இந்த வருடம் மகன்வீட்டு பொங்கல்
பொங்கல் கொண்டாட்டங்கள் இன்றுடன் நிறைவு அடைய போகிறது. பொங்கல் நினைவுகள் மனதில் மலர்ந்து கொண்டே இருக்கிறது.
திருவள்ளுவர் தினத்தில் நினைவுகள் பின்னோக்கி போனது. இந்த திருக்குறள் புத்தகம் என் கணவர் எனக்கு பரிசளித்தது. வீட்டில் இருந்த பழைய திருக்குறள் புத்தகம் கிழிய ஆரம்பித்து விட்டது என்று புதிதாக எனக்கு வாங்கி பரிசளித்தார்கள். என் பிறந்த நாள் அன்று கிடைத்த பரிசு.
அருள்நிதி கோமதி என்று ஏன் போட்டு இருக்கிறார்கள் என்றால் . நான் ஆழியாரில் உலகசமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து உடற்பயிற்சி, தியானம்,கற்பிக்கும் ஆசிரியராக பயிற்சி முடித்ததும் கொடுக்கப்படும் பட்டம் "அருள்நிதி" என்பது. அதை குறிப்பிட்டு எழுதி கொடுத்தது எனக்கு மகிழ்வை அளித்தது.
பயன் தரும் நூல்தான்
நான் பதிவுகளில் திருக்குறள், பாரதியார் கவிதைகளை பயன்படுத்துவேன் முன்பு அடிக்கடி அதனால் பாரதியார் கவிதையும் பரிசளித்தார்கள்.
முன்பு போட்ட கோலம் இந்த கோலம்
என் கணவரிடம் மாட்டுப்பொங்கலக்கு மாடு கோலம் போட வரைந்து கொடுங்கள் என்றேன் அதை பார்த்து வரைந்து விடுவேன் என்றேன்.அவர்கள் எனக்கு எளிதாக வரைய புள்ளிகள் வைத்து கோலம் தயார் செய்து தந்தார்கள் மாடு வரைந்த பின் அதிகபடியானபுள்ளிகளை அழித்து விட சொல்லி கொடுத்தார்கள் அதன் படி கோலம் போட்டு அக்கம்பக்கத்தினர் பாராட்டைப் பெற்றேன்.
பொங்கலுக்கு நோட்டில் வரைந்து கொடுத்த பொங்கல் கோலம் அது போல கீழே கோலபொடியில் போட்டு விடுவேன். ஒவ்வொரு வருடமும் வேறு வேறு பொங்கல் கோலங்கள் போட்டு தருவார்கள். பொங்கல் வாழ்த்து நான் போடும் பொங்கல் கோலத்தை வைத்து வாழ்த்து தயார் செய்து விடுவார்கள் அடுத்த ஆண்டுக்கு.
எளிதாக போட சிக்கு கோலம் போட்டு கொடுத்தார்கள் நான் தரையில் போட்டேன் அவர்கள் வரைந்தது போல நேர்த்தியாக வரவில்லை அதனால் அதை படம் எடுக்கவில்லை.
பிலிம் ரோல் போடும் காமிரா அப்போது , கோலங்களை ஆல்பத்தில் தொகுத்து பரிசளித்தார்கள் .
ஆங்கில புத்தாண்டுக்கு ஏதாவது கருத்தை சொல்லும் படம் வரைந்து தருவார்கள் அதை நான் கோலமாக தரையில் போட்டு விடுவேன்.
காணும் பொங்கலுக்கு வரைந்த கோலம் இதுவும் என் கணவர் தயார் செய்து தந்த கோலம் தான் அதை பார்த்து நான் வரைந்த கோலம்.
மாடு வருடா வருடம் வண்ணம்மாறும்
காணும் பொங்கலுக்கு வரைந்த கோலம் இதுவும் என் கணவர் தயார் செய்து தந்த கோலம் தான் அதை பார்த்து நான் வரைந்த கோலம்.
இப்போது இன்ஸ்டா கிராம், யூடியூப் எல்லாம் கோலம் கற்று கொடுக்கிறார்கள் காணும் பொங்கலுக்கு பெண்களை வித விதமாக அழகாய் வரைய கற்று தருகிறார்கள். அப்போது அந்த வசதிகள் இல்லாத போது என் கணவர் தான் வரைய கற்று கொடுத்தார்கள்.
மாயவரத்தில் பெரிய திண்ணை இரண்டு கோலம் போடலாம். பொங்கலுக்கு போட்ட கோலங்கள் . மாடி படிகள் எல்லாம் கோலம் போடுவேன் பொங்கலுக்கு . சுண்ணம்பு பார்டர் போட்டு தருவார்கள், படிகளில் சுண்ணம்பு, காவி பட்டை போட்டு தருவார்கள், என் கணவரும், மகனும்.
மாயவரத்தில் பெரிய திண்ணை இரண்டு கோலம் போடலாம். பொங்கலுக்கு போட்ட கோலங்கள் . மாடி படிகள் எல்லாம் கோலம் போடுவேன் பொங்கலுக்கு . சுண்ணம்பு பார்டர் போட்டு தருவார்கள், படிகளில் சுண்ணம்பு, காவி பட்டை போட்டு தருவார்கள், என் கணவரும், மகனும்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் :-
உழவர் திருநாளுக்கு போட்ட பதிவு.
இந்த பதிவில் நாற்று நடும் வயல்கள் , நாற்று நட்ட வயல்கள், உழுது கொண்டு இருக்கும் வயல்கள் என்று கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி தரும் பசுமை காட்சிகளை பகிர்ந்தேன் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
உழவர் தினத்தில் காணும் பொங்கல் மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வார்கள் சிலர். நாங்கள்குலதெய்வ வழிபாட்டுக்கு போன போது அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில் வரும்.
மாயவரத்தில் இருந்த போது காசி அம்மா காசி அம்மா, காசி அப்பா,காசி அப்பா என்று எங்களை சுற்றிவரும் அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் கிளம்பி விடுவோம் காணும் பொங்கல் அன்று சிறிய சுற்றுலா.
இனிமையான காலங்கள் , இனிமையான நினைவுகள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------


.jpg)
.jpg)










இனிமையான நினைவுகள் என்றென்றும் தொடரட்டும்.
பதிலளிநீக்குபொங்கல் கொண்டாட்டங்கள் சமயத்தில் பழைய நினைவுகள் இங்கே பகிர்ந்து கொள்வது உங்களுடன் எங்களையும் அந்த நாட்களுக்கு அழைத்துச் செல்லும் விதமாக இருந்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தொடரட்டும் தங்கள் பதிவுகளும் நினைவுகளும்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//இனிமையான நினைவுகள் என்றென்றும் தொடரட்டும்.
பொங்கல் கொண்டாட்டங்கள் சமயத்தில் பழைய நினைவுகள் இங்கே பகிர்ந்து கொள்வது உங்களுடன் எங்களையும் அந்த நாட்களுக்கு அழைத்துச் செல்லும் விதமாக இருந்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தொடரட்டும் தங்கள் பதிவுகளும் நினைவுகளும்.//
உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்
மலரும் நினைவுகள் என்றென்றும் மகிழ்வூட்டும். கோலங்கள் படங்கள் அழகாக உள்ளன.
பதிலளிநீக்குபரிசுகள் எதுவானாலும் அதை கொடுப்பவர் நம்மை நேசிப்பவர் என்றால் அப்பரிசுக்கு தனி மதிப்பு உண்டு. அவ்வகையில் திருக்குறள், பாரதி கவிதைகள் புத்தகங்கள் விலை மதிப்பற்றவை.
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//மலரும் நினைவுகள் என்றென்றும் மகிழ்வூட்டும். கோலங்கள் படங்கள் அழகாக உள்ளன.//
நன்றி
//பரிசுகள் எதுவானாலும் அதை கொடுப்பவர் நம்மை நேசிப்பவர் என்றால் அப்பரிசுக்கு தனி மதிப்பு உண்டு. அவ்வகையில் திருக்குறள், பாரதி கவிதைகள் புத்தகங்கள் விலை மதிப்பற்றவை.//
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. நம்மை நேசிப்பவர் தரும் பரிசு விலை மதிப்பற்றவைதான் சார்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைக் (ஆனால், தாமதமாக) கூறிக் கொள்கிறேன்.
இன்றைய பதிவில் உங்கள் இனிமையான நினைவுகளும், உங்கள் கணவர் வரைந்து தந்த அழகான கோலங்களும், அவற்றை நீங்கள் எளிதாக கற்றுக் கொண்டு போட்டு மகிழ்ந்த காலங்களுமாய் இருந்ததை கண்டு நானும் அதையெல்லாம் படித்து மிகவும் மகிழ்ந்து ரசித்தேன்.
உங்கள் மகள் வீட்டு பொங்கல் படங்களும், உங்கள் வீட்டு மாட்டுப் பொங்கல் படங்களையும் கண்டு மகிழ்ந்தேன். நல்ல அலங்காரங்கள்.சிறப்பாக உள்ளது.
மாட்டுப் பொங்கலுக்கு நீங்கள் முன்பு போட்ட கோலம் மிக அழகு. புள்ளி வைத்த கோலங்கள், சிக்கு கோலங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.உங்கள் கணவர் உங்களுக்கு தந்த பரிசுகளைப் பார்த்து நானும் மகிழ்வடைந்தேன். அன்பான உங்கள் கணவரின் அரவணைப்பு உங்களுக்கு அப்போது எப்படியெல்லாப் உதவியிருக்கிறது. ஆதசர்ண தம்பதிகளாக வாழ்ந்த உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
இனிமையான நினைவுகள் எப்போதுமே நமக்கு பொக்கிஷங்கள்தான் அல்லவா.? அந்த வகையில் நீங்கள் பகிர்ந்த பொக்கிஷங்களை நானும் படித்து மகிழ்ந்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் , வாழ்க வளமுடன்
நீக்குஇதற்கு முன் போட்ட "பொங்கல் வாழ்த்து" பதிவுக்கு நீங்கள் வரவில்லை என்றவுடன் பொங்கல் விடுமுறைக்கு குழந்தைகள் (மகன் குடும்பம்) வந்து இருக்கும் அதனால் நேரம் சரியாக இருந்து இருக்கும் என்று நினைத்தேன்.
//இன்றைய பதிவில் உங்கள் இனிமையான நினைவுகளும், உங்கள் கணவர் வரைந்து தந்த அழகான கோலங்களும், அவற்றை நீங்கள் எளிதாக கற்றுக் கொண்டு போட்டு மகிழ்ந்த காலங்களுமாய் இருந்ததை கண்டு நானும் அதையெல்லாம் படித்து மிகவும் மகிழ்ந்து ரசித்தேன்.//
சிறு வயதிலிருந்தே அம்மா கோலம் சொல்லி கொடுத்தால் அதை இரவே போட்டுப்பார்த்து விடுவேன், காலையில் வாசலில் போட்டு விடுவேன்.
அது போலவே சார் வரைந்து கொடுத்த கோலங்களை முதல் நாள் வரைந்து பழகி விடுவேன், மறுநாள் போட்டு விடுவேன். முதல் நாள் இரவே
வண்ணங்கள் கூட கேட்டுக் கொள்வேன்" இந்த கலர் கொடுக்கவா நன்றாக இருக்குமா" என்று காலை எழுந்தவுடன் வந்து கோலத்தை பார்ப்பார்கள்.
வண்ணபொடிகளை வேறு வேறு வண்ணங்கள் சேர்த்தால் என்ன வண்ணம் கிடைக்கும் என்பதை எல்லாம் சொல்லி தந்தார்கள்.
//உங்கள் மகன் வீட்டு பொங்கல் படங்களும், உங்கள் வீட்டு மாட்டுப் பொங்கல் படங்களையும் கண்டு மகிழ்ந்தேன். நல்ல அலங்காரங்கள்.சிறப்பாக உள்ளது.//
நன்றி.
//மாட்டுப் பொங்கலுக்கு நீங்கள் முன்பு போட்ட கோலம் மிக அழகு. புள்ளி வைத்த கோலங்கள், சிக்கு கோலங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.உங்கள் கணவர் உங்களுக்கு தந்த பரிசுகளைப் பார்த்து நானும் மகிழ்வடைந்தேன். அன்பான உங்கள் கணவரின் அரவணைப்பு உங்களுக்கு அப்போது எப்படியெல்லாப் உதவியிருக்கிறது. ஆதசர்ண தம்பதிகளாக வாழ்ந்த உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.//
நினைவுகளை ரசித்து எங்களுக்கு வணக்கங்கள் சொன்னதற்கு நன்றி.
//இனிமையான நினைவுகள் எப்போதுமே நமக்கு பொக்கிஷங்கள்தான் அல்லவா.? அந்த வகையில் நீங்கள் பகிர்ந்த பொக்கிஷங்களை நானும் படித்து மகிழ்ந்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//
நீங்கள் சொன்னது போல இனிமையான நினைவுகள் பொக்கிஷங்கள் தான். படித்து மகிழ்ந்து விரிவானகருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
மகன் வீட்டு பொங்கல் பானை பிரசன்டேஷன் அருமை. பாரதி படம். விபூதி அணிந்த பானைகள்.. அளவாய், அழகாய் செய்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//மகன் வீட்டு பொங்கல் பானை பிரசன்டேஷன் அருமை.//
நன்றி ஸ்ரீராம்.
// பாரதி படம். விபூதி அணிந்த பானைகள்.. அளவாய், அழகாய் செய்திருக்கிறார்கள்.//
மகன் வீட்டு பொங்கல் படத்தில் இருப்பது சூரியன் ஸ்ரீராம், கீழே இருக்கும் பாரதி படத்தை சொன்னீர்களா?
மருமகள் நேர்த்தியாக அழகாய் செய்வாள்.
உங்கள் அருள்நிதி பட்டம் பற்றி இப்போதே கேள்விப்படுகிறேன். அழகான கையெழுத்தில் ஸார் அன்பைத் தூவி இருக்கிறார்.
பதிலளிநீக்கு//உங்கள் அருள்நிதி பட்டம் பற்றி இப்போதே கேள்விப்படுகிறேன். அழகான கையெழுத்தில் ஸார் அன்பைத் தூவி இருக்கிறார்.//
நீக்குநன்றி.
வலைச்சர அறிமுகத்தில் சொல்லி இருந்தேன் என்று நினைக்கிறேன். கயிலை போய் வந்த பின் "கயிலைமணி" பட்டம் கொடுத்தார்கள் அதை குறிப்பிடுவார்கள் சில நேரங்களில்.
சாரின் கையெழுத்து நன்றாக இருக்கும்.
பாரதியார் கவிதைகள் புத்தகப் பரிசும் அருமை. உங்கள் வீட்டு மாட்டுப்பொங்கல் நிவேதனைப் படம் அருமை. ஒரு காலைத் தூக்கிக் கொண்டு நிற்கும் மாட்டின் படம்.. படமா, புள்ளி வைத்த கோலமா? நன்றாக இருக்கிறது என்று டைப் செய்து ஸ்க்ரால் செய்தால் கீழேயே விளக்கம். ஸார் தயார் செய்து கொடுத்திருந்திருக்கிறார்.. அருமை, அருமை. என்னென்ன திறமைகள் வைத்திருந்திருக்கிறார்...
பதிலளிநீக்கு//பாரதியார் கவிதைகள் புத்தகப் பரிசும் அருமை. உங்கள் வீட்டு மாட்டுப்பொங்கல் நிவேதனைப் படம் அருமை. //
நீக்குநன்றி.
//ஒரு காலைத் தூக்கிக் கொண்டு நிற்கும் மாட்டின் படம்.. படமா, புள்ளி வைத்த கோலமா? நன்றாக இருக்கிறது என்று டைப் செய்து ஸ்க்ரால் செய்தால் கீழேயே விளக்கம். ஸார் தயார் செய்து கொடுத்திருந்திருக்கிறார்.. அருமை, அருமை. என்னென்ன திறமைகள் வைத்திருந்திருக்கிறார்...//
கோலத்தையும், சாரின் திறமைகளை பாராட்டியதற்கும் நன்றி.
சிக்கு கோலம் அவர் போட்டுக் கொடுத்ததா? நம்ப முடியாத அளவு நேர்த்தி. எனக்கு சாதாரணமாக கோலம் போடும் பெண்கள் கையிலிருந்து நேர்த்தியாக விழும் இழைகளே பிரமிப்பைத்தரும். நெளியாமல், தேவையான அளவில், கோணத்தில் எப்படி முடிகிறது என்று பார்ப்பேன். அந்தக் கைகளுக்கு இன்னும் என்னென்ன பயிற்சிகள் கொடுத்தால் எவ்வளவு சிறந்த ஓவியர்களாக வருவார்கள் என்றும் தோன்றும்.
பதிலளிநீக்கு//சிக்கு கோலம் அவர் போட்டுக் கொடுத்ததா? நம்ப முடியாத அளவு நேர்த்தி.//
நீக்குஆமாம். அத்தையும்(சாரின் அம்மா) சிக்கு கோலம் மிக அருமையாக போடுவார்கள். அது போல சாரும்.
அழகாய் கோலம் போடும் பெண்களை கண்டால் நானும் நினைப்பேன். அவர்களை ஊக்கம் கொடுத்து பாராட்டினால்நீங்கள் சொல்வது போல சிறந்த ஓவியர்களாக வருவார்கள்தான்.
எனக்கு சாதாரணமாக கோலம் போடும் பெண்கள் கையிலிருந்து நேர்த்தியாக விழும் இழைகளே பிரமிப்பைத்தரும். நெளியாமல், தேவையான அளவில், கோணத்தில் எப்படி முடிகிறது என்று பார்ப்பேன். அந்தக் கைகளுக்கு இன்னும் என்னென்ன பயிற்சிகள் கொடுத்தால் எவ்வளவு சிறந்த ஓவியர்களாக வருவார்கள் என்றும் தோன்றும்.
நாங்கள் காணும் பொங்கல் அன்று வெளியே எங்கும் செல்வதில்லை. எனக்கு கூட்டம் என்றால் அலர்ஜி. எனவே குழந்தைகளை நான் அழைத்துச் சென்றதில்லை. பாஸுக்கு அதில் வருத்தம் இருக்கலாம். வெளிப்படையாக சொன்னதில்லை. மகன்கள் விவரம் தெரிந்த பிறகு நண்பர்களுடன் வெளியே சுற்றி விட்டு வருவார்கள்.
பதிலளிநீக்கு//நாங்கள் காணும் பொங்கல் அன்று வெளியே எங்கும் செல்வதில்லை. எனக்கு கூட்டம் என்றால் அலர்ஜி. எனவே குழந்தைகளை நான் அழைத்துச் சென்றதில்லை. பாஸுக்கு அதில் வருத்தம் இருக்கலாம். வெளிப்படையாக சொன்னதில்லை. மகன்கள் விவரம் தெரிந்த பிறகு நண்பர்களுடன் வெளியே சுற்றி விட்டு வருவார்கள்//
நீக்குஅக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் பிச்சாவரம், தரங்கம்பாடி, வேலங்கண்ணி, பூம்புகார் கடற்கரை, கங்கை கொண்ட சோழபுரம் எல்லாம் போவோம். தஞ்சை கோயிலுக்கும் போய் இருக்கிறோம்.
கூட்டம் இல்லாமல் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு போன உண்வை உண்டு மகிழ்ந்து வருவோம்.
இன்றும் அவர்கள் என்னுடன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் போனில்.
புகைப்படங்கள் இனிமை. உங்கள் மனக் குளத்தில் நேற்று ஏகப்பட்ட மலர்கள் மலர்ந்திருக்கும். நினைவுக்குமிழ்கள் கொப்பளித்துக் கொண்டே இருந்திருக்கும்.
பதிலளிநீக்கு//புகைப்படங்கள் இனிமை. உங்கள் மனக் குளத்தில் நேற்று ஏகப்பட்ட மலர்கள் மலர்ந்திருக்கும். நினைவுக்குமிழ்கள் கொப்பளித்துக் கொண்டே இருந்திருக்கும். //
நீக்குஅருமையாக சொன்னீர்கள் மனத்தடாகத்தில் மலர்ந்த மலர்கள் இனிமையான நறுமணம் வீசி சென்றது உண்மை.
உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.
அக்கா உங்கள் மகன் வீட்டுப் பொங்கல் அட !
பதிலளிநீக்குவணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அக்கா உங்கள் மகன் வீட்டுப் பொங்கல் அட !//
நன்றி கீதா
பாதியிலேயே கருத்தை வெளியிட்டுவிட்டது அக்கா. கர்சர் ஜம்ப் ஆகி
பதிலளிநீக்குஅட! பாரதியின் படம் இல்லையா அது? பொங்கல் படங்கள் பானைகள் எல்லாம் திருநீறு பூசிக்கொண்டு சூப்பர்
கீதா
//பாதியிலேயே கருத்தை வெளியிட்டுவிட்டது அக்கா. கர்சர் ஜம்ப் ஆகி
நீக்குஅட! பாரதியின் படம் இல்லையா அது? பொங்கல் படங்கள் பானைகள் எல்லாம் திருநீறு பூசிக்கொண்டு சூப்பர்//
மகன் வரைந்த சூரியன் படம் ஒவ்வொரு பொங்கலுக்கும் வைப்பான்.
பாரதி படம் போலவா இருக்கிறது?
பொங்கல் பானைகளை ரசித்தமைக்கு நன்றி.
ஆஹா! மாமாவின் கையெழுத்துடன் பிறந்த நாள் பரிசுப் புத்தகம் திருக்குறள் புத்தகம் பொக்கிஷம் இல்லையாக்கா. ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
//ஆஹா! மாமாவின் கையெழுத்துடன் பிறந்த நாள் பரிசுப் புத்தகம் திருக்குறள் புத்தகம் பொக்கிஷம் இல்லையாக்கா. ரசித்தேன்//
நீக்குஆமாம், கீதா பொக்கிஷம் தான்.
அருள்நிதின்னு ஏன் போட்டிருக்காங்கன்னு கேட்க வந்தேன் ஆனால் அடுத்த வரி பார்த்துவிட்டேன்
பதிலளிநீக்குநான் ஆழியாரில் உலகசமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து உடற்பயிற்சி, தியானம்,கற்பிக்கும் ஆசிரியராக பயிற்சி முடித்ததும் கொடுக்கப்படும் பட்டம் "அருள்நிதி" என்பது. அதை குறிப்பிட்டு எழுதி கொடுத்தது எனக்கு மகிழ்வை அளித்தது.//
அக்கா நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!!!! வாவ்! சிறப்பான விஷயம்
பாரதி புத்தகமும் அருமை. மாமா அறுபுதமான மாமா! நம்மை நேசிப்பவர்கள் தரும் எதுவுமே அது சிறிதாக இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மாமா உங்களுக்கு நல்ல நல்ல புத்தகங்கள் அதுவும் நீங்கள் பதிவில் பயன்படுத்துவீயங்கன்னு தந்திருப்பதும் சிறப்பு
கீதா
//அருள்நிதின்னு ஏன் போட்டிருக்காங்கன்னு கேட்க வந்தேன் ஆனால் அடுத்த வரி பார்த்துவிட்டேன்
நீக்குஅக்கா நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!!!! வாவ்! சிறப்பான விஷயம்
பாரதி புத்தகமும் அருமை. மாமா அறுபுதமான மாமா! நம்மை நேசிப்பவர்கள் தரும் எதுவுமே அது சிறிதாக இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மாமா உங்களுக்கு நல்ல நல்ல புத்தகங்கள் அதுவும் நீங்கள் பதிவில் பயன்படுத்துவீயங்கன்னு தந்திருப்பதும் சிறப்பு//
பாரதியார் கவிதைகளும் பழசு ஆகி விட்டது ஏடு ஏடாய் வந்து கொண்டு இருந்தது அதனால் புது புத்தகம். திருக்குறள் புத்தகம் எங்களுக்கு கல்யாண பரிசாக ஒரு வாத்தியார் கொடுத்தார். அதுவும் பழசாக கிழிய ஆரம்பித்துவிட்டது, அதனால் அதுவும் புதிதாக வாங்கி பரிசளித்தார்கள்.
அக்கா உங்கள் குடும்பத்த்தில் எல்லோருமே நன்றாக வரைவீங்க இல்லையா அதான் பேரன்கள் பேத்தி வரை கலைகளும் ஆர்வமும் வந்திருக்கு. மாடு ரொம்ப அழகா வரைஞ்சிருக்கீங்கக்கா. பார்த்து ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
//அக்கா உங்கள் குடும்பத்த்தில் எல்லோருமே நன்றாக வரைவீங்க இல்லையா அதான் பேரன்கள் பேத்தி வரை கலைகளும் ஆர்வமும் வந்திருக்கு. மாடு ரொம்ப அழகா வரைஞ்சிருக்கீங்கக்கா. பார்த்து ரசித்தேன்//
நீக்குஅனைத்தையும் ரசித்து பாராட்டியதற்கு நன்றி கீதா.
மாட்டிற்கும் புள்ளி வைத்து எளிமையாக ஆஹா மாமாவின் திறமைகள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கின்றது.
பதிலளிநீக்குஅந்தச் சிக்குக் கோலம் முன்ன போட்டிருக்கிறேன் கோமதிக்கா அது ஆகிவிட்டது ஆண்டுகள்
கீதா
புத்தாண்டுக் கோலம் பிரமாதம்
பதிலளிநீக்குஅக்கா, இன்ஸ்டாவில் எல்லாம் கற்றுக் கொடுப்பது அது இக்காலம். எக்காலாமானாலும்... மாமா கற்றுக் கொடுப்பது எவ்வளவு சிறந்தது இல்லையா...ந்மக்கு வீட்டிலேயே கலைஞர் இருக்க...!!!!
நீங்கள் கோலம் போடும் படத்தை ரசித்தேன் கோமதிக்கா. ரொம்ப்அ மனதிற்கு இனிய நினைவுகள்!
கீதா
//புத்தாண்டுக் கோலம் பிரமாதம்//
நீக்குநன்றி கீதா
//அக்கா, இன்ஸ்டாவில் எல்லாம் கற்றுக் கொடுப்பது அது இக்காலம். எக்காலாமானாலும்... மாமா கற்றுக் கொடுப்பது எவ்வளவு சிறந்தது இல்லையா...ந்மக்கு வீட்டிலேயே கலைஞர் இருக்க...!!!!//
ஆமாம், மாமாவிடம் நிறைய கற்றுக் கொண்டு இருக்கலாம் கீதா வாய்ப்பை தவற விட்டவள்.
//நீங்கள் கோலம் போடும் படத்தை ரசித்தேன் கோமதிக்கா. ரொம்ப்அ மனதிற்கு இனிய நினைவுகள்!//
ஆமாம், இனிய நினைவுகள்தான்.
எங்கும் போகவில்லைக்கா.
பதிலளிநீக்குகுழந்தைகளுடன் நீங்கள் இருவரும் இருக்கும் ஃபோட்டோவில் மாமா படு ஸ்மார்ட் போங்க!!!!! சின்னப் பையனாக!
கீதா
//எங்கும் போகவில்லைக்கா.
நீக்குகுழந்தைகளுடன் நீங்கள் இருவரும் இருக்கும் ஃபோட்டோவில் மாமா படு ஸ்மார்ட் போங்க!!!!! சின்னப் பையனாக!//
ஆமாம், எப்போதும் எங்கள் நலனில் அக்கறையாக எங்களுடன் இருப்பதாக நினைத்து கொண்டுதான் இருக்கிறேன் கீதா.
//மாட்டிற்கும் புள்ளி வைத்து எளிமையாக ஆஹா மாமாவின் திறமைகள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கின்றது.
பதிலளிநீக்குஅந்தச் சிக்குக் கோலம் முன்ன போட்டிருக்கிறேன் கோமதிக்கா அது ஆகிவிட்டது ஆண்டுகள்//
சிக்கு கோலம் போட்டு இருப்பீர்கள் நீங்கள்.
உங்களின் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.
சில பதிவுகள் எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமாகத் தோன்றும். இந்தப் பதிவு அத்தகையது.
பதிலளிநீக்குமாட்டுக் கோலம் மனதை விட்டு அகலாது
வணக்கம் நெல்லைத தமிழன்
நீக்கு//சில பதிவுகள் எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமாகத் தோன்றும். இந்தப் பதிவு அத்தகையது.
மாட்டுக் கோலம் மனதை விட்டு அகலாது//
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி தமிழன்.
முதல் படத்தில் யார் படத்திற்கு மாலை போட்டிருக்கிறார் என்று ரொம்பவே யோசித்தேன். பிறகுதான் சூரியனுக்கு என்று புரிந்தது. அருமை
பதிலளிநீக்கு//முதல் படத்தில் யார் படத்திற்கு மாலை போட்டிருக்கிறார் என்று ரொம்பவே யோசித்தேன். பிறகுதான் சூரியனுக்கு என்று புரிந்தது. அருமை//
நீக்குஇந்த முறை வீட்டுக்குள் பொங்கல் வைத்து விட்டு வெளியே சூரியன் உதிக்கும் நேரம் பூஜை. விடுமுறை இல்லை யாருக்கும். பேரன் பள்ளிக்கு போக வேண்டும், மருமகள், மகனுக்கு அலுவலகம் அதனால் அதிகாலையில் பொங்கல் இடபெற்றது. சூரியன் வந்து விட்டார் பூஜையின் போது.
கோலப்படங்களை ரசித்தேன். அனைத்தும் அருமை
பதிலளிநீக்குபரிசளித்த இரண்டு புத்தகங்களும் மிக முக்கியமான புத்தகங்கள்.
//கோலப்படங்களை ரசித்தேன். அனைத்தும் அருமை//
நீக்குநன்றி.
//பரிசளித்த இரண்டு புத்தகங்களும் மிக முக்கியமான புத்தகங்கள்.//
ஆமாம், சிறந்த பரிசுதான்.
எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறீர்களே. அதுவே பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குபொங்கல் கொண்டாட்டங்களை நினைவுபடுத்தும் வகையில் படங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். அனைத்தையும் ரசித்தேன்
//எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறீர்களே. அதுவே பாராட்டத்தக்கது.
நீக்குபொங்கல் கொண்டாட்டங்களை நினைவுபடுத்தும் வகையில் படங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். அனைத்தையும் ரசித்தேன்//
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு நினைவை கொண்டு வரும் விதமாக இருக்கும் நெல்லைத்தமிழன். பண்டிகை படங்கள் என தனி ஆல்பம் இருக்கும் . எல்லாம் படங்களையும் தொகுத்து ஆல்பங்கள் மேல் பெயர் எழுதி என்று வைத்து இருப்பார்கள்.
அனைத்தையும் ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கும்
பாராட்டியதற்கும் நன்றி நெல்லைத் தமிழன்