வியாழன், 2 நவம்பர், 2017

பரங்கிக்காய்த் திருவிழா

இந்த இடத்தில் தான் பரங்கிக்காய்த் திருவிழா நடந்தது.அக்டோபர்  20  தேதியிலிருந்து 29ம் தேதிவரை (2017). பாலைவனப் பூங்காவில்  நடைபெற்ற பரங்கிக்காய்த் திருவிழாவிற்கு அழைத்து சென்றான் மகன்.  பீனிக்ஸிலிருந்து 20 நிமிடப் பயண தூரத்தில் இருக்கிறது இந்த இடம்.  
ரே பற்றிய தகவல் பலகை

 .
அக்டோபர் மாதம் ஆலோவின் கொண்டாட்டம் 31ம் தேதி.  அந்த சமயத்தில் நடந்த விழா.

அக்டோபர் மாதம் பறங்கிக்காய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

இவர் தான் இந்த பரங்கிக்காய்ச் சிற்பங்களை   உருவாக்கியவர். இவர் பேர் ரேவில்லாஃபேன். பனியிலும் சிற்பங்கள்  செய்வாராம்.

பறங்கிக்காயைச் செதுக்கிச் சிற்பங்கள் செய்த கலைஞர் எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

அழகான் கள்ளிச் செடிகள்

பரங்கிக்காய் கண்காட்சி நடந்த இடத்தில் அழகான கள்ளிச் செடிகள்.  உயரமாய் அதைச் சுற்றி வண்ண விளக்குகள் ,மரத்தை சுற்றி வண்ணவிளக்குகள்.. மற்ற இடங்கள் எல்லாம் இருட்டு. ஒருவர் பின் ஒருவராகப் போய்ப் பார்த்தோம் கூட்டம் நிறைய . பார்வை நேரம் மாலை ஆறு முதல் இரவு 9 மணி வரை. எல்லோரும் அலைபேசியிலும், காமிராவிலும் படம் எடுத்து கொண்டு நகர்வதால் வரிசை மெதுவாக நகர்ந்து போனது.

  அதிகமாய் காய்த்த பரங்கிக்காயை வைத்து அழகான  கண்காட்சி.  உணமையான பரங்கிக்காயில் செய்தவை கள்ளிச்செடிக்குள் கண்ணாடிக் கூண்டுக்குள் பத்திரமாய் இருந்தது
மற்றவை  செயற்கை பரங்கிக்காய்கள். திறந்த  வெளியில் ஒருவாரத்திற்கு மேல் இருந்தால்  கெட்டுப் போய் விடும், காட்டுப் பன்றிகள் வந்து அவற்றைத் தின்று விடும் என்பதால்  செயற்கை பரங்கிக் காயில் கண்காட்சி.  கற்பனை திறனைக் கொண்டு  நிறைய காட்சிகள் அமைத்து இருந்தார்.செயற்கைப் பரங்கிக்காயிலும் உண்மையான பரங்கிக்காய் போல் செய்வதைப் பாராட்டத்தான் வேண்டும்

நம் நாட்டில் நிறைய சமையல்   கலைஞர்கள், கலைத்திறன் கொண்டவர்கள், கல்யாணம் விழா மற்றும் விருந்து விழாக்களில்  அழகாய் செய்வார்கள்.  


  


ஜெயில் காட்சி, தூக்குமேடைக் காட்சி, குத்துச் சண்டைக் காட்சி , பேப்பர் படிக்கும் காட்சி   நீச்சல்குளத்தில் குளிப்பது என்று இன்னும் நிறைய காட்சிகள்   இருக்கிறது. 

குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், நடந்து நடந்து களைப்படைந்து தாகம் , பசி எடுத்தால் உணவு விடுதி, ஐஸ்கீரிம் கடை என்று இருந்தது.  வீட்டுக்குப் பரங்கிக்காய் வாங்கிச் செல்ல கடை, பரங்கிக்காயில் வித விதமான பொம்மைகள் எல்லாம் இருந்தன. 


ஒற்றைக் காலில் தவம் செய்கிறார்
பத்மாசனத்தில் மரத்தடியில் தவம் செய்கிறார்

காலைத் தூக்கி யோகா
வியாபாரம் செய்யும் பரங்க்கியார்
நண்பர் வீட்டுக்குப் போகிறார்
வாசலில் வரவேற்பு
படியில் அமர்ந்து அரட்டை
எவ்வளவு பேர் நம்மைப் பார்க்க வந்து இருக்கிறார்கள்     வெளியில் வந்து பாரு 
குளிருக்கு இதமாய் மரவீடு வைக்கோல் மெத்தை


மாட்டு வாண்டி பூட்டிக்கிட்டு போவோம் திருவிழா பார்க்க


                                                     மர வேலை செய்யும் பெரியவர்

முகத்திற்கு அழகு செய்யும் அழகுக் கலைஞர்
 ராக் இசை பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடி முடித்த அழகான பெண் குழந்தைகளுக்குப்  பளபளக்கும் வண்ண பாசி மணி மாலைகளைக் கொடுத்தார். பேரனுக்கும் கொடுத்தார் 


அடுத்த பதிவில்  மீதி காட்சிகள்.

வாழ்க வளமுடன்.


30 கருத்துகள்:

 1. இது வரை கேள்விப் படாத விஷயம். இது குறித்து இன்றே அறிந்தேன். பறங்கிக்காயில் வித விதமாக பொம்மைகள் செய்து வைத்திருப்பார்கள், பார்த்திருக்கேன். ஆனால் இந்த இடம் குறித்தோ இத்தனை வகைகள் குறித்தோ தெரியாது! பகிர்வுக்கு நன்றி. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. கள்ளிச்செடி கூட அழகாய்த் தெரிகிறது. பரங்கிக்காய் வைத்து எத்தனை வடிவங்கள்.....! ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அனைத்தும் இரசனையாக இருந்தது சகோ.

  பதிலளிநீக்கு
 4. துளசி : வித்தியாசமான நிகழ்வு! பரங்கிக்காய் சிற்பங்கள் அழகு! ஹலோவீன் டே பற்றி கேள்விப்பட்டதுண்டு. உங்கள் பதிவின் மூலம் பல தகவல்கள் அறிய முடிந்தது. பகிர்விற்கு மிக்க நன்றி.

  கீதா: அங்கு சில மாதங்கள் இருந்த போது ஹாலோவீன் வந்தது. வித விதமான பரங்கிக்காய் வடிவங்கள். அங்கு இத்திருவிழா எல்லா இடங்களிலும் ந்டக்கும் என்றாலும் ஒரு சில இடங்களில் மிகவும் பேர் பெற்றது. நாங்கள் இருந்த இடத்தின் அருகிலும் நடந்தது. இந்த இடம் பற்றிக் கேள்விப்பட்டாலும் போக முடியவில்லை. நல்ல விவரணம் தகவல்கள் கோமதிக்கா.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  முதலில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
  சோளகொல்லை பொம்மை போல் வாசலில் வைக்க வைக்கோலும், பரங்கிக்காய்
  விற்கிறார்கள். பொம்மைகளை செய்தவர் குளிர் நாட்டிலிருந்து பிடிக்காமல் இங்கு வந்து இருக்கிறார்.பனிசிற்பம் செய்து கொண்டு இருந்தேன் விட்டு விட்டேன் என்று மகனிடம் சொன்னார்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசித்த காட்சி
  மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும என்று நினைத்தேன்.
  கள்ளி செடி வித விதமாய் இருந்தது இரவு குளிர் வந்து விட்டது, கூட்டம் வேறு நிறைய இருந்ததால் முடிந்தவரை எடுத்தேன் படங்கள். அடுத்த பதிவில் கொஞ்சம் கள்ளிச் செடி வரும்.
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ துளசிதரன், கீதா, வாழ்க் வளமுடன்.
  என் முந்தைய பதிவு 'ஹலோவீன் திகில்'படிக்கவில்லையா?
  மருமகள்தான் இதை கேள்வி பட்டு அழைத்து போனாள் பெருமை அவளை சேரும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி .

  வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  போன பதிவில் பார்க்கவில்லை உங்களை இணைய இணைப்பு சரியாகி விட்டதா?

  உங்கள் இடத்தின் அருகிலும் நடந்ததா?
  அடுத்த முறை செல்லும் போது பார்க்கலாம், வருடா வருடம் தான் நடக்கிறதே!

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 11. க்யூட் க்யூட்...பரங்கிகாய்ஸ்

  பதிலளிநீக்கு
 12. பரங்கிக்காய் திருவிழா ரசித்தேன் சிஸ் அருமையா படங்கள் எடுத்து பகிர்ந்து இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 13. திருமண விழாக்களில் இப்படிக் காய்ச் சிற்பங்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன் மெழுகிலும் பழங்கள் காய்களென்று செய்து விற்பதும் தெரியும் எந்த நாடாய் இருந்தால் என்ன ஃபாண்டசி யில் எல்லோரும் ஈடுபடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
 14. ஹாலோவீன் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும்
  தங்களது பதிவின் மூலமாக புதிய தகவலைத் தெரிந்து கொண்டேன்...

  படங்களுடன் விஷயங்களை ரசனையாகத் தருவதில் வல்லவர் தாங்கள்..
  (நாளை காலையில் திருவெண்காடு தரிசனம்)

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 15. பறங்கிக்காய் திருவிழாவும் படங்களும் - சுவையான தகவல்கள். தெளிவான படங்கள். கள்ளிச்செடியிலும் வண்ண விளக்குகள். பதிவுக்கு எனது பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஆஹா மிக அருமை.. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் , படத்தை பிட நேரில் மிக நன்றாக இருந்திருக்கும்.

  ஓ இதுதான் பறங்கிக்காயோ? நாங்கள் இதனை சக்கரைப் பூசணி என்போம்:).. ஆங்கிலம் எனில் இப்படிக் குழப்பங்கள் குறைவு:)..

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் அனுராதாபிரேம்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  தங்கள் கருத்துக்கும், பாராட்டு, வாழ்த்து அனைத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  படத்தைவிட நேரில் பார்ப்பது அழகுதான்.
  இனிப்பதால் சக்கரைப் பூசணியோ?
  உங்கள் கருத்துக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 22. ஹாலோவின் திருவிழாவை இரண்டு மூன்றுமுறை நேரில் பார்த்திருக்கிறேன், நியூயார்க்கில். பீனிக்ஸ் திருவிழாவை இன்று உங்கள் பதிவிலிருந்து அறிந்தேன். இதை NY இல் இருக்கும் பேரனுக்கு forward செய்திருக்கிறேன். மிகவும் ரசிப்பான்.

  -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.

  //இதை NY இல் இருக்கும் பேரனுக்கு forward செய்திருக்கிறேன். மிகவும் ரசிப்பான்.//

  பதிவை ரசித்து பேரனுக்கும் அனுப்பியது அறிந்து மகிழ்ச்சி.
  நன்றி.
  இன்னும் நிறைய படம் இருக்கிறது அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 26. படங்களெல்லாம் எவ்வளவு அழகு. கள்ளிச்செடி விளக்கு அலங்காரங்களுடன். பறங்கிக் காயிலும் எத்தனை அழகு. இவைகளின் வர்ணனை நேரில் பார்ப்பது போல இருக்கிறது. எல்லோருக்கும் பார்க்க வாய்ப்பளித்து ஸந்தோஷத்தை அளித்துள்ளீர்கள். நன்றி அன்புடன்

  பதிலளிநீக்கு
 27. அடேயப்பா எவ்வளவு படங்கள். பரங்கிக்காய் சிற்பங்கள் அசத்தல். அதுவும் குத்துச்சண்டை முகக் காட்சி. காத்துருப்பு, நீச்சல் ஆகியவற்றை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு