வியாழன், 4 ஜூலை, 2019

கொங்கர் புளியங்குளம்- நிறைவுப்பகுதி

நேற்று போட்ட கொங்கர்புளியங்குளம்  பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு.
படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.


  மலை மேல்   போய் வந்த  விவரம் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன்.

மாயன் கோவில்



முந்தின தினம் விழா நடந்து இருக்கிறது  மாயனுக்கு
மேலே முன்பே பார்த்தவர்கள் உணவு வாங்கிக் கொண்டு  சாப்பிட்டார்கள் -இட்லி, சட்னி, சாம்பார். 

மேலே போய் இருப்பவர்கள் வரும் வரை நான் படங்களை எடுத்து கொண்டு இருந்தேன் மாயன் கோவில் மண்டபம்.

முதல் நாள் மாயனுக்கு விழா எடுத்தவர்கள் போட்டு விட்டுப் போன குப்பைகள்
இயற்கையாய் அமைந்த குகைத் தோற்றங்கள்
முள் கூடாரம் -ஆலமர நிழலில் குகை
காலை உணவு அருந்துகிறார்கள். பசுமை நடையில் உள்ளவர்கள் உணவருந்திய தட்டுகளைக் கவரில்  போட்டுக் குப்பைத் தொட்டியில் போட்டோம்.  கீழே கிடக்கும் இலைகள், முதல் நாள் விழாக் கொண்டாடியவர்கள் போட்டு விட்டுப் போன குப்பைகள்.

 உள்ளே வரும் வழி -அழகிய தென்னை மரங்கள் அமைந்த இடம்.
வலது பக்கம் மலையில் குகைக் கல்வெட்டு, சமணப் படுக்கைகள் 
இந்த மலையில் குகைத்தளவிளிம்பில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களையும், சமணக் கற்படுக்கைகளை பார்த்து விட்டு இறங்கி அடுத்த பக்கம்(இடது பக்கம்) உள்ள மலையில்  உள்ள தீர்த்தங்கரைப் பார்க்கப் போகிறார்கள்.

மேல் மலைக்குப் போகும் பாதையில் இந்தப் பலகை இருக்கிறது நான் போகவில்லை. மேலே உள்ள  படங்கள் என் கணவர் அவர்கள்  அலைபேசியில் எடுத்த படங்கள்.

போகும் வழியில் மலையின் பக்கவாட்டில்  இரண்டு பேர் சாமரம் வீச நடுவில் அரசமரத்தடியில் முக்குடையோடு தீர்த்தங்கர் சிலையொன்று  காணப்படுகிறது. அதன் கீழ் வட்டெழுத்தில் 'ஸ்ரீ அச்சணந்தி செயல்" என்ற வரி காணப்படுகிறது. கி.பி . 9-10 நூற்றாண்டுகளில் இதை அச்சணந்தி  என்பவர் செய்வித்திருக்கிறார்.

இப்படி  படிகள் கொஞ்சம் ஒரு பக்கம் மட்டும் கைப்பிடி இருந்ததாம்.
மலை ஏறி வர இரண்டுபுறமும் கைப்பிடி இருக்கிறது. மலை நீண்டு செல்கிறது.

இந்த மலையின் பின்புறம் ஓடும் வைகை நதிபாயும் வளமான நிலபரப்பாகும். சோழ வந்தானுக்கு அருகில் அமைந்து இருக்கும் இந்த ஊர்  'பாகனூர்க் கூற்றம்' என்னும் பெயரில் முற்பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.

 அந்த சுனை நீரை அருந்தி விட்டு நடக்கும் குரங்கார் .அவரும் மலை மேல் இருந்து  கீழே இயற்கை காட்சியைப் பார்க்கிறார் 
மலை மீது உள்ள பெருமாள் கோவில்- கோவில் முன் விளக்குக் கம்பம் (கல்தூண்) உள்ளது. அழகிய மணி இங்கு அடிக்கப் பட்டால் எங்கும் ஒலிக்கும் இனிமையாக
மலையின்  சுனை நீர் இருக்கும் காட்சி
மலையில்   இருந்து பார்த்தால்  நாகமலையும், சுற்றிஉள்ள பரந்த வெளிகளும்  தெரிகிறது. பாதை தெரியுது பார் நினைவு வந்தது, இந்த வளைந்து செல்லும் அழகிய  பாதையைப் பார்த்தபோது.
மலை ஏறிப் பார்த்தாச்சு 
மலை மேல் இருந்து சுற்றிப் பார்த்து விட்டேன்

பெருமாள் கோவில் பக்கத்தில்  உள்ள நாட்டுபுறத் தெய்வக் கோவில். 
கொங்கர் புளியங்குளம் பதிவு முற்றுப் பெற்றது.

 வாழ்க வளமுடன்.


-----------------------------------------------------------

48 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ
    வழக்கம் போல படங்களின் தெளிவு அற்புதம்.

    சொல்லிய விபரங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
      தேவகோட்டையார் முந்தி விட்டார்.

      நீக்கு
  3. தமது வேலை முடிந்து விட்டது என்று குப்பைகளை தூக்கி வீசிவிட்டு செல்பவர்கள் இன்னும் இருக்கின்றனர்.

    தூய்மை பள்ளியில் இருந்து தொடங்கினால்தான் அடுத்த தலைமுறையினராவது நல்ல பழக்கத்துக்கு வருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் ஜி

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. மாயன் கோவில் அழகு .....

    குகை , மலைக் கோவில் , தென்னை மரம் எல்லாம் பரவசம் ...


    நீல வண்ண வானத்தின் பின்னணியில் நீல வண்ண சட்டை உடுத்தி சார் நிற்பது ..கம்பீரம்

    தங்களின் வழியாக ஒரு புது இடத்தை பார்த்து ரசித்தேன் ...இப்படி உங்கள் தளம் வழி கண்டு சென்றது தான் எங்கள் சித்தன்னவாசல் பயணம் ...

    அதுபோன்ற பயணம் இங்கு போக இயலாது ..

    எனவே உங்கள் படங்கள் வழி மகிழ்வுடன் கண்டேன் ...நன்றி மா

    பதிலளிநீக்கு
  5. அனு, படங்கள் எல்லாவற்றையும் ரசித்து கருத்து சொன்னத்றகு நன்றி.
    சாரை படம் எடுத்த பேராசிரியருக்கு நன்றி.
    சித்தன்னவாசல் போல் இதுவும் ஆக வேண்டும் சுற்றுலாதுறை கவனித்தால் நல்ல கூட்டம் வரும்.

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் நல்லா இருந்தது.

    சமணர் படுக்கைகளை நான் மும்பையிலும் பார்த்திருக்கிறேன். அதுல தூங்கணும்னா உலக இன்பங்களை எப்படித் துறந்திருக்கணும்னு நான் நினைப்பேன். எனக்கெல்லாம் மெத்தையிலும் தூக்கம் வருவதில்லை.

    சமணர் காலத்திலேயே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்களே (நான் நம்ம ஊர் இளவட்டங்கள் எப்படி பழைய வரலாற்றுச் சின்னங்களை உருக்குலைக்கறாங்க என்பதற்கு எழுதினேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      அத்தி வரதர் தரிசனம் நன்றாக கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.


      அவ்வளவு உயரத்தில் போய் படுக்கை அமைத்து தூங்க வேண்டும் என்றால் அவர்களின் உடல் பலம், மனபலம் எல்லாமே இருந்தால்தான் சாத்தியம்.

      நீங்கள் சொல்வது போல் உலக இன்பங்களை வைராக்கியமாக துறந்திருக்கணும்.
      நமக்கு மெத்தை,மற்றும் சகல வசதிகள் இருந்தாலும் தூக்கம் வருவது இல்லை என்பது உண்மை.

      போன பதிவு படித்து விட்டீர்களா? அதில் போட்டு இருக்கும் சமணபடுக்கைகளை
      சேதபடுத்தாமல் இருக்கிறார்கள்.

      சித்தன்னவாசலில் வேலி அமைத்து காக்கிறார்கள். சமணபடுக்கைகளை. இங்கு வரலாற்றுச் சின்னங்களை உருகுலைக்கிறார்கள்.
      வரலாற்றுச் சின்னங்களை சேத படுத்தினால் தண்டனை என்று போட்டு இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. குட்மார்னிங். அழகிய இடங்களின் அழகிய படங்களைப் பார்க்க இதோ வருகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      வாங்க வாங்க

      நீக்கு
  8. மாயன் கோவில் உபயதாரர் விளம்பர எழுத்தின் மேல் தெரியும் முகமும், இட்லி விற்பனை செய்யுமிடத்தில் அமர்ந்திருப்பபவரும் ஒன்றா? நீங்கள் படம் எடுப்பதை ஆவலுடன் எட்டிப்பார்க்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பதிவில் இந்த மாயன் கோவில் மண்டபத்தை சுத்தம் செய்து கொண்டு இருப்பவர் சித்திரை வீதிக்காரன் அவர்கள் என்று போட்டு இருந்தேன் அல்லவா? அவர் தான் இங்கு அமர்ந்து இருக்கிறார். இடலி பாத்திரங்கள் பக்கம் அமர்ந்து இருப்பவர் இல்லை.

      பசுமை நடை இயக்கம் ஏற்பாடு செய்து இருக்கும் காலை உணவு ! இதை இட்லி விற்பவர்கள் என்று நினைத்து விட்டீர்களா? இவர்கள் பசுமை நடை இயக்கத்தில் இருப்பவர்கள், தன் ஆர்வ தொண்டர்கள்.

      நீக்கு
    2. ஓஹோ... ஓகே ஓகே... நான் அங்கு வரும் மக்களை நம்பி சிறு வியாபாரம் செய்கிறார்கள் என்று ஒருகணம் நினைத்து விட்டேன்! மன்னிக்கவும்!

      நீக்கு
    3. தெரியாமல் சொல்லி விட்டீர்கள். மதுரை முழுவதும் இது போன்ற சுற்றுலா இடங்களில் உணவு விற்பதை பார்த்து இருப்பீர்கள் இல்லையா?

      இங்கு அந்த அளவு யாரும் வருவது இல்லை ஒன்றும் கிடைக்காது. இங்கு பார்க்க வருபவர்கள் உணவு, தண்ணீர், மற்றும் பாதுகாப்புக்கு கூட்டத்துடன் வர வேண்டும்.

      நீக்கு
  9. நீங்கள் குப்பைகளை அழகாக கவரில்போட்டு குப்பைத்தொட்டியில் சேர்த்தது நல்ல செயல். முந்தைய நாள் விழா எடுத்த்தவர்கள் இயற்கை பற்றிக்கவலைப்படாமல் அப்படியே போட்டு விட்டுப் போயிருப்பது வருத்தத்துக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், பசுமைநடை இயக்கத்தின் அமைப்பாளர்கள் பெரிய கவர் கொண்டு வருவார்கள், எல்லோரையும் குப்பைகளை அதில் போட சொல்லி குப்பை தொட்டியில் போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்த பின் தான் அந்த இடத்தை விட்டு போவார்கள்.
      பாராட்டுக்கள் எல்லாம் பசுமைநடை இயக்கத்தை நடத்துபவர்களுக்கு போய் சேர வேண்டும்.

      முந்தைய நாள் விழா எடுத்தவர்கள் குப்பையை பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது. வீட்டில் பூஜை அறையை சுத்தமாக வைத்து இருப்பவர்கள் கோயிலுக்கு வந்தால் அந்த இடத்தை அசுத்தம் செய்து வருகிறார்கள் என்ன செய்வது!

      நீக்கு
    2. இதுபோல பொது இடங்களை கவலைப்படாமல் அசுத்தம் செய்வதில் நம் மக்கள் (என்னையும் சேர்த்துதான்) கைதேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருகுழு இருக்கிறது. என் மாமா பையன் உட்பட உறவினர்கள் சிலர் அவர்கள் நண்பர்களையும் திரட்டி மெரீனாவை சுத்தப் படுத்துவார்கள். சென்ற ஞாயிறன்று கூடச் செய்தார்கள். ஒருதரம் கேஜிஜி கூட இதில் ஈடுபட்டிருக்கிறார். குடும்ப வாட்சாப் குழுமத்தில் ஆர்வம் இருப்பவர்களை பங்குகொள்ள அழைப்பார்கள்.

      நீக்கு
    3. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மெரீனாவை சுத்தப் படுத்தியது பாராட்ட வேண்டிய செயல். நம் ஊர் நம் இடம் அதை அழகாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வந்தால் இப்படி அசுத்தம் செய்ய மாட்டோம் ஸ்ரீராம்.

      நம் இடம் இல்லை பொது இடம் எப்படி இருந்தால் என்ன எண்ணம் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

      கேஜிஜி சாருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

      நானும் எங்கே போனாலும் (பயணங்களில்) பழைய துணி, கவர் எல்லாம் கொண்டு போவேன். நாங்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தை சுத்தம் செய்து விடுவேன் குப்பைகளை கவரில் போட்டுக் கொள்வேன்.

      அப்புறம் குப்பை தொட்டி இருக்கும் இடத்தில் போட்டு விடுவேன். என்னால் முடிந்தது.

      நீக்கு
  10. இயற்கையாய் அமைந்த குகைத்தோற்றங்கள் அழகு. வலதுபக்கம் குகையில் குகைக்கல்வெட்டு சமணப் படுக்கைகள் படத்தில் அந்த இடம் சரிவாக இருப்பது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குகைத்தோற்றங்கள் நன்றாக இருந்தது நிறைய கோணங்களில் எடுத்தேன் படங்கள்.
      சரிவும், மேடுமாக தான் இருக்கும். இந்த மாதிரி இடங்களுக்கு சமணர்கள் கைபிடி இல்லாமல் மேலே போய் வந்து என்று இருந்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  11. //கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களையும்,//

    அடேங்கப்பா... எவ்வளவு பழமை... அப்படியே மேலே பாறையைப்பாருங்கள்... தற்போதைய எழுத்துகளையும் செதுக்கியிருக்கிறார்கள் நம் மக்கள்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நம் மக்கள் தம் பெயரை பொறித்து சாதனை படைத்து விடுவார்கள்.

      அந்தக் காலத்தில் இதை செய்தவர்கள் தங்கள் பெயரை பொறித்துக் கொள்ளவில்லை.
      அதற்கு உதவி செய்தவர்கள் பெயரை பொறித்து இருக்கிறார்கள். தன்னமில்லா மக்கள்.

      நீக்கு
  12. ஒரு பக்க கைப்பிடியுடன் இருக்கும் படிகளை பார்த்தல் கால்வைத்து நடப்பது போல இல்லை! மலையில் கைவைத்து, கால்வைத்து ஏற பள்ளம் செதுக்குவார்களே... அப்படியிருக்கிறது! உச்சியில் சுனை அழகு, ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையில் கைவைத்து, கால்வைத்து ஏற பள்ளம் செதுக்குவார்களே... அப்படியிருக்கிறது!//

      ஆமாம் ஸ்ரீராம், அதனால் தான் என்னை வேண்டாம் என்றார்கள் கால்வலியோடு ஏறவேண்டாம் என தடுத்து விட்டார்கள்.

      உச்சியில் சுனையும் அதில் நீர் அருந்தி கொண்டு இருந்த குரங்கை படம் எடுப்பதற்குள் அது நடந்து போய் விட்டதாம் சார் சொன்னார்கள்.

      நீக்கு
  13. உச்சியில் ஒரு பெருமாள் கோவிலா? கோவிலின் உள்ளே படம் எடுக்கவில்லையா? அந்த மணியை அடித்தால் அங்கிருக்கும் குரங்குகள் தெறித்து ஓடிவிடும்! ஓ... அந்த கோவிலிருக்கும் இடத்துக்கும் மேலே கூடப் போக முடிகிறது... ஸார் சென்று போஸ் கொடுத்திருக்கிறார்! ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் போய் இருந்தால் படம் எடுத்து இருப்பேன், சார் இவ்வளவு படம் எடுத்து வந்ததே பெருசு! நான் மேலே நான் வரவில்லை என்பதால் பார்க்க வேண்டும் படம் எடுத்து வாருங்கள் என்றதால் இந்த படங்கள் வந்தது.

      பழகி போய் இருக்கும் மணி ஒலி கேட்டு குரங்களுக்கு.

      மலையின் உச்சிக்கு போக ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து உதவி கொண்டார்களாம்.
      மலையின் பின் புறத்து அழகை படம் எடுக்க மேலே ஏறி இருக்கிறார்கள்.
      சாரை அழைத்து சென்ற பேராசிரியர் சாரை படம் எடுத்து உதவி இருக்கிறார்.

      அன்று உற்சாகமாய் இருந்தார்கள்.
      இப்படி வயதானவர்களை கவலைகளை மறந்து இருக்க செய்யும் பசுமை நடை இயக்கத்தினருக்கு வாழ்த்துக்களை , பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.
      பசுமைநடை- 100க்கு பின் பிப்ரவரிக்கு பிறகு எங்கும் போகவில்லை அவர்கள்.
      இப்போது மீண்டும் ஞாயிறு முதல் ஆரம்பிக்கிறார்கள் எந்த இடம் என தெரியவில்லை.

      உங்கள் கருத்தை சாரிடம் சொன்னேன் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

      பதிவை ரசித்துப் பார்த்து ஒவ்வொன்றுக்கும் கருத்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. இத்தனை உயர்ந்த மலையில் ஏறுவதை நினைக்கவே பயமாக இருக்கிறது. சுற்றிவரத் தெரியும் பசுமை மனதுக்கு இனிமை.
    தங்கள் கால் வலி சரியாகி இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
    பசுமை நடை இயக்கம் போகும் இடங்கள் அனைத்துமே மிகப் பழமை வாய்ந்த இடங்களாக இருக்கிறதே,.அதுதான் மிக அழகு.
    சரித்திரம் இன்றியமையாதது.
    சமணப் படுகைகள் ஏறிப் பார்க்கத் திடமான மனதும்,உடல் வளமும்
    வேண்டும்.

    உச்சியில் பெருமாள் கோவிலும் சுனையும் இருக்கிறதா.
    அருமையான இடம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      சுகமான காற்றும் வெயில் இல்லையென்றால் ஏறிவிடலாம்.
      ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி கொண்டு ஏறி பார்த்து வந்து விட்டார்கள்.


      பசுமை நடை இயக்கத்தின் குறிக்கோளே இந்த மாதிரி இடங்கள் அழிந்து விடக் கூடாது அதை பாதுகாக்க வேண்டும் என்பது தான்.
      எந்த எந்த ஊருக்கோ போகிறார்கள். நம் ஊர் பெருமை தெரியாத மக்களாக இருக்க கூடாது என்பதும் அவர்கள் வேண்டுகோள்.
      ஆமாம் அக்கா, உடல்பலத்தை விட மனபலம் வேண்டும் தான் சமணர்கள் வழ்ந்த இடங்களை பார்க்க.

      பெருமாள் எப்படி இருந்தார், ஸ்ரீதேவி, பூதேவி இருந்தார்களா? கிராம கோவிலில் எந்த தெய்வங்கள் இருந்தது என்று கேட்டால் பார்த்தேன், மறந்து விட்டேன் என்ற பதில் வந்து விட்டது சாரிடமிருந்து.

      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  15. படங்கள் அழக தெளிவு
    ஒருமுறையேனும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை மீண்டும் தூண்டுகிறது தங்களின் பதிவு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்களுக்கு இந்த மாதிரி இடங்கள் பிடிக்குமே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பசுமை நடையில், தொந்தரவில்லாமல் உங்களால் நடக்க முடிகிறதா?

    உணவு ஏற்பாடு செய்துகொண்டு போனது அருமை. தன்னார்வலர்களைப் பாராட்டணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுமைநடையில் நம்மை குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லி விடுவார்கள்.
      எல்லோருக்கும் பொதுவான ஒரு சந்திப்பு இடத்தை சொல்லி விடுவார்கள்.
      அங்கிருந்து நம் வாகனங்களில் தான் பயணம்.

      நாம் பார்க்கும் இடத்தில் தான் நடை.

      உணவு வெகு தூரம் போகும் போது மட்டும் தான்.
      காலை ஆறுமணிக்கு புறப்பட்டு போய் 9மணிக்கு திரும்புவதாக இருந்தால் உணவு கொண்டு வர மாட்டார்கள்.

      அவர்களே கொண்டு வந்து விடுவார்கள் உணவு.
      நாம் பண உதவி செய்யலாம் வரும் போது.
      தன்னார்வலர்கள் அடங்கிய நண்பர்கள் குழு அமைத்த இயக்கம் பசுமை நடை.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  17. தெளிவான துல்லியமான படங்கள்... நாங்களும் சுற்றி வந்த உணர்வு...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  19. //இந்த மலையில் குகைத்தளவிளிம்பில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களையும், சமணக் கற்படுக்கைகளை பார்த்து விட்டு.. //

    பிராமி எழுத்து என்பது இடப்பக்கத்திலிருந்து வலப்புறமாக எழுதும் முறை என்கிறார்கள். அதனால் ஒரு வரியை நாம் வாசிக்கும் பொழுதும் இடப்புறத்திலிருந்து ஆரம்பித்து வலப்புறம் நகர வேண்டும். அப்படிப் படித்துப் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      பிராமி எழுத்தை பற்றி நீங்கள் சொன்னதற்கு நன்றி.
      நான் படித்து பார்க்கவில்லை.

      நீக்கு
  20. இந்த இடங்களையெல்லாம் பார்த்தது நினைவில் கொள்ளதக்க முயற்சியாகவும் மனசில் ஏற்கனவே அறியாத புதுச் சிந்தனைகளை தோற்றுவித்திருக்கும் என்பது மட்டும் துல்லியமான அனுபவ உண்மையாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் ஜைனமதம், சமணர்கள் வாழும் இடம் அவர்கள் செய்த நற்பணிகள் எல்லாம் படித்து இருக்கிறேண்.
      வரலாறை விருப்பபாடமாய் படித்து இருக்கிறேன். வரலாறு பிடிக்கும். இந்த பயணங்கள்
      நினைவில் வைத்துக் கொள்ளவும் புது அனுபவங்களை பெறவும் உதவும் நீங்கள் சொன்னது போல்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  21. எல்லாப் படங்களும் அருமை, அழகு, தெளிவான படப்பிடிப்பு! கூடவே வரலாற்றுத் தகவல்களையும் கொடுத்தது இன்னும் சிறப்பு. எனக்கும் வரலாறும், வரலாற்றுக் கதைகளும் பிடிக்கும். ஆனால் இம்மாதிரியான இடங்களுக்குச் செல்லவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      உங்களுக்கும் வரலாறும், வரலாற்றுக் கதைகளும் பிடிக்கும் என்பது தெரியும் அதனால் தான் இந்த இடத்தை பார்க்க கூப்பிட்டேன்.
      நேற்று ஆனைமலைக்கு போய் விட்டு கால் வலி.
      இருந்தாலும் ஆசை விட மாட்டேன் என்கிறது.

      நீக்கு
  22. குப்பைகளைப் பார்த்தால் தான் மனம் கலங்குகிறது. கூடியவரை மலைமேல் குப்பைகள் காணப்படவில்லை. ஆனால் வரும் மக்கள் போட்டுவிட்டுச் செல்லும் குப்பைகள்! :( மக்கள் மனம் மாற வேண்டும். இம்மாதிரியான இடங்களின் முக்கியத்துவம் புரியணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தவர்கள் அவர்கள் குலதெய்வ வழி போலும் அதனால் அங்கு மட்டும் கும்பிட்டு விட்டு பொங்கல் வைத்து சாப்பிட்டு விட்டு குப்பையை போட்டு விட்டு போய் இருக்கிறார்கள்.

      மேலே போய் இருந்தால் அங்கும் குப்பை போட்டு இருப்பார்கள்.

      மக்கள் நம் இடம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டும்.
      பல நாட்டு மனிதர்களும் நம் நாட்டை வந்து பார்த்து போகிறார்கள் அதற்காகவாது சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  23. மலை மேல் ரொம்ப அழகாக இருக்கிறது காட்சிகள்.

    பாறைகளின் அமைப்பும், நடுவில் குகை போன்று இடமும் ரொம்ப அழகாக இருக்கிறது.

    மாயன் மண்டபம் அட! இங்கு சில காட்சிகள் எடுக்கலாம் அழகான கதைக்கு உதவும் என்றும் தோன்றியது.

    மேலே சுனையும் (எப்படி வந்தது அங்கு? மழை நீர் பாறையின் பள்ளத்தில் இருக்கிறதா இல்லை எப்படி அவ்வளவு உயரத்தில் சுனை இல்லையா? மண் பரப்பு இருக்குமோ? நீர் அருந்த குரங்கார் செல்லம்!!!!

    //போகும் வழியில் மலையின் பக்கவாட்டில் இரண்டு பேர் சாமரம் வீச நடுவில் அரசமரத்தடியில் முக்குடையோடு தீர்த்தங்கர் சிலையொன்று காணப்படுகிறது. //

    இந்தப் படம் அசத்தல்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      நேரம் கிடைக்கும் போது பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  24. மலையின் மறு புறம் வைகை நதி வாவ்!!! சோழவந்தான் என் உறவினர் ஒருவரின் புகுந்த வீடு. மறுபுறம் நல்ல பச்சையாக இருக்கும் போலத் தோன்றுகிறதே...

    நடுவே பசுமையாக மரங்கள். தென்னை மரங்கள் என்று அழகான இடம்.

    படங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன கோமதிக்கா. மாமா எடுத்த படங்களும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோழவந்தான் மிகவும் இயற்கை சூழ்ந்த ஊர். பசுமைக்கு கேட்கவேண்டும்.தென்னம் தோப்பு துறவு, வயல், வகை ஆறு என்று எல்லாம் அழகு அங்கு.

      பதிவில் எல்லாவற்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு