வியாழன், 31 அக்டோபர், 2019

கந்தனுக்கு அரோகரா!



கந்த சஷ்டி விழாவில்  முன்பு விரதம் இருந்து கந்தபுராணம் படிப்பேன் ஆறு நாளில்   நாகர்கோயில் கிருஷ்ணன் அவர்கள்  எழுதிய  ஸ்ரீ கந்தபுராணம் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். (நர்மதா பதிப்பகம் வெளியீடு.)
கந்தன் பெருமையும், கந்த புராண மகிமையும் , புராணம் தோன்றிய வரலாறும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் கொஞ்சம்,  மற்றும் சில படங்களும் இங்கு பகிர்வாய்.



எங்கள் வீட்டில் நவராத்திரி கொலுவில் இடம்பெறும்   ஈசன், உமை, கார்த்திகைப் பெண்கள்,   ஆறு குழந்தைகளும்



அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா
' பழம்  எனக்கு ''என்று கேட்கும் முருகன்
இதுவும் எங்கள் வீட்டுக் கொலு பொம்மை


மகனும், பேரனும் சேர்ந்து செய்த கயிலைக் காட்சி. முருகன் உலகம் சுற்றி வருகிறார் மயிலில். பிள்ளையார் தாய் , தந்தையரைச் சுற்றி வந்து  மாம்பழத்தைப் பெறுகிறார். கதை தெரியும் எல்லோருக்கும் அதனால்   இங்கு சொல்லவில்லை. மகனும்  ஒளி ஒளிக் காட்சியில்  திருவிளையாடல்  படத்தில் வரும்  மாம்பழம் பெறும் காட்சியை அமைக்கவில்லை. உலகம் உருண்டை பேரன் செய்தது.
சங்கரன் கோவில் ஸ்ரீ சண்முகர் கந்த சஷ்டி  4 வது நாள் அலங்காரம்

சங்கரன் கோவிலில் இருக்கும் உறவினர் அனுப்பியது
இந்த முருகன் எந்தக் கோயில் முருகன் என்று தெரியவில்லை சஷ்டி 
4  நாள் படம் என்று வாட்ஸ் அப்பில் வந்த படம்

கந்தவேள் முருகனுக்கு அரோகரா!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!


வாழ்க வளமுடன்

37 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு. நன்றி. சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம் இருந்த காலங்களெல்லாம் நினைவில் வருகின்றன. ஒரு சமயம் வரிசையாய்ச் செவ்வாய்க்கிழமை, புதனன்று கார்த்திகை நக்ஷத்திரம், அடுத்து சஷ்டி விரதம் என வர தொடர்ந்து விரதம் இருந்ததில் உடல் நலம் கெட்டுப் போனதினால் மருத்துவர் விரதம் இருக்கக் கூடாதுனு சொல்லிட்டார். ஆகவே இப்போல்லாம் விரதம் இருப்பவர்களைப் பார்த்தால் கை எடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நானும் எல்லா விரதங்களும் இருந்தேன். இப்போது இல்லை.
      சோமவார விரதம்( கார்த்திகை மாதம்) மட்டும் கடைப்பிடிக்கிறேன்.
      பதிவு அவசரப்பட்டு வெளியாகி விட்டது. தலைப்பு, லேபிள் ஒன்றும் கொடுக்கவில்லை . இன்னும் சில எழுத வேண்டும் நினைத்தேன். முருகன் அருள் இது போதும் என்று வந்து விட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. பரவாயில்லை. அவசரத்தில் வந்த பதிவும் அமர்க்களமாகவே இருக்கிறது. காணொளியை அப்போப் பார்க்க முடியலை.இப்போத் தான் பார்த்தேன். மிக அருமையாகச் செய்திருக்கிறார்கள் உங்கள் மகனும், பேரனும். இருவருக்கும் எங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள். பேரனின் உலக உருண்டை மிக வேகமாகச் சுற்றுகிறது. அல்லது மயில் வேகமாகச் சுற்றுகிறதோ! :)))) எ.பி. சைட் பாரில் பதிவு வெளியானதாகத் தெரிந்ததால் நான் உடனே வந்து கருத்துப் போட்டுவிட்டேன். :)))))

      நீக்கு
    3. ஆமாம் , மயில் வேகமாய் சுற்றுகிறது, உலகை சீக்கீரம் சுற்றி வந்து பழத்தை பெற வேண்டும் என்று மிக ஆவலாய் இருக்கிறார் முருகர்.
      உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன் இருவருக்கும். வாழ்த்துக்களுக்கு நன்றி.
      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. அடடே...    அதிகாலையில் ஆறுமுகன் தரிசனம்.  முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.  காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அதிகாலையில் ஆறுமுகன் தரிசனம் கண்டு நானே அதிர்ச்சி அடைந்தேன்.
      மேலும் சில படங்கள் சேர்த்து சஷ்டி அன்று வெளியிடலாம் என்று இருந்தேன்.
      நேற்று இரவு எழுதி விட்டு கணினியை மூடும் போது தவறுதலாக வெளி வந்து விட்டது.
      உங்களுக்கும் காலை வணக்கம். இன்று முருகன் தரிசனம் தர வேன்டும் என்று முடிவு செய்து விட்டார்.

      நீக்கு
    2. //அதிகாலையில் ஆறுமுகன் தரிசனம் கண்டு நானே அதிர்ச்சி அடைந்தேன்//
      ஹா...   ஹா...  ஹா...

      தானே வெளியாகிவிட்டார் முருகப்பெருமான்.

      நீக்கு
    3. //தானே வெளியாகிவிட்டார் முருகப்பெருமான்.//

      இன்று தரிசனம் தர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.
      அவர் நினைத்தால் என்ன தான் செய்யமாட்டார் !
      நம் கையில் ஒன்றும் இல்லை .

      நீக்கு
  3. காணொளி பார்த்தேன்.    அருமையாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.   மகன், பேரன் ஆகியவர்களுக்குப் பாராட்டுகள்.  சிரத்தையாக செய்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அங்கு போய் இருந்த போது நவராத்திரியில் சரஸ்வதி சபதம் ஒலி, ஓளி காட்சி , அமைத்து இருந்தான். போன முறை சூரசம்ஹாரம் ஒலி ஒளி காட்சி அமைத்து இருந்தான்.அது போல் திருவிளையாடல் படத்தில் உள்ள மாம்பழம் பெறும் காட்சி வசனம் வைக்க நினைத்து இருந்தான் . நேரம் இல்லாமல் காட்சி மட்டும் வடிவமைத்து விட்டான்.
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  4. ஆனால்பாருங்கள்...  விநாயகர் அம்மையப்பனை ஒருமுறை சுற்றி வருவதற்குள் முருகன் உலகை பலமுறை விரைந்து சுற்றி விடுகிறார்!   முருகன் கோபித்துக் கொண்டு போனதிலு அர்த்தம் இருக்கிறது!!!!!!

    :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், உலகத்தை முருகன் மயில் மீது வேகமாய் தான் சுற்றுகிறார்.
      முருகன் கோபித்து கொண்டு போனது அர்த்தம் இருப்பதாய் தான் தெரிகிறது.
      கருத்தை படித்து சிரித்து விட்டேன். நல்ல ரசிப்பு.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. முருகனின் தரிசனம் அழகிய காட்சிகளோடு விளக்கமும் நன்று.

    பதிலளிநீக்கு
  6. முருகன் தரிசனம் கிடைத்து விட்டது. பார்வதி, சிவன், முருகன், காத்திகை பெண்கள் என முருகனின் அவதார கொலு, மற்றும் பிற கொலுவும் அருமை.
    காணொளி மிக அருமை. விநாயகரின் வலம், மற்றும் முருகன் உலகம் சுற்றும் காட்சியை தங்கள் மகனும் பேரனும் அசத்தலாய் செய்து இருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

    முருகனுக்கு அரோகரா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்
      கொலு பொம்மைகளையும் மகன், பேரன் செய்த காணொளியும் கண்டு கருத்து சொல்லி பாராட்டியதற்கு நன்றி உமையாள்.

      நீக்கு
  7. கந்தசட்டி காலத்தில் முருகன் அலங்காரங்கள்.மனதை நிறைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      முருகன் அலங்காரம் மனதை நிறைத்தது என்ற உங்கள் கருத்தை கண்டு என் மனமும் நிறைந்தது.
      முருகன் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

      நீக்கு
  8. கந்த சஷ்டிக்கான படங்கள் அருமை. சண்முகன் தரிசனம் கண்டு மனம் நெகிழ்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      சண்முகன் தரிசனம் கண்டு மனம் நெகிழ்ந்தது மகிழ்ச்சி. அனுப்பிய உறவினருக்கு நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. கந்தனுக்கு அரோகரா... வள்ளி மணாளனுக்கு அரோகரா...

    கோமதி அக்கா நானும் இம்முறை வெற்றிகரமாக ஒருநேர பால் பழத்தோடு கந்த சஷ்டி பிடிச்சுக்கொண்டிருக்கிறேன்ன்.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. பயத்தோடுதான் ஆரம்பிச்சேன் ஆனா நன்றாகவே போகுது.. நேற்றிலிருந்து கொஞ்சம் களைப்பாக இருக்குது அதனால எங்கும் போக மனமில்லை.. புளொக்ஸ் பக்கம் போகாமல் இருப்போம் என நினைச்சேன், ஆனா உங்கள் கீசாக்கா போஸ்ட் எல்லாம் வந்திருக்கவே ஓடி வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      நான், என் கணவர், என் கணவரின் குடும்பத்தார் எல்லாம் சஷ்டி விரதம் இருப்போம்.
      இப்போது யாரும் இருப்பது இல்லை. மாதா மாதம் வரும் இரண்டு சஷ்டி தினங்களிலும் காலை உணவை தவிர்த்து வந்தோம். வயதான பின் மருத்துவர் காலை உணவை எடுக்காமல் இருக்க கூடாது என்று சொல்கிறார். அதுவும் கண்வரை விரதம் இருக்க கூடாது என்று சொல்லி விட்டார்.

      நான் மட்டும் நாளை ஒரு நாளாவது இருக்க எண்ணம்.

      நீங்கள் சஷ்டி விரதம் இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி. விரத களைப்பிலும் பதிவுகளை படிக்க ஓடி வந்தது மகிழ்ச்சி. முருகன் நல்ல உடல் நலத்தை தரட்டும் உங்களுக்கு.

      சோமவார விரதம் கார்த்திகையில் வருவது மட்டும் சிறு வயதிலிருந்து கடைபிடிப்பதால் அதை மட்டும் இறைவன் தொடர்ந்து கடைபிடிக்க அருள வேண்டும்.

      நீக்கு
  10. அழகிய கச்ந்தஷ்டிக்கு ஏற்ற பதிவு. அந்த வீடியோ ஹா ஹா ஹா சூப்பராக இருக்கு. மிக அருமையாகச் செய்திருக்கினம் மகனும் பேரனும்.. வாழ்த்துக்கள் பேரன் வருங்காலத்தில் நல்ல ஒரு எஞ்சினியராக வருவார் என்பதுபோல தெரியுது, ஆனா அவர் விருப்பம் என்னவோ அதை இறைவன் அவருக்கு வழங்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனையும், பேரனையும் பாராட்டியதற்கு நன்றி.
      நீங்கள் சொல்வது சரிதான் அவன் விருப்பமும், இறைவனின் அருளும் வேண்டும்.
      பேரன் விருப்பம் எதுவோ அதை இறைவன் அருள வேண்டும்.
      உங்கள் ஆசிகளையும், அன்பையும் சொல்கிறேன் பேரனிடம்.

      நீக்கு
  11. அழகிய படங்கள்... சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம் தான் எனக்கு எப்பவும் கேட்கப் பிடிக்கும். கேட்கிறேன்.

    குழந்தையிலிருந்தே ஒவ்வொரு வெள்ளியும் எல்லோரும் ஒன்றாக நிலத்தில் சுவாமி அறைக்குள் இருந்து, அப்பா கந்த சஷ்டி பாடுவார், நாம் தேவாரம் சொல்லி கும்பிடுவோம், அதில் முடிவில் ஒரு வசனம் வரும்...
    நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
    பாச வினைகள் பற்றது நீங்கி...
    இப்படி... அதில் நிறுத்தி, எல்லோருகும் திருநீறு பூசிவிடுவார்ர்.. அதனால சின்னனிலிருந்தே பிடிச்சோ பிடிக்காமலோ:)) பல்லைக் கடிச்சுக் கொண்டு கேட்டுக்கேட்டுப் பாடமாகி விட்டது.

    அனைவருக்கும் அனைத்து செளபாக்கியங்களும் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய சஷ்டி கவசம் தான் பிடிக்கும். அதையும் தினம் பாடுவேன். அப்புறம் கந்த புராணமும் படிப்பேன்.
      எங்கள் வீட்டில் சோமவார கார்த்திகைக்கு எல்லோரும் அமர்ந்து இறைவன் பாடல்களை பாடுவோம். காலையிலிருந்து விரதம் இருந்து விட்டு அம்மா எப்போது சாப்பாடு தருவாள் என்று ஏங்கிய காலங்கள். சீக்கீரம் பூஜை முடிக்க வேண்டும் என்று நினைத்தால் அக்கம் பக்கம் வீடுகளுக்கு மாவிளக்கு பிரசாதம் கொடுத்து வந்த பின் தான் இலை போட்டு சாப்பாடு தருவார்.

      உங்கள் மலரும் நினைவுகள் அருமை. அப்பாவின் பகதி நீங்களும் தொடர்வது மகிழ்ச்சி.

      அனைவருக்கும் அனைத்து செளபாக்கியங்களையும் கிடைக்கும். முருகன் இகபர செளபாக்கியம் அருள்வார்.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
      காணொளி பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      நீக்கு
  13. சிறப்பான பகிர்வும்மா.... முருகப் பெருமான் அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      முருகன் அனைவருக்கும் நல்லதையே அருள்வார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. நன்னாளில் அருமையான, மனதிற்கு நிறைவு தருகின்ற பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    நல்ல பக்தி பூர்வமான பதிவு. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்த புராணம் படிப்பீர்களா? கேட்கவே மகிழ்வாக உள்ளது. விரதம் என்றால் கந்த சஷ்டிக்கு ஆறு நாட்களும் சிறிது பழம் பால் மட்டும் எடுத்துக் கொண்டு, அன்னத்தை தவிர்த்து நிறைய பக்தர்கள் விரதம் இருக்கிறார்களே...! இந்த விரதமும் அப்படித்தான் இருக்க வேண்டுமா?

    நான் முன்பெல்லாம் சில விரதங்கள் இருந்தேன். இப்போது ஒத்துக் கொள்வதில் லை. வாயு தொந்தரவு அதிகம் உள்ளதால், விரதங்கள் இருப்பதை விட்டு விட்டேன்.

    கொலு பொம்மைகள் படங்கள் அழகாய் உள்ளன. தந்தைக்கு உபதேசித்த முருகர், ஞானப்பழம் வாங்க காத்திருக்கும் முருகர், கார்த்திகைப் பெண்களுடன் ஆறு தாமரைகளில் குழந்தையாய் முருகர் என அத்தனை பொம்மைகளும் மிக அழகாக உள்ளது.

    கந்த புராணம் பெரிது படுத்தி நானும் கொஞ்சம் படித்தேன்.

    காணொளி மிகவும் நன்றாக உள்ளது. தங்கள் பையரும், பேரனும் கயிலை காட்சியை அழகாக தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர். கீ கொடுத்தால் அண்ணனும். தம்பியும் சுற்றி வருகிற மாதிரி செய்துள்ளனரா? பிள்ளையார் தாய் தந்தையரை ஒரு முறை சுற்றி வருவதற்கும், முருகன் மயிலோடு உலகை சுற்றி வருவதற்கும் சரியாக உள்ளதே...! அருமை.. தங்கள் குழந்தைகளுக்கு என் ஆசிகளுடன் என் வாழ்த்துக்களும் தெரிவியுங்கள்.

    சங்கரன் கோவில் முருகரையும் பக்தியோடு தரிசித்துக் கொண்டேன். இன்று கந்த சஷ்டிக்கு எனக்கு சிறப்பான முருக தரிசனங்கள் கிடைத்துள்ளன. அனைவரையும் நலமாக வைத்திருக்க அந்த சக்தி வேல் முருகரை மனமாற வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      திருச்செந்தூரில் சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலை மாலை குளித்து அன்ன ஆகாரம் எடுக்காமல் , மெளனவிரதமும் கடைபிடிப்பார்கள்.
      ஒரு வேளை உணவு உண்டு மற்ற இருவேளை பால பழம் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். நாங்கள் அப்படித்தான் இருப்போம்.
      அப்போது கந்தபுராணத்தை அந்த ஆறு நாளில் கதை வடிவில் படித்து முடிப்பேன்.
      இந்த முறை கடைசி நாள் மட்டும் விரதம்.

      நானும் நிறைய விரதங்களை விட்டு விட்டேன். உடல்நிலைக்கு எது ஒத்து வருகிறதோ அதை கடைபிடிக்க் வேண்டும்.

      பேரனும், மகனும் செய்து இருப்பது பாட்டரியில் இயங்குவது என்று நினைக்கிறேன்.
      உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன். உங்கள் ஆசிகள், வாழ்த்துக்கள் அவர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.

      சங்கரன் கோவிலில் இருக்கும் உறவினர் எல்லா விழாக்களிலும் படம் அனுப்பிவிடுவார்கள். விழாவிற்கு எங்களை அழைப்பார்கள்.
      சக்தி வேல் முருகன் எல்லோரையும் நலமாக வைத்து இருக்க வேண்டும் அதுதான் நம் பிரார்த்தனை வேறு என்ன வேண்டும்!

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  16. அழகான காணொளி அக்கா. அப்பாவும் பிள்ளையும் நன்றாக மெனக்கெட்டு அருமையா செய்திருக்கிறாங்க. இருவருக்கும் வாழ்த்துக்கள்.கவின்குட்டிக்கு ஸ்பெஷல் பாராட்டு.
    சங்கரன் கோவில் முருகனின் அலங்காரம் வெகு சிறப்பு. அழகா இருக்கிறார் அழகுமுருகன். கொலு பொம்மைகளும் அழகா இருக்கின்றன. மற்றைய திருவிழாவினை விட கந்தஷஷ்டி பக்திபரவசமாக இருக்கும். இப்போதெல்லாம் இப்படி நடைபெறும்போது மனமெல்லாம் அங்குதான்..அங்கு கோவிலில் கந்தபுராணபடிப்பு படிப்பார்கள். இருந்து கேட்போம். அருமையான பதிவு அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுகிறேன்.
      கவினுக்கு ஸ்பெஷல் பாராட்டு மகிழ்ச்சியை தருகிறது.

      உங்கள் நினைவுகள் முழுவதும் ஊரில் தான் இருக்கும்.
      கந்தசஷ்டி எல்லா இடங்களிலும் பக்தி பரவசமாக நடைபெறுவது உண்மைதான்.

      கோவிலில் என் மாமனார் கந்த புராணம் படிப்பார்கள் இந்த ஆறு நாளும். இரத்தன விநாயகர் கோவிலில்.
      கோவை தமிழ்சங்கத்திலும் பேசுவார்கள்.
      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு