சனி, 26 அக்டோபர், 2013

ஆலோவின் தினக்கொண்டாட்டம்.

நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

(நியூஜெர்சி) ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிகாய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.
                                                                         -------------

ஆலோவீனுக்கு எங்கள் வீட்டிலும், ஒரு சோளக்கொல்லை பொம்மை ஒன்றும் பெரிய  பறங்கிக்காயும்(உண்மையான பறங்கிகாய்) வைத்து இருக்கிறோம். சிறிய பறங்கிக்காய் அலங்கார விளக்கும் மாட்டி இருக்கிறோம். பேரனுக்கு டைனோசர் போல் வடிவு அமைக்கப்பட்ட ஆடை வாங்கி இருக்கிறது. வீடுகளுக்கு போய் சாக்லேட் வாங்கி வர ஆரஞ்சு கலர் பறங்கிக்காய் கூடை  வாங்கி உள்ளது. பேரனுக்கு உடை வாங்க கடைக்கு போனபோது கடைகளில் உள்ள பொம்மைகளை எடுத்த படங்கள் பின் வருகிறது , உங்கள் பார்வைக்கு.

                            
பறங்கி காய் பொம்மைகள்
பறங்கி காய் பொம்மைகள்

சோளக் கொல்லை பொம்மைகள்
மூகமூடிகள்
மிட்டாய் வாங்க எடுத்துச் செல்லும் கூடைகள்
வயதான பிச்சைக்காரர்
அவரின் பின் பக்கம்
வீட்டு வாசலில் தொங்கவிடும் பொம்மைகள்
கல்யாண மாப்பிள்ளை
தொங்கும் பூதம்
எலும்பு மாலைகள்,  எலும்புக்கூடு  ஆடைகள்
பேய்க் கைப்பை
வெட்டுப்பட்ட உடல்கள்
சூனியக்காரி
கல்யாண உடையில் எலும்புகூடுகள்
மண்டை ஓடு லாந்தர்
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட எலும்புகூடு
ராட்சச வெளவால்
வைக்கோல் திணிக்கப்பட்ட பயங்கர பொம்மைகள்
மிட்டாய் வாங்கச் செல்லும் சிறுவன்
அழகாய், கட்டமாய் வெட்டப்பட்ட வைக்கோல் மஞ்சள் சிவந்தி மலர்த் தொட்டி, நிஜ பறங்கிகாய்
அழகிய பறங்கிக்காய் பொம்மைகள் மேல் எலும்பு கூடுகள்



சோளக்கொல்லை பொம்மைகள்

இலை தெரியாமல் பூத்து இருக்கும் ஆரஞ்சும் சிவந்திப் பூக்கள்


கடைகளில் ஆலோவின் உடைகள் , மண்டை ஓடு ஆடை, எலும்புகூடு ஆடை,சூனியக்காரி ஆடை, வெட்டுப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட உள்ள உருவங்கள்,கை, கால் தனியாக, தலை தனியாக இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. இரும்பு சங்கிலிகாளால் கட்டப்பட்ட நிலையில் இறந்தவர்களின் எலும்புகூடுகள் பெரியசிலந்திகள், பெரிய வெளவால்கள், திருமண உடையுடன் இறந்தவர்களின் எலும்புகூடுகள் என்றும், பிச்சைக்கார தோற்றம் கொண்டவை என்றும் அவர் அவர் விருப்பபடி நிறைய இருக்கிறது. 
பக்கத்துவீடுகளில் நிறைய பறங்கிக்காய்கள், மரத்தில் தொங்கும் எலும்புகூடு, கார்செட் கதவில் பெரிய சிலந்தி வலைகள் வைத்து இருக்கிறார்கள்.
சோளக்கதிர் காய்ந்தவை, கோதுமை வைக்கோல் எல்லாம் வைத்து பறங்கி காய்களும் வைத்து இருக்கிறார்கள். இந்த சம்யம் பறங்கிகாய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

முன்னோர்களை வணங்கும் பழக்கம் எங்கும் இருப்பது நல்ல விஷயம் தானே!

வாழ்க வளமுடன்!
------

41 கருத்துகள்:

  1. படங்களும் தகவல்களும் கலக்கல்.....

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் மிகவும் அருமை... (கொஞ்சம் பயமாகத் தான் இருக்கு...! ஹிஹி...) ஆலோவீன் விளக்கத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. இந்த சம்யம் பறங்கிகாய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

    விளை பொருள்கள் அதிகமாக இருந்தால் அதை விலையாக்குவதற்காக இந்தப்பண்டிகைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் ..

    தக்காளி விளைச்சல் அதிகமானால் தக்காளித்திருவிழா..

    மன உறுதி ,பயமின்மை போன்றவற்றை வளக்கவும் ஹாலோவீன் திருவிழா பயன்படுமே..!

    பதிலளிநீக்கு
  4. அழகியப் படங்களுக்கும் அறியாதத் தகவலுக்கும் நன்றிங்கம்மா

    பதிலளிநீக்கு
  5. அதுதான் இருக்கிற இங்க்லீஷ் சேனல் எல்லாவற்றிலும் ஒரே பேய்ப் படமா போட்டுகிட்டு இருக்கானோ!

    அப்பா. எத்தனை படங்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஹாலோவீன் வாழ்த்துகள் கோமதி. அருமையான படங்கள். எனக்கு அந்தக் கடைக்குப் போனலே ஒரு சில்'' உணர்வு வரும். மஹா பெரிய கோட்டம் போலக் கடை. மேலிருந்து தொங்கும் நூலாம்படைகள், ஆ என அலறும் முகமூடிகள்:)

    மூத்தோரை நினைக்கும் நாள் நல்ல நாளாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    பதிவில் சில விடயங்களை அழகாக சொன்னிர்கள் பதிவு அருமை வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. ஒரு மாற்றமாக இருந்திருக்கும் அவர்களின் வேஷமும் களியாட்டங்களும் ஏரத்தாழ எருமேலி பேட்டை துள்ளல் மாதிரி....

    பதிலளிநீக்கு
  9. அமெரிக்கவாசியாகவே மாறிவிட்டீர்களா..எங்கிருந்தாலும் தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  10. ஆலோவின் தின கொண்டாட்ட செய்திகளும் படங்களும் வெகு சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அழகிய படங்களுடனும், அறியாத பல தகவல்களுடனும் பதிவு மிகச் சிறப்பாக உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். உங்களுக்கு பயமா!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.

    //விளை பொருள்கள் அதிகமாக இருந்தால் அதை விலையாக்குவதற்காக இந்தப்பண்டிகைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் ..//

    முன்பு டர்னிப் காயில் தீய ஆவியின் முகம் செதுக்கப்பட்டு அதற்குள் மெழுகுவர்த்தி கொழுத்தபட்டதாம்.
    பிறகு நீங்கள் சொல்வது போல் பறங்கிகாயின் அதிக உற்பத்தியும் அதன் அழகும் அதை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

    //மன உறுதி ,பயமின்மை போன்றவற்றை வளக்கவும் ஹாலோவீன் திருவிழா பயன்படுமே..//

    நீங்கள் சொல்வது போல் மன உறுதியும், பயமின்மை போன்றவற்றை வளர்க்கவும் திருவிழா பய்ன்படும் தான்.


    கடையில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உடைகளை கேட்டு அழும் போது அதன் விலையும், அதன் அழகையும் கண்டு பெற்றோர்கள் பபப்படுகிறார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    எங்களுக்கும் இவை புது தகவல்கள் பெறும் திருவிழா தான்.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    சினிமா மட்டும் இல்லை ஸ்ரீராம், நாம் பார்க்க போகும் சுற்றுலா இடங்களிலும் இது போன்ற திகில் ஊட்டும் காட்சி அமைப்புகளும், பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகளும் உருவாக்கப் படுகிறது.

    அதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

    அரசாங்கத்திற்கு நல்ல வருவாயை திரட்டி தருகிறதாம்,
    தொழில்நுட்ப சிறப்பு அம்சங்களுக்காகவும், மற்றும் அதைச் சார்ந்த ஆடை அணிவிப்புகளுக்காகவும் பெரும் செலவுகளை நிறுவனங்கள் செய்கின்றனவாம்.
    நிறைய படங்கள் தான் இன்னும் இருக்கிறது. எல்லா படங்களும் பார்க்க முடிந்ததா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  17. ஹேலோவின் கொண்டாட்டங்கள் களை கட்டி விட்டது தெரிகிறது உங்களுடைய
    புகைப்படங்களைப் பார்க்கும் போது.
    கொண்டாட்டத்தின் விளக்கம் அருமை கோமதி.
    வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
  18. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் ஒரு பதிவில் கேட்டு இருந்தீர்கள், ஆலோவின் படங்கள் நிறைய கிடைக்குமே! என்று போகும் மால்களில் எல்லாம் படங்கள் ஏராளமாய் கிடைத்தது.

    நம் பொங்கல் பண்டிகை போல் இருக்கிறது . வீட்டை சுத்தம் செய்கிறார்கள், வேண்டாதவற்றை கொளுத்துகிறார்கள். வீட்டை மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள்.
    உறியடி உற்சவம் போல் பொம்மைகுள் மிட்டாய்கள் வைத்து அதை கட்டி தொங்க விடுகிறார்கள் உயரத்தில் அதை தட்டி உடைப்பவர்களுக்கு மிட்டாய்.
    விவாசயி செவி வழி கதைகளும் இருக்கிறது.
    முன்னோர்களை வணங்குவதும், கெட்ட சக்திகள் வீட்டை அணுகாமல் இருக்கவும் இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துகளுக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் நம் நாட்டில் பல திருவிழாக்களில் பல வேடங்கள் போட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல தான் இதுவும்.
    நம் பண்டிகைகள் பலவற்றை கலந்து கட்டி உள்ளது இத் திருவிழா, உறியடி உற்சவம் இருக்கிறது, முகத்தில் கலர் செய்து கொள்கிறார்கள், பேட்டை துள்ளல் போல். போகி பண்டிகை இருக்கிறத், கார்த்திகை சொக்கபனை இருக்கிறது.
    மக்களை சில நம்பிக்கைகள் வாழ வைக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
    தீபாவளி முடிந்தவுடன் இந்தியா வந்து விடுவேன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ராஜல்க்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    ஆலோவின் கொண்ட்டாடங்கள் களைகட்டி விட்டது.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க ராஜல்க்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    ஆலோவின் கொண்ட்டாடங்கள் களைகட்டி விட்டது.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. கொண்டாடுங்கள்... வாழ்த்துக்கள்... பொம்மைகள் பயமுறுத்துகின்றன...

    பதிலளிநீக்கு
  27. வாங்க ஸ்கூல் பையன், வாழ்க வளமுடன்.
    இளங்கன்று பயமறியாது என்பார்கள், நீங்கள் பொம்மைகள் பயமுறுத்துவதாய் சொல்கிறீர்கள்!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. படங்களும் பகிர்வும் அருமை. ஆலோவின் கொண்டாட்டத்துக்காக விற்பனைக்கு வந்திருக்கும் விதவிதமான பொருட்களை சிரத்தையுடன் படமாக்கித் தந்துள்ளீர்கள். /முன்னோர்களை வணங்கும் பழக்கம் / சித்ராவும் விரிவாக முன்னர் பகிர்ந்த நினைவு இருக்கிறது. கொண்டாடியதையும் பகிர்ந்திடுங்கள்.

    பதிலளிநீக்கு
  29. அலோவீன் hallowin நாளில் பாலர் நிலையங்களில் - ஓய்வு நேர வகுப்பகளில்-fri time school ஒவ்வொரு பிள்ளைகளும் பிடித்தமான விநோத ஆடைகள் வாங்கி போட்டுக் கொண்டு வந்து
    பெரிய பரலில் (தார் பீப்பா போல ஒவ்வொரு அறையினரும் ஒன்று வாங்கி வண்ணம் பூசி அதனுள்) இனிப்புகள் பல வகையாகப்போட்டு ஒட்டி அதாவது ஆணியடித்து பிள்ளைகளுக்கு எட்டும் அளவில் கட்டித் தொங்க விடுவர். பிள்ளைகள் அலங்கார ஆடையுடன் வரிசையாக வந்து ஓரு பெரிய பொல்லினால் அதை அடித்து உடைக்க வேண்டும்.
    கீழே இனிப்பப் பண்டங்கள் விழ அதைப் பொறுக்கி உண்பார்கள்.
    தங்களிற்கு -. பதிவிற்கு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  30. ஆமாம் சகோதரி..:)
    இங்கு இதெல்லாம் சாதாரணம்.. சின்ன பசங்ககூட கிண்டர்கார்டன் போகும்போதும் இப்படியெல்லாம் வேஷத்துடன் திரிவார்கள்..

    இது இவர்களுக்கு ஒரு ஜாலிப் பண்டிகைதான்...:)

    நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. வாங்க ராமலக்ஷமி, வாழ்க வளமுடன்.
    முன்பு முன்னோர்களை வணங்கும் தினத்தைப்பற்றியும், அவர்களுக்கு பிடித்த உணவை வித விதமாய் அலங்கரித்து வைத்து இருப்பதையும் பதிவாய் முன்பு சித்ரா போட்டு இருந்தார்கள் நானும் படித்து இருக்கிறேன். அதன் லிங் கொடுக்கலாம் என்று தேடினேன் கிடைக்க வில்லை. கிடைத்தால் கொடுக்க வேண்டும்.

    படங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. மிட்டாய்கள் கொண்ட தொங்கும் பொம்மைகள் நிறைய எடுத்தேன். குதிரை, குரங்கு, சிறுவர், சிறுமிகள் பொம்மைகள் இருக்கும்.
    அதை குழந்தைகள் தட்டி விளையாடுவார்கள் அதில் யார் தட்டி உடைக்கிறார்களோ அவர்களுக்கு அந்த மிட்டாய்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் இங்கும் செய்வார்களாம்.
    உங்கள் நாட்டில் நடக்கும் ஆலோவின்ப் பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    இங்கு சின்னவர்கள் ,பெரியவர்கள் எல்லோரும் வேஷம் போட்டு மகிழ்கிறார்கள். சிறுவர்கள் மட்டும் வீடு வீடாய் போகிறார்கள்.
    இவர்களுக்கு நீங்கள் சொல்வது போல் ஜாலி பண்டிகைதான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அறியாத தகவல்களை அழகிய படங்களுடன் காட்சியாய் தந்து அசத்தி விட்டீர்கள் அம்மா. காட்சிகள் அனைத்தும் களிப்பூட்டுகின்றன. கடல் கடந்தும் தமிழ்ப்பணி ஆற்றிடும் தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் அம்மா. பகிர்வுக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  35. வாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்தமைக்கு மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. இங்கே சில சமயங்களில் பிள்ளைகளுடன் அம்மாக்களும் வேடங்கட்டி பயமுறுத்துவார்கள். ஹாலோவீன் பற்றிய முழுத்தகவல்களையும் சிறப்புற அளித்தமைக்கு நன்றி மேடம். பேரன் கொண்டாடும் அனுபவத்தையும் அடுத்த பதிவில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  37. வாங்க கீத் மஞ்சரி,வாழ்க வளமுடன்.
    இங்கும் பெரியவர்கள் வேடங்கட்டுகிறார்கள்.
    பேய் நகம், பேய் ஆடை என்று போட்டு க்கொண்டு கடைகளுக்கு வருகிறார்கள்.
    பேரன் கொண்டாடும் அனுபவத்தை பகிர்கிறேன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. ஹாலோவீன் விழா பார்காமல் தவறவிட்டுவிட்டேன்.

    இப்பொழுதுதான் கண்டுகொண்டேன்.
    நிறைந்த பொம்மைகள் படங்கள் என காண தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    தவறவிட்ட பதிவையும் படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  40. படங்களும், தகவல்களும் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு