ஞாயிறு, 20 ஜனவரி, 2019

குண்டடம் வடுகநாதசுவாமி திருக்கோயில்

  அருள்மிகு காலபைரவ வடுகநாதர்

கோவை போய்விட்டு வரும்போது( 30.12.18 ) குண்டடம் என்ற ஊரில் உள்ள வடுகநாதசுவாமி கோவில் போனோம். 

இந்த ஊர்,பல்லடத்திலிருந்து  28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து  16 கி.மீ தூரத்திலும் இருக்கிறது. மகாபாரத காலத்திலேயே குண்டடம் ஊர் சிறப்பு பெற்றது என்கிறார்கள். தாராபுரத்திற்கு முன்பு உள்ள பேர் விராடபுரம்.

இந்தக் கோவிலில் உள்ள ஸ்ரீகாலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று காலபைரவசுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் இருக்கும் இறைவனின் பெயர் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் இங்கு தவம் இருந்த காரணத்தால் இங்குள்ள ஈசனுக்கு விடங்கீஸ்வரர் என்று பெயர்.அம்பாள் விசாலாட்சி.  தலவிருட்சம் இலந்தைமரம்.


உள்பகுதியில் இருந்து
விளக்கு தூண், கோபுரம்    உள் வாயில் இருக்கும் இடம்.
சாணி மெழுகிக் கோவில் வாசல் மிகச் சுத்தமாக இருக்கிறது
தீபஸ்தம்பப் பிள்ளையார்

கோவில்  குளம். பெரிய கிணறும் இருக்கிறது. ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை குளத்தில்

குளத்தில் இப்படி அழகான  யாழித்தூண் இருக்கிறது.
மகாபாரதக் கதையில் கீசகனைப் பீமன் கொன்ற இடம் இந்த குண்டடம்  என்று சொல்லப்படுகிறது

முன் காலத்தில் நடந்த கதை::-

இப்போது ஆலயம் அமைந்து இருக்கும் இடம் முன்பு இலந்தை, அரசு போன்ற மரங்கள் இருக்கும் பெரும் காடாக இருந்தது. விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று  காசி விஸ்வநாதரை மனமுருக வேண்டினார். காசிவிஸ்வநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுகபைரவரை அனுப்பினார்.

பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தைமரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

சேர நாட்டிலிருந்து   மிளகு விற்க வரும் வியாபாரிகள்     இந்த   அரசமரத்தடியில்  இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர்  தோற்றத்தில் மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி  மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.

மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலைபேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள் நம்ப மறுக்கிறார் மன்னர்.

அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி  மேல் அருள்(சாமி வந்து) வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரிசெய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.

பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து  மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டுநாட்களில் நலம் பெற்றார்கள்.பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்கமுடியாது இருந்த ஆண் குழந்தை நடந்தது பைரவர் அருளால்!

பிள்ளையாரும், வரதராஜ பெருமாளும்
இலந்தைமரம்- ஸ்தலவிருட்சம்
இலந்தைக் காய் தெரிகிறது பாருங்கள்


அல்லிக் குளம் அமைத்து இருக்கிறார்கள் கோவிலுக்குள்



வடுகபைரவருக்கு எதிரில் விளக்கு போடும் இடம். இந்த வாசல் வழியாக வந்தால்  அரசமரத்தின் அடியில் குடியிருக்கும் இறைவனைக் காணலாம்.

இந்த கோவில் வரலாறு ஜெயா தொலைக்காட்சியில் காட்டிய காணொளி பார்க்கலாம்.

கோவில் சுவாமி பேர் விடங்கீஸ்வரர் , அம்மன் பேர் விசாலாட்சி
சுவாமியின் இருபக்கமும் பிள்ளையாரும், பாலமுருகனும் இருக்கிறார்கள்.
காலபைரவர் வடுகநாதர் இருக்கிறார். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.

நர்த்தன விநாயகர், கல்யாணசுப்பிரமணியர், வரதராஜ பெருமாள் , கருடாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள்,  சண்டிகேஸ்வரர் இருக்கிறார்கள்.

கல்யாண சுப்பிரமணியர் வீற்றிருக்கும் மயிலின் தலை இடப்பக்கம் இருக்கிறது. இது
இந்திரமயில் என்று சொல்லப்படுகிறது. சூரசம்மாரத்திற்கு முன் இந்திரன் மயிலாக இருந்ததைக் குறிப்பிடும் வண்ணம் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் பைரவாஷ்டமி  மூன்று நாள்   திருவிழாவாக நடைபெறுகிறது. லட்சார்ச்சனை, சங்காபிஷேகம் எல்லாம் சிறப்பாக நடைபெறுமாம்.

அழகான கோவில். சில படங்களை எடுத்து விட்டேன். கோவில் கதை அமைந்த சில படங்களை எடுத்துக் கொண்டு இருந்த போது ஒருவர் வந்து படம் எடுக்கக் கூடாது என்றார்.

நல்ல வேளை ஒரளவு முக்கியமானதை எடுத்து விட்டேன் என்று பைரவருக்கு நன்றி சொல்லி வணங்கி வந்தேன்.

எல்லோரையும் வடுக பைரவர் நல்லபடியாக வைக்க வேண்டும்.

                                              வாழ்க வளமுடன்.

-------------------------------------------------------------------------------------------------------------------

59 கருத்துகள்:

  1. கோவில் படங்கள் நல்லா வந்திருக்கு.

    கோவில் படங்கள் எடுக்கக்கூடாது என்று சொல்றதுக்கு எனக்கு சரியான காரணம் புரியலை. தர்க்க ரீதியாவும் காரணம் சொல்லுவது கடினம். கோவில் பாதுகாப்புக்குன்னு வேணா சொல்லிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    நம்மை எடுக்க கூடாது என்கிறார்கள்.
    ஜெயா தொலைக்காட்சிக்கு விரிவாக எல்லாம் எடுக்க அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
    தூணில் வயிற்றில் குழந்தை எந்த எந்த மாதம் எப்படி இருக்கும் என்ற காட்சிகள் இருக்கிறது.
    ஜெயா தொலைக்காட்சி காணொளி பார்த்தால் தெரியும்.

    ஒரு அன்பர் மூலவரை படம் எடுத்தால் கஷ்டம் வந்து சேரும் என்றார் ஒரு கோவிலில்.
    இன்னொருவர் நாம் இறைவனை தொந்திரவு செய்வது போல் என்றார்.
    இருந்தாலும் ஆசை யாரை விட்டது! அனுமதித்தால் எடுத்து வந்து விடுகிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுயுகம் தொலைக்காட்சியில் பைரவருக்கு செய்யும்
      அவ்வளவு அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும்
      காட்டுகிறார்கள்.

      நீக்கு
    2. கருவறை மூலவரை படம் எடுக்க அனுமதித்தால் அது எல்லா பக்தர்களுக்கும் தொந்தரவாகப் போய்விடும். எல்லோரும் செல்ஃபோனில் படம் எடுப்பதிலேயே மும்மரமாக இருப்பார்கள். பக்தி அங்கு குறைந்துவிடும், செல்ஃபி மோகம் அதிகரித்துவிடும். இது மட்டும்தான் காரணமாக இருக்கமுடியும்.

      மற்றபடி சான்னித்தியம், இறைவனுக்குத் தொந்தரவு, கஷ்டம் வரும் என்பதையெல்லாம் நான் நம்புவதில்லை. ஆனால் மற்ற பக்தர்களுக்கும், பூசாரிகளுக்கும் தொந்தரவு தருவதால் பாவம் வந்து சேரலாம்... ஹா ஹா

      நீக்கு
    3. மற்ற பக்தர்களுக்கும், பூசாரிகளுக்கும் தொந்தரவு தருவதால் பாவம் வந்து சேரலாம்... ஹா ஹா//

      நீங்கள் சொல்வது சரிதான் . தூக்கிய கையை எடுக்காமல், மற்றவர்களுக்கு தொந்திரவு செய்வது, ஓரமாய் நின்று வழிபடாமல், நந்தி மாதிரி நடுவில் நின்று மறைப்பது எல்லாம் பாவம் இன்றால் இதுவும் பாவம்தான்.

      உற்சவ சாமிகள் திருவிழா சமயம் வரும் போது எங்கும் செல்போன்கள் தான் தெரிகிறது.

      மூலவரை எடுக்க அனுமதிக்காமல் இருப்பதற்கு நீங்கள் சொல்லும் காரணமும் சரிதான்.
      செல்போனில் படம் எடுக்கும் கையை கட்டுபடுத்துவது கஷ்டம், அதுவும்

      செல்ஃபி மோகம் ! கேட்கவேண்டாம்.


      நீக்கு
    4. படம் எடுப்பதற்கு, நெல்லைத்தமிழன் சொல்லும் விளக்கம் தான் சரி எனப் படுது, ஆனா பூஜை இல்லாத , மக்கள் இல்லாத அமைதியான நேரத்திலும் எடுக்கக்கூடது என்கின்றனரே சில இடத்தில்.. அதுதான் புரிவதில்லை..

      நீக்கு
    5. சமீபத்தைய கோவிலில் மெய்க்காவலர் சொன்னது, யாரு எதுக்கு வர்றாங்கன்னே தெரியலை, சிலை திருட்டு, சிற்பத் திருட்டு நடக்குது. அதனால் எங்கயுமே படம் எடுக்க விடறதில்லைனார் (அவர் ஒருத்தர்தான் அந்தப் பெரிய கோவிலில். மூலவர் அறைக்கு சிறிது வெளியே லாக்கர் மாதிரியான கதவு. அவர் சொன்னார், சில நாட்கள் முன்னால வந்தவல்க அந்த லாக்கர் கைப்பிடியைத் திருகுனாங்களாம். இவர் எதேச்சையா பார்த்துட்டு என்னன்னு கேட்டதுக்கு பூவை உள்ள வைக்கலாம்னு நினைச்சோம்னு சொன்னாராம்.

      நீக்கு
    6. ஆமாம், இப்போது கோவிலுக்கு வருபவர்கள் எதற்கு வருகிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும் ? சிலை திருட்டு நடப்பதால் எல்லோரையும் கண் காணிக்க முடியாதுதான்.
      மெய்க்காவலருக்கு பொறுப்புகள் அதிகமாகுது.

      நீக்கு
    7. மெய்க்காவலர் சொல்வது சரிதான்.
      அன்று ஒருநாள் தொலைக்காட்சியில் அழகாய் உடை அணிந்து முதுகில் ஒரு பை மாட்டி இருக்கும் ஆள் அம்மன் தாலியை எடுக்கிறார், அதற்குள் குருக்கள் வந்து விட்டார்.

      நீக்கு
    8. எனக்கும் நெல்லையின் காரணம் சரி என்றே தோன்றுகிறது அல்லாமல் வேறு எந்தக் காரணமும் இல்லை எனலாம். அப்படிப் பாத்தால் டிவியில் வரவே கூடாதே...சரி திருட்டுன்னு சொல்றாக அதனால எடுக்க விடலைனு ஒத்துக் கொள்ளலாம்...ஆனால் டிவி மற்றும் பல கோயில் பற்றிய கட்டுரைகளில் வருகின்றனவே...

      ஓ கோமதிக்கா அம்மன் தாலியை எடுக்கிறாரா? தொலைக்காட்சியில் அப்படி வந்ததாஆஆஆஅ

      கீதா

      நீக்கு
    9. தொலைக்காட்சியில் குருக்களையும் கோவிலின் சிறப்பை சொல்ல சொல்கிறார்கள்.
      உலகம் முழுவதும் ஒலிபரப்பபடும் என்ற எண்ணமும் இருக்கலாம்.
      நாம் சாதாரணவர்கள் நாம் எடுக்க கூடாது போலும்.

      //ஓ கோமதிக்கா அம்மன் தாலியை எடுக்கிறாரா? தொலைக்காட்சியில் அப்படி வந்ததாஆஆஆஅ//

      ஆமாம் கீதா.

      நீக்கு
  3. ஓஓஒ நோஓஓஒ மீதான்ன் 1ச்ட்டூஊஊஊஊஊஊஊ:).. கர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ தமிழன்ன்ன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      இன்று நெல்லைத்தமிழனுக்கு விடுமுறை என்பதால் முதலில் வந்து விட்டார்.
      நீங்களும் முதல் என்று வைத்துக் கொள்ளலாம்.
      வாங்க வாங்க .

      நீக்கு
  4. வந்திட்டேன் கோமதி அக்கா...

    முதலாவது காலவைரவர் பார்க்கவே அழகாக இருக்கு வரவேற்புக் கோபுரமும் கோயிலும்..

    என்னைப் பொறுத்து எந்த வைரவர் என்றில்லை.. வைரவர் என்றாலே அவர் சக்தி வாய்ந்தவர்தான், மனம் உருகிக் கேட்டால் நிட்சயம் சுடச்சுட நிறைவேற்றுவார் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு.

    வரம் கேட்பது என்றில்லை, எனக்கு என்னமோ வைரவரைப் பார்த்தாலே என்னை அறியாமல் ஒரு பந்த பாசம் வந்துவிடும்.. எந்தக் கோயிலிலும் ஆலயமணி மண்டபத்துக்கு அருகில்[உள்வீதியில்] வைரவ மாடம் இருக்கும்தானே.. இலங்கையில் அப்படித்தான் இருக்கும்.. நான் அந்த வைரவரிடம் வந்தால் பிரேக் போட்டு நின்று விடுவேன்.

    ஒரு தடவை பெரியம்மாவின் மகள், அக்கா என்னோடு கோயிலுக்கு வந்திருந்தா, என்னைக் கவனிச்சிருக்கிறா.. வீட்டுக்குப் போனதும் எங்கள் அம்மாவிடம் சொன்னா.. “என்ன ஆன்ரி, அதிராவை வைரவரிடம் இருந்து கூட்டி வர முடியாமல் போச்சு” என.. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய புதுத்தகவல்கள் கோமதி அக்கா...

      //அடைத்து அடுப்பில் கட்டி விடுவார்கள்.
      //
      ஹா ஹா ஹா அது இடுப்பில் மாறி அடுப்பாச்சு.. பதறிட்டேன் ஒரு கணம்..:)

      நீக்கு
    2. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      பதிவு போடும் போதே உங்களை நினைத்துக் கொண்டேன்.
      பைரவரை அடிக்கடி நினைத்துக் கொள்வீர்கள்,வேண்டுதலையும் பைரவருக்கே வைப்பீர்கள்,உங்கள் இஷ்ட கடவுள் அவர்தான் என்று.

      அவர் எப்போதும் நல்லது செய்யும் சிந்தனையில்தான் இருப்பார். தேய்பிறைஅஷ்டமி தினத்தில் அவரை வழிபட்டால், ராகு காலநேரத்தில் அவரை வழிபட்டால் நல்லது என்பார்கள்.
      குழந்தைகள் பயந்து அழுதால் அவருக்கு வேண்டிக் கொண்டு, தயிர்சாதம், வடை செய்து கும்பிடுவார்கள். பயத்தை போக்குவார்.

      குழந்தைகள் இடுப்பில் கட்டும் அரைஞாணில் நாய் தொங்கவிட பட்டு இருக்கும் அது பயத்தை போக்கும் என்ற நம்பிக்கை. குழந்தைகளை கெட்ட சக்தி அண்டாது என்ற நம்பிக்கையும். நாய், சாவி, தாயத்து இருக்கும். இடுப்பு கயிற்றில், தாயத்தில் தொப்பிள் கொடி விழுவதை சேகரித்து வைத்து அடைத்து இடுப்பில் கட்டி விடுவார்கள்.

      இப்போது விஞ்ஞானம் தொப்புள்கொடியை பாதுகாத்து வைத்து இருந்து அதில் நமக்கே பயன்படும் மருந்து கண்டு பிடித்து இருக்கிறது இப்போது. அப்போதே நம் முன்னோர் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

      //“என்ன ஆன்ரி, அதிராவை வைரவரிடம் இருந்து கூட்டி வர முடியாமல் போச்சு” என.. ஹா ஹா ஹா.//

      பெரியம்மா மகளுக்கும் உங்களின் வைரவர் பக்தி தெரிந்து இருக்கிறது.
      பைரவர் எல்லா நலங்களை தரட்டும் உங்களுக்கு.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. இடுப்பில், திருத்திவிட்டேன்.
      கோவிலுக்கு போகும் அவசரத்தில் அடித்தது.
      பெளர்ணமி பூஜை போய் விட்டு இப்போதுதான் வந்தேன்.
      நன்றி அதிரா.

      நீக்கு
  5. கோமதி அக்கா, கேட்கக்கூடாத கேள்வி என்றில்லை இது என நினைக்கிறேன், என்னுள் எப்பவும் இக்கேள்வி இருக்கு... எதுக்காக எப்பவும் அனைத்து சுவாமிகளுக்கும் அழகாக ஆடை உடுத்து அலங்கரித்து வைத்திருப்பார்கள்.. சிலைகளிலும், ஆனா வைரவருக்கு மட்டும் எப்பவும் நிர்வாணக் கோலமே உண்டு.. ஊரிலும் பல கோயில்களில் பார்த்திருக்கிறேன்ன் சிலை எனில் நிர்வாணக்கோலம், அல்லது வைரவ சூலம் மட்டும் இருக்கும்..

    இதுக்கு ஏதும் வரலாறு இருக்கும்தானே.. உங்களுக்கு ஏதும் தெரியுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவர்களின் தலைவன் வணங்கும் திருவடியை கொண்டவரும், சந்திரனை போன்ற ஒளி பொருந்திய யஜ்ந்ஞோபவீதம் கொண்ட கருணை மிகுந்தவரும், யோகிகளால் வணங்கப்படும் யோகியர்களின் தலைவனும், உடலில் ஆடைகள் இன்றி திகம்பர நிலையில் காசி மாநகரில் இருக்கும் கால பைரவரை நான் வணங்குகிறேன்.

      - ஆதிசங்கரர், கால பைரவ அஷ்டகம்

      இப்படி சொல்கிறது புராணம் .

      சுடுகாட்டில் திரிவதால் ஆடையின்றி திரிகிறார்.

      காசி என்ற நகரத்தின் முழுமையான கடவுள் கால பைரவர். ஞானத்தின் வடிவமாகவும் ஞானிகளுக்கு எல்லாம் முதல் ஞானியாகவும் இருக்கும் இறைவனே கால பைரவன்

      அகோரிகள் தங்களையே இறைவனாக வணங்குபவர்கள். ஆனாலும் அவர்கள் தங்களை காலபைரவனாகவே வணங்குகிறார்கள். காலத்தைகடந்து நிற்பவர்களும், ஞானத்தை உணர்ந்து இருப்பவர்களும் கால பைரவர்கள் தான்.

      நாய் காலபைரவரின் வாகனம் என்பார்கள். என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் தன்மை நாயாக உருவகப்படுத்தபடுகிறது. ஆடையில்லாமல் இருப்பதே கால பைரவரின் தன்மை என்றாலும் சில கோவில்களில் கருப்பு ஆடை அணிவிக்கிறார்கள்.

      கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.

      எனக்கு தெரிந்ததையும், படித்ததையும் பகிர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
    2. //ஞானத்தின் வடிவமாகவும் ஞானிகளுக்கு எல்லாம் முதல் ஞானியாகவும் இருக்கும் இறைவனே கால பைரவன்///

      ஆவ்வ்வ்வ்வ்வ் இது புதுத்தகவல் கோமதி அக்கா..

      நன்றி, ஆனாலும் முழுமையான பதில் கிடைக்காததுபோல ஒரு உணர்வாக இருக்கு என் கேள்விக்கு.. பார்ப்போம் வேறு யாரும் கொஞ்சம் அதிக விளக்கம் சொல்லுவார்களோ என.

      நீக்கு
    3. ஞானத்தின் வடிவம் அதுதான் ஞானிக்கு பிடித்து இருக்கு.
      சிவபெருமான் ஆடையின்றி பிச்சாடனர் தோற்றத்தில் இருப்பதற்கு கதை இருக்கு. அவரும் ஆடையின்றி தாருகாவனத்தில் அலைந்தார். மினிவர்களின் செருக்கை அடக்க.
      பைரவருக்கு காரணம் தெரியவில்லை. அவரும் அகோரிகள் மாதிரிதான். அகோரிகள் சுடலையில் சுற்றி திரிவார்கள் ஆடையின்றிதான் இருப்பார்கள்.

      வேறு யாரும் பதில் சொன்னால் க்ற்ட்டுக் கொள்கிரேன் நானும்.

      நீக்கு
    4. வேறு யாரும் பதில் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு
    5. தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

      பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

      64 பைரவர்கள் இருக்கிறார்கள் பெரிய கதை. நீங்கள் நெரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.

      நீக்கு
  6. ஓ வரவேற்புக் கோபுரத்தில் ஒரு பக்கம் வைரவர் மற்றப் பக்கம், சிவன் பார்வதியோ.. அப்படி இரு தெய்வங்களை ஒரு கோபுரத்தில் இப்போதான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, அது கோவில் இருப்பதை காட்டும் தோரண வாயில், நுழைவு வாயில் என்று சொல்வார்கள். அதனை கோபுரம் என்று குறிப்பிடுவது இல்லை.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நுழைவாயில் தான், எனக்கு அச்சொல் வாயில் நுழையாததால் கோபுரம் என்றேன்..

      கதிர்காமத்தில் பார்த்திருப்பீங்களே இப்படி.

      நீக்கு
    3. கதிர்காமத்தில் பார்த்து இருக்கிறேன் தோரண வாயிலை.

      நீக்கு
  7. சின்னக் கோபுரம் எனினும் கோயில் சுற்றாடல் மிக அழகாக சுத்தமாகப் பேணி வைத்திருக்கிறார்கள்.

    கொடித்தம்பம் எப்பவும் மண்டபத்துள்ளேதானே இருக்கும்.. இது வெளியே வச்சிருக்கினம், ஒருவேளை இனி மண்டபம் கட்டுவினமோ..

    பதிலளிநீக்கு
  8. குளம் காய்ஞ்சிருப்பது கவலையாக இருக்கு.. செயற்கையாக தண்ணி பாச்சி அழகாக வைத்திருக்கலாமோ.. இப்போதான் அங்கு காவிரி எல்லாம் முட்டி வழியுதே... அப்படி இருந்தும்?..

    மிளகுத் திருவிளையாடல் கதை நன்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லடம் பக்கம் ஆறு ஓடுகிறது. ஆனாலும் அந்த ஊரில் தண்ணீர் கஷ்டம் உண்டு.
      மழை பெய்தால் தண்ணீர் இருக்கும் என்று நினைக்கிறேன்.இந்த கோவில் வரலாறு பாண்டிய மன்னன் 7 குளங்களை வெட்டினார் என்றும் 7 பிரகாரம் உள்ள கோவிலை கட்டினார் என்றும் சொல்கிறது. ஆனால் நம் கண்ணில் படுவது ஒரு குளம்.
      பிரகாரம் ஒன்றுதான் உள்ளது.

      நீக்கு
  9. ஆவ்வ்வ்வ் இலந்தை மரம், இலந்தைக்காய்கள் தெரியுது..

    ஊரில் நம் வளவுகளில் இலந்தை மரம் இருந்துது ஆனா அவை எல்லாம் மிக மிகக் குட்டிப் பழங்கள்.. இது பெரிசு. இந்தப் பழங்கள் ஒருதடவை எங்கள் தமிழ்க்கடைக்கு வந்து சாப்பிட்டோம்ம்.. என் போஸ்ட்டிலும் படங்கள் போட்டேனே.

    கோபுரங்கள் அனைத்தும் மிக அழகு.. அற்புத வேலைப்பாடுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலந்தை மரத்தின் காயை பார்த்து விட்டீர்களா?
      முன்பு நெல்லி மரத்தை எடுக்க வில்லை என்று சொன்னீர்கள், அன்று அவசரத்தில் மரத்தை எடுத்தேன் காயை எடுக்க மறந்து விட்டது.
      இந்த கோவிலில் இலந்த மரம், காய் எடுத்து விட்டேன் அதிராவுக்கு .
      உங்கள் ஊர் காய் சின்னதா? உங்கள் படத்தை பார்த்து இருப்பேன்.
      ஆமாம் உள்ளே தூண்களில் அருமையான வேலைபாடுகள் இருந்தன.

      உங்கள் பின்னூட்டங்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  10. அல்லியும் தாமரையும் என்னா அழகு.. இங்கும் எங்கள் ஆற்றங்கரையில் ஒரு குட்டி நீரோடை ஓடுது அதில விதம் விதமான கலரில் அல்லி பூக்கும்.. இந்த சமர் நேரம் படங்கள் எடுக்கிறேன்.

    மரத்தடியில் சிவலிங்கம் வைத்து அவருக்கு நந்தியும் கட்டியிருப்பது அழகு.. ஆனால் பறவைகள் அசுத்தப்படுத்தி விடுவினமெல்லோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லியும், தாமரையும் அழகுதான்.
      நீரோடை அதில் அல்லி பலவிதமாய் காண ஆவல்.

      மரத்தடியில் சிவலிங்கம் இருந்தால் பறவைகள்
      அசுத்தம் படுத்தும்தான் தினம் அபிஷேகம் செய்யும் போது அசுத்தம் போய்விடும்.

      நீக்கு
  11. குண்டடம் கோவை போகும்போது அவ்வழியே போய் வருவேன்.

    அழகிய படங்கள் அடுத்தமுறை தரிசனம் செய்ய முயல்வேன் நன்றி.

    http://killergee.blogspot.com/2019/01/to.html?m=0

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      உங்கள் பதிவு எப்படி என் கண்ணிலிருந்து மறைந்து கொண்டது என்று தெரியவில்லை.
      பொங்கல் சமயம் சரியாக இணையம் வரவில்லை. உறவினர்கள் இரண்டு நாள் இருந்தார்கள். அதனால் இணைய பக்கம் வர இயலவில்லை.
      படித்து கருத்து சொல்கிறேன்.
      நன்றி.

      நீக்கு
  12. படங்கள் அருமை. கோவில் எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      கோவில் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
      உங்கள் பயணம் இனிதாக நிறைவு பெற்றதா?

      நீக்கு
  13. எல்லாக் கோவில்களும் போல இதுவும் புனரமைப்பு இல்லாமல் கோவில் குளம் கூட வற்றியிருப்பது சோகம்.கோவில் கதை பற்றிய கதையும் சுவாரஸ்யம். கோவில் கட்டப்பட்டதும் மன்னனின் வாரிசுகள் நலம் அடைந்து விடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் குளத்தை புனரமைப்பு செய்தால் நன்றாக இருக்கும். சுற்றிலும் வேலி போட்டு பாதுகாக்கிறார்கள், இல்லையென்றால் குப்பைகள் கொட்டும் இடமாகி இருக்கும்.
      மன்னனின் வாரிசுகள் நலம் அடைந்தது மகிழ்ச்சி.
      மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி.
      ஜெயா தொலைகாட்சி காணொளி பாருங்கள் மக்கள் கோவிலின் மகிமையை கூறுகிறார்கள்.

      நீக்கு
  14. கோவிலில் படம் எடுக்கும்போது குற்ற உணர்ச்சியாகத்தான் இருக்கிறது. செய்யக் கூடாது என்பதைச் செய்கிறோமே என்று... ஆசையும் இருக்கிறது. திருப்பதி, திருச்சானூர்க் கோவில்களில் செல்லை உள்ளேயே அனுமதிப்பதில்லை. மாங்காடு வைகுந்தப் பெருமாள் கோவிலில் "மூலவரை எடுக்காதீர்கள். மூலவர் சன்னதியிலேயே படம் எடுக்கக் கூடாது. வெளியில் எடுக்கலாம்" என்றார் பட்டர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனாட்சி அம்மன் கோவிலில் இப்போது செல்லை அனுமதிப்பதில்லை.சில கோவில்களில்
      வெளியில் எடுக்கஅனுமதிப்பார்கள். இந்த கோவிலில் அவர் வெளியில் இருக்கும் படத்தைகூட எடுக்க அனுமதிக்கவில்லை. நான் எடுத்த படங்கள் அவர் வரும் முன் எடுத்தது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. மிக மிக அழகான படங்கள்.அன்பு கோமதி பளிச்சென்று இருக்கிறது. கால பைரவரைப் பற்றி இவ்வளவு சேதிகள் தெரியாது. என் தம்பி மனைவி, அவர் பூஜை செய்வார்.

    மிளகு ,பயறு ஆன திருவிளையாடல் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

    தண்ணீர் இல்லாத குளத்தைப் பார்த்த சோகம் அல்லியைக் கண்டதும் தீர்ந்தது,.
    மிகச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.
    வடுக நாதரை மனதில் இருத்திக் கொள்கிறேன்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      என் மகனுக்கு அடிக்கடி சின்ன வயதில் காய்ச்சல் வரும் அப்படி வரும் போது பயப்படுவான். ( திருவெண்காட்டில் இருந்த போது) அப்போது பக்கத்துவீட்டு குருக்கள் பைரவருக்கு அபிஷேகம் செய்து தயிர் சாதம் வடை செய் காய்ச்சல், அதனால் வரும் பயம் போய்விடும் என்றார். அப்போது செய்தோம், முன்பைவிட இப்போது காலபைரவர் வழிபாடு அதிகமாகி இருக்கிறது.

      இந்த கோவில் பக்கத்தில் 108 பைரவர் ஆலயம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் வேலை நடந்து இருக்கிறது.

      இதே கதை கோவை மாவட்டத்தில் உள்ள குருந்தமலை முருகனுக்கும் சொல்லபடுகிறது.
      நான் பல வருடங்களுக்கு முன் பதிவு போட்டு இருக்கிறேன் அக்கா.

      அல்லி குளம் அழகு.மிக சுத்தமாக வைத்து இருக்கிறார்கள் . கோவிலுக்குள் இருக்கும் தோட்டமும் அழகு.

      வடுக நாதர் எல்லோருக்கும் நல்லதே செய்யட்டும்.
      அன்பான கருத்துக்கு நன்றிகள் அக்கா.

      நீக்கு
  16. எளியேனுடைய இஷ்ட தெய்வம் ஸ்ரீ வைரவப் பெருமான்..

    வைரவமூர்த்தியின் பெருமைகளை விவரித்தல் இயலாத காரியம்...

    ஆயிரத்தெட்டு அண்டங்களையும் பரிபாலிக்கின்ற மூர்த்தி... 64 பணிகளைச் செய்வதற்கு என்பது சமீப காலமாக இவர்களாகச் சொல்லிக் கொள்வது...

    சாதாரணமாக தினமும் வழிபட்டாலே ஸ்வாமியின் தண்ணருள் நம்மை நெருங்கி வருவதை உணரலாம்...

    ஸ்ரீ வைரவமூர்த்தி நிர்வாணத் திருக்கோலம் தான்.. இவருக்கு நாக யக்ஞோபவீதம்... இப்போதெல்லாம் சிவாச்சார்யார்களே வைரவமூர்த்திக்கு அடை அணிவிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர்...

    எளிய மக்கள் என்ன அறியக்கூடும்?...

    சிவாலயங்களில் ஸ்வாமிக்கு பள்ளியறை பூஜைகள் முடிந்த பிறகு
    திருக்கோயிலின் சாவிகளை ஸ்ரீ வைரவ மூர்த்தியின் பாதங்களில் வைத்து எடுத்த பிறகே கோபுர வாசல் கதவுகளை அடைப்பர்...

    விடியற்காலையில் கோயில் திறக்கப்பட்டதும் சாவிகளை வைத்து முதல் ஆரத்தி வைரவ மூர்த்திக்குத் தான்..

    திருக்கோயிலில் ஈசான்ய மூலை தான் ஸ்வாமிக்கு உரியது...

    சில திருக்கோயிலில் மேற்கு முகமாகவும் விளங்குகின்றார்...

    திருத்துறைப்பூண்டி - வாய்மேடு அருகில் தகட்டூர் கிராமத்தில் கிழக்கு முகமாக தனிக்கோயில் கொண்டு விளங்குகின்றார்...

    பட்டுக்கோட்டை அருகில் தாமரங்கோட்டை கிராமம் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய
    ஸ்ரீ கண்டேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் தெற்கு நோக்கிய சந்நிதியில் ஸ்ரீ வைரவர் விளங்குகின்றார்..

    இந்தக் கோயிலுக்கு 2 கி.மீ., வடக்கே (அத்திவெட்டி) பிச்சனிக்காடு கிராமத்தில் குறுங்காட்டுக்குள் திருவுருவம் ஏதுமின்றி பனை மரத்தில் ஸ்தாபிதமாகி விளங்குகின்றார்...

    இந்த வட்டாரத்தில் தெருவுக்கு நாலு பேர் வைரவ மூர்த்தியின் பெயருடன் இருக்கிறார்கள்...

    பெண் குழந்தை என்றாலும் வைரவ சுந்தரி என்று பெயர்...

    ஸ்ரீ வைரவர் தான் க்ஷேத்ரபாலர்... கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் க்ஷேத்திரபாலபுரம் என்றே ஊரும் கோயிலும் இருக்கின்றன...

    இன்னும் பேசலாம் - பிறகொரு நாளில்!.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

      //எளியேனுடைய இஷ்ட தெய்வம் ஸ்ரீ வைரவப் பெருமான்//

      மகிழ்ச்சி.

      //ஆயிரத்தெட்டு அண்டங்களையும் பரிபாலிக்கின்ற மூர்த்தி... 64 பணிகளைச் செய்வதற்கு என்பது சமீப காலமாக இவர்களாகச் சொல்லிக் கொள்வது..//

      ஆம், உண்மை.

      //சாதாரணமாக தினமும் வழிபட்டாலே ஸ்வாமியின் தண்ணருள் நம்மை நெருங்கி வருவதை உணரலாம்...//

      உண்ர்ந்து இருக்கிறேன்.
      பைரவ உபாசனை செய்யும் அன்பர் ஸ்ரீ பைரவர் 108 போற்றி கொடுத்து படிக்க சொன்னார் படித்து வருகிறேன்.

      //ஸ்ரீ வைரவமூர்த்தி நிர்வாணத் திருக்கோலம் தான்.. இவருக்கு நாக யக்ஞோபவீதம்... இப்போதெல்லாம் சிவாச்சார்யார்களே வைரவமூர்த்திக்கு அடை அணிவிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர்...//

      அதிராவின் கேள்வி ஏன் அவருக்கு நிர்வாணத் திருக்கோலம் என்று.
      நானும் எனக்கு தெரிந்த அளவு சொல்லி இருக்கிறேன்.
      எல்லா கோவில்களிலும் அப்படித்தான் காட்சி அளிக்கிறார்.

      எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவர் பேர் வைரவர் .

      அவர் இருக்கும் இடங்களை பற்றி எல்லாம் விரிவாக சொன்னது மகிழ்ச்சி.

      //சிவாலயங்களில் ஸ்வாமிக்கு பள்ளியறை பூஜைகள் முடிந்த பிறகு
      திருக்கோயிலின் சாவிகளை ஸ்ரீ வைரவ மூர்த்தியின் பாதங்களில் வைத்து எடுத்த பிறகே கோபுர வாசல் கதவுகளை அடைப்பர்...

      விடியற்காலையில் கோயில் திறக்கப்பட்டதும் சாவிகளை வைத்து முதல் ஆரத்தி வைரவ மூர்த்திக்குத் தான்..//

      இந்த பூஜைகளை சீர்காழி, திருவெண்காடு, மயூரநாதர் கோவிலில் பார்த்து இருக்கிறேன்.
      சீர்காழியில் அஷ்டபைரவர் ஆலயம் இருக்கிறது சிறப்பாக பூஜைகள் நடக்கும்.


      //ஸ்ரீ வைரவர் தான் க்ஷேத்ரபாலர்... கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் க்ஷேத்திரபாலபுரம் என்றே ஊரும் கோயிலும் இருக்கின்றன...//

      நாங்கள் அடிக்கடி போகும் கோவில். தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை ஞாயிறு மிக விஷேசம். கூட்டம் அலைமோதும்.

      திருச்சேறைசெந் நெறி செல்வர் மிகவும் சிறப்பு வாய்ந்த பைரவ மூர்த்தி.
      ஞாயிறு ராகு காலத்தில் வழிபட்டு வருகிறேன் அவர் பாடலை பாடி.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.









      நீக்கு
  17. ஒரு புதிய இடமும் , அழகிய திருக்கோவிலும்

    படங்களும் செய்திகளும் மிக சிறப்பு மா..

    அல்லி குளம் வெகு அழகு ..

    மூலவரை படம் எடுப்பதில் எனக்கும் உடன் பாடு இல்ல...வெளிபிரகாரம் வரை நிறைய படம் எடுத்தாலும் மூலவர் பிரகாரம் வரும் போது எப்பொழுதும் போனை எடுத்து உள்ளே வைத்து விடுவேன் ..அங்கு அவனை மட்டுமே காண வேண்டும் என்ற நோக்கில் ,,,

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் சரிதான் அவரை மட்டுமே கண்டு மனம் லயித்து வணங்க வேண்டும் என்பது சரியே.

    பதிவு எழுத ஆரம்பித்தது முதல் மூலவரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் கோவில்களில் எடுத்து விடுகிறேன்.

    மற்ற இடங்களில் வெளி பிரகாரம் மற்றும் அங்கு நடக்கும் கோலாகலங்களை எடுக்கிறேன்.

    மேலை நாட்டிலும் சில கோவில்களில் அனுமதி உண்டு, சில கோவில்களில் அனுமதி இல்லை.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  19. படங்களும் தகவல்களும் வழக்கம் போல அருமை! விரிவாக எழுத இயலவில்லை பணிச்சுமையால் மன்னிக்கவும் சகோதரி.

    துளசிதரன்.

    அக்கா நான் லேண்டட். உடம்பு இன்று பெட்டராகிவிட்டது....அதான் வந்தாச்சு..இதோ பதிவு வாசித்துவிட்டு வரேன் முதல் படமே அட்டகாசமா வரவேற்குதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      பணிச்சுமையிலும் நீங்கள் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      உடம்புக்கு என்ன? எனக்கு தெரியாதே!
      இப்போது எப்படி இருக்கிறது? அவசரமில்லை உடல் நலத்துக்கு ஓய்வு எடுங்கள் மெதுவாய் வந்து கருத்து சொல்லலாம்.

      நீக்கு
  20. அருமையான படங்கள், விளக்கமான தகவல்கள் என அனைத்தும் சிறப்பு அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. கோபுரம் மேலுள்ள அந்த காலபைரவர் தானே அது ரொம்ப அழகாக இருக்கிறார். சாணி இட்டு மொழுகிய இடம் அழகா இருக்கு.

    குளம் பார்க்க அழகாத்தான் இருக்கு அக்கா. தண்ணீர்தான் இல்லை...அந்தக் கிணற்றைப் பார்த்ததும் பிரமிப்பும்....ஒரு வேளை குளத்தில் தண்ணீர் இருந்தால் அந்தக் கிணறு தெரியாமல் இருக்குமல்லவா? அப்போ பார்த்துதான் இறங்கனும் இல்லையா?

    யாழி தூண் படம் அழகு ஆனால் அந்த ஃபோட்டோவில் ஏதோ பச்சை படர்ந்தது போல இருக்கே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொங்கு நாட்டில் சாணி போட்டு மொழுகி தான் வீடுகளும், கோவில்களும் காணப்படும்.
      குளத்தில் தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது கிணறு தெரிகிறது.நீங்கள் சொல்வது போல் த்ண்ணீர் இருந்தால் கஷ்டம் தான்.
      பச்சை கலர் வேலி வழியாக எடுத்தது அதுதான் பச்சை படர்ந்து இருக்கிறது.
      நல்ல கவனிப்பு .

      நீக்கு
  22. கோவில் ரொம்ப சிம்பிளா இருக்கு...ஸோ எனக்குப் பிடித்தது...

    கதைகள் ஸ்வாரஸ்யம்...மன்னரின் குழந்தைகள் நலமடைவதும்....இந்தக் கதை எங்கேயோ வாசித்தது போல நினைவு அந்த மிளகு பயறு ஆனது என்பது.... ஆனால் தெளிவாகத் தெரியலை இப்ப உங்கள் பதிவின் மூலம் தெரிந்து விட்டது.

    அந்த வடுகபைரவர் சன்னத...அந்த் அரச மரம் ரெண்டாவது படம் ஹையோ அழகு. இரு கைகளையும் நாம் குவித்து கிண்ணம் போல் விரித்தால் எப்படி இருக்கும் அப்படி அழகா கிளைகள் இருக்கு...உங்க படமும் சூப்பரா இருக்கு.

    அல்லிக் குளம் வாவ்! போட வைத்தது. அந்த அல்லி என்ன அழகு!!! சூப்பர் ரொம்ப நாளாகிடுச்சு நாள் அல்ல வருஷம் ஆகிடுச்சு...எங்க ஊர்ல வீட்டருகில் ஓடும் பெரிய அகன்ற வாய்கால் ஆற்றில் இந்த அல்லி ஆம்பல் எல்லாம் பார்த்து ரசித்ததுண்டு...

    கோபுரம் படங்களும் அட்டகாசம்...

    எப்படியோ தேவையான படங்கள் வந்து விட்டனவே...இதுவே அழகாகத்தான் இருக்கிறது.

    எனக்கும் இப்படி கோயிலுக்குச் செல்லும் போது எல்லாம் எடுத்துவிடத் துடிக்கும். என்றாலும் யாரேனும் ஏதேனும் சொல்லுவார்களோ என்ற பயமும் இருக்கும். போர்ட் இருக்கிறதா என்று பார்ப்பேன். எடுக்கக் கூடாது என்று. சில கோயில்களி இருக்கும் அப்படி இருந்தால் எடுப்பதில்லை. இல்லை என்றால் எடுப்பேன்....இப்போது கேமரா இல்லை. மொபைல் தான். யாரேனும் தடுத்தால் எடுப்பதை நிறுத்திவிடுவேன்...வெளியில் மட்டும் எடுத்துவிட்டு வருவதுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பாதி படம் மொபைல் மூலம் தான் எடுத்தேன் கீதா.
      நானும் கோவிலில் படம் எடுக்க கூடாது என்று அறிவிப்பு பலகை இருக்கா என்று பார்த்து விட்டுதான் எடுத்தேன்.

      அரசமரம் நீங்கள் சொல்வது போல் அழகாய் விரிந்து பரந்து இருந்ததால் தான் எடுத்தேன்.

      குளத்தில் தண்ணீர் இல்லாத குறையை அல்லிக்குளம் போக்கியது.
      பதிவில் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு கருத்து சொன்னத்ற்கு நன்றி கீதா.

      நீக்கு
  23. தலவரலாறும் படங்களுமாகப் பகிர்வு அருமை. அல்லிக் குளம் அழகு. நீர் இல்லா கிணறும் வற்றிக் காட்சியளிக்கும் கோவில் குளமும் வருத்தம் அளிக்கிறது. இந்த வருடம் இறையருளால் நல்ல மழை கிட்டட்டுமாக.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    அல்லிக் குளம் எல்லோரையும் கவர்ந்து விட்டது.
    உங்கள் வாக்குப்படி மழை பெய்து குளம் நிறையட்டும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு