வெள்ளி, 25 ஜனவரி, 2019

செல்லக்குட்டிகள்




அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்   பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் வேளையில்  வழியில் இருந்த செல்லக்குட்டியுடன் விளையாட்டு.


வீட்டுக்குக் கொண்டு போகப் போகிறீர்களா ? என்று கேட்டதற்கு எங்கள் வீட்டில் அடிப்பார்கள். விளையாடி விட்டு  இங்கேயே விட்டுவிட்டுப் போய் விடுவோம் என்றார்கள்.

மார்கழி மாதம் தினம் அய்யனார் கோவில் வழிபாட்டுக்குப் போவேன், அப்போது  தினம் பார்க்கும்  நாய்குட்டி. இது அவர்கள் வளர்க்கும் அம்மாவுடன் தினம் கோவிலுக்கு வரும்., அவர்கள்  சொல்படி கேட்கும். அந்த அம்மா சொல்வார்கள், "நம் பிள்ளைகள் கூட நம் பேச்சைக் கேட்கமாட்டார்கள், ஆனால் இது நான் சொல்வதைக் கேட்கும் என் காலையே சுற்றிக் கொண்டு இருக்கும்" என்று சொல்லிவிட்டு செல்லத்தைப் "பார்த்து வா வா பராக்குப் பார்க்காதே நிறைய வேலை கிடக்கு வா வா" என்று சொன்னார்கள் அப்போது அவர்களுடன்  கூடவே ஓடியது பார்க்க அழகு.

இன்னொரு நாள் அந்த அம்மா வரவில்லை இது மட்டும் விளையாடக் கோவில் பக்கம் வந்து இருக்கு,(அவர்கள் வீடு கோவில் வளாகத்துக்குள்தான் இருக்கு)
பாலுதீன் கவருடன் மல்லுக்கு நின்றது.
அது அதன் உள்ளே இருப்பதை  எடுக்க போராடும் காட்சி.

கீதா ரங்கனின்  அப்புவாகிய நான் என்ற கதைப் பதிவுக்கு   நான் போட்ட பின்னூட்டம்


// நாய்க் குட்டி ஒன்று குப்பையில் இருக்கும் பாலிதீன் பையை எடுத்துக் கொண்டு ஓடி அதன் உள்ளே இருப்பதை எடுக்கப் போராடும் காட்சியை முகநூலில் போட்டு இருந்தேன்.//

பின்னூட்டத்திற்கு  கீதா ரெங்கன் போட்ட பதில்

//கோமதிக்கா அந்தக் காணொளியை உங்க தளத்துல போடறீங்களா? நான் முகனூலில் இல்லையே....//

அவர்களுக்காக இந்த காணொளி, ஆனால் முகநூலில் பெரிதாக இருக்கும் இங்கு காணொளி அளவைக் குறைத்து இருக்கிறேன்.

அய்யனார் கோவிலில் தினம் தினம் புதுப்புது நாய்க் குட்டிகள் வரும். யாராவது கொண்டு வந்து விடுவார்கள், யாராவது எடுத்துப் போய் விடுவார்கள்.
ஒரு நாள் என்னை தொடர்ந்த குட்டி, அதைத் திரும்பி பார்த்தவுடன் ஓட்டம் என்று விளையாடியது என்னுடன்.


//ஆஆஆஆஆஆஅ பப்பீஸ் ஐ அதிரா பார்க்கமுன்னம் மறைச்சுப்போட்டா கோமதி அக்கா.. கர்ர்ர்ர்ர்:)//

அதிரா, இப்போது  உங்களுக்காக வந்து விட்டது பப்பீஸ் மகிழ்ச்சிதானே!


//பப்பியுடன் பசங்கள்...

உயிர்களிடத்தில் அன்பு வேணும் - என்ற வரி மெய்ப்படுகின்றது...

சென்ற வாரத்தில் தான் நர்சிங் மாணவிகள் பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளைக் கொன்று குவித்த சேதி நாளிதழ்களில் வந்திருந்தது...

மூர்க்கர்கள் பலர் அதை ஆதரித்திருந்தார்கள்....

நன்மைகள் எங்கும் ஓங்கட்டும்...//


சகோ துரை செல்வராஜூ அவர்கள்   நான் தவறுதலாக நேற்று போட்டு விட்ட பதிவுக்கு  அளித்த பின்னூட்டம்.

இதைப் படிக்கும் போது மனம் வேதனைப் படுகிறது அல்லவா?  இறைவன் படைத்த உயிர்கள்  அனைத்தும் அவன் அழைத்து கொள்ளும் வரை வாழ  உரிமை இருக்கிறது.


வாழ்க வளமுடன்.

65 கருத்துகள்:

  1. காணொளிகள் அழகு... ரசித்தேன்...

    சகோதரி கீதா ரெங்கன் அவர்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    ஆமாம், கீதாவுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர்களால் தான் இந்த பதிவு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி மற்றும் கோமதிக்கா மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி!! செல்லங்களைப் பார்த்து பார்த்து ரசிக்கிறேன்...

      கீதா

      நீக்கு
  3. நோஓஓஓஓஓஒ மீ தான் 1ஸ்ட்டூஊஊஊ:).. கோமதி அக்கா டக்கு டக்கென எதுக்கு போஸ்ட் போட்டீங்க? நேற்றைய போஸ்ட் அழகானதுதானே? அதைக் கொஞ்சம் எல்லோரும் பார்த்து ரசிக்க விட்டிருக்கலாமெல்லோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      நேற்று ஏற்பட்ட தவறுதல் காரணம் சொல்லி போட்டேன்.
      நீங்கள் வேறு பப்பீஸ் பார்க்க விடாமல் மறைச்சு போட்டா என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தீர்கள். அதனால் போட்டேன்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா எல்லோரையும் மீ மிரட்டித்தான் வச்சிருக்கிறேன் போலும் இங்கின:)) ஹா ஹா ஹா ஓ நன்றி நன்றி..

      நீக்கு
  4. //அதிரா, இப்போது உங்களுக்காக வந்து விட்டது பப்பீஸ் மகிழ்ச்சிதானே!//

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் நில்லுங்கோ என் செக்கையும் கையோடு கூட்டி வந்து காட்டுறேன்ன்.. அவவும் சேர்ந்து துள்ளட்டும்:)) சந்தோசத்துள்ளல்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, ஏஞ்சலை கூட்டி வந்து பார்த்து சந்தோஷத்துள்ளல் துள்ளுங்கள்.
      வந்து படிக்கிறேன். காய்கறி சந்தைக்கு போகிறேன்.
      வருகிறேன்.

      நீக்கு
    2. ஏஞ்சல் பறவைகளையும் பார்ப்பார் தானே அந்த பதிவு பற்றியும் சொல்லுங்கள்.

      நீக்கு
    3. நேற்றே படிச்சேன்க்கா அந்த பதிவை ,இதோ அமுதசுரபி சொன்னதும் வந்தாச்சு

      நீக்கு
    4. வாங்க ஏஞ்சல், என் பதிவை காட்டவில்லை போலும் அதுதான் அதிரா சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.
      நீங்கள் படித்தது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
    5. ஏன் கோமதி அக்கா பின்னேரத்தில சந்தையோ?

      நீக்கு
    6. அதிரா , வாரசந்தை வெள்ளிக்கிழமை தோறும் உண்டு, வீட்டுக்கு அருகில்.
      மாலைதான் நிறைய கடைகள் வரும்.மதியம் இரண்டு, மூன்று கடைகள்தான் இருக்கும்.

      நீக்கு
    7. கோமதிக்கா இன்று தாமதமாக மெயிலில் ஏஞ்சல் போஸ்ட் ஜெஸ்ஸியப் பார்த்ததும் கமென்ட் போட்டேன் மெயிலில் உங்க போஸ்டும் இருந்துச்சு ஆஹா இரண்டு செல்லங்கள் போஸ்ட்...என்று நினைத்து ஏஞ்சலிடம் சொல்லிருந்தேன் அதிகம் டைப் பண்ண முடியலை.....மீண்டும் உடல் நலம் சரியில்லை...கோமதிக்கா வேறு செல்லம் போஸ்ட் போட்டிருக்காங்க...பார்க்கனும்னு....சொல்லிட்டு அப்புறம் வரமுடியலை....அப்புறம் எபில இன்று ரொம்பக் கதைக்காமல் கொஞ்சமே கமென்ட் போட்டுட்டு இங்கு வந்தேன்....

      இனிதான் வெங்கட்ஜி பதிவு பார்க்கனும்...

      கீதா

      நீக்கு
    8. நன்றி கீதா.
      உடல் நலம் இல்லையென்றாலும் செல்லம் பதிவை பார்த்து கருத்து சொன்னத்ற்கு.
      ஏஞ்சல் போஸ்ட் பார்க்கவில்லை. பார்க்கிறேன்.
      உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
      சென்னையிலிருந்து பெங்களூர் இடமாற்றம் அது ஒத்துக் கொள்ளும் வரை படுத்தும் அப்புறம் சரியாகி விடும்.

      நீக்கு
    9. ஆமாம் அக்கா சென்னையிலும் கூட இந்த டிசம்பர் ஜனுவரி சீசன் வரும் போது சில சமயம் படுத்தும். அப்புறம் சரியாகிடும். பனி என்பதை விட புகை, தூசி இதுதான் அதிகம் பாதிக்கிறது...ஆமாம் சரியாகிடும். இதோ இப்போது சரியாகி வருகிறது...

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  5. கடசி வீடியோ.. ஒன்றும் அறியாப் பாலன் அது.. பார்க்கவே நெஞ்சுக்குள் என்னமோ செய்கிறது.. எதுக்கு இப்படித்தவிக்க விட்டார்களோ..

    இங்கு ஒரு குட்டி வாங்குவதெனில் ஆனை விலை விற்கிறது.. மாதம் மாதம் பராமரிப்புச் செலவும் அதிகம்... டெய்சியோடு நாம் படும் பாடே பெரும்பாடாக இருக்கு. அதுகூட பறவாயில்லை.. சுற்றுலா போக முடியாமல் இருக்கு.. அதுதான் பிரச்சனை.. காசு கொடுத்துத்தான் போன தடவை விட்டோம்ம்.. ஆனா டெய்சிகு அது விருப்பமில்லை.. பெரிய பாவமாக இருந்துது, அதனாலதான் என்ன பண்ணுவதென்றே தெரியாது.

    பூஸ்களுக்கு ஒரு நாள் டே கெயார் செல.. 8.50-9 பவுண்டுகள்.

    பப்பீஸ் எனில். 20-25 பவுண்டுகள்... போனதடவை டெய்சிக்கு 250 பவுண்ட்ஸ் கட்டினோம் டே கெயாருக்கு.. இப்படி பல சிக்கல்கள்.. சின்னவருக்கு டோக் வேணுமாம்.. பார்ப்போம்ம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற குட்டி செல்லங்கள், அறியா பாலன்கள்நிறைய அலையும் ரோட்டில்.
      நான் பிஸ்கட் வாங்கி போட்டேன் அவை என்னை அடையாளம் கண்டு கொண்டு என் பக்கத்தில் வருவதும், கடைக்கு போனால் கூடவருவதும் என்று இருந்தது அதனால் இப்போது பாபா கோவில் வாசலில் இருக்கும் செல்லங்களுக்கு மட்டும் தான்.
      தூரத்திலிருந்து பார்க்க பிடிக்கும் மேலே விழுந்து கொஞ்ச வந்தால் பயம் வந்துவிடும் பிடிக்காது.

      வளர்ப்பு செல்லங்களை வளர்ப்பதில் நிறைய கஷ்டங்கள் இருக்கிறது தான். அதையும் மீறி வளர்ப்பது என்றால் அதன் மேல் உள்ள பாசம் தான்.

      நம்மை விட்டு அவை இருப்பது கஷ்டம், என்ன தான் அதை அன்பாய் கவனித்துக் கொண்டாலும் சரியாக சாப்பிடாமல் மெலிந்து விடும். பணச்செலவும் அதிகம் தான்.

      நான் வெளி நாட்டில் அது போன்ற இடங்களை பார்த்தேன், பெட் அனிமல் வாங்கும் இடத்தையும் பார்த்தேன் படம் எடுத்தேன் ஒரு நாள் பதிவு போட வேண்டும்.
      சின்னவர் விருப்பத்தை நிறைவேற்றினால் வீட்டில் பூனையும், நாயும் அன்பாய் இருப்பதை பார்க்கலாம் தான்.

      நீக்கு
    2. நானும் உங்களை போலவே மா..
      பார்க்க பிடிக்கும் ஆனா பக்கத்தில் போக பயம்..

      நீக்கு
    3. வாங்க அனு, நீங்களும் என்னை போல்தானா?
      வளர்க்கும் வீடுகளில் கட்டாமல் வைத்து விட்டு ஒன்னும் செய்யாது வாங்க என்பார்கள், நான் போக மாட்டேன் அதை கையில் பிடுத்துக் கொள்ள சொல்லி விட்டு அப்புறம் தான் உள்ளே போவேன்.

      நீக்கு
    4. அதிரா நாங்கள் இங்கு குட்டிகள் எல்லாம் காசு கொடுத்து வாங்குவதில்லை. எல்லாம் கவனிப்பாரன்றி இருப்பவைதாம் அவற்றிற்கும் ஒரு வீடாயிற்றே...ஆனால் இங்கும் டே கேர் செலவுதான்...ஆனால் நாங்கள் இதுவரை விட்டதில்லை அதற்கான சூழலும் இல்லாமல் போச்சு...

      கீதா

      நீக்கு
  6. ஹா ஹா ஹா வாலை ஆட்டி ஆட்டி பொலித்தீன் பாக் கில் எதையோ தேடுகிறார்ர்.. இப்படித்தான் பூஸ்களும் கோமதி அக்கா, எங்கள் டெய்சியும் இப்படித்தான்.. ஒரு வெங்காயம் அல்லது பூண்டு குடுத்தால் போதும்.. அதை அடிச்சு எறிஞ்சு பிடிச்சு.. 20 நிமிடமாவது விளையாடுவா ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் கண்டை வைத்துக் கொண்டு மணி கணக்கில் விளையாடும் பூனையை பார்த்து இருக்கிறேன்.
      டெய்சியின் குறூம்புகளை முன்பு பதிவு போட்டு இருக்கிறீர்கள்.
      குழந்தைகள் போல தான் புது விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடும் அடுத்த சாமான் கிடைக்கும் வரை.
      டெய்சியைப் பற்றி சொல்லும் போது எவ்வளவு ஆனந்தம்!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    செல்லங்கள் மிகவும் அழகழகாக இருக்கின்றன. படங்கள் நன்றாக உள்ளது ஆமாம். உண்மையிலேயே அதை வளர்ப்பவர்களுக்குதான் அதன் அருமை தெரியும். காணோளிகள் மிகவும் ரசித்தேன். கோவிலில் தங்களை தொடர்ந்த பப்பியும் அழகாக இருக்கிறது. நீங்களும் செல்லப் பிராணிகளை வளர்த்திருக்கிறீர்களா? ஆனால் உங்களிடமே பறவைகள் சரணாலயமாக இருக்கிறதே.. அதுவாகவே உங்களை அண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறதே! எனக்கு ஆசை இருந்தது. ஆனால் இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      வளர்ப்பவர்களுக்கு அதன் அருமை தெரியும் என்பது உண்மை.
      நான் செல்ல பிராணிகளை வளர்த்தது இல்லை.

      கூட்டிலிருந்து விழுந்த தேன்சிட்டு, மரபொந்திலிருந்து விழுந்த கிளி இவற்றை வளர்த்து அவை பறந்து போனதும் வருத்தப்பட்டு இருக்கிறேன்.

      இன்னொரு குருவி கூட்டிலிருந்து விழுந்த போது அதற்கு உணவுகள் கொடுத்து பராமரித்தும் அது இரண்டு நாளில் இறந்து போனது. மண்ணில் புதைத்து வைத்துவிட்டு வந்து அழுது இருக்கிறேன்.

      இனி எதையும் வளர்க்க கூடாது என்று முடிவு செய்தும் இருக்கிறேன்.
      உணவு, தண்ணீர் கொடுப்பதுடன் சரி.

      எங்கள் தனிமை வாழ்வை போக்க வந்த பறவைகள் வீட்டுவேலை, பதிவு இவைகளுடன் பறவைகளை கவனிப்பதும் ஒரு வேலையாகி போனது. அவைகளும் இவளை எங்கே காணோம் என்று பால்கனிகம்பியில் உட்கார்ந்து குரல் கொடுக்கும்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.
      மகள் எப்படி இருக்கிறார்கள்? வேலைக்கு போகிறார்களா? அல்லது ஏதாவது படிக்க போகிறார்களா?



      நீக்கு
  8. இன்று நான் கீழிருந்து மேல் நோக்கிப் பின்னூட்டம் போட்டிருக்கிறேனே.. பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரெண்டு பேஜ் திறக்காமல் ஒன்றிலேயே படிச்சுப் படிச்சுக் கொமெண்ட்ஸ் போட்டு முடிக்கிறேன் ஆவ்வ்வ்வ்வ்:).. பெண் பப்பீஸ் எனில் இப்படி வெளியே கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன்... அழகிய குட்டீஸ்.

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப அழகு குட்டிஸ்..

    பார்க்க மட்டும் தான் செய்வேன் ..அதுக்கு மேல பக்கத்தில் கூட போக மாட்டேன் ..என்னமோ கொஞ்சம் பயம் எனக்கு ...

    இங்க பெங்களூர் ல் cubbon பார்க் கில் dog பார்க் ன்னு ஒன்னு இருக்கு ..sunday அன்று அங்கு செல்லத்தோடு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி ..

    அவ்வொலோ விதம் விதமான செல்லம் ஸ்...நானும் பையனும் ரொம்ப நேரம் நின்னு ரசித்தோம் ...படங்களும் இருக்கு முடியும் போது பகிர்கிறேன் ..

    இன்று ரொம்ப அழகான பகிர்வு மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

      //பார்க்க மட்டும் தான் செய்வேன் ..அதுக்கு மேல பக்கத்தில் கூட போக மாட்டேன் ..என்னமோ கொஞ்சம் பயம் எனக்கு ...//

      என்னை போலதான நீங்களும் அனு?
      மகன் ஊரிலும் வித விதமான வளர்ப்பு செல்லங்களுடன் வருவார்கள்.பார்க்க அழகாய் இருக்கும்.
      முடிந்த போது போடுங்கள் செல்லங்களின் படங்களை.
      பதிவை ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.



      நீக்கு
  10. ஞானி அதிராவுக்கு தெரியாத விஷயம் உண்டா?
    எங்கள் பளாக்கில் காலை சொன்னீர்கள் படித்தேன்.
    கோவில் பக்கத்தில் ஒரு ஓட்டல் இருக்கிறது அதை நம்பி நிறைய ஜீவன்கள் இருக்கிறது, மாடு தன் கன்றுகுட்டியுடன் நிற்கிறது. நாய் நாய்குட்டிகளுடன் நிற்கிறது. வித விதமான குட்டிச்செல்லங்கள் இருக்கு.
    எல்லோருக்கும் நாட்டு நாய் என்றால் இழப்பம். உயர்ரக நாய்களை அதிக காசு கொடுத்து வாங்குவார்கள். இதை போன்ற நாய்களை கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.
    குளிரில் அவை என்னசெய்யுமோ! என்று கவலையாக இருக்கும். டெல்லியில் தெரு நாய்களுக்கு யாராவது நல்லவர்கள் சொட்டர் அணிவித்து விடுவார்கள்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நான் நேத்தைய பதிவை நேற்றே படிச்சேங்க்கா .இன்னிக்கு அதோடு சேர்த்து வரப்போதுனு கமெண்ட் போடாம விட்டேன் .அங்கும் செல்வேன் .
    பப்பிஸ் எல்லாமே அழுகைக்கு .முந்தி ஒரு பதிவில் அம்மாவுக்கும் பிள்ளைங்களுக்குரோடில் கை காட்டி வாகனங்களை அவற்றின் மீது மோதாமல் செல்ல உதவி செஞ்சீங்க ..அதுவும் நினைவிருக்கு .
    காணொளி பார்த்தேன் அழகு .அந்த கருப்பு குட்டி செல்லம் போலவே இங்கே ஒரு பெண்மணி கருப்பு பூனைக்குட்டி வழக்கிறார் அதுவும் அவர் கூடவே தெரு முனை வரைக்கும் கூடவே நடக்கும் ..சொல்பேச்சு கேட்டு போ என்றது வீட்டுக்கு போகும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
      நீங்களும் பார்த்தீர்களா நேற்றைய பதிவை.
      முன்பு போட்ட பதிவை நினைவு வைத்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி.
      என்னைப்பார்த்து வந்த குட்டி ரோட்டை கடந்து வரும் போது வாகனங்களை நிறுத்தி தூக்கி போய் தாயிடம் விட்டேன்.
      காணொளி பார்த்தீர்களா மகிழ்ச்சி.
      குழந்தைகள் போல் பாசம் காட்டி வளர்த்தால் அதுவும் சொல்பேச்சு கேட்கும்.
      ஒரு அம்மா நாய் வளர்ப்பவர் சொன்னார், நமக்கு இரண்டு கால், அதற்கு நான்கு கால் அவ்வளவுதான் வித்தியாசம். நம்மை போல்தான் என்றார்.
      சிவாஜி படத்தில் வரும் பாட்டை சொல்லி நம்மை விட மேல்தான் என்றவுடன் மகிழ்ந்து சிரித்தார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
    2. //பப்பிஸ் எல்லாமே அழுகைக்கு//
      அவ்வ் அவசர டப்பிங்கில் கவனிக்கலை
      //பப்பீஸ் எல்லாமே அழகுக்கா //

      நீக்கு
    3. ஏஞ்சல், நினைத்தேன் அவசரமாய் டைப் செய்து இருப்பீர்கள் என்று, எழுத்துபிழை செய்யமாட்டீர்கள் அல்லவா?

      நீக்கு
    4. //எழுத்துபிழை செய்யமாட்டீர்கள் அல்லவா?//
      ஹையோ கோமதி அக்கா உங்களுக்கு தெரியாது:)).. அடிக்கடி ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டு என்னிடம் மாட்டுவா:)) ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா..

      பின்ன, ஆரைப் புகழ்ந்தாலும் விட்டிடலாம்:) என் செக்கையே புகழ்ந்தால் பொயிங்கிடுவேனாக்கும் ஹா ஹா ஹா:)) என்னால சிரிப்பை அடக்க முடியுதில்லை:))

      நீக்கு
    5. //பின்ன, ஆரைப் புகழ்ந்தாலும் விட்டிடலாம்:) என் செக்கையே புகழ்ந்தால் பொயிங்கிடுவேனாக்கும் ஹா ஹா ஹா:)) என்னால சிரிப்பை அடக்க முடியுதில்லை:))//

      அதிரா, ஒரு சில நேரத்தில் ஏஞ்சல் எழுத்து பிழை விடலாம்.
      கோமதி அக்கா, அதிரா போல் ஸ்பெல்லிங்க் மிசுரேக்கு விடுவது இல்லைதானே?
      சிரிப்பு உடலுக்கு நல்லது சிரிங்கள் அதிரா.

      பொங்குவது! ஏஞ்சலின் அன்பில் அடங்கி விடுவார் அதிரா.

      நீக்கு
    6. கோமதிக்கா இந்த பூசார் கண்ணில் படும்படி ஏஞ்சல் ஸ்பெல்லிங்க் மிஸ்ரேக் என்று சொல்லப்படாது...சொல்லிட்டு உடனே டெல் செஞ்சுரணுமாக்கும் இல்லைனா பூசார் கண்கொத்திப் பாம்பா பார்த்து டக்கென்று உள்ளே நுழைஞ்சு நான் வரதுக்குள்ள இந்த கோமதிக்கா போஸ்ட்ல கமென்டை தூக்கிட்டாவ என்று சொல்லி ஆர்பாட்டம் வேறு செய்வார்...ஹா ஹா ஹா ஹா ஆ...இந்த பூசாரோடு ஒரே கோலாகலம்தான்!!!! டாம் அண்ட் ஜெட்டி விளையாட்டு!!!

      கீதா

      நீக்கு
    7. பூசார் குருவி போஸ்டுக்கு வரவில்லை செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறேன் குருவி தேடுவதாக.

      நீக்கு
  12. காணொளிகள் அழகு. நாய் பூனை போன்ற உயிரினங்களை இறைவன் நம்மை நம்பி ஒப்படைத்திருக்கிறான். நாம் அவற்றுக்கு ஆதரவாய் இருப்போம் என்று நம்பி ஒப்படைத்திருக்கிறான். ஆனால் நாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      நாய் மனிதரை நம்பியும், பூனை வீட்டை நம்பியும் வாழும் என்பார்கள்.
      நிறைய உயிரினங்கள் மனிதனை நம்பிதான் வாழுது நீங்கள் சொன்னது போல
      ஆனால் நாம் கேள்விக்குறிதான்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அதே அதே அதே அதே....

      அங்க பாருங்க ராட்சசிகள் கொன்றிருக்கிறார்கள் எப்படி மனம் வந்தது? அவற்றைப் பார்க்கும் போது மனம் எத்தனை சந்தோஷம் அடைகிறது இவற்றைக் கொல்ல எப்படி மனம் வந்தது ஹையோ...எனக்கு அச்செய்தி இப்ப பார்த்துட்டேன் உறக்கம் வராது...அதுவே மனதில் ஓடிக் கொண்டிருக்கும்...

      கோமதிக்கா எப்படி அவங்களுக்கு மனம் வந்துச்சு...நமக்கு ஏதேனும் பப்பிஸ்கு கால்ல லைட்டா அடி பட்டாலே மனசு தாங்கலை...எல்லாம் டெவில்ஸ்.

      கீதா

      நீக்கு
  13. நான் பார்க்கும் சிலர் அந்த ஜீவன்களுக்கு ஏதாவது வீட்டிலிருந்து கொண்டு வருகிறார்கள், அல்லது கடையில் வாங்கித் தருகிறார்கள். குறைந்தபட்சம் காரிலிருந்து இறங்கி அவற்றைத் தடவிக் கொடுத்து விட்டுச் செல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளை பார்த்தது மகிழ்ச்சி. எல்லோரும் பார்க்க சின்னதாக கொடுத்து இருக்கிறேன் நீளத்தை கட் செய்து விட்டேன்.

      நிறைய பேர் பிஸ்கட் வாங்கி தருவார்கள். எங்கள் பக்கம் நாய்கள் அதிகமாகி விட்டது.
      பிஸ்கட் போட்டால் சூழ்ந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது.
      ஒரு கறுப்பு நாய்க்கும், அதன் குட்டிக்கும் கொடுத்து கொண்டு இருந்தேன் பிஸ்கட். அது மேலே விழுந்து கொஞ்ச ஆரம்பித்து விட்டது என் பையை, என் கையை பார்க்க ஆரம்பித்து விட்டது வெளியே போகும் போதெல்லாம். மனதை கல்லாக்கி கொண்டு நிறுத்தி விட்டேன். பாபா கோவில் வாசலில் இரண்டு நாய்கள் கொடுப்பதை சாப்பிட்டு விட்டு அமைதியாக நம்மை கவனித்துக் கொண்டு இருக்கும் இப்போது அதற்கு கொடுக்கிறேன்.
      எங்கள் வீட்டுப்பக்கம் பெரியவர் ஒருவர் பிஸ்கட் கொடுப்பதை ஒரு பதில் போட்டு இருந்தேன்.

      நீக்கு
    2. ஒரு பதிவில் போட்டு இருந்தேன்.

      நீக்கு
  14. குட்டி நாய்கள் விளையாடும் அழகே அழகு. அது தனிரகம். வளர்ந்த உடன் அவை நம்மிடம் ஒரு மெச்சூர்டான பாசத்தைக் காட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டி நாய்கள் இன்று காணோம். யாரோ எடுத்து போய் விட்டார்கள். கோவில் மரத்தடி வெறுமையாக இருக்கிறது. குட்டி நாய்கள் விளையாடும் அழகு அழகுதான்.
      நீங்கள் வளர்த்தீர்கள்தானே நாய்?
      அதன் பாசம், கண்களில் தெரியும்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. எல்லாம் இருக்கிறது தானே கமெண்ட்ஸ் எல்லாம்
      எதுவும் விடவில்லையே!

      உங்கள் எல்லா அகருத்துக்களுக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  16. கருப்பு வெள்ளை நிறத்தில் குட்டி அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்களுக்கு கருப்பு வெள்ளை நிறத்தில் குட்டி பிடித்து இருக்கா?
      மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. நான்கூட நாய்க்குட்டிகளின் செயல்களை கண்டு ரசிப்பேன். குப்பைமேட்டில் ரெண்டு நாய்க்குட்டிகளும் சண்டையிட்டு கட்டிப்புரண்டு விளையாடும் காட்சி செமயா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
      நானும் குப்பைமேட்டில் இரண்டு நாய்க்குட்டிகள் விளையாடுவதை எடுத்து இருக்கிறேன் போட்டோ, னேற்ரு தேடும் போது கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைக்கவேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. அன்பு கோமதி, தாமதமாக வருகிறேன். குளிர் ஒன்றும் செய்ய முடியாமல் கட்டிப் போடுகிறது.
    பல்லுயிர் ஓம்பும் அம்மா ஆகிவிட்டீர்கள். குட்டிகள் மிக மிக அழகு.
    அதுவும் காணொளியில் அவைகள் விளையாடும் விதம் மனதைப் பறிக்கிறது.
    நாம் வளர்க்கும் விதத்தில் வளர்த்தால் அவைகள் அன்புடன் தான் இருக்கும். சிலர் வேட்டை நாய்களைப் போல வளர்த்து விடுகிறார்கள். எங்கள் பக்கத்துவீட்டு லாப்ரடார் நம் வீட்டு ஜன்னலில் பார்த்தாலே கத்திக் கத்தி மிரட்டும்.

    இரண்டு வீடு தள்ளி இருக்கும் டானியோ காலைச் சுற்றி வந்து பாசம் காட்டும்.
    அனைத்து உயிர்களும் நலமோடு இருக்க என்பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      குளிர் மிகவும் அதிகமாய் இருக்கும் போது என்ன செய்ய முடியும் அக்கா?
      பல்லுயிர் ஓம்பும் அம்மா! அக்கா, எதையும் வளர்ப்பது இல்லை அன்பு பார்வையுடன் சரி.
      மாயவரத்தில் வீதியில் போகும் நாய்களுக்கு வீட்டு வாசலில் உணவு வைப்பேன்.இங்கு அதுவும் இல்லை. பாபா கோவில் நாய்களுக்கு மட்டும். சில நேரம் அங்கு அவை இருக்காது.

      சிலர் வளர்க்கும் நாய்கள் பார்க்கவே பயம் தான். சில வளர்க்கும் வீட்டாருக்கு நண்பர் என்றால் அதற்கும் நாம் நண்பர் நம்மைப் பார்த்து வாலாட்டி மகிழ்ந்து வரவேற்கும்.
      இறைவன் படைத்த அனைத்து உயிர்களும் நலமோடு இருக்க உங்களுடன் நானும் பிரார்த்தனை செய்கிறேன் அக்கா.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. செல்லங்களைப் பற்றிய பதிவு... நல்லா இருக்கு. ஆனா இதுவரை நான் எதையும் வளர்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    நானும் செல்லங்களை வளர்த்ததில்லை.
    சொந்தங்கள், நட்புகள் வளர்த்ததை பார்த்து இருக்கிறேன்.
    பார்த்து ரசிப்பதுடன் சரி.

    பதிலளிநீக்கு
  22. கோமதிக்கா மிக்க மிக்க மிக்க நன்றி அந்தக் காணொளி போட்டதுக்கு....ரொம்ப க்யூட்....

    ஹையோ சூப்பர் செல்லங்கள் ....

    முதல் படங்கள் எல்லாம் என் மகனை நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டது. அவனும் இப்படித்தான் தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை பூனைக்குட்டிகளை எடுத்துக் கொஞ்சி விளையாடிவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான். நான் கூடச் சென்றால் நானும் சேர்ந்துப்பேன். வீட்டில் வளர்க்கப் பிரச்சனை இல்லை ஆனால் நாங்கள் இருந்தது வாடகை வீடு ஓனர் சம்மதிக்கவில்லை என்ப்தால் அப்போது வைத்துக் கொள்ளவில்லை.

    என் பையன் இப்படித்தான் சில பப்பிகளை பூஸ் குட்டிகளை வீட்டுக்குக் கொண்டு வருவான்

    அடுத்து கருட்து போடறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    காணொளி கொஞ்சம் கட் செய்து போட்டு இருக்கிறேன்.முகநூலில் இன்னும் அதிகமாய் இருக்கும்.

    மகன் நினைவு வந்து விட்டதா?
    சிறு குழந்தைகளுக்கு குட்டிகளை கண்டால் விளையாட பிடிக்கும்.
    எங்கள் வளாகத்திலும் நாய் வளர்க்க அனுமதி இல்லை.
    சொந்த வீட்டுக்கும் கிடையாது.
    மெதுவாய் வாங்க அவசரமில்லை.
    உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஐயனார் கோயில் அழகா இருக்கு வளாகம்..மரங்களுடன்..அங்கு இந்த பப்பீஸ் செம க்யூட்!!! எல்லாம் கலந்து ஓடி வரும் காட்சி செமையா இருக்கும்
    பாண்டியில் இருந்தப்ப வீட்டில் இரு பைரவிகள் பிரசவித்த குட்டிகள் மொத்தம் 13 குட்டிகள். ஓடத் தொடங்கியதும் எல்லாவற்றிற்கும் நான் அப்போது கொஞ்சம் செரிலாக் வாங்கி கரைத்து இரு தட்டில் வைத்து விட்டு கை தட்டினால் போதும் அத்தனையும் ஓடி வருவதை பார்க்கனும். அப்போ எல்லாம் கேமரா கிடையாது என்னிடம்...அத்தனையும் ரவுன்ட் கட்டி இரு தட்டுகளிலும் சாப்பிடும் அழகு ஹையோ...மனம் சந்தோஷமா இருக்கும். அப்புறம் 13 ஐயும் என் நாத்தனார் சென்னையிலிருந்து கார் அனுப்பி அதில் எல்லாவற்றையும் வைத்த்க் கொண்டு சென்னை ப்ளூக்ராஸில் கொடுத்தோம். அவற்றில் இருவரை ஒன்று பீம், மற்றொருவன் ஸ்கூபி என்று இரண்டு பேரை என் ஒன்றுவிட்ட நாத்தனார் வளர்த்தார் ஆனால் அவை இறந்துவிட்டன. அப்புறம் இரு முறை ப்ளூக்ராஸ் என்று மொத்தம் அப்படி மூன்று முறை கொடுத்தபின் கடைசியாகப் பிறந்தவற்றில் எஞ்சியவைதான் கண்ணழகியும் ப்ரௌனியும் எங்களுடனேயே சென்னை வந்தார்கள். அதிலும் இப்போது ப்ரௌனி இல்லை கண்ணழகி மட்டுமே!! இங்கு 10 வயதாகப் போகிறது இதோ ஃபெப்ருவரி 9 வந்தால்...ஆனாலும் ஓட்டமும் சாட்டமும் என்று இருக்கிறாள்...

    படங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகு...எல்லாம் எடுத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
      ப்ளூக்ராஸ் கொண்டு கொடுத்தது, குட்டிகளுக்கு செரிலாக் கரைத்து கொடுத்தது எல்லாம் உங்களின் மனித நேயத்தை காட்டுது.

      கண்ணழகியும் ப்ரௌனியும் வந்த விவரம் தெரிந்து கொண்டேன்.
      கண்ணழகி நலமுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

      1# குட்டிகள் ஒறே தட்டில் பால குடிப்பது பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் வருகிறது.

      படங்களை ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.

      நீக்கு
  25. காணோளிகள் இரண்டிலும் அதுவும் முதல் காணொளியி பாலிதின் கவருடன் போராட்டம் நடத்துவது அருமை. ஆமாம் இவர்களுக்கு ஒரு டப்பா அல்லது இப்படி கவர் கொடுத்தால் அதில் என்ன இருக்கு என்று அறிய அத்தனை போராட்டம் நடக்கும் சில சமயம் விளையாட்ட்டாகிப் போகும் அழகு...

    அக்குட்டி ஓடுவது அழகு! பப்பீஸ் ஒரு ஸ்டேஜ் அப்படி ஒரு விளைஅயட்டு அழகு என்றால் அப்புறம் கொஞ்சம் 1 வஉயது 2 ஆஉம் வரை வீட்டிலுள்ள சப்பல் அல்லது மேட் என்று எதையாவது எடுத்து ரகசியமாக வைத்துக் கொண்டு கடித்து விளையாடுவது ரகசியமாகப் பதுக்குவது என்று செமையா இருக்கும்... வளர்ந்ததும் அவர்கள் காடும் பாசம் ஹையோ சொல்லி முடியாது கோமதிக்கா...

    என் ப்ரௌனி செல்லத்தின் அன்பு, ஏக்கம் மிகுந்த அந்தப் பார்வை ரோஷம் எல்லாம் இன்னும் நினைவில் வந்து சில சமயம் மனம் சோகமாகி கண்ணீர் வரும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயவரத்தில் இருந்த் போது பிள்ளையார் கோவில் வாசலில் போட்டு இருந்த என் செருப்பில் ஒன்றை காணவில்லை, அப்போது குட்டி நாய் ஓடிக் கொண்டு இருந்தது, அதன் வாயில் என் செருப்பு, நானும் அதனுடன் ஓடி என் செருப்பை மீட்டேன்.
      குழந்தைகள் பெரியவர்கள் செருப்பை போட்டுக் கொள்வது போல் இவை செருப்பை தூக்கி விளையாடுகிறது.

      இங்கும் பாபா கோவில் வாசலில் சார் செருப்பை தூக்கி கொண்டு போய் விட்டது , அதை பின் தொடர்ந்து போய் விரட்டி வாங்க்கி வந்தோம் , இது பெரிய நாய்.

      //என் ப்ரௌனி செல்லத்தின் அன்பு, ஏக்கம் மிகுந்த அந்தப் பார்வை ரோஷம் எல்லாம் இன்னும் நினைவில் வந்து சில சமயம் மனம் சோகமாகி கண்ணீர் வரும்...//

      வளர்த்த செல்லங்கள் பிரிவு மனதை வருத்தும்.
      எத்தனை காலம் ஆனாலும் அதன் பிரிவு வருந்த வைக்கும் தான்.
      உங்கள் அனுபவங்க்கள், மகிழ்ச்சி, சோகம் எல்லாம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      உங்கள் விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி நன்றி கீதா.


      நீக்கு
  26. படங்கள் அனைத்தும் வழக்கம் போல் மிக மிக அழகு. நாய்க்குட்டிகள் மிக மிக அழகுதான். எங்கள் வீட்டில் முன்பு நாட்டு நாய்கள் இரண்டு வளர்த்தோம். அவை இரண்டும் இப்போது இல்லை. தற்போது வளர்பவன் க்ராஸ் வகை. முடி கொஞ்சம் நிறைய வளரும். டைகர் என்று பெயர். அவன் அவர்களுக்கான சீசன் வரும் போது மிகவும் ரெஸ்ட்லெஸ்ஸாக அலைவான். அழுவான், குரைப்பான். எங்கள் வீடு நடுவிலும் பின்பக்கம் எங்கள் ரப்பர் தோட்டமும், முன்பக்கம் தோட்டம் சைடில் மரங்கள் என்று சுற்றிலும் பெரிய கஇடம் என்பதால் என்னதான் வெலி இருந்தாலும் இவன் ஓடி போகும் போது பாம்பு கடிக்குமோ என்ற பயம் அப்புறம்வ் வெளி நாய்கள் கடிக்கும் என்ற பயமும் இருந்ததால், அவனுக்கு கீதாவின் மகன் ஆதித்யாதான் நியூட்டெரிங்க்/ஆப்பரேஷன் செய்துவிட்டான். இப்போது ரெஸ்ட்லெஸ்னெஸ் இல்லை. அமைதியாக இருக்கிறான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் செல்லம் டைகர் பற்றி விரிவாக சொன்னதற்கு நன்றி.

      செல்லங்களை வளர்த்தால் காவனிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்கிறது.
      அதன் உணர்ச்சிகளை தடை செய்யவேண்டி இருக்கிறது.
      நோய் நொடி இல்லாமல் இருக்க தடுப்பு ஊசிகள் போட வேண்டி இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு