வெள்ளி, 27 மார்ச், 2026

புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2




புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1


இதற்கு முன் போட்ட பதிவின் சுட்டி. பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம்.


தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

 கோயில் படங்கள் இடம்பெறுகிறது இந்த பதிவில்.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.



























































மேலே உள்ளதும், கீழே உள்ளதும் ஒன்று போல தெரியும் ஆனால் வேறு வேறு.



இதுவும் அப்படித்தான் இரண்டும் வேறு வேறு

விளக்கு  தூணில்  மலரும், பாம்பும் சுற்றி உள்ளது


தாய்லாந்து பாரம்பரிய உடை அணிந்தவர்கள்


நான் அவர்களை எடுத்தேன் படம்


அவரகள் என் மகனிடம் '"அம்மாவையும் என்னையும் எடுங்கள்" என்று அவர்கள் அலைபேசியிலும் என் அலைபேசியிலும் எடுக்க வைத்தார்கள்.



மேல் விதானம் அழகு








ஒவ்வொரு வாயில்களிலும்  துவாரபாலகர் போல  வேறு வேறு தோற்றத்தில் 
நிற்கும் உருவங்கள்












நிறைய இருக்கிறது புத்த மடாலயம் படங்கள் அடுத்து அடுத்த பதிவுகளில் பார்க்கலாம். தாய்லாந்து  பயணம் போய்  ஒரு ஆண்டுக்கு மேல் ஆச்சு இன்னும் பயணம் செய்த இடங்கள்  பகிர்வு இன்னும் முடியவில்லை. வேறு வேறு பதிவுகள் போட்டு விட்டதால் இவை அப்படியே  தடை பட்டு விட்டது.

இனி படங்கள் மட்டுமாவது பகிர எண்ணம்.
அமைதியை போதித்த புத்தபெருமனிடம் இந்த போர் முடிவடைந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------------------------------------------------

44 கருத்துகள்:

  1. அப்பாடி.. கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்னால் போட்ட பதிவின் தொடர்ச்சியா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அப்பாடி.. கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்னால் போட்ட பதிவின் தொடர்ச்சியா...!//

      ஆமாம், ஸ்ரீராம். வேறு வேறு பதிவுகள் போட்டதால் முடியவில்லை.
      உங்கள் தளத்தில் தினம் பதிவு போடுவது போல் போட்டால் தான் பயணபதிவை நிறைவு செய்யலாம் போல

      நீக்கு
  2. என் மகன் தேனிலவுக்கு தாய்லாந்துதான் சென்றான். இன்னொரு இடம் தெரிவு செய்து வைத்திருந்தார்கள். அது அப்போது செல்ல முடியாத இடமாகி விட்டது. நம் நாட்டுடன் முறுக்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்! பெயர் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் மகன் தேனிலவுக்கு தாய்லாந்துதான் சென்றான். இன்னொரு இடம் தெரிவு செய்து வைத்திருந்தார்கள். அது அப்போது செல்ல முடியாத இடமாகி விட்டது. நம் நாட்டுடன் முறுக்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்! பெயர் நினைவில்லை.//

      ஆமாம், கல்யாணம் செய்தவர்கள் தேனிலவுக்கும் , புதிதாக புது மாதிரியாக திருமணம் செய்யவும் ஏற்ற இடம் தான். மருமகளின் அக்கா மகன் திருமணம் அங்கு உள்ள கடற்கரையில் நடந்தது அதற்கு தான் போனோம். முன்பு பதிவு போட்டு இருந்தேன் பார்த்து இருப்பீர்கள்.

      நீக்கு
    2. ஆமாம். நினைவிருக்கிறது.

      நீக்கு
  3. அந்த கோவில்களில் சில விஷயங்களில் நம் ஊர் பாணியும் கலந்திருப்பது போல தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த கோவில்களில் சில விஷயங்களில் நம் ஊர் பாணியும் கலந்திருப்பது போல தோன்றுகிறது.//

      கேரளா, கர்நாடகாவில் இது போன்ற கட்டிட அமைப்பில் கோயில்கள் இருக்கும். ஐயப்ப கோயில்கள் தமிழ் நாட்டில் இப்படி கட்டுகிறார்கள்.

      நீக்கு
  4. அந்த இரண்டு பெரிய பாத்திரம் போன்ற அமைப்புகளும் மாவடு போடும் பெரிய சைஸ் மாச்சட்டி போல தெரிகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த இரண்டு பெரிய பாத்திரம் போன்ற அமைப்புகளும் மாவடு போடும் பெரிய சைஸ் மாச்சட்டி போல தெரிகிறது!!//

      மாவடு சீஸனில் நல்ல எடுத்துக்காட்டு. மாவடு வாங்கி ஊறுகாய் போட்டு விட்டீர்களா? முகநூலில் எங்கோ வாங்குவதாக சொன்னீர்களே அது நன்றாக இருந்ததா?

      நீக்கு
    2. இல்லை அக்கா.. இந்த முறை மாவடுவாக வாங்கி நான் போடவில்லை. வெளியில் வாங்கியதுதான். அதுபற்றி ஒரு பதிவே எழுத யோசித்திருக்கிறேன்!

      நீக்கு
  5. படங்கள் யாவும் பிரமாதம். நல்ல வெயில் நேரம் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் யாவும் பிரமாதம். நல்ல வெயில் நேரம் என்று தெரிகிறது.//

      ஆமாம் , நல்ல வெயில் தான். பரந்து விரிந்து இருந்தது மடாலயம் பார்க்க படம் எடுக்க ஆசையாக இருந்தது எடுத்து தள்ளினோம்.
      கோயில் பிரகாரம் போல பிரகாரத்தில் தோட்டம் தோட்டத்தில் நிறைய சிலைகள் யோகத்தில் இருப்பது போல . பேர் எல்லாம் தாய்லாந்து மொழியில் மட்டும் தான். காமிராவில் எடுத்த படங்கள் எல்லாம் பழுது பட்ட மடி கணினியில் இருக்கிறது. இந்த பதிவில் இடம் பெற்றது எல்லாம்
      கைபேசியில் எடுத்தது.

      நீக்கு
    2. கைபேசியில் எடுத்த படங்களே பிரமாதமாக இருக்கிறதே... சமையலில் கைப்பக்குவம் போல கேமிராவும் சிலர் கைகளில்தான் நன்றாக மிளிர்கிறது. நீங்கள், ராமலக்ஷ்மி, வெங்கட், அமைதிச்சாரல்..

      நீக்கு
    3. நன்றி ஸ்ரீராம் . ராமலக்ஷ்மி, வெங்கட், அமைதிச்சாரல்.. எல்லாம் மிக நன்றாக எடுப்பார்கள். காமிராவும் நல்ல உயர்தர காமிரா.

      நீக்கு
  6. // அமைதியை போதித்த புத்தபெருமனிடம் இந்த போர் முடிவடைந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.//

    கண்டிப்பாக. அவர் உபதேசித்தால் கூட கேட்கமாட்டார்கள் இந்த கிராதகர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்டிப்பாக. அவர் உபதேசித்தால் கூட கேட்கமாட்டார்கள் இந்த கிராதகர்கள்!!//

      மகரிஷி சொல்வார் வாழ்த்தும் பயனும் என்ற அத்தியாத்தில் .

      வாழ்த்துபவர்களுக்கும் வாழ்த்து பெறுபவர்களுக்கும் பயன் உண்டு என்று.
      போர் வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும், அப்பாவி பொது மக்களுக்கும் எவ்வளவு கஷ்டம்
      போரால் உலக மக்கள் எல்லோருக்கும் கஷ்டங்கள்

      நாம் வாழ்த்தி கொண்டே இருப்போம் இந்த வையகத்தை.
      பிரார்த்தனை செய்வது மட்டும் நம் கடமை.
      அப்புறம் எப்படி நடக்க வேண்டுமோ இறைவன் பார்த்து கொள்வார்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாய்லாந்து சென்ற போது நீங்கள் தரிசித்த புத்த மடாலயம் இருந்த இடங்கள் அருமையாக உள்ளது. படங்களை மிகவும் ரசித்தேன்.

    /தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது./

    நல்லதொரு தகவல் படித்து தெரிந்து கொண்டேன். ஸ்ரீ ராமர்தான் ராமநவமியன்று அவர் பெயருடைய மன்னர் கட்டிய இக்கோவில் பகிர்வுகளை வெளியிடுமாறு செய்திருக்கிறார். 🙏

    பேரன் கவின் முரசு போல ஒன்றை அடித்து இயக்கிய படமும், கோவிலின் மற்ற படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன். தாய்லாந்து பாரம்பரிய உடையுடன் கூடிய பெண்களின் படமும், அவர்களுடன் நீங்களும் சேர்ந்து இருக்கும் படங்களும் நன்றாக உள்ளது.

    பெரிய கோவிலாகத்தான் இருக்கிறது. கட்டிடங்களின் அமைப்புகள், தூண்களில் செதுக்கல்கள், துவாரபாலகர்களைப் போல இருபக்கமும் பெரிதாக நிற்கும் சிற்பங்கள் என அத்தனையும் அங்குள்ள புராதான கலைகளை விளக்குகிறது.

    /அமைதியை போதித்த புத்தபெருமனிடம் இந்த போர் முடிவடைந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்./

    ஆம். நல்ல பிரார்த்தனை. அமைதியின் வலியுறுத்தலுடன் அறிவுரைகள் தரும் புத்த பகவான் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தரட்டும். நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன் 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. தாய்லாந்து சென்ற போது நீங்கள் தரிசித்த புத்த மடாலயம் இருந்த இடங்கள் அருமையாக உள்ளது. படங்களை மிகவும் ரசித்தேன்.//

      நன்றி கமலா

      //நல்லதொரு தகவல் படித்து தெரிந்து கொண்டேன். ஸ்ரீ ராமர்தான் ராமநவமியன்று அவர் பெயருடைய மன்னர் கட்டிய இக்கோவில் பகிர்வுகளை வெளியிடுமாறு செய்திருக்கிறார். 🙏//

      ஆமாம், நீங்கள் சொன்ன உடன் தான் பார்க்கிறேன். நேற்று ராமர் நவமி அன்று போட்ட பழைய பதிவை படிக்கும் போதுதான் இன்று பதிவு போடலாம் என்று நினைத்து போட்டேன். சரியாக ராமநவமிக்கு பதிவு போட்டு இருக்கிறேன். எல்லாம் இறைவன் சித்தம் தான்.

      //பேரன் கவின் முரசு போல ஒன்றை அடித்து இயக்கிய படமும், கோவிலின் மற்ற படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. //

      ஆமாம், பேரன் கவினை நீங்கள் சொன்னது மகிழ்ச்சி. தர்ம முரசை எல்லோரும் அடித்தோம்.

      //ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன். தாய்லாந்து பாரம்பரிய உடையுடன் கூடிய பெண்களின் படமும், அவர்களுடன் நீங்களும் சேர்ந்து இருக்கும் படங்களும் நன்றாக உள்ளது.//

      பாரம்பரிய உடை அணிந்தவர்களையும் என்னையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //பெரிய கோவிலாகத்தான் இருக்கிறது. கட்டிடங்களின் அமைப்புகள், தூண்களில் செதுக்கல்கள், துவாரபாலகர்களைப் போல இருபக்கமும் பெரிதாக நிற்கும் சிற்பங்கள் என அத்தனையும் அங்குள்ள புராதான கலைகளை விளக்குகிறது.//

      ஆமாம், அங்குள்ள புராதான கலைகளை விளக்குவது உண்மை.

      //ஆம். நல்ல பிரார்த்தனை. அமைதியின் வலியுறுத்தலுடன் அறிவுரைகள் தரும் புத்த பகவான் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தரட்டும். நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன் 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஆமாம், நன்றாக சொன்னீர்கள். புத்த பகவான் அனைவருக்கும் நல்லதையே நடத்தி தரட்டும்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செல்வோம் என்று எப்போதும் சொல்வதுண்டு! பயணங்கள் நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது! தொடர்ந்து மற்ற படங்களை பார்க்க ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அழகு. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செல்வோம் என்று எப்போதும் சொல்வதுண்டு! பயணங்கள் நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது! தொடர்ந்து மற்ற படங்களை பார்க்க ஆவலுடன்....//

      ஆமாம், நீங்கள் சொல்வீர்கள் பயணம் நல்லது என்று. வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பயணம் செய்வது நல்லதுதான். நீங்கள் சொல்வது போல
      பயணம் பல விஷயங்களை கற்று தருவது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட் .

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார் , வாழ்க வளமுடன்

      //படங்கள் நன்றாக உள்ளன//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் அட்டகாசம். கோமதிக்கா,

    முன்னர் தாய்லாந்து பாரம்பரிய உடை அணிந்த பெண்களை பகிர்ந்திருந்த நினைவு வந்தது,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அட்டகாசம். கோமதிக்கா,//

      நன்றி கீதா

      //முன்னர் தாய்லாந்து பாரம்பரிய உடை அணிந்த பெண்களை பகிர்ந்திருந்த நினைவு வந்தது,//

      ஆமாம், முன்பு பகிர்ந்து இருந்தேன்.

      நீக்கு
  11. மடாலயம் மிக அழகு. எனக்கு மடாலயங்கள் ரொம்பப் பிடிக்கும் காரணம் எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். கண்ணை மூடி அமைதியாக இருக்க ரொம்ப நல்லா இருக்கும்.

    மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது.//

    அட! மன்னர் பெயர் ராமரா?!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மடாலயம் மிக அழகு. எனக்கு மடாலயங்கள் ரொம்பப் பிடிக்கும் காரணம் எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். கண்ணை மூடி அமைதியாக இருக்க ரொம்ப நல்லா இருக்கும்.//

      ஆமாம், அமைதி தவழும் இடம் தான்.

      //மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது.//

      அட! மன்னர் பெயர் ராமரா?!!!!!//

      போன பதிவிலும் அவர் பேரை குறிப்பிட்டு இருந்தேன் கீதா, தாய்லாந்தில் ராமர், சீதா இராமாயண சம்பந்த பட்ட பேர்கள் மற்றும் இடங்கள் இருக்கிறது. அயோத்திமுன்பு பகிர்ந்து இருந்தேன்.

      நீக்கு
  12. அரச மடாலயமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் புதுபிக்கப்பட்டு புத்தம் புதிது போலவே இருக்கிறது. //

    மிக நன்றாகப் பராமரிக்கிறார்கள். இங்கு யோசித்துப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மிக நன்றாகப் பராமரிக்கிறார்கள். இங்கு யோசித்துப் பார்க்கிறேன்.//

      நாங்கள் போன போது புதுபித்து கொண்டு இருந்தார்கள்.
      நாங்கள் போய் வந்த 10 மாதம் கழித்து பெரிய நிலநடுக்கம் வந்தது . மார்ச் 28 ம் தேதி 2025 ஆம் ஆண்டு நிறைய சேதம் ஏற்பட்டது. அப்புறம் மீண்டும் சரி செய்தார்கள். நிறைய மடங்கள், பள்ளிகள், மருத்துமனை எல்லாம் சேதம் என்றார்கள். நாங்கள் போய் வந்த இடங்கள் எல்லாம் எப்படி இருந்தன என்று தெரியாது.

      நீக்கு
  13. பேரன் படங்கள் எல்லாம் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இன்று பேரனுக்கு பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்களை அவனுக்கு கொடுங்கள்.//

    மனமார்ந்த வாழ்த்துகள், கோமதிக்கா. பேரனுக்குச் சொல்லிவிடுங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      //மனமார்ந்த வாழ்த்துகள், கோமதிக்கா. பேரனுக்குச் சொல்லிவிடுங்கள்.//

      ஒரு வருடம் முன் போட்ட பதிவில் பேரனுக்கு பிறந்த நாள் என்று சொல்லி இருந்தேன்.
      இப்போது இல்லை கீதா, ஜூன் மாதம் தான் பிறந்த நாள் .
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. புத்தர் உருவம் சிலை ரொம்ப அழகு

    தாய்லாந்து பாரம்பரிய உடை அணிந்த பெண் ஃபோட்டோ உங்களோடு இருக்கும் ஃபோட்டோ நல்லாருக்கு

    அனைத்தும் அழகு அக்கா படங்களை ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //புத்தர் உருவம் சிலை ரொம்ப அழகு//

      ஆமாம், இன்னும் வரும் படுத்து கொண்டு இருக்கும் தங்க புத்தர் பின்னால் வருவார் மிக அழகான புத்தர்.

      //தாய்லாந்து பாரம்பரிய உடை அணிந்த பெண் ஃபோட்டோ உங்களோடு இருக்கும் ஃபோட்டோ நல்லாருக்கு//

      நன்றி.

      //அனைத்தும் அழகு அக்கா படங்களை ரசித்துப் பார்த்தேன்.//

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதாரெங்கன்

      நீக்கு
  16. பரந்த அழகிய மடாலயம். சுற்றிப் பார்த்த உணர்வைத் தரும் படங்கள். அருமை.

    ஆம், பயணங்கள் குறித்து விவரங்களுடன் எழுத நினைத்து படங்களையும் பகிர முடியாமல் தாமதமாகி விடுகிறது பல நேரங்களில். தொடருங்கள். தொடருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பரந்த அழகிய மடாலயம். சுற்றிப் பார்த்த உணர்வைத் தரும் படங்கள். அருமை.//

      ஆமாம், பார்க்க பார்க்க வந்து கொண்டே இருக்கிறது அவ்வளவு அழகான இடம்.

      //ஆம், பயணங்கள் குறித்து விவரங்களுடன் எழுத நினைத்து படங்களையும் பகிர முடியாமல் தாமதமாகி விடுகிறது பல நேரங்களில். தொடருங்கள். தொடருகிறோம்.//

      ஆமாம், சுட சுட பதிவு போட முடிய மாட்டேன் என்கிறது ராமலக்ஷ்மி.
      சிங்கப்பூர், மலேஷியா படங்கள் நிறைய இருக்கிறது. கோயில் போய் வந்தவை இருக்கிறது.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. நான்கூட அட என்ன இது.... இரண்டாவது பதிவும் வந்துவிட்டது..இரண்டு பதிவை மிஸ் பண்ணிவிட்டேனோ என்று நினைத்தேன்.

    ரொம்ப மாதங்கள் கழித்து வந்திருக்கு இரண்டாவது பகுதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //நான்கூட அட என்ன இது.... இரண்டாவது பதிவும் வந்துவிட்டது..இரண்டு பதிவை மிஸ் பண்ணிவிட்டேனோ என்று நினைத்தேன்.

      ரொம்ப மாதங்கள் கழித்து வந்திருக்கு இரண்டாவது பகுதி//

      ஆமாம், ஒரு வருடம் ஆகி விட்டது. இன்று அடுத்த பதிவு போட்டு விட்டேன் நெல்லை.

      நீக்கு
  18. படங்கள் மிக அழகு. அதிலும் கோபுரம் எல்லாம் எவ்வளவு நுணுக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் மிக அழகு. அதிலும் கோபுரம் எல்லாம் எவ்வளவு நுணுக்கமாக இருக்கிறது//

      ஆமாம், கோபுரங்கள் எல்லாம் கலைநயத்தோடு நுணுக்கமாய் இருக்கிறது.

      நீக்கு
  19. புத்தர் கோயிலில் இந்துக் கலாச்சாரம் நிறைய உண்டு.

    கல்விக்கு கடவுள், இறப்புக்கு என்று பல்வேறு கடவுளர்கள்.

    மிகவும் பெரிய வளாகம். மிக அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புத்தர் கோயிலில் இந்துக் கலாச்சாரம் நிறைய உண்டு.

      கல்விக்கு கடவுள், இறப்புக்கு என்று பல்வேறு கடவுளர்கள்.//

      ஆமாம்.

      //மிகவும் பெரிய வளாகம். மிக அழகான படங்கள்.//

      ஆமாம், பெரிய வளாகம் தான் இன்னும் நிறைய பதிவுகள் இருக்கிறது இந்த கோயிலுக்கு மட்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு