ஞாயிறு, 20 அக்டோபர், 2019

இருகூர் மாசாணி அம்மன் கோவில்

13.10 .2019 அன்று   இருகூர் மாசாணி அம்மன் கோவில் போனோம் .அன்று பெளர்ணமி .

கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தோலைவில் இருக்கிறது. இங்கு இருகூர் ரயில் சந்திப்பு இருக்கிறது.பெளர்ணமி விழாவிற்கு வாழை எல்லாம் கட்டி இருக்கிறார்கள். மாலை  மக்கள் கூட்டம் வருமாம்

கருவறையில் இருக்கும் அம்மன் படம் திருவிழா சமயத்தில் எடுத்தது போட்டோவாக அங்கு இருந்தது  . அதை போட்டோ எடுத்தேன். உள்ளே கற்சிலையும் உள்ளது அமர்ந்த கோலத்தில் தலையில் நாக கிரீடத்தோடு.பொள்ளாச்சியில் உள்ள கதையே இந்த அம்மனுக்கும் சொல்கிறார்கள் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கதை ::-

//பழங்காலத்தில் நன்னன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்கு சொந்தமான தோட்டத்தில் விளையும் மாம்பழத்தை யார் உண்டாலும் அவருக்கு மரண தண்டனை நிச்சயம் என சட்டம் விதித்திருந்தான். அப்போது ஒரு சிறுமி இந்த சட்டத்தை அறியாமல் இந்த தோட்ட பழத்தை உண்டுவிட்டாள். இதையறிந்த நன்னன் அச்சிறுமிக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றினான். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவனுடன் போர்புரிய அதில் நன்னன் கொல்லப்பட்டான். பிறகு அந்த கிராம மக்கள் அனைவரும் இறந்த அந்த சிறுமிக்கு கோவில் கட்டி வழிபடலாயினர். அக்கோவிலே மாசாணியம்மன் கோவில் என்று கூறப்படுகிறது.//

தெரியதவர்களுக்காக - தெய்வீகம்   என்ற ஆன்மீக  பத்திரிக்கைக்கு நன்றி.

வாசலில் நிற்கும் போது ஒரு அன்பருக்கு   தீபாராதனை காட்டிக் கொண்டு இருந்தார் பூசாரி.   அப்போது எடுத்த படம், தீபாராதனை தெரிகிறதா?
அம்மன் படுத்து இருக்கும் தோற்றம் தூரத்திலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார். அலைபேசியில் இவ்வளவுதான் எடுக்க முடியும்.
முகமும், பாதங்களும் தெரிகிறது அல்லவா?

வாசலில் நுழைந்தவுடன் அம்மனுக்கு நேர் எதிரே இருக்கிறார் பேர் கேட்டேன் சொன்னார் பூசாரி. மறந்து விட்டது. காவல் தெய்வம் .அம்மனின் பரிவார தெய்வங்கள் அம்மன் சன்னதியைச் சுற்றி இருக்கிறது.


பிள்ளையார் பிரகாரத்தில் இருக்கிறார் வேப்பமர நிழலில்
பிள்ளையார் இருக்கும் கோவில் விமானம்

தலவிருட்சம் வேப்ப மரம் -நேர்ந்து கொண்டு கட்டிய தொட்டில்கள் தொங்குகிறது, சீட்டு எழுதியும் தொங்க விட்டு இருக்கிறது
காலைச் சூரிய ஒளிக் குளியலில் தட்சிணாமூர்த்தி
அம்மன் இருக்கும் இடத்திற்கு பின் புறம் நீதிக்கல் இருக்கிறது

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் உள்ளது போலவே இங்கும் நீதிக்கல் இருக்கிறது.

வேண்டிக் கொண்டு மிளகாய் அரைத்துப் பூசி இருக்கிறார்கள்.

நீதிக்கல்லின் சிறப்பு :-
//மக்கள் தங்களின் உடமைகளில் ஏதேனும் ஒன்று திருடு போய்விட்டால் இக்கோவிலிலிருக்கும் “நீதி கல்லில்” அரைத்த மிளகாயை தடவி தங்களின் குறையை போக்குமாறு வேண்டுகின்றனர். இப்படி வேண்டிய 90 நாட்களலுள் ஒரு நன்மையான பலன் ஏற்படும் என இவ்வனுபவத்தை பெற்றவர்கள் கூறுகின்றனர். சித்த பிரம்மை, செய்வினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோவிலுக்கு வந்து வழிபட அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள்.//

ஆன்மீக பத்திரிக்கைக்கு நன்றி.


நேர்த்திக் கடனுக்கு துலாபாரம் உள்ளது 


வேட்டைக்கு கிளம்பப் பரிவாரங்களுடன்

கிணறு வெட்ட வைத்தவரும் இந்த கோவிலைக்  கட்டியவரும் - என்று இருக்கிறது

நவக்கிரக சன்னதி மற்றும் தனியாகச் சனி பகவானும் இருக்கிறார்.
அரளிப் பூச் சூடிக் கொண்டு இருப்பவர்- காக்கா வாகனத்தில் தனியாக அருள்பாலிக்கிறார்.


நவக்கிரக சன்னதி கிட்டே இந்த சுண்டைக்காய்ச் செடி இருந்தது , பெரிய கிணறும் இருந்தது
பேச்சியம்மன் 

நாகதெய்வங்களும் அம்மனும். - மஞ்சள்பொடி போட்டு வணங்கி இருக்கிறார்கள்.

கோவையிலிருந்து மதுரை வரும்போது  மாசாணி அம்மன் கோவில் பார்த்தோம். என் ஓர்ப்படி "இன்று பெளர்ணமி. பக்கத்தில் இருக்கும் மாசாணி அம்மனைத் தரிசனம் செய்து விட்டுப் போங்கள்" என்றாள். இந்தக் கோவில் பார்த்தது இல்லை, அதனால் பார்த்து விட்டுப் போவோம் என்று பார்த்து விட்டோம்.  என் ஓர்ப்படிக்கு நன்றி.
                                                                   வாழ்க வளமுடன்.

47 கருத்துகள்:

 1. கோவிலை நேரே பார்ப்பதுபோல இருக்கிறது. பல படங்களும் சிறப்பாக வந்துள்ளன.

  எதற்காக இந்தக் கோவிலுக்குச் சென்றீர்கள்? திட்டமிட்டா இல்லை போகும் வழியில் இருந்த கோவில் என்றா?

  நீதிக்கல் - இப்போதுதான் இதனைப் பற்றி அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   கோவையில் சாரின் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ஊருக்கு கிளம்பினோம், அப்போது இந்த கோவிலுக்கு போய் விட்டு போங்கள் என்று என் ஓர்ப்படி சொன்னாள் என்று போட்டு இருக்கிறேனே!

   பொள்ளாச்சியில் இருப்பது போல் இருக்கிறது என்றாள், அது தான் போய் பார்க்கலாம் என்று பார்த்தோம். வேறு காரணம் இல்லை.

   பொள்ளாச்சி அருகில் ஆனைமலை என்ற ஊரில் புகழ் பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் இந்த நீதிக்கல் உண்டு மிகவும் பிரபலம்.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
  2. ஓர்ப்படி வீட்டிலிருந்து கோவில் 5 கிமீ இருக்கும் பக்கம் தான் . காலை நேரம் இந்த கோவில் பார்த்து விட்டு , வழியில் இன்னும் ஒரு அம்மன் கோவில், சிவன் கோவில், பைரவர் கோவில், பாப்பா கோவில் எல்லாம் பார்த்தோம். பாபா கோவில் மதுரையிலிருந்து கோவை போகும் போது பார்த்தோம்.
   அவை முடிந்த போது பதிவாக வரும் இறைவன் அருளால்.

   நீக்கு
 2. ஓ...கடைசி பத்தியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.... நல்ல வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், நெல்லைத்தமிழன் நல்ல வாய்ப்பு தான்.
   பெளர்ணமி , ஞாயிற்றுக் கிழமை இரண்டும் சேர்ந்த நாள்.
   இரண்டு நாளிலும் அம்மன் தரிசனம் நல்லது என்பார்கள்.
   அம்மன் எல்லோருக்கும் எல்லா வளங்களையும், நலங்களையும் தர வேண்டும்.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 3. இருகூர் மாசாணி அம்மன் கோவில்...

  அருமையான தரிசனம் ..படங்களும் செய்திகளும் மிக சிறப்பு ...

  பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் செய்த தரிசனம் நினைவுக்கு வந்தது மா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனு, வாழ்க வளமுடன்
   பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் போலவே தான் அனு.
   அங்கு நீதிக்கல் கூர்மையாக இருக்கும். இங்கு கட்டமாக மைல் கல் போல் இருக்கிறது.
   இந்த கோவிலும் பழமையானது என்கிறார் பூசாரி.

   உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

   நீக்கு
 4. அழகிய படங்கள்.   அதுவும் நிறைய படங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள்.  நாங்களும் தரிசித்துக்கொண்டோம்.அம்மன் சயன கோலத்தில் பிரம்மாண்டமாய் இருப்பார் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   அம்மன் சயன கோலத்தில் பிரம்மாண்டமாய் தான் இருப்பார்.
   கோவில் முழுவது சுற்றி காட்ட ஆசை , அதுதான் படங்கள் நிறைய ஆகி விட்டது.

   நீக்கு
 5. கோவிலுக்கென்று யானை கிடையாதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவிலுக்கென்று யானை இல்லை ஸ்ரீராம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. அழகிய படங்களோடு தல வரலாறு சொல்லிய விதம் அருமை சகோ.

  இருகூர் சூலூர் அருகில்தானே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   ஆமாம், ஜி இருகூரிலிருந்து சூலூர் பக்கம் தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. மாசாணி அம்மன் கோயில் கொங்குப்பகுதியில் பிரபலம் எனத் தெரியும். ஆனால் போனதில்லை. ஊட்டியில் இருந்தப்போக் கோவைக்கு அடிக்கடி போயிருந்தாலும் கோயில்கள் ஏதும் போகவில்லை. மருதமலை கூட இன்னமும் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கிறது. இது எப்போ வாய்க்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம் வாழ்க வளமுடன்
   ஆமாம், நீங்கள் ஸ்ப்ல்வது போல் மாசாணி அம்மன் கொங்கு பகுதியில் மிகவும் பிரபலம்.

   மருமதமலை பார்க்க வேண்டிய கோவில்.
   ஆனால் பழைய கோவில் மிக நன்றாக இருக்கும். புதிதாக கோபுரம் வைத்து படிகள் கட்டுவதற்கு மலையை நிறைய அழித்து விட்டார்கள். இந்த மாடல் எனக்கு பிடிக்கவில்லை. பழைய கோவில் மனதில் பதிந்து விட்டது.

   நீக்கு
 8. வழக்கம்போல் படங்கள் அருமை. தூரத்திலிருந்து எடுத்தாலும் நன்றாகவே இருக்கின்றன. பேச்சியம்மனைப் பார்த்தால் பரவாக்கரை மாரியம்மன் கோயிலில் இருப்பவளைப் போலவே காணப்படுகிறாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களைப்பற்றி பாராட்டியதற்கு நன்றி. பரவாக்கரை மாரியம்மன் கோயில் பார்த்தது இல்லை.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோவிலிருப்பதை அறிந்திருக்கிறேன். கோவையிலும் ஒரு மாசாணியம்மன் கோவில் இருப்பது இப்போது தான் அறிந்தேன், படங்கள், விவரங்கள் யாவும் மிகவும் சிறப்பு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   எல்லோரும் பொள்ளாச்சி மாசாணியம்மனை அறிந்து இருப்பார்கள் . இருகூர் கோவிலை அறிந்து இருக்க மாட்டார்கள் என்பதால் தான் இந்த பதிவு படங்களுடன்.
   இங்கு பம்பை அடித்து திருவிழா சமயம் அம்மன் பெருமை பாடும் காணொளி மட்டும் இணையத்தில் கிடைக்கிறது.
   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. அம்மனின் சயன கோலம் தூரமாய் இருந்தாலும் முகமும்,காலும் படத்தில் தெரிகிறது. நாங்கள் போகமுடியாவிட்டாலும் உங்க பதிவுகள் மூலம் தரிசனம் செய்கிறோம். இந்த புண்ணியம் உங்களுக்குதான் அக்கா. நலமுடன்,வளமுடன் வாழ அம்மன் அருள் உங்க குடும்பத்தினருக்கு கிடைக்கட்டும்.
  மாசானி அம்மன் கோவிலில்தான் நீதிகல் இருக்குமா..சுண்டைக்காய் நிறைய இருக்கின்றவே. கோயிலில் இருக்கும் இவைகளை என்ன செய்வார்கள்? அழகான படங்கள்.தல வரலாறும் அறிந்துகொண்டேன். நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மு.
   ஆமாம், மாசாணி அம்மன் கோவிலில் தான் பார்த்து இருக்கிறேன்.
   சில நம்பிக்கைகள் மக்களை வாழவைக்கிறது. நிறைய நம்பிக்கைகள் பலித்து அவர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்திய உண்மை நிகழ்வுகள் உண்டு.

   சுண்டைக்காயை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அழகாய் இருந்தது, பூக்களும் காயும்.

   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அம்மு.

   நீக்கு
 11. படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியம்... மிகவும் ரசித்தேன் அம்மா...

  விளக்கங்களும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கணினி பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்றதா?

   உங்கள் தீபாவளி வியபாரம் எப்படி?
   நலம் தானே நீங்கள்?

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு இருதரம் சென்றிருக்கிறேன்...

  வாசலில் இருந்து போட்டோ எடுத்தவரை
  அந்தக் கோயில் அர்ச்சகர்கள் படுத்திய பாடு இன்னும் மறக்கவில்லை...

  தங்களது பதிவில் படங்கள் அருமை...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   ஆனைமலை மாசாணியம்மனை படம் எடுக்க விடமாட்டார்கள்.
   இங்கு ஒன்றும் சொல்லவில்லை. 'வாசலில் இருந்து எடுத்து கொள்ளட்டுமா' என்று கேட்டதற்கு அனுமதி அளித்தார்கள். வெளி பகுதிகளை எடுத்த போதும் ஒன்றும் சொல்லவில்லை.

   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. கோயிலை வலம் வந்த நிறைவைத் தருகின்றன படங்கள். நீதிக்கல், மற்றும் கோயில் தல புராணத் தகவல்கள் அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 14. அன்பு கோமதி மாசாணி அம்மன் வழிபாடு
  செய்பவர் சென்னையில் இருக்கிறார்.
  பையன் கள் திருமணத்துக்காக வேண்டிக்கொண்டு
  அங்கே சென்று வரச் சொன்னார்.

  எங்களால் வேறு வேறு ஊர்களில் இருந்தவர்களை சேர்த்து அழைத்துச் செல்ல முடியவில்லை. அவரே
  சென்று வந்தார்.

  எத்தனை சோகம் ஒரு குழந்தையைக் கொல்வது..
  நீங்கள் சென்ற கோவில் அழகாக இருக்கிறது. காவல்தெய்வம் கம்பீரம்.

  வெளிச்சம் விழுந்த அளவு அம்மனையும் ,மற்ற இடங்களையும் பார்க்க முடிந்தது..
  அம்மன் அருள் எங்கும் நிறையட்டும். நன்றி கோமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   நல்ல மனிதர். நமக்காக வேண்டிக் கொண்டு செய்வதை விட மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்வது பலிக்கும் என்பார்கள்.

   ஆமாம், அந்த மாங்கனியின் பலனை தானே அடைய பேராசை பட்டான், அந்த பேராசையே அந்த மன்னரையும் அழித்து விட்டது. சிறு பெண் தெய்வமாகி விட்டாள்.

   அம்மன் அருள் எங்கும் நிறைந்து அனைவருக்கும் எல்லா நலங்களையும் தரட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரி

  இருகூர் மாசாணி அம்மன் கோவில், படங்களும் கோவிலைப்பற்றிய விபரங்களும் மிக அழகாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். அம்மன் படுத்த கோலத்தில் மிக அழகாக இருக்கிறார். மற்ற தெய்வங்களின் படங்களும் அழகாக உள்ளது. வேப்ப மரமும், பின்னாடி உள்ள நீதிக்கல்லின் கதையும் பக்தி பூர்வமான வை. அழகான தரிசனம் தங்களால் கிடைக்கப் பெற்றேன்.

  பொள்ளாச்சியில் இருக்கும் அம்மன் கோவில் என் மன்னியின் மூலமாக கேள்விப்பட்டுள்ளேன். இது பற்றியும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் நினைக்கிறேன். பொள்ளாச்சி மாசாணி அம்மன் பற்றியப்பதிவும், தங்களுடைய பதிவில் வந்தது என நினைக்கறேன். இந்த அம்மன் தரிசனம் அங்கு சென்று பார்க்க முடியாவிடினும், தங்கள் மூலம் கோவிலை சுற்றிய நல்லதொரு பகிர்வில் அம்மனை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   பொள்ளாச்சி மாசாணி அம்மன் போலவே தான் இங்கும் இருக்கிறது.
   நான் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் பற்றி எழுதவில்லை.
   இப்போது இருகூர் மாசாணி அம்மனை பற்றி எழுதும் போது பொள்ளாச்சி மாசாணி அம்மன் கதையை கொடுத்து இருக்கிறேன்.

   நீதிக்கல்லில் தப்பு செய்தார்கள் என்று உண்மையாக தெரிந்தால் தான் மிளகாய் அரைத்து பூச வேண்டும். உணர்ச்சி வயத்தில் பூசினால் நமக்கே தீங்கு விளைந்து விடும் அதனால் அம்மனிடம் உங்கள் குறைகளை சொல்லி முறையிட்டால் அவர் கேட்பா,ர் நல்லதே நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கமலா.

   நீக்கு
 16. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. சென்ற காலத்தில் இருகூரான் என்று விகடனில் அதிகம் எழுதிய எழுத்தாளர் இருந்தார். அவர் இந்த ஊர் தானோ என்னவோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொன்ன தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 18. நீதிக்கல் - படமும் அது பற்றிய விவரங்களும் புதுசு. படங்கள் வழக்கம் போல சிறப்பு.

  பதிலளிநீக்கு
 19. ஜீவி சார், உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. //இருகூர் மாசாணி அம்மன் கோவில்///

  ஆஆஆஆஆஆஆஆஆஆ கோமதி அக்கா தலைப்புப் பார்த்து மெய்சிலிர்த்திட்டேன்.. ஏனெனில் இவ் அம்மன் பற்றி நிறையக் கதைகள் கேள்விப்பட்டேன். முக்கியமாக அந்த மிளகாய் அரைத்துப் பூசுவது.. அது இப்பவும் செய்கிறார்களோ மக்கள்.. ஆவ்வ்வ்வ் நான் வாய் வழியாக சிலர் சொல்லக் கேட்டேன்.. இப்போ நீங்க போய் வந்தீங்க என்றதும் அப்படியே மகிழ்ச்சிப்பூரிப்பாகிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சங்கமித்திரை அதிரா, வாழ்க வளமுடன்

   இந்த முறை அசோகர் மன்னர் மகள் பெயரை வைத்து இருக்கிறீர்கள். போதி மரத்தை வைத்து புத்தம் பரப்ப தன் மகள், மகனை அனுப்பினார் இலங்கைக்கு. சங்கமித்திரையும், அவர் சகோதரும் வந்தார்கள்.


   அம்மன் பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்கள் மகிழ்ச்சி. இப்போதும் செய்கிறார்கள். படத்தில் பார்த்தீர்கள் அல்லவா? அப்போது தான் அரைத்து பூசி போய் இருக்கிறார்கள்.
   ஆனால் உண்மை இல்லாமல் உணர்ச்சி வயத்தில் இந்த காரியத்தை செய்தால் விளைவு செய்தவர்களுக்கு வந்து விடுமாம்.

   நீக்கு
 21. சிறிய கோயிலானாலும் மிக அழகிய கோபுரம்.

  ஏன் கோமதி அக்கா.. நீங்கள் உள்ளே அம்மனைப் படமெடுக்கவில்லை? எடுக்கக் கூடாதோ? அம்மனைத்தேடினேன் ஆனா இங்கு இல்லையே.. இதில் இருப்பது ஏதோ அரைகுறையாவே தெரியுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அதிரா கோபுரம் அழகாய் இருந்தது .
   உள்ளே எடுக்க அனுமதிக்கவில்லை. தூரத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றார். அங்கு விழாவிற்கு அம்மனை எடுத்த போட்டோ வில் அம்மன் இருக்கிறாரே அதிரா.
   முகமும், காலும் தெரியும் நான் எடுத்த படத்தில்.

   நீக்கு
 22. //பொள்ளாச்சியில் உள்ள கதையே இந்த அம்மனுக்கும் சொல்கிறார்கள் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கதை ::-//

  ஓ அங்கு பல மாசாணி அம்மன் கோயில் உண்டோ? நான் ஒன்று மட்டும்தான் என நினைச்சேன்...

  //அக்கோவிலே மாசாணியம்மன் கோவில் என்று கூறப்படுகிறது.////
  ஓ..

  அதிக தூரமாக இருந்து எடுத்திருக்கிறீங்க போல சில படங்கள் இம்முறை தெளிவாக இல்லை.. ஓவராக மொபைலில் சூம் பண்ணினாலும் தெளிவு வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொள்ளாச்சியில் உள்ளது கொஞ்சம் பெரிது. கதை நடந்த இடம் அது தான் என்று சொல்கிறார்கள்.

   ஆமாம், மொபைலில் அதிக ஜூம் செய்தால் சரியாக வருவது இல்லை.

   நீக்கு
 23. ஓ வேம்புக்கு மஞ்சள்பூசி குங்குமமிட்டிருக்கிறார்கள்.. தொட்டில் கட்டியிருப்பது அழகு.

  நீதிக்கல் இவ்ளோ குட்டியாக இருக்கு.. 2ம் படத்தை முதலில் பார்த்து இவ்ளோ பெரிய கல்லோ என நினைச்சுட்டேன்:)..

  சுண்டங்காய் எங்கள் ஊர் வீட்டில் நிறைய முன்பு இருந்தது.. இப்பவும் பற்றை பற்றையாக முளைக்குதாம் வெட்டி எறிகிறார்கள்.. அதேபோல பாக்கு மரம், கறிவேப்பிலை என ஒரே பற்றைபோல முளைக்குதாம் ஊர் வீட்டில்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேம்புக்கு மஞ்சள் பூசி கும்பிடுவது அம்மனை கும்பிடுவது போல் மகிழ்ச்சி மக்களுக்கு.
   சிறிய கல்தான். சுண்டைக்காய் புதர் செடிதான் நிறைய வளரும். பாக்குமரம் பார்க்க அழகு , கருவேப்பிலையை வெட்டி வெட்டி விட வேண்டும்.

   ஊர் நினைவுகளை சுண்டைக்காய் தருது மகிழ்ச்சி.

   நீக்கு
 24. //"இன்று பெளர்ணமி. பக்கத்தில் இருக்கும் மாசாணி அம்மனைத் தரிசனம் செய்து விட்டுப் போங்கள்" என்றாள். இந்தக் கோவில் பார்த்தது இல்லை, அதனால் பார்த்து விட்டுப் போவோம் என்று பார்த்து விட்டோம்.//

  மிக நல்ல விஷயம் பண்ணியிருக்கிறீங்க கோமதி அக்கா.. இதனால அதிராவும் ஹப்பியோ ஹப்பி... நாம் அறிந்த கேள்விப்பட்ட விசயங்களை இப்படி நேரில் பார்த்து வந்து சொல்லும்போது மனதில ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சிப் பிரவாகம் பொங்குது... மாசாணி அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்..அதிராவுக்கும்தேன்:)).

  எங்கும் வரமுடியவில்லை கோமதி அக்கா, இப்போதான் தேடிப்பார்த்து.. தலைப்பைப் பார்த்து மிரண்டு போய் ஓடி வந்தேன் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெளர்ணமிக்கு மாசாணி அம்மன் தரிசனம் கிடைத்தது அவள் செயல்தான்.நீங்கள் சொன்னது போல் மாசாணி அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் . எல்லோரில் நீங்களும்தான்.

   மூன்று நாளாக அதிராவை தேடினேன். விடுமுறையில் பயண்மாக இருக்கும் ஏதாவது சுற்றுலா என்று நினைத்துக் கொண்டேன்.

   மிரள வேண்டாம். நல்லவர்களுக்கு நல்லதே செய்வாள். அன்னை.
   உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு