சனி, 17 ஜனவரி, 2026

பொங்கல் நினைவுகள்


இந்த வருடம் மகன்வீட்டு பொங்கல் 


பொங்கல் கொண்டாட்டங்கள் இன்றுடன் நிறைவு அடைய போகிறது. பொங்கல் நினைவுகள் மனதில் மலர்ந்து  கொண்டே இருக்கிறது. 

 



திருவள்ளுவர் தினத்தில் நினைவுகள் பின்னோக்கி போனது. இந்த திருக்குறள் புத்தகம் என் கணவர் எனக்கு பரிசளித்தது. வீட்டில் இருந்த பழைய திருக்குறள் புத்தகம் கிழிய ஆரம்பித்து விட்டது என்று புதிதாக எனக்கு வாங்கி பரிசளித்தார்கள். என் பிறந்த நாள் அன்று கிடைத்த பரிசு.



அருள்நிதி என்று  கோமதி ஏன் போட்டு இருக்கிறார்கள் என்றால் . நான் ஆழியாரில் உலகசமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து உடற்பயிற்சி, தியானம்,கற்பிக்கும் ஆசிரியராக  பயிற்சி முடித்ததும் கொடுக்கப்படும் பட்டம் "அருள்நிதி" என்பது. அதை குறிப்பிட்டு எழுதி கொடுத்தது எனக்கு மகிழ்வை அளித்தது.


பயன் தரும் நூல்தான்

 நான் பதிவுகளில் திருக்குறள், பாரதியார் கவிதைகளை  பயன்படுத்துவேன் முன்பு அடிக்கடி அதனால் பாரதியார் கவிதையும் பரிசளித்தார்கள்.





மாட்டுப்பொங்கல் அன்று வழிபாடு.


முன்பு போட்ட கோலம் இந்த கோலம் 

என் கணவரிடம்  மாட்டுப்பொங்கலக்கு மாடு கோலம் போட வரைந்து கொடுங்கள் என்றேன் அதை பார்த்து  வரைந்து விடுவேன் என்றேன்.அவர்கள் எனக்கு எளிதாக வரைய புள்ளிகள் வைத்து கோலம் தயார் செய்து தந்தார்கள் மாடு வரைந்த பின் அதிகபடியானபுள்ளிகளை அழித்து விட சொல்லி கொடுத்தார்கள் அதன் படி கோலம் போட்டு அக்கம்பக்கத்தினர் பாராட்டைப் பெற்றேன்.





பொங்கலுக்கு  நோட்டில் வரைந்து கொடுத்த பொங்கல் கோலம்  அது போல கீழே கோலபொடியில் போட்டு விடுவேன். ஒவ்வொரு வருடமும்  வேறு வேறு பொங்கல் கோலங்கள் போட்டு தருவார்கள்.  பொங்கல் வாழ்த்து நான் போடும் பொங்கல் கோலத்தை வைத்து வாழ்த்து தயார் செய்து விடுவார்கள் அடுத்த ஆண்டுக்கு.


எளிதாக போட சிக்கு கோலம் போட்டு கொடுத்தார்கள் நான்  தரையில் போட்டேன் அவர்கள் வரைந்தது போல நேர்த்தியாக வரவில்லை அதனால் அதை படம் எடுக்கவில்லை.


பிலிம் ரோல் போடும் காமிரா அப்போது  , கோலங்களை  ஆல்பத்தில் தொகுத்து பரிசளித்தார்கள் .


 ஆங்கில புத்தாண்டுக்கு ஏதாவது கருத்தை சொல்லும்  படம் வரைந்து தருவார்கள் அதை நான் கோலமாக தரையில் போட்டு விடுவேன்.


மாடு வருடா  வருடம் வண்ணம்மாறும்


காணும் பொங்கலுக்கு  வரைந்த கோலம் இதுவும் என் கணவர் தயார் செய்து தந்த கோலம் தான் அதை பார்த்து நான் வரைந்த கோலம்.
இப்போது இன்ஸ்டா கிராம், யூடியூப் எல்லாம் கோலம் கற்று கொடுக்கிறார்கள் காணும் பொங்கலுக்கு பெண்களை வித விதமாக  அழகாய் வரைய கற்று தருகிறார்கள்.  அப்போது அந்த வசதிகள் இல்லாத போது என் கணவர் தான் வரைய கற்று கொடுத்தார்கள்.



மாயவரத்தில் பெரிய திண்ணை இரண்டு கோலம் போடலாம்.  பொங்கலுக்கு போட்ட கோலங்கள் . மாடி படிகள் எல்லாம் கோலம் போடுவேன் பொங்கலுக்கு  . சுண்ணம்பு பார்டர் போட்டு தருவார்கள்,  படிகளில் சுண்ணம்பு, காவி பட்டை போட்டு தருவார்கள்,  என் கணவரும், மகனும்.   



உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்  :-
உழவர் திருநாளுக்கு போட்ட பதிவு.

இந்த  பதிவில் நாற்று நடும் வயல்கள் , நாற்று நட்ட வயல்கள், உழுது கொண்டு இருக்கும் வயல்கள் என்று கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி தரும் பசுமை காட்சிகளை பகிர்ந்தேன் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
உழவர் தினத்தில் காணும் பொங்கல் மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வார்கள் சிலர். நாங்கள்குலதெய்வ வழிபாட்டுக்கு போன போது அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில் வரும்.





 
பொங்கல் விடுமுறையில் எந்த கோயில் மற்றும் சுற்றுலா தலங்கள் சென்றீர்கள் எல்லோரும் . 



மாயவரத்தில் இருந்த போது காசி அம்மா காசி அம்மா, காசி அப்பா,காசி அப்பா என்று எங்களை சுற்றிவரும் அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் கிளம்பி விடுவோம் காணும் பொங்கல் அன்று சிறிய சுற்றுலா.



இனிமையான காலங்கள் , இனிமையான நினைவுகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக