புதன், 28 பிப்ரவரி, 2024

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

 வெகு நாடகள் கழித்து பிரதோஷ தினத்தன்று மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் போய் வழி பட்டேன். ஊரிலிருந்து வந்து இருந்தார்கள் கொழுந்தனரும் ஓர்படியும்  (கோவையிலிருந்து வந்து இருந்தார்கள்.), அவர்களுடன் சென்று வழிபட்டு வந்தேன்.  அந்த கோயிலின் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. இன்று "சங்கடஹர சதுர்த்தி" அதனால் பதிவு ஆக்கி விட்டேன். 




பாடலை கேட்டுக் கொண்டே பதிவை படிக்கலாம்.



சரஸ்வதியும் பிரம்மாவும்

தேவி கருமாரி அம்மன்

                                                   லட்சுமி நாராயணர்
கரைக்கால் அம்மையார்  நடராஜர், சிவகாமி அம்மை

மீனாட்சி சொக்கநாதர்

ஆலமரத்தை வெட்டாமல்  அதை சுற்றி கட்டிடம் கட்டி இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி.   நாகர்கள் இருக்கிறார்கள்


அரசமரமும், ஆலமரமும் தெரிகிறது வெளியிலிருந்து உள்ளே அடிமரம் இருக்கிறது

ஸ்ரீபத்மாவதி தாயார் ,  ஸ்ரீ. ஸ்ரீனிவாச பெருமாள்


துர்க்கை

                                                             அனுமன்

லிங்கோத்பவர்

                     வள்ளி . தெய்வானை சமேத சுப்பிரமணியர்

                                                            பைரவர்
                                             தட்சிணாமூர்த்தி 
ராகு கேதுவுடன் பிள்ளையார் அரசமரத்தின் அடியில் இந்த மரமும் அப்படியே தளைத்து இருக்கு. ராகு , கேது பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடக்குமாம்.

நவக்கிரகம்

நாங்கள் போன போது அபிசேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது. பக்தர்கள் தேவார , திருவாசகம் பாடல்களை பாடி கொண்டு இருந்தார்கள். நான் நடந்து வரும் அழகைப்பார்த்து கோவில் பணியில் இருக்கும் ஒரு பெண் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்ளுங்கள் என்று கொடுத்தார். திரை விலக நேரம் ஆகும் என்பதால்  நான் நிற்க கஷ்டபடுவேன் என்று கொடுத்தார்.  அவரை வாழ்த்தி நன்றி சொல்லி அமர்ந்து கொண்டு பாடி கொண்டு இருப்பவர்களுடன்   நானும்   பாடினேன். (எனக்கு தெரிந்த பாடல்களைதான் பாடினார்கள்.)

பிரதோஷ நாயகர்கள் ரிஷபவாகனத்தில் அலங்காரமாக இருக்கிறார்கள். அதற்கு முன்னால் கைகூப்பியபடி நிற்பது 
சண்டேஸ்வரார்
அலங்காரம் முடிந்து நந்திக்கு முதலில் பூஜை ஆனது
திரை விலகியதும் அடுக்கு தீபாராதனை  நடந்தது

அலங்காரம் நன்றாக இருந்தது

பெரிய கோயிலில் மீனாட்சி, சொக்கநாதரை  விரைவில் தரிசனம் செய்து விட்டு நகர வேண்டும். இங்கு நாம் நின்று நிதனமாக தரிசனம் செய்யலாம்.

எழுந்தருளும் சுவாமிக்கு பூஜை



எனக்கு மிகவும் பிடித்தது பூஜை பாத்திரங்கள், விளக்கு எல்லாம் புதிது போல பள பள என்று தேய்த்து சுத்தமாக இருந்தது. கோவில் பணி பெண்ணை வாழ்த்தி பாராட்டி கொஞ்சம் பணம் கொடுத்து வந்தேன். அவரும் மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். வரும் வழியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருக்காலாம் என்று நினைப்பு வந்தது. செய்யும் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வது பெரிய விஷயம. அடுத்த முறை போக சந்தர்ப்பம் கிடைத்தால்  கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.



நாசா வியந்த மீனாட்சி அம்மன்  கோவில் என்று  தினமலரில்  வந்த செய்தியை  லாமினேஷன் செய்து வைத்து இருக்கிறார்கள். பெரிது செய்தால் படிக்கலாம்.


கோயில் திறந்து இருக்கும் நேரம் சொல்லும் அறிவுப்பு பலகை



வெளியில் பிரசாதம், அபிஷேக பால் வைத்து இருக்கிறார்கள் பக்தர்களுக்கு வழங்க நாங்கள் பிரசாதம் வாங்க நிற்கவில்லை அடுக்கு தீபாராதனை முடிந்தவுடன் வந்து விட்டோம்.


செல்வ விநாயகர் கோயிலில் அனைத்து விழாக்களும் சிறப்பாக நடக்கிறது. தினம் மாலை  சொற்பொழிவுகள் நடக்கிறதாம்.   ஏதாவது ஒரு தலைப்பில்  கவிஞர்கள் ஆன்மீகம் தெரிந்தவர்களால் பேசபடுகிறதாம்.

மாலை நேர நடைபயிற்சியாக கோயிலுக்கு வந்து   விநாயகரை வணங்கி சொற்பொழிவில் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்டு   பொழுதை  நல்ல பொழுதாக்கலாம்.


வாழ்க வைய்கம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. மதுரையில் என்னுடைய தாய்மாமா ரயில்வேயில் APO ஆக இருந்தார். அப்போது ரயில்வே காலனிக்கு சென்று இருக்கிறேன்.
    .படங்கள் நன்றாக உள்ளன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
      மதுரையில் என்னுடைய தாய்மாமா ரயில்வேயில் APO ஆக இருந்தார். அப்போது ரயில்வே காலனிக்கு சென்று இருக்கிறேன்.//

      ரயில்வே காலனிக்கு மட்டும் போய் இருக்கிறீர்கள், கோயில் பார்க்கவில்லை இல்லையா?

      .படங்கள் நன்றாக உள்ளன.//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  2. பூஜை பாத்திரங்கள் சுத்தமாக இருப்பதை நானும் கவனித்தேன்.

    இதம்பாடல் எங்கள் குலதெய்வக் கோயிலில் நானும் இப்படித்தான் விளக்கி வைத்தேன்.

    இறைப்பணி மட்டும் அல்ல செய்வதை திருந்தச் செய்வதே நன்று.

    இன்று நல்ல தரிசனம் கிடைத்தது நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பூஜை பாத்திரங்கள் சுத்தமாக இருப்பதை நானும் கவனித்தேன்.//

      பூஜை பாத்திரங்கள், கருவறை தொங்கும் விளக்குகள் எல்லாம் பளிச் என்று இருக்கிறது.

      //இதம்பாடல் எங்கள் குலதெய்வக் கோயிலில் நானும் இப்படித்தான் விளக்கி வைத்தேன்.//

      நன்றாக விளக்கி வைத்த போது உங்களுக்கு மனநிறைவு கிடைத்து இருக்கும் இல்லையா?

      //இறைப்பணி மட்டும் அல்ல செய்வதை திருந்தச் செய்வதே நன்று.//
      ஆமாம், நீங்கள் சொல்வது போல இறைப்பணி என்று இல்லாமல் எந்த பணியையும் திருந்தச் செய்வதே நல்லது.

      //இன்று நல்ல தரிசனம் கிடைத்தது நன்றி//

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகு. மரங்களை வெட்டாமல் இருப்பது சிறப்பு.

    உங்கள் மூலம் எங்களுக்கும் சிறப்பான தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அழகு. //

      நன்றி.

      //மரங்களை வெட்டாமல் இருப்பது சிறப்பு.//

      மதுரையில் இரண்டு மூன்று பிள்ளையார் கோயில் போய் இருக்கிறேன் , பார்த்த கோயில்களில் எல்லாம் மரத்தை வெட்டாமல் அப்படியே சுற்றி கோயிலை அமைத்து இருக்கிறார்கள்.
      முன்பு மரத்தடியில் பிள்ளையார் மட்டும் இருந்து இருப்பார், அப்புறம் அனைத்து தெய்வங்களையும் அமைத்து கோயில் கட்டி விட்டார்கள்.


      //உங்கள் மூலம் எங்களுக்கும் சிறப்பான தரிசனம் கிடைத்தது. நன்றி//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. ரயில்வே காலனி வழியாக வந்திருக்கிறேன். இந்தக் கோவில் சென்றதில்லை. படங்கள் யாவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ரயில்வே காலனி வழியாக வந்திருக்கிறேன்.
      இந்தக் கோவில் சென்றதில்லை.//
      நானும் இரண்டு தடவைதான் போய் இருக்கிறேன்.
      தன் தங்கை ஒரு முறை அழைத்து சென்று இருக்கிறாள்.
      அதுக்கு அப்புறம் இப்போது சாரின் தம்பி குடும்பத்துடன் போய் வைந்து விட்டேன்.
      முன்பு எடுத்த படம் தேட வேண்டும்.
      இப்போது எடுத்த படத்தை போட்டு விட்டேன்.
      படம் நன்றாக எடுத்து இருக்கிறேன் என்றதற்கு நன்றி ஸ்ரீராம்.

      படங்கள் யாவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

      நீக்கு
  5. சிரமம் பார்த்து இருக்காய் தந்து உதவிய அந்தப் பெண் வாழ்க..  இப்படியும் இருக்கிறார்கள்தான...  இவர்களை எல்லாம் ஆதரிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சிரமமத்தைப்பார்த்து அந்த பெண் இரக்கப்பட்டுதான் "அம்மா உட்காருங்க" என்று நாறகாலியை போட்டார். அவர் இரக்கமனத்திற்கு வாழ்த்த வேண்டும். நல்ல பெண்.

      நீக்கு
  6. ஹோட்டலுக்கு செல்லும்போது சாப்பிட்ட தட்டை எடுப்பார்கள் அவர்களுக்கு நாங்கள் டிப்ஸ் கொடுப்பது வழக்கம்.  சத்வருக்கு டிப்ஸ் கொடுக்கும் வழக்கமுடிய பலர் இவர்களை கண்டு கொள்வதில்லை.  அதே போல சாலையோர வியாபாரிகளிடம் பேரம் பேச மாட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹோட்டலுக்கு செல்லும்போது சாப்பிட்ட தட்டை எடுப்பார்கள் அவர்களுக்கு நாங்கள் டிப்ஸ் கொடுப்பது வழக்கம். சத்வருக்கு டிப்ஸ் கொடுக்கும் வழக்கமுடிய பலர் இவர்களை கண்டு கொள்வதில்லை. அதே போல சாலையோர வியாபாரிகளிடம் பேரம் பேச மாட்டோம்.//

      ஆமாம், நாங்களும் கொடுப்போம். சாலையோர வியாபாரி மற்றும் தலையில் சுமந்து விற்கும் வயதானவர்களிடமும் பேரம் பேச மாட்டேன். வய்தானாலும் உழைத்து சம்பாதித்து சொந்த காலில் நிற்க நினைக்கும் அவர்களை வணங்க சொல்லும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலின் படங்கள் வழக்கம் போல தெளிவாகவும், நன்றாகவும் உள்ளது. முதல் விநாயகர் படமே சிறப்பாக உள்ளது. என் இஷ்ட தெய்வமான ஸ்ரீ கணேசரை பக்தியுடன் நமஸ்கரித்து கொண்டேன்.

    சீர்காழி அவர்கள் பாடிய விநாயகர் அகவல் பாடல் அருமை. இந்தப் பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். மனப்பாடந்தான்.. தினமும் சொல்வது. இன்றும் கேட்டு விட்டு பிள்ளையாரை துதித்து விட்டு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனத்தைப் பெற வைத்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியையும் கூறிக் கொண்டேன்.

    ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ
    ஸ்ரீனிவாச பெருமாள், துர்கை, மீனாட்சி சொக்கநாதர், வள்ளி தெய்வானையுடன் முருகர், ஹனுமன், கருமாரியம்மன். லட்சுமி நாராயணர், நந்திகேஷ்வரர், அனைவரையும் பக்தியுடன் வணங்கி கொண்டேன்.

    கோவில் நன்றாக உள்ளது. ஆல, அரச மரங்களை சிறப்பாக வடிவமைத்து அழகாக செய்திருக்கின்றனர். கோவிலில் முடியாமல் நடந்து சென்ற தங்களைக் கண்டதும் மனிதாபிமானத்துடன் அமர இருக்கை கொடுத்து உதவிய பெண்மணி நன்றாக இருக்க வேண்டும்.

    அது போல் கோவிலின் பூஜா பாத்திரங்களை பொறுப்பாக பளபளவென்று தேய்த்து கொடுக்கும் பெண்ணின் பணியும் போற்றத்தக்கது. நீங்கள் அவருக்கு உங்களால் இயன்றவரை பணம் கொடுத்து விட்டு வந்தது நல்ல சிறப்பான செயல்.

    கோவில் அழகாகவும், பெரிதாகவும் உள்ளது. விநாயகர் அனைவரையும் நல்லபடியாக காத்தருள நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தித்துக் கொள்கிறேன். இன்றைய தினத்திற்கேற்ற சிறப்பான பதிவை தந்தருளிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    தங்களின் இவ்வளவு வேலைகளின் நடுவில் என் பதிவுக்கும் வந்து நல்லதொரு கருத்துக்களை தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலின் படங்கள் வழக்கம் போல தெளிவாகவும், நன்றாகவும் உள்ளது. முதல் விநாயகர் படமே சிறப்பாக உள்ளது. என் இஷ்ட தெய்வமான ஸ்ரீ கணேசரை பக்தியுடன் நமஸ்கரித்து கொண்டேன்.//

      நன்றி கமலா உங்கள் இஷ்ட தெய்வமா மகிழ்ச்சி.

      //சீர்காழி அவர்கள் பாடிய விநாயகர் அகவல் பாடல் அருமை. இந்தப் பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். மனப்பாடந்தான்.. தினமும் சொல்வது. இன்றும் கேட்டு விட்டு பிள்ளையாரை துதித்து விட்டு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனத்தைப் பெற வைத்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியையும் கூறிக் கொண்டேன்.//

      எங்கள் வளாகத்தில் உள்ள பிள்ளையாருக்கு சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும் அதில் கலந்து கொள்வேன். இந்த கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவும் சிறப்பாக நடைபெறுமாம்.

      //ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ
      ஸ்ரீனிவாச பெருமாள், துர்கை, மீனாட்சி சொக்கநாதர், வள்ளி தெய்வானையுடன் முருகர், ஹனுமன், கருமாரியம்மன். லட்சுமி நாராயணர், நந்திகேஷ்வரர், அனைவரையும் பக்தியுடன் வணங்கி கொண்டேன்.//

      சரஸ்வதி, பிரம்மா சுதை வடிவில் இல்லாமல் கற் சிலையாக இந்த கோயிலில் தான் சேர்ந்து இருக்கிறார்கள்.

      //கோவில் நன்றாக உள்ளது. ஆல, அரச மரங்களை சிறப்பாக வடிவமைத்து அழகாக செய்திருக்கின்றனர்.//

      ஆமாம். கோயில் கட்ட மரத்தை வெட்டவில்லை என்பது மனதுக்கு மகிழ்ச்சி.

      //கோவிலில் முடியாமல் நடந்து சென்ற தங்களைக் கண்டதும் மனிதாபிமானத்துடன் அமர இருக்கை கொடுத்து உதவிய பெண்மணி நன்றாக இருக்க வேண்டும்.

      அது போல் கோவிலின் பூஜா பாத்திரங்களை பொறுப்பாக பளபளவென்று தேய்த்து கொடுக்கும் பெண்ணின் பணியும் போற்றத்தக்கது.//

      எனக்கு அமர இருக்கை கொடுத்தவரும், பூஜா பாத்திரங்களை பள பளவென்று தேய்ப்பவரும் பூஜை நேரத்தில் மணி அடிப்பவரும் ஒருவரே. அந்த பெண் மெல்லிய தேகம் கொண்டவர் ஆனால் மன வலிமை படைத்தவர் . பிரசாதம் போடவும் உதவி அவர்தான். நல்ல சுறு சுறுப்பு. உங்கள் வாழ்த்து அவரை நல்லபடியாக வைத்து இருக்கும்.

      //கோவில் அழகாகவும், பெரிதாகவும் உள்ளது. விநாயகர் அனைவரையும் நல்லபடியாக காத்தருள நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தித்துக் கொள்கிறேன். இன்றைய தினத்திற்கேற்ற சிறப்பான பதிவை தந்தருளிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.//

      இரயில்வே காலனி கட்டும் போது கிடைத்த பிள்ளையாராம். 80 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்றார்கள். எல்லோரையும் நல்லபடியாக காத்தருள பிரார்த்தனை செய்து கொள்வோம்.

      //தங்களின் இவ்வளவு வேலைகளின் நடுவில் என் பதிவுக்கும் வந்து நல்லதொரு கருத்துக்களை தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.//

      உங்கள் பொறுப்புகள்தான் அதிகம் அதற்கிடையில் வந்து விரிவான கருத்துக்கள் அதுவும் கைபேசியில் அடித்து அனுப்புவது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும் அதை சிறப்பாக செய்கிறிர்கள் அதற்கு உங்களை பாராட்ட வேண்டும்.

      உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி கமலா.










      நீக்கு
  8. பாடலைக் கேட்டுக் கொண்டே பதிவைப் பார்க்கிறேன்.

    சரஸ்வதி-பிரம்மா - திருவாச்சி அழகாக இருக்கிறது. தேவி, சிவன், விஷ்ணு என்று எல்லா கடவுளர்களும் இருக்கிறார்களே!

    பிரதோஷம் அன்று சென்று தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //பாடலைக் கேட்டுக் கொண்டே பதிவைப் பார்க்கிறேன்.//

      மகிழ்ச்சி.

      //சரஸ்வதி-பிரம்மா - திருவாச்சி அழகாக இருக்கிறது. தேவி, சிவன், விஷ்ணு என்று எல்லா கடவுளர்களும் இருக்கிறார்களே!//

      ஆமாம். இருக்கும் இடத்தில் நடுவில் மீனாட்சி சொக்கநாதர் சுற்றி அத்தனை சுவாமிகளும் இருக்கிறார்கள்.


      பிரதோஷம் அன்று சென்று தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி அக்கா//

      ஆமாம், ஓர்ப்படி முன்பு மதுரையிலிருந்த போது இந்த கோயிலுக்கு பிரதோஷம் பார்ப்பர்களாம். அதனால் போய் வந்தோம்.


      நீக்கு
  9. ஆல மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றிக் கட்டுவது நல்ல விஷயம் அக்கா. இங்கும் சில வீடுகளில் அப்படிக் கட்டுகிறார்கள். உள்ளே அடியும், வெளியில் மரங்களும்...வெளியிலிருந்து பார்க்கறப்ப இவை எங்கே இருக்கின்றன என்று தோன்றும்...உள்ளே பார்க்கறப்ப இது எந்த மரத்தின் அடி என்று தோன்றும் இல்லையா...

    ராகு , கேது பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடக்குமாம்.//

    ஓ! அங்கும் அந்த மரம் அப்படியே வைத்திருக்காங்க. அவற்றிற்குத் தண்ணீர் அபிஷேகம் செய்யறப்ப போகும் போல...மரம் அப்படியே இருந்தாலும் அடியில் மண்ணே தெரியவில்லையே அக்கா. தண்ணீர் எப்படிப் போகும்? நெரிப்பது போல அதைச் சுற்றி கட்டியிருக்காங்க மேலே....மரம் அதற்குப் பிறகு குண்டு ஆகாது போலும்....அல்லது மரம் அசையும் போது அந்தத் தளம் இடிபடாதோ?

    இங்கு ஒரு வீட்டில் அப்படி மரத்தை உள்ளே வைத்து முற்றம் போலக் கட்டி, மேலேயும் சுற்றிலும் கம்பித் தடுப்புகள் போட்டு வலையும் கட்டி வெளிச்சம் வருவது போலவும் மழை பெய்தாலும் தண்ணீர் விழுவது போலவும் கட்டியிருந்தாங்க. வீட்டின் அறைகள் இருக்கும் பகுதிக்கு அடுத்தாப்ல இருக்கற work area னு சொல்லி துணி துவைக்கும் மெஷின் போட்டு, பாத்திரம் கழுவ பெரிய பேசின் என்று இருக்கும் பகுதியில். அதனால் இப்பகுதிக்கும் அப்பகுதிக்கும் இடையில் கதவு நன்றாகப் பூட்டிக் கொள்ளலாம்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆல மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றிக் கட்டுவது நல்ல விஷயம் அக்கா. இங்கும் சில வீடுகளில் அப்படிக் கட்டுகிறார்கள்//

      தெண்னை மரத்தை வைத்து கொண்டு கட்டி இருக்கிறார்கள் பார்த்து இருக்கிறேன்.

      .// உள்ளே அடியும், வெளியில் மரங்களும்...வெளியிலிருந்து பார்க்கறப்ப இவை எங்கே இருக்கின்றன என்று தோன்றும்...உள்ளே பார்க்கறப்ப இது எந்த மரத்தின் அடி என்று தோன்றும் இல்லையா..//

      ஆலமரம், அரச மரம் கோயிலில் மட்டும் இருக்கும். வேப்ப மரத்தை வெட்டாமல் கோயில் கட்டி இருப்பார்கள்

      //ஓ! அங்கும் அந்த மரம் அப்படியே வைத்திருக்காங்க. அவற்றிற்குத் தண்ணீர் அபிஷேகம் செய்யறப்ப போகும் போல...மரம் அப்படியே இருந்தாலும் அடியில் மண்ணே தெரியவில்லையே அக்கா. தண்ணீர் எப்படிப் போகும்? நெரிப்பது போல அதைச் சுற்றி கட்டியிருக்காங்க மேலே....மரம் அதற்குப் பிறகு குண்டு ஆகாது போலும்....அல்லது மரம் அசையும் போது அந்தத் தளம் இடிபடாதோ?//

      வளர்ந்து விட்ட மரத்திற்கு தண்ணீர் வேண்டியது இல்லை மழை காலத்தில் வேர்களில் சேமித்த தண்ணீரே போதும். பூமியிலிருந்தும் நீரை எடுத்து கொள்ளும். மரத்தை சுற்றி டைலஸ் பதித்து விட்டார்கள்.
      அபிஷேக நீர் போக வேறு வழி வைத்து இருப்பார்கள்.
      கோயிலில் அபிஷேக நீர் தேங்கி வாடை அடிக்கவில்லை, மிகவும் சுத்தமாக இருக்கிறது. மரக்கிளைகளை வெட்டி இருக்கிறார்கள் ஆலமரம், அரசமரம் மரம் அடிபாகம் மிக கனமாக இருக்கும் ஆடாது, கிளைகள் தான் ஆடும். கிளைகளால் பாதிப்பு இருக்காது என்றே நினைக்கிறேன்.

      //இங்கு ஒரு வீட்டில் அப்படி மரத்தை உள்ளே வைத்து முற்றம் போலக் கட்டி, மேலேயும் சுற்றிலும் கம்பித் தடுப்புகள் போட்டு வலையும் கட்டி வெளிச்சம் வருவது போலவும் மழை பெய்தாலும் தண்ணீர் விழுவது போலவும் கட்டியிருந்தாங்க. வீட்டின் அறைகள் இருக்கும் பகுதிக்கு அடுத்தாப்ல இருக்கற work area னு சொல்லி துணி துவைக்கும் மெஷின் போட்டு, பாத்திரம் கழுவ பெரிய பேசின் என்று இருக்கும் பகுதியில். அதனால் இப்பகுதிக்கும் அப்பகுதிக்கும் இடையில் கதவு நன்றாகப் பூட்டிக் கொள்ளலாம்.//

      நல்லது தான் அப்படி செய்வது வீட்டுக்கு வெளிச்சம் ஆச்சு. மரமும் வெட்டப்படவில்லை.

      .

      நீக்கு
  10. கோயிலில் திருவாசகம் பாடினவங்களோடு சேர்ந்து நீங்களும் பாடியது மகிழ்ச்சியான விஷயம். உங்களுக்கும் மனம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    பிரதோஷ நாயகர்கள் ரிஷபவாகனத்தில் அலங்காரமாக இருக்கிறார்கள்.//

    ரொம்ப அழகு!!! பார்த்து ரசித்தேன்.

    இங்கு நாம் நின்று நிதனமாக தரிசனம் செய்யலாம்.//

    பெரிய கோயிலில் ஆமாம் நின்று தரிசிக்க முடியாது ....இங்கு நிதானமாக முடிவது நல்லது. சொக்கநாதர் அழகு. அம்மையும்தான். புடவை/தாவணி போல... கொசுவம் மடிப்பு மிக அழகாகச் செய்திருக்காங்க.

    பூஜை பாத்திரங்கள் மிகவும் பள பள என்று புதுசு போல இருக்கு. எப்படி இப்படி பராமரிக்கறாங்க!!!

    கோவில் பணி பெண்ணை வாழ்த்தி பாராட்டி கொஞ்சம் பணம் கொடுத்து வந்தேன். அவரும் மகிழ்ச்சியாக பெற்று கொண்டார்.//

    மிக நல்ல விஷயம். வாழ்த்துகள் அக்கா. இப்ப கொஞ்சமாயிடுச்சோன்னு பரவால்லக்கா அடுத்த முறை கொடுங்க.

    நாசா விஷயம் செய்தியில் வாசித்ததுண்டு.

    கோயிலுக்குச் செல்வதும் நல்ல நடைப்பயிற்சிதான் கோமதிக்கா.

    படங்கள் ரொம்பவே விளக்கமாக எடுத்திருக்கீங்க கூடவே எல்லா விஷயங்களும் சொல்லியிருக்கீங்க. சிறப்பாக பிரதோஷம் தரிசனம்!

    கீதா









    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோயிலில் திருவாசகம் பாடினவங்களோடு சேர்ந்து நீங்களும் பாடியது மகிழ்ச்சியான விஷயம். உங்களுக்கும் மனம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.//

      மேலூம் பூஜை முடியும் வரை இருக்க ஆசைதான். ஆனால் திருமண நடந்த வீட்டுக்கு விசாரிக்க போக வேண்டும். 7 மணிக்கு வருகிறோம் என்று சொல்லி இருந்தோம். அவர்களுக்கும் வேறு வேலைகள் இருப்பதால் 7 மணிக்கு வந்து விடுங்கள் என்று சொல்லி இருந்தார்கள். அதனால் மனம் இல்லாமல் தான் கோயிலை விட்டு வந்தோம். அவர்களுடன் பாடியது மனதுக்கு மகிழ்ச்சிதான்.


      //பெரிய கோயிலில் ஆமாம் நின்று தரிசிக்க முடியாது ....இங்கு நிதானமாக முடிவது நல்லது. சொக்கநாதர் அழகு. அம்மையும்தான். புடவை/தாவணி போல... கொசுவம் மடிப்பு மிக அழகாகச் செய்திருக்காங்க.//

      இரண்டு குருக்கள், அம்மனுக்கு ஒருவர், சுவாமிக்கு ஒருவராக செய்தார்கள் அலங்காரம். அதனால் விரைவில் திரை விலகியது.

      //பூஜை பாத்திரங்கள் மிகவும் பள பள என்று புதுசு போல இருக்கு. எப்படி இப்படி பராமரிக்கறாங்க!!!//

      ஆமாம். மிகவும் அருமையாக இருந்தது.

      //மிக நல்ல விஷயம். வாழ்த்துகள் அக்கா. இப்ப கொஞ்சமாயிடுச்சோன்னு பரவால்லக்கா அடுத்த முறை கொடுங்க.//

      வாய்ப்பு கிடைத்தால் செய்ய வேண்டும்.

      //கோயிலுக்குச் செல்வதும் நல்ல நடைப்பயிற்சிதான் கோமதிக்கா.//

      நம் வீட்டிலிருந்து நடைபயிற்சி செய்து போக முடியாது. இரயில்வேகாலனி மக்கள் அப்படி வந்து போகலாம் என்றேன்.

      //படங்கள் ரொம்பவே விளக்கமாக எடுத்திருக்கீங்க கூடவே எல்லா விஷயங்களும் சொல்லியிருக்கீங்க. சிறப்பாக பிரதோஷம் தரிசனம்!//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  11. சிறப்பான தரிசனம்... அழகான காட்சிகள்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சிறப்பான தரிசனம்... அழகான காட்சிகள்..

      மகிழ்ச்சி.. நன்றி..//

      நன்றி.


      நீக்கு
  12. //. பூஜை பாத்திரங்கள், விளக்கு எல்லாம் புதிது போல பள பள என்று தேய்த்து சுத்தமாக இருந்தது. கோவில் பணி பெண்ணை வாழ்த்தி பாராட்டி கொஞ்சம் பணம் கொடுத்து வந்தேன். //

    இதற்கெல்லாம் மிகப் பெரிய மனது வேண்டும்..

    ஈசன் அருளுடன் இனிதே வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதற்கெல்லாம் மிகப் பெரிய மனது வேண்டும்..

      ஈசன் அருளுடன் இனிதே வாழ்க.//

      உங்கள் கருத்துக்கு நன்றி..//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. பாடல் இப்போதுதான் கேட்கிறேன் முதல் முறையாக. மிக அருமையான பாடல்.

    பிரதோஷ தினத்தன்று தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ஆராதனை தரிசனம், பாடல் பாடக் கிடைத்த அனுபவம் எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது. மனதிற்கு ஆறுதல் கிடைத்திருக்கும்.

    கோயிலில் உள்ள எல்லா சன்னதிகளும், இறைவன் படங்களும் மிக அருமை என்பதோடு பூஜை பாத்திரங்கள் மிகவும் சுத்தமாகத் துலக்கி வைத்திருப்பதும் அப்பெண்மணிக்கு நீங்கள் உழைப்பிற்கும் அவர்களது ஈடுபாட்டையும் மனதில் கொண்டு உதவியது மிகவும் சிறப்பு.

    மரங்களை வெட்டாமல் வைத்திருந்து சுற்றிக் கட்டியதும் மகிழ்ச்சி.

    ரிஷப வாகனத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு மனம் ஆனந்தம் அடைகிறது.

    மிக்க நன்றி சகோதரி செல்வ விநாயகர் கோயில் படங்களும் நீங்கள் பெற்ற தரிசனத்தை எங்களுக்கும் படங்களுடன் விளக்கங்களுடன் காட்டியதற்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ வாழ்க வளமுடன்

      //பாடல் இப்போதுதான் கேட்கிறேன் முதல் முறையாக. மிக அருமையான பாடல்.//

      நன்றி. ஒளவையார் அருளிய பாடல்.

      //பிரதோஷ தினத்தன்று தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ஆராதனை தரிசனம், பாடல் பாடக் கிடைத்த அனுபவம் எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது. மனதிற்கு ஆறுதல் கிடைத்திருக்கும்.//

      ஆமாம், உறவுகளுடன் கோயில் தரிசனம், பாடி வழி பட்டது மனதுக்கு ஆறுதல்தான்.

      //மரங்களை வெட்டாமல் வைத்திருந்து சுற்றிக் கட்டியதும் மகிழ்ச்சி.//

      ஆமாம், அதுதான் மிகுந்த மகிழ்ச்சி.

      //ரிஷப வாகனத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு மனம் ஆனந்தம் அடைகிறது.//

      பிரதோஷ சுவாமி அதில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வரும் அதை காண்பது தான் பிரதோஷ சிறப்பு.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .


      நீக்கு
  14. பிரதோஷ வழிபாட்டுப் படங்கள் சிறப்பு.

    கோவில் அழகுற இருக்கிறது. பல மூர்த்திகளையும் ஒருசேர தரிசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //பிரதோஷ வழிபாட்டுப் படங்கள் சிறப்பு.

      கோவில் அழகுற இருக்கிறது. பல மூர்த்திகளையும் ஒருசேர தரிசிக்கலாம்.//

      ஆமாம், ஒரே கோயிலில் எல்லோரையும் வணங்கி விடாலம்.
      காலனியில் உள்ள வயதானவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

      நீக்கு
  15. மரங்களைச் சுற்றி கட்டிடம் கட்டியிருப்பது அழகு. ஆலமரமும் அரசமரமும் நெடுங்காலம் வாழ்பவை. ஆலமரத்தின் புதிய கிளைகளை என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரங்களைச் சுற்றி கட்டிடம் கட்டியிருப்பது அழகு. ஆலமரமும் அரசமரமும் நெடுங்காலம் வாழ்பவை. ஆலமரத்தின் புதிய கிளைகளை என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை//

      ஆலமரத்தின் அடிமரம் மட்டும் தான் கீழே இருக்கிறது. கிளைபரப்பி மேலே இருக்கிறது. புதிய கிளைகள் அடிமரத்தில் வர வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  16. இறைவனுக்குப் பாமாலை சூட்டும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இறைவனுக்குப் பாமாலை சூட்டும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.//

      மாயவரத்தில் ஞாயிறு தோறும் புனூகீஸ்வரர் கோயிலில் வார வழி பாடு செய்வோம். தேவார, திருவாசகம் படிப்போம். வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு கூட்டு வழிபாடு செய்வோம்.

      இங்கு வந்தும் பாரதி நகர், தபால் தந்தி நகரில் இருக்கும் கோயில்களில் கூட்டு வழிபாட்டில் கலந்து பாடினேன்.

      இந்த வீட்டுக்கு வந்தபின் போகவில்லை.
      இப்போது வளாகத்தில் பிள்ளையார் வந்த பின் சங்கடஹர சதுர்த்தியில் பாடும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

      தினம் மாலை 5 மணியிலிருந்து 6மணி வரை வாட்ஸப் குழுவில் கூட்டு வழிபாடு செய்கிறோம்.(ஞாயிறு மட்டும் கிடையாது)

      இறைவன் எப்படியாவது பாடும் வாய்ப்பு கொடுக்கிறார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை. பிஸியாக இருக்கும் போதும் கருத்துக்களை வழங்கியதற்கு நன்றிகள் பல.

      நீக்கு
  17. செல்வ விநாயகர் கோயில் தரிசித்தோம்.

    விநாயகர்,ஏனைய தெய்வங்கள் அனைத்தும் அலங்காரங்களுடன் அழகாக இருக்கிறார்கள்.

    மரங்களை பேணிக்காப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //செல்வ விநாயகர் கோயில் தரிசித்தோம்.

      விநாயகர்,ஏனைய தெய்வங்கள் அனைத்தும் அலங்காரங்களுடன் அழகாக இருக்கிறார்கள்.

      மரங்களை பேணிக்காப்பது சிறப்பு.//

      ஆமாம், மரங்களை பேணிக்காப்பது சிறப்புதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  18. இப்போது உங்கள் கால்வலி எப்படி இருக்கிறது? தேவலையா? எனக்கு 2018ல் கால்வலி (பாதவலி) மிக அதிகம். டாக்டரோ, ஒரு வருடத்திற்கு கோவில்லாம் போகாதீங்க, அங்குள்ள கல் தரைகளில் வெறும் பாதத்தில் நடந்தால் இன்னும் கால்வலி அதிகமாகும் என்றார். கஷ்டத்தோடே கோவில் தரிசனங்களும் தொடர்ந்தன. இப்போதும் என் பாதம் வீக்தான். அனேகமாக எப்போதும் MCR செருப்புகளை வீட்டிலும் உபயோகிக்கிறேன், வெளியில் செல்லும்போது Silicon gel heal cups உபயோகிக்கிறேன் (என் ஒவ்வொரு ஷூ, செருப்பிலும் அது உண்டு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது உங்கள் கால்வலி எப்படி இருக்கிறது? தேவலையா?//

      இல்லை அதிகமாக இருக்கிறது. வெகு நேரம் அமர்ந்து விட்டால் எழுந்து நடக்க முடியவில்லை, வலி அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் தூரம் நடந்தபின் தான் சரியாகும்.

      நடக்க முடியவில்லை 10, 15 நிமிடங்களுக்கு மேல். மொட்டை மாடியில் நடைபயிற்சி செய்வது ஒரு நாலு நாள் போனேன். படி ஏற வேண்டி இருப்பதால் அப்புறம் போகவில்லை.

      கீழே இருக்கும் பிள்ளையாரை வலம் வந்து கீழேயே கொஞ்சம் நடந்து விட்டு வந்து விடுகிறேன்.

      பையன் ஷூ அணிந்து நடந்து போ என்கிறான், அதை கழற்றி சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மாட்டி வர சோம்பல் அதனால் செருப்பு அணிந்து நடைபயிற்சி செய்வதால் வலி அதிகமாக உள்ளது.


      //எனக்கு 2018ல் கால்வலி (பாதவலி) மிக அதிகம். டாக்டரோ, ஒரு வருடத்திற்கு கோவில்லாம் போகாதீங்க, அங்குள்ள கல் தரைகளில் வெறும் பாதத்தில் நடந்தால் இன்னும் கால்வலி அதிகமாகும் என்றார். கஷ்டத்தோடே கோவில் தரிசனங்களும் தொடர்ந்தன. இப்போதும் என் பாதம் வீக்தான். அனேகமாக எப்போதும் MCR செருப்புகளை வீட்டிலும் உபயோகிக்கிறேன், வெளியில் செல்லும்போது Silicon gel heal cups உபயோகிக்கிறேன் (என் ஒவ்வொரு ஷூ, செருப்பிலும் அது உண்டு)//

      நானும் முன்பு MCR செருப்புகள் தான் அணிந்தேன். கும்பகோணத்தில் சாக்கோட்டை என்ற இடத்தில் போய் வாங்குவேன். அப்புறம் மாயவரத்தில் பிசியோதெரபி செய்பவர் வாங்கி விற்றார் அவரிடம் வாங்கி கொள்வேன். மதுரை வந்த பின் அது போல செருப்பு கிடைக்கவில்லை, தேடிப்பார்க்க வேண்டும்.

      //Silicon gel heal cups உபயோகிக்கிறேன் (என் ஒவ்வொரு ஷூ, செருப்பிலும் அது உண்டு)//

      நானும் வாங்கி கொள்கிறேன். உங்கள் அன்பான தகவலுக்கு மிகவும் நன்றி.

      நீக்கு