செவ்வாய், 17 டிசம்பர், 2019

மார்கழி மாத நிகழ்வுகள்


படம் கூகுள்

 மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கு உள்ள  மாதம்

படம் கூகுள்

மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன். 

வெள்ளி, 6 டிசம்பர், 2019

தருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள்

சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில்   குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள்.   நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப்  பகிர்ந்து இருந்தேன் பின்னூட்டத்தில்.
நெல்லைத் தமிழன் அவர்கள், நீங்களும் பதிவு ஒன்றை வெளியிடுங்கள் , ஆதீனங்களைப் பற்றிய பதிவில் உங்கள் கணவரது கருத்துக்களும் இடம் பெறட்டும் என்றார்கள்.

கீதா சாம்பசிவம் அவர்களும் தருமைஆதீனத்துடன் உங்கள் கணவருக்கு  தொடர்பு உண்டே  ! என்று சொன்னார்கள். சார் அங்கு பணி புரிந்த நினைவு அவர்களுக்கு வந்து இருக்கிறது.

 நான் என் கணவரிடம் சொன்னேன், நேற்று முழுவதும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். அதைப் பதிவாக்கச் சொன்னேன். முகநூலில் அவர்கள் பக்கத்தில் பதிவு செய்தார்கள்.


அதை இங்கே உங்கள் பார்வைக்கு.
              தருமபுர ஆதீனம் , 26ஆம்  குருமகா சந்நிதானம் அவர்கள் சித்தியடைந்த  நிலையில்     
                                                எனது நெஞ்சில் நிறைந்த நினைவுகள்

                                                  

வியாழன், 5 டிசம்பர், 2019

அன்புள்ள அப்பா

அப்பாவின் நினைவுகள் 

நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கிக் கொடுத்த ஃபாரின்
வாட்சைப்பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.


அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்லக் குழந்தைகள்தான்.  இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கித் தந்தார்கள்.  என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள்.  அப்பா வாங்கி வந்த  இரண்டு வாட்சில்  ஒன்று  வட்டம், மற்றொன்று சதுரம்.  அந்த காலக்கட்டத்தில்  சதுரம் தான் பேஷன்.  என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள்.
அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.

சனி, 30 நவம்பர், 2019

கிளிகளின் விளையாட்டு

"ஜன்னல் வழியே" என்று முகநூலில் பதிவுகள் போடுவேன். வீட்டு பால்கனியிலிருந்து எடுக்கும் படங்களை.  இங்கு என் சேமிப்பாய்-
ஒரு நாள் காலை கிளிகளின் கீச் கீச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது . எப்போதும் கீச் சத்தம் கேட்கும். நான் எட்டிப் பார்க்கும்போது அது வெகு தூரம் பறந்து  போய்  இருக்கும். அன்று  புறா, காக்கா, மைனா எல்லாம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கம்பியில் இந்த கிளிகள் அமர்ந்து இருந்தது. இந்த கம்பி, பறவைகளுக்குப் பிடித்தமான இடம்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

குடியிருந்த கோவில்

எனது பெற்றோர்

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' 

என்றார் திருவள்ளுவர்.

போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர், துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள் என் தாய்.


எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும் துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும் இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன் படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.


இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமை இறைவன
டி சேர்ந்தார்கள்.

வியாழன், 21 நவம்பர், 2019

அன்றும் இன்றும்


ஒரு காலத்திலே என்று சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பதிவு போட்டு இருந்தார்கள் இன்று.

அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடிய விளையாட்டுக்களைப் பற்றியும், வீடு நிறைய குழந்தைகள் அண்ணன், அக்காள், தங்கைகள், தம்பிகள் என்று வீட்டில் அதிக குழந்தைகள் இருப்பார்கள்; அவர்கள் விளையாடியும், அவர்களுக்குள் சண்டையிட்டும் , பின் சமாதானம் ஆகியும் களிப்பார்கள்.
தாத்தாவோடு விளையாடுவது எல்லாம் வரும் அந்த காணொளியில்.நாங்களும் அப்படித்தான் நிறைய உடன்பிறப்புகளுடன் விளையாடி மகிழ்ந்தோம்.

சனி, 2 நவம்பர், 2019

கலியுக வரதன்


இன்று காலை  2.11. 2019   சூரசம்மாரம் இல்லையா ! அதனால் பழமுதிர்சோலை போனோம். அங்கு நடைபெற்ற யாகசாலை பூஜை, அபிஷேக , அலங்கார பூஜைகள் இந்தப் பகிர்வில்.
மாலை நடைபெறும் சம்ஹாரம். தாராசுரன்   முதலில் வதம் செய்யப்படுவார், அடுத்து சிங்கமுகன், அடுத்து சூரசம்மாரம். சூரன் தலை சிவப்புக் கலராக அவன் கோபத்தை காட்டுது. சிங்கமுகம் பச்சைக் கலராக இருக்கிறது.