ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

காவிரி தாய்க்கு நன்றி



இன்று ஆடிப்பெருக்கு வீட்டில்  காவேரி அம்மனை வழிபட்டு விட்டேன்.

ஆடி 18 காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள். நீர் நிலை எல்லாம் மக்கள் கூடும் நாள். நீர் வளம் பெருகி பயிறு பச்சை செழித்து வாழ வேண்டுவோம்.



சாத்துக்குடி, மாதுளை, நெல்லிக்காய் விட்டில் இருந்தது, அவல் பாயாசம் வைத்து வணங்கி விட்டேன்.



புதிய பதிவு ஒன்றும் போடவில்லை சில நாட்களாக எழுதி எழுதி வைத்து இருக்கிறேன் ஒன்று பதிவாக்கவில்லை.
அதனால் பழைய ஆடிப்பெருக்கு  பதிவுகளை  படித்து அதிலிருந்து சில உங்களுக்கு நினைவூட்ட போட்டு இருக்கிறேன், உங்கள் பின்னூட்டம் இருக்கா என பார்க்கலாம் . நேரம் இருந்தால் படிக்கலாம்,

மாயவரம் வீட்டில்  (பல ஆண்டு முன்)  எடுத்த படம். 

மாயவரத்தில் பேரிக்காய், கொய்யாப்பழம், சீதாப்பழம், மாம்பழம் எல்லாம்  வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு  வந்துவிடும். இறைவன் கொடுத்த வளங்களை இறைவனுக்குப் படைத்து, "இந்த வளங்கள் என்றும் எப்போதும் இருக்க வேண்டும்.  நீர்வளம், நிலவளம் எல்லாம் செழிப்பாக இருக்க வேண்டும்.

நாடும், வீடும் நலம் பெற வேண்டும். தாயே!'' என வேண்டுவார்கள். 


ஆடிப்பெருக்கு : - 2009  முதன் முதலில் போட்ட ஆடிப்பெருக்கு பதிவு

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என்பது போல் ஆறிருக்குமிடம் எல்லாம் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது . என்றாலும்
காவிரிக்கரைகளில் சிறப்பாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கன்னிப்பெண்கள் நல்ல கணவரை அடையவும், புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்வு சிறக்கவும், மணமான பெண்கள் தங்கள் மணாளர் நீண்ட ஆயுள் பெறவும் ஆற்றுமண் எடுத்துக் காவிரியம்மன் உருவம் செய்து வழிபடுவார்கள்

ஒவ்வொரு ஆடிப்பெருக்கின் போதும் இதற்கு முந்தைய ஆண்டுகளில்  எனது மகள் , மகனோடும் அக்கம்பக்கத்தாருடனும் ஆற்றுக்குப்போய் இவ்விழாவைக் கொண்டாடியதை நினைவுபடுத்திக்கொள்வேன்.



ஆற்றுக்கு போலாமா (வல்லம் படுகை )

கொள்ளிட கரையில் நடந்த ஆடிப்பெருக்கு விழா படங்கள்



ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.






கண்ணுக்கு இமைபோன்ற கண்ணாளன் கண்களில் தூசியா? விரைந்து போக்கும் அன்புக் கைகள்.(ஏரிக்கரையோரம் கிடைத்த பொக்கிஷம்)





கல்யாண சேலையில் , கல்யாண பட்டு வேட்டியில் ஆற்றுக்கு மாலைகளை கொண்டு விட  வந்த தம்பதியினர்
அதிக பேர் படித்த பதிவு.

என் அன்பு கணவர் அணைகட்டில் நடந்து போகும் போது எடுத்த படம்  .  இப்போது எனக்கு இனிய நினைவுகளை இப்போது தந்த  பதிவு.


மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி. வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்கிறது.மரங்களில் தேனிக்களின் கூடு நிறைய இருந்தது. காரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலவற்றை எடுக்கமுடியவில்லை. மயில்கள் அடர்ந்த மரக் கூட்டத்தின் நடுவே இருந்து அகவியது அதின் நீண்ட தோகையை மட்டும் காட்டி மறைந்தது. 


அலைகடல் போல பரந்து விரிந்த  வீரநாராயண ஏரி


வந்தியதேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையின் மேல் ஏரியின் அழகை  ரசித்துக்கொண்டு சென்றதுபோல் நாங்கள் அவ்வழியில் காரில் ரசித்துக்கொண்டே சென்றோம். கட்டுரை அடுத்த பதிவில் தொடரும்.

வீரநாராயண ஏரியும் பறவைகளும் :-


தொடரும் பதிவு வீரநாராயண ஏரியின் அழகை பார்க்கலாம். ஆடிப்பெருக்கு சமயம் கட்டுசாத மூட்டையுடன் குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக நீர் நிலைகளுக்கு சென்று வருவார்கள். இந்த பதிவில் ஏரியின் அழகையும் பறவைகளையும் கண்டு களிக்கலாம். வீட்டில் இருந்தே!


சிறு தேர் உருட்டல் :-


ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு  சிறுதேரை உருட்டி கொண்டு போய்  விளையாடியவர்களுக்கு  நினைவுகள்  வரலாம்.



சிறு தேர் ஓட்டி ஆற்றுக்கு போகும் சிறுவன்




தண்ணீர் இல்லாத வறண்ட காவேரி படங்கள்.



இந்த பதிவில்  ஆடிப்பெருக்கு சமயம் குலதெய்வ வழி படு செய்பவர்கள் பதிவு.






அன்னையின் ஊஞ்சல் சேவை பார்க்கலாம்.

அனைவருக்கு ஆடிப்பெருக்கு பண்டிகை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்



பாட்டு ஒவ்வொரு ஆடிப்பெருக்கு சமயமும் பாட்டு வைப்பார்கள் வானொலியில் கேட்டு இருப்பீர்கள்.


ஏரி ,குளம்  , கிணறு , ஆறு ,எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. மீட்டெடுத்த நினைவுகள் தற்போதைய கனவுகள் என்று சேர்ந்து வந்த பதிவு தங்களுடைய எடிட்டிங் திறமையை சுட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு