சனி, 28 அக்டோபர், 2017

பறக்கும் வண்ண பலூன்..


கள்ளிச்செடி வரைந்த பலூன்

வண்ண பலூன்களைக் கண்டால் குழந்தையைப் போலக் குதூகலிக்கிறது மனம்.
சிறு குழந்தைகளுக்கு வானத்தில் பறக்கும் விமானம், பட்டம், பலூன் எல்லாம் பிடிக்கும் தானே! வயதாகி விட்டால் குழந்தையாகிவிடுவார்கள் என்பார்கள் நானும் குழந்தையாகி  விடுகிறேன்.

சின்ன பாப்பாவிடம் சிலுக்குச் சட்டை சீனா பொம்மை, பலூன் வேண்டுமா என்ற பாடல் இருக்கே!

"சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா"  படம் - வண்ணக்கிளி

பறக்கும் வண்ண பலூன்களை  அடிக்கடி பார்க்க முடிகிறது, மகன் வீட்டுக்கு அருகில். விடுமுறை நாளில் அதிகமாய் பார்க்கிறேன். ஊர் சுற்றிப் பார்க்க மக்கள் மகிழ்ச்சியாகப் போகிறார்கள் அதில்.  எங்கள் வீட்டைக் கடந்து போகும்போது மிக அருகில் வந்தால் என்னைப் பார்த்துக் கை அசைத்து செல்வர்.

இந்த பலூன்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் பாடல்: 'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே!"
சாந்தி நிலையம் படத்தில் வரும்  பாடல்.

அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸில்  கள்ளிச் செடிகள் நிறைய  இருக்கிறது. அந்த செடியின் படம் வரைந்த பலூன்கள் அதிகமாய்ப் பறக்கிறது.

காலை நடைப்பயிற்சிக்கு செல்லும்போதும் தோட்டத்தில் நிற்கும் போதும் பார்த்து ரசிக்கிறேன்.

                                                 

தோட்டத்துப் பக்கம் , பலூனும், சூரியனும்


மாடி பால்கனி அருகில் சென்ற போது 
நீலமேகத்திற்கு  நடுவில்

மதில் பக்கம் எட்டிப்பார்க்கும் கள்ளிச் செடி,  பலூன்,  மலை அழகு

எங்கள் வீட்டுமதிலுக்கு அந்தப் பக்கம்


 எங்கள் வீட்டு மரங்களுக்கு இடையில்

அழகிய பஞ்சுபொதி மேகம் , மரங்களுக்கு இடையில் பலூன்


வீட்டின் முன் பூவை படம் எடுக்கும் போது கண்ணில் பட்ட பலூன் காமிரவில் சிறைபட்டது.


தங்கும் விடுதியில் பூத்தொட்டியில் பலூன்

கடையில் வாங்கலாம் என்று போனால் எல்லாம் விற்று விட்டது வெளியில் தொங்கும் பலூன் மட்டும் தான் இருக்கிறது என்றார்கள் அதை வாங்கி வந்து விட்டோம். தோட்டத்தில்    கட்டித் தொங்க விட்டோம். காற்றுக்கு சுற்றும்  போது அழகாய் இருக்கிறது.

பலூன்மாமா என்ற  பெயரில் வலைத்தளம் வைத்து இருக்கிறார். குழந்தைகளுக்கு வித விதமாய் பலூன்களில் பொம்மைகள் செய்து கொடுத்து குழந்தைகளை மகிழ்வித்து அப்படியே மக்களுக்கு வேண்டிய  விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை சொல்கிறார். இவர் மகனும் பலூன் பொம்மைகள் செய்யும் இளம் பலூன் சிற்பியாம் பெருமையாக சொல்கிறார்.

இவர் தளத்திற்கு சென்று பார்த்தால் பலூன் பொம்மைகள் பார்க்கலாம்.
மெக்ஸிகோவில் அக்டோபர் மாதம் பல நாடுகளிலிருந்து வண்ணபலூன்கள் கலந்து கொள்ளும் பறக்கும் பலூன் விழா நடக்குமாம். பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.






 வீட்டைச் சுற்றி மலைகள்தான். ஊர் முழுவதும் அழகான மலைகள் வித விதமாய்.

மலை அழகை  இன்னொரு பதிவில். சூரியன் உதிப்பதும் மறைவதும் பார்க்க அழகாய் இருக்கிறது.

                                                             
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே!"

வண்ண பலூனில் பறக்கும்  காட்சி.

சாந்தி நிலைய பாடல்.

 வாழ்க வளமுடன்.!

42 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அழகுக்கா. ஒவ்வொன்னா பார்த்திட்டு வரும்போது கேக்க நினைச்சேன் மலை அருகிலா வீடுன்னு ..பதிவின் இறுதியில் அறிந்துகொண்டேன் மலைபக்கம்னு .
    அந்த பூமியில் இருப்பதும் பாட்டு இனிமையான பாடல் எனக்கும் பிடிக்கும் .

    போட்டோவில் இருக்கும் கள்ளிச்செடி எவ்ளோ பெரிசு அம்மாடி !!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

    மலை அருகில் தான் வீடு.

    கள்ளி செடிகள் இதைவிட பெரிது இருக்கிறது.
    நிறைய கிளைகளுடன்.

    பறவைகள் அவற்றில் துளையிட்டு கூடு கட்டுகிறது.
    காரில் போகும் போது பார்க்கிறேன்.

    நூலகம் போனபோது அங்கு பெரிய கள்ளி செடி பார்த்தேன் போட்டோ எடுத்து இருக்கிறேன் வேறு பதிவில் போடுகிறேன்.

    பாடல் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி. என் முதல் பாடல் பகிர்வு.
    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  3. படங்களை எடுத்த விதமும்கூட அழகே அந்த நுணுக்கம் தெரிகிறது படங்களில் மிகவும் இரசித்தேன் சகோ.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அழகு. ரொம்பவே அழகாகச் சொல்லக் கூடியவை குறிப்பாக மூன்றாவது படம், தூரக் காட்சியாக ஐந்தாவது படம் அழகு.

    பலூனுக்கென்றே தளமா?அடடே..

    "பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.. " பாடல் வரிகளுக்காகவே ரொம்ப ரசிக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
  5. பலூன்களை ரசித்துக்கொண்டே வந்தபோது சாந்தி நிலையம் திரைப்படத்தின் பாடல் நினைவிற்கு வந்தது. பதிவின்இறுதியில் அதனையும் கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் அழகு அழகு அழகு

    பதிலளிநீக்கு
  7. wow...

    அருமை அம்மா பறக்கும் வண்ண பலூன்கள்....

    பார்க்கவே பரவசமா இருக்கே..பயணித்தால்.....?...!


    தோட்டத்துப் பக்கம் , பலூனும், சூரியனும் உள்ள படம் வெகு அழகு.....

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொன்றும் அழகோ அழகு...

    இறுதியில் மிகவும் பிடித்த பாடல்... அருமை...

    பதிலளிநீக்கு
  9. பலூனில் பறக்கும்வாய்ப்பு கிடைத்ததா

    பதிலளிநீக்கு
  10. அழகான படங்களுடன் இனிய பதிவு..
    பொருத்தமான பாடல் - பதிவிற்கு மேலும் சிறப்பை அளிக்கின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  11. படங்கள் அத்தனையும் கண் கொள்ள காட்சியாக தான் இருந்தது அதுவும் பால்கனிக்கு அருகில் போகும் படம் மிக அழகு பலூன்களை எப்போதும் ரசிக்லாம் சிஸ் எப்போதுமே மனசை கவரும் பலூன் மாமாவையும் அறிமுக படுத்தி இருக்கீங்க மிக அருமை பாடலுடன் பதிவு

    பதிலளிநீக்கு
  12. குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவித்து வீட்டிற்கு முன் பலூன் கட்டி அமெரிக்காவில் மகிழ்கிறார்கள்.

    பலூன் குழந்தைகள் உலக பறக்கும் பந்து தான்!

    பதிலளிநீக்கு
  13. படங்களும் பகிர்வும் அருமை. இறுதியில் இணைத்திருக்கும் பாடல் வெகு பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  14. அப்பாடி எத்தனை வண்ண பலூன்கள்.

    நீங்கள் எடுத்த அத்தனை படங்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருக்கின்றது.
    மகள் சாண்டா ஃபே நகரில் குடி இருக்கும்போது இதுபோல வீட்டில்
    இருந்தார்கள். அடோபீ வீடுகள் என்ற பெயர். வித்தியாசமான கட்டட அமைப்பு. பாலைவன் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு. மிக அழகு கோமதி. பாடலும் காட்சியும்.


    பதிலளிநீக்கு
  15. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    பலூன்மாமா இப்போது எழுதுவது இல்லை போலும்.
    அவர் தளத்தில் நிறைய நல்ல விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார்.
    பாடல் இணைப்பு முதல் முதலாக எல்லோருக்கும் இந்த பாடல் பிடிக்கும் என்று நினைத்து பகிர்ந்தேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    படங்களையும், பாடலையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    பார்க்க பரவசமாய் இருக்கிறது பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

    உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    நலமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் பாலசுப்பிராணியம் சார், வாழ்க வளமுடன்.
    பறந்து இருந்தால் சொல்லி இருப்பேனே!

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    //குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவித்து வீட்டிற்கு முன் பலூன் கட்டி அமெரிக்காவில் மகிழ்கிறார்கள்.

    பலூன் குழந்தைகள் உலக பறக்கும் பந்து தான்!//

    புது தகவலை சொன்னத்ற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    பாலைவன தட்ப, வெப்பத்திற்கு ஏற்பதான் வீடுகள்.
    கலர் இரண்டு கலர் தான் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
    மரகொத்தியிடமிருந்து வீட்டை பாதுகாக்க வேண்டி இருக்கிறது.

    புது செய்தி உங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்.
    பாடலையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  26. ஆஹா கோமதி அக்கா... அத்தனை படங்களும் அழகு.. அழகாக படமெடுத்திருக்கிறீங்க/ எடுக்கப்பட்டிருக்கு.

    அதுசரி நீங்க ஏறவில்லையோ?...

    நல்ல காலநிலையாக இருக்கே... இன்னும் குளிர் தொடங்கவில்லையோ அங்கு... இங்கு ஹீட்டர் போடத் தொடங்கிட்டோம்... நல்லா எஞ்சோய் பண்ணுங்கோ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    நான் ஏறவில்லை. பார்ப்பதில் இன்பம்.
    இங்கு குளிர் இன்னும் வரவில்லை.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. பலூன்கள் எப்போவுமே அழகுதான்! எங்க பேத்தி அப்பு நாங்க சென்ற டிசம்பரில் யு.எஸ். போனப்போ எங்களை வரவேற்கப் பெரிய பலூன் வாங்கி வந்திருந்தாள். அதைக்காரில் கட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். பல மாதங்கள்(சுமார் 2,3 மாதங்கள்) அந்த பலூன் எங்கள் படுக்கையறையிலேயே மிதந்து கொண்டிருந்தது. அதே போல் குட்டிப் பேத்திக்கும் I am a baby girl, It is a baby girl என்றும் எழுதப்பட்ட பிங்க் நிற பலூன் கொத்துக்களை வாங்கி இருந்தனர். நீங்கள் இருப்பது எந்த மாநிலம்னு தெரியலை! மலைகள் இருக்குனு சொல்றீங்க! அரிசோனாவா?நேர வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறேன். எங்க பையர், பொண்ணு இருக்கும் டெக்சாஸ் மாகாணம் மலைப் பகுதிக்கு ஒரு மணி நேரம் முன்னால் இருக்கும். டெக்சாஸில் பகல் பனிரண்டு எனில் மலைப்பகுதியில் பகல் பதினோரு மணி!

    பதிலளிநீக்கு
  29. மறுபடியும் வாசித்துப் பார்த்த பொழுது பின்வரும் சாந்தி நிலையப் படப்பாடலும் அமரர் நாகேஷூம் நினைவுக்கு வந்தார்கள்.

    பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
    இருக்கும் இடம் எதுவோ
    நினைக்கும் இடம் பெரிது
    போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
    நெஞ்சினில் துணிவிருந்தால்
    நிலவுக்கும் போய்வரலாம்

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமாஅர், வாழ்க வளாமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் கீதாபரமசிவம், வாழ்க வளமுடன்.
    மூன்று முறை போன போதும் பலூன்களுடன் தான் வரவேற்றார்கள். நாங்களும் எங்கள் அறையில் காற்று போகும் வரை வைத்து பார்த்து மாகிழ்ந்தோம்.

    நம் நாட்டிலேயே ஆரம்பித்து விட்டார்கள். எல்லா விஷேங்களுக்கும் பலூன் கட்டுவது.
    பலூனில் வரவேற்பு போட்டு.

    மகன் சொன்னான் குழந்தை பிறக்கும் முன்னேயே என்ன குழந்தை என்று தெரிந்து கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியும் உண்டு. அதற்கு வரும் நண்பர்கள் பெண் குழந்தை என்றால் அதாற்கு ஏற்றார் போல் உடை, விளையாட்டு சாமான்கள் வாங்கி கொடுத்து போகிறார்கள். ஆண் குழந்தை அவனுக்கு வேண்டிய உடை விளையாட்டு சாமான்கள்.

    நம் நாட்டில் குழந்தை பிறந்தவுடன் புது துணி போட கூடாது பழைய உடை தான் முதலில் அணிய வேண்டும், குழந்தை பிறக்கும் முன் குழந்தைக்கு என்று எதுவும் வாங்க்கி சேர்க்க கூடாது என்று. மேல் நாட்டில் அதெல்லாம் பார்க்க முடியாது.

    நானும் குழந்தைக்கு போடும் நகை, கெண்டி, தண்டை, உடை எல்லாம், மகனின் மாமியாரிடம் கொடுத்து விட்டேன்.
    அரிசோனா மாநிலம், பீனிக்ஸில் இருக்கிறான். நேர வித்தியாசம் உண்டு.

    டெக்சாஸ் நூலகத்தில் தமிழ் புத்தகம் எல்லாம் கிடைக்கும் என்று என் தோழி சொன்னாள். மகள் வீட்டுக்கு போனால் தமிழ் புத்தகம் எனக்கு துணை என்று.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    மீண்டும் பதிவை படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
    நெஞ்சினில் துணிவு இருந்தால் நிலவுக்கும் போய்வரலாம் தான்.

    பதிலளிநீக்கு
  33. பலூனுடன் சேர்ந்து மனது பறக்கிறதுதான்.
    பாடலுடன் பதிவை கோர்த்த விதமும் நன்று,

    பதிலளிநீக்கு
  34. ஹிஹிஹி பேரை மாத்திட்டீங்க! ராஜலக்ஷ்மி நினைவோ? சாம்பசிவம் என்பதைப் பரமசிவம்னு போட்டுட்டீங்க! :))))))))

    பதிலளிநீக்கு
  35. யானையையும், சமுத்திரத்தையும் எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அதில் அடுத்த இடம் பிடிப்பது பலூன்கள்! படங்கள் கொள்ளை அழகு! ஒரு முறை வானத்தில் பறந்து விட்டு அந்த அனுபவத்தையும் எழுதுங்கள். I am sending this comment for the second time.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    மன்னிக்கவும். நீங்கள் சொன்னது போல் ராஜியை நினைத்து விட்டேன் போல!
    இனி கவனமாய் இருக்கிறேன் கீதா.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது போல் யானை, கடல், பலூன் எல்லாம் பார்க்க பார்க்க அலுக்காதவை தான்.
    பறந்தால் அனுபவத்தை சொல்கிறேன். கருத்து சொல்ல வாருங்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் சகோதரி

    பதிவு நன்றாக உள்ளது. பலூன்களின் பிரமாண்ட வடிவங்கள் கலர் என எல்லாமே திகைக்க வைக்கிறது. பதிவையும், அதற்கு வந்த கருத்துகளையும் படித்தேன். எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டேன். தங்களின் வீட்டருகிலேயே நீலவானத்தில் பறக்கும் அத்தனை பலூன்களின் அழகையும் நானும் ரசித்தேன்.

    படங்கள் அனைத்தும் நன்றாக எடுத்துள்ளீர்கள். அந்த மரத்தின் இடையே சுடர் விடும் சூரியன் மற்றும் பலூன் படமும், நீலவானத்தில் பூவினிடையே பறக்கும் பலூனின் படமும் மிகவும் அட்டகாசமாக உள்ளது. ரசித்துப் பார்த்தேன்.

    சாந்தி நிலைய படப்பாடலும் எனக்கு பிடித்தமானவை. அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட்தான். குழந்தைகளுடன் பலூனில் பறக்கும் அந்தப்பாடல் மிகவும் நன்றாக இருக்கும். பதிவை படிக்க ஆரம்பித்ததும் நினைவுக்கு வந்த பாடல். நீங்களும் அதை உடனே பகிர்ந்து விட்டீர்கள்.

    நான் இப்போது நீங்கள் வெளியிட்ட பதிவை படித்துக் கொண்டிருக்கையிலேயே பலூனில் பறப்பதைப்போல இந்தப்பதிவுக்கு வந்து படித்து படங்களை ரசித்து கருத்தை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். ஹா ஹா. இதோ.. இப்போது அந்தப்பதிவுக்கும் சென்று மீதமுள்ள படங்களை ரசிக்கப்போகிறேன். பறக்கும் பலூன்களை பார்க்கும் போது மனம் குழந்தையாகிப் போவது உண்மைதான். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு நன்றாக உள்ளது. பலூன்களின் பிரமாண்ட வடிவங்கள் கலர் என எல்லாமே திகைக்க வைக்கிறது.//

      ஆமாம், வித விதமாக பார்க்க அழகாய் இருக்கும்.

      //பதிவையும், அதற்கு வந்த கருத்துகளையும் படித்தேன். எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டேன்.//

      பதிவையும், அதற்கு வந்த கருத்துக்களையும் படித்தது மகிழ்ச்சி.


      //தங்களின் வீட்டருகிலேயே நீலவானத்தில் பறக்கும் அத்தனை பலூன்களின் அழகையும் நானும் ரசித்தேன்./
      வீட்டுக்கு பின்னால் தெரியும் மலைக்கு அந்த பக்கம் தான் பலூன் இறங்கு தளம் உள்ளது.

      //படங்கள் அனைத்தும் நன்றாக எடுத்துள்ளீர்கள். அந்த மரத்தின் இடையே சுடர் விடும் சூரியன் மற்றும் பலூன் படமும், நீலவானத்தில் பூவினிடையே பறக்கும் பலூனின் படமும் மிகவும் அட்டகாசமாக உள்ளது. ரசித்துப் பார்த்தேன்.//

      படங்களை ரசித்து பார்த்தது மகிழ்ச்சி.

      //சாந்தி நிலைய படப்பாடலும் எனக்கு பிடித்தமானவை. அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட்தான். குழந்தைகளுடன் பலூனில் பறக்கும் அந்தப்பாடல் மிகவும் நன்றாக இருக்கும். பதிவை படிக்க ஆரம்பித்ததும் நினைவுக்கு வந்த பாடல். நீங்களும் அதை உடனே பகிர்ந்து விட்டீர்கள்.//

      ஆமாம், சாந்தி நிலைய படப்பாடல் நினைவுக்கு வரும் என்று தெரியும் அதுதான் அந்த பாடல் பகிர்ந்தேன். இந்த படத்தில் எல்லா பாட்டுகளும் நல்ல பாடல்கள்தான். எனக்கும் பிடித்தமானதுதான்.

      //நான் இப்போது நீங்கள் வெளியிட்ட பதிவை படித்துக் கொண்டிருக்கையிலேயே பலூனில் பறப்பதைப்போல இந்தப்பதிவுக்கு வந்து படித்து படங்களை ரசித்து கருத்தை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். ஹா ஹா. இதோ.. இப்போது அந்தப்பதிவுக்கும் சென்று மீதமுள்ள படங்களை ரசிக்கப்போகிறேன்.//

      பழைய பதிவை ரசித்து குழந்தையின் உற்சாகத்தோடு வந்து கருத்து சொன்னது ஈனக்கும் மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  40. இந்தப் பதிவு எப்படி விட்டுப் போனது? அப்போது நாங்கள் உங்கள் தளம் வரலையோ?

    படங்கள் எலலம் செம அழகு. பலூன் அழகு பார்க்கவும் ரசிக்கவும் பிடிக்கும் என்றால் அதில் பறப்பதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ரசித்துப் பார்த்தேன் வாசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு