பிப்ரவரி 17ஆம் தேதி கோவை பயணம். ஒரு பத்து நாட்கள் மாமனார், மாமியாருடன் இருந்து வரலாம் என்று போய் இருந்தோம்.
105 வயது நிரம்பி விட்டதால் மாமா எங்கும் வெளியில் செல்வது இல்லை . அத்தைஅவர்கள் மாமாவை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்வார்கள்.
அத்தை அவர்கள் எப்போதும் சொல்வது ”எல்லோரும் சுமங்கலியாய் போக வேண்டும் என்பார்கள் , ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பின் தான் நான் போக வேண்டும் ”என்பார்கள். அவர்கள் விருப்பம் போல் மாமாவிற்குக் கடைசி வரை தன் பணிவிடைகளைச் செய்தார்கள்.

ஞாயிறு அன்று மாமாவைப் பார்த்துக் கொள்ளும் நண்பரிடம் அவர் பேரன்,
பேத்திகளைப் பற்றி விசாரித்து கொண்டார்கள் . வழக்கம் போல் குளித்து
இறைவனை வணங்கி விபூதி அணிந்து சன் தொலைக்காட்சியில்
திருக்கோவில்கள் உலாவை பார்த்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அத்தை இட்லியைக்கரைத்து கொடுத்தார்கள் . அவர்கள் கையால் உணவு சிறிது அருந்திவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
மாமா அவர்கள் 102 வயது வரை சிவபூஜை செய்தவர்கள், அவர்களை கஷ்டப்படுத்தாமல்இறைவன் நொடியில் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
மாமா தினமும் பள்ளியில் தமிழாசிரியர் பணியை முடித்து வந்த பின் மாலையில் பேட்டைஈஸ்வரன் கோவிலில் , “மருதநாயக முதலியார் அன்னபூரணி அம்மாள் தேவாரப் பாடசாலை”யில் தேவாரம்
அதன் பின் வயது அதிகம் ஆகி விட்டது அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று தன் பிள்ளைகள் சொன்னதை ஏற்று தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள் விநாயகர் கோவிலில் சிறு குழந்தைகளுக்கு தேவாரம் சொல்லி தந்தார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் இரத்தின விநாயகர் கோவிலில் பல ஆண்டுகள் கந்தபுராணம் மற்றும் பெரியபுராண தொடர் சொற்பொழிவு ஆற்றி உள்ளார்கள்.
கேரள மாநிலம் திருவஞ்சைக்களத்தில் கோவை சேக்கிழார், திருக்கூட்டத்தினர்களால் நடத்தப்படும் சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜைகளில் சேக்கிழார் திருக்கூட்டத்தின் பொருளாளர் என்ற முறையில் சுமார் 50 ஆண்டுகள் சேவைபுரிந்தார்கள்.
கோவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து பல அரிய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். இச்சங்கத்தில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.

மாமா அவர்கள் ’அன்புவெள்ளம்’ என்ற நூலினை எழுதினார்கள் . அதைக் கலைமகள் காரியாலயத்தினர் வெளியிட்டனர், இந்நூல் சேரமான்பெருமான் நாயனார், மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றியது. இந்நூல் நகராட்சி பள்ளிகளில் பாடப்புத்தகமாய் இருமுறை வைக்கப்பட்டது. மேலும் இவர்கள் தலைமையில் தமிழ்ப்பாடநூல்கள் தொகுக்கப்பட்டு நகராட்சி பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டது.கோவை நகராட்சிப்பாடப்புத்தகத் தேர்வுகுழு உறுப்பினராக இருந்தார்கள்.
கோவை சிவக்கவிமணி திரு. சி.கே. சுப்பிரமணிமுதலியார் அவர்கள் இவர்களுக்கு “திருமுறைச் செல்வர்” எனற பட்டத்தினை அளித்து சான்றிதழ் அளித்தார்கள்.
பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அவர்கள் முன்னிலையில் தொண்டை மண்டல ஆதீனம் அவர்களால் “பண்ணிசைச் செல்வர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
கோவை சைவப் பெருமக்கள் பேரவையில் இவர்களுக்கு “சைவப்பெருந்தகை” என்ற பட்டம் அளித்தார்கள்.
மணிவிழா, முத்துவிழா, கனகாபிஷேகவிழா, நூற்றாண்டு விழா என விழாக்களை அவர்களின் ஐந்து மகன்களும் மற்றும் பேரன், பேத்திகள் குடும்பத்தினர் நடத்தி அவர்களிடம் ஆசி பெற்றார்கள்.
பேட்டைஈஸ்வரன் கோவிலில் மாமாவிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் வந்து இரண்டு நாளும் தேவாரம், திருவாசகம் படித்து அவர்களின் இறுதி சடங்குகளை மிக சிறப்பாக செய்தார்கள். 16 தினங்களும் யாராவது மாணவர்கள் வந்து மாமா படத்தின் முன் வந்து உட்கார்ந்து தேவாரத்தை இசைத்து சென்றார்கள்.

16ம் நாள் திருமுறை செல்வர், சைவப்பெருந்தகை மாமா அவர்களுக்கு கோவை புரந்தரதாசர் அரங்கத்தில் படத்திறப்புவிழா செய்து நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தி தங்கள் ஆசிரியருக்கு சிறப்பு செய்தார்கள்.
சிரவை ஆதீனம் சீர் வளர் சீர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தலைமை தாங்க 12 அன்பர்கள் பேசினார்கள். மற்றும் தேவார பாடசாலை அன்பர்கள் போற்றித்திருத்தாண்டகம் படித்து மலர் அஞ்சலி செய்தார்கள்.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்து அனைவரிடமும் அன்பு உள்ளம் கொண்ட அவர்கள் இறைவனிடம் செல்லும் போதும் எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காமல் அமைதியாக தூங்குவது போல் தூங்கி விட்டார்கள்.
//வையத்து வாழ்வாங்கு வாழ்பவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்//
இப்படி வள்ளுவர் சொன்ன குறள் படி வாழ்ந்து எங்கள் குடும்பத்தை வாழவைக்கும் தெய்வம் ஆனார்கள்.
105 வயது நிரம்பி விட்டதால் மாமா எங்கும் வெளியில் செல்வது இல்லை . அத்தைஅவர்கள் மாமாவை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்வார்கள்.
அத்தை அவர்கள் எப்போதும் சொல்வது ”எல்லோரும் சுமங்கலியாய் போக வேண்டும் என்பார்கள் , ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பின் தான் நான் போக வேண்டும் ”என்பார்கள். அவர்கள் விருப்பம் போல் மாமாவிற்குக் கடைசி வரை தன் பணிவிடைகளைச் செய்தார்கள்.
மாமா அவர்கள் 23 ம் தேதி ஞாயிறு காலை திடீரென்று இறைவனடி
சேர்ந்தார்கள். அதற்கு முதல் நாள் நான்கு அன்பர்கள் வந்து 105 வயதான
அவர்களை வந்து பார்த்து மாலை, மற்றும் பொன்னாடை போர்த்தி ஆசி
பெற்று சென்றார்கள். அவர்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
”அவர்கள் போவதற்கு வெளி வாசல் இருட்டி விட்டது லைட் போடு ”என்று
என் கணவரிடம் பேசினார்கள்.பேரன் பேத்திகள் பூட்டன், பூட்டிகளை ஸ்கைப்பில் பார்த்து மகிழ்ந்தார்கள் லேப்டாப்பில் தெரிந்த படத்தை தடவி மகிழ்ந்தார்கள்.

ஞாயிறு அன்று மாமாவைப் பார்த்துக் கொள்ளும் நண்பரிடம் அவர் பேரன்,
பேத்திகளைப் பற்றி விசாரித்து கொண்டார்கள் . வழக்கம் போல் குளித்து
இறைவனை வணங்கி விபூதி அணிந்து சன் தொலைக்காட்சியில்
திருக்கோவில்கள் உலாவை பார்த்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அத்தை இட்லியைக்கரைத்து கொடுத்தார்கள் . அவர்கள் கையால் உணவு சிறிது அருந்திவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
மாமா அவர்கள் 102 வயது வரை சிவபூஜை செய்தவர்கள், அவர்களை கஷ்டப்படுத்தாமல்இறைவன் நொடியில் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
மாமா தினமும் பள்ளியில் தமிழாசிரியர் பணியை முடித்து வந்த பின் மாலையில் பேட்டைஈஸ்வரன் கோவிலில் , “மருதநாயக முதலியார் அன்னபூரணி அம்மாள் தேவாரப் பாடசாலை”யில் தேவாரம்
சொல்லித்தருவார்கள். 80ஆம் வயது வரை அந்த பணியை பேட்டைஈஸ்வரன்கோவிலில் சிறப்பாக ஆற்றினார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் தேவார ஆசிரியராக இருந்தார்கள், மேலும் இத்திருக்கோயிலில் கந்தபுராணம் மற்றும் பெரியபுராணம் சொற்பொழிவு ஆற்றுவார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் இரத்தின விநாயகர் கோவிலில் பல ஆண்டுகள் கந்தபுராணம் மற்றும் பெரியபுராண தொடர் சொற்பொழிவு ஆற்றி உள்ளார்கள்.
கேரள மாநிலம் திருவஞ்சைக்களத்தில் கோவை சேக்கிழார், திருக்கூட்டத்தினர்களால் நடத்தப்படும் சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜைகளில் சேக்கிழார் திருக்கூட்டத்தின் பொருளாளர் என்ற முறையில் சுமார் 50 ஆண்டுகள் சேவைபுரிந்தார்கள்.
கோவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து பல அரிய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். இச்சங்கத்தில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.

மாமா அவர்கள் ’அன்புவெள்ளம்’ என்ற நூலினை எழுதினார்கள் . அதைக் கலைமகள் காரியாலயத்தினர் வெளியிட்டனர், இந்நூல் சேரமான்பெருமான் நாயனார், மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றியது. இந்நூல் நகராட்சி பள்ளிகளில் பாடப்புத்தகமாய் இருமுறை வைக்கப்பட்டது. மேலும் இவர்கள் தலைமையில் தமிழ்ப்பாடநூல்கள் தொகுக்கப்பட்டு நகராட்சி பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டது.கோவை நகராட்சிப்பாடப்புத்தகத் தேர்வுகுழு உறுப்பினராக இருந்தார்கள்.
கோவை சிவக்கவிமணி திரு. சி.கே. சுப்பிரமணிமுதலியார் அவர்கள் இவர்களுக்கு “திருமுறைச் செல்வர்” எனற பட்டத்தினை அளித்து சான்றிதழ் அளித்தார்கள்.
பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அவர்கள் முன்னிலையில் தொண்டை மண்டல ஆதீனம் அவர்களால் “பண்ணிசைச் செல்வர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
கோவை சைவப் பெருமக்கள் பேரவையில் இவர்களுக்கு “சைவப்பெருந்தகை” என்ற பட்டம் அளித்தார்கள்.
மணிவிழா, முத்துவிழா, கனகாபிஷேகவிழா, நூற்றாண்டு விழா என விழாக்களை அவர்களின் ஐந்து மகன்களும் மற்றும் பேரன், பேத்திகள் குடும்பத்தினர் நடத்தி அவர்களிடம் ஆசி பெற்றார்கள்.
பேட்டைஈஸ்வரன் கோவிலில் மாமாவிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் வந்து இரண்டு நாளும் தேவாரம், திருவாசகம் படித்து அவர்களின் இறுதி சடங்குகளை மிக சிறப்பாக செய்தார்கள். 16 தினங்களும் யாராவது மாணவர்கள் வந்து மாமா படத்தின் முன் வந்து உட்கார்ந்து தேவாரத்தை இசைத்து சென்றார்கள்.

16ம் நாள் திருமுறை செல்வர், சைவப்பெருந்தகை மாமா அவர்களுக்கு கோவை புரந்தரதாசர் அரங்கத்தில் படத்திறப்புவிழா செய்து நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தி தங்கள் ஆசிரியருக்கு சிறப்பு செய்தார்கள்.
சிரவை ஆதீனம் சீர் வளர் சீர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தலைமை தாங்க 12 அன்பர்கள் பேசினார்கள். மற்றும் தேவார பாடசாலை அன்பர்கள் போற்றித்திருத்தாண்டகம் படித்து மலர் அஞ்சலி செய்தார்கள்.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்து அனைவரிடமும் அன்பு உள்ளம் கொண்ட அவர்கள் இறைவனிடம் செல்லும் போதும் எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காமல் அமைதியாக தூங்குவது போல் தூங்கி விட்டார்கள்.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்//
இப்படி வள்ளுவர் சொன்ன குறள் படி வாழ்ந்து எங்கள் குடும்பத்தை வாழவைக்கும் தெய்வம் ஆனார்கள்.
படத்திறப்புவிழா படம்
தம்பி மகன் அவர்கள் தன் பெரியப்பாபற்றிய செய்திகளை நினைவுகூர்கிறார்கள்
கணவரின் அண்ணன் அவர்கள் தன் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
தேவார மாணவர்கள் போற்றி திருத்தாண்டகம் படிக்கிறார்கள்.
வந்தவர்கள் அனைவரும் மலர் அஞ்சலி செய்கிறார்கள்.
மாமா அவர்கள் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்கள் . அதில் என் கணவரைப்பற்றி எழுதியது.
-------------------