ஞாயிறு, 12 ஜூன், 2022

விசாகன் வினைகள் தீர்ப்பான்


திருப்பரங்குன்றம் 

இன்று காலை நடந்த பால் அபிஷேக படம் அண்ணன் மகன் அனுப்பினான்.

அருணகிரிநாதர் அருளிய திருப்பரங்குன்றம் திருப்புகழ் .
இந்த காணொளியில் முருகன் கோயில் தெப்ப உற்சவம் தெரிகிறது. சிறிய பாடல்தான் கேளுங்கள்.

இன்று வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் மிக சிறப்பாக இருக்கும். திருப்பரங்குன்ற முருகனுக்கு  என் தங்கை வீட்டில் தான் முதன் முதலில்  அபிஷேகம் செய்வார்கள். அப்புறம் தான் மற்றவர்கள் அபிஷேகம் நடக்கும் முருகன் அருளால்  பல தலைமுறைகளாக  நடத்தி வருகிறார்கள்.

என்னை அழைத்தாள் . ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஊரிலிருந்து உறவினர் வருகை, மற்றும் உடல் நிலையும் சரியில்லை அதனால் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து முருகனுக்கு வைத்து  வழிபட்டு விட்டேன்.வீட்டில் இருந்தபடி திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்து விட்டேன். சிறிய காணொளிதான் பார்கலாம்.

தொலைக்காட்சிகளில் அவரின் அபிஷேகம் அலங்காரம் பூஜைகளை பார்த்து விட்டேன். வேலுண்டு வினையில்லை, மயில் உண்டு பயம் இல்லை.


https://www.youtube.com/watch?v=4aH1d2Dq-ww
"முருகனுக்கு ஒரு நாள் திருநாள்"  சூலமங்கல சகோதரிகள் பாடியது. இந்த பாட்டு எனக்கு பிடித்த பாடல்
உங்களுக்கும் பிடித்த பாடல்தான் .


திருப்பரங்குன்றம் பற்றி முன்பு நிறைய பதிவுகள் போட்டு இருக்கிறேன். அதனால் இந்த பதிவில் பாடல்கள் மட்டும்.தங்கை இரவு அனுப்பி வைத்த பிரசாதம் 
எல்லோரும் எடுத்து கொள்ளுங்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
----------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

 1. அற்புத காணொளிகள் அனைத்தும் கண்டு தரிசித்து கொண்டேன் நன்றி.

  முருகனுக்கு அரோகரா

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
  காணொளிகள் கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.
  முருகனுக்கு அரோகரா.

  பதிலளிநீக்கு
 3. காணொளிகள் அருமை. முருகனுக்கொருநாள் திருநாள் - எனக்குப் பிடித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   காணொளிகள் பார்த்து பிடித்தபாடலை கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 4. திருப்பரம்குன்று முருகன் தல அபிஷேகம் காணொளிகள் கண்டு மகிழ்ந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   அபிஷேக காணொளிகள் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. வைகாசி விசாகத்தை முன்னிட்டு அருமையான பதிவு.. 1970 களில் கழுகுமலை கந்தசுவாமி என்பவர் பாடியளித்திருந்தார் - வேலுண்டு வினையில்லை - எனும் பாடலை.. அப்போதே அது மனப்பாடம்.. இன்று கேட்கையில் மிகவும் மகிழ்ச்சி..

  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   நானும் என் சின்ன வயதில் இந்த பாட்டை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாலாட்டு பாடலாக வேலுண்டு வினையில்லை பாட்டை பாடுவேன்.
   எப்போது கேட்டாலும் மகிழ்ச்சி தரும் பாடல்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. காணொளிகள் அருமை...

  9/6/2022 வியாழன் அன்று திருப்பரங்குன்றம் சென்று வந்தோம்...

  முருகா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   வியாழன் அன்று திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்தீர்களா மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   நலமா? மீண்டும் வலைத்தளம் வந்தது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. நேற்று சிறப்பான நாள்.  வைகாசி விசாகம் ப்ளஸ் பிரதோஷம்.  காணொளிகள் கண்டேன்.  முருகனை தரிசித்தேன்.  முருகனுக்கொருநாள் திருநாள் அந்த முதவனின் வைபவ பெருநாள் அருமையான பாடல்களில் ஒன்று.  வைகாசி விசாகத் திருநாள் வரியும் வரும் கந்த சஷ்டிக்கொரு திருநாள் வரியும் வரும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   ஆமாம்,நேற்று சிறப்பான வைகாசி விசாகம்.பிரதோஷமும் , விசாகமும் சேர்ந்து வந்தது.

   திருநாள் பாடலில் முதலில் வருவது வைகாசி திருநாள் தான் முதலில் வரும்.

   எல்லோருக்கும் பிடித்த பாடல் என்று தெரியும் அதுதான் அந்த பாடல் பகிர்ந்தேன்.

   இன்னொன்றும் எல்லோருக்கும் பிடித்த பிரசாதம், புளியோதரை, வடை , முருகன் விபூதியை தங்கை இரவு அனுப்பியதை போட முயற்சி செய்தேன் முடியவில்லை. இப்போது இணைத்து விட்டேன்.
   அதுவும் உங்களுக்கு பிடிக்கும்.

   நீக்கு

   நீக்கு
 9. இந்த அலுவலகத்திலிருந்து சீக்கிரம் ரிலீவ் ஆகி புது அலுவலகம் சென்று விடுவேன் என்பதால் நேற்று அலுவலக மக்களுக்கு ட்ரீட் வைத்தேன்.  அதிலேயே பாதி நாள் சென்றது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த அலுவலகத்திலிருந்து சீக்கிரம் ரிலீவ் ஆகி புது அலுவலகம் சென்று விடுவேன் என்பதால் நேற்று அலுவலக மக்களுக்கு ட்ரீட் வைத்தேன்.//

   ஓ! வாழ்த்துக்கள்.

   உங்களை எல்லோரும் நினைத்து கொள்வார்கள் எப்போதும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. அருமையான காணொளிகள் மூலம் திருப்பரங்குன்றம் முருகனை பார்த்து வழிபட்டு கொண்டேன். பால் அபிஷேகம் பஞ்சாமிருத அபிஷேகம் பார்க்கையில் மனதுக்கு நிறைவாக இருந்தது. பாடல்கள் கேட்டிருக்கிறேன். "முருகனுக்கொரு நாள் திருநாள்" பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

  நேற்று என்னால் வர முடியவில்லை. இன்று காலையில் பதிவை படித்து அபிஷேகங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் முருகனின் பிரசாதங்களையும் நீங்கள் பகிர்ந்தளித்தது மனதுக்கு மிகவும் இதமாக சந்தோஷமாக இருந்தது. பிரசாதங்களை பக்தியுடன் எடுத்துக் கொண்டேன். அனைவரையும் நோயின்றி இறைவன் ஆரோக்கியமாக நலமுடன் வைத்திருக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்வோம்/கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு முதலில் பிரசாதம் கிடைக்கணும்னு இருந்திருக்கிறது கமலா ஹரிஹரன் மேடம்.

   நீக்கு
  2. நீங்கள் சொன்னது உண்மை. முதலில் பிரசாதம் கமலா ஹரிஹரன் அவர்களுக்கு கிடைத்து விட்டது.

   நீக்கு
 11. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

  //அருமையான பதிவு. அருமையான காணொளிகள் மூலம் திருப்பரங்குன்றம் முருகனை பார்த்து வழிபட்டு கொண்டேன். பால் அபிஷேகம் பஞ்சாமிருத அபிஷேகம் பார்க்கையில் மனதுக்கு நிறைவாக இருந்தது. பாடல்கள் கேட்டிருக்கிறேன். "முருகனுக்கொரு நாள் திருநாள்" பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.//

  நன்றி நன்றி.

  இன்று காலைதான் பிரசாதம் படம் போட்டேன். உங்களுக்கு கிடைத்து விட்டது. பதிவு காலை போட்டேன்.பிரசாதம் தங்கை இரவு கொடுத்து விட்டாள் .

  அனைவரையும் ஆரோக்கியமாக வைத்து இருக்க பிரார்த்தித்துக் கொள்வோம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. பிரசாதம் படம் புதிதா? பஞ்சாம்ருதம், புளியோதரை, வடையா? படம் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பிரசாதம் படம் புதிதா? பஞ்சாம்ருதம், புளியோதரை, வடையா? படம் அழகு//

   ஆமாம், புதிது தான்.நெல்லை தமிழன் உங்களை நினைத்து கொண்டேன் . கோயில் பதிவு போட்டால் என்ன பிரசாதம் கிடைத்தது என்று கேட்பீர்களே என்று. காலையில் பதிவு போட்ட போது பிரசாதம் கிடைக்கவில்லை. இரவு கொடுத்து விட்டாள். உடனே சேர்த்து விட்டேன்.
   நன்றி மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு.

   நீக்கு
 13. உங்கள் தயவில் முருகன் அபிஷேகம் காண முடிந்தது. கோவிலில் நல்ல கும்பல். சுதாவின் குரலில் திருப்புகழ் இனிமை. மிக்க நன்றி. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   இரண்டு வருடங்கள் கோவில் நிர்வாகத்தார் மட்டும் பார்த்தார்கள் அபிஷேகத்தை. இந்த வருடம் பொது மக்கள் பார்வைக்கு என்றதால் கூட்டம் அதிகமாம் தங்கை சொன்னாள்.
   திருப்புகழை கேட்டு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 14. காணொளிகளுடன் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. அருமையான காணொளி, அருமையான பாடல் பகிர்வுகள். சுதா ரகுநாதன் எப்போதும் போல் அமர்க்களமாகப்பாடி இருக்கார். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி. இன்னிக்குத் தான் கவனித்தேன். இந்தப் பதிவு வந்திருப்பதை. தாமதம் ஆகி விட்டது.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

  அருமையான காணொளி, அருமையான பாடல் பகிர்வுகள்.

  நன்றி.

  சுதா ரகுநாதன் எப்போதும் போல் அமர்க்களமாகப்பாடி இருக்கார்.//

  ஆமாம் , எப்போதும் நன்றாக பாடுவார்.

  //நல்லதொரு பகிர்வுக்கு நன்றி. இன்னிக்குத் தான் கவனித்தேன். இந்தப் பதிவு வந்திருப்பதை. தாமதம் ஆகி விட்டது.//

  பார்த்தவுடன் பாடல்களை, காணொளிகளை கண்டு உங்கள் கருத்துக்களை சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு