பயணத்தில் கண்ட காட்சிகளைக் காரின் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு அலைபேசியில் எடுத்த படங்கள். காரின் மூடிய ஜன்னல் வழியாக எடுத்த படங்கள்.
கோவைக்கு 12/10/19 அன்று குடும்ப விழாவிற்குப் போய் இருந்தோம். விழா முடிந்து 13ம் தேதி திரும்பி வரும் போது சில கோவில்களுக்கும் போனோம்.
கோவிலாகக் காட்டிக் கொண்டு இருந்தால் சிலருக்கு அலுப்பாக இருக்கும் என்பதால் பயணத்தில் எடுத்த எனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளின் பகிர்வு. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
பயணத்தில் மதிய உணவுக்காகப் போன ஓட்டலில் பார்த்த சில காட்சிகள் இங்கே.
பசுமை போர்த்திக் கொண்ட மலையும் பஞ்சுப் பொதிகளாக வெண்மேகங்களும் நீலவானமும்
வர வர வானத்தின் வெண்மை நிறம் மாறிக் கொண்டே இருந்தது
நீண்ட மலைத்தொடர் மலை அழகும் மாறிக் கொண்டே வந்தது
வான்மேகமும் மலையைத் தொட வேகமாய் வந்து கொண்டு இருந்தது
சில மலைச்சிகரங்களை வெண்மேகம் போர்த்துக் கொண்டது
மலைச்சிகரத்தில் ஒரு பகுதியில் மட்டும் சூரியன் பாத்தி அமைத்தார்
இன்னும் கொஞ்சம் மேகத்தை விலக்கி சூரியன் வந்தார்
திடீர் என்று மேகம் விலகி வெளிச்சம் வந்தது
மீண்டும் கருமேகம் சூழ்ந்தது
'மழை கீழே இறங்குது, விரசாய் விடு தம்பி வண்டியை!
மழை வந்து விட்டது! வேகமாய்ப் போகணும், மக்கர் பண்ணாதே!
நல்ல மழை, வழி எல்லாம்
மதியம் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் போகும் பாதையில் உள்ள ஓட்டலில் வரவேற்பு முகப்பில்
மரச்செக்கு, மாடுகள், மாட்டை ஓட்டுபவர் கையில் கம்பு, தலைப்பாகை அழகு
வானத்தின் வெண்மேகப் பின்னணி, பிடித்து இருக்கா?
'எல்லோரும் மீண்டும் மரச்செக்கு எண்ணெய் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் நமக்கு நல்ல காலம்தான்' என்ற நம்பிக்கை ஒளி அவர் கண்ணில் தெரிகிறதோ!
குழந்தைகள் விளையாட நிறைய இருக்கிறது, சீ-ஸா பலகை, சறுக்கி விளையாட சறுக்கு மரம், நவீன குதிரை. அதில் தான் பெண் குழந்தை விளையாடுகிறாள்.
அறிவிப்புப் பலகையில் உள்ளது போல் தயிர் சாதத்திற்கு சூடாய் காலிபிளவர் பக்கோடா போட்டுக் கொடுத்தார்கள். என் கணவர் தயிர்சாதமும், நான் சப்பாத்தியும் சாப்பிட்டோம்.சப்பாத்தி மெதுவாக, சூடாக இருந்தது, காய்கறிக் குருமா, வெள்ளரிக்காய், வெங்காயம், தயிர். தயிரும் புளிக்காமல் நன்றாக இருந்தது. இயற்கையை ரசித்துக் கொண்டு சாப்பிட மரபெஞ்சுகள் வெளியே . பெஞ்சில் அமர முடியாதவர்களுக்கு மேஜை, நாற்காலியும் உண்டு. சாப்பாட்டை வழக்கம் போல் படம் எடுக்க மறந்து விட்டது.
பழங்கள், உலர்ந்த பழங்கள், தேன், ஆர்கானிக் பொருட்கள், குளிர்கால உடைகள், மழைக் கோட்டுக்கள், குடைகள் மிட்டாய்கள், பிஸ்கட்டுகள், ரொட்டிகள் என்று விதவிதமாய் வைத்து இருக்கிறார்கள். பெரியவர்கள், குழந்தைகள் என்று எல்லோருக்கும் பிடித்த நொறுக்குத் தீனிகள் வைத்து இருக்கிறார்கள்.
மொட்டை மரத்தையும் புலி, ஆந்தை வைத்து அழகுபடுத்திவிட்டார்கள்.
கீழே கிடக்கும் விளக்குமாறு, துடைக்கும் குச்சி, குப்பைகூடை இவைகள் தான் கொஞ்சம் அழகைக் கெடுக்குது, கைகழுவும் இடம் பின்னால் உள்ளது
ஹலோவின் பண்டிகை அக்டோபர் 31 ல் வரப்போகிறது, அதற்கு இரவில் இருளை விலக்கி ஒளி ஊட்டப் பொம்மை வைத்து விட்டார்கள்.இரவில் பயம் காட்டுவார்கள் ஆரஞ்சு வண்ண விளக்கில் . இந்த முறை அக்டோபர் 31 அன்று வியாழக்கிழமை விடுமுறை நாள் இல்லை. விடுமுறையாக இருந்தால் இந்தப் பண்டிகை பயங்கர கொண்டாட்டமாக இருக்கும், வெளி நாடுகளில்.
வாழ்க வளமுடன்.
ஆவ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டோ தெரியல்லியே.. மீதான் மீதான்.. கோமதி அக்கா.. அதிராவை 1ஸ்ட்டாப் போடுங்கோ:)) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் தான் நீங்களே தான் முதல் முதல் வருகை.
வாழ்த்துக்கள்
வாவ்வ்வ்வ்வ் மீயேதான் 1ஸ்ட்டூ பூஸோ கொக்கோ?:)) ஹா ஹா ஹா.
நீக்குஅதானே! அதிரா யாரு!
நீக்குஇப்போதான் என் பக்கம் கோமதி அக்காவுக்குப் பதில் போட்டேன்.. புதுப்போஸ்ட் போடுங்கோ சோர்வு போயிடும் என, பார்த்தால் போட்டிருக்கிறீங்க நான் சொல்லும்போதே ஹா ஹா ஹா
பதிலளிநீக்குநீங்கள் தீர்க்கதரிசி அதிரா அல்லவா!
நீக்குஇன்று அக்கா போடுவா என்று முன்பே தெரிந்து சொல்லி விட்டீர்கள்.
சோர்வு விலகும் தான் உங்களுடன் பேசும் போது.
uண்மையில் காரின் பின் சீட்டில் இருந்தால் படங்கள் நன்றாக வருவதில்லை, ஆனா நீங்க மிக அழகாக எடுத்திருக்கிறீங்க..
பதிலளிநீக்கு//கோவிலாகக் காட்டிக் கொண்டு இருந்தால் சிலருக்கு அலுப்பாக இருக்கும் என்பதால்//
அது உண்மைதான், இடைக்கிடை இப்படி மானே தேனே கலக்கோணும் கோமதி அக்கா:)))
பின்பக்கம் இருந்தால் பக்கவாட்டில் மட்டும் தான் எடுக்க முடியும். நேரே எடுப்பது கஷ்டம்.
நீக்குபதிவு போடும் போது உங்களை நினைத்து கொண்டேன். இப்படி சொல்வீர்கள் என்று.
மானே ! தேனே ! கலந்து விட்டு இருப்பது நன்றாக இருக்கா?
ஆவ்வ்வ் மலைக்கு மேலே மேகக்கூட்டம் அழகோ அழகு.. ஏதாவது உருவம் தெரிகிறதா என தேடுகிறேன், ஒரு தாரா, இருந்துகொண்டு தலையை மேலே நீட்டுவதுபோல இருக்கு முதல்ப் படத்தில்...:)
பதிலளிநீக்கு//வர வர வானத்தின் வெண்மை நிறம் மாறிக் கொண்டே இருந்தது///
ஓம் மிகில் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது.. மழை வரப்போகிறது.. ஓடுங்கோ கோமதி அக்கா.. ஓடிப்போய்க் காருள் ஏறுங்கோ ஹா ஹா ஹா..
தாராவை பார்த்து விட்டீர்களா மேக கூட்டத்தில்! எனக்கும் மேக கூட்டத்தில் உருவங்களை தேடப் பிடிக்கும் அதிரா.
நீக்குகோமதி அக்காவை துரத்திக்கொண்டு மதுரைக்கு வந்து விட்டது மழை அதிரா.
நல்ல மழை நேற்று மதுரையில்.
ஓ அந்த மொட்டைத்தென்னை மரங்கள் பார்க்கக் கஸ்டமாக இருக்கு.. கஜாப் புயலில் உடைஞ்சதாக இருக்குமோ..
பதிலளிநீக்குஹா ஹா ஹா முகிலின் இடைவெளிக்குள்ளால சூரியன் மலையில் படுவது அழகு.. இங்கும் அப்படித்தெரியும்.
நிறைய தென்னை மரங்கள் இப்படி மொட்டையாக காட்சி அளிக்கிறது. மொட்டை மரத்தின் பொந்தில் கிளி வசிக்கிறது. நமக்கு பார்க்க கஷ்டம். கிளி வீடு கொடுத்து இருக்கிறார் இறைவன்.
நீக்குமரகத பச்சையாக உள்ள மலையில் சூரியன் இப்படி தெரிவது மிக அழகாய் இருக்கும்.
அங்கு தெரிவதை பார்த்து ரசிப்பீர்கள். நேரம் போவதே தெரியாது.
அற்புதமான காட்சிகள் சகோ அதற்கு தகுந்த வர்ணனைகளும் ரசிக்க வைத்தன..
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குகாட்சிகளையும் வர்ணனைகளையும் ரசித்தமைக்கு நன்றி ஜி.
///விரசாய் விடு தம்பி வண்டியை!//
பதிலளிநீக்குஓ விரசாய் எனில் விரைவாவோ ஹா ஹா ஹா.. அதுதானே பிராக்குப் பாராமல் மழைக்கு முன்னம் வீடு போய்ச் சேரச் சொல்லுங்கோ அவர்களிடம் ஹா ஹா ஹா..
ஆஆஆ மழை வந்தே விட்டதே...
கிராமத்து மக்கள் சொல்வார்கள் விரசாய் நடையை கட்டு, விரசாய் போ என்று அதுதான் அப்படி போட்டேன்.
நீக்குபிராக்குப் பாராமல் மழைக்கு முன்னம் போனால் வீட்டில் திட்டு விழாது. மழையில் நனைந்து போனால் திட்டு விழும். அவர்கள் அம்மாவிடம், சகோதரியிடம், பாட்டியிடம் மனைவியிடம் இப்படி யாரிடமாவது திட்டுக்கள் வாங்கி இருப்பார்கள்.
ஆஆஆஆஆஆஅ
பதிலளிநீக்குவண்டில் மாடு எட்டு வச்சு
முன்னே போகுதம்மா..
படமெடுத்த கோமதி அக்கா
ஹோட்டலுக்குள் நுழையுறா:))
ஓ நான் அவை உண்மையானவை.. செக்கு ஆட்டுகினம் என நினைச்சுட்டேன்ன் ஹா ஹா ஹா
''வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா' பாடல் நினைவுக்கு வந்து விட்டதா?
நீக்குஉண்மையானது போல் அதை அமைத்தவருக்கு உங்கள் பாராட்டுக்கள் போய் சேரட்டும்.
ஓ ஹோட்டல் காரரும் மக்களைக் கவர என்னவோ எல்லாம் பண்ணி வச்சிருக்கிறார்கள்..
பதிலளிநீக்குசெக் எண்ணெய் வாங்க மீ ரெடி ஆனா கிடைக்காதே.
யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை எனும் இடத்திலதான் செக்கில் நல்லெண்ணெய் ஆட்டித் தருவார்கள். ஆனா இப்போ ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் என போத்தலில் இங்கு கிடைக்குது.. பறவாயில்லை நல்ல வாசம் வருது.
அனைத்துப் படங்களும் அழகு அருமை ரசனை கோமதி அக்கா.. இப்பொ உற்சாகமாகி இருப்பீங்களே.. ஹா ஹா ஹா. எனக்கும் மகிழ்ச்சி.
காற்று உள்ளே போதே தூற்றிக் கொள்ள வேண்டும். அந்த மந்திரம் தெரிந்து இருக்கிறது ஓட்டல்காரருக்கு.
நீக்குசெக் எண்ணெய் என்று கிடைக்கும். ஆனாலும் மக்களுக்கு ஆட்டுமிடத்தில் வாங்குவது மகிழ்ச்சி.
ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் கிடைப்பது மகிழ்ச்சி. ஊரின் நினைவும் , எண்ணெயின் வாசமும் சேர்ந்து வரும்போது மகிழ்ச்சி தானே!
அனைத்து படங்களையும் முதலில் வந்துப் பார்த்து அழகான பல கருத்துக்கள் சொல்லி என்னை உற்சாகபடுத்தியதற்கு நன்றி அதிரா. உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
வானத்தின் மேகப் படங்கள் மிக அருமை. காரிலிருந்து இறங்கி எடுத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் (தேவையான கோணங்களில்).
பதிலளிநீக்கு//'மழை கீழே இறங்குது, விரசாய் விடு தம்பி வண்டியை!// - ஒருவேளை.. காரில் இருக்கும் அம்மா தன்னைப் புகைப்படம் எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு ஓட்டுபவரை வேகமாகச் செல்லச் சொல்கிறாரோ அந்தப் பையன்
உணவகம் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் செய்திகள் அங்கு செல்லணும் என்ற ஆர்வத்தைத் தோற்றுவித்தது.
பதிலளிநீக்குஆனால் விலையைச் சொல்லவில்லையே நீங்கள்..
உணவகம் பற்றிய செய்திகள் அங்கு செல்லணும் என்ற ஆர்வத்தை தோற்றுவித்தது மகிழ்ச்சி.
நீக்குவிலை தெரியவில்லை சாரிடம் கேட்டேன் நான் அவர்களுக்கும் மறந்து விட்டது. சார், டிரைவர், நான் மூன்று பேரும் சாப்பிட்டோம். 200 ரூபாய்க்கு மேல் தான் சார் 500 ரூபாய் வைத்தார்கள் பார்த்தேன். மீதி வாங்கியதை பார்க்கவில்லை. அடுத்த முறை உணவின் விலையை கவனிக்கிறேன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? தங்களை இரண்டொரு நாளாய் பதிவுகளுக்கு காணவில்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன். பயணமா? குடும்ப விழாவை நல்லபடியாக கொண்டாடி வந்தமைக்கு மகிழ்ச்சி.
பயணத்தின் படங்கள் அருமை. வான வீதியில் மேக பவனிகள் நன்றாக இருந்தன.
முதல் படம் மிக அழகாக உள்ளது. நேற்று எடுத்ததுவா? நானும் இங்கு நேற்று இதேப் போல் வெண் மேகங்களை ரசித்துப் படமெடுத்திருக்கிறேன். ஏனோ இயற்கையை எத்தனை தடவை ரசித்தாலும் சலிப்பு தட்டுவதில்லை. இயற்கை இந்த பூமியில் வாழும் நமக்கு இறைவன் கொடுத்த கொடை. தாங்கள் எடுத்த மற்றப்படங்களும் மிகவும் அழகாக இருந்தது.
ஒவ்வொரு படங்களுக்கும் பொருத்தமாக கொடுக்கப்பட்ட வாசகங்களை ரசித்தேன்.
மழை மலை முகடுகளில் சிறிது நேரத்தில் பரவுவது போல் அமைந்த படங்கள் கண்களுக்கு மட்டுமல்ல.. மனதிற்கும் குளிர்ச்சி.
உணவகம், குழந்தைகள் விளையாடுமிடம், செக்கு ஆட்டுமிடம் என அனைத்தும் நன்றாக உள்ளது.
செக்கு ஆட்டுமிடமும், அதனால் கிடைக்கும் எண்ணெய்யும், அந்த உணவகத்திற்கு சொந்தமானதோ? அந்த எண்ணெய்யை வைத்து அங்கு உணவு தயார் செய்கிறார்களோ? செக்கெண்ணெய் நல்ல வாசமாக இருக்கும். உடம்புக்கும் நல்லது இல்லையா? அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குசாரின் அண்ணாவிற்கு பிறந்த நாள் விழா அதற்கு போய் இருந்தோம்.
இங்கு கொஞ்சம் வேலை சாருக்கு, அதனால் தங்காமல் உடனே வந்து விட்டோம்.
வான் மேகங்களை ரசித்தமைக்கு நன்றி.
நீங்கள் எடுத்த படங்களையும் பதிவில் போடுங்கள், ரசிக்கிறோம் நாங்களும். இயற்கையை ரசிப்பதில் இன்பம் தான். இறைவன் அளித்த கொடைதான் இயற்கை, அதை ரசிக்க கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி .
செக்கு ஆட்டுவது போல் உள்ளது சும்மா காட்சிக்கே! உண்மையானது இல்லை. அவர்கள் செக் எண்ணெய்தான் உபயோகப்படுத்துகிறார்களாம் அதை சொல்ல இந்த காட்சிகள்.
இந்த ஓட்டல் நெடுந்தூரம் போகிறவர்களுக்கு வசதி தங்கி ஓய்வு எடுக்கலாம், கழிப்பறை, குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருக்கிறது. இந்த ஓட்டலின்
பக்கத்தில் நல்லம்மாள் கிராமிய உணவு என்று அறிவிப்பு பலகை பார்த்தேன் . இவர்களை சேர்ந்ததா? அல்லது வேறு ஒருவர் நடத்துகிறார்களா தெரியவில்லை.
செக்கெண்ணெய் நல்லது தான்.
உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.
வணக்கம் நெல்லைதமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாரில் சென்று கொண்டு இருக்கும் போது போகிற போக்கில் எடுத்தது.
நீங்கள் சொல்வது போல் கீழே இறங்கி எடுத்தால் தேவையான கோணங்களில் எடுத்து இருக்கலாம் தான்.
நீண்ட மலைத்தொடர் நின்று நின்று எடுத்தால் வீடு வந்து சேர நேரமாகி விடும்.
அரிசோனா சென்ற போது மலைகளின் அழகை அப்படி இறங்கி எடுத்து இருக்கிறேன்.
இன்னும் பதிவு போடவில்லை போடுகிறேன்.
//ஒருவேளை.. காரில் இருக்கும் அம்மா தன்னைப் புகைப்படம் எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு ஓட்டுபவரை வேகமாகச் செல்லச் சொல்கிறாரோ அந்தப் பையன்//
இருக்கும் இருக்கும் .
ஆனால் திடீர் என்று தான் எடுத்தேன், அவருக்கு தெரியாது.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
எல்லாப் படங்களும் அருமை. கார் ஓடும்போது எடுப்பது சிரமமாகவே இருக்கிறது. இப்படித் தான் அரிசிலாறைப் படம் எடுக்கப் பல முறை முயன்றும் படங்கள் நன்றாக வரவில்லை. ஆனால் இவை உங்கள் திறமையைக் காட்டுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரமே அழகு கொஞ்சும். அவற்றைப் படங்களில் பார்க்க இன்னமும் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குகாமிராவில் கார் ஓடும் போது எடுக்க வசதி இருக்கிறது ஆனால் அதை நான் பயன்படுத்தியது இல்லை. அலைபேசிதான் உடனே எடுக்க வசதியாக இருக்கிறது.
அரிசிலாறு பேரை கேட்டவுடன் "பொன்னியின் செல்வன்" நினைவுக்கு வருகிறார்.
மலைத்தொடர் எல்லாம் ஒவ்வொரு அழகுதான்.உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி, நன்றி.
இயற்கை அழகை எவ்வளவு ரசித்தாலும் புதுப்புது கோணத்தில் மீண்டும் மீண்டும் நம்மைக் கவர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஹோட்டல் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. படங்கள் அனைத்தையும் ரசித்தேன். நன்றி மேடம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
நீக்குஇயற்கை புது புது கோணத்தில் நம்மை கவரும் தான் கீதமஞ்சரி.
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
இயற்கைக்காட்சிகள் எப்போதுமே கண்களையும் மனதையும் கவர்பவை. மேகங்கள் காட்டும் காட்சிகள் அற்புதமாயிருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஇயற்கைக் காட்சிகள் எப்போதுமே கண்களையும், மனதையும் கவர்ந்து மனதை சாந்தபடுத்தும் . நீங்கள் சொல்வது போல் மேகங்கள் காட்டும் காட்சிகள் அற்புதமானவை.
மழைக்காலத்தில் வானம் காட்டும் காட்சிகள் அற்புதம்.
வானமும் மலையும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் அழகு. வழியில் மழை வந்தால் இன்னும் ரசனை. என்ன ஒன்று, நாம் நனையாமலிருக்கவேண்டும்!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். நான் மழையில் நனைந்தகாலம் சிறு வயது. இப்போது நனையாமல் மழை அழகை ரசிக்கிறேன். வானமும், மலையும் ஒன்றையொன்று தொட்டு விளையாடும் காட்சி அருமையானதுதான்.
நீக்குதிண்டுக்கல் செல்லும்போது தனபாலன் நினைவு வந்திருக்குமே... அவர் புதுகையில் இருந்திருப்பார் அப்போது...!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் திண்டுக்கல் தனபாலன் நினைவு வந்தது.
நீக்குபுதுகையில் கணினி பாடம் நடத்திக் கொண்டு இருப்பார்தான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
புகைப்படங்கள் அருமை!. உங்களுக்குள் ஒரு திறமையான புகைப்பட கலைஞர் இருக்கிறார். பாராட்டுகள். இதற்கு முன் உங்களுடைய இரண்டு பதிவுகளுக்கு நான் அனுப்பிய பின்னூட்டம் ஏனோ வரவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய பின்னூட்டம் வந்து இருக்கிறது.
போன பதிவுக்கு பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்து இருக்கிறேன்.
இப்போதெல்லாம் சாலை வழியில் பயணிக்கும் பொழுது தரமான உணவு விடுதிகள், சுத்தமான கழிவறைகளோடு இருக்கின்றன. ஆனாலும் பேருந்துகாரர்கள் மோசமான உணவகங்களில்தான் நிறுத்துகிறார்கள். :(((அந்த செக்கும், மாடும், தூரத்து பார்வையில் நிஜம் போலவே தோற்றமளிக்கின்றன.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். நிறைய விழிப்புணர்வு மக்களிடம் வந்து இருக்கிறது. சுத்தமான கழிவறைகள் உள்ள ஓட்டல்கள் நிறைய வந்து இருக்கிறது.
நீக்குபேருந்துகாரர்கள் அவர்களுக்கு வசதி, அவர்களுக்கு கிடைக்கும் சலுகை காரணமாக சில இடங்களில் நிப்பாட்டுவார்கள். நீண்ட தொலைவு செல்லும் போது கார் ஓட்ட வேண்டாம் என்று அப்போது மட்டும் டிரைவர் போடுகிறோம், அவரிடம் நல்ல ஓட்டலாக நிறுத்துங்கள் என்றோம். அவர் சொன்ன ஓட்டல்தான் இது.
//(((அந்த செக்கும், மாடும், தூரத்து பார்வையில் நிஜம் போலவே தோற்றமளிக்கின்றன. //
நீங்கள் சொல்வது சரிதான் நிஜம் போலவே செய்தவரை பாராட்டவேண்டும்.
உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. கருத்துக்களுக்கு நன்றி.
மேகக்கூட்டத்தினை ரசிக்காதவங்களே இல்லை போல. எனக்கும் பிடித்தமானது. படங்கள் எல்லாமே அழகு அக்கா. நானும் நினைத்தேன் காரில் போகும்போது எப்படி எடுத்தீங்க. நானும் எடுத்திருக்கிறேன். ஆனா அவ்வளவு துல்லியம் இல்லை. 2,3 வது படங்கள் கூடுதல் அழகு. மழைக்கு முன் கருமேகங்கள் சூழ்ந்து ஒருவித குளிர்காற்று அடிக்கும் அந்த சூழல் எனக்கு பிடிக்கும். பின் மழை பெய்து அதன் பின் வரும் மண்வாசம் வாவ் சூப்பர்.
பதிலளிநீக்குவித்தியாசமான ரெஸ்ரோரண்ட் மாதிரி இருக்கு. அழகாவும் இருக்கு. அம்பாவும், வயதானவரையும் பார்க்க உண்மையென நினைத்தேன். தத்துரூபமக இருக்கு.
நல்லதொரு அழகிய பதிவு அக்கா.
வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
நீக்குமேக கூட்டங்களை எல்லோரும் ரசிப்பார்கள் அம்மு.
மழை வரும் முன் முகில் கூட்டம், மழை வந்தபின் மண் வாசம் எல்லாம் அருமையாக இருக்கும்.
வித்தியாசமான உணவகம் என்று சொல்லலாம் தான். மக்களின் எண்ணத்தை புரிந்தவர்கள்.
சிலை வடித்தவர்களை பாராட்ட வேண்டும்.
உங்கள் தொடர் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது அம்மு. நீங்களும் பதிவு போடுங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இயற்கை அழகு கொஞ்சும் படங்கள்...
பதிலளிநீக்குஇனிய வர்ணனைகள்...
அழகு.. அழகு..
மகிழ்ச்சி.. நன்றி...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
//கோவிலாகக் காட்டிக் கொண்டு இருந்தால் சிலருக்கு அலுப்பாக இருக்கும் என்பதால்//
பதிலளிநீக்குஉண்மைதான் கோமதிக்கா!!! இடையிடையே இப்படி அழகான காட்சிகள் பகிரும் போது நன்றாக இருக்கிறது.
படங்கள் அனைத்தும் அருமை.
மலைகள், மேகம், பஞ்சுப் பொதி போன்ற மேகம் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது கோமதிக்கா...இல்லையா. கோயம்புத்தூட் டு மதுரை இத்தனை அழகான இயற்கையா என்று நினைத்த போது ஆம் திண்டுக்கல் வழிதானே போகணும் என்று நினைவு வந்தது....அதான்...
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குமலைகள், வான்மேகம் அலுக்காது தான்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் எல்லாம் மிக அழகான மலைகள் கொண்ட பகுதிதான்.
நிலகோட்டை, தேனீ எல்லாம் மலை அழகு.
கார் மேகம் சூழல் இடையில் சூரியன் எட்டிப் பார்க்கும் போது அந்த வெயில் படும் இடங்கள் எல்லாம் அழகோ அழகு...
பதிலளிநீக்குகாரின் பின் சீட்டில் பயணிக்கும் போதும் எடுத்துருக்கீங்களே சூப்பர்...
கீதா
பச்சை கம்பளம் போர்த்திய மலையில் சூரியன் ஒளி படும் இடம் இளம்பச்சையாக ஜாலம் செய்யும் காட்சி அருமையாக இருக்கும் காமிராவில் எடுத்தால் இன்னும் அழகாய் தெரியும்.
நீக்குபாராட்டுக்கு நன்றி.
கண்ணாடி வழியாக எடுத்தவை கூட மிக நன்றாகவே வந்திருக்கின்றன அக்கா...
பதிலளிநீக்குஅந்த ஹோட்டல் என்னவெல்லாம் செய்திருக்காங்க. இப்படி நெடுந்தூரப் பயணச் சாலையில் நல்ல உணவகங்கள் இருக்கின்றன. சென்னை டு திருச்சி ஹைவேயில் திண்டிவனம் அருகே என்று நினைவு....அழகான உணவகம் இருக்கு. அங்கு நீங்க சொல்லிருப்பது போல் கைவினைப் பொருட்கள் எல்லாம் அழகாக வைத்திருக்காங்க. மரக்கரண்டியகள் கூட....அழகும் படுத்தி வைத்திருக்காங்க. ரொம்ப அழகாகவே இருக்கின்றன கழிவறைகள் எல்லாமே..உணவகம் பெயர் மறந்து போச்சு..
இந்த உணவகத்தில் கூட முதலில் அட செக்கு இழுத்து எண்ணெய் எடுத்து அதில்தான் உணவு போலும்னு நினைச்சேன் அப்புறம் தான் தெரிந்தது அது காட்சிக்கு என்று ரொம்ப உண்மையாக இருப்பது போல இருக்கிறது...புலி ஆந்தை எல்லாம் அழகு.
கீதா
நெடுஞ்சாலையில் நிறைய ஹோட்டல் வசதியாக வந்து விட்டது. மக்களை கவர நிறைய செய்கிறார்கள். வாசலில் வெயில் மழை பொருட்படுத்தாமல் போவோரை கொடி அசைத்து விசில் ஊதி அழைக்க ஆள் வைத்து உள்ளார்கள்.
நீக்குசெக்கு மரம் , மாடுகள், மாட்டை ஓட்டும் ஆள் எல்லாம் நிஜம் போலவே! தலைபாகை மிக அருமை.
இப்பொதெல்லாம் குழந்தைகள் விளையாட அழகான பொம்மைகள், விளையாடுவதற்கு இடம் என்று நன்றாகவே செய்கிறார்கள். உணவகங்களில்.
பதிலளிநீக்குமாடு செக்கிழுப்பவர் ரொம்ப அழகாக இருக்கிறார். மெனு நல்லாருக்கே..
எனக்கு மிகவும் பிடித்த படம் கார் கண்ணாடியில் மழைத் துளிகள் படம் செம அழகு!!!
அனுவும் கூட இப்படிச் சில படங்கள் எடுத்து பகிர்ந்திருந்தாங்க. நான் எடுத்தவை எப்படியொ அழிந்துவிட்டன...தெரியாமல் ஏதோ மாற்றும் போது போய்விட்டன...
எல்லாப்படங்களுமே ரொம்ப அழகு கோமதிக்கா மிகவும் ரசித்தேன்
கீதா
ஆமாம், உணவு அருந்தவருவோர் குழந்தைகள் விளையாட வசதி செய்கிறார்கள் உணவங்களில்.
நீக்குகார் கண்ணாடியில் மழைதுளியை ரசித்தமைக்கு நன்றி.
அனுவும் போட்டு இருந்தார்கள். நீங்கள் மறுபடியும் எடுங்கள்.
உங்கள் எல்லா கருத்துக்களுக்கும் நன்றி கீதா.
படங்கள் எல்லாமே மிக அழகாக வந்திருக்கின்றன சகோதரி.
பதிலளிநீக்குசாலையோர உணவகங்கள் எல்லாம் நல்ல தரமாக வந்துவிட்டன போலும்.
மலை மேகம் படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன.
செக்கிழுத்தல் நிஜப் படம் போலவே இருக்கிறது லாங்க் ஷாட்டில்.
அனைத்தும் அருமை
துளசிதரன்
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வேலை எப்படி போய் கொண்டு இருக்கிறது?
சாலையோர உணவகம் தரமாக நிறைய வந்து விட்டன.
மலை மேக படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
எத்தனை அழகிய காட்சிகள் ...
பதிலளிநீக்குபல முறை படம் எடுத்தாலும் போதும் என்ற எண்ணமே வருவது இல்ல ...இதில் நாம் பேராசைகாரர் களாகவே உள்ளோம் ..
முதல் படமும் ,,மழை நீர் தெளித்த காட்சியும் மிக கவர்ந்தன மா ...மிக அழகு ..
மாட்டை ஓட்டுபவர் கையில் கம்பு, தலைப்பாகை அழகு ...அசோ உண்மை காட்சி போலவே தத்ருபம் மா..
ஹலோவின் பண்டிகை காட்சிகள் எப்பொழுதும் உங்கள் தளத்தில் பார்த்து மகிழும் நினைவு வருகிறது ..
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் , அனு நீங்கள் சொல்வது போல் தான்.
படங்களை ரசித்தமைக்கு நன்றி.
ஆமாம் அனு, உண்மை காட்சி போல் வடிவமைத்து இருக்கிறார்.
ஹலோவின் பண்டிகை பதிவுகளை நினைவு வைத்து கருத்து சொன்னது நன்றி அனு.
அன்பு கோமதி,
பதிலளிநீக்குநிதானமாக வந்து படிக்கிறேன் மா. வேலைகள் அப்படி. திண்டுக்கல்லில்
இந்த ஓட்டல் இருக்கிறதா. நான் நிஜமான செக்கு என்றே நினைத்தேன்.
மிக மிக அருமையாக அமைத்திருக்கிறார்கள் மேகங்களைக் கூடவே சென்று
படம் எடுத்திருக்கிறீர்கள்.
மலையோடு விளையாடும் மேகங்கள் மழையும் பொழிந்து விட்டன.
என்ன ஒரு இடம்.
நீல மலையும் பச்சை மரங்களும் வெண்மேகங்களும் பார்க்கப் பார்க்க இனிமை.
பெரியவரின் பிறந்த நாள் சிறப்பாக நடந்தது மிக மகிழ்ச்சி..
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஊருக்கு போக கிளம்பி கொண்டு இருப்பீர்கள்
வெளைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.
திண்டுக்கல் போகும் பாதையில் உள்ளது இந்த ஹோட்டல்.
உண்மையான செக்கு போல் அமைத்து இருக்கிறார்கள்.
மலையோடு விளையாடும் மேகங்களை பார்த்து கொண்டே வந்தேன், மழையும் வந்து விட்டது.
நீலவானமும் மலையும், வெண்மேகமும் நமக்கு மகிழ்ச்சியை மன அமைதியை கொடுப்பது இல்லையா அக்கா?
சாரின் அண்ணா பிறந்த நாள் சிறப்பாக நிறைவு பெற்றது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//மரச்செக்கு, மாடுகள், மாட்டை ஓட்டுபவர் கையில் கம்பு, தலைப்பாகை அழகு
பதிலளிநீக்குவானத்தின் வெண்மேகப் பின்னணி, பிடித்து இருக்கா?//
இல்லே. இது ஏதோ சினிமா ஷூட்டிங் படம் மாதிரி இருக்கு.
அந்நாட்கள் மரச் செக்குகள் எண்ணைய் தடம் பதிந்து இருக்கும். இந்த மாதிரி புதுக்கருக்கு அழியாமல் அல்ல.
செக்கின் மரத் தண்டில் ஒரு பாறாங்கல் சுமை தாங்கலில் நாலைந்து கோணிப் பைகள் போட்டு அதில் உட்கார்ந்து கொண்டு மாடுகளைத் தட்டிக் கொடுத்து எண்ணையாட்டுவார்கள். இந்த மாதிரி கம்பும் கையுமாக நின்றபடி அல்ல. செக்குமாடு போல என்று பழமொழிச் சொல் கூட உண்டு. சுற்றி வர அதற்கு பாவம் பழகிப் போயிருக்கும். பராக்கும் பார்க்காது. கருமமே கண்ணாயிருக்கும். அதை விரட்டத் தேவையில்லை. எள் நன்றாக அழுந்தி அரைபட அந்த நிதானம் தேவை.
மேகக் கூட்ட பின்னணி அழகு தான். ஆனால் அது நித்தியமில்லை என்ற உணர்வும் காட்சியிலேயே தேங்கி நிற்கிறது.
செக்கில் ஆட்டித் தருகிறோம் என்பது ஒரு விளம்பரம் தான்.
பாலில் தண்ணீரைக் கலக்கும் காலத்தில் என்ன நடக்கிறது என்று சொல்ல முடியாது தான்.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
நீக்குஅந்தகாலத்தில் மரசெக்கில் ஒரு மாடுதான் இருக்கும் நீங்கள் சொல்வது போல் செக்கின் மரதண்டில் ஒரு பாறாங்கல் சுமை தாங்கலில் நாலைந்து கோணிப் பைகள் போட்டு அதில் உட்கார்ந்து கொண்டு மாடுகளைத் தட்டிக் கொடுத்து எண்ணையாட்டுவார்கள்.
நானும் பார்த்து இருக்கிறேன்.
கலைத்துவிடும் ஒரு நொடியில் என்று தெரிந்தே ரசிக்கிறோம்.
எதுதான் நித்தியம் ? இருக்கும் போது பார்ப்பதை ரசிக்கிறோம் அந்த நேர மகிழ்ச்சி.
//செக்கில் ஆட்டித் தருகிறோம் என்பது ஒரு விளம்பரம் தான்.
பாலில் தண்ணீரைக் கலக்கும் காலத்தில் என்ன நடக்கிறது என்று சொல்ல முடியாது தான்.//
அவர்கள் உண்மையாக இவை எல்லாம் செய்வார்கள் என்று சொல்லவில்லை அங்கு வைத்து இருப்பதை காட்சி படுத்தினேன் அவ்வள்வுதான்.
விளம்பர உத்தி , உண்மை, தொழில்தர்மத்தை கடைபிடித்தால் உயர்வார்கள் .
உங்கள் கருத்துக்கு நன்றி.
மேகங்கள் பஞ்சு மூட்டையை அவிழ்த்து வானில் இருந்து ரிலீஸ் செய்ததுபோல் அழகோ அழகு .
பதிலளிநீக்குமரச்செக்கு மாடு விவசாயி என்று அழகாய் பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணம் வடிவமைத்துள்ளார் .
இந்தியாவிலும் ஹலோவீன் கொண்டாட்டமா !!!
menu படிக்கும்போது ஆசையாய் இருக்கு இப்படி fresh ஆர்கானிக் உணவு சாப்பிட
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குஇப்போதுதான் உங்களுக்கு போன பதிவு பிடிக்கும் என்று போட்டேன். இன்றைய பதிவு மறுமொழியில்.
அதற்குள் இங்கு கருத்து போட்டு இருக்கிறீர்கள்.
மேகம், பஞ்சு மூட்டை, மரச்செக்கு , விவசாயி இப்படி எல்லாவற்றையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
இந்தியாவில் நிறைய இடங்களில் ஹலோவீன் கொண்டாட்டம் நடக்கிறது.
அந்த ஹோட்டலுக்கு வெளிநாட்டினர் (சுற்றுலா பயணியர்) வருவார்கள் என்று நினைக்கிறேன் அவர்களை கவர அதை அமைத்து இருக்கலாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஏஞ்சல்,