ஞாயிறு, 1 நவம்பர், 2026

ஹாலோவீனும் மழையும்

பேரன் கவின் குழந்தை பருவத்தில் 

ஹாலீவீன்  அக்டோபர் 31 ஆம் தேதி மேற்கத்திய நாடுகளில் கொண்டாடாப்படும்  ஒரு பண்டிகை.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். '"பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா" என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//



வீட்டுக்கு முன் வைத்த அலங்காரங்கள்.ஹாரி பாட்டர் எட்டிப்பார்க்கிறார்


பக்கத்தில் போனால் ஹேப்பி ஹாலோவீன் சொல்லும்  சின்ன விடீயோ தான் வலை ஏற மறுக்கிறது.


ஹாலோவீன்  நிகழ்ச்சியாக வாங்கியது  என் அறைக்கு வந்து குசலம் விசாரித்து போனது.அப்புறம் முன் பக்கம் தொங்கவிடபட்டது.

மருமகள் ஆபீஸ்க்கு போன போது

நல்ல மழையில் ஆனந்தமாக   நனைகிறது 


ஹாலோவீன் அலங்காரங்கள் எல்லாம் கீழே விழுந்து கிடக்கிறது



மழையை ரசிக்கும் பேரன்



ஹாலோவீன் எலும்பு கூடு மழையில் ஆனந்தமாக குளிக்கிறது.
அருவியில் குளிப்பது போல மகிழ்ச்சியாக குளிக்கிறது.

முத்துச்சரம் போல சரம் சரமாக மழை.

 
இடி இடிக்கும் மேகங்கள், இறங்கி வரும்  தாளங்கள்


இன்று காலை முதலே மழை


வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூறலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏகவெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார்முழுதும் வீட்டிலே
பறவை கூடக் கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே.'

சிறுவயதில் என் மகள் பாடுவாள்.  பழைய "மழை மழை"பதிவில் இந்த பாடலை பகிர்ந்து இருப்பேன்.

 தமிழ்நாட்டில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இங்கும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. போனில் எச்சரிக்கை வந்து கொண்டு இருக்கிறது. 


இலவச மற்றும் கட்டணமில்லா ஹாலோவீன் விழாக்களை பீனிக்ஸ் நகர  பூங்காக்கள் மற்றும்  மற்றும் பொழுது போக்குத் துறையும் சேர்ந்து  நடத்துகிறார்கள் குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் வித விதமான  ஆடைகள்  அணிந்து வருவார்கள்.  குழந்தைகளுக்கு விளையாட்டுகள், போட்டோ எடுத்து கொள்ள போட்டோ பூத்கள்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  (Trick-or-Treat) என்று கேட்கும் குழந்தைகளுக்கு இலவச மிட்டாய்கள் உண்டு.
நாங்களும் வேட மிட்டு போனோம் நானும் பேரனும்

நானும் , சம்பந்தியும்  முன்பு கொள்ளைக்காரிகள் இப்போது மக்களின் அன்பு மனதை கொள்ளை அடிக்க வந்தவர்கள். குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களுடன் வந்தவர்கள்.

பையில் சின்ன சின்ன கார்கள், பென்சில், பேனா, பந்துகள் வைத்து இருக்கிறோம். எங்களிடம் வரும் குழந்தைகளுக்கு கொடுத்தோம்.


பேரன் வெளவால் எலும்பு கூடு , கையில்  பறக்கும் வெளவால்  இது ஹாலோவீன்  பாரம்பரியம்.  வாசலில் ஹாலோவீன் அலங்காரத்தில் வெளவால் நிறைய இடம்பெறும்

மகனின் நண்பர்கள் வந்து இருந்தார்கள்.
பேரன் கையில் வ்வால் தெரிகிறதா? தொங்க விட்டு இருக்கிறான்.   கடைசியில் மகன் 

மிட்டாய் வாங்க  வந்த தேவதை   குழந்தை


பன்றி  முகத்தோடு குடும்பத்தோடு வந்தவர்  மெகா சைஸ் பாப்கார்ன் வைத்து இருக்கிறார்


தந்தையின் தோளில்  மகிழ்ச்சியாக வந்த மகன்

சம்பந்தி , பேரன், மருமகள், மகன்

டைனோஸர்கள்




 ஹாலோவீன் விழாவில்  போட்டோ பூத்தில் படம் எடுக்க நின்ற போது பேரன்  கவினுடன் படம் எடுக்க விரும்பிய   குழந்தை. நன்றாக தமிழ் பேசினான்

காரில் வந்த போது முன் பக்கம் இருந்து மருமகள் எடுத்த படம்




தங்கபற்களுடன்  மகன் மிரட்டுகிறான்,  அழகான முகத்தோற்றம் ஆனால் கண்கள் மூலம் மிரட்டுகிறாள் மருமகள்.
 


வீட்டின் முன் பக்கம் வைத்த பொம்மைகள்








வரும் குழந்தைகளுக்கு கொடுக்க மிட்டாய் பானை

சாக்லேட்கள்

சிறு குழந்தைகளுக்கு கார்கள்

இருள்விலக்கும் பண்டிகை இன்று  இரவுடன் நிறைவு பெறும் குழந்தைகள் வருவார்கள் வித விதமாக உடை அணிந்து மழை  விட்டு விட்டு பெய்வதால் வருவார்களா என தெரியவில்லை, வந்தால் படமெடுத்து  இன்னொரு பதிவு போடுகிறேன்.

அடுத்து நம் தீபாவளி  திருநாள்  இருள் நீங்கி ஒளி பரவும் திருநாள் வரும்.

வாழ்கவையகம்! வாழ்கவையகம் ! வாழ்க வளமுடன்


-------------------------------------------------------------------------------------------------------------------------



 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக