செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்



2016  ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  23 ம் தேதி இராமலிங்க சுவாமிகள் திருக்கோயிலுக்கு போய் இருந்தோம். நானும், என் கணவரும்.
குரு தலமான ஆலங்குடியிலிருந்து  3.கி.மீ தூரத்தில்    உள்ளது பாடகச்சேரி 





கோவிலின் முன் குட்டிச் செல்லங்கள் 

வரும் பக்தர்கள் எல்லாம் பிஸ்கட் வாங்கி தருகிறார்கள்.
அன்னதான கூடம்

சன்னதிக்குள்  இராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த காலத்தில்  இருந்தவர்கள் அவருடன் இருந்தவர்கள் 


 வள்ளலாரின் ஆசி பெற்றவர் என்பதால் வள்ளலார் போல பசிப்பிணி போக்கி இருக்கிறார்.  கூழ் சாலை ஆரம்பித்து  பஞ்சம் வந்த போது மக்களின் பசித்துயர் போக்கி இருக்கிறார்.
கும்பகோணத்தின் பக்கத்தில் முத்துப்பிள்ளை மண்டபம் என்னுமிடத்தில் கூழ்சாலை   இருக்கிறது. இந்த கூழ் சாலையில் இவரின் குரு எரிதாதா சுவாமிகள் சன்னதி, சமரச சுத்த சம்ன்மார்க்க சங்க சத்திய ஞானசபை , சத்திய தரும சாலை, சத்திய வேத வைத்திய சாலை முதலியவை    இருக்கிறதாம்.

பாடகச்சேரி போய் விட்டு பக்கத்தில் திருநாகேஸ்ரம் போய் தரிசனம் செய்து வந்தோம்.  

திரு நாகேஸ்வரம் கோவில் மிகவும் பழுது அடைந்து இருப்பதை பார்த்து வருத்தம் அடைந்து   பக்தர்கள் அனைவரும் சேர்ந்து கோவில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று  பித்தளை செம்பை வயிற்று பகுதியில் கட்டிக் கொண்டு அலைந்து திரிந்து எல்லோரிடமும் பணம் பெற்று    1928 -ஆம் ஆண்டில் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக செய்தாராம்.


கோவிலில் இவருக்கு  தனி சன்னதி  அமைத்து இருக்கிறார்களாம். இராஜ கோபுரத்தில் இவரின் உருவச்சிலை இருக்கிறதாம்.

நிறைய தடவை திருநாகேஸ்வரம் போய் இருக்கிறோம் பார்த்தது இல்லை. இறைவன் அருளால் மறுபடியும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இராமலிங்க சுவாமிகளை தரிசிக்க வேண்டும்.

இப்படி தனி ஒருவராக கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தியதை அறிந்து நிறைய ஊர்களிலிருந்து  அவர்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகம் செய்ய உதவி கேட்டு வருவார்களாம்.

இப்போதும் கோவில் கும்பாபிஷேகம் தடை பட்டால் இவரை நினைத்துக் கொள்வார்களாம் உடனே நல்லபடியாக கும்பாபிஷேகம் தடை இல்லாமல் நடந்து விடுமாம். நிறைய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி கொடுத்து இருக்கிறாராம்.  நிறைய அன்னதானம் செய்து இருக்கிறாராம்.



ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் பற்றி விகடனில் திரு . பரணீதரன் அவர்கள் எழுதி இருக்கிறார்களாம்.
அவருடன் வாழ்ந்த மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட செய்திகள்  பற்றி புத்தகத்தில் எழுதி இருக்கிறார்களாம்.


1949 ஆம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப்பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார்.நேற்று போடலாம் என்று நினைத்தேன். திருவருள் இன்று கூட்டிவித்தது.

                                               கோவிலின் உள்ளே 

மிகவும் பழைய படம் சிவன் , பார்வதிவிசிறி சாமியார் யோகி ராம் சுரத்குமார்
மெளன குரு ஸ்ரீலஸ்ரீ அப்புடு சுவாமிகள்
புரவி பாளையம் கோடி சுவாமிகள், சாய்பாபா


கோவிலை இவர்தான் பார்த்து கொள்கிறார்.
கோவில் உள்ளும் சுதந்திரமாக நிற்கும் நாய்

                                குட்டிகள் அவரிடம் பேசுகிறது.

நான்  போய் வருகிறேன் என்று விடை பெற்று திரும்பினலால்

என்னை போக விடாமல் என் கால்களுக்கு பக்கத்தில்  வந்து நின்று கொண்டது.

நேபாள மன்னரும்  பைரவ உபாசகருமான ராஜாராம் சுவாமிகள்  இராமலிங்க சுவாமிகளுக்கு "பைரவ உபதேசம்" செய்து வைத்தராம்.  பாடகச்சேரியில் இருந்தவரை சுவாமிகள் பைரவ பூஜை செய்து வந்தராம். பைரவ பூஜை என்பது  பைரவ வாகனமான நாய்களுக்கு உணவு சமைத்து அவைகளுக்கு இலை போட்டு பரிமாறி அவை சாப்பிடுவதை மகிழ்ச்சியுடன் பார்ப்பது. பாடகச்சேரிக்கு பக்கத்தில் இருக்கும் ஊர்களுக்கு போய் நாய்களை வர சொல்லி விட்டு  வருவராம். அவைகளும் வந்து  இலையில்  முன் நின்று வைத்த உணவுகளை  சுத்தமாக சாப்பிட்டு செல்லுமாம். 



அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் தெருவில் திரிந்து கொண்டு இருக்கும் நாயிடம் இராமலிங்க சுவாமிகளை பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினால் அவர் வந்து விடுவாராம்.  நோய் நொடி , மற்றும் ஏதாவது பிரச்சனைகள்   உள்ளவர்கள் அவரிடம் வந்தால் அவர்  "ஆபத்சகாயம் " என்று சொல்லி திருநீறு பூசிவிட்டால் எல்லாம் சரியாகி விடுமாம்.

பிஸ்கட் வாங்கி போய் இருந்தேன்,   அவைகளுக்கு   கொடுத்தேன்.

என் கணவர் காரில் அமர்ந்து என் வருகைக்கு காத்து இருக்கிறார்.


தினமலர் கோவில் பக்கத்தில்   இந்த சுட்டியில் போய்  பாடகச்சேரி சுவாமிகளை பற்றி மேலும் விவரங்கள் வேண்டுமென்றால்  தெரிந்து கொள்ளலாம்.

நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி காட்டி இருக்கிறார். அவை எல்லாம் படித்து தெரிந்து கொள்ள விரும்பம் என்றால் படிக்கலாம்.

சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகத்தை  படங்களுடன் போட்டு இருந்தார்கள். அப்போது நானும் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்  திருமடத்திற்கு போய் இருக்கிறேன். பதிவு போடவில்லை போட வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.

இன்று போட்டு விட்டேன்.


" நான் மறைந்தாலும் என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன் . என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகளை செய்து வருவேன்"  என்று சொல்லி இருக்கிறார்.


அனைவருக்கும் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் எல்லா நன்மைகளும்  அருள வேண்டும்.


நாளை ஆடி 18  அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் பற்றிய தகவல்கள் அருமை அம்மா...

    படங்கள் அனைத்தும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    பிறருக்கு உழைத்த உத்தமர். பிறர் நலம் விரும்பியவர்.
    உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் சிறப்பு, படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    தங்களுக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவக்கோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  4. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.  படங்களும், தகவல்களும் சிறப்பு.  செல்லங்கள் படம் அழகு.  அவற்றுக்கும் இலைபோட்டு விருந்து வைக்கும் தகவல் வியப்பு.  திருநாகேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத் தகவல் உட்பட நிறைய தகவல்கள் புதிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வலமுடன்
      ஆடிப்பெருக்கு வாழ்த்துகளுக்கு நன்றி.
      கதிராமங்கலம் அருகில் ஒரு பாபா கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் ராமலிங்க சுவாமிகள் சிலை இருந்தது. அங்கு உள்ளவரிடம் இவரை பற்றி கேட்ட போது பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் என்று சொல்லி ஒரு புத்தகம் கொடுத்தார் இவரின் வாழ்க்கை வரலாறு அதில் இருந்தது.

      வலங்கைமான் அருகில் இவர் வசித்த ஊர் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். ஒரு நாள் தற்செயலாக அந்த ஊர் வழியாக போனோம்.
      அப்படி தரிசனம் செய்த ஊர்.

      அங்கு செல்லங்கள் இருக்கும் அவைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாம் என்பதும் தெரியாது. அன்று பிஸ்கட் கையில் வைத்து இருந்தோம்.

      அங்கு செல்லங்களுக்கு உணவு, பிஸ்கட் கொடுக்கலாம் என்று அறிவிப்பு பார்த்தோம். கையில் பிஸ்கட் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

      தனி ஒருவராக யாசகம் பெற்று கும்பாபிஷேகம் செய்வது என்பது வியப்பான தகவல்தான்.

      நீக்கு
  5. அந்தத் தெருவில் இருக்கும் செல்லத்திடம் சொல்லி அனுப்பினால் மகான் வந்து விடுவார் என்பதும் ஆச்சர்யம்.  எவ்வளவு அற்புதமான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள்..  தன்னலம் கருதாது ஊருக்கு உழைத்த உத்தமர்கள்.  புண்ணிய ஜீவன்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய வியப்பான தகவல்கள் இருக்கிறது அவரை பற்றி.
      சித்துகள் கைவரபட்டவர் . நீங்கள் சொல்வது போல தன்னலம் கருதாது ஊருக்கு உழைத்த உத்தமர் தான் இவர்.
      நிறைய இடங்களில் இவருக்கு கோவில் இருப்பதிலிருந்தே தெரிகிறது அவரின் சேவை.

      புண்ணிய ஜீவன்கள் தான், இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மக்கள் மனதில்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. பாடகச்சேரி சுவாமிகள் பற்றிய பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள். சாரையும் நினைவுகூர்ந்தது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.
      சார் அன்று இரண்டு மூன்று கோவில்கள் அழைத்து போனார்கள்.
      ஒவ்வொரு பண்டிகைகள் வரும் போதும் அவர்களுடன் சென்ற கோவில்கள் நினைவுக்கு வரும் . தினம் நினைக்காத நேரம் இல்லை.
      கோவில்களை படம் எடுப்பேன். சாரை, என்னை போட்டோ அவ்வளவாக எடுக்கவே இல்லை. இப்போது பார்க்கும் போது அவர்களை நிற்க வைத்து ஒவ்வொரு இடத்திலும் படம் எடுத்து இருக்கலாம் என்று நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

      நீக்கு
  8. பாடகச் சேரி சுவாமிகள் குறித்த பதிவு அருமை. நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அரிய மகான். திருநாகேஸ்வரம் கோயில் போயிருக்கிறேன். கும்பாபிஷேகம் நடத்திய விஷயங்கள் எல்லாம் அதிசயக்க வைக்கின்றன. படங்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, துளசிதரன், வாழ்க வளமுடன்

      ஆமாம். சிறந்த மகான் தான். அவரை பற்றி படித்த விஷயங்கள் வியப்பை தரும் .அதிசயக்க வைக்கின்றனதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகத்தை படங்களுடன் போட்டு இருந்தார்கள். //

    ஆமாம் கோமதிக்கா நினைவு இருக்கிறது. அங்கும் நீங்கள் சொல்லியிருந்தீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      ஆமாம், அங்கு அவர் தளத்தில் சொன்னேன்,நேரம் இப்போதுதான் கூடி வந்தது.

      நீக்கு
  10. குட்டிச் செல்லங்கள் செம அழகு. ஆமாம் அக்கா அதுக்கு பிஸ்கட் போட்டால் நம்முடன் வரும் இல்லை என்றால் பேசினாலே வந்துவிடும்.

    பாடகச் சேரி சுவாமிகள் பற்றிய தகவல்கள் அருமை. அவர் பைரவச் செல்லங்களுக்குச் சாப்பாடு கொடுத்த நிகழ்வும் அவர் சென்று அழைத்ததும் அவை வந்து அழகாக உண்டு சென்றது எல்லாமே எத்தனை அற்புதமானவர் என்று சொல்ல வைத்தது.

    அக்கா இந்த பைரவ மந்திரம் அறிந்த நேபாள மன்னர் குறித்து நீங்கள் சொல்லியிருக்கீங்களோ? அதாவது இந்த வரி குறிப்பிட்டு. வாசித்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிச் செல்லங்கள் அழகுதான்.
      கோவில் வாசலிலேயே வரவேற்றது. உள்ளே போய் விட்டு திரும்பி போகும் போது கால் அருகே வந்தது. மனிதர்களை மிகவும் விரும்பும் அவை.

      ஆமாம் , அவர் அற்புதமானவர் தான்.

      //அக்கா இந்த பைரவ மந்திரம் அறிந்த நேபாள மன்னர் குறித்து நீங்கள் சொல்லியிருக்கீங்களோ? அதாவது இந்த வரி குறிப்பிட்டு. வாசித்த நினைவு//

      ஆமாம், சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் தான் சொல்லி இருந்தேன்.
      உங்கள் நினைவாற்றல் அருமை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
  11. செல்லத்திடம் சொல்லிவிட்டால் சுவாமிகள் வந்துவிடுவார் என்பது வியப்படைய வைத்தது. இப்போது அவர் இருந்திருக்கமாட்டாரா என்று நினைக்கவும் வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, அவரை நம்பும் அடியவர்கள் இப்போதும் இருக்கிறார் என்று தான் சொல்கிறார்கள்.

      நீக்கு
  12. கண்ணழகி இருந்த போது அவள் என்னிடம் ஏதோ சொல்ல வருவாள். அவளிடம், என்னடி செல்லம் என்னம்மா விஷயம்? என்னாச்சும்மா? என்று நாம் ஒரு ஆதங்கம் அன்போடும் கேட்டால் அவள் ஏதோ சொல்ல வருவது போல் வாயை அசைத்து அவள் ஏதோ பேச விழைகிறாள் என்று நன்றாகத் தெரியும். நான் மீண்டும், என்னம்மா செல்லம், என்றால் உடனே ஒரு குரல் ஏதோ சொல்வது போல் எழுப்புவாள். வித்தியாசமாக இருக்கும். நான் உடனே அப்படியாம்மா, அப்படியா விஷயம் என்றால் உடனே என்னை முன் காலால் தட்டி அழைப்பாள், வெளில போணுமாம்மா? என்றால் உடனே ஓடிச் சென்று கதவருகில் தயாராக நிற்பாள். தெரிந்துவிடும். அழைத்துச் சென்றால் கரெக்ட்டாகப் புல் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்வாள் அவளுக்குப் புல் வேண்டியிருந்திருக்கும் வயிறு சரியில்லாமல் இருந்திருக்கும்.
    சில சமயம் இப்படிப் பேசி, அவள் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவள் விரும்பியது அல்லது நினைத்தது இல்லை என்றால் அந்த இடத்திலேயே நிற்பாள். வீட்டிற்கு வரமாட்டாள். இப்படி நிறைய விஷயங்கள் பேசுவாள். அவளுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டு ப் பெறுவாள். சில சமயம் மட்டும் புரியாது அவள் என்ன சொல்ல விழைகிறாள் என்று. இதை வாசித்ததும் இப்படிப் பல நினைவுகள் வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணழகி அம்மாவிடம் நிறைய பேசுவாள் தானே!
      செல்லமாக வளர்ப்பவர்கள் எல்லாம் செல்லங்களுடன் பேசுவதை கேட்டு இருக்கிறேன். அவைகளும் அவர்களுடன் செல்லமாக பேசுவதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் ஒரு நாள் விட்டு விட்டு போய் விட்டால் அவை குரல் எடுத்து குழந்தை போல அழும்.
      கண்ணழகி பற்றி சொன்னதை படித்ததும் மனது நெகிழ்ந்து விட்டது. அதன் பிரிவு மனதை கஷ்டபடுத்துகிறது.

      மகன் ஊரில் , மகள் ஊரில் எல்லாம் வளர்ப்பு செல்லங்களுடன் தான் வெளியே வருகிறார்கள். அதற்கு எத்தனை அலங்காரம் செய்கிறார்கள்! குழந்தைகளை போலவே வளர்க்கிறார்கள்.
      அவைகளும் ஒட்டிக் கொண்டு கொஞ்சுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. பாடகச்சேரி சுவாமிகள் பற்றி அறிந்து கொண்டோம்.
    ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.
    ஆடி பதினெட்டாம் பெருக்கு வாழ்த்துகள். பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளைப் பற்றிய இந்தப்பதிவு விபரமாக நன்றாக உள்ளது. சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் தளத்திலும் இவரைப்பற்றிய செய்திகளுடன் படித்த நினைவு வருகிறது.

    கோவில் கும்பாபிஷேகம் செலவுக்கு இவர் செய்த செயல் வணங்கத்தக்கது.
    படங்கள் அனைத்தும் அழகாக வந்துள்ளது. பழைய படமாக சிவன் பார்வதி வண்ணப்படம் மிகவும் அழகாக உள்ளது. அப்போதுள்ள வண்ணக் கலவைகளின் நிறங்கள் கண்களுக்கு இதமானமதாக இருக்கும். அடிக்கும் கலர்கள் அப்போது பிரலமாகவில்லை.

    அதுபோல், செல்லங்களின் விருந்து படம் மிக அருமை. அது வரிசையாக அமர்ந்து சாப்பிடும் அழகே கண்களுக்கு விருந்தாக உள்ளது. இராமலிங்க சுவாமிகளின் அன்பும், அறனும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது இவர்களது ஆசிகள் நமக்கு என்றும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    அந்தக்குட்டிச் செல்லம் தங்கள் காலருகே வந்து "நீங்கள் செல்வதை விரும்பவில்லை" என்று தன் நன்றியை காட்டும் படம் கண்டு நெகிழ்ந்து போய்விட்டேன்.

    நன்றிக்குப் பெயர் போன அந்த ஜீவன்கள் அந்த கோவிலின் சிறப்புகளாக சுதந்திரத்துடன் கோவில் முழுக்க நடமாடுவதும் பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், கோவிலை பார்த்து தரிசிக்கப் போகும் நமக்கு கொஞ்சம் பயம் வருமோ? என்ற சந்தேகமும் வருகிறது.

    கோவிலைப்பற்றியும், சுவாமிகளின் அறனுடன் கூடிய மனதைப்பற்றியும் தங்கள் பதிவாக எழுதியிருப்பது படிக்க நன்றாக உள்ளது. கோவிலுக்கெல்லாம் தங்களை அழைத்துப்போய் தங்கள் இருவரின் அன்பான வாழ்க்கைக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த தங்கள் கணவருக்கும் வணக்கங்களுடன் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை.
      ஆடி பதினெட்டாம் பெருக்கு வாழ்த்துகள். பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளைப் பற்றிய இந்தப்பதிவு விபரமாக நன்றாக உள்ளது.//

      நன்றி.


      //கோவில் கும்பாபிஷேகம் செலவுக்கு இவர் செய்த செயல் வணங்கத்தக்கது.//

      கோபுரத்தில் செடி கொடிகள் வளர்ந்து பழுது அடைந்து இருப்பதைப் பார்த்து வருந்தி அவர் பல காலம் எல்லோரிடமும் பணம் பெற்று கட்டிய செயல் வணங்கத்தக்கதுதான்.

      பழைய படங்கள் நீங்கள் சொல்வது போல வண்ணக்கலவை நன்றாக இருக்கும்.

      அறுசுவை உணவு சமைத்து 300, 100 என்று செல்லங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு போவது, சண்டை இல்லாமல், சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டு போவது வியப்பு தான்.

      //அந்தக்குட்டிச் செல்லம் தங்கள் காலருகே வந்து "நீங்கள் செல்வதை விரும்பவில்லை" என்று தன் நன்றியை காட்டும் படம் கண்டு நெகிழ்ந்து போய்விட்டேன்.//

      செல்லத்தின் அன்பு நெகிழ வைக்கும் தான். இன்னும் கொஞ்ச நேரம் அதனுடன் விளையாட ஆசைதான். ஆனால் என் கணவர் காரில் அமர்ந்து விட்டார்.

      //நன்றிக்குப் பெயர் போன அந்த ஜீவன்கள் அந்த கோவிலின் சிறப்புகளாக சுதந்திரத்துடன் கோவில் முழுக்க நடமாடுவதும் பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், கோவிலை பார்த்து தரிசிக்கப் போகும் நமக்கு கொஞ்சம் பயம் வருமோ? என்ற சந்தேகமும் வருகிறது.//

      நம்மை அன்புடன் வரவேற்கிறது வாலை ஆட்டி. நம் பக்கத்தில் கூட வருவது இல்லை பெரிய செல்லங்கள். குட்டிச்செல்லங்கள்தான் பக்கத்தில் வந்தன.
      உறுமலோ குலைப்போ இல்லை. அதனால் பயம் இல்லை.

      //கோவிலைப்பற்றியும், சுவாமிகளின் அறனுடன் கூடிய மனதைப்பற்றியும் தங்கள் பதிவாக எழுதியிருப்பது படிக்க நன்றாக உள்ளது//

      நிறைய இருக்கிறது நான் கொஞ்சம் தான் பகிர்ந்து இருக்கிறேன். தினமலர் சுட்டியில் வாசிக்கலாம். நிறைய செய்திகள் இருக்கிறது, நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்.

      //கோவிலுக்கெல்லாம் தங்களை அழைத்துப்போய் தங்கள் இருவரின் அன்பான வாழ்க்கைக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த தங்கள் கணவருக்கும் வணக்கங்களுடன் நன்றி.//

      நாள் தோறும் நன்றி வணக்கமும் சொல்லி கொண்டு இருக்கிறேன்.கொரோனா காலத்தில் மட்டும் தான் கோவில்கள் அவ்வளவாக போகவில்லை இல்லையென்றால் ஏதாவது கோவிலுக்கு அழைத்து சென்று கொண்டே இருப்பார்கள்.

      காலை பொழுதுகள் மனதை அழுத்தும்,வீட்டின் பூஜை அறை காலை அவர்கள் வசம். பழைய பூவை அகற்றுவது, புது பூக்கள் வைப்பது இறைவன் துதிபாடல்களை பாடுவது என்று அவர்கள் காலை பொழுது இருக்கும்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.






      நீக்கு
  15. ஆடிப் பூரம் ஸ்வாமிகள் ஜீவசமாதியான நாள்.. பாடகச்சேரி செல்வதற்கு அப்போதே திட்டமிட்டு இருந்தேன்..

    ஆனால் கால் வலியால் முடியவில்லை.. அருகில் கரந்தையில் ஸ்வாமிகள் சில காலம் தங்கியிருந்த வீட்டில் வழிபாடு என்றார்கள்..

    வீட்டில் நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக எங்கள் காளியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டார்கள்.. மகன் நரசிங்கப் பெருமாள் கோயில் கைங்கர்யத்துக்குச் செல்லும் படியான சூழல்..

    என்னால் தனியாக எங்கும் செல்வதற்கு இயலவில்லை..

    வயல் வெளியில் உருவாக்கப்பட்ட நகர்.. வாடகை வீட்டில் இருக்கின்றோம்.. பிரதான சாலைக்கு வருவதற்கே பெரும் பிரச்னை.. அதுவும் விரிவாக்கப் பணிகளால் உருமாறிக் கிடக்கின்றது.. மழையினால் சேறு சகதி..

    என்னவோ இந்த வருஷம் இயலவில்லை.. ஆடி அமாவாசை அன்று திருப்பூந்துருத்தி சென்று வந்தது கூட மகனுடன் தான் ..

    ஸ்வாமிகள் மன்னிப்பாராக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      ஆடிப்பூரம் சுவாமிகள் ஜீவசமாதியான அன்று பதிவு போட நினைத்தேன், அன்று முடியவில்லை. உறவினர் வருகை. மறுநாள் தான் முடிந்தது.

      போட வேண்டும் என்று நினைப்புக்கே அவர் படங்களை கண்ணில் காட்டினார். ஆண்டாள் படங்களை தேடிய போது நான் எடுத்த படங்கள் கிடைத்தன. அவரை நினைத்தாலே போதும் போக முடியவில்லை என்று நினைக்காதீர்கள். உடல் நலம் பெற்றவுடன் போய் பார்த்து வணங்கி வாருங்கள்.

      மழையால் எல்லா இடமும் அப்படித்தான் இருக்கிறது.
      இங்கும் மழை தினம்.

      விரைவில் உடலநலம் சரியாகும் சுவாமிகள் அருள்வார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பதிவில் என்னைக் குறித்து சொல்லியிருப்பதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் போய் வந்தது 2016 ஆம் ஆண்டு. நீங்கள் கோவில் புதுபித்தபின் போய் வந்து பதிவு போட்டு இருக்கிறீர்கள்.

      உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  17. பாடகச்சேரி ஸ்வாமிகள் பற்றி அறிந்திருந்தாலும் பைரவ பூஜை பற்றியோ நேபாளத்து ஸ்வாமிகள் பற்றியோ இன்றே அறிந்தேன். படங்களுடன் கூடிய அனைத்து விபரங்களுக்கும் நன்றி. இன்று துரை அவர்களின் பதிவில் உங்கள் இந்தப் பதிவைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கார். அதன் மூலமே வந்தேன். இதை எப்படித் தவற விட்டேன் எனத்தெரியலை. அருமையான பதிவு. அரிதான தகவல்கள். நீங்கள் முன்னர் ஆடிப்பெருக்குச் சென்ற கோயில்களைப் பற்றிப் போட்டிருக்கும் பதிவுகளையும் படிச்சிருக்கேன். உங்கள் கணவரோடு வீராணம் சென்ற பதிவு எனக்கு ரொம்பவும் பிடிச்சது. உங்களுக்கும் மீண்டும் அந்த நினைவுகளெல்லாம் வந்திருக்கும். நினைவுகளே இப்போது பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      உங்கள் கணினி சரிவர இயங்கவில்லை என்றதால் வரவில்லை என்று நினைத்தேன். நிறைய பதிவுகள் நீங்கள் பார்க்கவில்லை.
      துர்கா வந்து இருப்பாள் அதுதான் வரவில்லை என்று நினைத்தேன்.
      சென்னையில் தானே இருக்கிறாள் குழந்தை?
      சகோ துரை அவர்கள் இந்த பதிவை குறிபிட்டு இருக்கிறார்களா? பார்க்கிறேன்.
      முன்பு என் கணவருடன் சென்று வந்த ஆடிப்பெருக்கு பதிவுகளை நானும் படித்து பார்த்து நினைவுகளில் ஆழ்ந்து போனேன்.
      நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. படங்களும் பகிர்வும் நன்று. தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு