் மறைந்து கொள்கிறது. புல்வெளி, மற்றும் மரத்தின் கிளையில் அமரும் போதுதான் எடுக்க முடிகிறது.
சிவப்பு Cardinal பறவை என்று நினைக்கிறேன். இதில் ஆண், பெண் வேறு பாடு இருக்கிறது.
இந்த சிவப்பு பறவை மரத்தில் இருந்த வண்ணத்து பூச்சியாக மாற வேண்டிய இளம் புழுவை பிடித்து இருக்கிறது, தன் காலை உணவுக்கு.
சிட்டுக்குருவிகள்
வந்த இரண்டு நாளாக பறவைகளை படம் எடுக்க முயன்றேன். நிற்காமல் ஓடி கொண்டு இருந்தது, இன்று கொஞ்சம் பழகி விட்டது. குருவியின் கீச் கீச் ஒலி மனதுக்கு இதம்.
தூரத்திலிருந்து ஒரு பார்வை
அப்புறம் உணவு தேடல்
இந்த பறவை பெரிய குருவி போல் இருக்கிறது
இதன் சத்தம் வேறு மாதிரி இருக்கிறது
சிவப்புக் கலர் குருவி அலகு நீட்டமாக இருக்கிறது. இதுவும் அவ்வளவு தெளிவு இல்லை. அவசரம் பறந்து விட போகிறதோ! என்று வேகமாய் எடுத்தேன்.வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------
ஞாயிறு, 5 செப்டம்பர், 2021
சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்!
சூரியன் வரும் முன் வானம்.
அதிகாலையில் சூரிய உதயம் பார்த்து வணங்கிய பின் நான் எடுத்த புகைப்படங்களை ஆவணி மாதம் சிறப்பு பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன்.
வெள்ளி, 3 செப்டம்பர், 2021
Casa Grande Ruins (காசா கிராண்டே)
13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிலா பள்ளத்தாக்கில் விவசாயம் செய்த ஹோஹோகாம் காலத்தின் பண்டைய கால மக்களால் கட்டப்பட்ட பெரிய கட்டிடம். இந்த கட்டிடம் சோனாரன் பாலைவன மக்கள் விவசாய செய்யும் மக்கள் கூடும் பெரிய வீடாக இருந்து இருக்கிறது.
மிக பெரிய கட்டிட அமைப்பு கொண்ட பெரிய வீட்டை குறிக்கும் ஸ்பானிஷ் மொழி காசா கிராண்டே .
1450 ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோனாரன் பாலைவன மக்கள் நீர்பாசன வசதியுடன் விவசாயம் செய்தனர் என்றும், வர்த்தக தொடர்புகளை வைத்து இருந்தார்கள் என்று கண்டு பிடித்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்த கட்டிடம் ஆகஸ்ட் 3, 1918 ம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவர்களால் தேசிய நினைவு சின்னமாக பாதுகாக்கப் படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக தேசிய பூங்கா நிர்வாகிக்க ஆரம்பித்த காலம் அக்டோபர் 15, 1966 .
இந்த புகழ் பெற்ற இடத்திற்கு ஆகஸ்ட் 27 ம் தேதி மகன் அழைத்து போனான். அந்த இடத்தில் எடுத்த படங்கள் இந்த பதிவில்.


