மேகமலை நிறைவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேகமலை நிறைவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஏப்ரல், 2022

மேகமலை -5






மேகமலை 

மேகமலையை பிப்ரவரி 13ம் தேதி குடும்பத்துடன் சென்று வந்தோம். தொடர் பதிவு.

மேகமலையில் நாம் பார்த்து ரசிக்க நிறைய இடம்  இருக்கிறது. மூன்று நாட்கள் தங்கி இருந்து பார்க்கலாம். நாங்கள் சனிக்கிழமையும், ஞாயிற்று கிழமையும் பார்த்தோம். தேயிலை தோட்டம், மலைமேல் போய் இயற்கை அழகை ரசித்தோம்.

பசுமை மாறா காடுகள், தேயிலை, காப்பி, ஏலக்காய் பண்ணைகள் பார்க்க அழகு. யானை, புலி,  மான்கள் பார்க்கலாம் என்றார்கள், நாங்கள் ஏரிக்கரையோரம் மாடுகள், பறவைகள்   தான் பார்த்தோம். 

மாடுகள் அருகே பறவைகள் நிற்கிறது.


 கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர்  உயரத்தில் இருக்கிறது மேகமலை . மேகம் அடிக்கடிவந்து மலையை மறைப்பதால் மேகமலை. சட்டென்று  வெண்மேகம் மறைக்கிறது, சட்டென்று மலை தெரிகிறது. மாயாஜாலம் போல. நாலைந்து மலைசிகரங்களுக்கு நடுவே உள்ளது இந்த பள்ளத்தாக்கு. இங்கு  மிதமான குளிர் எப்போதும் இருப்பதால் கோடை காலத்துக்கு ஏற்ற சுற்றுலா தலம். குற்றால சாரல் போல சாரல் மழை பெய்கிறது.