புதன், 30 ஜனவரி, 2019

குருவிக்குஞ்சு பாடிய வாழ்த்துரை

Image may contain: bird


No photo description available.
//கதவு இடுக்கு வழியாக அலைபேசியில் எடுத்த படம்..//

கதவு நாதாங்கி, குருவி, சாதம் -- இந்த மூன்றையும் இணைத்து யாராவது கவிதை ஒன்று எழுத முன்வருவார்களா?..

ஜீவி சார் கவிதை எழுத சொன்னால் உடனே எழுதிவிடுவார், நம் சகோ துரை செல்வராஜூ சார். நீங்களும் கவிதை எழுதத் தெரிந்தவர் தான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நான் சொன்னது போல் சகோ அழகாய்க் கவிதை எழுதி விட்டார் குருவிக்குஞ்சு பாடுவது போல்.

குருவிக்குஞ்சு பாடிய வாழ்த்துரை...
--------------------------------

கூட்டை விட்டுப் பறக்கத்தான்
ஆசைப்பட்டேன்...
கூடும் அன்பின் நலங்காணப்
பிரியப்பட்டேன்...

சிறகிருந்தும் விரிக்கத்தான்
ஆகலையே...
குளிர் வானில் சிறகடிக்கக்
கூடலையே...

அன்னை அவள் இரைதேட
அப்பன் அவள் துணையாக
யாரும் இல்லா வேளையிலே
என்ன இது விபரீதம்!..

விழுந்த இடம் நல்ல இடம்
உயிர் பிழைத்தேன்..
ஆனாலும் பசிக்கிறது..
மனம் தவித்தேன்...

கதவு நாதாங்கி திறந்து கொள்ள
நான் பயந்தேன்..
உதவு மனந்தாங்கி பிடிசாதம்..
நான் வியந்தேன்...

குருவி எந்தன் பசிதீர
சோறு வைத்தாய்...
அருவி எனும் அன்பு
அடடா... நீயும் என்தாய்!...

கூடலிலே வாழ்கின்றாள்
மீனாட்சியம்மா..
அவள் ஆசியுடன் வாழவேணும்
கோமதியம்மா!..

எல்லோரும் படிக்க இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
சகோ துரைசெல்வராஜூ வரகவி என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஜீவி சார், எப்படி இருக்கிறது கவிதை? உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார் துரை செல்வராஜூ.

ஜீவி சார், உங்களுக்கும், சகோ துரைசெல்வராஜூக்கும் என் நன்றிகள்.

Image may contain: bird
Image may contain: bird and outdoor
நேற்று மதியம்  பத்திரமாய் பறந்து சென்று விட்டது.

கூட்டைவிட்டுப் பறக்க ஆசை முந்திய பதிவை படிக்கவில்லை என்றால் படிக்க சுட்டி.
                                                 வாழ்க வளமுடன்.

37 கருத்துகள்:

  1. வாழ்க நலம்...

    எனது கருத்துரைக்குத் தனிப்பதிவா!...

    நான் வரகவி எல்லாம் இல்லை...
    ஏதோ மனதில் பட்டதைச் சொல்கிறேன்..

    உங்களது அன்பினில் மெய் சிலிர்க்கிறது...

    வாழ்வாங்கு வாழட்டும் வையகம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      பதிவை முன்பே படித்தவர்கள் உங்கள் கவிதையை படித்து இருக்க முடியாது இல்லையா?உங்கள் கவிதையை படித்து நான் மகிழ்ந்தது போல் நம் நண்பர்கள் எல்லோரும் மகிழ இங்கு பகிர்ந்தேன். ஜீவி சார் வந்து படிப்பார் இல்லையா?
      உடனே மனதில் பட்டதை வெளிபடுத்தும் திறன் எத்தனைப்பேருக்கு வாய்க்கும் அதுவும் கவிதையாக. உங்கள் திறமையைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
      கவிதை நிறைய எழுதுங்கள்.
      வாழ்த்துக்கள்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
      வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

      நீக்கு
  2. அந்த குருவிக்குஞ்சு நலமுடன் பறந்து விட்டது என்றாலும்
    படங்களைப் பார்க்கும் போது மனம் நெகிழ்கின்றது...

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்று மகாகவி பாடியது இதற்குத் தானோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமுடன் பறந்து விட்டது என்றாலும் குருவி இல்லாத இடம் வெறுமையாக இருப்பதைப் பார்த்து மனம் கலங்கத்தான் செய்கிறது.

      பத்திரமாய் பறக்க வேண்டும் என்று எண்ணிய மனம் போய் விட்டதே என்று வருந்துகிறது. விசித்திர மனம்.

      பாரதி சொன்னது போல் நம் இனம் தான் .
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. குவைத்ஜி அவர்களின் கவிதை ஸூப்பர்.
    குருவி நலமுடன் பறந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. மிக மகிழ்ச்சி மா...



    கதவு நாதாங்கி திறந்து கொள்ள
    நான் பயந்தேன்..
    உதவு மனந்தாங்கி பிடிசாதம்..
    நான் வியந்தேன்...

    குருவி எந்தன் பசிதீர
    சோறு வைத்தாய்...
    அருவி எனும் அன்பு
    அடடா... நீயும் என்தாய்!...


    இந்த வரிகள் மிக அற்புதம் ....வாழ்த்துக்கள் துரை சார் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதாபிரேம், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. துரை அண்ணே அசத்திப்புட்டீங்க. இப்படி ஒரு அழகான கவிதை வெளிவர கேட்ட ஜீவி அண்ணாவும் வாழ்த்துகள்!

    துரை அண்ணா நீங்க எப்படி இப்படி உடனே கவிதை எல்லாம் எழுதறீங்க!! அசத்தல். வியக்கிறேன். ரொம்ப அருமையா எழுதறீங்க....ரசித்தேன்...

    கோமதிக்காவுக்கும் நன்றி! இங்கு பகிர்ந்தமைக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      ஜீவி சாருக்குதான் முதலில் வாழ்த்து சொல்லவேண்டும் கீதா , அவர் கேட்காவிட்டால் இப்படி கவிதை கிடைத்து இருக்குமா?
      ஜீவி சாரை வாழ்த்தியதற்கு நன்றி.

      கேளுங்கள் கொடுக்கபடும் என்பது போல் கேட்டால் கிடைக்கும் கவிதை சகோ துரை செல்வாராஜூ அவர்களிடமிருந்து.

      உங்கள் உற்சாகமான கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. உண்மையில் -
      கூட்டை விட்டுப் பறக்க ஆசை -
      என்ற வார்த்தைகள் தான் என்னைத் தூண்டின...

      நாம கடைசியா வந்திருக்கோமே... என்று , கருத்துரைகளைப் படிக்கும் போது அங்கே கவிதை உறுதியாகிப் போனது...

      அதுவும் குருவிக்காக ஒன்றும்
      ஜீவி அவர்களுக்காக ஒன்றும் என இரண்டு கருக் கொண்டன...

      Stores ல் அதிக வேலை..

      விடியற்காலை 4 மணிக்கு எழுகின்ற நான் மாலை 6 மணிக்கு வருவதென்றால்....

      தூக்கம் கண்களை அழுத்தியது..

      இரண்டையும் ஒன்றாக்கி பதிவில் இட்டேன்...

      இப்போது தான் தெரிகிறது...

      பிரியப்பட்டேன் - என்பது
      புறப்பட்டேன் - என்று
      இருந்திருக்கலாம்..

      நீக்கு
    3. //அதுவும் குருவிக்காக ஒன்றும்
      ஜீவி அவர்களுக்காக ஒன்றும் என இரண்டு கருக் கொண்டன...//

      கரு அருமையாக அமைந்து போனது மகிழ்ச்சி.
      அதிகவேலை சமயத்தில் கிடைக்கும் நேரத்தில் ஓய்வுக்கு முக்கியம் கொடுக்காமல், நட்புக்கு முக்கியம் கொடுத்து கவிதை எழுதியதற்கு நன்றி.

      உங்களை எழுத தூண்டிய கருத்துரைகளை கொடுத்தவர்களுக்கு நன்றி.
      உங்களுக்கும் நன்றி நன்றி.


      நீக்கு
  6. அருமையான கவிதை. முகநூலிலும் பகிர்ந்திருப்பதைப் பார்த்தேன். குருவி நல்லபடியாகப் பறந்து தன் வாழ்க்கையைத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே ஒரு முறையும் துரை உங்களுக்காகக் கவிதை எழுதி உள்ளார். அடுத்தடுத்து இம்மாதிரிப் பல கவிதைகளைப் பரிசாகப் பெறும்படி உங்கள் எழுத்து அமையவும், துரைக்குக் கவிதை எழுதும் சந்தர்ப்பம் அமையும்படியும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், கீதா, வாழ்க வளமுடன்.
      குருவி பத்திரமாய் பறந்து போனதற்கு உங்கள் எல்லோர் வாழ்த்துக்களும் தான்.
      எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும் விஷயம்.
      சகோ துரை முன்பு பேரனுக்கு வாழ்த்துக் கவிதை, சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை எல்லாம் எழுதினார், இப்போது குருவி வாழ்த்துவதாய் என்னை வாழ்த்தி இருக்கிறார். அதற்கு மகிழ்ச்சிதான்.
      கவிதை எழுதியதற்கு காரணம் எல்லோருடைய கருத்துரைகள் என்கிறார்.
      அதனால் இந்த முறை நீங்கள் எல்லோரும் அவரை எழுத வைத்து இருக்கிறீர்கள் அனைவருக்கும் நன்றிகள். முக்கிய காரணம் ஜீவிசார். அவர்தான் கரு கொடுத்து கவிதை எழுத கேட்டது.
      உங்கள் பிரார்த்தனைக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. குருவி சிறகின் பலம் உணர்ந்தது என்பதை முகநூல் பதிவில் நானும் படித்து மகிழ்ந்தேன். தோல்வியை வெற்றியாக்கிக்கொண்ட அதன் முயற்சி பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம் வாழ்க வளமுடன்.
      தோல்விதானே வெற்றிக்கு அடிப்படை.
      அதன் முயற்சி அதற்கு வெற்றி.
      அழகாய் சொன்னீர்கள் ஸ்ரீராம்.
      முயற்சி இல்லையென்றால் விழுந்து கிடக்க வேண்டியதுதான்.
      பாபா நாடகத்தில் இன்று தாய்க்குருவி உணவு ஊட்டிக் கொண்டே இருக்காதாம், முயற்சி செய்யாத குஞ்சை தள்ளிவிடுமாம் , அப்போது அதற்கு அடிபடுமே என்று நினைக்காதாம். அப்போதுதான் குஞ்சு பறக்க விழையுமாம்.
      அரவிந்தர் அன்னையும் சொல்கிறார் முயற்சி இல்லா வாழ்க்கை இறப்புக்கு சமானம் என்று.

      நீக்கு
  8. துரை செல்வராஜூ ஸாரின் கவிவரிகள் பிரமாதம். எல்லா திசையிலும் கலக்குபவர் அவர். பாராட்டுகள் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், சகோ துரைசெல்வராஜூ பன்முகதிறமையாளர்.
      பாராட்டுக்களுக்கு உரியவர்.

      நீக்கு
    2. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. அனுமனின் திறன்வெளிப்பட ஒரு ஜாம்பவான் தேவைப்பட்டார் துரை சாரின் கவிதை வெளிப்படவுமொரு உந்து கோலாக ஜீவிசாரின் வேண்டுதலிருந்ததது வழக்கம் போல் பின்னின்று இயக்கும் ஜீவிசாரையும் கண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      துரை சாரின் கவிதைக்கு தூண்டுகோல் ஜீவிசாரின் கேள்விதான்.
      ஜீவி சார் , எல்லோரும் எழுத தூண்டுகோலாக இருந்து இருக்கிறார் என்பது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    குருவி குஞ்சு நலமுடன் பறந்து சென்றது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.தாயும் சேயும் இனி பிரியாமல் நலமாக வாழட்டும். சில நாட்கள் அருகிலிருந்து கவனித்து கொண்ட தங்களைத்தான் சற்று பிரிவுத்துயர் தாக்கியிருக்கும்.

    குருவி குஞ்சு வாழ்த்துரைப்பதாக சகோதரர் துரை செல்வராஜ் எழுதியிருந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது. அழகாக எழுதிய அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர் எழுதியிருந்த கவிதையை வெளியிட்ட தங்களுக்கும் நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிகரன், வாழ்க வளமுடன்.
      குருவிக்குஞ்சு நலமாக பறந்து சென்றது எனக்கு தான் நீங்கள் சொல்வது போல் வெறுமை சூழ்ந்தது. குருவிகளின் கீச் கீச் சத்தம் இல்லாமல்.

      வழக்கமாய் முட்டையிட்டு குஞ்சு பொரித்து போகும் வரை வீட்டை சுற்றி வலம் வந்து கீச் கீச் ஒலி கொடுக்கும் அது இல்லாமல் இருப்பது என்னவோ போல் இருக்கும்.
      இப்போது இரண்டு நாள் எங்கள் வீட்டில் குஞ்சு இருந்து போனது இன்னும் வருத்தமாய் இருக்கு. பத்திரமாய் பறந்து போனது மகிழ்ச்சி தருது வீட்டைவிட்டு போனது வருத்தம் தருது. இந்த் மனம் இருக்கே! அதை என்னவென்று சொல்வது?

      உங்கள் கருத்துக்கு நன்றி. சகோ துரை அவர்கள் கவிதையை பாராட்டியதற்கும் நன்றி.

      நீக்கு
  12. வாசித்து முடித்தவுடன் மனத்தில் தோன்றுவதை மறைக்காமல் சொல்லி விடுவது என் வழக்கம்.
    அந்த வழக்கத்தில் தான்---
    கிண்ண சாதம், குருவி, அரைகுறையாக திறந்திருந்த கதவில் தூக்கலாகத் தெரிந்த நாதாங்கி
    வித்தியாசமான இந்தப் படம் என் மனதைக் கவர்ந்தது.
    இந்த மூன்றையும் இணைக்கிற மாதிரி ஒரு முக்கோண கவிதை ஒன்றை எழுதிப் பின்னூட்டமாகப் போட்டு விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன்.
    நினைத்தவுடம், கோமதியம்மா என்றால் சட்டென்று என் நினைவுக்கு வரும், அவரது தனித்தனமையான 'வாழ்க, வளமுடன்' என்னும் மகான் வேதாத்ரி மகரிஷியின் வாழ்த்துடன் முதல் வரியையும் எழுதி விட்டேன்.
    அந்த நேரத்தில் தான் வீட்டின் அழைப்பு மணி அடித்தது. எங்கள் குடியிருப்பில் வாழும் நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.
    வந்தவருடன் பேசி அனுப்பி, கணினியை உயிர்ப்பித்து, விட்ட இடத்தில் தொடர நினைக்கையில், தான் அனத எண்ணம் மனசில் பளிச்சிட்டது. 'இதையே இன்னொருத்தர் செய்தால் உற்சாகம் இரட்டிப்பு ஆகும் அல்லவா?' எண்ணம் வார்த்தைகளாய் வெளிப்பட உடனே அன்பர் துரை செல்வராஜூ அவர்கள் 'எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்' கணக்காய் அழகான வார்த்தைக் கோர்வையுடன் கவிதை வெளிப்பட்டு விட்டது.
    இந்தப் பதிவுலகம் தான் எவ்வளவு திறமைசாலிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது?-- என்பது நான் அடிக்கடி வியக்கிற ஒன்று. அந்த அடிக்கடி இப்பொழுதும் நடந்து நாம் கண்டு களிக்கிற வாய்ப்பை அன்பர் செல்வராஜூ நமக்கெல்லாம் அளித்திருக்கிறார். கவிஞரின் கவிதை வரிகளே எல்லோருக்குமான ஆசி ஆகட்டும்! கூடலில் வாழும் மீனாட்சி அம்மா அருளாசி எல்லோருக்கும் கிட்டட்டும்!
    இத்தனையும் தாண்டி இந்த கவிதைகான தலைப்பு இந்தக் கவிதை வரிகளிலேயே தன்னிச்சையாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அழகைப் பார்த்து வியந்தே போனேன்!

    ஆம்! 'நீயும் என் தாய்' என்ற முத்திரை வரி தான் இந்த அழகு கவிதைக்கான தலைப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

      //கிண்ண சாதம், குருவி, அரைகுறையாக திறந்திருந்த கதவில் தூக்கலாகத் தெரிந்த நாதாங்கி//

      குருவி பயந்து போய்விடக்கூடாது என்று மெதுவாய் கதவை திறந்து சாதத்தை வைத்து விட்டு குருவியை மட்டும் நினைத்து எடுத்தேன் வேறு எதையும் கவனிக்கவில்லை.
      நாதாங்கி தூக்கலாக தெரிந்து கவிதைக்கு வித்திட்டுவிட்டது.

      உங்கள் மனதில் தோன்றிய எண்ணத்தை பூர்த்தி செய்து விட்டார் சகோ துரைசெல்வாராஜூ அவர்கள்.

      //'வாழ்க, வளமுடன்' என்னும் மகான் வேதாத்ரி மகரிஷியின் வாழ்த்துடன் முதல் வரியையும் எழுதி விட்டேன்.//

      ஆஹா! அந்த கவிதை பினூட்டமும் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.


      //அன்பர் துரை செல்வராஜூ அவர்கள் 'எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்' கணக்காய் அழகான வார்த்தைக் கோர்வையுடன் கவிதை வெளிப்பட்டு விட்டது.//

      அழகாய் சொன்னீர்கள் சார். இலக்கிய ஆரவலர் அல்லவா நீங்கள்.


      //கூடலில் வாழும் மீனாட்சி அம்மா அருளாசி எல்லோருக்கும் கிட்டட்டும்!//

      எல்லோருக்கும் மீனாட்சி அருள் கிடைக்கட்டும் .

      //இந்த கவிதைகான தலைப்பு இந்தக் கவிதை வரிகளிலேயே தன்னிச்சையாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அழகைப் பார்த்து வியந்தே போனேன்!

      ஆம்! 'நீயும் என் தாய்' என்ற முத்திரை வரி தான் இந்த அழகு கவிதைக்கான தலைப்பு!//

      முத்திரை வரி நான் சிலிர்த்தேன் அன்பில்.

      நான் பெரிய எழுத்தாளனி இல்லை இருந்தாலும் என் பதிவையும் படித்து கருத்துக்களை சொல்லி எப்போதும் உற்சாகபடுத்தும் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி சார்.
      சகோவின் கவிதையை அழகாய் பாராட்டியது மனதுக்கு நிறைவு அளிக்கிறது.

      அன்பான கருத்துக்கு நன்றி நன்றி.







      நீக்கு
  13. ஆஆவ்வ்வ்வ்வ் குருவிக் குஞ்சுக் கவி அழகு....
    ஓ அப்பா அம்மாவோடு பறந்துவிட்டதோ... மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      தன் பெற்றோர்களுடன் பறந்து விட்டது.

      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. திருமிகு ஜீவி அவர்களின் கருத்துரையில் மனம் நெகிழ்ந்தேன்...

    பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி இருக்கின்றார்கள்...

    எல்லாம் என்னை உற்சாகப்படுத்தும் நன்னெஞ்சங்களுக்கே ஆகும்...

    மேலும் மகிழ்ச்சியுடன் ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது வார்த்தைகளுக்கும் தலை வணங்குகிறேன்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
      ஜீவி சார் மிக சரியாக சொல்லி இருக்கிறார்.
      நேரம் கிடைக்கும் போது கவிதைகளை எழுதுங்கள்.
      வலை சொந்தங்கள் ஒருவரை ஒருவர் உண்மையாக உற்சாகப்படுத்துவதில் பின் வாங்குவது இல்லை. நல்ல நெஞ்சங்கள் வாழ்க!
      கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. அழகான கவிதை..... இங்கே எத்தனை எத்தனை திறமைசாலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      //இந்தப் பதிவுலகம் தான் எவ்வளவு திறமைசாலிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது?--//

      ஜீவி சார் சொன்னது போல் நிறைய திறமைஃசாலிகள் இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு ந்ன்றி.

      நீக்கு