குடியரசு தின விழாவில் பேத்தியின் நடனம் எங்கள் வளாக குடியரசு தின விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியரசு தின விழாவில் பேத்தியின் நடனம் எங்கள் வளாக குடியரசு தின விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜனவரி, 2026

குடியரசு தின விழா வாழ்த்துகள்.





இந்த 77 வது  குடியரசு தின  அணிவகுப்பு விழா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும்  மகிழ்ச்சியை தந்தது. புது தில்லியில்  கர்த்தவ்ய பாதையில் (முன்னாள் ராஜ பாதை)   குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் அணிவகுப்பு   விழாவில் என் பேத்தியும் கலந்து கொண்டு வந்தேமாதரம்பாடலுக்கு ஆடியது  மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

புது தில்லியின் கர்த்தய பாதையில் (முன்னாள் ராஜபாதை)

  நடைபெறும்

முன்பு என் அண்ணனின் மகளும் ஒரு வருடம் அணிவகுப்பில் கலந்து கொண்டாள் அப்போதும்  எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஒவ்வொரு ஆண்டும்  வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் அலங்கார ஊர்திகளையும் , கம்பீரமான துருப்புகளின் அணிவகுப்பையும் கண்டு களிப்போம். 

இந்த முறை பேத்தியும் கலந்து கொண்டதுமட்டற்ற மகிழ்ச்சி.