அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
எங்கள் வீட்டுப்பிள்ளையார் அலங்காரத்துக்கு முன் .
மாவிலை அலங்காரம் . மாவிலை பூஜை செய்த பின் கொண்டு வந்தார். மீண்டும் மாவிலை அலங்காரம். அடுத்து சிறிது நேரம் கழித்து எருக்கம்பூ மாலை கொண்டு வந்தார்
எருக்கம் பூ மாலை சாற்றிய பின் எடுத்த படம். மாலை மீண்டும் பூஜை செய்யவேண்டும்.
எங்கள் வீட்டுப் பிரசாதம்.
சுண்டல், எள் உருண்டை, மோதகம் மட்டும் செய்தேன். இதை செய்ய இறைவன் பலம் கொடுத்தார். இதற்கு மேல் ஆசைப்படக்கூடாது. பச்சரிசி இட்லி ,இனிப்பு பிடி கொழுக்கட்டை, வடை, அப்பம் எல்லாம் செய்வேன் முன்பு .
காய்கறி விற்பவர் பழங்கள் வாங்கி தந்தார்.
வீட்டில் பூஜை முடித்தபின் எங்கள் வளாகத்தில் உள்ள பிள்ளையாரைப் தரிசனம் செய்து வந்தேன்.
கணபதி ஹோமம், அபிசேகம், அலங்காரம் என்று சிறப்பாக நடைப்பெற்றது.
ஹோம நெருப்பில் உங்களுக்கு என்ன காட்சி தெரிகிறது சொல்லுங்கள். எனக்கு கலைமான் போல தெரிகிறது.
வீட்டில் பூஜை செய்து விட்டு போனேன். ஹோமம், அபிஷேகம் முடிந்து அலங்கார பூஜையும் முடியும் தருவாயில் தான் போனேன். பூஜையை படம் எடுக்க முடியவில்லை.
மேலே உள்ள மூன்று படங்களும் கோயில் வாட்ஸப் குழுவில் அன்பர் அனுப்பியது. கீழே உள்ள படங்கள் நான் எடுத்தேன்.
வரசித்தி விநாயகர் அலங்காரம்
அங்கு வழங்கிய பிரசாதம் பஞ்சாமிருதம், அப்பம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, மோதகம்
அப்பம் நான் செய்யவில்லை என்று பிள்ளையார் கொடுத்து விட்டார்.
இந்த ஆண்டு பேரன் செய்த பிள்ளையார். மகன் செய்த போட்டோ பூத் .
பல இடங்களில் வைக்கப்பட்டது. 150 இடங்களில் குழந்தைகள் பிள்ளையார்கள் செய்தார்கள். மகா கணபதி கோயில் ஏற்பாட்டில்.
பல இடங்களில் வைக்கப்பட்டது. 150 இடங்களில் குழந்தைகள் பிள்ளையார்கள் செய்தார்கள். மகா கணபதி கோயில் ஏற்பாட்டில்.
சிறு வயதில் பேரன் செய்த பிள்ளையாரில் எனக்கு பிடித்த பிள்ளையார் 2017ல் செய்த பிள்ளையார். முன்பு முகநூலில் போட்ட பிள்ளையாரை காட்டி இன்று கேட்டது, அதுதான் அன்றும் இன்றும் படம்.
களிமண் பிள்ளையார் செய்யும் வகுப்பில் போய் கற்றுக் கொண்டு செய்தான்.
தங்கை வீட்டு பிள்ளையார் கொலு தங்கை அனுப்பி வைத்த படம்.
பிள்ளையார் சதுர்த்தி அன்று நிறைய பிள்ளையார் பார்த்தீர்களா?
முன்பு சிறு வயதில் கோயிலுக்கு போனால் பிள்ளையார் சதுர்த்தி அன்று எத்தனை பிள்ளையார் பார்த்தோம் என்று எண்ணி கொண்டு வருவோம் வீட்டுக்கு.
இப்போது எண்ணில் அடங்கா பிள்ளையார்கள் ஊர்வலம் என்று தொலைக்காட்சியில் பார்க்கிறோம். எளிமையான பண்டிகை இப்போது ஆரவாரமாக கோலாகலமாக வெகு உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது.
பிள்ளையார் மிகவும் எளிமையானவர் மஞ்சளில், மண்ணில் பிடித்து வைத்தாலும் அவர் வந்து கருணையுடன் அருள் புரிவார்.
மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக