வியாழன், 16 மார்ச், 2023

பார்லெட் ஏரி அரிசோனா ,(Bartlett Lake, Arizona )


Bartlett Lake, Arizona 

பீனிக்ஸ் ஊரிலிருந்து 48 மைல் தூரத்தில் உள்ள பார்லெட் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை போய் இருந்தோம்.

பார்லெட் ஏரி அரிசோனாவில் உள்ள வெர்டே ஆற்றின் அணைக்கட்டினால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் .  உப்பு நதி திட்டத்தால் 1936 -39 இல் கட்டப்பட்டது . இது டோன்டோ தேசிய வனப்பகுதியில்  உள்ள பொழுது போக்கு இடம்.

குளிர்காலத்திற்கு பிறகு வசந்த காலத்தில் பூக்கும் "கோல்டன் பாப்பி" காட்டுப்பூக்கள் பூத்து      அழகாய் காட்சி அளிப்பதை பார்க்கவும், ஏரியில் நீர் சறுக்கு மற்றும் மீன் பிடிக்கவும், படகு சவாரி செய்யவும்  மக்கள் கூடினார்கள்.
 
நாங்கள் கோல்டன் பாப்பி மலர்களை பார்த்ததை போன பதிவில்  பகிர்ந்து இருந்தேன். 

ஏரிக்கு வரும்  வழியில் பார்த்த வசந்த கால பூக்கள்  
 பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

 
படகு வீடுகள்

 வாடகைக்கு படகு வீடுகள் எடுத்து கொண்டு ஏரியில் நாமே ஓட்டி செல்லாம்.

கார் நிறுத்தும் இடம், இங்கே காரை  நிறுத்திவிட்டு   கொஞ்சம் கொஞ்சம் படியில் இறங்க வேண்டும், அப்புறம் ஓத்தையடி பாதை போல நடந்து போக வேண்டும் ஏரிக்கு.

மிக அழகான பைக் , சனி ஞாயிறு என்றால் பைக் போட்டிகள் நடக்கும்  வித விதமான பைக் பார்க்கலாம்.
சொந்தமாக படக்கு வைத்து இருப்பவர்கள் அவர்கள் வாகனத்தில் எடுத்து வந்து கட்டணம் கட்டி ஏரியில்  பயணம் செய்கிறார்கள்.

ஏரிகரை முழுவதும் கள்ளிச்செடிகள்தான்



ஒருவர் மட்டும் ஏரியில் இறங்கினார் தண்ணீர் ஜில் என்று இருப்பதாய் சொன்னார்
நண்பர்களுடன் படகு சவாரி
எங்கு பார்த்தாலும் உப்பு பாறைகள், கற்றாழைகள்,  காட்டுச்செடிகள்

பாறையில்  ஏரி நீர் அலையாக  வந்து மோதும் போது கேட்கும் சத்தம் நன்றாக இருந்தது


விசை படகில் ஒருவர் நீர் சறுக்கு செய்கிறார்

வித விதமான படகுகள்

தங்கள் செல்லங்களுடன் வெயில் காய வந்த அன்பர்கள்


நாங்கள் வேடிக்கைப்பார்த்து  முடித்தவுடன்   மதியம் வீட்டிலிருந்து எடுத்து போய் இருந்தோம் . அங்கு அமர்ந்து உணவு உண்ட பின்  சற்று ஓய்வு எடுத்து விட்டு கிளம்பி விட்டோம்.


அப்பாவும் மகனும் சற்று ஓய்வு எடுத்தார்கள் கூடாரத்தில்
பேரன் தன் விளையாட்டு ஜீப் வைத்து  எடுத்த படம்
அவன்  டைனோசர்  உப்பு பாறை மேல் ஏறி நிற்கிறது.



பேரன் கைபிடித்து கொள்ள நடந்து மேலே வந்தோம். காலை வீட்டில் கம்யூட்டர் நாற்காலியிலிருந்து விழுந்து விட்டேன், அதனால் கவனம் கவனம் என்று பேரன்  கைபிடித்து அழைத்து வந்தான். கொஞ்சம் சறுக்கி விடும் தரையாக இருந்தது.
மகன் பேரனிடம் என்னை கவனமாக அழைத்து வர சொல்லி விட்டு பொருட்களை எடுத்து முன்னால் போய் விட்டான்.
 மேலே நின்று மகன் எடுத்த படங்கள் இவை.

பார்த்து வாங்க ஆச்சி

என் ஐபேடை மட்டும் வைத்து கொள்ளுங்கள், என் கையை பிடித்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி படி ஏறினால் போதும்

அடுத்து ஏரிக்கரையில் பார்த்த பறவைகள் பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

39 கருத்துகள்:

  1. பாப்பி என்று கஞ்சா பயிரையும் சொல்வார்கள் என்று நினைவு!  இது அதுவாக இருக்காது என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பாப்பி என்று கஞ்சா பயிரையும் சொல்வார்கள் என்று நினைவு! இது அதுவாக இருக்காது என்று நினைக்கிறேன்!//
      கசகசாவை பாப்பி என்று சொல்கிறார்கள். அதிகமாய் உண்டால் போதை போல தூக்கம் வரும். நம் ஊரில் தூக்கம் வரவில்லை என்றால் கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடிக்க சொல்வார்கள்.
      இந்த பூ அது இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் கசகசாவுக்கு இந்த மருத்துவ குணம் உண்டு. அதுபோல் ஜாதிக்காய்க்கும் தூக்கத்தை வரவழைக்கும் குணம் உண்டு.

      நீக்கு
    3. குழந்தைகளுக்கு கொடுக்கும் உரை மருந்தில் ஜாதிக்காய் அதிகம் உரைத்து கொடுத்து விட்டால் தூங்கி கிட்டே இருக்கும் குழந்தை. என் மகன் அப்படி தூங்கி கிட்டே ஒரு நாள் இருந்தான், "எல்லோரும் என்ன ஜாதிக்காயை அதிகம் உரைத்து கொடுத்து விட்டாயா" என்று கேட்டார்கள். அம்மா உரைக்கும் கல்லில் லேசாக உரைக்க வேண்டும் ஜாதிக்காயை என்பார்கள்.

      நீக்கு
    4. குழந்தைகளுக்கு முதலில் "பேர்சொல்லாதது" (! என்ன என்று உங்களுக்குத் தெரியாததா?) தான் முதலில் உரைத்து நாக்கில் மிக லேசாகவும் வயிற்றிலும் தடவுவார்கள்.  கையில் வளையம் போலவும் போட்டு விடுவார்கள்.

      நீக்கு
    5. பேர் சொல்லாதது என்று வசம்பை சொல்வார்கள். அதுவும் உரை மருந்தில் உள்ளது. கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், ஜாதிக்காய், மிளகு, அதிமதுரம், கஸ்தூரி, கோரசோனை அடங்கியது உரை மருந்து டப்பா.
      தினம் தலைக்கு குழந்தைக்கு குளிப்பாட்டியவுடன் உரைத்து கொடுப்போம். வசப்பை விளக்கில் சுட்டு கொஞ்சம் உரைத்து கொடுப்போம் , கால், கையில் தொப்பிளில் தடவி விடுவோம் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படகை நாமே ஒட்டிச் செல்லலாமா? பழக்கமில்லாமல் கைவருமா? கரையோரங்களில் கள்ளிச்செடிகள் இருந்தும் நீர்நிலை நிலைத்திருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படகு வீட்டை நாமே தான் ஓட்டி செல்ல வேன்டும் பழகியவர்கள்தான் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
      கள்ளிச்செடிக்கு நீர் அவசியம் இல்லையே! அது நீரை எடுத்துக் கொள்ளாது.

      நீக்கு
  3. வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு கிளம்பி விட்டீர்களா? பாட்டுக்குப் பாட்டெடுத்தது என்று படகோட்டி ஆகவில்லையா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த படகு வைத்து இருக்கிறவர்கள் மட்டுமே ஏரியில் பயணம் செய்ய முடியும். நம் ஊர் போல வாடகைக்கு அழைத்து செல்லும் போட் இல்லை. அதனால் வேடிக்கை மட்டுமே!

      நீக்கு
  4. விழுந்து விட்டீர்களா? கவனம். பேரன் நன்றாய் அக்கறையாய் கவனித்துக் கொள்வது படங்களிலிருந்து தெரிகிறது. ஜீப், டைனோசர்கள் இங்கும் வந்து விட்டன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விழுந்து விட்டீர்களா? கவனம். //

      விழவில்லை என்ரால்தான் அதிசயம் போல இருக்கிறது.

      பேரன் நன்றாய் அக்கறையாய் கவனித்துக் கொள்வது படங்களிலிருந்து தெரிகிறது. ஜீப், டைனோசர்கள் இங்கும் வந்து விட்டன!//

      அங்கு நடக்கவே விடவில்லை அவன் என்னை, சரிவாக இருந்தது பாதை சறுக்கி விடும் ஆபாயம் இருந்தது, என் காமிரா, கைபை எல்லாம் மருமகள் எடுத்து சென்று விட்டாள். கவின் ஐபேட் மற்றும் அவன் விளையாட்டு சாமான்கள் இருந்தது, ஐபேட் கனமில்லை அதை மட்டும் வைத்து கொள்ளுங்கள் என் கையை பிடித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டான்.
      எப்போதுமே வெளியில் வந்தால் கூடுதல் கவனம் என் மேல் செலுத்துவான். அன்று கீழே வேறு காலையில் விழுந்து விட்டதால் மேலும் கவனம் அதிகமாகி விட்டது.

      அன்று வீடு வந்து சேரும் வரை கவனம் கவனம் என்று அக்கறையாக கவனித்து கொண்டான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம். பதிவு வழி பகிர்ந்த படங்கள் அனைத்தும் அழகு.

    அடடா..... விழுந்து விட்டீர்களா? கவனமாக இருங்கள் அம்மா.....

    உங்கள் பயண அனுபவங்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //இனிய காலை வணக்கம். பதிவு வழி பகிர்ந்த படங்கள் அனைத்தும் அழகு.//

      உங்களுக்கு காலை வணக்கம் வெங்கட்.

      //அடடா..... விழுந்து விட்டீர்களா? கவனமாக இருங்கள் அம்மா...//
      கவனமின்மையால்தால் விழுதல். கவனமாக இருக்க முயல்கிறேன், அப்படியும் இப்படி நடந்து விடுகிறது.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. ஏரி படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. கள்ளிச் செடிகள் நிறைந்திருக்கும் படங்களும் அழகாக இருக்கிறது. படகு சவாரி செய்யும் போது நன்றாகத்தான் இருக்கும். தனியாக படகோட்டவும் நன்கு பழக்கம் வேண்டும். நீர் வேறு குளிர் நிலையில் இருப்பதால் கவனமாகத்தான் அவர்களும் படகை ஓட்ட வேண்டும்.

    இறுதிப் படங்களில் டைனோசர்களும் தங்கள் பேரனின் ஜீப்பும் வந்து அழகுபடுத்தியிருக்கின்றன. நன்றாக உள்ளது.

    நீங்கள் நாற்காலியிலிருந்து கீழே விழுந்து விட்டது வருத்தமாக இருந்தது. நல்ல வேளை அடி ஒன்றும் போடவில்லையே..? இப்போது எப்படி இருக்கிறீர்கள்.? கடவுளுக்கு நன்றி சொல்வோம். உங்கள் பேரன் உங்களை நல்லபடியாக அன்புடன் கவனித்து அழைத்துச் செல்வது மனதுக்கு நிம்மதியாக உள்ளது. எங்கு சென்றாலும் பார்த்துச் செல்லுங்கள். நானும் இப்படித்தான் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறேன். அந்த வலிகளின் சிரமங்கள் எனக்குள்ளும் எப்போதும் நினைவாக இருக்கிறது. அதனால் வெளியில் தனியாக செல்லவே எனக்கு தயக்கம். நீங்களும் எங்கு போனாலும், துணையுடன் போய் வாருங்கள். இறைவன் நல்ல உடல் பலத்தை தர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. ஏரி படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. //

      நன்றி.

      கள்ளிச் செடிகள் நிறைந்திருக்கும் படங்களும் அழகாக இருக்கிறது. படகு சவாரி செய்யும் போது நன்றாகத்தான் இருக்கும். தனியாக படகோட்டவும் நன்கு பழக்கம் வேண்டும். நீர் வேறு குளிர் நிலையில் இருப்பதால் கவனமாகத்தான் அவர்களும் படகை ஓட்ட வேண்டும்.//

      சொந்த படகு வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி.மற்றவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே! அவர்களுக்கும் விதிமுறைகள் உள்ளன.

      //இறுதிப் படங்களில் டைனோசர்களும் தங்கள் பேரனின் ஜீப்பும் வந்து அழகுபடுத்தியிருக்கின்றன. நன்றாக உள்ளது.//

      அன்று கொண்டு வந்தது அவைதான், அதை வைத்து படம் எடுத்து விட்டான்.

      //நீங்கள் நாற்காலியிலிருந்து கீழே விழுந்து விட்டது வருத்தமாக இருந்தது. நல்ல வேளை அடி ஒன்றும் போடவில்லையே..? இப்போது எப்படி இருக்கிறீர்கள்.?//

      இப்போது நலம் . அடிபடவில்லை, ஆனால் உடல் வலி இருந்தது, அன்று முழுவதும் ஓய்வுதான். கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டேதான் இருக்கிறேன்.

      //உங்கள் பேரன் உங்களை நல்லபடியாக அன்புடன் கவனித்து அழைத்துச் செல்வது மனதுக்கு நிம்மதியாக உள்ளது. எங்கு சென்றாலும் பார்த்துச் செல்லுங்கள். //

      ஆமாம் பேரன் பார்த்து கொள்வது மனதுக்கு நிம்மதி, மகிழ்ச்சி.
      உங்கள் அக்கறையான விசாரிப்புக்கு நன்றி. கவனமாக இருக்கிறேன்.

      //நானும் இப்படித்தான் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறேன். அந்த வலிகளின் சிரமங்கள் எனக்குள்ளும் எப்போதும் நினைவாக இருக்கிறது. அதனால் வெளியில் தனியாக செல்லவே எனக்கு தயக்கம்.//

      நீங்களும் கவனமாக இருங்கள் . வலிகளின் சிரமம் மனதுகுள் வந்து கவனமாக இருந்தாலும் நம்மையும் மீறி இப்படி சில நேரம் ஆகி விடுகிறது.


      //நீங்களும் எங்கு போனாலும், துணையுடன் போய் வாருங்கள். இறைவன் நல்ல உடல் பலத்தை தர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். //

      எங்கு சென்றாலும் இப்போது உடன் வருபவர்கள் கவனமாக அழைத்து செல்கிறார்கள். ஊரில் தனியாக போய் வரும் போது கவன்மாக போய் வாங்க என்று இங்கிருந்து சொல்வார்கள் பிள்ளைகள்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கம்லா.




      நீக்கு
  7. பேரனுடன் இருந்த படங்கள் நெகிழ்வு.

    அமைதியான நதியினிலே ஓடம் பாடல் நினைவுக்கு வந்தது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //பேரனுடன் இருந்த படங்கள் நெகிழ்வு.

      அமைதியான நதியினிலே ஓடம் பாடல் நினைவுக்கு வந்தது ..//


      பேரனின் அன்பு நெகிழ வைக்கிறது.
      அமைதியான நதியினிலே பாடல் நினைவுக்கு வந்து விட்டதா? அமைதியான இடம் தான்.

      நீக்கு
  8. படங்கள் எப்போதும்போல் அழகு. மக்கள் விருப்பம்போல் அனுபவிக்க முடிவது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எப்போதும்போல் அழகு. மக்கள் விருப்பம்போல் அனுபவிக்க முடிவது சிறப்பு//

      ஆமாம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. விவரங்களும் படங்களும் அருமை.. அழகு..

    உடல்நலனைக் கவனித்துக் கொள்ளவும்..

    துணைக்குக் கவின் இருக்கின்றார்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //விவரங்களும் படங்களும் அருமை.. அழகு..

      உடல்நலனைக் கவனித்துக் கொள்ளவும்..

      துணைக்குக் கவின் இருக்கின்றார்..

      வாழ்க நலம்..//
      உடல் நலத்தை கவனித்து கொள்கிறேன்.
      கவின் பார்த்துக் கொள்வான்.
      உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. கோல்டன் பாப்பி - அக்கா போன பதிவில் கேட்க நினைத்து விட்டுவிட்டேன்....பாப்பி என்றால் கசகசா இல்லையா? அப்ப அந்த மலர்கள் அதன் மலர்கள் இல்லையா?

    அமெரிக்காவிற்கு இங்கிருந்து கசகசா கொண்டு செல்லத் த்டை உண்டு....ஆனால் அங்கேயே வளர்கிறதே...

    கசகசா நல்ல தூக்கம் வரும். அளவுக்கு மிஞ்சினால்...அதனால்தான் கச கசா பாயாசம், பிரியாணி எல்லாம் சாப்பிட்டால் தூக்கம் வரும் போல!!!

    பல வெளிநாடுகளில் அது போதைப் பொருளாகவே கருத்டப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோல்டன் பாப்பி - அக்கா போன பதிவில் கேட்க நினைத்து விட்டுவிட்டேன்....பாப்பி என்றால் கசகசா இல்லையா? அப்ப அந்த மலர்கள் அதன் மலர்கள் இல்லையா?//

      பாப்பி என்ற பேருக்கு கசகசா என்று தெரியும் நம் நாட்டில் பயிர் செய்யப்படும் கசகசா செடி பூக்களை பார்த்தது இல்லை, இணையத்தில் தேடினால் வெள்ளை நீலத்தில் இருக்கிறது, சிவப்பு, மஞ்சளிலும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
      எந்த நாட்டுக்கும் கச கசா ஏற்றுமதி செய்ய தடைதான். அது போதை பொருள் வகையில் வருவதால்.

      //கசகசா நல்ல தூக்கம் வரும். அளவுக்கு மிஞ்சினால்...அதனால்தான் கச கசா பாயாசம், பிரியாணி எல்லாம் சாப்பிட்டால் தூக்கம் வரும் போல!!!//
      மருத்துவ குணம் உண்டு.அளவாக எடுத்துக் கொண்டால்.
      நம் வீடுகளில் வாய் புண் வயிற்று புண் என்றால் கச் சகாவை பாயசம், கச கசா பர்பி செய்து தருவார்கள். கசகசா தேங்காய் சேர்த்து பர்பி. வீட்டில் குருமா, பிரியாணிக்கு அளவாக தேங்காயுடன் அரைத்து சேர்ப்பார்கள்.

      பல வெளி நாடுகளில் அதிகமாக பயிர் செய்யபடுகிறது. நம் நாட்டில் மூன்று இடங்களில் மட்டும் பயிர் செய்யப்படுகிறது.
      அனுமதி வாங்கி செய்ய வேண்டிய விவசாயம்.

      நீக்கு
  11. ஏரியின் படம் செம அழகு,

    அக்கா இப்ப எப்படி இருக்கீங்க. கீழே விழுந்ததில் இப்போது பிரச்சனை இல்லைதானே?

    பேரன் உங்களைக் கவனித்து அழைத்துப் போவது மனதிற்கு இதம். நெகிழ்ச்சி.

    பேரன் உங்களைக் கைப் பிடித்து ஒரு வளைவில் நிற்கும் படம் அருகில் ஏரியின் தண்ணீர் அந்த இடம் செம அழகாக இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரியின் படம் செம அழகு,//

      ஏரி அழகு.

      //அக்கா இப்ப எப்படி இருக்கீங்க. கீழே விழுந்ததில் இப்போது பிரச்சனை இல்லைதானே?//

      பிரச்சனை இல்லை. வலி இருக்கிறது அதை உடற்பயிசி செய்து போக்கி கொள்கிறேன்.

      //பேரன் உங்களைக் கவனித்து அழைத்துப் போவது மனதிற்கு இதம். நெகிழ்ச்சி.

      பேரன் உங்களைக் கைப் பிடித்து ஒரு வளைவில் நிற்கும் படம் அருகில் ஏரியின் தண்ணீர் அந்த இடம் செம அழகாக இருக்கு.//

      மேலே இருந்து கீழே எடுப்பது அழகுதான். வரும் பாதையின் அழகு , மற்றும் கவின் என்னை கவனமாக அழைத்து வரும் காட்சிக்கு இந்த படத்தை பகிர்ந்தேன்.
      நீங்களும் அதை ரசித்து விட்டீர்கள்.

      நீக்கு
  12. ஓ! படகு வீட்டை நாமே ஓட்டிச் செல்லலாம் இல்லையா? அங்கெல்லாம் மக்கள் விடுமுறையை மிக நன்றாக மகிழ்ச்சியாகக் கழிப்பார்கள். ஆம் நீங்கள் சொல்லியிருப்பது போல் சொந்தமாகப் படகு வைத்திருப்பவர்கள் வார இறுதிநாட்களில் தங்கள் காருடன் இணைத்துக் கொண்டு செல்வதைப்பார்க்கலாம். அல்லது காரின் மேலே வைத்துக் கொண்டு செல்வாங்க. கூடவே தங்கள் வளர்ப்புச் செல்லங்களையும் கொண்டு போவாங்க...

    படங்களில் செல்லங்கள் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ! படகு வீட்டை நாமே ஓட்டிச் செல்லலாம் இல்லையா? அங்கெல்லாம் மக்கள் விடுமுறையை மிக நன்றாக மகிழ்ச்சியாகக் கழிப்பார்கள். ஆம் நீங்கள் சொல்லியிருப்பது போல் சொந்தமாகப் படகு வைத்திருப்பவர்கள் வார இறுதிநாட்களில் தங்கள் காருடன் இணைத்துக் கொண்டு செல்வதைப்பார்க்கலாம். அல்லது காரின் மேலே வைத்துக் கொண்டு செல்வாங்க. கூடவே தங்கள் வளர்ப்புச் செல்லங்களையும் கொண்டு போவாங்க...//

      வார இறுதி நட்களை மகிழ்ச்சியாக கழிப்பதை உறுதியாக க்டைப்பிடிக்கிரார்கள். படகு சவாரிக்கு படகை கொண்டு போகிறார்கள், சைக்கிள் ஓட்ட சைக்கிள் கொண்டு போவார்கள்.
      வளர்ப்பு செல்லங்கள் இல்லாமல் போவது இல்லை.

      செல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகாய் இருக்கிறது

      நீக்கு
  13. பேரனின் ஜீப்பும், டைனோசரும் இங்கும்!!! அந்தப் படங்கள் எல்லாமே செம.

    இந்த உப்புப் பாறைகள்தானே குகைகள் உருவாகும் போது உள்ளே தொங்கிக் கொண்டு இருப்பவை.?

    ஏரியும் இந்த உப்புப்பாறைகளின் குன்றும் பின்னில் மலைகளும் பார்க்கவே ரம்மியமாக இருக்கு.

    அருமையான இடம். மக்கள் அங்கு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரனின் ஜீப்பும், டைனோசரும் இங்கும்!!! அந்தப் படங்கள் எல்லாமே செம.

      இந்த உப்புப் பாறைகள்தானே குகைகள் உருவாகும் போது உள்ளே தொங்கிக் கொண்டு இருப்பவை.? வெவ்வேரு காரணங்களில் குகைகுள் தொங்கும் பாறைகள் உருவாகும், பனி உருகி, எரிமலை குழம்பு உருகி, உவர் நீர் ஆவியாகி என்று பல்வேறு காரணம் இருக்கிறது.

      //ஏரியும் இந்த உப்புப்பாறைகளின் குன்றும் பின்னில் மலைகளும் பார்க்கவே ரம்மியமாக இருக்கு.//நாலு பக்கம் ஏரி நடுவிலே தீவு என்பது போல நாலு பக்கம் மலைகள் நடுவில் ஏரி பார்க்க அழகு.

      //அருமையான இடம். மக்கள் அங்கு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க...//
      சுற்றுலா செல்லவே சேமிப்பார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.





      நீக்கு
    2. //இந்த உப்புப் பாறைகள்தானே குகைகள் உருவாகும் போது உள்ளே தொங்கிக் கொண்டு இருப்பவை.?//

      கீதா, கனிமங்களை பொருத்து மாறுபடுகிறது ஒவ்வொரு இடத்திலும் குகைகுள் தோன்றும் காட்சிகள் உருவங்கள். தட்ப, வெட்ப கால சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் கனிமத்தை பொருத்தும் மறுகிறது.

      சுண்ணாம்பு, சுண்ணாம்பு, டலாமைட், பளிங்கு, ஜிப்சம், உப்பு ஆகியவை இதில் அடங்கும். கரைந்த கார்பன் டை ஆக்சைடு கொண்ட மழை ஈரப்பதத்தின் செல்வாக்கின் கீழ், பாறைகள் அரிக்கப்பட்டு, வண்டல் நீர் அத்தகைய குகைகளுக்குள் பாய்கிறது. ஒன்று அல்லது மற்றொரு வகை செயல்முறைகளின் தோற்றம் நீரின் ஓட்ட விகிதத்தைப் பொறுத்தது. என்று படித்தேன் இணையத்தில் கீதா.

      நீக்கு
  14. அழகான ஏரி... அருமையான படங்கள் அம்மா... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்'
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் அனைத்தும் வழக்கத்தைவிட சிறப்பாக இருக்கிறது.

    எந்த படத்தையும் குறை சொல்ல முடியாது. அற்புதம்.

    பெயரனுடன் மகிழ்ச்சியாக இருப்பது நெகிழ்வான தருணங்கள்.

    தகவல்கள் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் வழக்கத்தைவிட சிறப்பாக இருக்கிறது.//

      கமிராவில் எடுத்த படம். கடைசி படங்கள் மட்டும் மனக் அலைபேசியில் எடுத்த படங்ககள்.

      //பெயரனுடன் மகிழ்ச்சியாக இருப்பது நெகிழ்வான தருணங்கள்.//

      ஆமாம், மகிழ்ச்சியான தருணங்கள் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      தகவல்கள் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.


      நீக்கு
  16. படங்களும் பகிர்வும் நன்று. உப்புப் பாறை அருகே பேரனின் ஜீப் நிஜ அளவுத் தோற்றம் போல் உள்ளது. டைனாசார் பொம்மைகளை வைத்து எடுத்த கோணமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் நன்று. உப்புப் பாறை அருகே பேரனின் ஜீப் நிஜ அளவுத் தோற்றம் போல் உள்ளது. டைனாசார் பொம்மைகளை வைத்து எடுத்த கோணமும் அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி

      நீக்கு
  17. அழகிய இடம். நீர் சறுக்கு விளையாட்டு, பாறைகள் என பலவும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      //அழகிய இடம். நீர் சறுக்கு விளையாட்டு, பாறைகள் என பலவும் நன்றாக இருக்கின்றன.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு