செவ்வாய், 21 மார்ச், 2023

நீலவானில் பறக்கும் பலூன்





பறக்கும் பலூன் 
வசந்தகாலத்தில் குளிர் குறைந்து வெயில் தலைகாட்டத் தொடங்கியவுடன்  பலூன்கள் காலை நேரம் நிறைய பறக்க ஆரம்பித்து விட்டது. எங்கள்  வீட்டுக்கு அருகில் பறந்த பலூன்களை  தோட்டத்திலிருந்து எடுத்தேன், அந்த  படங்கள், காணொளி  இந்த பதிவில் இடம் பெறுகிறது. 



நீலவானில் பறக்கும் பலூன்

வண்ண பலூன்களைக் கண்டால் குழந்தையைப் போலக் குதூகலிக்கிறது மனம்.

சிறு குழந்தைகளுக்கு வானத்தில் பறக்கும் விமானம், பட்டம், பலூன் எல்லாம் பிடிக்கும் தானே! வயதாகி விட்டால் குழந்தையாகிவிடுவார்கள் என்பார்கள் நானும் குழந்தையாகி  விடுகிறேன்.
பயிற்சி விமானங்களும், ஹெலிகாப்டரும்  பறக்கும் அதையும் படம் எடுத்து வைத்து இருக்கிறேன். ஒரு பதிவில் போடுகிறேன்.

மகன் வீட்டுக்கு மேலே பறக்கும் போது

வீட்டின் முன்பக்கம் வந்த போது

மேலே இருந்து கீழே பார்த்து எனக்கு கை காட்டுகிறார்கள்

வீட்டுக்கு பின் புறம் பறந்த போது எடுத்தது

வேறு ஒரு பலூன் கொஞ்சம் தூரத்தில் பறந்தது








தோட்டத்தின் மதில் சுவர் பக்கம்
அன்று நிறைய பறந்த போது

பறக்கும் மனிதன் பெ.தூரன்  அவர்கள் எழுதிய நூல் படித்து பாருங்கள்,. மனிதன் பறவையை கண்டு பறக்க முயற்சி செய்து  இப்போது  பறவையை விட அதிக தூரம் பறக்க கற்றுக் கொண்டதை படிபடியாக சொல்லும் நூல். படங்களுடன் இருக்கிறது. முதல் படி பலூனில் பறந்த செய்தி இருக்கிறது படத்தோடு.

பறக்கும் வண்ண பலூன்   என்று முன்பு போட்ட பதிவு. படிக்கவில்லையென்றால் படிக்கலாம். அதில் அழகிய வண்ண பலூன் எல்லாம் பார்க்கலாம். 

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே!" சாந்தி நிலையம் பாடல் கேட்கலாம்.


வண்ண பலூனில் பறக்கும்  காட்சி பார்க்கலாம்.






 மேலே உள்ள இந்த இரண்டு படங்களின் காணொளி  முன்பு எடுத்த படம் வீட்டுக்கு அருகாமையில் பறந்த போது எடுத்த படம், காணொளி.
தீ எரிவது,  கீழே உள்ள கூடை,  கூடையில் ஆட்கள் பக்கத்தில் தெரிவார்கள்.  பார்க்கலாம்.
நீலவானில் பறக்கும் போது பார்க்க நன்றாக இருக்கிறது.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. பறக்கும் பலூன் குறித்த பதிவும், பகிர்ந்து கொண்ட படங்கள், காணொளி என அனைத்தும் அருமை. மிகவும் ரசித்தேன் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      //பறக்கும் பலூன் குறித்த பதிவும், பகிர்ந்து கொண்ட படங்கள், காணொளி என அனைத்தும் அருமை. மிகவும் ரசித்தேன் அம்மா.//

      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. காணொளிகள் பார்த்தேன்.  பதிவு படிக்க ஆரம்பித்ததுமே எனக்கு நினைவுவ அந்த பாடலை நீங்களே கீழே கொடுத்து விட்டீர்கள்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //காணொளிகள் பார்த்தேன். பதிவு படிக்க ஆரம்பித்ததுமே எனக்கு நினைவுவ அந்த பாடலை நீங்களே கீழே கொடுத்து விட்டீர்கள்! //

      பழைய பதிவில் பகிர்ந்த பாடலை கேட்டு விட்டு சொன்னது:-


      "பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.. " பாடல் வரிகளுக்காகவே ரொம்ப ரசிக்கும் பாடல்.
      இப்படி சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  3. பயமில்லாமல் பறக்கிறார்களே..  வெர்டிகோ பிரச்னையும் இல்லாதவர்கள் போல..  எனக்கெல்லாம் கொஞ்சம் உயரத்தில் நின்றாலே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயமில்லாமல் பறக்கிறார்களே.. வெர்டிகோ பிரச்னையும் இல்லாதவர்கள் போல.. எனக்கெல்லாம் கொஞ்சம் உயரத்தில் நின்றாலே....!//

      ஆமாம், பயமில்லாதவர்கள் தான் பறக்க முடியும்.

      நீக்கு
  4. ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறதே தவிர அவர்கள் முகங்கள் தெரிவதில்லை.  மேலே அதை இயக்க தனி ஆட்கள் இருப்பார்களா, இவர்களே இயக்கிக் கொள்ள வேண்டியதுதானா?  எப்படி இறக்குவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறதே தவிர அவர்கள் முகங்கள் தெரிவதில்லை. //
      கழுத்தை உயர்த்தி முடிந்தவரை ஜூம் செய்து எடுத்தபடம். அடுத்த முறை ஆட்கள் தெரிவது போல எடுக்க முயற்சி செய்கிறேன்.

      பைலட் உண்டு என்று நினைக்கிறேன். காற்றை நிரம்பி கூட்டி போகவும், காற்றை இறக்கி கீழே இறக்கவும் வேண்டும் தானே!
      இறங்கும் தளம் வந்தவுடன்
      மேலும் விவரம் மகனிடம் கேட்டு சொல்கிறேன்.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பலூன்களின் பிரமாண்டம் கலர் வடிவமைப்பு எல்லாமே பிரமிப்பாக உள்ளது. இங்கெல்லாம் இப்படி பார்ப்பது அரிது. ஆனால், வேறு எங்காவது உண்டோ என்னவோ தெரியவில்லை.

    எல்லா படங்களும் நன்றாக உள்ளது. படங்களை நன்றாக எடுத்துள்ளீர்கள். பதிவின் நடுவிலேயே நீங்கள் தந்த சுட்டி வழி சென்று அங்குள்ள பலூன் படங்களை ரசித்து விட்டு, ஒரு கருத்தையும் தந்து விட்டு வந்தேன்.

    சாந்தி நிலையம் படப்பாடலும் பதிவுக்கு பொருத்தமாக இருக்கிறது. அந்தப்பாடலும் இனிமை.நான் பதிவை படித்து வருகையில் அந்தப்பாடல் நினைவுக்கு வந்தவுடனே நீங்களும் அந்தப்பாடலை அங்குமிங்குமாக நினைவுபடுத்தி விட்டீர்கள்.

    காணொளிகள் நன்றாக உள்ளது. அதில் பறப்பவர்கள் நல்ல தைரியசாலிகள்தான். நம்மால் இப்படி முடியுமா எனவும் மலைப்பாகத் தோன்றுகிறது. ஆனால் சிறு வயதில் மனதிலும், உடலிலும் இருக்கும் தைரியம் நமக்கு இப்போது குறைந்து விட்டதால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ எனவும் நான் நினைக்கிறேன்.

    இரண்டு நாட்களாக வலையுலகம் வர இயலவில்லை. நேற்று இரவு படுக்கப் போகும் முன் உங்கள் முந்தைய பதிவுக்கு ஒரு அவசர கருத்து தந்து விட்டேன். (அந்தக் காணொளிகளைப் கூட நன்றாக பார்வையிடாமல்...) பிறகு நிதானமாக அதையும் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      பதிவு அருமை. பலூன்களின் பிரமாண்டம் கலர் வடிவமைப்பு எல்லாமே பிரமிப்பாக உள்ளது. இங்கெல்லாம் இப்படி பார்ப்பது அரிது. ஆனால், வேறு எங்காவது உண்டோ என்னவோ தெரியவில்லை.//

      நம் நாட்டிலும் இப்போது வந்து விட்டது.

      //எல்லா படங்களும் நன்றாக உள்ளது. படங்களை நன்றாக எடுத்துள்ளீர்கள். பதிவின் நடுவிலேயே நீங்கள் தந்த சுட்டி வழி சென்று அங்குள்ள பலூன் படங்களை ரசித்து விட்டு, ஒரு கருத்தையும் தந்து விட்டு வந்தேன்.//

      ஆமாம், அதை படித்து பதிலும் கொடுத்து விட்டேன். பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //சாந்தி நிலையம் படப்பாடலும் பதிவுக்கு பொருத்தமாக இருக்கிறது. அந்தப்பாடலும் இனிமை.நான் பதிவை படித்து வருகையில் அந்தப்பாடல் நினைவுக்கு வந்தவுடனே நீங்களும் அந்தப்பாடலை அங்குமிங்குமாக நினைவுபடுத்தி விட்டீர்கள்.//

      பாடல் இனிமைதான். கேட்டு ரசித்தது மகிழ்ச்சி.


      //காணொளிகள் நன்றாக உள்ளது. அதில் பறப்பவர்கள் நல்ல தைரியசாலிகள்தான். நம்மால் இப்படி முடியுமா எனவும் மலைப்பாகத் தோன்றுகிறது. ஆனால் சிறு வயதில் மனதிலும், உடலிலும் இருக்கும் தைரியம் நமக்கு இப்போது குறைந்து விட்டதால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ எனவும் நான் நினைக்கிறேன்.//

      நீங்கள் சொல்வது போல இருக்கலாம் நமக்கு. ஆனால் இங்கு வயதானவர்கள்தான் இதில் அதிகமாக பறக்கிறார்கள்.

      //இரண்டு நாட்களாக வலையுலகம் வர இயலவில்லை. நேற்று இரவு படுக்கப் போகும் முன் உங்கள் முந்தைய பதிவுக்கு ஒரு அவசர கருத்து தந்து விட்டேன். (அந்தக் காணொளிகளைப் கூட நன்றாக பார்வையிடாமல்...) பிறகு நிதானமாக அதையும் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். பாடல்களை நிதானமாக கேட்கலாம்.

      வீட்டுவேலைகளுக்கு இடையில் வந்து படித்து விரிவாக கருத்து சொல்வது மிகவும் மகிழ்ச்சி. நன்றி நன்றி.








      நீக்கு
  6. பலூன் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    காணொளிகள் கண்டேன்.

    பலூனை ரசிப்பதற்கு வயது வித்தியாசம் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பலூன் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

      ஆமாம், வித விதமாக இருக்கிறது, முன்பே எடுத்து விட்டோம் என்று விட முடியவில்லை, நன்றாக இருந்தால் படம், காணொளி எடுத்து விடுகிறேன்.

      காணொளிகள் கண்டேன்.//

      மகிழ்ச்சி.

      //பலூனை ரசிப்பதற்கு வயது வித்தியாசம் கிடையாது.//

      நீங்கள் சொல்வது சரிதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //எனக்கும் இப்படி ஆசை உண்டு... ம்.//

      பலூன் பார்ப்பதா, பலூனில் பறக்கவா என்ன ஆசை?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பறக்கும் பலூன்களும் படங்களும் அழகு.
    பறப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமானதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //பறக்கும் பலூன்களும் படங்களும் அழகு.
      பறப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமானதே.//

      ஆமாம், மாதேவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பறக்கும் பலூன் ஆஹா வெகு அழகு. எனக்கும் பிடிக்கும் இப்படிப் பறப்பது. நான் ஷிம்லா மணாலி போயிருந்தப்ப பாரா க்ளைடிங்க் செய்திருக்கிறேன்....

    காணொளியும் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா....ஓடி ஓடி படம் எடுத்திருக்கீங்க...படங்களும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //பறக்கும் பலூன் ஆஹா வெகு அழகு. எனக்கும் பிடிக்கும் இப்படிப் பறப்பது. நான் ஷிம்லா மணாலி போயிருந்தப்ப பாரா க்ளைடிங்க் செய்திருக்கிறேன்....//

      ஓ! நன்றாக இருந்து இருந்து இருக்குமே!

      //காணொளியும் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா....ஓடி ஓடி படம் எடுத்திருக்கீங்க...படங்களும் ரசித்தேன்//
      ஆமாம், ஓடி ஓடி இல்லை நடந்து நடந்து!
      வீட்டின் முன் பக்கம், பின் பக்கம், பக்கவாட்டில் என்று எடுத்து இருக்கிறேன்.
      அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி கீதா.

      நீக்கு
  10. பெதூரன் அவர்கல் எழுதியிருப்பதை வாசிக்கிறேன். குறித்துக் கொண்டுவிட்டேன்...உங்களின் முந்தைய பதிவும் பார்க்கிறேன் கோமதிக்கா

    தீ எரிகிறதே அது ஆபத்து இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெதூரன் அவர்கல் எழுதியிருப்பதை வாசிக்கிறேன். குறித்துக் கொண்டுவிட்டேன்...உங்களின் முந்தைய பதிவும் பார்க்கிறேன் கோமதிக்கா

      தீ எரிகிறதே அது ஆபத்து இல்லையோ?//

      நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் கீதா.
      தீ ஜூவாலை மேலே போய் விடும் ஆபத்து இல்லை.

      நீக்கு
  11. எப்படிக்கா சினிமா பாட்டு கரெக்ட்டா பதிவுக்கு ஏற்ப நினைவில் வைத்து போடுறீங்க!!! பாராட்டுகள் வாழ்த்துகள் கோமதிக்கா!

    பலூன் என்ன பெரிசு இல்லையா?

    ஒவ்வொரு வீட்டிலும் வைச்சிருப்பாங்களா இப்படி பறக்க இல்லை பைசா கட்டி இதுக்குன்னு க்ளப் இருக்குமோ? ஒரு பலூனில் எத்தனைப்பேர் போகலாம்? இணையத்திலும் பார்க்கிறேன். மகனிடம் கேட்க வேண்டும் அங்கும் உண்டா இப்படி என்று

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்படிக்கா சினிமா பாட்டு கரெக்ட்டா பதிவுக்கு ஏற்ப நினைவில் வைத்து போடுறீங்க!!! பாராட்டுகள் வாழ்த்துகள் கோமதிக்கா!//

      சாந்தி நிலையம் பாடல் மறக்கவே மறக்காது சின்ன வயதில் ரசித்துப்பார்த்த படம். இப்போதும் தொலைக்காட்சியில் வைத்தால் பார்ப்பேன். இயற்கை காட்சிகள், பாடல்கள் என்று மனம் கவர்ந்த படம்.

      //பலூன் என்ன பெரிசு இல்லையா?//
      ஆமாம், சின்னதும் இருக்கிறது, இதை விட பெரிதும் இருக்கிறது.

      //ஒவ்வொரு வீட்டிலும் வைச்சிருப்பாங்களா இப்படி பறக்க இல்லை பைசா கட்டி இதுக்குன்னு க்ளப் இருக்குமோ? ஒரு பலூனில் எத்தனைப்பேர் போகலாம்? இணையத்திலும் பார்க்கிறேன். மகனிடம் கேட்க வேண்டும் அங்கும் உண்டா இப்படி என்று//

      ஒரு ஆளுக்கு நம் ஊர் பணத்தில் 25 ,000 போல என்று நினைக்கிறேன்.
      பணம் கட்டிதான் போக வேண்டும் இது தனி தனியாக வைத்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. ///வண்ண பலூன்களைக் கண்டால் குழந்தையைப் போலக் குதூகலிக்கிறது மனம்.///

    இப்படியெல்லாம் ஓய்வு நேரத்தை மகிழ்வுடன் கழிக்கும் போது மனதுக்கு வருத்தம் என்பது ஏது?..

    ஆனாலும் அந்த நாட்டில் எப்படியோ தெரியவில்லை...

    இங்கெல்லாம் இப்படி வருவதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்

      //இப்படியெல்லாம் ஓய்வு நேரத்தை மகிழ்வுடன் கழிக்கும் போது மனதுக்கு வருத்தம் என்பது ஏது?..//

      மனது வருத்தம் அந்த நேரம் ஓரம் கட்டப்படும்.

      ஆனாலும் அந்த நாட்டில் எப்படியோ தெரியவில்லை...

      இங்கெல்லாம் இப்படி வருவதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ
      ஜனவரி 13 ம் தேதியிலிருந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நட்க்கிறதாம், பறக்க ஆசை உள்ளவர்கள் அதில் பயணிக்கலாம். என்று சுற்றுலாதுறை மேம்படுத்து நோக்கத்தில் 8வது பலூன் திருவிழா அழைப்பு பத்திரிக்கையில் வந்து இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  13. தாங்கள் அளித்த உற்சாகம் தான் என்னை நவகோள் மாலையை எழுத வைத்தது..

    எழுதும் போது அவ்வளவாகத் தெரியவில்லை..

    இன்று காலையில் பதிவில் படிக்கும் போது பிரமிப்பு - நானா எழுதினேன் என்று...

    தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    வாழ்க நலமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாங்கள் அளித்த உற்சாகம் தான் என்னை நவகோள் மாலையை எழுத வைத்தது//

      இறைவன் உங்கள் பாமாலையை விரும்பி கேட்டு இருக்கிறார்.
      அவர் தான் எல்லா வற்றுக்கும் காரணம்.
      நாங்கள் கருவிகள்தான்.

      //எழுதும் போது அவ்வளவாகத் தெரியவில்லை..

      இன்று காலையில் பதிவில் படிக்கும் போது பிரமிப்பு - நானா எழுதினேன் என்று...//

      இறைவன் எழுதவைத்தான், உள்ளிருந்து அவன் சொல்வதை நீங்கள் எழுதினீர்கள். அப்புறம் எப்பாடி நல்லா இல்லாமல் போகும்?

      பாடவைத்தவன் இறைவன், பாட்டுக்கு அவன்தான் தலைவன்.

      தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...//

      உங்களுக்கு வாழ்த்துக்கள், நல்ல பாமாலை இறைவனுக்கு தொடுத்த உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

      நீக்கு