வெள்ளி, 26 ஜூலை, 2019

அம்பா கருணைபுரிவாய்


குழந்தைகளுக்குப் பிள்ளையாரும், முருகனும்  சிறு வயதில் மிகவும் பிடிக்கும்.  சின்ன வயதில் குழந்தைகளை நவராத்திரியில் பாடச் சொன்னால் இந்தப் பாடலை ஒரு சில குழந்தைகள் கண்டிப்பாய்ப் பாடும். இப்போது புதுவகையான இசை அமைப்பில் இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது கேட்டுத்தான் பாருங்களேன். தைப் பூசத்திற்குப் பழனிக்குப் பாதயாத்திரையாகப் போவோர் இந்தப் பாடலைப் பாடி , ஆடிச் செல்வார்கள்.


சகோதரர் துரைசெல்வராஜூ அவர்கள்  தன் வெள்ளி மலர் பதிவில் முருகன்  கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட கதையைப் பகிர்ந்து இருந்தார். நானும் ஸ்ரீராமும் இந்தப் பாடலை நினைவு படுத்திக் கொண்டோம். ஆடிக் கிருத்திகைச் சிறப்பாய் முருகன் பாடல். 



(சுட்டியை பயன்படுத்தி பாட்டை கேட்கலாம்.)
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்  பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அதை கேட்க முடியவில்லை. யூ-டியூப் போய் கேட்கலாம்.

இவரும் நன்றாக பாடி இருக்கிறார்.

இந்தப் பாடல் திருவெண்காட்டில் நான் 11 வது படிக்கும் போது  தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோவில் செல்ல வேண்டும் அங்கு பிரம்மவித்யாம்பிகை முன் பாட வேண்டும் இந்தப் பாடலை.
பாட்டு டீச்சர் என்று தனியாக இல்லை அந்த பள்ளியில். அந்த ஆண்டு.
உடற்கல்வி ஆசிரியர் இந்திராணி அவர்களே சொல்லித் தந்தார்கள்.
பள்ளியிலிருந்து வரிசையாகக் கோவிலுக்குச் செல்வோம். அம்மன் சன்னதியில் இந்தப் பாட்டும், சுவாமி சன்னதியில்  குடம்எடுத்து என்று ஆரம்பிக்கும் சுந்தரர் தேவாரம் பாடுவோம்.

குடம்எடுத்து நீரும்பூவும்
கொண்டு தொண்டர் ஏவல்செய்ய
நடம்எடுத்தொன்றாடிப்பாடி
நல்குவீர்நீர் புல்கும்வண்ணம்
வடம்எடுத்தகொங்கைமாதோர்
பாகமாக வார்கடல்வாய்
விடம்மிடற்றில் வைத்ததென்னே
வேலைசூழ்வெண்காடனீரே

சுவாமி சுவேதாரணியேசுவரர் - அம்மன் பிரம்ம வித்தியாம்பிகை.
இந்தப் பாடலைப் பாடும் போது கேட்கும் போதேல்லாம் பள்ளி நினைவுகள், திருவெண்காடு கோவில் என்று மனக்கண்ணில் விரியும் காட்சிகளாக.

//லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் "நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி.." என்று குறிப்பிடப்படுவது நினைவு கூரத்தக்கது. //

இன்று பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் பதிவில் சொன்ன லக்ஷ்மி அஷ்டோத்திரப் பாடலைக் கேட்டதும் சிறு வயது முதல் இந்தப் பாடலைப் பாடி வருவதும் அதை   விரதங்களும் உடல் நலமும்  என்ற பதிவில் குறிப்பிட்டதும் நினைவு வந்தது.
  
//வெள்ளிக் கிழமை பூஜை. சர்க்கரைப் பொங்கல் செய்து தருவார்கள்  அம்மா, அதை விளக்கு முன் வைத்து விட்டு அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லி,’விளக்கு போற்றி’ சொல்லி விட்டு பூஜை முடிந்தபின் தான் காலை உணவு.//

ஆடி மாதம் அனைவரும் சிறப்பாக வீட்டில், கோவிலில் வழிபாடு செய்து வருகிறார்கள்.  எல்லோருக்கும் இறைவனின் அருள் கிடைத்து வளமோடும், நலமோடும் வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

57 கருத்துகள்:

  1. மூன்றாவது காணொளி இயக்கமில்லை சகோ மற்ற எல்லா பாடல்களும் கேட்டேன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
      மூன்றாவது காணொளி இயங்கவில்லை என்றுதான் அதன் சுட்டி கொடுத்து இருக்கிறேன்.
      அதை பயன்படுத்தி பாடலை கேட்கலாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. சீர்காழி பாடலையும் கேட்டேன் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர்காழி அவர்களின் பாடலை கேட்டது அறிந்து மகிழ்ச்சி ஜி.

      நீக்கு
  3. அருமையான பாடல்கள்...

    முதல் பாடல் முருகனைப் போலவே உள்ளது... பாடியவரின் குரல் மனதிற்கு இதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      முதல் பாடலில் முருனை கண்டீர்களா? மகிழ்ச்சி.

      பாடல் மனதிற்கு இதம் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. விபரங்கள் மிக அருமை! திருவெண்காடு நான் பிறந்த ஊர்! உங்களுக்கும் அது தான் சொந்த ஊரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      சொந்த ஊர் திருவெண்காடு இல்லை.
      எனக்கு சொந்தஊர் திருநெல்வேலி. பிறந்தது திருவனந்தபுரம்.
      திருமணமாகி வந்த ஊர் கோவை. என் கணவர் வேலைபார்த்த ஊர் திருவெண்காடு அருகில் உள்ள மேலையூர். திருவெண்காட்டில் இருந்தோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. இனிய நினைவுகளும் ...அருமையான பாடல்களும் ..

    இறை பாடல்களில் புதுமை..எளிதில் மனதில் பதிவது இல்லை மா..

    என்றும் இனியவை பழைய பாடல்களே ...

    சுவையான பதிவு மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      இறை பாடல்களில் பழைய பாடல் நன்றாக இருக்கும் ஆனால் அது கிடைக்கவில்லை. குழந்தைகள் பாடியது இனிமையாக இருந்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. அம்பா கருணை புரிவாள் என்ற தலைப்பைப் படித்ததுமே எனக்கு அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. நான் கேட்டிருப்பது வேறு மாதிரி பாடுவதை (என் அம்மா சின்ன வயதில் பாடியிருப்பார்களோ?) சீர்காழியும் அந்தப் பெண்ணும் ஒரே மாதிரித்தான் பாடுகிறார்கள் ஆனால் என் நினைவில் இருப்பது வேறு விதமாக.

    அம்பாளை நினைத்தான் (அதிலும் திருவானைக்கா) எம்.கே தியாகராஜ பாகவதர் பாடிய, அம்பா..மனம் கனிந்து உனது கடைக் கண் பார் என்ற பாடல்தான். அடுத்த முறை அதனைக் கேட்டுப்பாருங்கள்.

    அந்தப் பாடலை நான் பாடிப்பாடித்தான் (மனதில் அவளை நினைத்து), அவள் எனக்கு வாழ்க்கையில் நல்ல வழியைக் காட்டி வெளிநாட்டு வேலைக்கெல்லாம் வழி வகுத்துத் தந்தாள் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      சீர்காழி பாடிய ராகத்தில் தான் டீச்சர் சொல்லி தந்தார்கள்.
      எம்.கே தியாகராஜ பாகவதர் பாடிய அம்பா மனம் கனிந்து என்ற பாபநாசசிவன் அவர்களின் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.நிறைய தடவை கேட்டு இருக்கிறேன்.
      எல்லோரையும் கடைகண்ணால் பார்த்து அருள் தரட்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    அழகான பகிர்வு. ஆடி கிருத்திகை முருகன் தரிசனங்கள், பக்திப் பாடல்களும், கேட்டேன் மிகவும் நன்றாக உள்ளது. தங்கள் பள்ளி நாட்கள் தங்களுக்கு நினைவு வந்ததைப் போன்று அந்த பள்ளி போட்டோ பார்த்ததும், எனக்கும் என் பள்ளித் தோழியர்கள் நினைவு வந்தது. இப்போது அவர்கள் அனைவரும் எப்படியிருக்கிறார்களோ என நினைத்துக் கொண்டேன். தாங்களாவது மீண்டும் தங்கள் பள்ளி தோழமைகளை சந்தித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    தங்களது பள்ளி நினைவுகள் அருமை. அன்னையின் மீது பாடப்பட்ட பாட்டு(அம்பா, ஜகதம்பா) மிகவும் நன்றாக இருந்தது. கேட்டதும், நானும் பள்ளிப்பருவத்தில் பாடியிருக்கிறேன் என நினைவுக்கு வந்தது. இன்று ஆடி கிருத்திகைக்கு சிறப்பு பதிவாக இட்டு,பக்தி மார்க்கத்தில் திளைக்கச் செய்து விட்டீர்கள். கூடவே மலரும் நினைவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      உங்களுக்கும் உங்கள் பள்ளி பருவம் நினைவு வந்து விட்டதா?
      எனக்கும் என்னுடன் படித்த அனைவரையும் பார்க்க ஆவல். மூன்று பேருடன் தான் மாயவரத்தில் இருக்கும் போது வரை தொடர்பில் இருந்தேன்.
      ஒருவர் மகபேறு மருத்துவர், மற்ற இருவர் சென்னையில் இருந்தாலும் மாயவரம் வரும் போது பார்த்து பேசிக் கொள்வோம்.

      சக பதிவர்களின் பதிவு ஏற்படுத்திய தாக்கம் பகிர வைத்து விட்டது.
      முருகன் பாடல்கள், அம்மன் பாடல்கள் பிடித்தது எண்ணில் அடங்காது.
      சிறு வயது நினைவு பாடல்கள் மட்டும் இந்த பதிவில்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  8. ஆடிக்கிருத்திகைக்கு அருமையாக அம்பாளையும், முருகனையும் கொண்டு வந்து விட்டீர்கள். பாடல்கள் அனைத்தும் இனிமை.
    அதுவும் சீர்காழியின் குரல் அமிர்தம்.

    நெல்லை சொல்லும் பாடல் அந்தக்காலம். அப்பா பாடுவார்.
    கணீரென்று இருக்கும்.
    தைப்பூசத்துக்கு நீங்களும் பாதயாத்திரை போய் இருக்கிறீர்களா.
    அருமை.
    நம் கவினயா மீனா நினைவுக்கு வந்தார்.
    அவர் சொன்ன பாதயாத்திரையும் நினைவுக்கு வந்தது.திருவெண்காடு
    நீங்களும் சாரும் இருந்த இடம் என்று நினைத்தேன். அங்கேயா படித்தீர்கள்.
    அற்புதம் ஞானபூமி.
    அதுதான் உங்களுக்கும் இவ்வளவு விவரம் தெரிந்திருக்கிறது.
    வாழ்க வளமுடன் கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஆடிக்கிருத்திகைக்கு முருகனும், ஆடி வெள்ளிக்கு அம்மாவும் பாட்டை பகிர வைத்து விட்டார்கள்.

      நெல்லை சொல்லும் பாடல் அந்தக் காலத்தில் ஒலிக்காத வீடு இருக்காது.
      அப்பா அந்த பாட்டை கணீரென்று பாடுவார்கள் என்று கேட்டு மகிழ்ச்சி.

      தை பூசத்திற்கு கால்நடையாக போகிறவர்கள் கொடுத்த பாட்டு புத்தகத்தில் இந்த பாட்டு இருக்கிறது, நடந்து போகிறவர்கள் இந்த பாட்டை பாடியும் ஆடியும் போவதை பார்த்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன் அக்கா. என் தம்பி, தங்கை எல்லாம் மதுரையிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை போய் இருக்கிறார்கள். நான் போனது இல்லை.

      நானும் சாரும் திருமணமாகி தனி குடித்தனம் இருந்த ஊர். திருமணத்திற்கு பிறகுதான் நான் பள்ளி படிப்பை முடித்தேன், சொல்லி இருக்கிறேன் முன்பு. இளமை பருவம் என்ற தொடர் பதிவில் நீங்கள் அழைத்த போது .

      அற்புதமான ஊர்தான் அக்கா 7 வருடங்கள் இருந்தோம். அப்புறம் மாயவரம் வந்து விட்டோம்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. முதல் பாடல் வேறொரு பாடலை எனக்கு நினைவுபடுத்துகிறது. அது எது என்று தெரியவில்லை. என் சின்னவன் கண்டுபிடித்து விடுவான்.

    காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      உங்களுக்கு வேறொரு பாடல் நினைவுக்கு வருதா?
      உங்கள் இசை ஆர்வம் போல் உங்கள் சின்னமகனுக்கும் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை.

      காலை வணக்கத்திற்கு நன்றி.

      நீக்கு
  10. ஆறு முகமான - என்ன ஒரு இனிமையான பாடல்... நேற்றும் கேட்டேன்... இன்றும் ஒருமுறை கேட்கவேண்டும். முதல் பாடல் முடியட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இந்த பாடல் நேற்று நினைவுக்கு வந்து சொன்னதால்தான் இந்த பகிர்வு.
      கேட்டு இருப்பீர்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

      நீக்கு
  11. பள்ளிக்கால நினைவாய் அந்தப்புகைப்படத்தை பத்திரமாக வைத்திருக்கிறீர்களே... அட... கீழேயே பெயர்களும் கொடுத்திருக்கிறார்கள்! திருவெண்காடு கணவர் வேலைபார்த்த ஊரா? அப்போது போட்டோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிக்கால நினைவாய் சிறு வயதில் வருடா வருடம் எடுக்கும் படமும் வாங்கி விடுவேன்.அதெல்லாம் அம்மாவீட்டில் இருந்தது வீட்டை மாற்றி கட்டும் போது எங்கு போட்டார்கள் என்று தெரியவில்லை. திருவெண்காடு அருகில் மேலையூர் என்ற ஊரில் உள்ள கல்லூரியில் வேலை பார்த்தார்கள். நாங்கள் திருவெண்காட்டில் இருந்தோம்.
      திருமணத்திற்கு பின் படித்த கதை நிறைய தடவை சொல்லி இருக்கிறேன். மறந்து விட்டீர்கள் போலும்.

      நீக்கு
  12. ஆடி மாதம். வரிசையாக பண்டிகைகள் வரும் காலம். கொண்டாட்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி மாதம் தொடக்கம் முதல் விழாக்கள் வரும் காலம் தான். பண்டிகைகள் இனி ஒவ்வொன்றாக வரும். இறைவன் அருளால் எல்லோரும் மகிழ்ச்சியாக அனைத்து விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும்.

      நீக்கு
  13. சின்னவன் அந்தப் பாடலைக் கேட்டால் 'சுந்தரி நீயும்' பாடல்நினைவுக்கு வருகிறதோ என்று சந்தேகப்பட்டான். எனக்கு வேறொரு பாடல் தோன்றியது. .. சின்னவன் கண்டுபிடித்து விட்டான். "என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டுபிடித்து விட்டாரா சின்னவர்?
      வாழ்த்துக்கள்.
      உங்களுக்கு என்ன பாடல் தோன்றியது?

      நீக்கு
  14. அதைத்தவிர ஒரு பெங்களூரு ரமணி அம்மாள் பாடல் நினைவுக்கு வருகிறது. அதுதான் என் நினைவுக்கு வரும் பாடல். "உனக்கு அநந்த கோடி நமஸ்காரம்" என்று வரும் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
  15. அலைகடல் ஓரத்திலே எங்கள்
    அன்பான சண்முகனே - நீ
    அலையா மனந் தந்தாய் - உனக்கு
    அனந்த கோடி நமஸ்காரம் - (பச்சைமயில்)

    இந்த பாட்டைதான் பாடி இருக்கிறார் பெங்களூர் ரமணி அம்மாள்.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
    கோவிலுக்கு போய் விட்டு மதியம் வந்தேன், அதனால் தாமதமான மறுமொழி.

    பதிலளிநீக்கு
  16. ஒரு முறை கும்பகோணத்தை சுற்றியிருக்கும் நவகிரக க்ஷேத்திரங்களுக்கு சென்ற பொழுது, மற்ற க்ஷேத்திரங்களை விட திருவெண்காடு மிகவும் பிடித்திருந்தது.அழகான ஊர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்
      திருவெண்காடு அழகான ஊர்.
      கோவில் மிகவும் மனநிறைவைதரும்.
      அந்த ஊரை விட்டுவர மனமில்லாமல் மாயவரம் வந்தோம்.

      நீக்கு
  17. திருவெண்காட்டில் படித்தீர்களா? துர்கா ஸ்டாலினை அறிவீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. என்னுடைய பள்ளி போட்டோவில் வலது பக்கத்தில் இருக்கிறார் (ஓரத்தில் தன் தோழி இருவருக்கு நடுவில் உயரமாய் துர்கா ஸ்டாலின் ) அவர் தோழி ராஜி சீர்காழியில் மகப்பேறு மருத்துவர்.

      நான் 11 வது படிக்கும் போது அவர் 10வது படித்தார்.

      துர்காவின் சகோதரியும் நன்கு தெரியும் அவர் பேர் சாருமதி என்று நினைக்கிறேன். நான் குடியிருந்த வீட்டு இரண்டாவது பெண்ணுடன் அவர் படித்தார்.

      பள்ளி பருவ இளமை கால பதிவில் துர்கா ஸ்டாலின் பற்றி சொல்லி இருக்கிறேன்.
      அவர் அப்பா வைத்தீஸ்வரன் கோவிலில் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைப் பார்த்தார்கள்.அவர்கள் கீழவீதியில் இருந்தார்கள். கோமதி அக்கா என்று என்னை அழைப்பார் நன்றாக தெரியும். நான் சொல்வது அந்த காலத்தில் . இப்போது நினைவில் வைத்து இருப்பாரா என்று தெரியாது.



      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
    2. https://mathysblog.blogspot.com/2010/03/blog-post.html
      வல்லி அக்கா அழைத்த தொடர் பதிவு "இளமை பருவம்"
      இதை படித்து பாருங்கள் அதில் சொல்லி இருப்பேன்
      சகோதரி துர்கா அவர்களை பற்றி. மேலும் சில பிரபலங்கள் இருப்பார்கள்.

      நீக்கு
  18. அம்பா நீ இரங்கா விடில் புகலேது மூன்றாவது காணொளி இயக்கமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      மூன்றாவது காணொளிக்கு சுட்டி கொடுத்து இருக்கிறேன் அதை இயக்கி பாருங்கள் சார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. பாடல்கள் அருமை.

    பள்ளிகாலத்தை நினைவில் கொண்டுவந்துள்ளீர்கள்.படம் அந்தநாள் ஞாபகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது வந்தது மாதேவி.

      நீக்கு
    2. உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி

      நீக்கு
  20. மிக மிக இனிமையானதொரு பாடலைப் பதில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

    வெள்ளி மலரில் ஸ்ரீராம் அவர்கள் இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லியதுமே
    இதனைப் பதிவிட வேண்டும் என்றிருந்தேன்...

    இன்று தங்கள் தளத்தில் கண்டேன்..

    மலரும் நினைவுகளுடன் இனிய பதிவு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      நானும் உங்களுக்கு அந்த பாடலை சொல்லி போட சொன்னேன்.

      எனக்கு பிடித்த பாடல் உங்கள் பதிவுதான் இந்த பாடல்களை பகிர காரணம் என்று சொல்லி இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  21. இனிமையான பாடல்கள் சேர்த்து சிறப்பாக பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி தந்தது. முதல் பாடலைக் கேட்டபடியே தட்டச்சு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பாடல்களின் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      பாடல்கள் உங்களுக்கும் பிடித்து இருக்கா மகிழ்ச்சி.

      நீக்கு
  23. வெள்ளிக் கிழமை கோயிலுக்குச் சென்று பாடல்களைப் பாடும் நல்ல வழக்கம் இருந்திருக்கிறது பள்ளியில். க்ரூப் படத்தில் மேல் வரிசையில் நிற்கிறீர்கள் போலும். இடமிருந்து இரண்டாவது? இன்னொருவரும் உங்கள் பெயரில் இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ராமலக்ஷ்மி அப்போது நல்ல வழக்கம் இருந்தது. இப்போது போய் இருந்த போது பள்ளி போய் இப்போது இப்படி கோவில் போய் பாடும் பழக்கம் இருக்கா என்று கேட்க வேண்டும் என்று.
      நீங்கள் என்னை தேடி கண்டு பிடித்து பார்த்தது மகிழ்ச்சி.
      ஆமாம், இன்னொரு கோமதி இருந்தாள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  24. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. ஆச்சரியமான விஷயம். பள்ளியில் ஆசிரியர்களே கோயிலுக்கு அழைத்துச் சென்று பக்திப்பாடல்களையும் தேவாரத்தையும் பாட வைத்துள்ளனர். முன்னெல்லாம் தமிழ் படிக்கையில் தேவாரம், திருவாசகம் கட்டாயம் உண்டு என்பார் என் அப்பா. அதுவும் பண்ணமைத்துப் பாட வேண்டும் என்பார்! ஆனால் நானெல்லாம் படிக்கையில் கம்பராமாயணமும், வில்லி பாரதமும் இருந்ததே பெரிய விஷயம்! உங்களுக்கு அருமையான பள்ளி வாய்த்திருக்கிறது. நல்ல நினைவுகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நான் படித்த பள்ளி கோவில் நடத்தும் பள்ளி .
      முன்பு, தமிழ் பாடத்தில் திருவருட்பா, கம்பராமாயணம், திவ்வியபிரபந்தம், திருவாசகம் எல்லாம் பாடத்தில் உண்டு. அந்த பள்ளியில் படித்த காலம் மறக்க முடியாத இனிமையான காலம். காலை பிரேயரில் பாடல், தினம் செய்தி தாளில் வந்த ஒரு நல்ல செய்தி, ஒரு திருக்குறள் இவை சொல்ல வேண்டும். தினம் ஒருவர்.

      நீக்கு
  26. பச்சை மயில் வாகனனே! பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மற்றப்பாடல்களும் பிடிக்கும் என்றாலும் இது என்னமோ ரொம்பவே பிடிக்கும். முருகனுக்கான பாடல்கள் அனைத்துமே அவனைப் போல் அழகு கொஞ்சும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை மயில் வாகனனே ! பாடல் உங்களுக்கும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      முருகனுக்கு பாட்டு எழுதுபவர்கள் அவன் மேல் அளவற்ற பக்தி கொண்டவர்கள் அதனால் அந்த பாடல் இனிமையும், அழகும் கொஞ்சும் தான்.

      நீக்கு
  27. இப்போதெல்லாம் பள்ளிகளில் கம்பராமாயணமும், வில்லி பாரதமும் இருந்தாலே அது அதிசயம் தான்! இம்மாதிரிக் கோயில்களுக்கெல்லாம் ஆசிரியர்கள் அழைத்தும் செல்ல மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  28. இப்போது உள்ள 12ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டம் எப்படி இருக்கிறது என்றூ பார்க்க வேண்டும்.
    கோவையில் ரெங்கனாதபுரம் மகளிர் பள்ளியில் படித்தேன், அங்குள்ள தமிழ் ஆசிரியர் எங்களை சுற்றுலாவில் கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழைத்து சென்றார்.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
    உங்கள் குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் 'பச்சை மயில் வாகனனே' பாடிக் கேட்கவேண்டும். மனம் முழுவதும் இலயித்துவிடும். இந்துமதத்தை இழிவுபடுத்தும் சிலரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி வைத்ததால் தமிழக மக்கள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து என்பார்கள். கடந்த ஒரு தலைமுறைக்கு இது வாய்க்காமலே போய்விட்டது. இளம் மனதில் பதியும் பாடல்களும் கருத்துக்களும் ஒருவனது வாழ்னாள் முழுதும் அவனுக்கு வலுசேர்க்கும்.முதுமையில் எண்ணிப் பார்க்கவும் இனிக்கும். இதெல்லாம் இனி யாருக்குக் கிடைக்கும்!

    -இராய செல்லப்பா (தற்போது நியூஜெர்சியில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்
      பித்தக்குளி முருகதாஸ் பாடல் கேட்ட நினைவு இருக்கிறது, மீண்டும் தேடி கேட்டு விடுகிறேன். எனக்கு அவர் பாடல்களும் பிடிக்கும். நேரில் அவர் கச்சேரிகள் கேட்டு இருக்கிறேன்.

      இளம் வயதில் கற்று கொடுப்பது வாழ்நாள் முழுவதும் வலுசேர்க்கும் என்பது உண்மைதான் சார். இறைபக்தி சின்ன வயதில் வீட்டில் பள்ளியில் கற்று கொடுத்தது
      கஷ்டங்கள் வந்த போதும் இறைவன் வழி நடத்தி செல்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை கொடுக்கிறது.
      நியூஜெர்சியில் மகன் குடும்பத்தினருடன் மகிழ்ந்து இருங்கள்.இதமான குளிர் ஆரம்பித்து இருக்கும் இல்லையா ?
      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
    2. இதமான குளிரா? கடுமையான வெயில் தான் அடிக்கிறது. வாரம் ஒரு முறையாவது மழை பெய்கிறது...!

      நீக்கு
    3. வாரம் ஒரு முறை மழை பெய்வது மகிழ்ச்சி.
      கடுமையான வெயிலா!

      நீக்கு