வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தேடியுனைச் சரணடைந்தோம் அம்மா
அம்மன்களுக்கு  மஞ்சள் காப்பு

மூன்றாவது வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவிலில் இருக்கும்  அம்மன்களுக்கு நடந்த அபிஷேக அலங்கார காட்சிகள் எல்லோரும் சேர்ந்து செய்த கூட்டு வழிப்பாடு.

ஆடி மாதம் அம்மன் வழிபாடு சிறப்பு என்பதால் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு மட்டும் போய் வந்தேன்.
அபிசேகத்திற்கு முன்

அபிசேகத்திற்கு பின் அலங்கார காட்சி

அம்மனுக்கு எலுமிச்சை சாதம், சாம்பார்சாதம், சர்க்கரை பொங்கல், பழங்கள் பிரசாதம்

                                  

                                                  காளி அம்மன்

பேச்சி அம்மன்எல்லா அபிஷேகங்களும் செய்தார்கள்.                            
காவல் தெய்வம் கருப்பு சாமிக்கு சந்தனக்காப்பு
இரண்டாவது வாரம் அம்மனுக்கு புடவை வாங்கி சாற்றினேன்.

மூன்று புடவைகளும் பூக்கார அம்மா தேர்வு செய்து வாங்கி தந்தார்.


அன்று கூழ் வார்த்தல்  செய்தோம்
இன்று சங்கரன் கோவில் கோமதி அம்மனுக்கு வீட்டில்  மாவிளக்கு பார்த்தேன்


பக்கத்து வீட்டு வரலெட்சுமி


தங்கை வீட்டுவரலெட்சுமி

ஓர்படி வீட்டில் வரலெட்சுமி (கோவை)

பாரதியார் பாடல் தேடியுனை சரணடைந்தேன்

தேடியுனை சரணடைந்தேன், தேச முத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய் , கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங்க் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீர்ப்பாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம் ;  யாதுமவள் தொழிலாம்

துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்.
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்

நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத்தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

தேடியுனைச் சரணடைந்தோம் அம்மா. நலங்கள் எல்லாம் அருள்வாய்.வாழ்க வையகம்! வாழ்க வையகம் !வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

 1. தலைப்பைப் படித்து, அழகிய பாடல் நினைவுக்கு வந்து, ஓடோடி வந்தேன்.

  கோவில் அம்மன் படங்கள் மிக அழகு. அபிஷேகச் செய்திகளை ரசித்தேன்.

  விளக்குப் போடுதல் என்று நாங்கள் சொல்வோம். நீங்கள் விளக்குப் பார்த்தேன் என்று சொல்லியிருக்கீங்க.

  எங்க ஊர் சங்கரன்கோவில் கோமதி அம்மனைப் பற்றி நெடுநாளைக்குப்பின் இன்று படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன் , வாழ்க வளமுடன்
   தலைப்பைப் படித்து ஓடோடி வந்தது மகிழ்ச்சி.
   அம்மன் படங்களை, அபிஷேகச்செய்திகளை ரசித்தமைக்கு நன்றி.
   நாங்கள் மாவிளக்கு பார்த்தல் என்று தான் சொல்வோம். அம்மா, அத்தை எல்லாம் அப்படித்தான் சொல்வார்கள். நானும் அப்படியே சொல்கிறேன்.

   சங்கரன்கோவிலில் உறவினர் இருக்கிறார்கள் அவர்கள் ஆடி தபசுக்கு வரச்சொல்லி அழைத்தார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்து இருந்த போது உடல் நலம் சரியில்லாமல் இருந்தேன். அவர்கள் கோமதி அம்மனை வணங்கி மாவிளக்கு போடுங்கள் சரியாகிவிடும் என்றார்கள் அங்கு வர சொன்னார்கள்.

   ஆனால் போக வாய்ப்பு வரவில்லை. அதனால் அன்னையை நினைந்து வீட்டில் மாவிளக்கு போட்டுவிட்டேன்.
   சங்கரன் கோவில் பதிவுகள் இரண்டு மூன்று போட்டு இருக்கிறேன்.
   உங்கள் ஊர் அதுவா? மகிழ்ச்சி.
   பூச்சி, பொட்டுக்கள் கண்ணில் படக்கூடாது என்று
   எங்கள் பக்கம் கோமதி அம்மனுக்கு வேண்டிக் கொள்வது பழக்கம்.
   ஆரோக்கியமாக இருக்கவும் வேண்டிக் கொள்வார்கள். மாவிள்க்கு பார்க்கிறேன் அம்மா என்று சொல்வார்கள்.
   தங்கை வீட்டிலும், என் வீட்டிலும் செவ்வாழை பழம் தான்.
   தேங்காய் உடைக்க முடியவில்லை. ( சார்தான் உடைத்து தருவார்கள்.)உடைத்தே வாங்கி வருவேன் சமையலுக்கு. பூஜைக்கு என்பதால் அப்படியே வைத்து விட்டேன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 2. தங்கை வீட்டிலும் உங்கள் வீட்டிலும் செவ்வாழைப்பழம் அம்மனுக்கு.

  பதிலளிநீக்கு
 3. மங்கலகரமான பதிவு.. இனிய தெய்வ தரிசனம்..

  தேடி உன்னைச் சரணடைந்தேன்..
  அருமையான தலைப்பு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   மங்கலகரமான பதிவு.. இனிய தெய்வ தரிசனம்..//

   நன்றி.
   //தேடி உன்னைச் சரணடைந்தேன்..
   அருமையான தலைப்பு..//

   பராதியார் சொன்னது போல நாம் எல்லாம் சரணடைந்து விட்டோம், வேறு வழி இல்லை அம்பிகை அனைவரையும் காக்க வேண்டும்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. அருமையான படங்களுடன் விளக்கம் நன்று. எனக்கும் தரிசனம் கிடைத்தது நன்றி.

  //பயமனைத்தும்ந் தீர்ப்பாய்//
  என்ற வரிகளை...
  //பயமனைத்தும்ந் தீரும்//
  என்றுதான் பாடி இருக்கிறார். அற்புதமான பாடல்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   /பயமனைத்தும்ந் தீரும்//
   என்றுதான் பாடி இருக்கிறார். அற்புதமான பாடல்.//

   பாடல்வரியை திருத்தி விட்டேன்.
   பயமனைத்தும்ந் தீரும் தான். ஆணித்தரமாக சொல்வதுதானே பாரதியின் வழக்கம்.
   இப்படி பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்வேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. ஆடி மாதங்களில் பழைய வீட்டில் இருந்தால் பாஸ் சில கோவில்களுக்கு சென்று பால்காவடி எடுத்தல், புடைவை சாற்றுதல், கட்டளை ஏற்றல் போன்றவை செய்வார்.  இங்கிருந்து செய்ய முடியாதது அவர் குறை.  நாகசதுர்த்தி, அக்ருத பஞ்சமிக்கே அங்கு கொஞ்சம் பெரிய கோவில் இருக்கும்.  இங்கு வீட்டிலேயே வணங்க வேண்டியதாகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   பக்கத்தில் கோவில் இருந்தால் நமக்கு போய் வர வணங்க நன்றாக இருக்கும்.
   உங்கள் பாஸ் கோவிலுக்கு செய்வதை பற்றி எல்லாம் முன்பு சொல்லி இருக்கிறீகள்.

   இந்த கோவிலில் நாகசதுர்த்திக்கும் விஷேசமாக இருக்கும் நான் போகவில்லை. மரத்தை சுற்றி நிறைய நாகசிலைகள் இருக்கிறது.
   இப்போது பெரும்பாலும் வீட்டிலேயேதான் வழிபாடு.

   நீக்கு
 6. அம்மனுக்கு அலங்காரங்களும், புடைவையும் அழகு.  ஆடி ஞாயிறுதானே கூழ் காய்ச்சுவார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மனுக்கு வெல்ளியிம், ஞாயிறும் சிறப்புதான். இந்த கோவிலில் வெள்ளிக்கிழமைதான் காய்ச்சுவார்கள்.

   நீக்கு
 7. நேற்று நாங்களும் இங்கு வரலக்ஷ்மி பூஜை சிறப்பாக  கொண்டாடினோம்.  உங்கள் உறவினர் இல்ல அலங்காரங்கள் எல்லாம் அழகு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வீட்டில் வரலெட்சுமி பூஜை சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி.
   அடுத்த வருடம் மருமகளுடன் கொண்டாட வாழ்த்துகள்.
   இன்றுதான் தங்கை வீட்டு வரலக்ஷ்மியை பார்க்க போகிறேன்.
   அவளிடம் சொல்கிறேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. வரலக்ஷ்மி பூஜை படங்கள் எல்லாம் அழகு. உங்க வீட்டருகே இருக்கும் அம்மனுக்குக் கூழ் வார்த்தது பற்றி முகநூலிலும் போட்டிருந்ததைப் பார்த்தேன். புடைவை சாற்றியதையும் அங்கே பார்த்த நினைவு. சங்கரன் கோயில் கோமதி அம்மனை நினைத்து நீங்கள் மாவிளக்குப் போட்டது மகிழ்ச்சி. எங்களுக்கு சங்கரன் கோயில் கோமதி அம்மனை அடிக்கடி நினைத்து மாவிளக்குப் போடும் வழக்கம் அம்மா வீட்டில் உண்டு. புற்று மண் எப்போதும் வீட்டில் இருக்கும். சின்ன வயசில் அடிக்கடி போவோம். சில வருடங்கள் முன்னர் சங்கரன் கோயில் போயிட்டு வந்துப் பதிவுகள் எழுதினேன். சங்கரன் கோயில் நயினாரை ராமநாதபுரம் சேதுபதி அரசர் தூக்கிச் சென்றதையும் பின்னர் அவர் திரும்ப சங்கரன் கோயிலில் வாசம் செய்ய வந்த நிகழ்வையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பேன். :) விபரம் தெரிந்து சங்கரன் கோயிலில் பிரார்த்தனைக்காக எனக்கு மொட்டை போட்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 9. நீங்களும் அந்தப் பதிவில் கருத்துச் சொல்லி இருக்கீங்க!
  https://aanmiga-payanam.blogspot.com/2010/01/blog-post_4733.html இது ஒரு பதிவு. இதற்கு முன்னாலும் பின்னாலும் சில பதிவுகள் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் படித்து பார்க்கிறேன்.
   உங்கள் தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

  வரலக்ஷ்மி பூஜை படங்கள் எல்லாம் அழகு. //

  நன்றி.

  உங்க வீட்டருகே இருக்கும் அம்மனுக்குக் கூழ் வார்த்தது பற்றி முகநூலிலும்
  போட்டிருந்ததைப் பார்த்தேன். புடைவை சாற்றியதையும் அங்கே பார்த்த நினைவு//

  ஆமாம், இரண்டாவது வெள்ளிக்கிழமை போட்டு இருந்தேன்.

  //சங்கரன் கோயில் கோமதி அம்மனை நினைத்து நீங்கள் மாவிளக்குப் போட்டது மகிழ்ச்சி. எங்களுக்கு சங்கரன் கோயில் கோமதி அம்மனை அடிக்கடி நினைத்து மாவிளக்குப் போடும் வழக்கம் அம்மா வீட்டில் உண்டு. புற்று மண் எப்போதும் வீட்டில் இருக்கும்//

  எங்கள் வீட்டிலும் புற்றுமண் இருக்கும்.
  உங்கள் அம்மாவீட்டிலும் மாவிளக்கு போடும் வழக்கம் என்று அறிந்து மகிழ்ச்சி.

  நான் ஆடி மாதம் போய் வந்தேன் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்.இப்போதும் உறவினர் அழைத்து கொண்டு இருக்கிறார்.
  தங்கை, அண்ணி எல்லாம் போகலாம் என்றார்கள் அப்புறம் யாரும் வரவில்லை, அதனால் போகவில்லை. கூட்டம் இல்லா நாளில் ஒரு நாள் போக வேண்டும் கோமதி அன்னை அழைப்பாள் ஒரு நாள்.
  உங்கள் பதிவு பற்றியும், சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
  உங்கள் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அழகிய படங்களுடன் அருமையான பதிவு...

  சிறப்பான பாடல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   பாடலையும், படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி,

   நீக்கு
 12. கோயிலில் அம்மனுக்கு அலங்காரம் மிக அழகாகச் செய்துள்ளார்கள். வரலக்ஷ்மி தரிசனங்கள், மாவிளக்கு வழிபாடு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   ஆமாம், அம்மனுக்கு அலங்காரம் நன்றாக செய்கிறார்கள்.
   அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 13. வீட்டருகில் இருக்கும் அம்மான் மிக அழகு, கோமதிக்கா. அலங்காரமும். அதுவும் கூட்டு வழிபாடு சிறப்பாக நடந்திருப்பது தெரிகிறது.

  படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
   அம்மன் மிக அழகாய் இருக்கும் அதிலும் அலங்காரம் செய்தால் இன்னும் அழகு.
   பூக்காரம்மா அனைவரையும் இணைத்து கூட்டு வழிப்பாட்டை செய்து விடுவார் ஆண்டு தோறும்.

   படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன//

   நன்றி கீதா.


   நீக்கு
 14. அபிஷேகத்திற்கு முன் அந்தப் புடவை கலர் ஈர்க்கிறது. பச்சையும் ஆரஞ்சும் நல்ல காம்பினேஷன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் பிடித்து இருக்கா! அதுதான் நான் அந்த படத்தை பகிர்ந்தேன்.

   நீக்கு
 15. அபிஷேகத்திற்குப் பின்னான அலங்காரம் (முதல் படமும் இது க்ளோசப்) அழகு...

  பிரசாதம் ஆஹா....நன்றாக அமைந்திருக்கும்

  கருப்புச்சாமி படங்கள் அபிஷேகப் படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.

  நீங்கள் வாங்கிக் கொடுத்தப் புடவைகளும் நல்ல கலர், பூக்கார அம்மாவின் தேர்வு சூப்பர்.

  மாவிளக்கு சூப்பர். மிகவும் பிடிக்கும். நம் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை ஏற்றுவதுண்டு. நான் ஆடி வெள்ளியிலும் செய்வதுண்டு.

  பக்கத்துவீட்டு, தங்கை வீட்டு, ஓர்ப்படி வீட்டு வரலக்ஷ்மி எல்லாரும் ஒவ்வொருவிதத்தில் ஜொலிக்கிறார்கள்!

  சுதாரகுநாதன் தேடி உனைச் சரணடைந்தேன் பாடி கேட்டிருக்கிறேன் இப்போதும் கேட்டேன் கோமதிக்கா. சௌம்யா பாரதியார் பாடல்கள் ஆல்பம் போட்டிருக்காங்க அதிலும் கேட்டிருக்கிறேன்.

  பொருத்தமான பாடல் தேர்வு

  அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஆமாம் கீதா அம்மன் முகம் நம்மை பார்ப்பது போல தத்ரூபமாக செய்து இருந்தார்.
  காலையில் அபிஷேகம் அவ்வளவும் பார்க்கவில்லை. கொஞ்சம் பார்த்து விட்டு வந்து விட்டேன். காலவலி என்று. மீண்டும் மதியம் போய் அலங்காரம் பார்த்து விட்டு சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல் மட்டும் வாங்கி வந்தேன். நன்றாக இருந்தது.

  பூக்கார அம்மா எப்போதும் அழகாய் தேர்வு செய்வார் புடவைகளை.
  அவரிடம் சொல்கிறேன் உங்கள் பாராட்டை.

  //மாவிளக்கு சூப்பர். மிகவும் பிடிக்கும். நம் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை ஏற்றுவதுண்டு. நான் ஆடி வெள்ளியிலும் செய்வதுண்டு.//

  என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி செய்ய சொல்வான்.
  //பக்கத்துவீட்டு, தங்கை வீட்டு, ஓர்ப்படி வீட்டு வரலக்ஷ்மி எல்லாரும் ஒவ்வொருவிதத்தில் ஜொலிக்கிறார்கள்!//

  நன்றி.

  நானும் செளமியா பாடிய பாடலை கேட்டு இருக்கிறேன்.
  எல்லோர் பாடிய பாரதியார் பாடல்களை கேட்டு இருக்கிறேன்.
  பதிவையும், பாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
  பதிலளிநீக்கு
 17. ஆடி மாதம் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் தரிசனம் தருகிறாள்.
  படங்கள் அருமை .
  அவளருளை வேண்டுகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   அவளருளை வேண்டுவோம் .
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை.. அருகிலுள்ள கோவில் அம்மன் அலங்கார படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது. அம்மனை தரிசித்துக் கொண்டேன். தாங்கள் வாங்கித்தந்த புடவைகள் நன்றாக உள்ளது. இந்த மாதிரி புடவைகள் அம்மனுக்கு வாங்கித் தரவும் அவளருளினால் நேர காலங்கள் அமைய வேண்டும்.

  தங்கள் வீட்டில் கோமதி அம்மனுக்கு மாவிளக்கு மா படம் நன்றாக உள்ளது. ஆமாம்... எங்கள் பிறந்த வீட்டு அக்கம் பக்கத்திலும், மா விளக்கு மா பார்த்தேன் என சொல்வதுண்டு. நாங்களும் எங்கள் அம்மா காலத்தில் சங்கரநயினார் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு அம்மனுக்கு அங்கு சென்று மா விளக்கு மா போட்டு வருவோம்.அங்குள்ள புற்றுமண் கிழங்கு வெகு பிரசித்தி எப்போதும் அம்மா வீட்டில் கைவசம் இருக்கும். பழைய நினைவுகள் வந்தன.

  தங்கள் தங்கை வீட்டு வரலக்ஷ்மி அம்மன் அலங்காரம் அருமையாக உள்ளது. மஞ்சளில் முகம் செய்து அலங்காரம் செய்துள்ளார்களா? மிகவும் அழகாக உள்ளதென உங்கள் தங்கையிடம் கூறவும். உங்கள் ஓர்ப்படி வீட்டு வரலக்ஷ்மி அம்மனும், பக்கத்தில் உள்ள வீட்டின் வரலெட்சுமி அம்மனும் அழகாக வடிவமைப்பாக உள்ளது. அம்மன்களை பக்தியுடன் தரிசித்து கொண்டேன். நல்ல பகிர்வு.

  நான் இரு தினங்களாக வீட்டின் வேலைகள் காரணமாக ஒருவரின் பதிவுகளுக்கும் வர இயலவில்லை. இன்று காலையில்தான் நீங்கள் பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். அதுவே கருத்துக்கு வர இவ்வளவு தாமதமாகி விட்டது. நான்தான் கடைசியில் இவ்வளவு தாமதமாக வந்து கருத்துரை தருகிறேன் மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //இந்த மாதிரி புடவைகள் அம்மனுக்கு வாங்கித் தரவும் அவளருளினால் நேர காலங்கள் அமைய வேண்டும்.//

   ஆமாம், முன்பு எப்போதோ நினைத்தது. இப்போதுதான் அமைந்தது.
   எல்லாம் இறை யருள்.


   தங்கள் வீட்டில் கோமதி அம்மனுக்கு மாவிளக்கு மா படம் நன்றாக உள்ளது. ஆமாம்... எங்கள் பிறந்த வீட்டு அக்கம் பக்கத்திலும், மா விளக்கு மா பார்த்தேன் என சொல்வதுண்டு. நாங்களும் எங்கள் அம்மா காலத்தில் சங்கரநயினார் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு அம்மனுக்கு அங்கு சென்று மா விளக்கு மா போட்டு வருவோம்.அங்குள்ள புற்றுமண் கிழங்கு வெகு பிரசித்தி எப்போதும் அம்மா வீட்டில் கைவசம் இருக்கும். பழைய நினைவுகள் வந்தன.//

   உங்களுக்கும் எங்கள் ஊர் தானே! அதனால் தெரிந்து இருக்கிறது.
   திருவண்ணாமலை தீபம் பார்த்து விட்டு தான் கார்த்திகை அன்று சொல்வார்கள். சோமவார விரதம் இருக்கும் போதும் மாவிளக்கு பார்த்து விட்டு சாப்பிடுவார்கள். விளக்கு பார்த்தல் என்று சொல்லும் வழக்கம் உண்டு.

   புற்றுமண் அருமருந்து. அனைவர் வீட்டிலும் இருக்கும்.

   தங்கை வீட்டில் அம்மன் முகம் வாங்கியதுதான். இப்படி மஞ்சள் கலரில் விற்கிறார்கள். அதை கலசத்தில் இணைத்து இருக்கிறாள்.
   அவளிடம் சொல்கிறேன் அலங்காரம் நன்றாக இருப்பதாக நீங்கள் சொன்னதை.

   நினைத்தேன் வேலை, அல்லது விருந்தினர் வருகையால் வர வில்லை என்று.
   நீங்கள் வந்து படித்து விரிவான கருத்து கொடுத்தது மகிழ்ச்சி, நன்றி.

   நீக்கு
 19. அம்மன் படங்கள், விவரணங்கள், தகவல்கள் எல்லாமே மனதிற்கு நிறைவாக இருந்தன. நீங்களும் அம்மன் பூஜையில் பங்கேற்றதும், புடவை வாங்கி அணிவித்ததும் நல்ல மகிழ்வான விஷயம். மா விளக்கு என்பது என்ன என்பது வலைத்தளங்களில் வாசித்துதான் தெரிந்து கொண்டேன்.

  தேடி உனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரியையை நாமும் சரணடைவோம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

   அம்மன் படங்கள், விவரணங்கள், தகவல்கள் எல்லாமே மனதிற்கு நிறைவாக இருந்தன.

   நன்றி.

   நீங்களும் அம்மன் பூஜையில் பங்கேற்றதும், புடவை வாங்கி அணிவித்ததும் நல்ல மகிழ்வான விஷயம். மா விளக்கு என்பது என்ன என்பது வலைத்தளங்களில் வாசித்துதான் தெரிந்து கொண்டேன்.//

   அம்மன் பூஜையில் முழுமையாக நின்று பார்க்கவில்லை இருந்தாலும் கலந்து கொண்டது மனதுக்கு நிறைவுதான்.

   மாவு விளக்கு தெரியாதா? தெரிந்து கொண்டது மகிழ்ச்சி.
   நாம் எல்லோரும் அம்மனை சரண்டைவோம், நலம் பெறுவோம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு