வியாழன், 24 ஜனவரி, 2019

ஜன்னல் வழியே




காக்கையின் குறும்பு


காக்கைக் குஞ்சு துணியைப் பிடித்து இழுத்து விளையாடுகிறதா? அல்லது கோபமா ?தெரியவில்லை.
கன்றுக் குட்டி துணிகளைக் கடிக்கும் அது போல் இதுவும் செய்கிறதா என்று தெரியவில்லை.

அந்த ஸ்கர்ட் அதற்குப் பிடித்து இருக்கு






காகங்களை எடுத்த படங்களைப் போடலாம் என்று சேர்த்து வைத்து இருந்தேன்.
Image may contain: bird, table and outdoor

புல் புல் பறவை
Image may contain: bird, table and outdoor

Image may contain: bird and outdoor


அவசரப்பட்டு பப்ளிஷ் ஆகி விட்டது.

வாழ்க வளமுடன்.


38 கருத்துகள்:

  1. காக்கை குருவி எங்கள் ஜாதி..
    என்றார் மகாகவி...

    ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான செய்திகளைச் சொல்கின்றன....

    பப்பியுடன் பசங்கள்...

    உயிர்களிடத்தில் அன்பு வேணும் - என்ற வரி மெய்ப்படுகின்றது...

    சென்ற வாரத்தில் தான் நர்சிங் மாணவிகள் பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளைக் கொன்று குவித்த சேதி நாளிதழ்களில் வந்திருந்தது...

    மூர்க்கர்கள் பலர் அதை ஆதரித்திருந்தார்கள்....

    நன்மைகள் எங்கும் ஓங்கட்டும்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ தூரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
    பதிவு முழுமை பெறும் முன் பப்ளிஷ் ஆகி விட்டது . சரிசெய்தால் நெட் இணைப்பு சரியாக இல்லாத காரணத்தால் அது போனதை திரும்ப பெற முடியவில்லை.நாய் குட்டி
    படங்களை கட் செய்து விட்டேன் அடுத்த பதிவில் போடலாம் என்று.
    கீதா முக நூலில் பகிர்ந்த நாய் குட்டி படத்தை இங்கு போடுங்கள் என்றார்கள்.
    அதுவும் இதனுடன் வந்து விட்டது.
    இவ்வளவு சீக்கீரமாய் வந்து அருமையான கருத்தை பகிர்ந்த போதும் அந்த நாய் குட்டிகள் இடம்பெறவில்லை.
    அடுத்த பதிவில் இந்த கருத்தை சேர்த்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஅ பப்பீஸ் ஐ அதிரா பார்க்கமுன்னம் மறைச்சுப்போட்டா கோமதி அக்கா.. கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    2. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      பப்பீஸ் தனி பதிவாய் வருகிறது.
      காக்கை கூடு கட்ட கொடி கம்பியை இழுப்பது படம் தேடினேன், அpOது பப்பீஸ் கிடைத்தார்கள். பாலிதீன் கவருடன் போராடும் காணொளி படம் பதிவில் போட சொன்னார் கீதாரெங்கன், அந்த படங்களும் கிடைத்தது முதலில் இதில் இருக்கட்டும் அப்புறம் இன்னொரு தளம் ஓபன் செய்து குட்டி செல்லங்களை அதில் போடலாம் என்று நினைத்து கொண்டு குளோஸ் செய்ய போனேன் கை ப்பளிஷ் ஆகி விட்டது. திரும்ப எடுக்கலாம் என்றால் இணையம் வேலை செய்யவில்லை, அதற்குள் சகோதுரை பின்னூட்டம் போட்டு விட்டார், அதனால் இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.


      தேட எளிதாக்க எல்லாவற்றையும் பிரித்து பிரித்து தனி தனி கோப்புகளில் சேமித்து கொண்டு இருந்தேன், இப்போது சோம்பல் பட்டதால் செய்யவில்லை. நினைவுகளில் இருந்து எடுக்கிறேன் படங்களை.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். காக்கையின் குறும்பு ரசிக்கும்படி இருந்தது. ஒவ்வொன்றையும் பொறுமையுடன் எடுத்து அதற்கு விளக்கமும் தந்து வெளியிட்டுள்ளீர்கள். பறவைகளிடத்து தாங்கள் வைத்திருக்கும் பாசம் கண்டு மகிழ்கிறேன். நானும் இதுபோல் எடுத்து வைத்துள்ளேன். எழுதவும், பகிர்வும் நேரம் வரவில்லை. புல் புல் பறவையும் அழகாக தட்டில் அமர்ந்து சாப்பிடுகிறதே . மிகவும் அழகாக உள்ளது. பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      படங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு சமயம் எடுத்தது.
      அவை அழைக்கும் நம்மை அப்போது சத்தம் கேட்டு போய் எடுப்பேன்.
      எல்லா பறவைகளும் வரும் சாப்பிட நாம் பார்க்கும் போது எடுக்க எது வசதியாக போஸ் கொடுக்கிறதோ அதை எடுத்து விடுவேன். கிளி மட்டும் அகப்பட மாட்டேன் என்கிறது.
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. பழகியவர்களுடன் வழக்கமாக வரும் காக்கைகள் பேசும் மொழி ஒன்று உண்டு.

    உங்களுக்கே தெரியும்.

    குழந்தைகளுடன் பேசுவது போல அன்பாக ஏதாவது கேட்டுப்பார்த்தால் அதனிடம் உடனே அதற்கு Response கிடைக்கும். தலையாட்டல், கரைதல், சிறகுகளை படபடத்தல் இப்படி ஏதாவது. காக்கை மிகவும் சூட்சுமமான பறவையினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      //பழகியவர்களுடன் வழக்கமாக வரும் காக்கைகள் பேசும் மொழி ஒன்று உண்டு. //

      நீங்கள் சொல்வது சரிதான். வழக்கமாய் வைக்கும் உணவு வேலை தவறினால் நம்மை வந்து அழைக்கும். இடை இடையே நான் எடுப்பார்க்கவில்லை என்றால் பால்கனி வாசலில் கொடி க்மபியில் உட்கார்ந்து குரல் கொடுக்கும்.

      எதிர்பக்கம் கோடி வீட்டில் உள் பக்கம் பார்த்து கரைந்து கேட்கும் அவர்கள் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடும்.
      சூட்சுமாமான் பறவையினம் தான் காகம்.
      உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சார்.


      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      முகநூலில் இன்னும் அதிகமாய் தெரியும்.
      இதில் நீளத்தை வெட்டி டிரிம் செய்து போட்டு இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. ஆவ்வ்வ்வ் காக குடும்பம் அழகு.. அது குஞ்சு எனச் சொலி என் வாயை அடைச்சிட்டீங்க கோமதி அக்கா:).. இல்லை எனில், அது அண்டங்காகமாக்கும் அதனால தன் வைஃப் க்குக் குடுக்கத்தான் போல அந்த ஸ்கேட் டை இழுக்கிறார் எனச் சொல்ல வந்தேன் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, அண்டங்காக்கா படம் கீழே இருக்கே!
      கற்பனையில் எது வேண்டும் என்றாலும் சொல்லி மகிழலாம் தானே!
      முகநூலில் வந்த கருத்துக்கள்:-


      Shanthy Mariappan கூடு கட்ட ஆகும்ன்னு எடுத்துட்டுப் போகப் பார்க்குதோ!!

      Thangam Vallinayagam அதுக்குப் போன ஜென்மம் ஞாபகம் வந்துடுச்சி..இதே டிசைன்ல இதே கலர்ல போட்ட நினைவுகள் வந்து அலைக்கழிக்குது..’காக்காவின் ஆட்டோகிராப் ‘ ..!!

      Kalyani Shankar இன்னிக்கு ஈவினிங் ரிசப்ஷனுக்கு என்ன போட்டுட்டு போகலாம்...!

      இப்படி ரசிக்க வைக்கும் கருத்துக்கள்.

      நீக்கு
    2. உங்கள் கற்பனையும் ரசனையானது அதிரா

      நீக்கு
  7. வீடியோவில் அந்த ஸ்கேட்டைக் கடிச்சுக் கடிச்சு இழுப்பது அழகு.. வாய்க்கு சொஃப்ட்டாக இருக்குது போலும் அந்த மட்ரீரியல்..

    புல் புல் பறவையைப் பார்க்க, மைனா + குயில் போல இருக்குதே..

    என்னாதூஉ கை தவறி பப்ளிஸ்ட் ஆ. அவ்வ்வ்வ்வ்வ்வ்:))... ஹா ஹா ஹா.. எது எது எப்ப நடக்கோணுமென இருக்கோ.. அது அது அப்ப அப்பதான் நடக்கும்:)).. இதுதான் விதி.. நம்மை மீறிய சக்தி:)).. ஆவ்வ்வ்வ் இப்படிக்கு அமுதஞானி அதிரா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்க்கு சொஃப்ட்டாக இருக்குது போலும் அந்த மட்ரீரியல்..//

      ஆமாம், அதிரா. அத்தனை துணி இருக்கும் போது அந்த துணியை மட்டும் இழுப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

      //எது எது எப்ப நடக்கோணுமென இருக்கோ.. அது அது அப்ப அப்பதான் நடக்கும்:)).. இதுதான் விதி.. நம்மை மீறிய சக்தி:)).. ஆவ்வ்வ்வ் இப்படிக்கு அமுதஞானி அதிரா:)//

      ஆமாம் அதிரா, நீங்கள் சொல்வது சரிதான். ஞானி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
      அமுதசுரபி போய் அமுதஞானி அருமை, பொருந்தும் பட்டம்.

      தலைப்பு. வைக்காமல் லேபிள் குறிப்பிடாமல் பதிவு போய் சகோ துரை கருத்து சொல்லி விட்டார். மீட்டு எடுத்து நாய் குட்டிகளை எடுத்து விட்டு ஜன்னல் வழியே தலைப்பு போட்டு படங்களுக்கு கீழே கருத்துகள் இல்லாமல் அவசர பதிவாக மலர்ந்து விட்டது.

      அது அது அப்ப அப்பதான் நடக்கும் என்பதை நானும் உணர்ந்து விட்டேன்.

      கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. புல் புல் பறவையைப் பார்க்க, மைனா + குயில் போல இருக்குதே..//

      ஆமாம் , அதிரா ஆனால் குயில் அட்டகாசம் செய்தாலும் அதன் கண் கொடூரம் காட்டாது.ஆனால் புல் புல் கண்ணில் கொடூரம் தெரியும்.அதன் கண் அமைப்பு அப்படி, நம்மை கோபத்துடன் பார்ப்பது போல் இருக்கும். மாயவரத்தில் மிகவும் பக்கத்தில் எடுத்த படம் முன்பு போட்டு இருந்தேன்.

      நீக்கு
  8. படங்கள் அருமை. ஆமாம், காக்கை அவ்வப்போது இப்படிக்கு குறும்புகள் செய்வதை நானும் பார்த்திருக்கிறேன். கொடுக்கும் உணவை ஏதாவது இடுக்கில் ஒளித்து வைப்பதையும் பார்த்திருக்கிறேன். காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      மொட்டை மாடியில் கதைகள் வாசிக்கும் போது உங்களுக்கு காக்கைகளால் நிறைய அனுபவம் இருக்கே!

      நிறைய அவைகளை கவனித்து இருப்பீர்கள் இல்லையா?
      எல்லாவற்றையும் சுத்தபடுத்தி சாப்பிடும்.
      காலகளுக்கு இடையில் ஒளித்து வைத்துக் கொண்டு இன்னொன்றை கொத்தும்.
      குழந்தைகள் போலவே குறும்புகள் அதிகம் செய்யும் பறவை தான் காகம்.

      காலை வணக்கம் உங்களுக்கும்.

      நீக்கு
  9. வீடியோ பார்க்கும்போது இந்தத் துணிகளில் ஏதாவது சிறியதாக இருந்தால் எடுத்துப்போய்க் கூட்டில் மெத்தென்று வைக்கலாமா என்று அது யோசித்திருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  10. குருவிகளுக்கோ காக்கைகளுக்கோ உணவு வைத்தோமானால் பருக்கை பருக்கையாய் அவை அவற்றைக்கொத்தி சாப்பிடும் அழகு ரசிக்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவி ஒவ்வொரு பருக்கை கொத்தி போகும். காகம் கொஞ்ச்சம் அதிகமாய் வாயில் வைத்துக் கொண்டு மீண்டும் கொத்தி அலகில் வைத்துக் கொண்டு போகும். அதை பார்க்க அருமையாக இருக்கும்.
      மீண்டும் குருவி முட்டையிட்டு இருக்கிறது. குருவிகள் காலை முதல் அடையும் வரை சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

      என் மனசோர்வை போக்கும் இந்த பறவைகளின் ஒலி.

      நீக்கு
  11. முகநூலில் பகிர்ந்த போது சாந்தி மாரியப்பன் இந்த கருத்தைதான் சொன்னார்.
    கிளிப், கம்பி எல்லாம் கடிக்கும், அதையும் எடுத்து இருக்கிறேன், உணவு ஊட்டும் இன்னொரு காக்கைக்கு அது எடுத்து இருக்கிறேன் . எல்லாவற்றையும் தொகுத்து போட வேண்டும் என்று நினைத்தேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. காக்கை அழகோ அழகு! கோமதிக்கா காக்கை அந்த துணியை மட்டும் தான் இழுக்கிறது பாருங்க. அது குட்டிப் பாப்பாக்களின் ஸ்கர்ட்? இதுவும் குஞ்சு என்று சொல்லிருக்கீங்க ஸோ தனக்கு சரியா இருக்கும்னு எடுத்துக்குதோ. இல்லை குளிருக்கு இதமா இருக்கும்னு பிடிச்சு இழுக்குது போல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      குளிருக்கும் இதம் தர குட்டி பாப்பா ஸ்கர்ட் தேடும் கற்பனை அருமை.

      நீக்கு
  13. பறவைகள் சாப்பாடு சாப்பிடும் அழகு ஒரு புறம் என்றால் அதைக் கொத்திக் கொண்டு சென்று தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அழகு சொல்லி முடியாது. காணொளி செம....

    புல் புல் அழகு. நானும் இவை தானியங்கள், சோறு இவற்றைக் கொத்திச் சாப்பிடுவதை ரசிப்பேன். அது போல காக்கை குருவிகள் எல்லாம் தண்ணீய்ர் குடிப்பதைப் பார்க்கணும் அதுவும் அழகு. மழைக்காலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிப்பதைப் பார்க்க அத்தனை ரசனையாக இருக்கும். இங்கு நான் சின்ன குழிவுத் தட்டுகளில் தண்ணீர் வைக்கிறேன். குருவிகளை காணலை. காக்கைகள் எப்போதேனும் வரும். புறாக்கள் ஒன்றிரண்டு வந்து குடித்துவிட்டுச் செல்கின்றன. ஆனால் இன்னும் பறவைகள் வரத் தொடங்கவில்லை. அடுத்து தானியமும் வைத்துப் பார்க்கனும்...வருதான்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, பறவைகள் சாப்பிடும் அழகும் தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும் அழகும் அழகுதான்.

      இப்போது பறவைகள் சமைத்த உணவுக்கு பழகி விட்டது தானியங்கள் அதற்கு பிடிக்கவில்லை, ஒத்துக் கொள்வதும் இல்லை.

      பறவைகள் தண்ணீர் குடிப்பது குளிப்பது எல்லாம் அழகுதான்.
      தேங்கி இருக்கும் த்ண்ணீர் குடிக்கும் காகம் படம் எடுத்து இருக்கிறேன், கூடுகட்ட தெருவில் குச்சிகள் சேகரிக்கும் காகம் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
      நேற்று அவசரமாக வந்து விட்டதால் இன்னொரு பதிவில் பார்க்கலாம் அதை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  14. ரசித்தேன் அம்மா...

    முகப்பு பக்கம் சென்று, பிறகு இந்தப் பதிவிற்கு வந்தேன்... தலைப்பு இல்லாமல் Publish செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.
      ஆமாம், தலைப்பு போடவில்லை, லேபிள் போடவில்லை.
      நான் நேற்று பதிவு போடுவதாக இல்லை, என் தளத்தில் சேகரித்துக் கொண்டு இருந்தேன். குளோஸ் செய்ய போய் அத்ற்கு பதில் Publish செய்து விட்டேன்.
      சகோ துரை அவர்கள் கருத்து தெரிவித்து விட்டதால் சரி இருக்கட்டும் என்று எடிட் போய் அவசரப்பட்டு பப்ளிஷ் ஆகி விட்டது என்று போட்டு மீண்டும் Publish செய்து விட்டேன்.

      பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. ஓ... அவசரப்பட்டு வெளியான பதிவா!...

    ஆமாம்.. சமயத்தில் இணையம் ஜிங்.. ஜிங்.. என்று குதிக்கும்போது இப்படித்தான் ஆகும்..

    நான் முன்னெச்சரிக்கையாக Publish ஆகும் தேதியை - ஒழுங்கு செய்து விடுவேன்..

    இன்றைக்குத் தேதி 25.. பதிவை எழுதும்போதே Publish Date 28 என்று Save செய்து விடுவேன்..

    பதிவை எழுதி, படங்களைச் சேர்த்து - எல்லாவறையும் ஒழுங்கு செய்து விட்டு 26 ல் பதிவு வெளியாகும்படி தேதியைத் திருத்தி மீண்டும் Publish செய்து விடுவேன்..

    ஆக -
    ஸ்கூல் பசங்கள் நாய்க்குட்டிகளுடன் இருக்கும் படங்களைப் பார்த்தது நான் மட்டும் தானா!..

    ஆகா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      நானும் இனி அப்படி செய்ய வேண்டும்.

      //ஆக -
      ஸ்கூல் பசங்கள் நாய்க்குட்டிகளுடன் இருக்கும் படங்களைப் பார்த்தது நான் மட்டும் தானா!..

      ஆகா!...//

      ஆமாம், அதனால் அடுத்த பதிவு அதுதான்.

      உங்கள் மறு வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. ஒரு கதை போல இருக்கு படங்கள் எல்லாம் ...

    அருமை மா

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அனுராதா பிரேம்குமார். வாழ்க வளமுடன்.
    நான் "குண்டுகாக்கா: கதை எழுதி இருக்கிறேன் முன்பு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சின்ன வயதில் காக்கைகளுக்கும் சாதி காட்டிப்பெசுவதைக் கேட்டிருக்கிறேன் கழுத்தில் வெண்மை நிறம் உள்ள காகம் பிராம்மண காகம் நாம் அண்டங்காக்கை எனக் கூறுவது சூத்திரக்காகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொன்னதை நான் கேள்வி பட்டது இல்லை.
      உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  19. ஹாஹா காக்கைகளுக்கும் கலர் டிரஸ் போட ஆசையோ :) எங் வீட்டில் ஊரில் கருப்பு ரிப்பன் துவைச்சு காய வைச்சா தூக்கிட்டு ஓடிடுவாங்க :) காக்கைகள் தலையை ஆட்டி பார்க்கும் அழகே தனி ..புல் புல் பறவை அழகா பழகும்க்கா .நீங்க சொன்ன மாதிரி அதன் கண் அமைப்பு முரடா காட்டுது அதோட தலையில் சிலிர்த்த முடியும் கொஞ்சம் வித்யாசமா காட்டுது ..சிட்டு குருவிகளின் கண்கள் குழந்தைக்கு மையிட்ட மாதிரி அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
      காக்கைக்கு கலர் டிரஸ் போட ஆசைதான்.
      ரிப்பன் எடுத்து போய் அதன் மனைவிக்கு கொடுக்குமோ!
      காக்கைகள் தலையை சாய்த்து பார்க்கும் பார்வை மிக அழகாய் இருக்கும். அதை எல்லோரும் கள்ளப்பார்வை என்று சொல்லி விடுவார்கள்.
      புல் புல் பறவை மாயவரம் மொட்டைமாடியில் எடுத்த படம் போட்டது நினைவு இருக்கா? மிகவும் கிட்டத்தில் எடுத்த படம். தென்னைமரத்தில் ஊஞ்சல் ஆடும் படம் எல்லாம் போட்டு இருந்தேன். சிட்டுக்குருவி கண்கள் அழகுதான்.
      உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  20. காக்கையை ரசித்து, ரசித்து எடுத்த படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் தேவகோட்டை ஜி. வாழ்க வளமுடன்.
    காணொளி காணவில்லையா?
    வெளியூர் பயணத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அலைபேசி மூலம் கருத்தோ?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு