புதன், 16 அக்டோபர், 2019

பழமுதிர்சோலை

இன்று 16/10/19  கிருத்திகைக்குக்  காலை  பழமுதிர்சோலை போய் இருந்தோம்.   கூட்டமே இல்லை .அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகிக் கொண்டு இருந்தது .
திரை விலகியதும் தங்கக்கவசத்தில் முகத்தில் விபூதி அலங்காரத்தில் நம்மைப் பார்த்துச் சிரித்த முகத்தோடு காட்சி தந்து பரவசம் அளித்தார். பூஜை முடியும் வரை கண்குளிரப் பார்த்து மகிழ்ந்தோம்.


உற்சவர்கள்ஆறுமுகர்
பின்னால் இருக்கும் முகம் கண்ணாடியில்
சன்னதியை விட்டு வெளியே வந்தால் சுடச்சுட வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் கிடைத்தது. 

கோவில் உள்ளே குரங்குகள் இப்போது அதிகமாய் ஆகி விட்டது.  பிரசாதம் இறைவனுக்குப் படைத்தபின் பலிபீடத்தில் வைப்பதை வேகமாய் வந்து எடுத்துச் சென்றது.  அர்ச்சனை செய்து விட்டுத் தேங்காய்ப் பழத் தட்டுடன் வந்தவர்களின் கையிலிருந்து தட்டிப் பறித்து வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டது.

பிரசாதம் கொடுத்தால் அதையும் தட்டிப் பறித்து கொதிக்கும் சர்க்கரை பொங்கலைக்  கீழே போட்டு விட்டது. கோவில் ஊழியர்கள் பெரிய கம்பை வைத்து விரட்டிக்கொண்டு இருந்தார்கள்.  கவனமாக இல்லை என்றால்  பொங்கல் பாத்திரத்தை எடுத்துச் சென்று விடும் .

வழி எல்லாம் குரங்குகள் கும்பல் கும்பலாகப் பாதையில் உட்கார்ந்து இருந்தன. காரின் ஒலியை விடாமல் அடித்துக் கொண்டு இருந்தால் மெல்ல நகருகின்றன.காலை இட்லி செய்துகொண்டு போயிருந்தேன்.  கோவிலில் கொடுத்த பிரசாதங்களுடன் இட்லி, மிளகாய்ப்பொடி. காலை ஆகாரத்தை  அழகர் கோவிலை விட்டு வெளியே ஒரு மரத்தடியில் சாப்பிட்டோம், கோவிலில் சாப்பிட முடியாது குரங்குகளை விரட்ட கம்பு கையில் இருந்தால்தான் முடியும்.

வரும் வழியில் கால்வாய்களில் தண்ணீர் நிறைய ஓடிக் கொண்டு இருந்தது.
வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

வர ஆரம்பித்து இருக்கிறது தண்ணீர்
வகை ஆற்றுக்குள் தடுப்பணை வேறு கட்ட போகிறார்களாம்.
வைகையில் கரை முழுவதும் சுவர் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அது கட்டி முடித்து விட்டால் இது போல் மாடுகள்  நீர் அருந்த முடியாது. ஆற்றின் கரையில் எல்லோரும் மாடு வளர்ப்பார்கள் அவர்கள் மாடுகள் எல்லாம் வைகை ஆற்றில் உள்ள புல்லை உண்டு அங்கு இருக்கும் கொஞ்ச தண்ணீரை அருந்திக் கொண்டு இருந்தது.
தண்ணீர்  ஒரளவு  வந்து இருக்கு ஒரு பக்கம்
பழைய இடிந்து போன நடு மண்டபம்- வேலை நடக்கிறது. (கார் ஒடும் போது எடுத்த படங்கள் )
அதிராவிற்காகப்பால்கனி வழியாக எடுத்த படங்கள் . மழைக்கு ஜன்னலில் ஒதுங்கிய புறா 
நேற்று பெய்த மழைக்கு ஜன்னலில்  வெள்ளைப் புறாவின் இணையும்   வந்து நின்றது.

வாழ்க வளமுடன்

62 கருத்துகள்:

 1. எனது நாளைய பதிவும் அழகர்மலைதான் சகோ.

  //வைகையில் கரை முழுவதும் சுவர் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அது கட்டி முடித்து விட்டால் இது போல் மாடுகள் நீர் அருந்த முடியாது//

  உண்மைதான் சகோ நான் இந்த விசயத்தை பலமுறை நினைத்து வருந்தி இருக்கிறேன். இதையே தாங்கள் எழுதியது கண்டு ஆச்சர்யமாக இருக்கிறது.

  இருப்பினும் உங்களது எண்ணங்களுக்கு ஒரு சல்யூட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   .நீங்களும் பலமுறை நினைத்து வருந்தி இருக்கிறீர்களா? நீங்களும், நானும் மட்டுமல்ல சகோ எல்லோரும் அதையே நினைக்கிறார்கள் . ஆட்டோ ஓட்டுபவர் சொன்னார், மாடுகள், குதிரைகள் எல்லாம் இனி ஊருக்குள் திரிய ஆரம்பித்து விடும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தான். அவைகளுக்கு உணவும் தண்ணீரும் எப்படி எங்கிருந்து கிடைக்கும்.

   ஆற்றின் கரையோரம் இருப்பவர்கள் மாடு வளர்க்கிறார்கள், அவர்களுக்கு வீட்டில் கட்டி வளர்க்க வசதி இல்லை, கரையோரம் தான் கட்டி இருப்பார்கள், அவைகளை காலையில் அவிழ்த்து விட்டால் மாலை வரை வைகை கரையில் தான் திரியும்

   உங்கள் அழகர்மலை பதிவை படிக்க காத்து இருக்கிறேன்.
   உங்கள் கருத்துக்கும் வணக்கத்திற்கும் நன்றி.


   நீக்கு
 2. சாமி தரிசனம் இனிதே நடைபெற்றது மகிழ்ச்சி .இப்போ உணவிற்காக நம்மை அண்டித்திரியும் வானரங்கள் போல் ஆகப்போகிறது மாடுகள் குதிரைகளின் நிலையும் :(என்ன காரணத்திற்காக தடுப்பணை வருகின்றது ?படங்கள் எல்லாம் அழகு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்

   போன பதிவுக்கு உங்களை எதிர்பார்த்தேன். உங்களுக்கு அந்த பதிவு பிடிக்கும்.
   ஆமாம் உணவுக்கு இப்போது வானரங்கள் நம்மைதான் அண்டி பிழைக்கிறது.அதன் உணவுபழக்கத்தை மாற்றி விட்டோம். , வண்டிகளில் உணவு கொண்டு வந்து குரங்குகளுக்கு அளிப்பார்கள். இப்போதும் எதிர்பார்ப்பில் சாலை இருமருங்கிலும் சாலை நடுவிலும் காத்து இருக்கிறது.

   தடுப்பணை நீர்வளத்தையும், விவாசயத்தையும் வளபடுத்த உதவும் என்பார்கள்.நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பார்கள்.நீரை தேக்கி வைத்துக் கொள்ள உதவும். அதற்குதான் கட்டப் போகிறார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 3. சுவாமி தரிசனம் அருமை. பழமுதிர்ச்சோலைன்னு போட்டுட்டு பிள்ளையார் படம் போட்டிருக்கீங்களேன்னு யோசித்தேன்.

  ஆற்றின் கரையில் மாடுகள் வளர்ப்பவர்களுக்கான பிரச்சனை வருத்தம் தரவைத்தது.

  பொங்கல் சூடா இருந்த மாதிரி இல்லை. சர்க்கரைப் பொங்கல் பார்க்க அழகாக இருக்கு. பிரசாதம் கிடைக்கும்னு தெரியாதா? வீட்டிலிருந்து இட்லி செய்து எடுத்துப்போயிருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

   அங்கு உற்சவர்கள் உள்ள இடத்தில் முதலில் பிள்ளையார், வேல் இருக்கும் மூலவர்கள் உள்ள இடத்தில் முதலில் பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் முருகன், அப்புறம் கடைசியில் வேல் இருக்கும்.

   ஆற்றின் கரையில் மாடுகள் வளர்ப்பவர்கள் நிலை கஷ்டம்தான்.
   பொங்கல் மிக சூடா இருந்தது குரங்கிற்கு பயந்து மடித்து பைக்குள் வைத்து விட்டேன்.
   பிறகு காரில் வந்து எடுத்து உங்களுக்காக படம் எடுத்தேன். தொன்னை தட்டாக மாறி விட்டது ஆறிய பின் எடுத்த படம். கோவிலில் கொடுக்கும் போது இரண்டும் நெகிழ்வாய் பார்க்கவே அழகாய் இருந்தது. நேரம் ஆனதால் வெண்பொங்கல் கட்டியாகி விட்டது.

   நாங்கள் போகும் சமயம் சில நேரம் பூஜை முடிந்து விடும், சில நேரம் கூட்டம் நிறைய இருக்கும் பிரசாதம் வாங்க முடியாது. பிரசாத கடையில்தான் வாங்க வேண்டும்.
   அதனால் கையில் கொண்டு போய் விடுவோம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. கால்நடைகளின் நிலைமை நினைத்தால் கவலை தரும் விஷயம். படங்கள் எல்லாம் அருமை, அழகு. அதுவும் முதல்படத்தில் நம்மாள் ஜம்மென்று உட்கார்ந்திருக்கார். முன்னெல்லாம் அழகர் மலையில் சாலை ஓரங்களிலேயே முன்னோர்கள் உட்கார்ந்திருப்பார்கள். கோயில்களில் அதிகம் பார்த்ததில்லை.சாப்பாடுக்கு வழி இல்லாமல் கோயிலுக்கு வந்து விட்டதோ என்னமோ! கார் ஓடும்போது எடுத்த படங்கள் என்றாலும் நன்றாக வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   காலநடைகளின் நிலை மிகவும் கஷ்டம் தான் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகிறது.
   முதல் படத்தை ரசித்தமைக்கு நன்றி. ஏனோ நேற்று பிள்ளையாருக்கு மாலை இல்லை, மாலை போட்டு இருந்தால் இன்னும் அழகாய் இருப்பார். பழைய படங்களில் அழகான மாலைகளுடன் இருப்பார்.

   சாலை ஓரம் முன்பு இருப்பவர்கள் எல்லாம் சாலை நடுவில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
   நடந்து போகிறவர்கள் கையில் கம்புடன் தான் நடக்கிறார்கள்.

   உணவு பஞ்சம் தான் அவைகளை கோவிலுக்குள் படை எடுக்க வைத்து இருக்கிறது.
   படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  பழமுதிர்சோலை முருகன் தரிசனம் தங்கள் பதிவால் கிடைக்கப் பெற்றேன். தங்களுக்கும் மிக அற்புதமாக தரிசனம் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  அழகர் கோவில், பழமுதிர் சோலை எல்லாம் மதுரை திருமங்கலத்தில் உள்ள போது ஒரு தடவை சென்றது. அழகான இயற்கை சூழ்ந்த இடங்கள். அதனால் குரங்கார்களுக்கு அவைகள் வாசஸ்தலம். நாங்கள் போகும் போதும் குரங்கார்கள் நிறைய இருந்தனர். பழமுதிர் சோலை மேலே நூபுர கங்கை இல்லையா? போகும் போது கீழேயிருந்து அங்கிருந்து செல்லும் பஸ்ஸிலோ, வேனிலோ சென்று விட்டோம். தரிசனங்கள் முடிந்து மேலிருந்து கீழே இறக்கும் போது முழுவதும் நடந்து வந்தோம். இயற்கையை ரசித்தபடி வந்தாலும், கால் வலி என சொல்ல முடியாமலும், அது ஒரு ஸ்வாரஸ்யமான மலரும் நினைவுகள்...

  அப்போது வைகையில் தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருக்கும். மழை பிடித்துக் கொண்டால் வெள்ள அபாயமும் வரும்

  தடுப்பணைகள் கட்டுவதால், ஆடு மாடுகள் தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்துக் கொள்ள இனி கஷ்டம் என்ற நிலை மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அங்கு தடுப்பணைகள் அவசியமோ?

  புறாக்கள் மழைக்கு ஒதுங்கி தங்கள் வீட்டு ஜன்னலில் வந்து "பயமின்றி களைப்பாற பாதுகாப்பாக ஒரு இடம் கிடைத்துள்ளது பார்..!" என மகிழ்வோடு கூறிக் கொண்டபடி வந்து அமர்ந்து கொண்டிருக்கிறதோ...! அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   நேற்று இயற்கை அழகை எடுக்கவில்லை. மழை தொடர்ந்து பெய்வதால் பச்சைபசேல் என்று இருந்தது. இளமஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சி பறந்து கொண்டு இருந்தது கூட்டம் கூட்டமாக.

   சார் நேரே முருகனை மட்டும் பார்த்து விட்டு வந்துவிட வேண்டும் என்பார்கள்.
   மேலே நூபுர கங்கை போவது இல்லை. கீழே அழகரையும் பார்ப்பது இல்லை. தனியாக போவோம் அழகரை பார்க்க என்பார்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

   உங்கள் ஸ்வாரஸ்யமான மலரும் நினைவுகள் அருமை.

   வைகையில் வெள்ளம் நான் பார்த்தது இல்லை.
   கால்நடைகளுக்கு கஷ்டம் தான் . தடுப்பணையும் அவசியம் தான்.
   கமலா, புறாக்கள் அமர்ந்து இருப்பது எதிர் வீடு. என் வீட்டு பால்கனியிலிருந்து எடுத்தபடம். என் வீட்டு ஜன்னலில் அமர்ந்து இருக்கலாம் புறாக்கள். எனக்கு தெரியாது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   பாட்டை கேட்டு மகிழ்ந்தேன்.
   பழமுதிர்சோலை நமக்காகத்தான்.

   நீக்கு
 7. ஆஆஆஆஆ பழமுதிர்சோலையிலே பிள்ளையார்தான் என்னைப்பார் என் அழகைப்பார் என முன்னால நிற்கிறார் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையார் மூலவர் வெள்ளி கவசத்தில் மிகவும் அழகாய் காட்சி அளிப்பார்.
   உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.
   உற்சவர்கள் இருக்கும் இடத்தில் எடுக்கலாம்.

   நீக்கு
 8. முதல்பட வள்ளி தெய்வானை முருகனை சூப்பராக அலங்கரிச்சிருக்கிறார்கள்.

  வாவ்வ்வ் சக்கரைப் பொங்கல் பார்க்க சூப்பராக இருக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பு போட்ட பதிவில் முருகனுக்கு அணிவிக்கபட்ட மலர் மாலை இன்னும் அழகாய் இருக்கும் அதிரா, செவ்வரளி முருகனுக்கு சாற்றினால் நல்லது என்று யாரோ செவ்வரளி மாலை கட்டி கொடுத்து இருக்கிறார்கள், அதை அணிந்து அழகாய் காட்சி தருகிறார்.

   சர்க்கரை பொங்கலை வாங்கியவுடன் போட்டோ எடுத்து இருந்தால் இன்னும் அழகாய் இருக்கும்.

   நீக்கு
 9. //அர்ச்சனை செய்து விட்டுத் தேங்காய்ப் பழத் தட்டுடன் வந்தவர்களின் கையிலிருந்து தட்டிப் பறித்து வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டது.

  பிரசாதம் கொடுத்தால் அதையும் தட்டிப் பறித்து கொதிக்கும் சர்க்கரை பொங்கலைக் கீழே போட்டு விட்டது//

  ஆஆ என் கிரேட் குருவின் அட்டகாசம் அங்கு அதிகம் போலும்:).

  ஓ ரோட்டிலே எத்தனை பேர், மிக அமைதியாக எதுக்கும் அஞ்சாமல் கர்ர்ர்ர்ர்ர்:)) வீடியோவுக்குச் சொன்னேன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், குருவின் அட்டகாசம் அதிகம் தான்.
   எதற்கும் அஞ்சாமல் என்றாலும் சில குரங்குகளுக்கு கை இல்லாமல், வால் இல்லாமல் இருப்பதை பார்த்தால் வருத்தமாய் இருக்கும்.

   நீக்கு
 10. உங்கள் இட்டலி பஞ்சுபோல இருக்குது கோமதி அக்கா. பொடிக்கு இவ்ளோ எண்ணெய் விட்டா குழைப்பீங்க...

  கால்வாயால் தண்ணி வருவது தெரிகிறது ஆனா நிலத்தில் காணவில்லையே..

  இனி மழைக்காலம் தானே அதனால தண்ணிக்குப் பஞ்சம் வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடலி பஞ்சு போல் இருப்பதை கண்டுபிடித்து சொன்னது மகிழ்ச்சி.
   பொடியை இடலியில் தடவி கொண்டு போக நினைத்து நிறைய எண்ணெய் விட்டு குழைத்தேன். ஆனால் நேரம் இல்லை அப்படியே ஹாட்பேக்கில் எடுத்து வைத்து போய் விட்டேன்.

   கால்வாயை எடுக்கவில்லை அதிரா, இது ஆறு அதிரா. மழை நேரம் தண்ணீரை சேமித்தால் தண்ணீர் பஞ்சம் இருக்காது.

   நீக்கு
 11. ஓ மாடப்புறாவும் மணிப்புறாவும் ஜோடியாக மழைக்கு இடம் தேடி வந்திருக்கினம்.. அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், இரண்டும் ஜோடியாக அமர்ந்து இருப்பது பார்க்க அழகாய் இருக்கும்.
   அனைத்தையும் பார்த்து , படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.

   நீக்கு
 12. நேற்று வேறு எதையோ தேடும்போது நான்கைந்து வருடங்களுக்குமுன் பழமுதிர்சோலையில் எடுத்த படங்கள் கண்ணில்பட்டன.  ஆனால் உள்ளே படம் எடுக்க முடியவில்லை.  வெளியிலிருந்து கோவிலைதான் எடுத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   நீங்கள் பழமுதிர்சோலை படங்களை முகநூலில் போட்டது நினைவிருக்கிறது.
   உள்ளே உற்சவர் இருக்கும் இடத்தில் பிரகாரத்தில் எடுக்கலாம். மூலவரை மட்டும் எடுக்க அனுமதி இல்லை.

   நீக்கு
 13. ஆமாம்... குரங்குகள்  மிகவும் அதிகம்   பக்தர்கள் அவைகளுக்கு எதையாவது கொடுத்துப் பழக்கப்படுத்தி விடுவதால் அவைகளும் "படுத்து"கின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்தர்கள் கொடுத்து பழக்கி வைத்த காரணத்தால் தான் அவை உண்வு தேடுவதை மறந்தே விட்டது. வேறு இடங்களில் பிடிக்கும் குரங்குகளையும் இங்கே கொண்டு விடுவதாய் சொல்கிறார்கள், அதனால் புதிய குரங்குகளின் அட்டகாசமும் அதிகம்.

   நீக்கு
 14. வைகை ஆற்று நடுமண்டபத்துக்குப் பின்னால் நிறைய கட்டிடங்கள் தெரிகின்றன.  

  89 என்று ஞாபகம்.  அப்போது ஏவி பிரிட்ஜ் மேல்சுவரைத் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஓடியது.  ராஜாஜி மருத்துவமனைக்குள் எல்லாம் வெள்ளம்.   அப்போது நடுமண்டபத்தில் யாரோ மாட்டிக்கொண்டு நின்றிருந்ததை பேப்பரில் படம் போட்டிருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய கட்டிடங்கள் வந்து விட்டது ஆற்றுக்குள் நிறைய வேலை நடக்கிறது.
   பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 15. காலையில் கந்த வடிவேலவனின் திருக்காட்சி..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   காலையில் கந்தவடிவேலனை தரிசனம் செய்தீர்களா? மகிழ்ச்சி.

   நீக்கு
 16. இந்தத் தடவை ரயி வழியாக மதுரையில் நுழையும்போதும் - மதுரையைக் கடக்கும் போதும்
  அந்தப் பாலத்தின் கீழிருந்த நிலையைக் கண்டு கண்கள் கலங்கின...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், பாலத்தின் கீழ் பார்த்தால் கண்கள் கலங்கிதான் போகும்.
   வீடுகளில் இருந்து வரும் சாக்கடைகள், குப்பை கூளங்கள் எல்லாம் பார்க்க கஷ்டமாய் இருக்கும். இனியாவது ஆறு சுத்தமாக இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
   துணி துவைப்பவர்கள் தான் இப்போது சில இடங்களை சுத்தபடுத்தி வைத்து இருக்கிறார்கள். துணிகளை காயப்போட.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. அப்பனே பிள்ளையாரே..படத்தை பார்த்ததும் இதுதான் நினைத்தேன். கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். அழகான படம். எனக்கு பிடித்த கடவுள். வள்ளி, தெய்வயானைக்கு அழகான புடவை கட்டி இருக்காங்க. மாலை இருவருக்கும் பெரிதுபோல் இருக்கு. முருகனுக்கு சாதாரணமா போட்டிருக்காங்க. அழகர் ஆறுமுகர் எப்பவுமே...
  பொங்கல் எப்பவுமே சுடச்சுட சாப்பிட்டால் தனி ருசி. என்ன செய்வது கோவில் நிலமை அப்படி. அவங்களுக்கும் (வானரங்கள்) பசியை போக்க வழி இதுதான். அத்தோடு நம்மவர்கள்தான் அதிகம் அவர்களை கெடுப்பது.
  நடுரோட்டில் பயமில்லாமல் நிற்கிறார்கள்.பயம் விட்டு போச்சு.
  நானும் இட்லியை பார்த்தவுடனே நினைத்தேன் வாவ் பஞ்சு மாதிரி அக்கா இட்லி செய்திருக்காங்க என. எனக்கு இந்த மாதிரி வரவேமாட்டேங்குது.
  இந்த தண்ணீர் வரும் இடத்தினை சுத்தமா இன்னும் வைத்திருக்கலாம். பாவம் வாயில்லா பிராணிகள்.
  மழைக்கு அவங்களுக்கு அக்கா விட்டு பால்கனி போகனும் என தெரிந்துவைத்திருக்காங்க. அழகா இருக்கு.
  அதிகாலை உங்க பதிவில் தெய்வதரிசனம் மகிழ்ச்சி அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
   இன்று சங்கடஹரசதுர்த்தி பிள்ளையார் தரிசனம் ஆச்சே! உங்களுக்கு.
   முருகன் எல்லோரும் விரும்பும் கடவுள் மகிழ்ச்சி. ஆறுமுகர் என்றுமே அழகுதான்.
   வானரங்கள் கோவிலில் தொந்திரவு செய்வது இப்போது அதிகமாகி விட்டது.
   இட்லியை பற்றி சொன்னதற்கு நன்றி. இட்லி நல்லா வர மாவு நன்றாக பொங்கி வர வேண்டும். சரியாக புளிக்காது இல்லையா உங்கள் ஊரில்?

   தண்ணீர் இல்லாத காரணத்தால் அதில் நிறைய பேர் சாமான்களை போட்டு வைத்து இருக்கிறார்கள்.

   வாயில்லா பிராணிகளுக்கு வீட்டுக்கு வீடு தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர், கழுநீர் கொடுத்தார்கள் முன் காலத்தில் அது போல கொடுக்க வேண்டியது தான்.

   மழை வந்தால் ஜன்னலில் வந்து ஒதுங்கி விடும் புறாக்கள்.

   தெய்வதரிசனம் செய்து அருமையான பின்னூட்டமும் போட்டு விட்ட சகிக்கு வாழ்த்துக்கள்.

   நீக்கு
 18. அற்புதமான படங்களோடு அழகாக எழுதியிருக்கிறீர்கள்! பழமுதிர்சோலையில் நுழைந்து ஒரு ரவுண்ட் வந்த திருப்தி. நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கெளதமன் சார், வாழ்க வளமுடன்
   இனிய அதிர்ச்சி. நீங்கள் பதிவுக்கு வந்து கருத்து போடுவது மகிழ்ச்சி.
   பழமுதிர்சோலை படங்களை அடிக்கடி போடுவதால் கோபுர படம் எல்லாம் போடவில்லை இந்த முறை.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 19. சகோதரி உங்களுக்குப் பழமுதிச்சோலை தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறதே அதற்கும் மிக்க நன்றி.

  படங்கள் எல்லாம் மிக அருமை.

  வையை நதியைச் சுற்றி சுவரா? எதற்கு? ஜீவராசிகள் பாவம். மதுரை பல விதங்களில் மாறுகிறது. எனக்கு என் கல்லூரிக் கால நினைவுகள்.

  மழைப்படங்கள் மிக அழகாக இருக்கின்றன. அது போல காரில் செல்லும் போது எடுத்த படங்களும் அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
   பழமுதிர்சோலையை தரிசனம் செய்தது மகிழ்ச்சி.
   படங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

   வைகை நதியை சுத்தமாக வைத்து இருக்க நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். ஜீவராசிகளுக்கு மாற்று வழி கண்டு பிடிக்க வேண்டும் அதை வளர்ப்பவர்கள்.
   கல்லூரியில் காலத்தில் பார்த்த மதுரை இல்லை இப்போது. நாங்கள் வந்து 3 வருடம் ஆகிறது. எவ்வளவு மாற்றங்கள்!

   படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 20. கோமதிக்கா இன்று காலையே பதிவை எடுத்து வைத்துவிட்டேன். மாலையில் ஆனால் வர இயலமாட்ட்டெங்குது பெரும்பாலும்...இன்றும் அப்புறம் இங்கு வந்தா துளசியின் கமென்ட் மட்டும் போட முடிந்தது. படம் வந்துச்சுனா பதிவு இங்கு இறங்க கொஞ்சம் படுத்துது ஹா ஹா ஹா ஹா... என் பதிவு உட்பட...நானும் படங்கள் போட்டா அதுவும் இப்ப கோபுரங்கள் படங்கள் போட்டுருக்கேனா இறங்க மறுக்குது அதான் அங்கும் பதில் கொடுக்க தாமதமாகுது.!!!!!!

  ஓவ்வொரு கருத்தா அடிச்சு வேர்ட்ல வைச்சுட்டேன் அப்பவே...ஒவ்வொண்ணா காப்பி பண்ணி இங்கு போடுறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   டசகோ துள்சிதரன் கருத்து வந்து விட்டதே! உங்கள் கருத்தை காணோமே என்று நினைத்தேன்.
   பின்னூட்டம் போட பெரிய சிரமமாக இருக்கிறது போலவே!

   நீக்கு
 21. கோமதிக்கா ரொம்பப் பிடித்த படங்கள் அந்தப் புறா ஜன்னலில் ஒதுங்கியிருப்பதும். ஹையோ மழைத் துளிகள் கூட மிக அழ்கா உங்க கேமரால வந்திருக்கே அக்கா...சூப்பர் அந்தப் படங்களை மிக மிக ரசித்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழைத்துளி தெரியும் படம் அலைபேசிதான் காமிரா இல்லை.
   மழைக்கு புறா ஜன்னலில் ஒதுங்கும் போதுதெல்லாம் அலுக்காமல் எடுத்து விடுவேன்.நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும்.

   நீக்கு
 22. பழைய மண்டபம் இடிந்து இருக்கும் வைகைப்படம் வேலைகள் நடப்பது என்பதெல்லாம் மனதை வருத்துகிறது. நதியில் இப்படி வேலைகள் நடந்தால் எப்படித் தண்ணீர் சேரும்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைகையில் நிறைய வேலை நடக்கிறது, அழகர் ஆற்றில் இறங்கிய சமயத்திலிருந்து ஏதோ வேலை நடந்து கொண்டே இருக்கிறது. அது தான் தெரியவில்லை கீதா

   நீக்கு
 23. வைகை சுற்றி சுவர் என்பது இன்னும் வருத்தம் தந்த விஷயம். பாவம் மாடுகள் ஆடுகள் எல்லாம். நதியைச் சுத்தப்படுத்தல், எத்தனை செடிகள் இருக்கு பாருங்க ரிவர் பெட்ல...அதை எல்லாம் சுத்தப்படுத்தல் என்றில்லாமல் இப்படியா செய்வது?

  நதிக்கரை ஓரம் இருக்கும் மக்களை அங்கு அசுத்தம் செய்யாமல் இருக்க அறிவுறுத்தலாம்...என்னவோ போங்க இது செல்லூர் ராஜா தெர்மகோல் விட்டா மாதிரி இருக்கு...

  பாவம் விலங்குகள் அனைத்தும் அவற்றின் உணவு இருப்பிடம் எல்லாம் சுயநல மனிதனால் ஆக்ரமிக்கப்படும் போது அவை நாட்டிற்குள் வராமல் என்ன செய்யும்...என்னமோ போங்க கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைகை கரையை சுத்தபடுத்த, வைகை ஆறு சுற்றி சுவர் எழுப்புகிறார்கள்.
   விலங்குகளுக்கு அந்த பகுதி மக்களுக்கு எல்லோருக்கும் கஷ்டம் தான்.

   நீக்கு
 24. நம்ம புறாக்களுக்கு அழகான அடைக்கலம் நம் கோமதிக்கா இருக்கப் பயமென்!!!! உணவும் கிடைத்துவிடும்...சூப்பர்!! நல்ல விஷயம் கோமதிக்கா.

  இன்னும் இப்படியான படங்கள் நிறைய போடுங்க...இயற்கையை பார்க்கும் போது மனம் மகிழ்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 25. அக்கா வந்திருக்கும் தண்ணீரைப் பார்த்தால் ஏதோ குட்டை தேங்கியிருப்பது போல இருக்குதே..

  வர தண்ணீர் பாசி பிடிச்சு இருக்காப்ல இருக்கு...படத்துல பார்க்கறப்ப...ஆனா நேரடியா பார்த்த உங்களுக்குத்தான் நல்லா தெரியும்...

  ஆனா ஒண்ணு கோமதிக்கா நம்ம நதிகள் எல்லாம் கெட்டுக் "குட்டிச்சுவரா" போகுதுநு சொல்லுவோம் இப்ப குட்டிச்சுவரே வருது சுற்றி...ம்ம்ம் மனதிற்கு வேதனை தரும் விஷயங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், ஒவ்வொரு இடத்திலும் குட்டை போல் தான் தேங்கி நிற்குது. தினம் பெய்யும் மழையாலும் தண்ணீர் வந்து இருக்கிறது. ஆற்றில் நிறைய தண்ணீர் வந்தால்தான் அசுத்தங்கள் அடித்து செல்லப்படும். ஆறு என்றால் ஓட வேண்டும். ஓடவில்லை என்றால் பாசி படிந்துதான் காணப்படும்.

   நீக்கு
 26. கோமதிக்கா கருத்து போட்டுக் கொண்டே இருக்கும் போது கரன்ட் போச்சு ஹா ஹா ஹா

  முருகன் அழகோ அழகு!! நல்ல தரிசனம் கிடைத்த உங்களால் எங்களுக்கும் மகிழ்ச்சி நன்றியும் கூட எங்களுக்கும் பார்க்கக் கிடைத்ததே..

  நம்மவர்கள் ஹா ஹா அவர்கள் எங்குதான் அட்டகாசம் செய்யவில்லை!!!!! பாவம் அவர்களின் இடம் எல்லாம் போய்க்கொண்டு இருக்கிறது அவர்களின் இடமே அடர்ந்த மரங்களும் காடும் தானே உணவு பழங்கள், கொட்டைகள் என்று...ம்ம்ம் என்ன சொல்ல...
  எல்லாப்படங்களும் அருமை கோமதிக்கா. ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா, எப்படியோ நிறைய பின்னூட்டம் போட்டு விட்டீர்கள்.
   முருகனை தரிசனம் செய்து விட்டீர்கள் கரன்ட் போய் போய் வந்தாலும்.
   அவர்கள் இடம் எல்லாம் குறைந்து வருவது உண்மைதான். உணவுக்கும், தண்ணீருக்கும் அவை கஷ்டப்படுகிறது.
   எல்லா படங்களையும் பார்த்து ரசித்து ,பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 27. பழமுதிர் சோலை முருகதரிசனம் அழகு. குரங்கார்கள் கொண்டாட்டம் இங்கு அதிகம்.

  வைகைதான் உயிரினங்கள் பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி மாதேவி

   நீக்கு
 28. அன்பு கோமதி காலண்டர் கிழிக்கும் போது பார்த்ததும் நினைத்தேன். நீங்கள் பழமுதிர்
  சோலை முருகனும் கணபதியும் , தேமார்களும் மிக அழகு.

  எப்பொழுதுமே அங்கு குரங்குகள் அட்டகாசம் செய்யும்.
  கோவில் அருகிலே வந்து விட்டது என்றால்
  மிகப் பாவமாக இருக்கிறது. திருப்பதியில்
  விரட்டி விட்டார்கள். மற்ற இடங்களுக்கு வந்து விட்டன.

  வைகையில் தண்ணீர் பார்க்க அருமை. ஆனால்
  அணைகட்டப் போகிறார்கள் என்றால் ஒரு சிறிதாவது திறந்து விடலாமே.
  கால்னடைகள் வாழ்வு அந்தரத்தில் நிற்கும் வேதனை.
  அருமையான தரிசனத்துக்க் மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   ஆமாம், அக்கா முடிந்தவரை பழமுதிர் சோலைக்கு கிருத்திகைக்கு போகிறோம்.

   மாயவரத்தில் இருந்த போது முத்து செல்வகுமரனை பார்க்க போவோம். (வைத்திஸ்வரன் கோவில்)
   அவன் அருளால் தரிசனம் செய்து வருகிறோம். திருப்பரங்குன்றம் பக்கம் ஆனால் படி ஏற வேண்டும் நிற்க விடமாட்டார்கள் சிறிது நேரம் தான் பார்க்கலாம்.(100 டிக்கட் வாங்கி பார்த்தாலும் அப்படித்தான்) இங்கு பழமுதிர்சோலையில் சிறிது நேரம் பார்த்தாலும் கண்ணில் பதிந்து விடுவார் அவருக்கும் நமக்கும் உள்ள தூரம் குறைவு.


   வர வர குரங்குகள் அதிகமாய் வருகிறது பழமுதிர்சோலையில்.

   கால்நடை வளர்ப்போர் வீடு வீடாக போய் கழனி தண்ணீர் வாங்கி வந்து கொடுப்பார்கள், மேய்ச்சலுக்கு நல்ல இடமாய் அழைத்து செல்வார்கள். இப்போது காலை அவிழ்த்து விட்டால் இரவு தான் அழைத்து கட்டி வைக்கிறார்கள். அவை குப்பை மேடு, எல்லாம் மேய்கிறது. புல்வெளி உள்ள இடம் வைகைகரைதான் இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
  2. செல்வமுத்துக்குமரனை பார்ப்போம்

   நீக்கு
 29. அழகான படங்களோடு நல்ல பதிவு. அரசாங்க அதிகாரிகளாகிவிட்டால் மனிதாபிமானம் மரத்துப் போய்  விடுமா? அந்த காலத்தில் ஆறுகள், குளங்கள் இவற்றில் படிகளோடு கால்நடைகள் வந்து நீர் அருந்துவதற்காக சரிவு பாதைகள் அமைத்திருப்பார்கள். இப்போது ஆறுகளில் நீர் வரத்து குறைவு, அதையும் கால்நடைகள் அருந்த முடியாமல் செய்யப் போகிறார்களா? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், சரிவு பாதைகளை நானும் பார்த்து இருக்கிறேன்.
   ஆறுகளுக்கு நீர் வரத்தை அதிகம் செய்யும் வேலைகளை பார்க்கலாம்.
   நல்ல மழை பெய்கிறது இப்போது சேமிக்கதான் பாத்திரம் இல்லை.
   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 30. தரிசனமும் படங்களும் அருமை.

  கால் நடைகள் இனி நீர் அருந்த எங்கு செல்லுமோ?

  பெங்களூர் நந்தி ஹில்ஸ் கோயில்பக்கம் போகும் போதே 4,5 குரங்கள் வண்டியின் மேல் ஏறிக் கொள்ளும். மலைப் பகுதிகளில் தவிர்க்க முடியாதது.

  நடு மண்டபத்தை சீர் செய்வார்கள் என நம்புவோம்.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //கால் நடைகள் இனி நீர் அருந்த எங்கு செல்லுமோ?//

   அது தான் கவலை.

   நந்தி ஹில்ஸ் கோயில் பக்கம் குரங்குகள் வண்டியில் ஏறி க் கொள்வது போல் இங்கும் ஏறும். எங்கள் காரில் ஏறி கொண்டு இறங்காமல் போஸ் கொடுத்த படத்தை முன்பு பகிர்ந்து இருக்கிறேன். மலை பகுதிகளில் தவிர்க்க முடியாது குரங்குகளை.

   ஒரு முறை திருகழுங்குன்றம் போய் இருந்த போது பிரதோஷ அர்ச்சனைக்கு மக்கள் அதுகளிடமிருந்து காப்பாற்றி இறைவனுக்கு கொண்டு போக மிகவும் கஷ்டபட்டார்கள்.

   வேலை நடக்கிறது ஆற்றுக்குள் நடு மண்டபத்தை பழமை மாறாமல் சீர் செய்வார்கள் என்று நம்புவோம்.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 31. முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். படங்களுடன் இப்போது பார்க்க மகிழ்ச்சி. குரங்குகள் தொல்லை பெரிய தொல்லைதான். மனிதர்களே அவற்றைப் பழக்கிவிட்டு இப்போது அவதிப்படுகிறார்கள். வைகையில் தண்ணீர் வரத்து மகிழ்வளிக்கிறது. அணை கட்டப்படுவதால் கால்நடைகளுக்குக் கஷ்டம் என்றறிந்து வருத்தமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
   மனிதர்கள் அதன் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து விட்டார்கள். பறவைகள், கால்ந்டைகள், விலங்குகள் எல்லாம் இப்போது நம் உணவு பழக்க வழக்கத்திற்கு மாறி விட்டது.

   முன்பு பறவைகள் என்ன சாப்பிடுமோ அதை தான் போடுவோம். இப்போது நம் வீட்டை உணவை பழக்கப்படுத்தி விட்டோம். அதுவும் வீட்டு ஆட்கள் போல் அதற்கு சில விருப்பு, வெறுப்புகள் இருக்கிறது உணவில். அதை பார்த்து வைக்க வேண்டி உள்ளது.

   மழை தண்ணீரை தேக்க ஆற்றுக்குள் தடுப்பு. நிலத்தடி நீர் இருப்பை அதிகமாக்க.
   சுற்றுச்சுவர் கால் நடை ஆற்றுக்குள் இறங்க முடியாது, அதுதான் கஷ்டம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு