பயந்து போய் மூலையில் ஒதுங்கி
இன்று கூட்டைவிட்டு அவசரமாய்ப் பறந்த குருவிக் குஞ்சு எங்கள் வீட்டுப் பால்கனியில் விழுந்து விட்டது. இன்னும் இரண்டு நாள் உணவைச் சாப்பிட்டால் தெம்பு வந்து பறக்கலாம். அதற்குள் பறக்க ஆசை.
சத்தம் கொடுக்கவும் பயம்,
சத்தம் போடு குஞ்சம்மா, உன்னைத் தேடி உன் அம்மா வரவேண்டும் அல்லவா ?
ஈனஸ்வரத்தில் மெலிதாகக் கூப்பிடுது
கதவு இடுக்கு வழியாக அலைபேசியில் எடுத்த படம்
குஞ்சைத் தேடி பரிதவிக்கும் குருவி
தேடித் தேடி
உன் வீட்டில் இருக்கா இந்தா வரேன்
சாதப் பருக்கை எடுத்து வருது.
அதன் பெற்றோர்கள் எங்கெல்லாம் தேடி எங்கள் பால்கனியில் இருப்பதைப் பார்த்த பின் உணவு கொண்டு வந்து கொடுக்குது இரண்டும்.
நானும் தட்டில் சாதம் வைத்தேன், குஞ்சுக்குக் கொத்தத் தெரியாது, பெரிசுகள் அதைக் கொத்தப் பயப்படுகிறது.
எப்படியோ குஞ்சுக்குத் தாய், தகப்பன் இரண்டு பேரும் உணவு கொடுக்கிறார்கள். பத்திரமாய்ப் பறந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இறைவன் காப்பார் என்ற நம்பிக்கையும் தான். நம்பிக்கைதானே வாழ்க்கை !
வாழ்க வளமுடன்.
=================================================================================
கடைசி படத்தைப் பார்த்ததும் அம்மாடி என்று ஆசுவாசப்பட்டது, மனசு!
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல தாய், தந்தை வந்ததும் மனசு ஆசுவாசப்பட்டது.
//சத்தம் போடு குஞ்சம்மா, உன்னைத் தேடி உன் அம்மா வரவேண்டும் அல்லவா ? //
பதிலளிநீக்குஎவ்வளவு அன்புள்ளம் உங்களுக்கு.. தாயுள்ளமுமோ? அம்மா தான் வர வேண்டுமா?
அப்பா?..
//சத்தம் போடு குஞ்சம்மா..//
சத்தம் இல்லை, குஞ்சம்மா கீதம் அல்லவோ இசைப்பார்கள்?.. (உங்களுக்குப் புரியும்)
//சத்தம் இல்லை, குஞ்சம்மா கீதம் அல்லவோ இசைப்பார்கள்?.. (உங்களுக்குப் புரியும்)///
நீக்குஆமாம் , குஞ்சம்மா கீதம் தான் இசைப்பார்கள். காற்றினிலே அவர் கீதம் ஒலித்து கொண்டு இருக்கிறது. காலத்தை வென்றவர்.
உங்களுக்குத் தெரியும் என்று நான் யூகித்தது சரி தான். கரெக்டாகக் கண்டு பிடித்து விட்டீர்கள்.
நீக்குஅந்தப் பெயர் கொண்டு சாதாசிவம் மட்டும் தான் கூப்பிடுவாராம்.
நன்றி சார், மீண்டும் வந்து பகிர்ந்து கொண்டதற்கு.
நீக்கு//குஞ்சைத் தேடி பரிதவிக்கும் குருவி.. //
பதிலளிநீக்குரொம்ப யோசனைக்குப் பிறகு விடியோவை 'க்ளிக்' செய்வதைத் தவிர்த்தேன்.
பார்க்க கஷ்டமாய் இருக்கா?
நீக்குஎல்லா உயிர்களுக்கும் அன்பு அடிநாதமாக இருக்கிறது என்று பாரதி சொன்னது போல் இருக்கே!
விடியோவைத் திறக்கவே இல்லை.. அவற்றின் அல்லாடலை யூகிக்க முடிந்ததால்..
நீக்குஅதுவும் சரிதான் சார்.
நீக்கு//கதவு இடுக்கு வழியாக அலைபேசியில் எடுத்த படம்..//
பதிலளிநீக்குகதவு நாதாங்கி, குருவி, சாதம் -- இந்த மூன்றையும் இணைத்து யாராவது கவிதை ஒன்று எழுத முன்வருவார்களா?..
ஜீவி சார் கவிதை எழுத சொன்னால் உடனே எழுதிவிடுவார், நம் சகோ துரை செல்வராஜூ சார். நீங்களும் கவிதை எழுத தெரிந்தவர் தான்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
குஞ்சும் தாய்ப்பறவையும் சந்தித்துக்கொண்ட நேரம் ரொம்ப நிம்மதியாய் இருந்திருக்கும். "யாதோங்கி பாராத் பாடாத குறையாய் இணைந்திருக்கும்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குகுஞசும் பெற்றோர்களும் சந்தித்து கொண்டது மகிழ்ச்சியான நேரம்தான்.
//யாதோங்கி பாராத் பாடாத குறையாய் இணைந்திருக்கும்!//
குடும்ப பாடல் போல அவைகளுக்கு பரிபாஷை இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
காணொளி பார்க்கவில்லையா?
ஓ.... பார்த்தேனே... கீச் கீச்சென்று குஞ்சைத்தேடும் சீனியர் பறவையின் தவிப்பைக் கண்டேனே...
நீக்குஸ்ரீராம் ஒரு வேளை இப்படிப் பறவைகள் விலங்குகள் குறிப்பாக நீங்களே பார்த்திருப்பீங்க வழி தவறிய கன்றுக்குட்டி ம்மா ம்மா என்று சப்தம் எழுப்பும் தாயும் தேடி சப்தம் எழுப்பும்...அந்த சப்தம் கேட்டு கேட்டு சேரும்....இதெல்லாம் பார்த்துத்தான் நம்ம சினிமாக்காரங்க சினிமால பாட்டு பாட வைச்சு பிரிஞ்சவங்களை சேர்த்திருப்பாங்களோ?!!!!...மனிதன் எல்லாம் இயற்கை விலகுங்களிடம் இருந்து கற்பதுதானே!!!
நீக்குகீதா
பார்த்தீர்களா ? எல்லா பக்கமும் வந்து சத்தம் கொடுத்தது.
நீக்குஜன்னல் பக்கம், பால்கனி பக்கம் எல்லாம் வந்து என்னிடம் சொல்வது போல் இருந்தது.
அவைகளின் பாஷை நமக்கு தெரிந்தால் நன்றாக இருக்கும்.
காணொளி கண்டு கருத்து சொன்னத்ற்கு நன்றி.
ஜீவி சார் கவிதை எழுத முன்வருவார்களா?. என்று கேட்கிறார் நீங்களும் கவிதை எழுதாலம். நன்கு கவிதை எழுத வருமே உங்களுக்கு.
கீதா, நீங்கள் சொல்வது போல்தான் பறவைகள், விலங்குகள், குறிப்பாய் மாடு கன்று பக்கத்தில் வரும் வரை குரல் கொடுக்கும், ஆடு குட்டி பக்கத்தில் வரும் வரை குரல் கொடுக்கும். ஆட்டின் தவிப்பை குட்டி வந்து பால் குடிப்பதை படம் எடுத்து இருக்கிறேன்.
நீக்குகாகம் தன் கூட்டுக்கு கிட்டே பற்வைகள் பறந்தால் கத்தி தீர்த்துவிடும்.
சினிமாவில் அதை காட்டி நம்மை உணர்ச்சிவயபடுத்தி விடுவார்கள்.
வல்லிம்மா ஃபேஸ்புக்கிலோரு வீடியோ பகிர்ந்திருக்கிறார். ஒரு பூனைத்தாயும் இரண்டு குட்டிப்பூனைகளும். மாடியிலிருந்து இறங்கக் கற்றுக்கொடுக்கும் தாய்ப்பூனை...
நீக்குபறவைகளும் கற்றுக் கொடுக்கும் தாய், தகப்பன் பற்வைகள் குஞ்சு பறக்கும் போது கூடவே பறக்கும்.அதன் பின் அது அது பாட்டை அவைகள் பார்த்துக் கொள்ளும்.
நீக்குபூனைகள் காணொளி நானும் பார்த்தேன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குசின்னஞ்சிறிய குருவி குஞ்சின் படங்கள் அருமை. தாய் குருவி பாசத்தில் அமர்ந்து சத்தம் கொடுப்பதும், தேடுவதும் கண்களை கலங்க வைத்தன. ஒரு வழியாய் தங்கள் வீட்டில்தான் தான் பெற்றெடுத்த சொத்து இருப்பதை கண்டு கொண்டனவோ.! இனி கவலையில்லை.தாயும்,சேயும் நலமாக பறந்து சென்று நல்லபடியாக வாழட்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்கு//இனி கவலையில்லை.தாயும்,சேயும் நலமாக பறந்து சென்று நல்லபடியாக வாழட்டும்.//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
அன்பும், கருணையும் நிறைந்த உங்கள் வாழ்த்துக்கள் அதற்கு கிடைத்தது மகிழ்ச்சி.
நன்றி உங்கள் அன்பான கருத்துக்கு.
நல்ல வேளையாகக் குடும்பம் ஒன்று சேர்ந்ததே கோமதி மா. மனம் கிடந்து தவித்தது. ஏதாவது கழகு கண்ணில் படாமல் தப்பித்ததே குஞ்சு.
பதிலளிநீக்குமிக மிக நன்றி மா.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குஇரண்டு வீடுகளுக்கு நடுவில் கூடாரம் போட்டு இருக்கும் அக்கா வேறு பறவைகள் கண்ணில் படாது.
பால்கனி எதிர்சுவரில் தான் கூடு.
அதனால் பறக்க ஆரம்பித்ததும் நேரே எங்கள் பால்கனிக்கு வந்து விட்டது.
கீழே இருந்து எழும்ப தெரியவில்லை.
அதற்கு வேண்டிய சக்திக்கு ஆகாரம் வேண்டும். அதற்கு தாய், தந்தை வருது .
நாளை என்ன செய்கிரது என்று பார்க்க வேண்டும்.
அதிகபடியான செருப்புகள் வைத்து இருக்கும் பை பக்கம் ஒண்டி இருக்கிறது.
இங்கு பயம் இல்லை. பூனை கீழே வரும். மாடிக்கு வந்தது இல்லை.
இறைவன் பார்த்துக் கொள்வார்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா பதிவு செம டென்ஷன்...முதல்ல....அப்புறம் சேர்ந்துருச்சுன்னு பார்த்ததும் தான் மனசு சமாதானம்...நிஜம்மா அக்கா ...ஹையோ ஏன் இப்படி இதுங்க பிரியுது...அதுவும் இதுங்களுக்கு போய் இப்படி ஆகுதே என்று....மனசு பக் பக்குனு இருந்துச்சு நீங்க கடைசில சேர்ந்திருச்சுன்னு சுபம் போட்டதும்தான் சந்தொஷம்....
பதிலளிநீக்குபடங்கள் எலலம் சூப்பர் அக்கா....அந்தக் குருவி எப்படி கத்துது பாருங்க...
//சத்தம் போடு குஞ்சம்மா, உன்னைத் தேடி உன் அம்மா வரவேண்டும் அல்லவா ? //
மிகவும் ரசித்த வரிகள் அக்கா...
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குகுஞ்சுகள் உள்ளே இட நெருக்கடியில் இருக்கிறது.
எட்டிப்பார்த்து உணவு வாங்குவதில் முட்டி மோதுகிறது.
அம்மா, அப்பா போல விர் என்று பறக்க ஆசை படும் மனது.
அவைகள் காலை முதல் இரவு 7மணி வரை கூட்டில் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும்.
குரல் கொடுத்தால் தானே அதன் அம்மாவுக்கு தெரியும்.
புது இடத்தில் வந்தவுடன் அதன் சப்தனாடியும் அடங்கி ஒடுங்கி விட்டது.
பயம் தெளிந்து சத்தம் கொடுத்தபின் தான் பெரிய பறவைகள் வந்தன.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
அக்கா பால்கனி ல விழுந்துச்சே நல்லகாலம். வெளியில் எங்காவது என்றால் அதற்கு ஆபத்து வந்திருக்கும்.
பதிலளிநீக்குபடம் எல்லாம் நீங்க பார்ட்து பார்த்து எடுத்திருக்கீங்களே ரசித்தும்....நாங்களும் ரசித்தோம் அக்கா....
கீதா
ஆமாம் கீதா, அதுவும் வேறு பால்கனி என்றால் பயம் தான்.(அங்கு நிறைய பற்வைகள் வரும்) வீட்டில் மூன்று பாலகனி இருக்கிறது.
நீக்குஇந்த பால்கனி பயம் இல்லை.
படங்களை ரசித்தமைக்கு நன்றி.
ஏற்கெனவே முகநூலில் பார்த்துப் பரிதவித்துப் போனேன். இது கொஞ்சம் ஆசுவாசம் தருகிறது. காணொளியை நானும் பார்க்கலை. இம்மாதிரிச் சின்னக் குஞ்சு ஒன்று, சின்னக் கொழுக்கட்டை போல் இருக்கும். கீழே விழுந்து இறந்து போய்விட்டது ஒரு முறை, பல ஆண்டுகள் முன்னால். இப்போதும் அந்த நிகழ்வு மனதில் பதிந்துள்ளது.
பதிலளிநீக்குஎங்க குட்டிக் குஞ்சுலுவுக்கும் எம்.எஸ். அம்மாவைப் போல் குஞ்சம்மா என்ற பெயர் நிலைத்துவிடும் போல! :))) அவரை அந்தப் பெயர் சொல்லி மிகவும் நெருங்கியவர் அழைப்பார்கள் என அவர் குறித்த நினைவலைகளில் எழுதி இருந்ததைப் படித்திருக்கிறேன்.
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குஎனக்கும் பற்வைகளை(கிளி, தேன்சிட்டு, குருவி, அணில்) இவற்றை காப்பாற்றியது, இறப்பை பார்த்த்து என்று அனுபவங்கள் இருக்கிறது.
என்ன செய்வது அது அது வந்த வழிப்படி போகிறது, வாழ்கிறது.
எம்.எஸ் அம்மாபோல் உங்கள் குஞ்சுலுவுக்கும் இசை ஞானம் இருக்கே!
கல்கியில் படித்த நினைவு தான் எனக்கும்.
இது கொஞ்சம் என்னைப் போல் அ.கு.வாக இருக்கும் போல. இப்போப் பறப்பது எப்படினு புரிஞ்சுடுத்தா? பறந்துவிட்டதா? இன்னமும் அங்கேயே இருக்கா?
பதிலளிநீக்குஇப்போதும் எங்கள் பால்கனியில்தான் இருக்கிறது, காலை எழுந்தவுடன் போய் பார்த்து வந்தேன் கண் மூடி தூங்கி கொண்டு இருந்தது. என் கணவரும் காலை எழுந்தவுடன் பார்த்து வந்தார்கள் இருக்கா, பறந்து விட்டதா என்று ஒண்டி கொண்டு இருக்கு என்று பார்த்து வந்து சொன்னார்கள். மணி 6.30 திலிருந்து தன் இருப்பைக் காட்டி சத்தம் கொடுக்கிறது.
பதிலளிநீக்குபத்திரமாய் இருக்கிறாயா? என்று அதன் பெற்றோர்களும் நலம் விசாரித்து சென்று விட்டதுகள்.
இன்னும் இரண்டு நாள் ஆகும் என்று நினைக்கிறேன் பறக்க.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகான படங்கள் சகோதரி. நீங்கள் பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பும் வியக்க வைக்கிறது. மிகவும் பொறுமையாகப் படம் எடுத்தும் பகிர்கின்றீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
நீக்குஎன்னால் என்ன செய்ய முடியும் படம் எடுக்கவும், அவை நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிகிறது.
அதனை அதன் கூட்டில் விட முடியவில்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்களின் அன்பு உள்ளத்திற்கு வாழ்த்துகள் அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
அன்பான தாயுள்ளம் தங்களுக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அம்மா.
வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி குமார்.
உயிர்களிடத்தில் காட்டும் உங்களின் அன்பு.
பதிலளிநீக்குஉங்களது மனம் எப்படி என்று புரிகிறது வாழ்த்துகள் காணொளி கண்டேன்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குகாணொளியை கண்டதற்கு நன்றி.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ஆவ்வ்வ்வ்வ் கோமதி அக்கா, நைட் ஏழியாப் படுத்திட்டேன்.. இங்கு ஸ்னோவும் ஆரம்பமாகிட்டுது குளிர் இருட்டு... அதனால அடிக்கடி மூட் தான் ஓவ் க்குப் போகும்:).. ஹா ஹா ஹா நைட் பார்க்காமல் விட்டிட்டேன்ன்ன் வருகிறேன்...
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுளிர் நேரத்தில் உங்களை குருவி அழைத்து விட்டதா?
ஸ்னோ அதிகம் இருந்தால் ஒன்றும் செய்ய தோன்றாது.
வாங்க வாங்க மெதுவாக மூட் நன்றாக இருக்கும் போது வாருங்கள்.
குருவி பாலகனி விட்டு பறந்து போய் விட்டது இன்று மதியம். அந்த இடம் வெறுமையாக
இருக்கிறது.
http://gmbat1649.blogspot.com/2011/09/blog-post.html 2011ல்தனிமைப் பறவை என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் சுட்டி மேலே படித்துப்பாருங்களேன்
பதிலளிநீக்குவணக்கம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குபடித்து பார்க்கிறேன் சார்.
அசோ ...
பதிலளிநீக்குநல்ல வேலை அவங்க அம்மா பார்த்தாச்சு ...
பத்திரமா பறந்து போகட்டும் அந்த குட்டி பறவை ...
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குபத்திரமாய் இன்று மதியம் பறந்து போய் விட்டது குட்டி பறவை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அவசரப்பட்ட குருவியும் தவித்துப் போன பெற்றோரும். நீங்களும் தவிப்புடன் இருந்திருப்பீர்கள். பத்திரமாகப் பறந்து போனது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குஇன்று காலை வெளியில் போய் இருந்தோம், வந்தவுடன் குஞ்சு இருக்கா என்ற தவிப்புடன் பார்த்தோம். பத்திரமாய் ஒளிந்து கொண்டு இருந்தது நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
கொஞ்ச நேரத்தில் தாய் குருவி உணவு கொடுக்க வந்த போது கீழே இருந்து ஒரு குதி பால்கனி கைபிடியில் அமர்ந்து அம்மாவிடம் சாதம் வாங்கியது, காமிராவை எடுத்து வர உள்ளே வந்தேன், விர் என்று பறந்து தடுப்பு சுவரில் உடகார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தது, அப்போது புறா பக்கத்தில் உட்கார வந்ததும் அங்கிருந்து விர் என்று பறந்து விட்டது. இப்போது அதன் சத்தம் இல்லாமல் அந்த இடம் வெறுமையாக இருக்கிறது. பத்திரமாய் பறக்க வேண்டும் என்று எண்ணிய மனம் போய் விட்டதே என்று வருந்துகிறது. விசித்திர மனம்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவந்திட்டேன்க்கா :)
அது அம்மா அப்பா ரெண்டுபேரும் குழந்தையை கைவிட மாட்டாங்க .இந்த சின்ன ஜீவன்களுக்குத்தான் எத்தனை பேரன்பு பாருங்க !!
பல பறவைக்குஞ்சுகள் அவசரப்பட்டு பறக்க முற்படுவதாலே இப்படி நடக்குது .பாவம் ..ஆனா உங்க வீட்டு பால்கனில வந்ததால் நிச்சயம் பத்திரமா இருக்கும் .லக்கி புறா குஞ்சுவின் அம்மாவும் இப்படித்தான் ஓட்டு மேலே காத்திருந்தா அடுத்த நாள் கூட்டிட்டு போனதும்தான் என் மனம் நிம்மதியாச்சு .
இங்கே மூணாவது வீட்டில் ஒரு பூனை வீட்டுக்குள் இருந்தது அது எப்படியோ வெளியே வந்து காணாமப்போச்சாம் அதன் உரிமையாளர் எல்லா இடங்களிலும் படம் ஒட்டி தேடிக்கொண்டிருக்கிறார் நேற்று அவரை சந்தித்து பேசும்போது அவர் கண்கள் கலங்கியிருந்து .இதோ இந்த தாய் குருவியின் பரிதவிப்பு போலிருந்தது
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்குசின்ன ஜீவன்களின் பேரன்பு வியக்க வைக்கும்.
லக்கி புறா குஞ்சு பதிவு படித்து இருக்கேன் ஏஞ்சல்.
அடுத்த நாள் கூட்டி போனதும் தான் நிம்மதி ஆச்சு.
இப்போது இதுவும் ஒருநாள் முழுவதும் இருந்து இன்று பறந்து போய் விட்டது.
பூனையை காணவில்லை என்று தேடும் அன்பருக்கு அவர் பூனை கிடைக்க வேன்டும் இறைவனை வேண்டுகிறேன். வளர்த்த செல்லத்தை காணவில்லை என்றால் கண்கலங்கத்தான் செய்யும்.
நாங்கள் மகன் ஊருக்கு போய் இருந்த போது தன் பூனையின் படத்தை தொலைக்காட்சி சேனலில் காணவில்லை என்று ஒருவர் அறிவித்தார், முகவரி கொடுத்து பார்த்தால் தகவல் தெரிவிக்க சொல்லி இருந்தார்.
அவர் காட்டியது போல் பூனை எங்கள் வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் வந்தது, மகன் எங்கள் ஏரியாவில் சுற்றுகிறது என்று தகவல் அனுப்பினான்.
ஆனால் வந்து தூக்கி போனாரா என்ற விவரம் தெரியவில்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
>>> என்னால் என்ன செய்ய முடியும் படம் எடுக்கவும், அவை நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிகிறது<<<
பதிலளிநீக்குஇதுவே மிகப்பெரிய புண்ணியம்...
புண்ணியரைக் காண்பதுவும் புண்ணியம்!...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்களை போன்ற சிவ சிந்தனை உள்ளவர்கள் பிரார்த்தனையால் குருவி நலமே பறந்து சென்றது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்களை போன்ற அன்பு , பக்தி உள்ளவர்களின் நட்பு கிடைத்தது புண்ணியமே!
பதிலளிநீக்குகுருவிக்குஞ்சு பாடிய வாழ்த்துரை...
--------------------------------
கூட்டை விட்டுப் பறக்கத்தான்
ஆசைப்பட்டேன்...
கூடும் அன்பின் நலங்காணப்
பிரியப்பட்டேன்...
சிறகிருந்தும் விரிக்கத்தான்
ஆகலையே...
குளிர் வானில் சிறகடிக்கக்
கூடலையே...
அன்னை அவள் இரைதேட
அப்பன் அவள் துணையாக
யாரும் இல்லா வேளையிலே
என்ன இது விபரீதம்!..
விழுந்த இடம் நல்ல இடம்
உயிர் பிழைத்தேன்..
ஆனாலும் பசிக்கிறது..
மனம் தவித்தேன்...
கதவு நாதாங்கி திறந்து கொள்ள
நான் பயந்தேன்..
உதவு மனந்தாங்கி பிடிசாதம்..
நான் வியந்தேன்...
குருவி எந்தன் பசிதீர
சோறு வைத்தாய்...
அருவி எனும் அன்பு
அடடா... நீயும் என்தாய்!...
கூடலிலே வாழ்கின்றாள்
மீனாட்சியம்மா..
அவள் ஆசியுடன் வாழவேணும்
கோமதியம்மா!..
வணக்கம் சகோ, துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குஅருமையான கவிதை.
கதவு நாதாங்கி திறந்து கொள்ள
நான் பயந்தேன்..
உதவு மனந்தாங்கி பிடிசாதம்..
நான் வியந்தேன்... //
இந்த வரிகளை கண்டு வியந்தேன்!
மீனாட்சியின் ஆசியில் வாழவேணும் என்று வரிகள் படித்து கண்ணில் கண்ணீர் துளிர்த்து.
அன்பான கவிதைக்கு நன்றிகள் பல.
//கதவு இடுக்கு வழியாக அலைபேசியில் எடுத்த படம்..//
//கதவு நாதாங்கி, குருவி, சாதம் -- இந்த மூன்றையும் இணைத்து யாராவது கவிதை ஒன்று எழுத முன்வருவார்களா?..//
ஜீவி சார் கேட்டதற்கு உங்களை சொன்னேன்.
எழுதி விட்டீர்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து விட்டது.
புது வேலையின் பளூ ஒரு பக்கம் இருந்தாலும் கவிதை எழுதியதற்கு மகிழ்ச்சி.
நன்றி.
கோமதி அக்கா எனக்கு ஸ்கூல் போகும் நாட்களில் தான் கஸ்டமாக இருக்கு மற்றும்படி ஓகே.
பதிலளிநீக்குகுருவிக் குஞ்சு என்கிறீங்க ஆனா பெரிசா இருக்கே, ஶூம் பண்ணி எடுத்ததாலோ? அழகழகா ஸ்ரெப் பை ஸ்ரெப்பா எடுத்திருக்கிறீங்க...
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குவேலை நாட்களில் பனி பெய்யும் போது வெளியே போவது கஷ்டமாய் தான் இருக்கும்.
ஜூம் செய்து எடுத்ததால் பெரிதாக தெரிகிறது.
தாய்க்குருவி தவிப்பது வீடியோவில் தெரியுது...
பதிலளிநீக்குபாரம்மா பறவைக்கும்
பாசங்கள் இருக்கின்றது
பறந்தோடீஈஈ இரை தேடி
குஞ்சுக்குக் கொடுக்கின்றது...
நான் அடிமை இல்லைப் படப் பாடல் நினைவுக்கு வருகிறது..
உங்கள் நினைவாற்றல் வியப்பாய் இருக்கிறது அதிரா.
நீக்குஅந்த படத்தில் மகன் பாடும் பாடல் நீங்கள் சொன்ன பிறகு நினைவுக்கு வந்து விட்டது.
பெற்றோரைக் கண்டு பிடித்ததில் மகிழ்ச்சி... பூஸ் பரம்பரை யாரும் குஞ்சைப் பார்திடக்குடாது ஜாமீஈ:)..
பதிலளிநீக்குஇப்போ இங்கு எந்தப் பறவையும் வருகிதில்லை, கார்டினில் உணவு வச்சேன்... வன் வீக்காகிட்டுது ஆரும் வந்து தொடவில்லை, குளிரில் ஸ்னோவில் கல்லாகிப்போய் இருக்குது.
மாடி வீடு அதனால் பூனை வரவில்லை.
நீக்குகீழே பூனை சுற்றுகிறது. அது கண்ணில் பட்டால் பிழைப்பது கஷ்டம் தான்.
குளிர் பனி பொழிவு எப்படி வரும் இல்லையா?
அதன் உணவுகளை அவை முன்பே சேகரித்து வைத்துக் கொள்ளும்.
சோம்பேறி பறவைகள் சேர்த்து வைக்காமல் இறக்கும் கதைகள் இது போன்ற நாளில் குழந்தைகள் கதையாக படித்து இருக்கிறேன்.
அணில் கொட்டைகளை ஒளித்து பதுக்கி வைப்பதையும் படங்களில் பார்த்து இருக்கிறேன்.
இறைவன் இவைகள் உயிர் வாழ அவைகளுக்கு கொடுத்து இருக்கும் அறிவை கண்டு வியந்து போவேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
குட்டிக் குருவி பாவம்....
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசின்னச்சிட்டு பத்திரமாய் பறந்து சென்று விட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றீ.
பயந்த குருவியை படத்தில் பார்க்கவே பாவமாக இருக்கிறது. தாயோடு சேர்ந்தது கேட்டு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.