வேண்டுபவர்களுக்கு , விரும்பியதை வழங்கும் தலமாக கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஊரில் உள்ள வைக்கத்தப்பன் கோயில் திகழ்கிறது என்று சொல்லப்படுகிறது.
தல வரலாறு:-
சிவபெருமானின் பக்தனான கரன் என்ற அசுரன் , முக்தி வேண்டிக் கடுந்தவம் செய்தான். சிவபெருமான் மூன்று சிவலிங்கங்களைக் கரனுக்கு கொடுத்து அதை மூன்று இடங்களில் நிறுவி வணங்கினால் முக்தி கிடைக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்தார். கரனை பின் தொடர்ந்து செல்ல புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரை அனுப்பி வைத்தார்.
கரன் ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும் , மூன்றாவது லிங்கத்தை வாயிலும் எடுத்து சென்ற அசுரன் பயண களைப்பால் சிறிது ஓய்வு எடுக்க ஒரு லிங்கத்தை கீழே ஒரு இடத்தில் வைத்தான், மீண்டும் எடுக்கும் போது எடுக்கமுடியவில்லை.
அப்போது தொடர்ந்து வந்த வியாக்ரபாதரிடம் அந்த சிவலிங்ககத்தை வழிபட வேண்டி கொண்டான். அவர் அங்கே இருந்து அந்த லிங்கத்தை வழிபட்டார். எனவே வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டு. வைக்கம் ஊருக்கு வியாக்ரபுரி என்ற பேரும் உண்டு.
அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கத்துடன் பயணம் செய்து இடது கையில் கொண்டு போனதை "மானுர்" என்ற இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபட்டான்.
பின் வாயில் உள்ளதை "கடித்துருத்தி" என்ற இடத்தில் கிழக்கு நோக்கி வைத்து வழிபட்டான். இதனால் அவனுக்கு முக்தி கிடைத்தது. என்று புராண வரலாறு சொல்கிறது.
பிற்காலத்தில் பரசுராமர் வான் வழியில் வடதிசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது ஓரிடத்தில் கீழே பார்த்தார் அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. உடனே கீழே இறங்கி வந்த பரசுராமர் அந்தச்சிவலிங்ககத்திற்காக பீடம் ஒன்றை அமைத்து அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினார். இது கரன் வலது கையில் எடுத்து வந்து வியாக்ரபாத முனிவரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் .
மூன்று கோவில்களையும் ஒரே நாளில் வணங்கினால் நமக்கும் நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள். நாங்கள் வைக்கம் மட்டும் பார்த்தோம்.
இன்னொரு வரலாறும் இந்த கோவிலுக்கு இருக்கிறது.:-
வைக்கம் போராட்டம்
வைக்கம் மகாதேவர் கோயிலை முன்பு பக்தர்கள் வழிபடுவதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்து இருக்கிறது. குறிப்பிட்ட 108 குடும்பங்களின் வழிபாட்டுக்கு உரிய கோயிலாக இருந்து இருக்கிறது.
கோயில் அமைந்து இருக்கும் வீதியில் ஈழவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் நுழையத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்துக் கேரளத்தில் மிக பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டக்காரர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தந்தை பெரியாரும் இப்போரோட்டத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் அமைந்து இருக்கும் தெருவில் நடக்க உரிமை பெற்றனர் அதனால்தான் தந்தை பெரியார் "வைக்கம் வீரர்" என்று திரு.வி.க வால் பட்டம் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டார்.
இந்த கோயிலில் அம்மனுக்கு என்று தனியாக சன்னதி இல்லை. கோயிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி "அம்மா பகவதி" என்று வழிபடுகிறார்கள்.
உள்ளே உள்ள கடையில் கலர் குங்குமம், எண்ணெய் விற்கிறார்கள் அதை வாங்கி கலர் கோலம் போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
வனதுர்க்கை சன்னதி மேற்கூரை எதுவும் இல்லாமல் இருக்கிறது. இங்குள்ள வனதுர்க்கைக்கும் வரலாறு இருக்கிறது. வனதுர்க்கையை வழிபட்டால் மனிதர்களிடம் இருக்கும் அரக்க குணங்கள் அனைத்தும் விலகும் என்ற நம்பிக்கை.
மகாதேவரை தரிசிக்க செல்லும் வழி. உள்ளே சுவாமி சன்னதியில் நன்றாக மகாதேவர் தரிசனம் கிடைத்தது.வரிசையில் வந்து சுவாமி முன் கொஞ்ச பேர் தரிசனம் செய்தபின் மற்றவர்களை அனுப்புகிறார்கள்.
நாங்கள் போன போது அலங்காரம் முடிந்து கதவு திறந்து பூஜை ஆனது. எல்லோர் மேலும் தீர்த்தம் தெளித்தார் குருக்கள். உள்ளே நிறைய விளக்குகள் ஒளிர்ந்தன. அழகான அலங்காரம்.
தூலாபாரம் கொடுக்கும் தராசு, வாழைத்தார் உள்ளது வண்டியில்.
கோயில் முழுவதும் லாட்டரி சீட்டு விற்கும் வயதான ஆண்கள், பெண்கள் இருந்தார்கள். வாங்க சொல்லி கேட்கிறார்கள்.
உள்ளே மூலவர் மகாதேவர் இருக்கும் இடம். உட் சுவரில் ஓவியங்கள்.
ஓவியங்கள் நன்கு தெரியும் இந்த படம் விக்கிப்பீடியா படம். நன்றி.
மூலவர் இருக்கும் இடத்தை சுற்றி வேலி மாதிரி போட்டு இருக்கிறார்கள். மூலவர் இருக்கும் வெளிபக்க சுவர் முழுவதும் ஓவியங்கள் புராண கதைகள் வரையப்பட்டு இருக்கிறது.
இந்த கோயில் தினமும் காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும் , மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரையும் திறந்து இருக்கும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-__________________________________________________________________
1990 ல் சபரி மலைக்குச் சென்று திரும்பும் வழியில் ஸ்ரீ வைக்கத்தப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன்.. சிறப்பான செய்தித் தொகுப்புடன் நல்லதொரு பதிவு.. படங்கள் சிறப்பு..
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//1990 ல் சபரி மலைக்குச் சென்று திரும்பும் வழியில் ஸ்ரீ வைக்கத்தப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன்.. சிறப்பான செய்தித் தொகுப்புடன் நல்லதொரு பதிவு.. படங்கள் சிறப்பு..//
சபரி மலை செல்பவர்கள் வசதி படி போகும் போதோ, வரும் போதோ போவார்கள். நீங்களும் போய் வந்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் வழக்கம் போல அழகு நானும் தரிசித்து கொண்டேன்.
பதிலளிநீக்குதலவரலாறு சொன்ன விதம் அருமை.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் வழக்கம் போல அழகு நானும் தரிசித்து கொண்டேன்.
தலவரலாறு சொன்ன விதம் அருமை.//
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜி.
படங்களும் தகவல்களும் சிறப்பு. கோயில் மிக அழகாக இருக்கிறது. தகவல்களும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும் தகவல்களும் சிறப்பு. கோயில் மிக அழகாக இருக்கிறது. தகவல்களும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.//
உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.
கோமதிக்கா வைக்கத்தப்பன் கோயில் பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால கோவில் வளாகம் இவ்வளவு பெருசு என்று உங்கள் படங்களை பார்த்ததும் தெரிகிறது. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன கோமதி அக்கா. கோவில் பற்றிய விவரங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா வைக்கத்தப்பன் கோயில் பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால கோவில் வளாகம் இவ்வளவு பெருசு என்று உங்கள் படங்களை பார்த்ததும் தெரிகிறது. //
கோயில் மிகவும் பெரிதுதான். சில இடங்களுக்கு உள்ளே அவர்களே போக கூடாது என்று வைத்து இருக்கிறார்கள். வெளியே நம்மால் அனைத்தையும் சுற்றிப்பார்க்க முடியவில்லை. முடிந்தவரை பார்த்தோம்.
//படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன கோமதி அக்கா. கோவில் பற்றிய விவரங்கள் எல்லாம் அருமை.//
கோயில் விவரங்கள் நிறைய இருக்கிறது கீதா. முடிந்தவரை சுருக்கி தந்து இருக்கிறேன். புராண வரலாறுகள் அதிகமாக இருக்கிறது.
முடிந்தவரை படங்களும் எடுத்தேன்.
கோவில் பற்றிய வரலாற்று தகவல் பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறோம் மற்றபடியும் வாசித்ததுண்டு வைக்கம் போராட்டம் பற்றி எல்லாம் ஆனால் கோவிலின் புராண தல வரலாறு உங்கள் பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குமுருகன் தாரகேஸ்வரர அழிக்க என்பதை பார்த்ததும் வெங்கட் ஜி எழுதி இருந்த தேவதாரு மரங்களுக்கு இடையில் தாரகேஸ்வரர் கோவில் நினைவுக்கு வந்தது.
கீதா
//கோவில் பற்றிய வரலாற்று தகவல் பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறோம் மற்றபடியும் வாசித்ததுண்டு வைக்கம் போராட்டம் பற்றி எல்லாம் //
நீக்குஆமாம், அது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.
//ஆனால் கோவிலின் புராண தல வரலாறு உங்கள் பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.//
ஆமாம், நானும் இப்போதுதான் படித்து தெரிந்து கொண்டேன். தமிழ் நாட்டு கோயில் என்றால் தலவரலாறு புத்தகம், மற்றும் விவரங்கள் கோயிலில் இருக்கும்.
கோயில் மிக அழகாக இருக்கிறது சுத்தமாகவும் இருக்கிறது. தரையில் விழுந்து வணங்குவது போன்ற அல்லது அங்க பிரதோஷணம் செய்வது போன்றோ அந்த சிற்பங்கள் இருப்பது அழகாக இருக்கிறது அந்த இடத்தில் தான் விழுந்துவணங்க வேண்டும் என்று சிம்பாலிக்கா சொல்லப்படுகிறதோ என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
//கோயில் மிக அழகாக இருக்கிறது சுத்தமாகவும் இருக்கிறது//
நீக்குஆமாம்.
. //தரையில் விழுந்து வணங்குவது போன்ற அல்லது அங்க பிரதோஷணம் செய்வது போன்றோ அந்த சிற்பங்கள் இருப்பது அழகாக இருக்கிறது அந்த இடத்தில் தான் விழுந்துவணங்க வேண்டும் என்று சிம்பாலிக்கா சொல்லப்படுகிறதோ என்று தோன்றுகிறது.//
இருக்கலாம். சில இடங்களில் அப்படி இருக்கும். குலசேகர ஆழ்வார் சொல்வது போல "படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே"
அடியார்கள் கால் மிதிபட விரும்பி இப்படி அமைப்பது உண்டு.
கோவில் கொடி மரத்தின் முன் இருக்கும் அந்த பெரிய விளக்கு அந்த படம் மிக அழகாக இருக்கிறது கூடவே கோயிலின் வளாகம் பெரியதாக இருப்பதும் மரங்கள் இருப்பதும் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன. கோவில் அமைப்பும் கோவிலும் வெளிப்புறத் தோற்றம் அந்த படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குகேரளத்தில் சிவனின் பெயரும் பொதுவாக இறைவர்களில் பெயர் மிக அழகாக வித்தியாசமாக இருக்கும் வைக்கத்தப்பன் இப்படி அப்பன் சேர்த்து சொல்வதுஅங்கு சகஜம். மிக அழகாக இருக்கிறது இல்லையா அக்கா
கீதா
//கோவில் கொடி மரத்தின் முன் இருக்கும் அந்த பெரிய விளக்கு அந்த படம் மிக அழகாக இருக்கிறது கூடவே கோயிலின் வளாகம் பெரியதாக இருப்பதும் மரங்கள் இருப்பதும் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன. கோவில் அமைப்பும் கோவிலும் வெளிப்புறத் தோற்றம் அந்த படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன.//
நீக்குஅனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி கீதா.
//கேரளத்தில் சிவனின் பெயரும் பொதுவாக இறைவர்களில் பெயர் மிக அழகாக வித்தியாசமாக இருக்கும் வைக்கத்தப்பன் இப்படி அப்பன் சேர்த்து சொல்வதுஅங்கு சகஜம். மிக அழகாக இருக்கிறது இல்லையா அக்கா//
ஆமாம். பேர் அழகாய் இருக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் அப்பன் தானே! அப்பன் திருப்பதி என்ற சீனிவாச பெருமாள் நினைவுக்கு வருகிறார்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது.
கோவில் முகப்பு படங்கள். மூலைதோறும் இருக்கும் நந்தியின் படம், கோவிலில் கொடிமரத்திற்கு முன்னிருக்கும் பெரிய விளக்கு, அதன் முன்பிருக்கும் நெற் குவியல் மரக்கால் படங்கள் என அனைத்தையும் ரசித்து அதன் விபரங்களை தெரிந்து கொண்டேன்.
வைக்கம் வைக்கத்தப்பனை தரிசித்துக் கொண்டேன். தல வரலாறு படித்து தெரிந்து கொண்டேன். கோவில் சம்பந்தபட்ட பிற கதைகளையும் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
கோவிலில் அம்பாள் சன்னதி என்று இல்லாமல் ஒரிடத்தில் "அம்மா பகவதி" என வழிபடுவது வியப்பைத் தருகிறது. விளக்கின் ஒளியில் அன்னை தீப ஜோதியாய் அங்கு குடி கொண்டிருக்கிறாள் போலும்...!
அன்னதான வரலாறு அறிந்து கொண்டேன். அம்மா வீட்டில் இருந்த போது அப்போது நெல்லையில் நடைபெறும் வைக்கத்தஷ்டமி விழாவுக்கு ஒரிரு தடவைகள் சென்றுள்ளோம். அந்த நினைவு வந்தது. இப்போதும் வருடந்தோறும் அவ்விழா உள்ளதாவென தெரியவில்லை.
கோவில் வெளிப்புற மதில் சுவரை ஒட்டிய மரங்கள் படம் அழகாக வந்துள்ளது. உட்பிரகார படங்களும் மேல் விதான படமும், அருமையாக உள்ளது. எல்லாபடங்களுமே அழகாக உள்ளது. சுவரில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் படமும் மிக அழகு. சிவராத்திரி நெருங்கி வரும் போது சிவபெருமானின் கோவிலையும், படங்களையும் பதிவாக பகிர்ந்து சிவ தரிசனம் பெற வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது.
//கோவில் முகப்பு படங்கள். மூலைதோறும் இருக்கும் நந்தியின் படம், கோவிலில் கொடிமரத்திற்கு முன்னிருக்கும் பெரிய விளக்கு, அதன் முன்பிருக்கும் நெற் குவியல் மரக்கால் படங்கள் என அனைத்தையும் ரசித்து அதன் விபரங்களை தெரிந்து கொண்டேன்.//
//கோயிலை ரசித்து அனைத்தும் தெரிந்து கொண்டது மகிழ்ச்சி கமலா.
வைக்கம் வைக்கத்தப்பனை தரிசித்துக் கொண்டேன். தல வரலாறு படித்து தெரிந்து கொண்டேன். கோவில் சம்பந்தபட்ட பிற கதைகளையும் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.//
வைக்கம் கோயில் போகும் முன் மூன்று கோயில்கள் இருக்கிறது மூன்றையும் பார்த்து வாங்க என்று தெரிந்தவர் ஒருவர் சொன்னார்.
எங்களுக்கு நேரம் வைக்கம் கோயிலை பார்க்க மட்டுமே இருந்தது.
//கோவிலில் அம்பாள் சன்னதி என்று இல்லாமல் ஒரிடத்தில் "அம்மா பகவதி" என வழிபடுவது வியப்பைத் தருகிறது. விளக்கின் ஒளியில் அன்னை தீப ஜோதியாய் அங்கு குடி கொண்டிருக்கிறாள் போலும்...!//
ஆமாம், நாம் தீபத்தை ஏற்றி வைத்து அம்மா தீபாநாச்சியாரே!
நம் மன இருளை அகற்றி ஞானஒளி ஏற்றுபவள் அன்னைதானே!
தீபஜோதியாய் அங்கு குடி கொண்டு இருக்கிறாள்.
நீங்கள் சொல்வது நெருப்புச் சுடரே ஜுவாலாமுகி அவள் கோயில் பற்றி முக்தி நாத் போன போது பதிவு போட்டு இருந்தேன்.
//அன்னதான வரலாறு அறிந்து கொண்டேன். அம்மா வீட்டில் இருந்த போது அப்போது நெல்லையில் நடைபெறும் வைக்கத்தஷ்டமி விழாவுக்கு ஒரிரு தடவைகள் சென்றுள்ளோம். அந்த நினைவு வந்தது. இப்போதும் வருடந்தோறும் அவ்விழா உள்ளதாவென தெரியவில்லை.//
கார்த்திகை மாதம் நடைபெறும் வைக்கத்தஷ்டமி. நெல்லையில் இப்போதும் நடைபெறும் என்று தான் நினைக்கிறேன்.
//கோவில் வெளிப்புற மதில் சுவரை ஒட்டிய மரங்கள் படம் அழகாக வந்துள்ளது. உட்பிரகார படங்களும் மேல் விதான படமும், அருமையாக உள்ளது. எல்லாபடங்களுமே அழகாக உள்ளது. சுவரில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் படமும் மிக அழகு. சிவராத்திரி நெருங்கி வரும் போது சிவபெருமானின் கோவிலையும், படங்களையும் பதிவாக பகிர்ந்து சிவ தரிசனம் பெற வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
அனைத்தையும் ரசித்து விரிவான கருத்து தந்தமைக்கு நன்றி கமலா.
படங்கள் அழகு விவரணம் கச்சிதம். சாதாரணமாக கேரளத்து கோயில்களில் கேமரா செல்போன் அனுமதி இல்லை. நீங்கள் எப்படி கொண்ட போனீர்களோ?
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகு விவரணம் கச்சிதம்.//
நன்றி.
சாதாரணமாக கேரளத்து கோயில்களில் கேமரா செல்போன் அனுமதி இல்லை. நீங்கள் எப்படி கொண்ட போனீர்களோ?//
படங்கள் உட்புறம் இரண்டு படங்கள் தான். மற்றவை எல்லாம் வெளிப்பக்கம் எடுத்த படங்கள். யாரும் தடை செய்யவில்லை படம் எடுத்த போது. படம் எடுக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையும் இல்லை.
ஜெயகுமார் சார் சொல்வதுபோல, கோவில் உள் நுழையும் (கர்பக்ரஹத்தை நோக்கி நடக்கும்போது) போதுதான் படம் எடுக்கக்கூடாது. வெளிப்புறத்தில் எடுக்கலாம்.
நீக்குஆனால் உட் பிரகாரத்தில் படங்கள் எடுப்பதை யாருமே விரும்பமாட்டார்கள். தடை சொல்வார்கள். ஆனாலும் நான் எடுத்திருக்கிறேன் (கர்பக்ரஹம் நோக்கி எடுக்க வாய்ப்பே இல்லை). அவங்க புனிதத்தைக் காப்பாற்றுகிறார்கள்.
கேரளக் கோவில் என்று சொல்லும்போது திருவண்பரிசாரம், திருவட்டாறு, சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோவில், கன்யாகுமரி பகவதி அம்மன் கோவில் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
வெளிப்புறத்தில் எடுக்கலாம்.//
நீக்குவெளிப்புறம் தான் நிறைய படங்கள் எடுத்தேன்.
கர்பக்ரஹத்தை நோக்கி நடக்கும் போது எடுக்கவில்லை, அங்கு ஒரு பிரகாரம், அதற்கு அடுத்த உட்பிரகாரம். படம் எடுத்தேன்.
//ஆனால் உட் பிரகாரத்தில் படங்கள் எடுப்பதை யாருமே விரும்பமாட்டார்கள். தடை சொல்வார்கள். ஆனாலும் நான் எடுத்திருக்கிறேன் (கர்பக்ரஹம் நோக்கி எடுக்க வாய்ப்பே இல்லை). அவங்க புனிதத்தைக் காப்பாற்றுகிறார்கள்.//
ஆமாம் , கர்பகிரஹத்தை படம் எடுக்க கூடாது அங்கு எல்லாம், அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று தெரியும்.
//கேரளக் கோவில் என்று சொல்லும்போது திருவண்பரிசாரம், திருவட்டாறு, சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோவில், கன்யாகுமரி பகவதி அம்மன் கோவில் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்//
இங்கு எல்லாம் உள்ளேயே படம் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் கண்டிப்பாய். காமிராவை அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இங்கு எல்லாம் பல வருடங்களுக்கு முன் பார்த்தது.
அப்போது காமிரா, செல்போன் கிடையாது.
கேரளத்து கோயில்களில் தாயார் சந்நிதிகள் இருப்பது இல்லை பத்மனாபஸ்வாமி கோயில் உட்பட. அதே போலத்தான் சிவன்கோயில்களிலும்.
பதிலளிநீக்குசக்தி வழிபாடு தனி வழிபாடாக பகவதிக்கு கோயில் அமைப்பதன் மூலம் செயலில் உள்ளது. பகவதி கோயில்களில் சிவன் விஷ்ணு வழிபாடு இல்லை.
Jayakumar
//கேரளத்து கோயில்களில் தாயார் சந்நிதிகள் இருப்பது இல்லை பத்மனாபஸ்வாமி கோயில் உட்பட. அதே போலத்தான் சிவன்கோயில்களிலும்.//
நீக்குநம் நாட்டிலும் முன்பு அம்மன் சன்னதி கட்டப்படவில்லை பிறகாலத்தில் தான் அம்மன் சன்னதி கட்டப்பட்டு இருக்கிறது.
//சக்தி வழிபாடு தனி வழிபாடாக பகவதிக்கு கோயில் அமைப்பதன் மூலம் செயலில் உள்ளது. பகவதி கோயில்களில் சிவன் விஷ்ணு வழிபாடு இல்லை.//
இந்த கோயிலில் சக்தி வழிபாடாக வனதுர்க்கை இருக்கிறது. அவரும் அரக்கியாக இருந்து சாபவிமோசனம் பெற்றவர்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சட்டென பார்க்கும்போது கோவில் கோவில் மாதிரி இல்லாமல் ஒரு கிராமத்து பண்ணை வீட்டின் முகப்பு போல உளது!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//சட்டென பார்க்கும்போது கோவில் கோவில் மாதிரி இல்லாமல் ஒரு கிராமத்து பண்ணை வீட்டின் முகப்பு போல உளது!//
ஆமாம். ஸ்ரீராம். கோயிலுக்கு செல்லும் வழியும் அப்படித்தான் இருந்தது.
புராணக்கதை சுவாரஸ்யம். கோவிலின் உள்ளே நேர்த்தியாக இருக்கிறது. படங்கள் அழகு.
பதிலளிநீக்கு//புராணக்கதை சுவாரஸ்யம். கோவிலின் உள்ளே நேர்த்தியாக இருக்கிறது. படங்கள் அழகு.//
நீக்குஆமாம். வித விதமான அரக்கர்கள் சிவ பக்தி கொண்டவர்கள் அவர்கள் பக்தி எல்லாம் படிக்க நன்றாக இருக்கிறது.
கோயில் நேர்த்திதான் கோயிலுக்கு உள்ளே சில இடங்களை நாம் பார்க்க முடியாது, நாம் போன பாதையில் திரும்பி வர வேண்டும்.
கோவில் எவ்வளவு பெரிது என்பது உங்கள் படங்களிலிருந்து தெரிகிறது. நல்ல விஸ்தீரணமான கோவில் போலும்.
பதிலளிநீக்கு//கோவில் எவ்வளவு பெரிது என்பது உங்கள் படங்களிலிருந்து தெரிகிறது. நல்ல விஸ்தீரணமான கோவில் போலும்.//
நீக்குஆமாம் ஸ்ரீராம், நான் "அப்பாடி "என்று ஒரு பக்கம் அமர்ந்து விட்டேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தல வரலாறுடன் படங்களுடனும் அருமையான விளக்கத்துடனான பதிவு. பெரியாரையும் நினைவு கூர்ந்தது சிறப்பு. வைக்கத்து அஷ்டமி மிகவும் சிறப்பான திருவிழா.
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//தல வரலாறுடன் படங்களுடனும் அருமையான விளக்கத்துடனான பதிவு. பெரியாரையும் நினைவு கூர்ந்தது சிறப்பு. வைக்கத்து அஷ்டமி மிகவும் சிறப்பான திருவிழா.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வைக்கம் கோவில் மிக அழகு. கேரளா கோவிலுக்குரிய வகையில் (அனேகமா எல்லாக் கோவில்களும் இப்படித்தான் இருக்கும். ஒரு சில கோவில்கள் மாத்திரம் கொஞ்சம் சிறிதாக இருக்கும். மற்றபடி மூலஸ்தான கர்பக்ரஹ கட்டிடம், அதன் சுற்றுப்புறம், நுழைவாயில், கோவிலைச் சுற்றிய பாதை, கோவிலுக்கு முன் இருக்கும் விளக்குத்தூண் என்று எல்லாமே அனேகமாக எல்லாக் கோவில்களிலும் உண்டு. வெறும் படத்தைப் பார்த்துவிட்டு இந்தக் கோவில் என்று சொல்லிவிட முடியாது.) எல்லாமே அமைந்திருக்கிறது
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குவைக்கம் கோவில் மிக அழகு.கேரளா கோவிலுக்குரிய வகையில் எல்லாமே அமைந்திருக்கிறது//
ஆமாம். கேரளா கோயிலுக்குரிய வகையில் எல்லாமே அமைந்து இருக்கிறது. விளக்குதூண்கள் ஒவ்வோரு கோயில்களிலும் பெரிதாக சின்னதாக மட்டும் அமைந்து இருக்கும் மற்றபடி விளக்குதூன் எல்லா கேரளா கோயில்களிலும் உண்டு.
நானும் கர்பக்ரஹத்தின் வெளிப்புறத்தை ஒரு சில கோவில்களில் நைஸாக படம் பிடித்திருக்கிறேன். இப்படி ஓவியங்களுடன் இருக்கும். ஒரு சில கோவில்களில் இரண்டடுக்கு கூரை உண்டு
பதிலளிநீக்கு//நானும் கர்பக்ரஹத்தின் வெளிப்புறத்தை ஒரு சில கோவில்களில் நைஸாக படம் பிடித்திருக்கிறேன். இப்படி ஓவியங்களுடன் இருக்கும். ஒரு சில கோவில்களில் இரண்டடுக்கு கூரை உண்டு//
நீக்குகோயிலின் உடபிரகாரம், வெளிப்பிரகாரம் மட்டுமே படங்கள் எடுத்தேன். கோயில் உள்ளே எடுக்கவில்லை.
அனேகமாக எல்லாக் கோவில்களிலும் பிரசாதம் கிடைக்கும் (விலைக்கு).
பதிலளிநீக்குகேரள கோவில்களை தரிசனம் செய்தது இந்தப் பதிவைப் படித்த பின் மனதில் சுழன்றாடுகிறது. எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டும்.
//அனேகமாக எல்லாக் கோவில்களிலும் பிரசாதம் கிடைக்கும் (விலைக்கு).//
நீக்குஆமாம், ஆனால் வாங்கவில்லை.
//கேரள கோவில்களை தரிசனம் செய்தது இந்தப் பதிவைப் படித்த பின் மனதில் சுழன்றாடுகிறது. எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டும்.//
நீங்கள் தரிசனம் செய்த கோயில்களை எழுத வாய்ப்பு ஏற்படும் எழுதுங்கள் நாங்கள் படிக்கிறோம்.
மணல் பாதை சில கோவில்களில் நடப்பதைக் கடினமாக்கும் (பாதங்களில் குத்தும்).
பதிலளிநீக்குஅதுபோல கோவிலுக்கு இடது புறத்திலும் சிறு கோவில்களை அமைத்திருப்பார்கள். கோவிலுக்கு உள்ளே செல்ல பல கோவில்களில் குறுகிய நட அமைந்திருக்கும்.
படங்களை ரசித்தேன்.
//மணல் பாதை சில கோவில்களில் நடப்பதைக் கடினமாக்கும் (பாதங்களில் குத்தும்).//
நீக்குதிருவனந்தப்புரத்திலும் பத்மநாபன் கோயிலில் இப்படித்தான் மணல் கிடக்கும் பாதங்களை குத்தும் தான்.
//அதுபோல கோவிலுக்கு இடது புறத்திலும் சிறு கோவில்களை அமைத்திருப்பார்கள். கோவிலுக்கு உள்ளே செல்ல பல கோவில்களில் குறுகிய நட அமைந்திருக்கும்.//
ஆமாம். சில கோயில்களில் நானும் பார்த்து இருக்கிறேன்.
//படங்களை ரசித்தேன்.//
படங்களை ரசித்தமைக்கு நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத்தமிழன்.
வைக்கம் மகாதேவர் கோயில் நிறைந்த தகவல்கள், வரலாறுகள், படங்களுடன் நிறைவாக கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குவணக்க மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//வைக்கம் மகாதேவர் கோயில் நிறைந்த தகவல்கள், வரலாறுகள், படங்களுடன் நிறைவாக கண்டு வணங்கினோம்.//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.