என் கைகளுக்கு மருமகள் வைத்த மருதாணி
மருமகள் கைகளுக்கு மகன் வைத்த மருதாணி
தீபாவளி துணிமணிகள்
தீபாவளி பலகாரங்கள்.
இவை நான்கு வருடங்களுக்கு முன் நியூஜெர்ஸியில் கொண்டாடிய போது எடுத்த படங்கள்.
எல்லாப் பண்டிகைகளுக்கும் கையில் மருதாணி வைத்து விடுவேன். அது தெரிந்த மருமகள் வட இந்தியக் கடையில் மருதாணிக் கோன் வாங்கி என் கைகளுக்கு வரைந்து விட்டாள். எனக்கு மருதாணி இலையை அரைத்து அதை வைத்து தான் பழக்கம். என் குழந்தைகள், பேத்தி எல்லாம் வேறு டிசைன் வரைய சொன்னால் முதலில் கையில் பேனாவால் வரைந்து விட்டு அதன் மேல் மருதாணியை வைத்து விடுவேன்.
மகன் மருமகளுக்கு புஷ்வாணம், தரைச்சக்கரம், கம்பி மத்தாப்பு போல் வைத்து விட்டான்.
தீபாவளி நினைவலைகள் பதிவை எப்போது மீள் பதிவாக போட்டாலும் விரும்பிப் படிக்கிறார்கள். படிக்க எண்ணம் இருந்தால் மீண்டும் படிக்கலாம்.
எல்லோருக்கும் அந்த சிறு வயது நினைவு இருக்கிறது . அந்த நாள் மீண்டும் வராதா என்ற ஆசையும் இருக்கிறது.
பண்டிகைகள் எதிர்பார்ப்பையும் குதூகலத்தையும் கொடுத்தது அன்று. அந்த அளவு இப்போது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இங்கே இருக்கும் நிறையபேருக்கு தங்கள் உறவுகளுடன் பண்டிகை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. சிலருக்கு ஊரிலிருந்து பெற்றோர் வந்து இருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு குழந்தைகள் வரும் நாள் தீபாவளியாக இருந்தது. கூடவே இருந்தால் மேலும் மகிழ்ச்சிதான்.
மாலை மலரில் படித்த செய்தி :-
//தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாடவேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
இலங்கையை ஆண்ட ராவணன் சீதையைக் கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டுக்கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன், சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.//

எப்படி இருந்தாலும் பண்டிகைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கே!
இறைவன் எல்லோருக்கும் மன சந்தோஷத்தை கொடுக்க வேண்டும்.
இந்த வருடம் மகன் வீட்டில் தீபாவளிப் பண்டிகை எங்களுக்கு. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!