சனி, 30 நவம்பர், 2019

கிளிகளின் விளையாட்டு

"ஜன்னல் வழியே" என்று முகநூலில் பதிவுகள் போடுவேன். வீட்டு பால்கனியிலிருந்து எடுக்கும் படங்களை.  இங்கு என் சேமிப்பாய்-
ஒரு நாள் காலை கிளிகளின் கீச் கீச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது . எப்போதும் கீச் சத்தம் கேட்கும். நான் எட்டிப் பார்க்கும்போது அது வெகு தூரம் பறந்து  போய்  இருக்கும். அன்று  புறா, காக்கா, மைனா எல்லாம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கம்பியில் இந்த கிளிகள் அமர்ந்து இருந்தது. இந்த கம்பி, பறவைகளுக்குப் பிடித்தமான இடம்.

காமிராவை தூக்கி கொண்டு வந்தால் - எல்லாம் கம்பியில் அமர்ந்து இருந்த புறாவைத் தாண்டித் தாண்டி அமர்ந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருந்தது. புறா ஆடாமல் அசையாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.
கிளிகள் புறாவைச் சுற்றிச் சுற்றிப்  பறந்து வந்து அமர்வதும் பறப்பதுமாய்   விளையாடியது. படம் எடுப்பதே மிகக் கஷ்டமாய் இருந்தது

புறா இடத்தை விட்டு அசையவே இல்லை.
 தனிமையில் இருக்கே இந்தப் புறா என்று அதை மகிழ்ச்சிப் படுத்த நினைத்ததோ இந்தக்கிளிகள்?

பச்சைக் கிளி பாடுது

பக்கம் வந்தே பாடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
என்  தலை எங்கே போச்சு?
கிளிப் பேச்சு கேட்க வா
 'என்ன விளையாட்டு இது ' என்று காக்கையும்  வந்து அமர்ந்து பார்த்தது.

புறா, கிளிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தது.

வாழ்க வளமுடன்

34 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    நல்ல படங்கள்.. கிளி பாஷை தெரியுமா உங்களுக்கு ? அந்த கிளிகளின் மனம் உணர்ந்து அது புறாவின் தனிமையை போக்கி மகிழ்வுபடுத்துவதாய்..! நல்ல அழகான கற்பனை.. மிகவும் ரசித்தேன். பறவைகளுக்குள் என்ன ஒரு ஒற்றுமை. கிளிகள் மாறி மாறி அமர்ந்தவுடன் காக்கையும் வந்து அமர்ந்து வேடிக்கை பார்த்து ரசிக்கிறதா? தங்கள் கற்பனையும், படங்களும், ஒன்றுக்கொன்று பொருத்தமாய் மிகவும் ரசிக்கும்படி உள்ளது.

    எல்லாப் படங்களுமே அழகாகவும் வந்திருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      என் கற்பனையை ரசித்தமைக்கு நன்றி கமலா. தினம்
      பறவைகள் நிறைய அந்த கம்பியில் காலையில் வந்து அமரும். கிளிகள் முதல் முதலாக அமர்ந்தது அன்றுதான்.

      நீங்கள் சொல்வது போல் ஒற்றுமையாகதான் அவைகள் இருக்கிறது.

      காக்கையும் என்னை போல வேடிக்கை பார்க்குது.

      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. அழகான காட்சிகள் மா ...

    பார்க்க பார்க்க திகட்டாத காட்சிகள்

    முக நூலிலும் ரசித்தேன் ...இங்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      முகநூலிலும் கருத்து சொல்லி இருந்தீர்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  3. பொருமையாக காட்சிகளை படம் எடுத்து எங்களுக்கும் காணத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.    கிளிப்பேச்சு கேட்கவா என்று அழைப்பார்கள் / கேட்பார்கள்!   நீங்கள் கிளிப்படங்கள் காட்டி மகிழ்வித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      தத்தை மொழி என்று குழந்தைகளின் பேச்சை சொல்வார்கள்.
      அவர்களின் பேச்சை, கேட்க எல்லோரும் ஆசை படுவார்கள் தானே!
      கிளி படம் பார்த்து மகிழ்ந்தீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  5. என் தலை எங்கே போச்சு என்று வித்தை காட்டும் கிளி!   சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் எடுக்கும் போது அந்த கிளி தன் தலையை மறைத்து கொண்டது.
      பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.

      நீக்கு
  6. பறவைகள் ஒன்றோடு ஒன்று எப்போதும் இணக்கமாகவே வாழும்..  அன்று அந்தக் கிளிகளும் நல்ல மூடில் இருந்திருக்கும் போல.  புறாக்கள் எப்போதுமே இணையுடன்தானே இருக்கும்.  இணையில்லாத (!) சோகம் கொண்டாடும் அந்தப் புறாவின் மூடை மாற்ற இந்தப் பச்சைக்கிளிகள் முயற்சிப்பது ஸூப்பர்!

    பதிலளிநீக்கு
  7. ஆமாம் ஸ்ரீராம், பறவைகள் ஒற்றுமைதான். மைனா மட்டும் கொஞ்சம் சண்டையிடும் அவங்க கூட்டத்துடன் தான் அதுவும் சண்டையிடும். புறாக்கள் எப்போதும் இணையுடன் தான் இருக்கும்.அன்று என்னவோ தனிமையில் நின்றது. தனிமையில்
    இனிமை காண்கிறதோ ! கிளிகளின் விளையாட்டை ரசித்து .
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. என் வீட்டருகே நிறைய புறாக்கள் உண்டு கிளிகள் குறைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      இங்கும் புறாக்கள் அதிகம். கிளிகள் நிறைய வீட்டை சுற்றி தினம் பறந்து போகும். உடகார்ந்து போஸ் கொடுப்பது மிகவும் அரிது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. கிளிகளின் படங்கள் அருமை.

    நானும் கும்பகோணம் சார்ங்கபாணி கோவிலில் கிளிக்கூட்டங்களைப் பார்த்து வியந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      கும்பகோணம் சார்ங்கபாணி கோவிலில் கிளிக்கூட்டங்களைப் பார்த்தீர்களா?
      அங்கு எல்லா கோவில்களிலும் இருக்கும்.
      மாயவரத்தில் இலவம் பஞ்சு மரம் இருக்கும் மயூரநாதர் கோவிலில் அங்கு நிறைய கிளி கூட்டம் இருக்கும்.
      கிளி படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  11. ஆவ்வ்வ்வ் அழகிய கிளிகள்.. அதுவும் புறாக்களோடு ஒற்றுமையாக.. மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      புறாவோடும், காக்கையோடும் ஒற்றுமையாக நிற்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. கோதையின் கையில் கொஞ்சும் கிளி..
    அன்னை மீனாளின் கையில் அன்புக்கிளி...
    வந்தாரை வரவேற்கும் வண்ணக்கிளி..
    வளம் எல்லாமும் தந்துநிற்கும் அன்னக்கிளி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      கவிதை மிக அருமை.

      உங்கள் கவிதைக்கு நன்றி.

      நீக்கு
  14. அழகிய படங்கள் அக்கா. மிக நன்றாக இருக்கின்றது, ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  15. கொத்துக்கொத்தாய்க்கிளிகள் எங்க வீட்டின் கணினி அறையின் ஜன்னல் வழியாகக் காணலாம். ஆனால் படங்கள் எடுப்பதற்குள் பறந்துவிடும். பொறுமையாக நின்று படம் எடுத்திருக்கிறீர்கள். கிளிகளும் , புறாவும் ஒத்துழைத்திருக்கின்றன. பழகினவை போலும்! :))))) இந்தப் பறவைகள் ஒன்றோடு ஒன்று அலகினால் உரசிக்கொள்வதும், இறக்கைகளைக் கோதிக்கொடுப்பதும் பார்க்கப் பார்க்க அலுக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நிமிஷம் நானும் திகைத்துப்போய்விட்டேன். கீதமஞ்சரி இங்கே கருத்தே சொல்லலையேனு! பதிவில் வந்து பார்த்ததும் தான் புரியுது என்னைத்தான் சொல்லி இருக்கீங்க என்று! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    2. வணக்கம் கீதா சாம்பசிவம் வாழ்க வளமுடன்
      உங்கள் வீட்டு ஜன்னல் வழியாகவும் கிளிகளை பார்க்கலாமா?
      ஊரிலிருந்து வந்த பின் ஒரு நாள் படம் எடுக்க முடிந்தால் கிளிகளை பிடித்து போடுங்கள்.

      கட்டிடத்தின் நடுவில் இருந்து எடுத்தது பறவைகள் உள்ள கம்பி கட்டிடத்தின் கடைசி முனை. தூரம் கொஞ்சம் அதிகம். என் சின்ன காமிராவில் அவ்வளவுதான் ஜூம் செய்ய முடியும்.

      புறாக்களும், கிளிகளும் அன்பு செய்வதை தினம் பார்த்து மகிழலாம்.

      நீக்கு
    3. //ஒரு நிமிஷம் நானும் திகைத்துப்போய்விட்டேன். கீதமஞ்சரி இங்கே கருத்தே சொல்லலையேனு! பதிவில் வந்து பார்த்ததும் தான் புரியுது என்னைத்தான் சொல்லி இருக்கீங்க என்று! இஃகி,இஃகி,இஃகி!//


      மன்னிக்கவும் கீதா, வாழ்க வளமுடன்.
      கீதமஞ்சரியின் போஸ்ட் படித்து இருந்தேன் அப்போதுதான், அதனால் மனதில் அவர் நிறைந்து இருந்தார் போலும் கை அவர் பேரை அடித்து இருக்கிறது.

      நீங்கள் வந்து பார்த்து சொல்லியதும் தான் பார்த்தேன். திருத்தி விட்டேன். நன்றி.

      நீக்கு
  16. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. வண்ணம் தான் சரியாகத் தெரியலை. ஆனாலும் அது குறையாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை நேரம், மழை மேகம் வேறு வெளிச்சம் செய்து இருக்கிறேன் அப்படியும் வண்ணம் தெரியவில்லை.
      குறையை பெரிது செய்யாமல் நிறைவாக கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  17. அருமையான படங்கள். சோலைக்கிளிகளுடன் குயில்கள்
    என்று பாட்டு வரும். இங்கு புறாவுடன் கொஞ்சுகின்றன.
    வெகு அழகு.
    இங்கு குருவிகளின் ஜாலம் அதிகம்.
    படையாகப் புறப்பட்டு
    ஒரே கும்மாளம்தான். மரங்களுக்குள்ளீருந்து சத்தம் மட்டும் கேட்கும்.
    வெய்யிலில் வெளியே வராது.
    மிக நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      //சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு சும்மா சும்மா கூவுது
      சோளக்கதிரு தாளம் போடுது தன்னாலே//
      பானைபிடித்தவள் பாக்கியசாலி என்ற படத்தில் வரும் பாடல்.

      பாடலை நினைவு படுத்தியது அருமை.

      குருவிகள் நிறைய கூட்டமாய் வருவதை பார்ப்பதும், அதன் சத்ததை கேட்பதும் நல்ல பொழுது போக்காய் இருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு