சனி, 6 ஜூலை, 2019

கீழவளவு




இந்த இடத்திற்கும் போன ஆண்டு  ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு வருடம் ஆகப் போகிறது. பசுமை நடையின் 93 வது நடை.

அந்த இரண்டு பாறைகளுக்கு நடுவே ஒரு நாலு படிகள் ஏறினால்  மலையின் இடப்புறத்தில் பார்சுவநாதர், பாகுபலி, மகாவீரர் ஆகியோரின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.


மகாவீரர்

இரண்டு பாறைகளுக்கு நடுவே வெளிச்சக்கீற்று , இரண்டு பாறைக்கும் நடுவில் ஒரு கல் மாட்டிக் கொண்டு இருக்கிறது. 





நம் மக்கள் அவர்களின் பெயர்களை வடித்து வைத்து இருக்கிறார்கள்

மலையைச் சுற்றிப் படுக்கைகள்






இரண்டு தூண்களுக்கு நடுவில்  மகாவீரரின்  புடைப்புச் சிற்பம்

இரண்டுக்கும் வேறுபாடு தெரிகிறதா? முதல் மகாவீரர் தாமரை மலரில் அமர்ந்து இருப்பது போல் உள்ளது .அடுத்து மாடம் போல் இருக்கிறது; அதில் அமர்ந்து இருக்கிறார்.  மூன்றாவது முற்றுப் பெறவில்லை.




திரு. முத்துகிருஷ்ணன் , திரு. சுந்தர் காளி 

இந்த மலை பற்றிய கையேட்டில் உள்ளதையும் .மேல் விவரங்களையும் சொல்கிறார்கள்.

கீழடிக்குள் வந்த பாதை
பள்ளிப் பேருந்திலும் வந்து இருந்தார்கள் நிறைய பேர்


வேப்பம் பழம் பொறுக்கி விற்கும் இரண்டு அம்மாக்கள். எங்களைப் பார்த்து பள்ளிக்குப் போகிறீர்களா? என்று கேட்டார்கள்.

தொல்லியல் துறை அறிவிப்புப் பலகை


கீழவளவு கிராமப் பொதுமக்கள் வைத்து இருக்கும் அறிவிப்புப் பலகை


நேரே தெரியும் மலை மேல் என்ன இருக்கிறது?

                              
பசுமை இயக்க திரு. முத்துகிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்பது அடுத்த பதிவில்.

கீழவளவு பற்றி அவர்கள் கொடுத்த கையேட்டு குறிப்பைப் படிக்க வசதியாக தனித் தனியாகப் பிரித்துப் பிரித்துக் கொடுத்து இருக்கிறேன் . படிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
                                                                 வாழ்க வளமுடன்.

48 கருத்துகள்:

  1. கையேட்டைப் படித்தேன். நிறைய விஷயங்கள் புரிந்தது.

    புடைப்புச் சிற்பப் படங்கள் அருமை. தூண்கள் எதற்கு என்று கேட்க நினைத்து கையேடு அதனை விளக்கியதைக் கண்டு மகிழ்ச்சி.

    இதெல்லாம் எவ்வளவு நேரப் பிரயாணம், எப்படி அசெம்பிள் ஆனீங்க, உணவு அவர்கள் தயார் செய்கிறார்களா இல்லை அவங்க அவங்க கொண்டு போறிங்களா, வெயில் இல்லாத காலத்தில்தான் கூட்டிச் சென்றிருக்கிறார்கள் எனப் புரிகிறது, உங்களுக்கு நடக்க கஷ்டமாக இருந்ததா..இதெல்லாம் காணோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      கையேட்டை படித்து புரிந்து கொண்டது மகிழ்ச்சி.
      கொங்கர் புளியங்குளத்திலும் மலையில் உள்ள கல்வெட்டுக்கு கூரை அமைத்து இருந்தார்களே அது போல் அமைக்க எண்ணி தூண் அமைத்து இருக்கிறார்கள் அப்புறம் போடவில்லை.

      இந்த இடத்திற்கு காரில் போக ஒரு மணி நேரம் ஆகும். சின்ன பசங்க சீக்கீரம் வந்து விடுவார்கள்.
      மாட்டுத்தவாணி வர சொல்லி விட்டார்கள் 6 மணிக்கு அதன் பின் வாகனம் வசதி இல்லாமல் பஸ்ஸில் வந்து அங்கு இறங்கியவர்களை ஒவ்வொருவர் காரில் ஏற்றி விட்டார்கள். எங்களுடன் இரண்டு பேர் வந்தார்கள் அப்பாவும், மகளும் அந்த கடைசி படத்தில் பஸ் பக்கத்தில் வருபவர்கள்.
      இந்த இடம் கஷ்டமே இல்லை. காலை உணவு கொண்டு வந்து விட்டார்கள். இடலி, சாம்பார், சட்னி.
      அடுத்த பதிவில் போட வைத்து இருந்தேன், இப்போது நீங்கள் கேட்டதால் சொல்லி விட்டேன்.

      நீக்கு
  2. கட்டாந்தரையில் அவர்களால் படுத்து உறங்க முடிந்ததென்றால், வெறும் கைப்பிடி சாதமே அவர்களுக்குப் போதுமாயிருந்திருக்கும். உண்மைத் துறவிகள். அந்த இடங்களைப் பார்க்கவே ரொம்ப எளிமையாக இருக்கு.

    வாழ்க்கைக்கு நாமதான் ரொம்ப லக்கேஜ் சேர்த்துக்கொள்கிறோமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாந்தரையில் இரவு பூச்சி பொட்டுக்கள் பயமில்லாமல் படுத்து உறங்கவே மனபலம் வேண்டும்.
      உண்மைத் துறவிகள்தான். உண்ணாநோன்புதான் அடிக்கடி. பூச்சிகளை கொள்ள கூடாது என்று மயில் பீலியால் கூட்டிக் கொண்டுதான் போவார்கள் என்று படித்து இருக்கிறேன்.

      வாழ்க்கையில் நம் லக்கேஜ் குறைய குறைய இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் குறையும் என்பார்கள்(அதுதான் ஆசை)

      நாளுக்கு நாள் தேவைகள் அதிகமாகி கொண்டே வருகிறது.
      எல்லாம் அத்தியாவசிய பொருட்களாக மாறி வருவது கவலை அளிப்பதாய் இருக்கிறது.

      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. அன்பு கோமதி விரிவாக விளக்கமாக்ப் பதிவு செய்திருக்கிறீர்கள் .சமண மதம் இத்தனை பிரனலமாக இருந்ததா..
    தலைகீழாக ஏன் செதுக்கினார்கள் என்று யோசிக்கிறேன்.
    மலைக்கு மேலிருந்து செதுக்கி இருப்பார்கள்.
    மலையும் அழகு.
    சமணப் படுகைகளும் அழகு. வழ வழவென்று எத்தனை அழகாகச் செய்திருக்கிறார்கள்.
    அந்தத் தூண்கள் கம்பீரமாக இருக்கின்றன,.
    இத்தனை சிரமம் எடுத்து எல்லா செய்திகளையும் அறியக் கொடுக்கும்
    பசுமை நடை இயக்கத்துக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

      //.சமண மதம் இத்தனை பிரனலமாக இருந்ததா..//

      வடநாட்டிலிருந்து வந்த சமணர்கள் காஞ்சிமாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சமணசமயத்தைப் பண்டைநாள் முதற்கொண்டே தமிழகத்தில் பரவலாகப் பரப்பி வந்தனர். அவர்கள் சமணசமயக் கொள்கைகள் பரப்புவதற்கும், நிலைநிறுத்துவதற்கும், தொண்டை நாட்டை முதன்மையிடமாகக் கொண்டு, அந்நாட்டு மக்களை அச்சமயத்தில் இணைத்தனர். அவர்கள் தமிழ் நிலங்களிலும், உலகெங்கிலும் உள்ள மக்களிடத்தில் சமணசமயத்தைப் பரப்பி வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும்.

      //தலைகீழாக ஏன் செதுக்கினார்கள் என்று யோசிக்கிறேன்.
      மலைக்கு மேலிருந்து செதுக்கி இருப்பார்கள்.//

      தலைகீழாக செதுக்கியதற்கு காரணம் தெரியவில்லை அக்கா.
      நீங்கள் சொல்வது போல் மேலிருந்து செதுக்கி இருக்கலாம்.

      சமணப்படுகை அழகுதான் அக்கா. பசுமை நடை இயக்கத்தை வாழ்த்தியதற்கு நன்றி அக்கா.

      உங்கள் வருகைக்கு நன்றி.
      கண் எரிச்சல் இப்போது எப்படி இருக்கிறது.
      வெயில் அதிகமா இப்போது?
      உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.


      நீக்கு
  4. பண்டைகால மனிதர்கள் எவ்வளவு உயர்ந்த நோக்குடன் சிற்பங்களை வடித்து வைத்து இருக்கிறார்கள்.

    நாம் பக்கத்திலேயே கரியால் கோடு போட்டோ, நமது பெயர்களையோ எழுதி வைக்கிறோம்.

    அழகிய படங்கள் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      பழமையை போற்றும், எண்ணம் இல்லாதவர்களையும், தங்களை முதன்மை படுத்த நினைக்கும் மக்களை என்ன சொல்வது!

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  5. மதுரை பக்கம் போனால் அவசியம் போய் வரவேண்டுமென்ற ஆவல் இருக்கிறது.

    அந்த இரண்டு தூண்களுக்கிடையே நீங்களிருவரும் நிற்கும் படம் அழகாக இருக்கிறது.

    சிற்பங்களும் அழகு. ஒரு நோக்கத்திற்காக எப்படி இவ்வளவு பேர் கூடினீர்காள் என்பதும்
    ஆச்சரியமாக இருக்கின்றது.

    இந்த இடங்களுக்கு, அல்லது இந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      பார்க்கலாம் சார் பார்க்க வேண்டிய இடம் தான்.
      எங்கள் படத்துக்கு கருத்து சொன்னதற்கு நன்றி.
      வரலாற்றின் மீது ஆர்வம் உள்ளவர்கள். வ்யதானவர்கள், குழந்தைகள், இளையவர்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

      பாதுகாப்பு இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. மிக அருமை மா ...


    இன்றைய கையேடு படிக்க மிக எதுவாக இருந்தது ...படங்களும் தகவல்களும் மிக சிறப்பு ...

    பார்சுவநாதர், பாகுபலி, மகாவீரர் ஆகியோரின் சிற்பங்கள் .....மிக நேர்த்தி

    மகாவீரர் தாமரை மேல் அமர்ந்து காட்சி அளிப்பது ..அழகு

    மேலே மகாவீரர் சிற்பம் கீழே தூண்கள் நடுவே நீங்களும் சார்ம் நிற்கும் படம் மிக அழகு மா

    இத்தகைய நிகழ்வுகளை காணும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ..இது போல இங்கு பெங்களுருல் ஏதும் உண்டா என தேடும் போது எல்லாம் பணம் கட்டி அழைத்து சென்று காட்டும் வகையாகவே உள்ளன ..ஒருமுறை முயற்சிக்க வேண்டும் ..

    இன்றும் ஒற்றுமையே என் தளத்தில் ஆதிநாத் மற்றும் சாந்திநாத் தீர்த்தங்கரர் காட்சிகள் ...

    போன விடுமுறையில் மேலூர் அருகிலும் ஒரு நிகிழ்ச்சிக்கு சென்றோம் ...இப்பொழுது குறித்துக் கொள்கிறேன் ...அடுத்த முறை அங்கு செல்லும் போது காண வேண்டும் ..

    நல்ல பல தகவல்களை தருவதற்கு நன்றி மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்.

      கையேட்டை பிரித்து பிரித்து தகுந்த இடங்களில் கொடுத்து விட்டேன் படிக்க வசதியாக இருக்கும் என்று.

      //இன்றும் ஒற்றுமையே என் தளத்தில் ஆதிநாத் மற்றும் சாந்திநாத் தீர்த்தங்கரர் காட்சிகள் ...//

      நீங்களும் தொடர் பதிவு இல்லையா? நானும் தொடர் பதிவு. சமணர்கள் பற்றி ஒற்றுமைதான்.

      நேற்றும் ஆனைமலை போய் வந்தோம், அப்படியே உறவினர்களை பார்த்துவிட்டு இரவு தான் வீட்டுக்கு வந்தோம். அதனால்தான் காலதாமதம் பின்னூட்டங்களுக்கு பதில் தர.

      அடுத்த முறை போகும் போது பார்க்கலாம். கஷ்டம் இல்லாத பயணம் தான் இந்த இடம்.

      அழைத்து செல்பவர்கள் கையேடு, உணவு எல்லாம் தயார் செய்து தருகிறார்கள் , வேலைகளை பகிர்ந்து கொள்ள என்று பண உதவி செய்யலாம் நாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  7. மிக அருமையான இடத்தைக் குறித்த அருமையான பதிவு. இங்கெல்லாம் போக முடியாவிட்டாலும் உங்கள் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. கையேடு எல்லாம் நன்றாகப் படிக்கும் வண்ணம் வந்திருக்கிறது. மகாவீரர் கொஞ்சம் புத்தர் மாதிரியும் இருக்கார் ஆனால் சமணப்படுக்கைகள் என்பதால் இவர் மகாவீரர் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.

      கையேட்டை பத்தி பத்தியாக போட்டோ எடுத்து பெரிது செய்து தந்து இருக்கிறேன்.
      படிக்க வசதியாக இருக்குமே என்று.

      புத்தருக்கும், மகாவீரருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகள் உண்டு உருவத்தில்.

      போன பதிவு படிக்கவில்லையா?(கொங்கர் புளியங்குளம் நிறைவு பகுதி)
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. முந்தைய பதிவு இருக்கா? பார்க்கலை! என்னோட டாஷ்போர்டில் வராது. அநேகமா எ.பி.யைப் பார்த்தே வருவேன். அதிலே வந்தப்போ கவனிச்சிருக்க மாட்டேன்.

      நீக்கு
  8. எவ்வளவு திறமையாக, எவ்வளவு எளிமையாக அமைத்துக் கொண்டிருந்திருக்கிறார் தங்கள் வாழ்க்கையை... பிரமிப்புதான் மேலிடுகிறது. தண்ணீர் பாதிக்காமல் இருக்க அதற்கு ஒரு வழி.. வழுவழுப்பான படுக்கைகள்.. அடேங்கப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது போல் திறமை, எளிமை நிறைய குறிக்கோளுடன் மற்றவர்களுக்கு உதவிக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். வழு வழுபான படுக்கையை தயாரித்துக் கொடுத்தவர் கல் குத்துமோ என்று வழு வழுபாய் செய்து கொடுத்து இருக்கிறார்(கருணை மிக்கவர்) அவரை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
  9. தூண்கள் பூசப்படாமல் முற்றுப்பெறாமல் அரைகுறையாக நிற்கின்றன. புடைப்புச் சிற்பங்கள் மூன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் எதையோ குறிக்க ஏற்படுத்தப்பட்டவையோ... ஒன்றை விட இரண்டாவது வித்தியாசமாக, மூன்றாவது ஏனோ முற்றுப்பெறாமல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூண்கள் வேலையை தடை செய்து விட்டார்கள் அதனால் அது அப்படியே நிற்கிறது.
      பூச்சு நடந்து இருந்தால் பொருத்தமாய் இருந்து இருக்காது இப்போதுதான் மலைக்கு பொருத்தமாய் இருக்கிறது.

      மூன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் எதை குறிக்க , மூன்றாவது ஏன் முற்று பெறவில்லை என்ற கேள்விகள் ஏற்படும் தான்.
      சரித்திர கதை எழுதுபவர்களுக்கு நீங்கள் கேட்கும் கேள்விகள் கதை எழுத தூண்டும் கேள்விகள்.

      நீக்கு
  10. தூரத்தில் தெரியும் மலைமேல் க்ளிப்பைக்கவிழ்த்தாற்போல ஒரு வடிவம்! என்ன அது?வேப்பம்பழம் விற்று என்ன கிடைக்கும் அவர்களுக்கு? எங்கள் மொட்டைமாடி முழுவதும் வேப்பம்பழங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூரத்தில் மலை மேல் ஒருவர் நிற்கிறார். அது அலைபேசியில் எடுக்கப்பட்ட படம்.

      வேப்பம்பழம் பொறுக்கி விற்பவர்களுக்கு பணம் கிடைப்பதால் தான் குனிந்து கஷ்டபட்டு விற்கிறார்கள். எவ்வளவு கிடைக்குமோ தெரியவில்லை.

      அதை அள்ளி வெளியில் வைத்தால் இவர்களை மாதிரி கஷ்டபடுபவர்கள் எடுத்து போகலாம். செடிகளுக்கு, மரங்களுக்கு உரமாக பயன்படும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. இப்படிப்பட்ட இடங்களைப் பற்றி நாம் படிக்கும் காலத்தில் சொல்லித் தரப்பட வில்லையே... அது ஏன்?...

    அதற்குப் பின் வந்த தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கூட தனது பதிப்புகளில் இதைப் பற்றிய செய்திகளை வழங்கியதா..

    தெரியவில்லை...

    ராஜராஜ சோழனின் நீர் மேலாண்மையை படித்து உணர்ந்து கொள்வதற்கே
    பல ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது...

    இன்றைய தலைமுறைக்கு இதெல்லாம் சென்று சேர்வதற்கு நேரம் இருந்தாலும்
    அவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்வார்களா..

    காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

    அழகான படங்களுடன்
    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      சமணர்களின் மருத்துவம், கல்வி, வாழ்க்கை முறை கடைபிடித்த கொள்கைகள் பாடத்தில் வந்து இருக்கிறது.

      ராஜராஜ சோகனின் நீர் மேலாண்மை படித்து அதை நடைமுறை படுத்தினால் நாடு நலமாய் இருக்கும்.

      விரும்பி ஏற்றுக் கொள்ளும் காலம் வந்து கொண்டு இருக்கிறது, தண்ணீர் பஞ்சம் அதிகமாய் இருக்கே! விழித்துக் கொள்ள வேண்டும்.

      காலம் எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கும் தேவையான நேரத்தில் பதில் சொல்லும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      போன பதிவை படிக்க வில்லையா?

      நீக்கு
  12. கீழவளவு எனும் அறிவிப்புப் பலகைக்கு அருகிலேயே மதுப்புட்டிகளும் குவளைகளும் கிடக்கின்றனவே...

    கைத்தொலைபேசி வழி பதிவைப் படித்தபோது சற்றே விளங்கவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுமை நடையின் நோக்கமே இந்து போன்ற இடங்களுக்கு நாம் போகாமல் இருந்தால்
      இப்படி மதுபுட்டிகள் குப்பைகள் கொட்டும் இடமாக சமூக விரீதிகளின் கூடாரமாய் ஆகி விடும் என்பதே!
      முடிந்தவரை அவர்கள் பாதுகாப்பு செய்கிறார்கள்.
      இவர்களால் மலைகள் வெட்டப்படுவது குறைந்து வருகிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. எத்தனை நுட்பங்கள்... வியக்க வைக்கிறது அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. தெளிவான படங்களோடும், அழகான விளக்கங்களோடும் நல்ல பதிவு.
    புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் சித்தன்னவாசல், மத்திய பிரதேசத்தில் இருக்கும் கஜுரஹோ இங்கெல்லாமும் சமண குகைக்கோவில்கள் இருக்கின்றன. அவைகளும் எல்லாம் கலைச்செல்வங்கள். நாலடியாரும் சமணர்கள் நமக்கு கொடுத்த கொடைதானே. சமணத்துறவிகள் ஏன் குகைகளை தங்கள் இருப்பிடமாக கொண்டார்கள் என்று யாராவது கூறினால் நல்லது.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
    தமிழ் நாட்டில் நிறைய இடங்களில் சமண குகை கோவில்கள் இருக்கிறது, கழுகுமலை, சித்தன்னவாசல், நார்த்தான்மலை, மற்றும் மதுரையில் உள்ள நிரைய சமணர்கள் வாழ்ந்த இடங்களை பதிவு செய்து இருக்கிறேன் . இன்னும் பார்த்த இடங்களை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது .

    நீங்கள் சொல்வது போல் சமணர்கள் நமக்கு கொடுத்த கொடைகள் நிறைய. இலக்கண, இலக்கிய
    இசை, தர்க்க நூல்கள் என்று அவர்கள் கொடுத்த கொடை நிறைய.
    திருக்குறள் மிக சிறந்த அற நூல். அது அவர்கள் தான் அருளினார்கள்.

    அவரகள் காடுகளில் வாழ்ந்தற்கு காரணம் முன்பு உள்ள சமணதுறவிகள் திகம்பரரகளாக வாழ்ந்தார்கள் அதனால் அவர்கள் ஊருக்குள் வருவதை விரும்பவில்லை. அதனால் குகைகளில் வாழ்ந்தார்கள். மேலும் அமைதியான இடம் குகைதான். அமைதியை நாடினார்கள்.
    இப்போது வட நாட்டில் சமணத்துறவி ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள். ஆனல் சிறிது வித்தியாசம் குகைகளில் வாழாமல் மடங்களில் வாழ்கிறார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருக்குறள் மிக சிறந்த அற நூல். அது அவர்கள் தான் அருளினார்கள்.//

      இல்லை என்றே நினைக்கிறேன்/ திருவள்ளுவர் பல இடங்களில் வேதத்தைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லி இருக்கிறாரே. நான் படிப்பதும் அதிகம் ஏற்பதும் பரிமேலழகர் உரையே! முதல் குறளே அவர் சமணர் இல்லை என்று சொல்வதாக என் கருத்து.

      நீக்கு
    2. ஆராய்ச்சியாளர்கள் திருவள்ளுவரை சமணர் என்கிறார்கள்.
      ஆராய்ச்சிக்கு உரிய விஷயம் தான் .
      உங்கள் கருத்தை பதிவு செய்தது மகிழ்ச்சி.

      சமணர்கள் எழுதிய தொகுப்பில் திருக்குறளும் வருகிறது.

      நீக்கு
    3. இப்போதைய ஆய்வாளர்கள் சமணமும்,பௌத்தமும் தான் இருந்தது எனக் கூறுகின்றனர். இன்னும் கிறித்துவம் தான் எனக் கூறுகின்றனர். தொல்காப்பியரை எல்லாம் பின்னால் தள்ளிட்டாங்க! இன்னும் சிலர் முருகன் தான் என் முன்னோர் எனச் சொல்கின்றனர். ஆனால் ஆய்வுகள் இவை எல்லாவற்றையும் மறுக்கின்றன. பிற்கால கட்டத்தில் சமணர்கள் தொகுப்பில் திருக்குறள் வந்திருக்கலாம்.

      நீக்கு
    4. நீங்கள் சொல்வது போல நிறைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை சொல்கிறது.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    சமணத்துறவிகள் வாழ்ந்த இடமாகிய மலைகள், படுக்கைகள் என விபரமாக விளக்கியமைக்கு நன்றிகள். படுகைகளின் விபரங்கள் குறித்த தகவல்கள் வியப்பை தருகிறது. ஒரு மலையை பம்பர மாதிரியில் செதுக்கி, அதன் கீழே 100 துறவிகள் தங்குமிடமாக அமைத்துக் கொடுத்தவர்களை பாராட்ட வேண்டும். கையேடு தாங்கள் பிரித்து கொடுத்தது படிக்க வசதியாக இருந்தது. சமண தெய்வமாகிய மகாவீரரின் படைப்பு சிற்பம் இரு கல்தூண்களுக்கிடையில் அமையுமாறு அமைத்திருப்பது அழகாக உள்ளது. தாங்கள் எடுத்துள்ள எல்லாப்புகைப்படங்களும் மிக அழகாக இருக்கின்றன. தாங்களும் தங்கள் கணவரும் இரு தூண்களுக்கருகில் நின்றவாறு இருக்கும் புகைப்படம் வெகு அழகாக உள்ளது.

    சமணர்களின் துறவறமும், எவ்வுயிர்களையும் கொல்லாதிருத்தல் என்ற கோட்பாடுகளும், பள்ளிப்பருவத்தில், சமணர்களை பற்றி படித்த போது படித்தது. இப்போது எல்லாம் மறந்து விட்ட நிலையில், தாங்கள் விளக்கி கூறும்போது அவை கொஞ்சம் நினைவுக்கு வருகின்றன. இன்னமும் தெரிந்து கொள்ள ஆசை பிறக்கிறது. வட்ட எழுத்துக்கள் இவர்களால் உண்டானவையா? உங்கள் பசுமை நடை இயக்கத்தினால் நாங்களும் கொஞ்சம் புரிந்து கொள்கிறோம். அதற்கு உங்களுக்கும் பசுமை நடை இயக்கத்தினருக்கும் நன்றி. இன்னமும் அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      வியப்பை அளிக்கும் வேலைப்பாடுதான் சமணர்கள் வாழும் இடம்.
      கையேடு படிக்க வசதியாக இருந்தது எல்லோரும் சொன்னார்கள் மகிழ்ச்சி.
      எங்கள் படத்தை பசுமை நடையை சேர்ந்த அன்பர் எடுத்து கொடுத்தார் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      சமணர்களின் கொள்கைகளை நினைவு படுத்தி சொல்லி விட்டீர்கள்.
      வட்ட எழுத்துக்கள் இவர்களால் உண்டானவையா என்று எனக்கு தெரியவில்லை.
      பதிவை ஊன்றி படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      உடல் பூரண நலம் பெற்று இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  17. நிறைவான பகிர்வு.காட்சிப் படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. தெளிவான படங்களும் தகவல்களும். நிறைய சிரத்தை எடுத்துப் பதிகிறீர்கள். பல புதிய தகவல்களை அறிந்துகொள்ளமுடிகிறது. பசுமை நடை ஏற்பாட்டின் மூலம் பாமர மக்களுக்கும் பாரம்பரியத் தலங்களின் அறிமுகம், அவற்றின் பெருமை, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வு போன்றவற்றை உண்டாக்கும் நன்முயற்சிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
      ஒரு பூவைபற்றி, ஒரு விலங்கை பற்றி போடும் போது எவ்வளவு கவனத்துடன் நிறைய அவற்றைபற்றிய தகவல்கள் சேகரித்து போடுகிறீகள்!
      நீங்கள் என்னை பாராட்டுவது மகிழ்ச்சி.

      வரலாற்றின் மிச்சமிருக்கும் மலைகளை ஓவியங்களை, சிற்பங்களை, காண அன்றாட கூலி உழைப்பாளி முதல், விவசாயி, அலுவலர், ஆய்வு மாணவர்கள் வரலாற்று வல்லுனர்கள் மற்றும் என்னை போன்று இருப்பவர்களை அழைத்து சென்று நம் ஊரில் இருக்கும் நம் ஊரின் பாரம்பரியத் தலங்களை தரிசிக்க வைப்பது தான் பசுமை நடையின் நோக்கம். அதைல் வெற்றியும் அடைந்து இருக்கிறார்கள்.

      அவர்களுக்கு உங்களின் பாராட்டுக்கள் மேலும் இயங்க ஊக்கம் அளிக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  19. கோமதிக்கா வணக்கம்.

    போன பதிவிலேயே பஞ்சபாண்டவர் மலை சொல்லிருந்தீங்க அடுத்த பதிவில்னு ...வாசித்துவிட்டு வருகிறேன் அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      ஊருக்கு போய் விட்டு வந்து விட்டீர்களா?
      இதையும் பஞ்சபாண்டவர் மலை என்றே மக்கள் அழைக்கிறார்கள்.

      நீக்கு
  20. அந்த சிற்பங்களுடனான மலை (மாமா நிற்கும் படம்) செம அழகா இருக்கிறது.

    அடுத்து க்ளோஸப் அடுத்துஇரு பாறைகளுக்கு நடுவே வெளிச்சக் கீற்று மாட்டிக் கொண்டிருக்கும் கல் என்று வித்தியாசமான டிசைனுடன் அந்தப் படமும் ரொம்ப அழகா இருக்கு கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமா படம் நன்றாக இருக்கா? நன்றி.
      படங்களை ரசித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.

      நீக்கு
  21. வெளிச்சக் கீற்றுக்கு அடுத்த படமும் வித்தியாசமாக இரு தூண்கள் போன்று அழகா இருக்கு..

    தூண்களுக்கு நடுவில் நீங்கள் இருவரும் வாவ்!!..மேலே பாறையில் மஹாவீர்? சிற்பம்..

    பாறை அடியில் எல்லாம் உட்காரும் விதமாகவும் படுக்கைகளும் அழகாக இருக்கின்றன அதுவும் 100 துறவிகள் தங்கும் அளவில் ஆச்சரியம்!!..

    குறிப்புகளும் பார்த்துக் கொண்டேன் கோமதிக்கா...அதுவும் அவர்கள் மழைக்காலத்தில் நனையாதிருக்க தண்ணீர் வாய்க்கால் போல ஓட ஓடை என்று என்ன விதமான அமைப்பு அதுவும் பாறையில் !

    கீதா




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொன்றையும் யோசித்து கட்டியவர்கள் வடிவமைத்து உள்ளர்கள்.
      எங்களை நில்லுங்கள் நான் எடுக்கிறேன் என்று ஒரு தம்பி எடுத்தார்.
      குறிப்புகளை படித்து விட்டு படங்களைப் பார்த்தால் நன்றாக புரியும் அதனால் தான் குறிப்புகளை தனி தனியாக பொருத்தமான இடத்தில் போட்டேன்.

      நீக்கு
  22. இரண்டிற்கும் வேறுபாடு தெரிகிறதா என்று போட்ட படங்கள் அட்டகாசம் கோமதிக்கா. நான் வேறுபாட்டை எங்கு கவனித்தேன் படத்தின் ஆங்கிள் எடுக்கப்பட்ட விதம் அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் ஹா ஹ ஆ ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை எடுத்த விதத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
      மகிழ்ச்சி ஊருக்கு போய் விட்டு வந்து பதிவுகளை படித்து அருமையாக கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  23. பாதுக்காப்பிற்காக அமைக்கப்பட்ட சேதாரம் ஏற்படாமல் இருக்க சட்டம் எல்லாம் சிறப்பு. அதான் பாதுகாக்கப்படுகிறது இப்படி எங்களுக்கும் விருந்து உங்கள் மூலமாக.

    கையேட்டையும் நன்றாக வாசிக்க முடிகிறது கோமதிக்கா. நிறைய தகவல்கள்..

    படங்கள் அத்தனையும் மிக மிக அழகு ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு