இந்த 77 வது குடியரசு தின அணிவகுப்பு விழா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. புது தில்லியில் கர்த்தவ்ய பாதையில் (முன்னாள் ராஜ பாதை) குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் என் பேத்தியும் கலந்து கொண்டு வந்தேமாதரம்பாடலுக்கு ஆடியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
புது தில்லியின் கர்த்தய பாதையில் (முன்னாள் ராஜபாதை)
நடைபெறும்
முன்பு என் அண்ணனின் மகளும் ஒரு வருடம் அணிவகுப்பில் கலந்து கொண்டாள் அப்போதும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஒவ்வொரு ஆண்டும் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் அலங்கார ஊர்திகளையும் , கம்பீரமான துருப்புகளின் அணிவகுப்பையும் கண்டு களிப்போம்.
இந்த முறை பேத்தியும் கலந்து கொண்டதுமட்டற்ற மகிழ்ச்சி.
.கட்டைவிரலை தூக்கி காட்டி புன் சிரிப்புடன் இருப்பவள் என் பேத்தி.
140 பரத நாட்டிய கலைஞர்களுடன் ஆடினாள்.
தன்னிடம் பயிலும் மாணவிகளுடன் ஆடினாள். பாடல் வந்தேமாதரம் காணொளியில் கடைசியில் வரும் "வந்தே வந்தே மாதரம் "என்று ஒலிக்கும் பாடல்.
13 ஆம் தேதியிலிந்து ஒத்திகை நடைபெற்று இருக்கிறது.
குளிரில் சாக்ஸ் போட்டுக் கொண்டு ஆடிஇருக்கிறார்கள். பாரத பிரதமர், குடியரசு தலைவர் வரும் முன்பே அவர்களை கர்த்தவ்ய பாதையில் அமர வைத்து விட்டார்களாம் .( இரவே ஒப்பனைகளை முடித்து கொண்டு 2.30) குளிரில் தூக்கம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து விட்ட மகிழ்ச்சி என்றாள்.
முதலில் வருகிறாள்
பேரன் கவின் காணொளியிலிருந்து எனக்கு எடுத்து அனுப்பினான்
இடது ஓரத்தில் கையை குவித்தபடி வருகிறாள்
இந்த் ஒரு பாட்டுக்கு 2,500 கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.





.jpg)
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதங்களது பேத்தியும் இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கு கொண்டது அறிந்து மகிழ்ச்சி. சிறப்பான பயிற்சியும், பயிற்சிக்குப் பிறகான கொண்டாட்டங்களும் நிச்சயம் போற்றப்படவேண்டியவை. அத்தனை ஈடுபாடும், உழைப்பும் தேவைப்படும் விஷயம் இது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//இனிய காலை வணக்கம்.
தங்களது பேத்தியும் இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கு கொண்டது அறிந்து மகிழ்ச்சி. சிறப்பான பயிற்சியும், பயிற்சிக்குப் பிறகான கொண்டாட்டங்களும் நிச்சயம் போற்றப்படவேண்டியவை. அத்தனை ஈடுபாடும், உழைப்பும் தேவைப்படும் விஷயம் இது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//
ஆமாம், நீங்கள் சொல்வது போல பயிற்சியும் , பயிற்சிக்குப் பிறகான கொண்டாட்டங்களும் நிச்சயம் போற்றப்படவேண்டியவைதான்.விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரின் உழைப்பும் ஈடுபாடும் தான் விழா சிறப்பாக நடக்க காரணம்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி வெங்கட்.
குடிய குடியரசு தின வாழ்த்துகள். உங்கள் பேத்தியும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டது ஆச்சரியமும் சந்தோஷமும் கொடுத்தது. முன்பு அண்ணன் மகளும் கலந்து கொண்டார் என்ற தகவலும் எனக்கு புதிதுதான். நீங்கள் முன்பே பதிவில் இட்டு நான் மறந்து விட்டேனோ என்னவோ!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//குடியரசு தின வாழ்த்துகள். உங்கள் பேத்தியும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டது ஆச்சரியமும் சந்தோஷமும் கொடுத்தது. முன்பு அண்ணன் மகளும் கலந்து கொண்டார் என்ற தகவலும் எனக்கு புதிதுதான். நீங்கள் முன்பே பதிவில் இட்டு நான் மறந்து விட்டேனோ என்னவோ!//
பேத்தி அவள் நடத்தும் நடனபள்ளி மாணவிகளுடன் கலந்து கொண்டதுஎங்களுக்கும் மகிழ்ச்சி.
அண்ணன் மகள் அவள் கல்லூரியில் படிக்கும் போது "தேசிய மாணவ படையில்" இருந்தாள் தேர்வு செய்யப்பட்டு புது டெல்லிக்கு போனாள்
குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டாள்.
நான் அவளை பற்றி பதிவு போட வில்லை. அப்போது நான் பதிவு எழுத ஆரம்பிக்கவில்லை.
உங்கள் பேத்தி இந்த வருடகுடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது மகிழ்ச்சி!. பேத்திக்கு வாழ்த்துகள்! உங்களுக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் மிகவும் பெருமையாக இருந்திருக்கும். என்னுடைய மூன்றாவது அக்காவின் மகன் பள்ளியில் படித்த பொழுது RD Paradeல் கலந்து கொண்டான். அதை அவனுடைய நண்பர்களில் ஒருவர் யூ டியூபில் பகிர்ந்திருக்கிறாராம், இன்று பார்த்ததாக என் அக்கா கூறினாள். எனக்கும் லிங்க் அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் பேத்தி இந்த வருடகுடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது மகிழ்ச்சி!. பேத்திக்கு வாழ்த்துகள்! உங்களுக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் மிகவும் பெருமையாக இருந்திருக்கும். //
நன்றி பானு பேத்திக்கு வாழ்த்து சொன்னதற்கு.
எங்களுக்கு பெருமை, மகிழ்ச்சி.
//என்னுடைய மூன்றாவது அக்காவின் மகன் பள்ளியில் படித்த பொழுது RD Paradeல் கலந்து கொண்டான். அதை அவனுடைய நண்பர்களில் ஒருவர் யூ டியூபில் பகிர்ந்திருக்கிறாராம், இன்று பார்த்ததாக என் அக்கா கூறினாள். எனக்கும் லிங்க் அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.//
உங்கள் அக்கா மகன் RD Paradeல் கலந்து கொண்டாது மகிழ்ச்சி
அக்கா மகனுக்கு வாழ்த்துகள்.
உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.
பீட்டிங் ரே ட்ரீட் நிகழ்வுகளை முன்பு நாங்கள் பார்த்ததுண்டு. இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. நீங்கள் இப்பொழுதும் அதை பார்த்து ரசிக்கிறீர்கள் என்பதும் வியப்பளிக்கிறது, வெட்கம் வருகிறது!!
பதிலளிநீக்கு//பீட்டிங் ரே ட்ரீட் நிகழ்வுகளை முன்பு நாங்கள் பார்த்ததுண்டு. இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. நீங்கள் இப்பொழுதும் அதை பார்த்து ரசிக்கிறீர்கள் என்பதும் வியப்பளிக்கிறது, வெட்கம் வருகிறது!!//
நீக்குஅந்த நிகழ்ச்சி பார்க்க பிடிக்கும் ஸ்ரீராம். முப்படையினரின் அணிவகுப்பு வானில் விமானபடையின் சாகஸங்கள், எல்லாம் பார்க்க பிடிக்கும்.
ஒவ்வொரு மாநில ஊர்திகள் வரும் போது தமிழ்நாடு எப்போது வரும் என்று காத்து இருந்து பார்த்து மகிழ்வோம். இந்த முறை தமிழ்நாடு என்று இந்தியில் எழுதிய வண்டி வந்தது, ஜல்லிக் கட்டு காளையை அடக்குவது போல தமிழ்நாடு என்று பேர் இல்லை.
முதலில் வரும் அந்தக் காணொளி ஆரம்பித்ததும் அது மூன்று நிமிடம் ஆறு வினாடிகள் என்று தவறாக புரிந்துகொண்டு, பார்க்க ஆரம்பித்தால் மூன்று மணி நேரம் ஆறு நிமிடங்கள் என்று பிறகுதான் புரிந்தது!!!! நான் ஒரு டியூப் லைட்!!
பதிலளிநீக்கு
//முதலில் வரும் அந்தக் காணொளி ஆரம்பித்ததும் அது மூன்று நிமிடம் ஆறு வினாடிகள் என்று தவறாக புரிந்துகொண்டு, பார்க்க ஆரம்பித்தால் மூன்று மணி நேரம் ஆறு நிமிடங்கள் என்று பிறகுதான் புரிந்தது!!!! நான் ஒரு டியூப் லைட்!!//
நீக்குஅதற்கு தான் நான் கடைசியில் பாருங்கள் என்று போட்டு இருந்தேன், நீங்கள் ஓட்டி பார்த்து இருக்கலாம் ஸ்ரீராம்.
சும்மா இருந்தாலே குளிர் தூக்கி அடிக்கும். இதில் இரவு முதல் அங்கு இருந்தால் என்ன ஆகும்? அரசு நிகழ்ச்சிகள் என்றால் ஏன் இப்படி படுத்துகிறார்கள்? என்னதான் பாதுகாப்பு காரணங்கள் இருந்தாலும் இது கலந்து கொள்பவர்களுக்கு தொந்தரவு இல்லையா? இப்படி வதை செய்யலாமா?
பதிலளிநீக்கு
//சும்மா இருந்தாலே குளிர் தூக்கி அடிக்கும். இதில் இரவு முதல் அங்கு இருந்தால் என்ன ஆகும்? //
நீக்குகுளிர் வாட்டி இருக்கிறது.
//அரசு நிகழ்ச்சிகள் என்றால் ஏன் இப்படி படுத்துகிறார்கள்? என்னதான் பாதுகாப்பு காரணங்கள் இருந்தாலும் இது கலந்து கொள்பவர்களுக்கு தொந்தரவு இல்லையா? இப்படி வதை செய்யலாமா?//
வேறு வழி இல்லை ஸ்ரீராம். பாதுகாப்பு காரணங்கள் என்று சொல்லும் போது ஒன்றும் செய்யமுடியாது.
ஆனாலும் இப்படி முன்னணியில் எல்லோரையும் லீட் செய்து கொண்டு வருவது பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. பட்ட கஷ்டங்கள் இதில் மறைந்து விடும், நமக்கும் மறந்துவிடும். உண்மையில் இது ஒரு பெருமை தான்.
பதிலளிநீக்கு//ஆனாலும் இப்படி முன்னணியில் எல்லோரையும் லீட் செய்து கொண்டு வருவது பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. பட்ட கஷ்டங்கள் இதில் மறைந்து விடும், நமக்கும் மறந்துவிடும். உண்மையில் இது ஒரு பெருமை தான்.//
நீக்குஆமாம், கொடுத்த பொறுப்பை சரிவர செய்து விட்டால் பட்ட கஷ்டங்கள் சிரமங்கள் மறைந்து விடும்தான்.
ஆமாம், உண்மையில் பெறுமைதான். எல்லோர் பாராட்டுக்களையும் பெற்று விட்டாள்.
பேத்தி வரும் இடங்களை எல்லாம் பார்த்து பார்த்து புகைப்படம் எடுத்ததும், காணொளியில் பேத்தியை முடிந்தவரை கொண்டுவர முயன்றதும் பேரன் கவின் என்று நினைக்கிறேன். சபாஷ்.
பதிலளிநீக்கு//பேத்தி வரும் இடங்களை எல்லாம் பார்த்து பார்த்து புகைப்படம் எடுத்ததும், காணொளியில் பேத்தியை முடிந்தவரை கொண்டுவர முயன்றதும் பேரன் கவின் என்று நினைக்கிறேன். சபாஷ்.//
நீக்குஆமாம், பேரன் கவின் காணொளியிலிருந்து எனக்கு எடுத்து அனுப்பினான்
என்று போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.
அவன் அனுப்பியதை உறவினர் அனைவருக்கும் அனுப்பினேன்.
கூட்டத்தில் எப்படி தேட என்று கேட்டவர்களுக்கு.
புகைப்படத்தில் உங்களையும் எழுத்தாளர் புவனா சந்திரசேகர் அவர்களையும் பார்த்தேன் குடியிருப்பவனாகத்திலும் விழா நடத்திக் கொண்டாடியது சிறப்பு
பதிலளிநீக்கு//புகைப்படத்தில் உங்களையும் எழுத்தாளர் புவனா சந்திரசேகர் அவர்களையும் பார்த்தேன் குடியிருப்பவனாகத்திலும் விழா நடத்திக் கொண்டாடியது சிறப்பு//
நீக்குஆமாம், ஆனால் இன்னும் நிறைய பேர் வந்து இருந்தால் விழா என்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். அடுத்த வருடம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅக்கா உங்க பேத்தி சூப்பர். குடியரசு தினவிழாவில் பங்கெடுத்து நடனம் ஆடியதற்கு வாழ்த்துகள் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று குடியரசு தினவிழா பார்த்தோமே கணினியில். ஆனால் பாருங்க உங்க பேத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சா பதிவும் பார்க்கலையா பார்த்திருப்பேன். இப்ப பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவளைச்சு வளைச்சு ஃபோட்டோ கூர்ந்து பார்த்து எடுத்திருக்கீங்கக்கா. சூப்பர். நம் குழந்தைகள் பங்கு கொள்கிறார்கள் என்றால் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா..
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அக்கா உங்க பேத்தி சூப்பர். குடியரசு தினவிழாவில் பங்கெடுத்து நடனம் ஆடியதற்கு வாழ்த்துகள் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று குடியரசு தினவிழா பார்த்தோமே கணினியில். ஆனால் பாருங்க உங்க பேத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சா பதிவும் பார்க்கலையா பார்த்திருப்பேன். இப்ப பார்க்கிறேன்.//
பார்த்தீர்களா ? நன்றி கீதா.
//வளைச்சு வளைச்சு ஃபோட்டோ கூர்ந்து பார்த்து எடுத்திருக்கீங்கக்கா. சூப்பர். நம் குழந்தைகள் பங்கு கொள்கிறார்கள் என்றால் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா..//
ஆமாம், நான் எடுக்கவில்லை பேரன் கவின் படம் பிடித்து அனுப்பினான்.
நமக்கு மகிழ்ச்சிதான் கீதா.
பேத்தி அழகா இருக்காங்க,
பதிலளிநீக்குதன்னிடம் பயிலும் மாணவிகளுடன் ஆடினாள். பாடல் வந்தேமாதரம் காணொளியில் கடைசியில் வரும் "வந்தே வந்தே மாதரம் "என்று ஒலிக்கும் பாடல். //
அவங்க வகுப்பு எடுப்பது தன் மாணவிகளுடன் பங்கு எடுத்திருப்பது எல்லாமே சிறப்பான விஷயம்.
//( இரவே ஒப்பனைகளை முடித்து கொண்டு 2.30) குளிரில் தூக்கம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து விட்ட மகிழ்ச்சி என்றாள்.//
ஆமாம் இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் சிறப்பாக முடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
தில்லி குளிர் இந்த முறை கொஞ்சம் கூடுதல்தான். அதில் 2.30 மணிக்கே அங்கு அமர்ந்திருந்து....ரொம்ப கிரேட். ஆமாம் சாக்ஸ் போடாமல் முடியாது...தில்லியில் இரவு நேரம் 6, 7 8 என்று இருக்கு. இதோ இப்ப பகலில் 14டிகிரி...
கீதா
பேத்தி அழகா இருக்காங்க,//
நீக்குநன்றி.
//அவங்க வகுப்பு எடுப்பது தன் மாணவிகளுடன் பங்கு எடுத்திருப்பது எல்லாமே சிறப்பான விஷயம்.//
ஆமாம், தன் மாணவிகளுடன் நிறைய நிகழ்ச்சிகள் செய்கிறாள்.
//ஆமாம் இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் சிறப்பாக முடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
தில்லி குளிர் இந்த முறை கொஞ்சம் கூடுதல்தான். அதில் 2.30 மணிக்கே அங்கு அமர்ந்திருந்து....ரொம்ப கிரேட். ஆமாம் சாக்ஸ் போடாமல் முடியாது...தில்லியில் இரவு நேரம் 6, 7 8 என்று இருக்கு. இதோ இப்ப பகலில் 14டிகிரி...//
இவர்கள் நிகழச்சிதான் நீண்ட நேரம் இடம் பெற்றது. குளிர் மட்டும் இருந்தது நல்லது சில சமயம் எதிரில் வரும் ஆள் தெரியாமல் பனி மூட்டமும் இருக்கும் அது சிரமம் .
பேரனும் அங்கு பார்த்து எடுத்து உங்களுக்கு அனுப்பியது சந்தோஷமான விஷயம்/.
பதிலளிநீக்குமுதலில் வருவதும் சிறப்பு.
சிறிய காணொளியும் பார்த்தேன் அக்கா. அவங்க குழு தெரிகிறது.
படத்தில் இடது ஓரத்தில் வருவதையும் பார்க்க முடிந்தது.
ரொம்பச் சிறப்பான விஷயம்
இதற்கு முன் உங்கள் அண்ணன் மகளும் பங்கெடுத்திருப்பதும் சிறப்பு ப்ளஸ் மகிழ்ச்சி.
கீதா
கீதா
//பேரனும் அங்கு பார்த்து எடுத்து உங்களுக்கு அனுப்பியது சந்தோஷமான விஷயம்/.
நீக்குஆமாம், உறவுகள் எல்லோரும் பார்த்தார்கள்.
//முதலில் வருவதும் சிறப்பு.//
ஆமாம், அவள்தான் வழி நடத்தி செல்கிறாள்.
//சிறிய காணொளியும் பார்த்தேன் அக்கா. அவங்க குழு தெரிகிறது.//
நன்றி கீதா.
//படத்தில் இடது ஓரத்தில் வருவதையும் பார்க்க முடிந்தது.
ரொம்பச் சிறப்பான விஷயம்
இதற்கு முன் உங்கள் அண்ணன் மகளும் பங்கெடுத்திருப்பதும் சிறப்பு
ப்ளஸ் மகிழ்ச்சி.//
ஆமாம் மகிழ்ச்சிதான். இன்று அண்ணன் மகள் பேசினாள் அவள் கல்லூரி படிக்கும் போது போனதை பற்றி பேசி கொண்டோம்.
ஓ உங்கள் வளாக நிகழ்வில் கொடியேற்றுவது புவனா அவர்களின் கணவரா...
பதிலளிநீக்குபுவனா அவங்க பேசும் போட்டோவும் பார்த்தவும் தெரிந்துவிட்டது அவங்கதான்னு.
நீங்கள் புவனா அவ்னகளுக்குப் பின்னால் நிற்பது தெரிகிறது கோமதிக்கா இளமையா இருக்கீங்க அக்கா. ஆமாம் முகம் இன்னும் இளமையுடன்!
தாமதமான குடியரசு தின வாழ்த்துகள்!
கீதா
//ஓ உங்கள் வளாக நிகழ்வில் கொடியேற்றுவது புவனா அவர்களின் கணவரா...//
நீக்குஆமாம்.
//புவனா அவங்க பேசும் போட்டோவும் பார்த்தவும் தெரிந்துவிட்டது அவங்கதான்னு.//
ஆமாம்.
//நீங்கள் புவனா அவ்னகளுக்குப் பின்னால் நிற்பது தெரிகிறது கோமதிக்கா இளமையா இருக்கீங்க அக்கா. ஆமாம் முகம் இன்னும் இளமையுடன்!//
ஆஹா! அக்காவிற்கு உச்சி குளிர்ந்து விட்டதே!
//தாமதமான குடியரசு தின வாழ்த்துகள்!//
நம் நாட்டுக்கு வாழ்த்து சொல்லி கொண்டு இருக்கலாம்.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதா.
மாதினி நாட்டின் முதன்மை குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு நடனமாடியது பெருமையும் சிறப்பும் ஆகும். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும். காணொளிகள், படங்கள் அருமை. படம் எடுத்து அனுப்பிய கவினுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் குடியிருப்பின் கொடியேற்றும் நிகழ்வின் பகிர்வும் அருமை.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//மாதினி நாட்டின் முதன்மை குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு நடனமாடியது பெருமையும் சிறப்பும் ஆகும். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும். காணொளிகள், படங்கள் அருமை. படம் எடுத்து அனுப்பிய கவினுக்கு நன்றி.//
உங்கள் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
கவினுக்கு நாம் எல்லோரும் மாதினியை பார்க்க சிரம படாமல் இருக்க எடுத்து அனுப்பி விட்டான். நாங்களும் அவனுக்கு நன்றி சொன்னோம்.
//தங்கள் குடியிருப்பின் கொடியேற்றும் நிகழ்வின் பகிர்வும் அருமை.//
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. உங்களுக்கு தாமதமான குடியரசு தின வாழ்த்துகள்.
குடியரசு தின விழாவில் உங்கள் பேத்தியின் நடனங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது (உங்கள் மகள் வயிற்று பேத்தியா? அவர்கள் அமேரிக்காவில் இருப்பதாக கூறியிருக்கிறீர்கள்.. அங்கிருந்து இங்கு வந்தார்களா?) இப்படி கேட்(ட) பது தவறா எனத் தெரியவில்லை தவறாயின் மன்னிக்கவும்.
உங்கள் பேரன் கவினும் இங்கு வந்திருந்தாரா ? அவர் எடுத்த அத்தனை காணொளிகளையும் கண்டு ரசித்தேன். விழாவில், பேத்தி நன்றாக நடனம் ஆடியுள்ளார். உங்கள் பேத்திக்கும், பேரனுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
இந்தப்பதிவுக்கு நான் வருவதற்கு தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். வீட்டில் கூடுதலாக வேலைகள் (உறவுகள் வந்ததால்) அவர்களுடன் வெளியில் முடி யாமல் சென்று வருவது, சற்று உடல்நல குறைபாடுகள் என நாட்கள் நகர்ந்து விட்டது. ஒருவரின் பதிவுக்கும் காலையிலேயே முறையாக வர இயலவில்லை. சகோதரி கீதாரெங்கன் அவர்களின் பதிவு களையே இப்போதுதான் ஒவ்வொன்றாக படித்து கருத்துக்கள் இட்டு வருகிறேன். எபிக்கு மட்டும் இயன்ற நேரத்தில் வந்து பார்வையிட்டு ஒரு அவசர கருத்துகளை தந்து விட்டு ஓடி விடுகிறேன். இப்படியாக போகிறது சென்ற வாரத்தின் ஒவ்வொரு நாட்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. உங்களுக்கு தாமதமான குடியரசு தின வாழ்த்துகள்.//
நன்றி கமலா
//குடியரசு தின விழாவில் உங்கள் பேத்தியின் நடனங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது (உங்கள் மகள் வயிற்று பேத்தியா? அவர்கள் அமேரிக்காவில் இருப்பதாக கூறியிருக்கிறீர்கள்.. அங்கிருந்து இங்கு வந்தார்களா?) இப்படி கேட்(ட) பது தவறா எனத் தெரியவில்லை தவறாயின் மன்னிக்கவும்.//
மகள் அமெரிக்காவில், பேத்தி டெல்லியில் நடனபள்ளி நடத்தி கொண்டு இருக்கிறாள்.பேரன் அமெரிக்காவில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்த்து கொண்டு இருந்த போது என் பேத்தி வரும் இடங்களை எடுத்து அனுப்பினான். கேட்பது தவறு இல்லை.
//உங்கள் பேரன் கவினும் இங்கு வந்திருந்தாரா ? அவர் எடுத்த அத்தனை காணொளிகளையும் கண்டு ரசித்தேன். விழாவில், பேத்தி நன்றாக நடனம் ஆடியுள்ளார். உங்கள் பேத்திக்கும், பேரனுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.//
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, மகிழ்ச்சி.
//இந்தப்பதிவுக்கு நான் வருவதற்கு தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். வீட்டில் கூடுதலாக வேலைகள் (உறவுகள் வந்ததால்) அவர்களுடன் வெளியில் முடி யாமல் சென்று வருவது, சற்று உடல்நல குறைபாடுகள் என நாட்கள் நகர்ந்து விட்டது. ஒருவரின் பதிவுக்கும் காலையிலேயே முறையாக வர இயலவில்லை. சகோதரி கீதாரெங்கன் அவர்களின் பதிவு களையே இப்போதுதான் ஒவ்வொன்றாக படித்து கருத்துக்கள் இட்டு வருகிறேன். எபிக்கு மட்டும் இயன்ற நேரத்தில் வந்து பார்வையிட்டு ஒரு அவசர கருத்துகளை தந்து விட்டு ஓடி விடுகிறேன். இப்படியாக போகிறது சென்ற வாரத்தின் ஒவ்வொரு நாட்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
நினைத்தேன், உடல் நலம் இல்லாமல் இருக்கும், அல்லது வேலைகள் அதிகம் இருக்கும் என்று. எப்போது வந்து கருத்து சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சிதான் கமலா.
உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
எங்கள் வீட்டுக்கும் உறவினர் வருகை இருந்தது, நானும் நேரம் கிடைக்கும் போது வந்து எபிக்கு பதில் அளித்து கொண்டு இருந்தேன்.
நேரம் கிடைக்கும் போது வந்து பதில் அளித்து வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி கமலா.
குடியரசு நிகழ்வில் உங்கள் பேத்தி கலந்து கொண்டது சிறப்பு.
பதிலளிநீக்குபெரும் உழைப்பு, இரவு முழுவதும் கண்முழித்திருக்கும் டெடிகேஷன், கடமையைச் செய்துமுடித்ததில் பெருமை மகிழ்ச்சி. கலந்துகட்டிய உணர்வு
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//குடியரசு நிகழ்வில் உங்கள் பேத்தி கலந்து கொண்டது சிறப்பு.
பெரும் உழைப்பு, இரவு முழுவதும் கண்முழித்திருக்கும் டெடிகேஷன், கடமையைச் செய்துமுடித்ததில் பெருமை மகிழ்ச்சி. கலந்துகட்டிய உணர்வு//
ஆமாம், 13 ஆம் தேதியிலிருந்து நடக்க போகும் இடத்தில் ஒத்திக்கை, அதற்கு முன்பே நடனபள்ளியில் பயிற்சி என்று ஒரு மாதமாக பிஸியாக இருந்தாள்.
நிறைவு பெற்றதும் மனதுக்கு நிம்மதி, மகிழ்ச்சி நீங்கள் சொன்னது போல நல்ல படியாக முடித்த பெருமிதம் எல்லாம் அவளுக்கு கிடைத்தது.
நடனப் பள்ளி நடத்தும் அளவுக்கு திறமையுள்ள பேத்திக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமென்மேலும் சிறப்புகள் வந்து சேரட்டும்
உங்களுக்கும் மகளுக்கும் அனைவருக்கும் பெருமையாக இருந்திருக்கும் தருணம்
//நடனப் பள்ளி நடத்தும் அளவுக்கு திறமையுள்ள பேத்திக்கு வாழ்த்துகள்
நீக்குமென்மேலும் சிறப்புகள் வந்து சேரட்டும்//
சிறு வயதிலிருந்து கற்றுக் கொண்ட குருவின் மறைவுக்கு பின் அவர்கள் நடத்தி வந்த நடன பள்ளியை இவள் ஏற்று திறம்பட நடத்தி வருகிறாள்.
உங்கள் ஆசிக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
//உங்களுக்கும் மகளுக்கும் அனைவருக்கும் பெருமையாக இருந்திருக்கும் தருணம்//
ஆமாம், குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்த தருணம் .
வளாகத்தில் நடைபெற்ற குடியரசு விழா படங்களும் நன்று
பதிலளிநீக்கு//வளாகத்தில் நடைபெற்ற குடியரசு விழா படங்களும் நன்று//
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.