மேகமலை இதற்கு முன் போட்ட பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.
இந்த பதிவில் மலைபாதை வளைவுகள், மேகமூட்டத்திற்கு இடையே சாலைகள், செக்போஸ்ட் அருகே பார்த்த பறவைகள், மேகமலையில் பார்த்த பறவைகள் இடம் பெறுகிறது.
செக் போஸ்ட் அருகே உள்ள முருகன் கோயில் போல வண்டியிலிருந்து எடுத்த படம்
அங்கு பார்த்த ஜோடி காகங்கள் இரண்டுக்கும் பிடறி கலர் வேறுபடுகிறது.
அங்கு பார்த்த ஜோடி காகங்கள் இரண்டுக்கும் பிடறி கலர் வேறுபடுகிறது.
ஆலம் பழத்தை கொத்தி தின்று கொண்டு இருக்கிறது
போகும் வழியில் தெரிந்த ஏரியில் முக்குளிப்பான்
Red - Whiskered Bulbul புல் புல் பறவை
நாங்கள் தங்கி இருந்த மேகமலை விடுதியின் சமையல் அறை பின் பக்கம் பார்த்த பறவைகள்
ஜோடி மணிப்புறாக்கள்
பஞ்சவர்ண கிளி வெகு தூரத்தில் மரத்தில் அமர்ந்து சத்தம் கொடுத்தது மேக மூட்டத்திலும் ஒரளவு தெரிகிறது.
இந்த படத்தில் இரண்டு கிளிகள், ஒரு புறா இருக்கிறது.
பறவை கூடு ஏரிக்கரையோரம் மண் எடுத்து கட்டி இருக்கிறது கூடு.
வெண்மேகம் பறக்கும் காட்சி
விசில் செய்யும் பறவை, பறவையின் ஒலி மட்டும் சிறிய காணொளி
குற்றால சாரல் போல இருந்தது நாங்கள் போய் இறங்கிய போது. சாரல் மழையை ரசித்து நனைந்து கொண்டு இயற்கையை ரசிக்க நடந்த போது கேட்ட பறவையின் விசில்
ஏரியில் நீர் அலைகளும், கிளிகளின் சத்தமும் இருக்கிறது.
காணொளிகள் எல்லாம் சின்ன சின்ன காணொளிகள் தான் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
மேகமலையின் அழகை அடுத்த பதிவிலும் பார்க்கலாம் .
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------
மலைப்பாதைப் படங்கள் அட்டஹாசம்... அந்தப் பாதையில் ஸ்வெட்டரோடு நடந்தால்...சுகம்.
பதிலளிநீக்குபுல்புல் பறவை இங்கு பார்க்கிறேன். ஆனால் அந்தப் பெயர் இப்போதான் தெரியுது.
கடைசிப்படம், ஏரித்தண்ணீர்... தேயிலை எஸ்டேட்...ரொம்ப நல்லா வந்திருக்கு.
மேகமலை கண்டிப்பா போய்ப்பார்க்கவேண்டிய இடம் போல இருக்கு
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் பயணம் நன்றாக இருந்து இருக்கும். அதன் விவரங்களை, படங்களை போடுங்கள்.
//மலைப்பாதைப் படங்கள் அட்டஹாசம்... அந்தப் பாதையில் ஸ்வெட்டரோடு நடந்தால்...சுகம்.//
ஆமாம். நாங்கள் ஸ்வெட்டர், ஸ்கார்ப், சால் போட்டுக் கொண்டு நடந்தோம்.
இந்த புல் புல் பறவை குளுமையான இடத்தில் இருக்ககூடியாது, உங்கள் ஊரும் அப்படித்தானே! இங்கு வரும் புல் புல் வேறு மாதிரி இருக்கும்.
//கடைசிப்படம், ஏரித்தண்ணீர்... தேயிலை எஸ்டேட்...ரொம்ப நல்லா வந்திருக்கு.//
நன்றி. மேகமலை முதல் பாகம் பார்த்து விட்டீர்களா? உங்களுக்கு பிடிக்கும் .
//மேகமலை கண்டிப்பா போய்ப்பார்க்கவேண்டிய இடம் போல இருக்கு//
இயற்கை ரசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் இடம்தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கிளி கொஞ்சுகிறது என்பார்கள். நிஜம்மாவே கிளி கொஞ்சுகிறது. அத்தனை அழகு. இதெல்லாம் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் பார்க்க நேர்ந்தது இல்லை. உங்கள் மூலம் அங்கேயே போய் வந்த உணர்வு. அனைத்துப் படங்கள், காணொளிகள் பிரமாதமாய் எடுத்திருக்கீங்க! எல்லாமே அருமையாக வந்திருக்கின்றன. தேர்ந்தெடுத்த வாசஸ்தலங்கள் அனைத்தும் புதுமையானவை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குகிளியை படம் எடுக்கும் போது நன்றாக தெரியுமா என்று நினைத்தேன், நல்லவேளை கிளி தெரிகிறது. வெகு தூரத்தில் இருந்தது.
//உங்கள் மூலம் அங்கேயே போய் வந்த உணர்வு. அனைத்துப் படங்கள், காணொளிகள் பிரமாதமாய் எடுத்திருக்கீங்க! எல்லாமே அருமையாக வந்திருக்கின்றன//
ரசித்துப்பார்த்து பாராட்டியதற்கு நன்றி.
தேர்ந்தெடுத்து அழைத்து சென்றது பேரன், பேத்தி, மகள். நாம் கோவில் மட்டும் போய் வருவோம். பிள்ளைகள் இந்த மாதிரி இடங்களை தேர்ந்து எடுக்கிறார்கள்.
நமக்கு பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் மிகவும் அழகாக தெளிவாக இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குபனிப்பொழிவு படம்கூட கவனமாக எடுத்து இருக்கிறீர்கள் பாராட்டுகள்.
படம் எடுப்பது என்பது ஓர்கலை அது எல்லோருக்கும் வராது மீண்டும் வாழ்த்துகள். தொடர்கிறேன்
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்துப்பார்த்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொன்னதற்கு நன்றி சகோ.
பனிமூட்டம் ஏரி, பறவைகள் என அழகிய படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பின் கோமதி மா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
மேக மலை இத்தனை அழகாக இருக்கிறதே!!
தமிழ் நாட்டின் சொர்க்கம் என்று சொல்லலாம்
போல அப்படியொரு அழகு.
அந்த விசில் பறவை. காதோரம் வந்து கொஞ்சுகிறது.
பறக்கும் மஞ்சு மேகங்கள் இன்னும் அருமை.
அந்த ஒளி மங்கிய பாதையில் வண்டி ஓட்டுவது
சிரமமாக இருக்காதோ.
அந்த சிற்றாரும், முருகன் கோவிலும்,
தேயிலைத் தோட்டங்களும்
பார்க்கப் பார்க்கப் பரவசம்.
வெகு நேர்த்தியாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.
நல்லதொரு இடத்தில் உங்களுக்கு ஓய்வும்
மன அமைதியும் கிடைத்திருக்கும்.
காணொளி மிகப் பிரமாதம் மா.
மனம் நிறை நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குமேகமலை அழகுதான்.
தமிழ் நாட்டில் மிக அழகான இடம்தான். இந்த இடம் தனியார் வசம் இருப்பதால் மக்கள் கூட்டம் இல்லாமல் இருக்கிறது.
விசில் பறவையை பார்க்க முடியவில்லை அதன் சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது.
மேகமூட்டம் இருக்கும் போது விளக்குகளை போட்டு கொண்டுதான் வாகனங்கள் போகிறது. கொஞ்சம் பயம் தான் கொண்டை ஊசிகளில் பயணிக்கும் போது.
கண்ணில் தெரியும் காட்சியை எல்லாம் படம் எடுக்க ஆசைதான்.
மன அமைதியும், நல்ல ஓய்வும் கிடைத்தது உண்மை.
காணொளிகளை, படங்களை ரசித்து பார்த்து பாராட்டி கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.
பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பதா? நம்மவர்களா? ஹா.. ஹா..ஹா..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு தண்டனை என்றால் பயப்படுவார்கள்.
பனிமூடிய பாதை, வளைந்து செல்லும்பாதை, அங்கும் பனி .. திடீரென கோவில் படத்திலிருந்து தெளிவான படங்கள்.. அருமை.
பதிலளிநீக்குபனிமூடிய பாதையில் வண்டி ஓட்டுனர் எப்படி பத்திரமாக ஓட்டி சென்றார் என்பதற்கு எடுத்தேன். ஏற்காடு போகும் பாதையும் இப்படித்தான் இருக்கும்.
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
எத்தனை பறவைகள்? இவைகளை இவ்வளவு காண முடிவதாலேயே உங்களுக்குத் பிடித்த இடமாய் இருந்திருக்கும். காணொளிகள் பார்த்தேன். ரசித்தேன். அந்த இடமே அழகு என்று தெரிகிறது.
பதிலளிநீக்குநிறைய பறவைகளின் ஒலி மட்டும் கேட்க முடிந்தது, விசில் பறவை முகம் மறைத்து கொண்டது. ஆமாம், பறவைகளின் ஒலியே மனதுக்கு மகிழ்ச்சி தந்தது.
நீக்கு//அந்த இடமே அழகு என்று தெரிகிறது.//
ஆமாம், அந்த இடமே அழகுதான்.
காணொளிகளை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
படங்கள் அழகாக உள்ளன. குறிப்பாக கடைசி படம் ஏரி, தேயிலை தோட்டம், தொழிற்சாலை மூன்றும் ஒரே படத்தில். படகில் இருந்து எடுத்தீர்களா? கொஞ்சம் கூட frame அட்ஜஸ்ட் பன்னி யிருக்கலாம்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//படகில் இருந்து எடுத்தீர்களா? கொஞ்சம் கூட frame அட்ஜஸ்ட் பன்னி யிருக்கலாம்.//
இல்லை சார், ஏரிக்கரையோரம் இருந்து எடுத்த்தேன். நீங்கள் சொன்னது போல செய்து இருக்கலாம்.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கோமதிக்கா செம படங்கள்.
பதிலளிநீக்குபனி மூடிய சாலைகள் மலைகள்...ஹையோ..செமையா இருக்கு
அக்கா அது நீர்க்காகம் (கொமரான்ட்) இல்லையா? முக்குளிப்பானா? (grebes) நானும் இப்படி எடுத்து வைத்திருக்கிறேன் கோமதிக்கா. தண்ணீரில் நீந்துவதும் மரத்தில் இருப்பதுமாக..பதிவில் வரும். அப்புறம்.அலகும் கண்களின் அடியிலும் ஆந்த மஞ்சள்/ஆரஞ்சு கலர் இருக்கும் இல்லையா? நீர்க்காகம்..இந்தப் படத்திலும் கொஞ்சம் அப்படித் தெரிவது போல இருக்கு அலகும் அப்படி இருப்பதால் கேட்கிறேன். அதிலும் வகைகள் இருக்கு. நான் எடுத்ததை விவரித்து கூகுளில் தேடிய போது அப்படிச் சொன்னது. உங்களுக்குப் பறவைகள் பற்றி நிறையத் தெரியும் என்பதால் கேட்கிறேன் கோமதிக்கா.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குநீர்காகம் என்று தான் நினைக்கிறேன். முக்குளிப்பான் நீரில் முங்கி முங்கி எழுந்தது, வேனிலிருந்து எடுத்த படம்.ஏரி வெகுதூரம். தண்ணீரில் நீந்தும் , மரத்தில் அமரும்.
நானும் கூகுளிலிருந்து தான் சில பறவைகளைபற்றி தெரிந்து கொள்கிறேன்.
மகன், மகள் வீட்டில் பறவைகளின் படங்கள் பேர்கள் இருக்கும் புத்தகத்தில் சிலது தெரிந்து கொண்டேன்.
மலைகளை பனிமூடிய சாலைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஆஹா புல் புல் ரெஸ் விஸ்கர்ட் அழகு!!!!!
பதிலளிநீக்குநானும் எடுத்து வைத்திருக்கிறேன் இப்போது இருக்கும் வீட்டில் இருக்கும் கறிவேப்பிலை மரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு பறந்து விளையாடியது. னாம் எடுக்கப் போகும் போது பறந்துவிடுமே என்று டக்கு டக்கு என்று எதுது வீடியோவும் எடுத்தேன் விளையாடுவதை. நான் வீடியோவை கொஞ்சம் கட் செய்ய வேண்டும்.
உங்கள் படம் நன்றாக வந்திருக்கிறது கோமதிக்கா ரொம்ப அருகில் அழகாக வந்திருக்கிறது.
கீதா
புல் புல் குனிந்து உணவி தேடி கொண்டே இருந்தது, சாப்பிடுவதில் கவனம் செலுத்தியதால் என்னால் எடுக்க முடிந்தது.
நீக்குநீங்கள் எடுத்த வீடியோவை போடுங்கள்.
குருவிகள், மணிப்புறா, கறுப்புக் குருவி சூப்பர்.
பதிலளிநீக்குபஞ்சவர்ணக் கிளி தெரிகிறது ஆமாம் பனி மேகம் சூழ்ந்திருக்கும் போது தெரிவது கஷ்டம்தான் அக்கா உங்களுக்கு வந்திருக்கிறதே. நன்றாக வந்திருக்கிறது கோமதிக்கா...
எனக்கு இங்குப் பல பறவைகள் என் கேமராவில் பனி மேகம் சூழ்ந்திருந்த போது வரவே இல்லை. ஜூம் செய்தாலும் என் கேமராவின் பவர் கம்மி என்பதால்...
கீதா
பறவைகளை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
நீக்குஉங்களின் உற்சாகம் தரும் பின்னூட்டங்கள் படங்களை நன்றாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தருக்கிறது, நன்றி.
அக்கா இருகிளிகளும் தெரிந்தது..
பதிலளிநீக்குமண்ணினால் கூடு நீர்ப்பறவையாகத்தான் இருக்கும் கோமதிக்கா. என்ன அழகாகக் கட்டியிருக்கிறது மேலே, கீழே குஞ்சுகளின் அலகு தெரிகிறதோ? ஃப்ளெமிங்கோ மண் கூடுதான் கட்டுகிறது. அலகு பாருங்க கூர்மையா இருக்கு. ஆனால் இது ஃப்ளெமிங்கோவா தெரியலை. ஆனால் கொக்கு நாரை ஏதோதான்..கழுத்து நீளமா இருக்கு பாருங்க..
ஹைஃபைவ்!! நானும் இங்கு ஏரிக்கரையில் நீர்ப்பறவை ஒன்று கட்டியிருந்த கூடு அது கோரைப்புற்கள் காய்ந்த புற்கள் கொண்டு கப் ஷேப்பில் மரத்தில் கட்டியிருந்தது எடுத்திருக்கிறேன்.
காணொளிகள் ரசித்தேன் பறவை சத்தம் கிளி குரல் எல்லாம் கேட்டேன் அக்கா. மலை, ஏரிக் காட்சிகள் எல்லாமே அழகாக இருக்கின்றன. படங்கள் சூப்பரோ சூப்பர்! ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா
கீதா
சில குருவிகள் ஆற்றோரத்தில் வண்டல் மண் எடுத்து கட்டும் காணொளிகள் பார்த்தேன்.
நீக்குகுஞ்சுகளின் அலகு தெரிவது போல உள்ளது நீங்கள் சொன்னதால் உற்றுப்பார்த்தேன்.
நீங்களும் கூட்டை எடுத்து இருக்கிறீர்களா? அதையும் பதிவில் போடுங்கள் பார்த்து ரசிக்கலாம்.
காணொளிகளை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி
மேகமலைக் காட்சிகள், செல்லும் வழிக் காட்சிகள், பறவைகளின் படங்கள், காணொளிகள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன. பறவைகளின் ஒலியும் கேட்டு ரசித்தேன். படங்கள் எல்லாம் மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள். அதில் உங்களின் ரசனையும் ஆர்வமும் தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோ துள்சிதரன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களையும், காணொளிகளையும் ரசித்துப்பார்த்து கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.
சபரிமலைக் காடுகள் ஒவ்பொரு சமயத்தில் இப்படி இருக்கும்..
பதிலளிநீக்குமற்றபடிக்கு
இப்படியெல்லாம் மலையின் அழகை ரசிப்பதற்கு சூழ்நிலை அமையவில்லை..
படங்களும் காணொளிகளும் அழகு..
// மேகமலையின் அழகை அடுத்த பதிவிலும் பார்க்கலாம் ..//
மகிழ்ச்சியுடன்.,
வாழ்க வையகம்!
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குசபரி மலை போகும் பாதை எல்லாம் இயற்கை அழகு .
இயற்கை அழகை ரசிக்க சூழ்நிலை அமைய வாழ்த்துக்கள்.
படங்களையும் காணொளிகளையும்
பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
படங்கள் மனம் கவர்கின்றன
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
பனி படர்ந்த படங்கள் மிக அழகு! ஊட்டி, கொடைக்கானல் வழித்தடங்களை நினைவு படுத்துகின்றன. ஆனால் இந்த மாதிரி பனி படர்ந்த வழித்தடத்தில் பயணம் செய்யும்போது கொஞ்சம் பயமாகவும் இருக்கும்!
பதிலளிநீக்குஅந்த மணிப்புறா அத்தனை அழகு! ஊருக்கு [ தஞ்சை] கிளம்புவதால் இந்த மேகமலைக்கு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது!
வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது போல பனி படர்ந்த வழி தடத்தில் பயணம் செய்வது கொஞ்சம் பயம் தான்.
தஞ்சை வந்தால் மேகமலை போய் வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மேகமலை படங்களும் காணொளிகளும் மிகவும் அழகு. அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குமேகமலை படங்கள், காணொளிகளை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.
பனிமூட்டம் பலவித பறவைகள் என காட்சிகள் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபழைய பதிவுகளை படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி மாதேவி.
நன்றிகள்.