இந்த இடத்தில் தான் பரங்கிக்காய்த் திருவிழா நடந்தது.அக்டோபர் 20 தேதியிலிருந்து 29ம் தேதிவரை (2017). பாலைவனப் பூங்காவில் நடைபெற்ற பரங்கிக்காய்த் திருவிழாவிற்கு அழைத்து சென்றான் மகன். பீனிக்ஸிலிருந்து 20 நிமிடப் பயண தூரத்தில் இருக்கிறது இந்த இடம்.
ரே பற்றிய தகவல் பலகை
.
அக்டோபர் மாதம் ஆலோவின் கொண்டாட்டம் 31ம் தேதி. அந்த சமயத்தில் நடந்த விழா.
அக்டோபர் மாதம் பறங்கிக்காய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.
இவர் தான் இந்த பரங்கிக்காய்ச் சிற்பங்களை உருவாக்கியவர். இவர் பேர் ரேவில்லாஃபேன். பனியிலும் சிற்பங்கள் செய்வாராம்.
பறங்கிக்காயைச் செதுக்கிச் சிற்பங்கள் செய்த கலைஞர் எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.
அழகான் கள்ளிச் செடிகள்
பரங்கிக்காய் கண்காட்சி நடந்த இடத்தில் அழகான கள்ளிச் செடிகள். உயரமாய் அதைச் சுற்றி வண்ண விளக்குகள் ,மரத்தை சுற்றி வண்ணவிளக்குகள்.. மற்ற இடங்கள் எல்லாம் இருட்டு. ஒருவர் பின் ஒருவராகப் போய்ப் பார்த்தோம் கூட்டம் நிறைய . பார்வை நேரம் மாலை ஆறு முதல் இரவு 9 மணி வரை. எல்லோரும் அலைபேசியிலும், காமிராவிலும் படம் எடுத்து கொண்டு நகர்வதால் வரிசை மெதுவாக நகர்ந்து போனது.
அதிகமாய் காய்த்த பரங்கிக்காயை வைத்து அழகான கண்காட்சி. உணமையான பரங்கிக்காயில் செய்தவை கள்ளிச்செடிக்குள் கண்ணாடிக் கூண்டுக்குள் பத்திரமாய் இருந்தது
மற்றவை செயற்கை பரங்கிக்காய்கள். திறந்த வெளியில் ஒருவாரத்திற்கு மேல் இருந்தால் கெட்டுப் போய் விடும், காட்டுப் பன்றிகள் வந்து அவற்றைத் தின்று விடும் என்பதால் செயற்கை பரங்கிக் காயில் கண்காட்சி. கற்பனை திறனைக் கொண்டு நிறைய காட்சிகள் அமைத்து இருந்தார்.செயற்கைப் பரங்கிக்காயிலும் உண்மையான பரங்கிக்காய் போல் செய்வதைப் பாராட்டத்தான் வேண்டும்
நம் நாட்டில் நிறைய சமையல் கலைஞர்கள், கலைத்திறன் கொண்டவர்கள், கல்யாணம் விழா மற்றும் விருந்து விழாக்களில் அழகாய் செய்வார்கள்.
.
குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், நடந்து நடந்து களைப்படைந்து தாகம் , பசி எடுத்தால் உணவு விடுதி, ஐஸ்கீரிம் கடை என்று இருந்தது. வீட்டுக்குப் பரங்கிக்காய் வாங்கிச் செல்ல கடை, பரங்கிக்காயில் வித விதமான பொம்மைகள் எல்லாம் இருந்தன.
ஒற்றைக் காலில் தவம் செய்கிறார்
பத்மாசனத்தில் மரத்தடியில் தவம் செய்கிறார்
காலைத் தூக்கி யோகா
வியாபாரம் செய்யும் பரங்க்கியார்
நண்பர் வீட்டுக்குப் போகிறார்
வாசலில் வரவேற்பு
படியில் அமர்ந்து அரட்டை
எவ்வளவு பேர் நம்மைப் பார்க்க வந்து இருக்கிறார்கள் வெளியில் வந்து பாரு
குளிருக்கு இதமாய் மரவீடு வைக்கோல் மெத்தை
மாட்டு வாண்டி பூட்டிக்கிட்டு போவோம் திருவிழா பார்க்க
மர வேலை செய்யும் பெரியவர்
முகத்திற்கு அழகு செய்யும் அழகுக் கலைஞர்
ராக் இசை பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடி முடித்த அழகான பெண் குழந்தைகளுக்குப் பளபளக்கும் வண்ண பாசி மணி மாலைகளைக் கொடுத்தார். பேரனுக்கும் கொடுத்தார்
அடுத்த பதிவில் மீதி காட்சிகள்.
வாழ்க வளமுடன்.




