செவ்வாய், 26 மார்ச், 2019

குன்றத்துக் குமரன்

திருப்பரங்குன்றம் 
12/3/2019, செவ்வாய்க்கிழமை, கார்த்திகை, சஷ்டி ஆகியவை சேர்ந்து வந்த விஷேசமான  நாள் என்று திருப்பரங்குன்றம் போய் இருந்தோம்.

அங்கு போனால் பங்குனித் திருவிழா கொடியேற்றம் அன்று காலைதான் நடந்து இருந்தது.

தற்செய்லாக  முதல் நாள் விழா சமயம் உற்சவர்  எழுந்தருளல்  கண்டு மகிழும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

 அங்கு எடுத்த படங்கள், காணொளி  இவை இந்தப் பதிவில்.

அன்று பதிவு செய்ய முடியவில்லை. இன்று சஷ்டி, செவ்வாய்க்கிழமை  இன்றும் விருந்தினர் வருகை அவர்கள் வந்து போன பின்   முருகன் அருளால் பதிவு செய்து விட்டேன்.

தேரைச் சுத்தப்படுத்தி வைத்து இருந்தார்கள்

விழாப் பந்தல் அழகாய் இருந்தது
கோவில் யானைக்கு   அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள்.
ஒருவர் பசும் வாழை இலைகளைக் கொண்டு வந்து கொடுத்தார், யானை சாப்பிட

குதிரை வாகனம் - பள பள என்று துடைத்து வைத்து இருந்தார்கள்.

கோவிலுக்குள் அலங்காரக் குடை
 பலவித கொடிகள் தாங்கிய பல்லக்கு

கொடிகள், குடைகள் எல்லாம் இறைவன் முன் போக ஆயத்தமாய் இருக்கிறது.

100 ரூபாய் டிக்கட் வாங்கி  மூலவரை நன்கு தரிசனம் செய்து விட்டு உற்சவரைப் பார்க்க வந்தோம்.
சுப்பிரமணிய சுவாமி,  தெய்வானை அம்மன் உற்சவருக்கு பூஜைப் பார்த்தோம்.

கோவிலுக்குள் அலங்கார மண்டபத்து அருகில் தூணில் இருக்கும் சாமியை 
திருமணம் ஆனவர்களும், கன்னிப்பெண்களும்  வணங்கிச் சென்றார்கள் என்ன சாமி கும்பிடுகிறார்கள் என்று பார்த்தபோது ரதி, மன்மதன் சிலை என்றார்கள்.

ஒரு குடும்பத்தினர் ரதி மன்மதன் சிலைக்குச் சந்தனம் பூசி, மாலை அணிவித்தார்கள். இனி குடும்பம்  நன்றாக இருக்கும் என்று ஒரு அம்மா சொல்லிக் கொண்டார்கள். 
 சிவனும் நந்தியும் - தூணில் இருந்த இந்த சிலைக்கும் எல்லோரும் சந்தனம் பூசி வழிபட்டுச் சென்றார்கள்.


கோவிலுக்குள் சுற்றி வந்து பின் வீதி உலா போகும் போல, சுவாமி. நான் கோவிலுக்குள்   சுற்றி வர எழுந்த போது பார்த்து விட்டு வந்து விட்டோம்.
(சின்ன காணொளி தான் -அவசியம் பாருங்கள்)


'கந்தனும் காவடியும்' என்ற தலைப்பில் பேசிக் கொண்டு இருந்தார்கள்


கொஞ்ச பக்தர்கள் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.


  "கந்தன் காலடியை வணங்கினால்  கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போல" என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
                                                கந்தன் திருவடி சரணம்.
                                                       வாழ்க வளமுடன்.

37 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    காலை திருப்பரங்குன்ற தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நான் முன்பு ஒருமுறை பார்த்தபோது தேரைச் சிறை செய்து வைத்திருந்தார்கள்!!! இப்போது ரிலீஸ் செய்து விட்டார்கள் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவிழாவிற்கு தேரை ரிலீஸ் செய்து வைத்து இருக்கிறார்கள்.
      முடிந்து விட்டது தேர் திருவிழா . மீண்டும் சிறை படுத்தி இருப்பார்கள்.

      நீக்கு
  3. இந்த வெயிலில் யானை மேல் இப்படி ஒரு படுதா போட்டால் வெயில் உரைக்காமல் இன்பமாய் இருக்குமா? அல்லது கசகசவென்று உணருமா அந்த யானை?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் யானைக்கு திருவிழா என்றால் அலங்காரம் இல்லாமலா?
      என்ன செய்வது? சில கஷ்டங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும்.அதுவும் அந்த யானை சின்ன வயது , துறு துறு என்று இருக்கும் மேலே துணியை போர்த்துவதற்குள் யானை பாகன் கஷ்டபட்டு விட்டார்.

      நீக்கு
  4. புகைப்படத்தில் அருகிலும், காணொளியில் சற்றே தூரத்திலுமாக உற்சவர் தரிசனம். நன்றி.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சவர் அமர்ந்து இருந்த இடத்தில் வெளிச்சம் இருந்தது, அவர் கிளம்பி வரும் இடம் இருட்டு. அதனால் சாமி தெரியவில்லை, திருவிழாவில் வீதிஉலா கிளம்பும் காட்சியை பார்த்த திருப்த்தி மட்டுமே!

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இந்த செவ்வாய்க்கிழமைக்குத் தரிசனம் கொடுத்த முருகனுக்கு நமஸ்காரம். அருகில் சென்று
    முருகனைச் சேவித்த பலன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானது.

    அவனைப் போல அழகன் யார்.
    யானைக்கு வாழை இலை கொடுத்தவர் வாழ்க. குளிர்ச்சியாக இருக்கும்.
    குட்டியானை அழ்கா இருக்கு. காணொளியும் நன்றாக இருந்தது.
    இன்று இரண்டு கோவில்களை வீட்டிலிருந்தே தரிசனம் செய்தாச்சு.
    நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    முருகன் அருளால் மகளுக்கு திருமண நிச்சியமா? மகிழ்ச்சி.

    முருகன் என்றால் அழகு அல்லவா! அவன் அழகுக்கு கேட்க வேண்டுமா!
    யானைக்கு மேலே ஆடை உடுத்தும் சமயம் அவர் இலையை கொடுத்தார், உடையை உடுத்த விடாமல் சிறிது வம்பு செய்தது யானை.

    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  7. ஆனந்த தரிசனம்...

    முருகன் திருமால் மருகன்..
    குற மாதொடு குஞ்சரியும்
    குலவிட மயில் மீதமர்ந்த முருகன்....

    சீர்காழியாரின் பாடல் காதில் ஒலிக்கிறது..

    நேரில் கண்டது போன்றதொரு உணர்வு...

    முருகன் திருவருள்
    முன்னின்று காக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்.
      சீர்காழியின் பாடல் காதில் ஒலிக்க தரிசனம் செய்தது அருமை.

      முருகன் திருவருள் அனைவரையும் காக்க வேண்டும்.

      உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  8. நேரில் சென்று பார்த்த உணர்வு...

    படங்களும் காணொளியும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      காணொளி கண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  9. பங்குனி திருவிழா மிக அருமை அக்கா. ஏதோ ஊரில் நிற்பது போல் இருக்கு காணொளி பார்க்க. எங்க ஊர்களிலும் திருவிழா களை கட்டும். அங்கும் பங்குனி,சித்திரை எனில் மாறிமாறி கோவில்களில் திருவிழா ஆரம்பமாகிவிடும். அதுவும் சித்திரா பெளர்ணமி,ஆடி அமாவாசை எனில் பல கோவில்கள் கொடியேறி அன்று தீர்த்த திருவிழாவாக இருக்கும். ஊர்கள் அங்கு அருகருகே இருப்பதால் செல்வது ஈசி. ஆனா எங்கு செல்வது என்பதில் திண்டாடிவிடுவோம்.சொற்பொழிவு கேட்க பிடிக்கும் இருந்து கேட்டுவிட்டே வருவேன். உங்க பதிவு எனக்கு ஞாபகங்களை நினைவுபடுத்தியது. முடிந்தவரை எல்லாகோவில்களுக்கும் சென்று தரிசியுங்கள். கோவிலுக்கு சென்று வந்தால் மனமகிழ்ச்சியாக இருக்கும். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
      பங்குனி , சித்திரை வந்து விட்டால் திருவிழாக்கள் களை கட்டுவது எல்லா ஊர்களிலும் தான் அம்மு.

      எங்கு சென்று பார்ப்பது என்று திண்டாடிவிடுவோம் என்பது உண்மை.
      சொற்பொழிவு கேட்க பிடிக்கும் எனக்கும். கோவையில், சிவகாசியில் எல்லாம் பெரிய மனிதர்களின் சொற்பொழிவு கேட்டு இருக்கிறேன்.

      உங்களுக்கு பழைய நினைவுகள் வந்ததும், அதை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி.
      அம்மு.
      அடுத்து சித்திரை திருவிழா வந்து விடும் இங்கு.
      முடிந்தவரை கோவில் சென்று தரிசனம் செய்கிறோம், மனமகிழ்ச்சி, நிம்மதி இரண்டும் கிடைக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  10. திருப்பரங்குன்றத்தில் தேர் வீதி உலா வருவதை நான் பார்த்து பதிவு செய்திருக்கிறேன் பார்க்க சுட்டி இதோ https://gmbat1649.blogspot.com/2016/02/2_1.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.
      பார்க்கிறேன் சார்.

      நீக்கு
  11. ஆவ்வ்வ்வ் திருப்பரங்குன்றம் தரிசனம் கிடைச்சதில் மட்டற்ற மகிழ்ச்சி. 24.03.. தேர் எனப் போட்டிருக்கு. அன்றுதான் எங்கள் அண்ணன் அண்ணியின் திருமணநாளும் கூட, ஆனா அவர்கள் திருமணத்தின்போது, 24 ம் திகதியும் பங்குனி உத்திரமும் சேர்ந்த நாளாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      உங்கள் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்துக்கள்.

      நீக்கு
  12. ஆனைப்பிள்ளை , குழந்தைபோல கீழே குனிந்தெல்லாம் மேக்கப் போட விடுறார்ர்.. அவருக்கும் மேக்கப் பிடிக்கும் போல:).

    தேர் முட்டி நல்ல கருங்காலி மரத்திலே செய்ததைப்போல இருக்கு. மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனையார் குனித்து கொடுத்தால் தான் அவர் மேல் அந்த அலங்கார விரிப்பை சரியாக போட வரும். அதனால் அவர் குனிந்து கொடுக்கிறார். இந்த யானையாரும் குழந்தை தான்.

      தேர் அழகுதான்.

      நீக்கு
  13. மிக அழகிய படங்கள்.. நேரில் பார்த்த மகிழ்ச்சி மலருது. ஏன் கோமதி அக்கா இரவிலோ அங்கு தேர் இழுப்பார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, காலைதான் தேர் இழுப்பார்கள், அதுவும் அதிகாலையில். வெயிலுக்கு முன் தேர் முட்டிக்கு வந்து விடும்.
      அறிவிப்பு பலகை பார்க்கவில்லையா அதிகாலை 5.45 6.15 என்று போட்டு இருக்கிறார்கள். தேருக்குள் சாமியை வைத்து பூஜை முடித்து 6.15 க்கு இழுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  14. சமீபத்திய மதுரை விஜயத்தின் பொழுது, ரதி, மன்மதன் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டால் திருமண வயதில் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நாடாகும் என்றார் அண்ட் கைட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
      நான் பலமுறை போய் இருக்கிறேன் இந்த முறைதான் இந்த ரதி மன்மத சிலையை பார்த்து இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் விரைவில் திருமண நடைபெறத்தான் கன்னி பெண்கள் வணங்கி கொண்டு இருந்தார்கள் போலும்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. மன்னிக்கவும், திருமணம் நடக்கும் என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  16. காலை வேளையில் சிறப்பான தரிசனம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. படங்களும் பகிர்வும் அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பல ஆண்டுகள் ஆகிவிட்டன தென்பரங்குன்றம் போய்! நல்ல தரிசனம்.காணொளி ஏற்கெனவே பார்த்த நினைவு. உங்கள் முகநூல் பக்கத்தில் போட்டீர்களோ? கயல் கொடிதான் பிரதானமாகத் தெரிகிறது. பாண்டியன் அல்லவா?:))))

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    காணொளி முக நூலில் போட்டு இருந்தேன், பார்த்து விட்டீர்கள் அங்கு.
    ஆமாம், கயல் கொடி பிரதானமாகத் தெரிகிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ரதி-மன்மதன் சிலை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.
    அழகிய காட்சிகள் சகோ.

    குலதெய்வ கோவில் திருவிழா வேலைகள் காரணமாக வலை வரவு குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      நினைத்தேன், வேலைகள், ஊர் பயணம் அதுதான் காணோம் என்று.
      ரதி -மன்மதன் சிலை இப்போதுதான் நாங்களும் பார்த்தோம்.
      அந்த இடத்தில் உற்சவர் உலா வருவதை படம் எடுக்க நின்றதால் தெரிந்தது .
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. திருப்பரங்குன்றம் ,அழகு முருகன் தரிசனம் ....

    மிக சிறப்பு மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு