புதன், 3 ஜூலை, 2019

கொங்கர் புளியங்குளம் - பகுதி -1

பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.  நிறைய  பதிவுகள் வலையேற்றாமல் இருக்கிறது.  25.11. 2018 ல்  பசுமைநடை இயக்கத்தினருடன் சென்று வந்த கொங்கர் புளியங்குளம்  பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மதுரை எட்டுத்திக்கிலும் மலைகள் சூழ்ந்த நகரம் என்று அழைக்கிறார்கள். அந்த எண் பெருங்குன்றங்களில் ஒன்று  இந்த கொங்கர் புளியங்குளம்.

கொங்கர் புளியங்குளம் 


கொங்கர் புளியங்குளம் மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் , தேனி கம்பம் செல்லும் சாலையில்  அமைந்துள்ளது.

 இந்த ஊர் சமண மலையில் செயல்பட்டு வந்த  (சமணமலை முன்பு பார்த்தோம் அல்லவா?) மாதேவிப் பெரும்பள்ளிக்குத்  தானமாக கொடுக்கப்பட்டதை அங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வாசலுக்கு எல்லோரையும் காலை  ஆறு மணிக்கு வரச் சொல்லி இருந்தார்கள். பின் அங்கிருந்து எல்லோரையும் அழைத்துச் சென்றார்கள்.


எல்லோரையும் வழி நடத்திச் செல்கிறார்  உதயகுமார்

இந்த இடத்தில் உள்ள கல் மண்டபத்தில் மாயன் என்னும் நாட்டுப்புறத் தெய்வத்திற்குக் கோயில் உள்ளது. இதைக் கடந்து தான் மலைக்குப் போக வேண்டும்.

சித்திரை வீதிக்காரன் அவர்கள்    மண்டபத்தைச் சுத்தம் செய்கிறார்கள். முந்தின நாள் மக்கள் குலதெய்வ வழிபாடு முடிந்து அப்படி அப்படியே போட்டு விட்டு போன இலைகள் குப்பைகளைச்  சுத்தப் படுத்துகிறார். திரும்பி வந்து அனைவரும் அங்கு தான் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மலைக்குப் போகும் பாதை கொஞ்ச தூரம் படிகள் கிடையாது. மலைப் பாதை வழியாகப் போக வேண்டும். எலுமிச்சைப் புற்கள் இருபுறமும்
சில இடங்களில் பாதை சாய்வாக இருக்கும். நான் ஒரு இடத்தில் விழப் பார்த்தேன் சறுக்கிக் கொண்டு போன என்னைப் பின்னால் வந்த தொல்லியல் பேராசிரியர்  'அம்மா கவனம்" என்று  பிடித்தார்.
அப்புறம் கொஞ்சம் கற்படிகள்
ஒழுங்கான அமைப்பு இல்லாத கற்படிகள், மேடு பள்ளமாக இருக்கிறது. மலை மேல் ஏறத் தொல்லியல் துறையினர் அமைத்த கைப்பிடி வசதி    இருப்பதால் அதைப் பிடித்துக் கொண்டு ஏறினேன்.
அப்போது கணுக்கால் வலி அதிகமாய் இருந்த நேரம்.  பிஸியொதெரபிக்கு ப்போய் வந்து கொண்டு இருந்தேன். இப்படி காலில் கட்டிக் கொண்டு நடந்து கொண்டு இருந்தேன். அதனுடன் தான் இந்த பயணம். இதற்கு அடுத்து தான் சமண மலை. அதற்கு மீரா பாலாஜி சொன்ன கை வைத்தியத்தால் நலம் பெற்றேன் என்று எழுதி இருந்தது நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

போகும் தூரம் இன்னும் இருக்கு .ஏணிப் படியில் வேறு ஏறவேண்டும். முடியுமா? என்று என் கணவர் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.ஏறி விடுவேன். இவ்வளவு தூரம் வந்து போகாமல் இருக்க முடியாது என்று ஏறி விட்டேன் ,மனபலத்தில்.
போகும் வழியில் அழகான வெள்ளைப்பூ - தைரியமாய் ஏறு  என்று சொல்வது போல் என்னைப்பார்த்துத் தலை ஆட்டியது மகிழ்ச்சி அளித்தது.
மேலே போய் கொண்டு இருந்த ஒரு தம்பதிகள் அம்மா ஏறி விடுவீர்கள்தானே நாங்கள் போகவா என்றார்கள் .ஏறி விடுவேன்,நீங்கள் போங்கள் என்றேன்.
அவர்கள் மேலே போயும் நான் வருகிறேனா என்று பார்த்துக் கொண்டார்கள்.
மலை மேல் பாதை 
முள்வேலிகள் போட்டு வைத்து இருக்கிறார்கள்.

பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் இந்த மலையை இங்குள்ள மக்கள் பஞ்சபாண்டவமலை என்று அழைப்பதைக் கூறினார். 
இங்கு உள்ள கல்வெட்டைப்பற்றிச் சொன்னார். குகைதள விளிம்பில் கி.மு. இரண்டாம் நூர்றாண்டைச் சார்ந்த மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் இருக்கிறது. அது இங்குள்ள கற்படுக்கைகளைச் செய்து கொடுத்தவர்களை பற்றிய செய்தி.
"குற கொடு பிதவன் உபச அன்  உபறுவ(ன்) இதன் அர்த்தம் பதிவேட்டில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது சிரமப் படாமல் படித்து விடுங்கள்.

குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் (ஓ)ன்
"பாகன்  ஊர் பே(ர) தன்பிடன் இத்த வெபோன்'

எழுத்துக்கள் இருக்கும் இடத்திற்குக் கூரை அமைத்து இருக்கிறார்கள்.

செய்திகளைக் கேட்டு முடித்ததும் இறங்க ஆரம்பித்து விட்டார்கள்

சமணப் படுகைகள்

இயற்கையாய் அமைந்த குகைகள்

பெரிய ஒற்றைப் பாறையும், பாறைகளுக்கு முட்டுக் கொடுத்தது போல் கீழே பாறைகளும். 

மலை மேல் இருந்து கீழே 


கீழே இறங்கி பின்  மலைப் பாறை மேல் உள்ள  தீர்த்தங்கரைப் பார்க்கப் போனார்கள்.

என்னைக் கீழே விழாமல் பிடித்த பேராசிரியர் அம்மா நீங்கள் கீழே போய் விடுங்கள், சாரை நான் மேலே அழைத்துப் போய் வருகிறேன் என்று சொல்லி விட்டார். போக ஆசையாக இருந்தாலும்  எல்லோரும் கேட்டுக் கொண்டதால்  அரை மனதாய்க் கீழே இறங்க ஆரம்பித்தேன்.  படிகள் இல்லை மேலே போக. போகும் போது போய் விட்டாலும் இறங்கும் போது கஷ்டம் என்று சொல்லி விட்டார் பேராசிரியர்.

 கீழே இறங்க கல்லூரியில் படிக்கும்  இரண்டு பெண்கள் உதவி செய்தார்கள்.
மலை இடுக்கில்  மரம் முளைத்து இருப்பது அழகு.


மலை வெட்டப்பட்டு இருக்கிறது

மேலே  போய் வந்த  விவரம் அடுத்த பதிவில்.


                                                                    வாழ்க வளமுடன்.

52 கருத்துகள்:

  1. அழகிய படங்கள், மிகவும் தெளிவாக இருக்கிறது.

    சொல்லிச்செல்லும் பாங்கு அருமை. தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      காலை வணக்கம், நலம் வாழ உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  3. இப்படியெல்லாம் இடங்கள் இருப்பதை இதற்கு முன் அறிந்ததே இல்லை...

    கால் வலி உள்ள போதும் வலைப் பதிவுக்காக தங்களை தாங்களே வருத்திக் கொள்வது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது...

    மனோதிடத்தைத் தந்த இறைவன் உடல் நலத்தையும் தந்தருள வேண்டும்...

    அழகிய படங்கள்.. அரிய செய்திகள்..

    இந்த மாதிரியான கடின நடை பயணங்களைக் கூடுமானவரை தவிர்க்கப் பாருங்கள்..

    உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்..

    ஐயன் துணையுண்டு...
    ஏதோ இந்நேரத்தில்(இரவு 11:25) களக்கோடி ஸ்ரீ சாஸ்தா நினைவுக்கு வந்தார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் மதுரையில் நிறைய சமணபள்ளிகள் இருக்கிறது என்று தெரியும் ஆனால் போனது இல்லை. பசுமை நடை இயக்கத்தினர் புண்ணியத்தில் இவைகளை பார்க்க முடிந்தது.

      வலை பதிவுக்காக போகவில்லை. எங்கள் இருவருக்கும் இந்த மாதிரி இடங்கள் போக பிடிக்கும். எழுத ஆரம்பித்தபின் போகும் இடங்களை படங்களுடன் குறிப்பு எடுத்து கொள்கிறேன் அவ்வளவுதான்.

      வயதானல் வரும் பிரச்சனைகள் மருத்துவர் மாடி ஏறி இறங்க சொல்கிறார், தினம் நிறைய நடக்க சொல்கிறார். வலிகளை மருந்து மாத்திரைகள் இல்லாமல் கூடுமானவரை கடக்க முயல்கிறேன்.

      இது போன ஆண்டு போனது. இப்போது பசுமை நடை 100 க்கு பின் பயணம் போக வில்லை.

      உங்கள் அன்பான வேண்டு கோளுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
      இப்போது கணுக்கால் வலி சரியாகி விட்டது. உடல் நலத்தை கவனித்துக் கொள்கிறேன்.
      களக்கோடி சாஸ்தா நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி. ஐயன் அருளும், துணையும் எப்போதும் வேண்டும் நமக்கு.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    புளியங்குளம் வேறு, கொங்கர் புளியங்குளம் வேறா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

      புளியங்குளம் நிறைய இடங்களில் இருக்கே!
      இந்த இடத்திற்கு கொங்கர் புளியங்குளம் என்று பேர்.

      நீக்கு
  5. //மாயன் என்னும் நாட்டுப்புறத் தெய்வத்திற்குக் கோயில் உள்ளது.//

    இந்த மாயனுக்கும் மயனுக்கும் (மயன் காலண்டர்) தொடர்பு இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாயனுக்கும் மயனுக்கும் (மயன் காலண்டர்) தொடர்பு இருக்குமோ?//

      தெரியவில்லை ஸ்ரீராம்.
      இந்த கோவில் பக்கம் கல்வெட்டு இருந்தது அதை படம் எடுத்தேன் தேடினேன் காணவில்லை, விஷயம் தெரிந்தால் சொல்கிறேன்.

      நீக்கு
  6. சறுக்குமளவு சரிவா? அம்மாடி.. கவனம்.

    படங்கள் அழகு. அந்த இடங்களுக்கு வழிகாட்டி இல்லாமல் போவது வீணோ? சும்மா பார்த்து வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சறுக்குமளவு சரிவு இருக்கு ஆனால் மண்ணும் மரமும் இருக்கு பயம் இல்லை.
      நான் சரியான காலணி அணியவில்லை.
      வழிகாட்டி இல்லாமல் போவது கஷ்டம் தான். கூட்டமாய் போக வேண்டிய இடம்.
      பசுமை நடை இல்லாமல் நாங்கள் தனியாக போய் இருக்க மாட்டோம்.

      பார்த்து வரலாம். வெயிலுக்கு முன் போய் வர வேண்டும் மேலே வெயில் வந்து விட்டால் கஷ்டம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. சித்தன்னவாசலைத் தங்கள் படங்கள் நினைவூட்டுகின்றன
    படங்களம் பகிர்வும் அருமை
    ஒருமுறையேனும் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      சித்தன்ன வாசல் போல் தான் இருக்கும் போகும் வழி.
      பார்க்க வேண்டிய இடம் தான். நீங்கள் நிறை நண்பர்களுடன் சென்று பார்த்து வாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      கீழடி பதிவுக்கு உங்களை எதிர்பார்த்தேன்.

      நீக்கு
  8. அன்பு கோமதி இனிய காலை வணக்கம்.
    படங்களைப் பார்த்தேன் மா.மிக மிக அழகு. மீண்டும் வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      படங்களை பார்த்தது கருத்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி.
      வாங்க வாங்க மெதுவாய்.

      நீக்கு
  9. தமிழகத்தில் வரலாற்றார்வலர்கள் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று. நான் இதுவரை பார்க்கவில்லை. பார்க்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.

      நீங்கள் சொல்வது போல் வரலாற்றார்வலர்களுக்கு இந்த இடங்கள் பிடித்த இடங்களே!
      பார்க்க வேண்டிய இடங்கள் தான்.

      கீழடி அடுத்த கட்ட ஆய்வு ஆரம்பித்து விட்டார்கள் அதைப் பார்க்க வருவீர்கள்தானே அப்போது இதையும் பார்த்து விடுங்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  10. செல்ல வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பார்க்க வேண்டிய இடம் தான் பார்க்கலாம் தனபாலன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. உடலுக்கு முடியும் என்றுதோன்றினால் போய்விட வேண்டியதுதான் இல்லாவிட்டால் பிறகு வருத்தப்பட நேரலாம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் சார்.
      சார் போய் வந்து படங்கள் காட்டிய போது நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டேன் என்று தான் நினைத்தேன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. ரொம்ப அருமையான இடமாக இருக்கிறது மா..ஆனால் பராமரிப்பு வருத்தமே ..

    சித்தன்னவாசல் போலவே இருக்கு படுக்கைகளும் , மலை மற்றும் பாதைகளும் ..ஆனால் அங்கு நல்ல பராமரிப்பு என்றே சொல்ல வேண்டும்


    கால் வலியுடன் எப்படியோ சென்றே பார்த்து வந்து விட்டீர்கள் ..மகிழ்ச்சி

    நேற்று என் தளத்திலும் சமணர் கோவில் இங்கும் ..என்ன ஒரு ஒற்றுமை


    படங்கள் எல்லாம் அழகு ...அடுத்த பதிவை படிக்க வெகு ஆவல் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
      அருமையான இடம் தான், பராமரிப்பு குறைவு. நீங்கள் சொல்வது போல் சித்தன்னவாசலை பராமரிப்பது போல் இதையும் நன்கு பராமரிக்கலாம். கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம்.

      நானும் உங்கள் சமண பள்ளியை பார்த்து ரசித்தேன். ஒற்றுமையை கண்டு நானும் வியந்தேன் அனு.
      அடுத்த பதிவு விரைவில் போட முயல்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. படங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது அம்மா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
      பார்க்கலாம் குமார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடம் .உங்கள் சிரமமான பயணத்தில் நாங்கள் கண்டு களித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
      வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இடம் தான்.
      பயணம் கொஞ்சம் எனக்கு சிரமம் கால்வலியால்.
      மற்றபடி சிறிய வயது உடையவர்கள் கஷ்டம் இல்லாமல் பார்க்கலாம்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. படங்களைப் பார்த்தேன். ஈ காக்காய் இல்லாத அத்வான பூமி மாதிரி இருக்கிறது.
    மேலே ஏறிப் போய் வந்தீர்களே?.. என்ன தெரிந்து கொண்டீர்கள்?.. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் இந்தப் பிரதேசம் பற்றிய குறிப்புகள் உண்டா?
    சமண குடவரைக் கோயில் காணப்பட்டதா?
    பேராசிரியர் என்று சொல்கிறீர்களே! இவர்கள் தொல்பொருள் துறை சார்ந்தவர்களா? மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர்களா?
    அடுத்த பதிவில் அதையெல்லாம் பற்றிக் குறிப்பிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      மேலே ஏறி போய் வந்தது பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன் சார், அங்கு உள்ள கல்வெட்டைப் பற்றி, அந்த மலையை அந்த பகுதி எப்படி அழைத்தார்கள் என்பதை பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன். மேலே உள்ள கையேட்டை படித்து பாருங்கள் சார்.

      மேலே நடந்த சமணபள்ளியில் பேராசிரியர் சுந்தர் காளி அவர்கள் பேசியதை குறிபிட்டு இருக்கிறேன் சார். மேலே பார்த்த சமணபடுக்கைகள் படம் போட்டு இருக்கிறேன் சார்
      .
      50க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இம் மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகை தளத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதை செய்து கொடுத்தவர்கள் பெயர்கள் பாறையின் முகப்பில் வெட்டபட்டுள்ளது இவை கி.மு இரண்டாம் நூர்றாண்டைச் சார்ந்த தமிழிக் கல்வெட்டுக்கள் சார்.
      கையேட்டை படிக்கவில்லை போலும் நீங்கள். அதில் இருப்பதால் திரும்ப அடிக்கவில்லை.
      சிரமப் படாமல் படித்து விடுங்கள் என்று கேட்டு கொண்டு உள்ளேன் சார்.
      படங்களுக்கு கீழ் எழுதி இருக்கிறேன் சார்.

      பேராசிரியர்கள் தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் தான். எங்கு பணியாற்றினார் என்று தெரியாது.

      சமண குடவரைக் கோயில் காணப்பட்டதா?//

      சமண கற்படுக்கைகள் காணபட்ட இடம் இந்த பதிவில் இருக்கிறது.
      அடுத்த பதிவில்குகைதளத்திற்கு வெளியே உள்ள பாறையில் மகாவீரரின் சிற்பம், செதுக்கப்பட்டது, அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுக் வரும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
    2. விளக்கங்களுக்கு நன்றி, கோமதிம்மா. குறைவுபட்ட பார்வைத் திறன் உடையவன் ஆகையால் சிறு எழுத்துக்கள் கொண்ட கையேட்டைப் படிக்கவில்லை. பார்த்து (அமெரிக்க சுற்றுலா தலங்களில் இருப்பது போல இருக்கிறதே என்று) மகிழ்ந்ததோடு சரி. இப்பொழுது பெரிது பண்ணி படித்து விட்டேன். நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      கையேட்டை பெரிது செய்து படித்து மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      அமெரிக்கா சுற்றுலா தலங்களில் இருப்பது போல் இருக்கிறது, ஆனால் அங்கு போல் பாராமரிப்பு இங்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  16. அருமையான பயணம். இத்தகைய பயணங்களுக்குச் செல்வது மிக அபூர்வமாகவே வாய்க்கும். மேலே போக முடியவில்லையே என நீங்கள் வருந்தினாலும் பார்த்தவரைக்கும் அருமையான இடங்கள் இல்லையா? அதுவும் அந்த ஏணிப்படிகளில் ஏறி இருக்கீங்களே கால்வலியோடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      இந்த மாதிரி பயணங்கள் இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.
      மேலே போக முடியவில்லைஎன்றாலும் நீங்கள் சொல்வது போல் பார்த்தவரை நன்றாக இருந்தது உண்மை.

      ஏணிப்படிகள் மேலேயும், பார்க்காமல், பின்னால் திரும்பியும் பார்க்காமல் படி மேல் மட்டும் கவனம் வைத்து ஏறினேன். இவ்வளவு ஏறவேண்டும் என்பது தெரியாது, போன பின்புதான் தெரியும்.

      நீக்கு
  17. எனக்கு இது நவபிருந்தாவனத்தையும், அங்கே நாங்கள் போன கிஷ்கிந்தாவையும் வாலியைக் கொன்ற இடத்தையும் நினைவூட்டியது. இம்மாதிரித் தான் மலைப்பாறைக்குள் குகைகள், படுக்கைகள். அவ்வளவு வெயிலிலும் அந்த குகைக்குள் ஏசி போட்டது போன்ற குளிர்ச்சி! அங்கே தான் மழைக்காலத்தில் ராமனும் லக்ஷ்மணனும் தங்கி இருந்தார்களாம். பாறைகளின் மறுபக்கம் போனால் வாலி குகை! இங்கிருந்து அந்த குகை தெரியும். வாலி குகையிலிருந்து இந்த இடம் தெரியாது! ஒரு காலத்தில் நானும் இப்படி எல்லாம் ஏறி இறங்கினேன் என்பதை நினைத்தால் இப்போது மலைப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நவபிருந்தாவனம், கிஷ்கிந்தா அனுபவங்களை பகிர்ந்து கொண்டது அருமை.
      மலைப்பாறைகள், குகைகள் படுக்கைகள் உள்ள இடம் எல்லாம் குளிர்ச்சிதான்.

      அது தான் அந்தக் காலத்தில் முனிவர்கள், சித்தர்கள் எல்லாம் குகைகளில் தவம் செய்து இருக்கிறார்கள்.

      ராமரும் லக்ஷ்மணனும் மழைக்காலத்தில் தங்கி இருந்த குகை, வாலி குகை எல்லாம் உங்கள் மனதில் வந்து போனது மகிழ்ச்சி.

      முன்பு எவ்வளவு நடந்தோம், இப்போது கொஞ்ச தூரம் நடக்க முடியவில்லை, அதுவும் வெறுங்கை வீசி கொண்டே ! சாமான்களுடன் சுத்தமாய் நடக்க முடியவில்லை.

      நீக்கு
  18. படங்கள், விளக்கங்கள் கையேடுக் குறிப்பு எல்லாமும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்து விளக்கங்களையும், கையேடுக் குறிப்புகளையும் படித்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  19. நானும் பதிவுகள் போடுவதில் கொஞ்சம் இல்லை நிறையவே சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. கொஞ்சம் யோசித்தே போடுகிறேன்/போடவேண்டும். ட்ராஃப்ட் மோடில் சில கிடந்தாலும் அவற்றைப் பதிவாக்கும் முன்னர் யோசிக்க வேண்டி இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளுக்கு படங்களை எடுத்து குறிப்புகளை போடுவது கொஞ்சம் கஷ்டம் என்றால் வெகு நேரம் உடகார்ந்து கொள்வது முதுகுவலி, கைவலி , கால்வலி வருகிறது.
      போடுங்கள் முடிந்த போது எல்லாம். நீங்கள் இரண்டு, மூன்று தளங்களை வேறு நிர்வாகம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  20. பாராட்டுகள். கணுக்காலில் கட்டுடன் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் ஏறி இறங்கி விட்டீர்கள். குழுவாகச் செல்லும்போது ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதும் தைரியத்தைத் தரும். படங்களும் பகிர்வும் நன்று. முதல் படத்தில் இருக்கும் குறிப்பேட்டில் இருந்து விளக்கங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி. அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      ஆமாம், இந்த குழுவில் சென்றது மிகவும் நன்றாக இருந்தது.
      கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை நன்றாக துடைத்து எழுத்து தெரிய சாக்பீஸால் அதன் மீது எழுதி எல்லோரும் அமர அந்த இடத்தை சுத்தம் செய்து என்று அவர்கள் பணி மகத்தானது. அவர்கள் முன்னே போய் அந்த இடத்தின் சூழ்நிலையை அறிந்து நம்மை அழைத்து செல்வார்கள்.

      அந்த இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள தொல்லியல்துறை ஆசிரியர்களை பேச வைத்து அந்த இடத்தை பற்றிய குறிப்புகளை கொடுத்து என்று அவர்கள் சேவை அதிகம் தான்.

      இந்த பயணத்தில் நிறைய உதவி செய்தார்கள் எனக்கு. கைபிடித்து அழைத்து வந்தார்கள் இரண்டு பெண்கள். அம்மா இப்படி வாங்க, கவனம், பார்த்து என்று பத்திரமாய் கீழே அழைத்து வந்தார்கள். தைரியமாய் என்னை அவர்களிடம் விட்டு விட்டு சார் மேலே இருக்கும் இடத்தை பார்த்து வர போனார்கள்.

      மீண்டும் அவர்கள் பசுமை நடை பயணம் தொடர்ந்தால் மகிழ்ச்சி.

      குறிப்பேட்டை படித்து விளக்கங்களை தெரிந்து கொண்டது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கும், காத்துஇருப்புக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  21. கோமதிக்கா வணக்கம் அப்போதே வாசுத்துவிட்டேன்.கரண்ட் போய்விட்டது.இன்னும் வரலை இப்ப மொபைலில் போடுகிறேன்....

    படங்கள் குறிப்புகள் அனைத்தும் வெகு அருமை. உங்கள் கால் வலியோடு போய் வந்திருக்கீங்களே அதுவே சிறப்புதான்....

    நீங்கள் விழாமல் பிடித்துக்கொண்டாரே...பேராசிரியர்.... மீரா அவணபா சொல்லி உங்க கால் வலி குணம் ஆனது சொன்ன நினைவு இருக்கிறது அக்கா...

    படங்கள் ரொம்ப அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் காலம் என்பதால் மின்சாரம் அடிக்கடி தடை படுகிறதா?
      படங்கள் , குறிப்புகளை பாராட்டியதற்கு நன்றி.
      விழாமல் காப்பாற்றினார் இல்லையென்றால் கை காலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கும்.
      மீராவால் தான் இப்போது கால் வலி குண்மடைந்து வருகிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  22. மலை அழகாக இருக்கிறது அக்கா.பாறைகள் எல்லாமே. மலைக்கு மேல் செல்ல முடியாதது வருத்தமாக இருக்கும் என்றாலும் போவது கடினம் என்றால் என்ன செய்ய முடியும் இல்லையா...உங்களுக்கு கால் வலி இல்லை என்றால் போயிருப்பீங்களே......

    நானும் பல பதிவுகள், கதைகள் போடாமல் பாதி எழுதி வைத்திருக்கேன்...ஏனோ ஒரு சுணக்கம்.முடிக்கவும் இல்லாமல்...எங்கள் தளம் தூங்குகிறது ஹாஹாஹா...முயற்சி செய்ய வேண்டும் ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்.
      ஆமாம், மலை மேல் செல்ல முடியவில்லை என்று வருத்தம் தான்.
      என் கண்வர் போய் வந்து விட்டதால் நான் பார்த்த மாதிரி ஆச்சு.
      இன்று அடுத்த பதிவு போட்டு விட்டேன்.
      உங்களுக்கு இப்போது வேறு பணி வேறு வந்து விட்டது.
      கதை, சமையல் குறிப்பு என்று எங்கள் ப்ளாக்கில் கலக்கி விட்டீர்கள்.
      முடிந்த போது போடுங்கள்.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. மலைகளும் பாறைகளும் அழகு. அதன் பிரமாண்டங்களும் மிக அழகு. பசுமைகள் அழகாக இருக்கின்றன. அழகாக இடங்களையெல்லாம் படமெடுத்து விவரித்து கூறியுள்ளீர்கள். இந்த மாதிரி இடங்களை பார்த்து வர எனக்கும் ஆர்வம் பிறக்கிறது. உங்கள் பதிவுகளை பார்த்து சந்தோஷபட்டுக் கொள்கிறேன். ஒருதடவை திருவண்ணாமலையில் உறவுகளுடன் மலையேறி ரமணாஸ்ரமம் சென்று வந்தது நினைவுக்கு வந்தது. அப்போது 30 வயதுக்குள் என நினைக்கறேன்.இப்போது போக இயலுமா எனத் தெரியவில்லை.

    முதலில் தந்துள்ள பதிவு கையேடு படித்து விபரங்கள் அறிந்து கொண்டேன். நீங்கள் சொன்ன மாதிரி இந்த இடங்களை நன்கு பராமரித்து காசு பெற்று கொண்டு சுற்றிப்பார்க்க அனுமதிக்கலாம்.

    பசுமை நடை இயக்கத்தில் நீங்கள் இருந்ததினால் அவர்கள் மூலம் இந்த இடங்களை காணும் பேறு உங்களுக்கும், உங்களால், எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. தாங்கள் கால்வலியை பொருட்படுத்தாது இவ்வளவு தூரம் மேலேறி சென்று வந்ததே பெரிது. ஏறி, இறங்கி வர உதவி செய்தவர்களுக்கு நன்றி. அழகாக மனதில் படியும்படி படங்களும், அதன் விபரங்களும் தந்தமைக்கு தங்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் தம்பி மகள் காயங்கள் நன்கு ஆறி நலமுடன் இருக்கிறாரா?

    எனக்கு ஒருவாரமாக சற்று உடல், மனநலமில்லாததால்,வலையுலகம் வர இயலவில்லை. இனிதான் அனைவரின் பதிவுகளுக்கும் செல்ல வேண்டும்.தங்களின் மற்றொரு பதிவையும் (பகுதி2) இப்போதுதான் படித்தேன்.அதற்கும் நாளை கருத்துரை இடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      உங்கள் திருவண்ணாமலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      //முதலில் தந்துள்ள பதிவு கையேடு படித்து விபரங்கள் அறிந்து கொண்டேன். நீங்கள் சொன்ன மாதிரி இந்த இடங்களை நன்கு பராமரித்து காசு பெற்று கொண்டு சுற்றிப்பார்க்க அனுமதிக்கலாம்.//

      நீங்கள் கையேட்டை படித்தது மகிழ்ச்சி.
      சுற்றுலாத்துறையும், தொல்லியல் துறையும் சேர்ந்து இந்த இடங்களை நன்கு பராமரிக்கலாம் என்பது என் ஆசை. வெளி நாடுகளில் நன்கு பராமரிக்கிறார்கள்.
      இங்கு வரலாற்று சின்னங்களை பாழ் அடைய விட்டு விடுகிறோம். அதுதான் கவலை.

      தம்பி மகளுக்கு இரண்டு முறை கட்டுகள் மாற்றப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு வாரம் ஒயுவு எடுக்க வேண்டும். கல்லூரிக்கு மருத்துவ விடுமுறை எடுத்து இருக்கிறாள். தம்பி மகள் உடல் நலம் விசாரிப்புக்கு நன்றி.

      உங்கள் உடல் நலம், மனநலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரிடமும் இணைந்து இருங்கள். மனநலத்தை நாம்தான் உற்சாகபடுத்தி கொள்ள வேண்டும், பாடல் கேட்பது, புத்தங்கள் வாசிப்பது, இறைவன் நாமங்களை சொல்வது மூலம், மற்றும் வலைத்தளங்களை வாசித்து கருத்து அளிப்பது என்று இப்போது சேர்த்துக் கொள்கிறேன்.

      மெதுவாய் நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவுக்கு கருத்து போடலாம்.
      உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் தம்பி மகள் நலம் பெற்று வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      உடனடியாக தந்த தங்களுடைய ஆறுதலான பதில் என் மனதுக்கு தெம்பை தருகிறது. மிக்க நன்றி. உடல்நிலையும்(ஜுரம்) தற்சமயம் பரவாயில்லை. இனி அனைத்துப் பதிவுகளுக்கும் வந்து படிக்க ஆரம்பிக்கிறேன். என் மனமாற்றத்திற்கு இந்த பதிவுலகத்திற்கு வந்து உங்கள் அனைவரிடமும் பேசுவது போல் பதிவுகளை படிப்பதும், பதில்கள் கொடுப்பதுமாக இருப்பதுதான் நன்றாக உள்ளது. அதனால்தான் தாமதமானாலும் தவறாது வந்து செல்கிறேன். தங்களின் பொறுமையாக பதில்கள் மனச்சோர்வை அகற்றி மிகுந்த மகிழ்வை தருகிறது. நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. கமலா, ஒருவருக்கு ஒருவர் அன்பான உரையாடலில் தான் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.

    வாருங்கள் முடிந்த போது எப்போது வேண்டுமென்றாலும் படித்து கருத்து சொல்லுங்கள்.
    கால நிலை மாற்றங்களில் உடல் துன்பம் ஏற்படும். சுக்கு,மல்லி காப்பி குடிங்க.
    காய்ச்சல் குணமாகிவிடும். குளிக்கும் போது டெட்டால் ஒரு சொட்டு விட்டு தினம் குளிங்க.

    மனசோர்வை போர்வையை உதறவது போல் உதறுங்கள், நமக்கு நாமேதான் உற்சாகபடுத்திக் கொள்ள வேண்டும். என் பதில்கள் உங்கள் மனச்சோர்வை அகற்றியது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  25. இப்போதுதான் இதனைப் படித்தேன்.

    இந்த இடத்தையும், கல்வெட்டு எழுத்துக்களையும் பாதுகாத்து வைப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    எப்படித்தான் அவ்வளவுதூரம் ஏறிச் சென்றீர்களோ. ரொம்பப் பேர் வந்திருப்பதுபோலத் தெரிகிறது. இளையோர்கள் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      இந்த இடத்தை பாதுகாத்து வைத்து இருக்கும் தொல்லியல் துறையை பாராட்ட வேண்டும்.
      இந்த மாதிரி இடங்களை பார்க்க அழைத்து போகும் பசுமை நடைக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

      மேலேயும் எல்லோரும் ஊக்கபடுத்தி இருந்தால் ஏறி பார்த்து இருப்பேன்.
      என் காலில் கட்டைப் பார்த்து எல்லோரும் பரிவுடன் இத்துடன் போதும் அம்மா இறங்கி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதால் இறங்கி விட்டேன்.

      நிறைய பேர் வந்து இருந்தார்கள். இளையோர் , முதியோர், குழந்தைகள் உண்டு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு