15.7. 2018 அன்று தென்பரங்குன்றத்தில் கல்வெட்டு குகைகோவிலைப் (சமணச் சின்னம்) பார்த்து விட்டு வரும்போது திருப்பரங்குன்றம் ரயில்நிலையம் அருகில் இந்த அம்மன் கோவிலைப் பார்த்தோம்.
அம்மன் கோவில் வாசல் பக்கம் ஸ்ரீ சித்தி விநாயகர் நிறைய நாகர்களுடன் இருக்கிறார். முன்புறம் இரண்டு தூண்கள்- அதில் நேர்த்தி மணிகள் கட்டப்பட்டு இருக்கிறது.
முகம் மட்டும் தெரிகிறது, கருப்பண்ணசாமி மாதிரி இருக்கிறது ஆடை மறைக்கிறது. வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் நட்சத்திரமும் வரைந்து இருக்கிறது.
அம்மன் சன்னதி
வாசலில் உள்ள துவாரபாலகர்
வெயில் உகந்த அம்மன்
பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஞாயிறும் அம்மனுக்கு உகந்த நாள்
வெயிலுக்கு உகந்த அம்மன் எதிரில் இருக்கும் அம்மன், நந்தி, பலிபீடம்
பிள்ளையார் சன்னதி
கோவில் உட்புறச் சுவர் முழுவதும் அம்மன்கள்.
வேப்பமரத்தை வெட்டாமல் அப்படியே கோவில் கட்டி இருப்பது மகிழ்ச்சி அளித்தது. மரத்தடியில் ஒரு அம்மன் இருக்கிரார். வெயில் உகந்த அம்மனைச் சுற்றி வரும்போது இடது பக்கம் ஒரு அறையில் இருக்கிறது.
நேர்ந்து கொண்டு வைத்த உருவச் சிலைகள், பித்தளை நாகம், கல்லில் வடித்த நாகர்கள் என்று அந்த அறையில் இருக்கிறது.
பிள்ளையார், சிறிதும் பெரிதுமான நாகர்கள், சிவலிங்கம் எல்லாம் இருக்கிறது
நாங்கள் போனபோது அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகி க்கொண்டு இருந்தது. அதனால் திரை விலகிய பின் அன்னையைத் தரிசனம் செய்து போகலாம் என்று அமர்ந்து விட்டோம். தூணில் விபூதி வைத்துக் கொள்ள சிறு துண்டு பேப்பர் வைத்து இருக்கும் பிளாஸ்டிக் கூடை.
கோவிலைச் சுற்றி இருக்கும் அழகான அம்மன்கள்
நேர்த்தித் தொட்டில்கள்
வெளிப்புறத்தில் கருப்பண்ணசாமி
நவக்கிரகங்கள் தனி மண்டபத்தில்
அரசமரத்தடியில் பிள்ளையார் , நாகர்
கோவிலுக்கு அருகில் ரயில் தண்டவாளம் இருந்தது மிக அருகில் ரயில் போகுமா? போனால் நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது ரயில் போனது.
//திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்க தடை விதிக்கப்பட்டது.திருப்பரங்குன்றத்திற்கு திருவிழா, முகூர்த்தம், கிரிவல நாட்கள், திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அரசு டவுன் பஸ்கள் இரண்டு மட்டுமே ஊருக்குள் வந்து செல்கின்றன.இதனால் பஸ்கள் ஏற ரயில் தண்டவாளங்களை கடந்து பை பாஸ் ரோட்டிலுள்ள பஸ் ஸ்டாப்புகளுக்கு மக்கள் செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன், வெயில் உகந்த அம்மன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஸ்டாப்புகளுக்கு செல்ல தண்டவாளங்களை கடக்கின்றனர். இதில் ரயிலில் அடிப்பட்டு பலர் பலியாகின்றனர். இரு மாதங்களில் 12 பேர் பலியாகினர். இதனால் வெயில் உகந்த அம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பிற்கு போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்தனர். ஊருக்குள் செல்லும் அரசு டவுன் பஸ்களுடன் திருநகர், தென்பழஞ்சி, ஆஸ்டின்பட்டி, திருமங்கலம் சாதாரண கட்டண பஸ்கள் செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.//
இது தினமலரில் வந்த செய்தி.
இந்தக் கோவிலுக்குப் பெயர் காரணம் தேடிப்பார்த்தேன் இது தான் கிடைத்தது.
வெயிலால் வரும் நோய்களைத் தடுக்க வணங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். கோடை உஷ்ணத்தைப் போக்கிக் குளிர்ச்சியைத் தர அம்மன் வேப்பமர நிழலில் இருக்கிறார்.
ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற தெய்வங்களுக்குப் பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.
மக்கள் மழை வேண்டியும் பயிர் பச்சைகள் செழிக்க வேண்டியும் மாரி அம்மனுக்கு விழா நடத்துவார்கள்.
மாரியைப் பொழிபவள் மாரியம்மா துயர் மாறிடச் செய்பவள் மாரியம்மா
உடம்பு சரியில்லாமல் இருந்து குணம் ஆனதற்கு நேர்த்தியாக சேவலை உயிர்ப் பலி கொடுக்கிறார்கள். அது கொக்கரகோ என்று கூவியது தீனமாய் கேட்கவே மிகவும் கஷ்டமாய் இருந்தது.
இரண்டு குடும்பங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து இருந்தார்கள் அவர்கள் தான் அபிஷேகம் எல்லாம் செய்தார்கள். பொங்கல் வைத்தார்கள் அவர்களுக்கு விருந்து தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இந்தப் பதிவில் நான் புதிதாகக் கற்றுக் கொண்ட ஒன்றைப் பயன்படுத்தி இருக்கிறேன் என்னவென்று சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகாணொளி வெளியிட்டு இருப்பது புதிய விடயமா ?
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாணொளி முன்பேதான் வெளியிடுவேனே!
வேறு ஒன்று இருக்கிறது ஜி, நன்றாக பாருங்கள் பதிவை.
//படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//
நன்றி.
ஆடி மாத அம்மன் தரிசனங்களுக்கு நன்றி, கோமதிம்மா.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான பயணக் கட்டுரை. அழகான படங்கள். மிகவும் அழகாக கோவிலைப்பற்றி பொறுமையுடன் விவரித்து இருக்கிறீர்கள். உங்கள் பதிவை படிக்கையில் உங்களுடனேயே பயணித்த அனுபவம் கிடைக்கிறது. அது உங்களின் வர்ணனை தருகின்ற சிறப்புத்தான்.. மிகவும் அருமையான தரிசனம்..
வெயில் உகந்த அம்மன் என்பதை, வெய்யிலுக்கு உகந்த அம்மன் என்றே படித்து வந்தேன். இதே பெயரில் வேறு ஒரு கோவில் இருக்கிறதோ ? தெரியவில்லை.. ஆனால் எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.. சட்டென நினைவுக்கு வரவில்லை. ஒவ்வொரு படங்களும் மிக அழகாக தெளிவாக எடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு படத்திலும் தங்களின் பெயரைப் பதிந்துள்ளீர்கள். அதுதானே தாங்கள் இன்றைய பதிவில் வித்தியாசமாக செய்திருப்பது... என் ஊகம் சரியா? நீங்கள் வைத்திருக்கும் பரீட்சையில் நான் பாஸா.. இல்லை.... ஹா ஹா ஹா ஹா. தங்கள் பதில் கண்டு தெளிவுறலாம்.
தங்கள் முந்தைய பதிவை படித்து பதிலளிக்கலாம் என்று இன்றுதான் தங்கள் தளம் வந்தேன். நீங்கள் புது பதிவு போட்டிருப்பதை கண்டதும் இதை முதலில் படித்து ரசித்தேன். அதையும் படித்து கருத்திடுகிறேன். தங்கள் உடல் நலம் எவ்வாறுள்ளது? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Blogger க்கு நான் வந்த பிறகுதான் நிறைய
பதிலளிநீக்குசாமிகளின் பெயர்கள் தெரிகிறது,அதில் உங்கள்
பதிவுகளிலும் பார்த்துள்ளேன்,படித்துள்ளேன்
நன்றிம்மா அறியாப்பெயர்களை அறியத்தந்தமைக்கு...!
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
தொடர் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//வெயில் உகந்த அம்மன் என்பதை, வெய்யிலுக்கு உகந்த அம்மன் என்றே படித்து வந்தேன். இதே பெயரில் வேறு ஒரு கோவில் இருக்கிறதோ ? தெரியவில்லை.. ஆனால் எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது//
ஆமாம் கமலா, திருநெல்வேலி மாவாட்டத்தில் இருக்கிறது. 'கரிவலம்வந்தநல்லூர்' என்ர இடத்தில் இந்த பெயரில் அம்மன் இருக்கிறார்.
பெயர் காரணம் தெடிய போது கிடைத்தது.
வேலுகந்த அம்மன் வெயில் உகந்த அம்மனாக வந்து விட்டதாய் சொல்கிறார்கள் .
சூரனை சம்ஹாரம் செய்ய வேல் கொடுத்ததாலும் அந்த பெயர் என்றும் வேலனுக்கு வேல் பிடித்தம் என்பதால் வேல் உகந்த என்பது வெயில் உகந்த என்றும் வந்தது என்றும் அந்த ஊரில் சொல்கிறார்கள்.
எனக்கு என்னவோ வெயில் காலத்தில் (உகந்த) வணங்க வேண்டிய அம்மன் என்பது தான்
என்று நினைக்கிறேன்.
//ஒவ்வொரு படத்திலும் தங்களின் பெயரைப் பதிந்துள்ளீர்கள். அதுதானே தாங்கள் இன்றைய பதிவில் வித்தியாசமாக செய்திருப்பது... என் ஊகம் சரியா? நீங்கள் வைத்திருக்கும் பரீட்சையில் நான் பாஸா.. இல்லை.... ஹா ஹா ஹா ஹா. தங்கள் பதில் கண்டு தெளிவுறலாம். //
ஆமாம் கமலா, வாழ்க வளமுடன். கண்டுபிடித்து விட்டீர்கள். உங்கள் ஊகம் சரிதான். நீங்கள் பாஸ்.
கற்றுக் கொண்டவுடன் இந்த பதிவில் போட்டேன் யாராவது பார்த்து சொல்லமாட்டார்களா என்று கேட்டேன். நன்றி கமலா.
என் உடல் நலம் விசாரிப்புக்கு நன்றி. நலமுடன் இருக்கிறேன்.
உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி நன்றி.
திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் நீண்ட நாட்களாக இருக்கிறதோ? எனக்கு கவனத்தில் இல்லை. நான் விருதுநகர், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களில் பணிசெய்யும்போது பஸ்ஸிலேயே சென்று வருவது வழக்கம்.
பதிலளிநீக்குபிள்ளையாரைச் சுற்றி நாகங்கள்... இதற்கு ஏதும் விசேஷ காரணங்கள் உண்டாமா? புதிதாக இருக்கிறது இல்லை?
பதிலளிநீக்குவணக்கம் Ajai Sunilkar Joseph, வாழ்க வளாமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ஒவ்வொரு குணநலங்களை குறிக்க ஒவ்வொரு அம்மன்
இருக்கிறார்கள்.
என் அண்ணன் அங்கு ஒரு அனுமார் கோவில் இருப்பதாகவே சொல்கிறார். அவருக்கும் இந்த அம்மன் கோவில் பற்றித் தெரியவில்லை. ரயில்வே லைனில் இருப்பதாகச் சொல்கிறார்.
பதிலளிநீக்குவெயில் உகந்த அம்மன்... பெயர் அழகாய் இருக்கிறது. அதனால்தான் மரத்தைக் கூட வெட்டவில்லையோ!
பதிலளிநீக்கு//இந்தக் கோவிலுக்குப் பெயர் காரணம் தேடிப்பார்த்தேன் இது தான் கிடைத்தது.
வெயிலால் வரும் நோய்களைத் தடுக்க வணங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். கோடை உஷ்ணத்தைப் போக்கிக் குளிர்ச்சியைத் தர அம்மன் வேப்பமர நிழலில் இருக்கிறார். //
தெரிந்து கொண்டேன்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் நீண்ட நாட்களாக இருக்கிறதோ? எனக்கு கவனத்தில் இல்லை. நான் விருதுநகர், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களில் பணிசெய்யும்போது பஸ்ஸிலேயே சென்று வருவது வழக்கம்.//
வெகு காலமாய் இருக்கிறது மதுரைக்கு பள்ளிக்கு, கல்லூரிக்கு குழந்தைகள் வருகிறார்கள்.எனக்கு அவலவாய் தெரியாது, இப்போது என் தங்கை, அண்ணி எல்லாம் இந்த ரயில் அடிக்கடி தென்காசி, குற்றாலம், திருப்பரங்குன்றம் எல்லாம் போகிறார்கள்.
வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் வ்சதியாக இருக்கிரது இந்த ரயில்.
பிள்ளையாரைச் சுற்றி நாகங்கள்... இதற்கு ஏதும் விசேஷ காரணங்கள் உண்டாமா? புதிதாக இருக்கிறது இல்லை?//
பதிலளிநீக்குபிள்ளையாரை சுற்றி நாகங்கள் நிறைய இடங்க்களில் இருக்கே! ஆலமரம், அரச மரம் உள்ள் ஐடத்தில் நாகர்கள், பிள்ளையார் இருப்பார். எல்லோரும் பால், மஞ்சள் அபிஷேகம் செய்வார்கள். நானே நிறைய படம் பகிர்ந்து இருக்கிறேன்.
நாக தோஷம் உள்ளவர்கள் இப்படி மரத்தடியில் நாகர்கள் செய்து வைப்பார்கள்.
கேது ஒருமுறை பிள்ளையாரை பிடிக்க போனார் பிள்ளையார் அவரை பிடித்து தனக்கு பூணூலாக அணிந்து கொண்டார். அதனால் மாங்கலய தோஷம், கேது ராகு தோஷம் உள்ளவர்கள் விநாயகரும், நாகர்களும் உள்ள இடத்தில் வந்து பால் அபிஷேகம் செய்து தோஷங்கள் விலகும் என்று நம்படுகிறது.
//என் அண்ணன் அங்கு ஒரு அனுமார் கோவில் இருப்பதாகவே சொல்கிறார். அவருக்கும் இந்த அம்மன் கோவில் பற்றித் தெரியவில்லை. ரயில்வே
பதிலளிநீக்குலைனில் இருப்பதாகச் சொல்கிறார்//
பெருமாள் கோவில் இருக்கிறது, அனுமன் கோவில் இருக்கிறது.
//வெயில் உகந்த அம்மன்... பெயர் அழகாய் இருக்கிறது. அதனால்தான் மரத்தைக் கூட வெட்டவில்லையோ!//
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், அந்த இடமே நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது.
பெயர் காரணம் திருநெல்வேலியில் இதே போன்ற பெயர் கொண்ட அம்மனுக்கு சொன்னதை கமலா ஹரிஹரனுக்கு சொல்லி இருக்கிரேன் பாருங்கள்.
புதிதாக கற்றுக் கொண்டதை பற்றியும், பாடல் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லையே!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
அம்மா நலம் தானே?
உங்கள் கருத்துக்கு நன்றி.
சீர்காழி பாடலை ரசித்தேன். வீடியோ பகிர்வதைத்தான் புதிதாகக் கற்றிருக்கிறீர்களோ!
பதிலளிநீக்குஶ்ரீராம், வீடியோதான் முன்பே போடுவேனே!
பதிலளிநீக்குபடத்தில் பார்த்தீர்களா? கமலா வேறு சொல்லி விட்டார்.
அடடா... காலையிலேயே நானும் அதைக் கவனித்தேன். கேட்கவும் வேண்டும் என்று நினைத்திருந்தேன். பணிக்குக் கிளம்பும் சமயம் என்பதால் விட்டேன்! ராமலக்ஷ்மி, அமைதிச்சாரல் வெங்கட் எல்லாம் வாட்டர்மார்க் போல செய்து அளிப்பார்கள், பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம் ஶ்ரீராம், வாட்டர்மார்க் தான் .
பதிலளிநீக்குகுமார் சொல்லி கொண்டே இருந்தார் , நீங்கள் எடுத்த படம் தானே அம்மா பேர் போடுங்கள் என்று. கற்றுக் கொண்டு போடுகிறேன் என்றேன். மீண்டும்
வந்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஆஹா பெயரே வித்தியாசமாக இருக்கிறது.
பதிலளிநீக்குபுடைப்புச் சிற்பங்களாக அம்மன் சிலைகள் ரொம்பவே அழகு.
கோவில் பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.
உங்கள் பெயர் சேர்த்திருப்பது நல்ல விஷயம். என்ன செயலி பயன்படுத்துகிறீர்கள்?
வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகூகுள் போய் வாட்டர் மார்க் தரம் இறக்கி கொடுத்தார்கள்.மைக்ரோ சாஃப்ட் 'பப்ளிஷர்ஸ்' என்ற ஆப் மூலமாகவும் வாட்டர் மார்க் டவுன்லோட் செய்யலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் பெயர் சேர்த்திருப்பதை ஆரம்பத்திலேயே கவனித்தேன். சொல்லலாம் என்னும்போது ஏற்கெனவே சொல்லிட்டாங்க. படங்கள் எல்லாம் அருமை! வெயிலுகந்த அம்மன் கோயில் பத்தி நானும் கேள்விப் பட்டதில்லை. கோயிலும் சுற்றுப்புறங்களும் நன்றாக இருக்கின்றன. ரயில் நிலையம் இருக்குனு தெரியும். ஆனால் மக்கள் அந்த வழியில் பயணம் செய்கிறார்கள் என்ற தகவல் புதிது ரயிலும் போகிறது குறித்து மகிழ்ச்சி. காமிராவிலே, மொபைலிலா, எதில் படம் எடுத்தீர்கள்? எனக்கு இப்படி எல்லாம் எந்தத் தொ.நு.வும் தெரியறதில்லை! :))))))
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் ஆரம்பத்திலேயே கவனித்து விட்டீர்களா மகிழ்ச்சி.
நாங்களே இப்போதுதான் போனோம் , இந்த கோவிலின் தோரணவாயிலில்
பேரை பார்த்து போனோம்.
மொபைலில் தான் படங்கள் எடுத்தேன்.
//எனக்கு இப்படி எல்லாம் எந்தத் தொ.நு.வும் தெரியறதில்லை! :))))))//
என் ஆரம்ப பதிவுகளில் படமே இருக்காது, அப்புறம் எடுத்த படத்தை அப்படியே போட்டு விடுவேன், அப்புறம் படம் பதிவுகளில் படம் போட கற்றுக் கொண்டேன், எடிட் செய்து போட கற்றுக் கொண்டேன்.
எனக்கு கணினியில் நிறைய விஷயங்கள் தெரியாது, சொல்லிக் கொடுத்ததை வைத்து ஏதோ செய்து கொண்டு இருக்கிறேன்.
உங்களால் முடியாத விஷயம் இருக்கா? நீங்கள் நினைத்தால் ஒரு நொடியில் கற்றுக் கொண்டு செய்து விடுவீர்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அழகான பதிவு அன்பு கோமதி. விவரமான படங்கள். இந்தத்
பதிலளிநீக்குதிருப்பரங்குன்றம் ரயில் ஏறி திருமங்கலம் வந்திருக்கிறோம். மதுரை சுற்றுலாவில் பள்ளியில் அழைத்துப் போன காலம்.
படங்கள் கச்சித்தமாக உங்கள் பெயருடன் வந்திருப்பது மிக அழகு.
பெயர் அருமையாகப் பதிவாகி இருக்கிறது.
முன்பே பிகாசாவில் இந்த வசதி செய்து கொடுத்துவிட்டார்கள் இல்லையா.
இப்பொழுது பெயர் போடுவதை விட்டுவிட்டேன்.
ஆடி மாசத்துக்கு அம்மன் தரிசனம் அமிர்தம்.
கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் பதிவு மூலமாக கோயிலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
பதிலளிநீக்குமரத்தை வெட்டாமல் கோவில் அமைத்திருப்பது சிறப்பு...
பதிலளிநீக்குReply Comment button சேர்த்து விடலாமா அம்மா...?
எனது WhatsApp No. 9944345233
வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//Reply Comment button சேர்த்து விடலாமா அம்மா...?//
போட்டு விடலாம் தனபாலன். நானே கேட்கனும் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன்.
உங்களுக்கு முடிந்த நேரத்தை அதற்கு ஒதுக்கி கொள்ளலாம்.
இன்று வீட்டுக்கு விருந்தினர் வருகை.
இரவு பேசுகிறேன் உங்களுடன்.
நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//படங்கள் கச்சித்தமாக உங்கள் பெயருடன் வந்திருப்பது மிக அழகு.
பெயர் அருமையாகப் பதிவாகி இருக்கிறது.//
மிகவும் நன்றி அக்கா.
//முன்பே பிகாசாவில் இந்த வசதி செய்து கொடுத்துவிட்டார்கள் இல்லையா.//
அக்கா எனக்கு நிறைய தெரியாது, குழந்தைகள், சார் சொல்லி கொடுத்தார்கள் காப்பி, பேஸ்ட் செய்வது, வீடீயோ போடுவது, எல்லாம் என் தளத்தை ஓபன் செய்து அதிலேயே படங்களை போடுவது எனக்கு எளிதாக இருக்கிறது. படங்களுக்கு கீழே என் நினைவில் உள்ளதை கருத்து எழுதி விடுகிறேன்.
நோட்பேடில் எழுதி வைத்து அங்கே இருந்து ஒட்டுவது இல்லை.
எனக்கு பிடித்த கருத்துக்களை நோட்பேடில் குறித்து வைத்து பதிவுகளுக்கு பயன்படுத்த மட்டும் செய்வேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் கேள்விபட்டு இருக்கிறீகளா? மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி .
அருமையான படத் தொகுப்புக்கும் தகவல் பகிர்வுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் சகோதரி. வெயில் உகந்த அம்மன் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றால் நீங்களே பெயர்க்காரணமும் கொடுத்திருந்ததை அறிய முடிகிறது. படங்கள் மிக மிக அழகு. கோயில் அருகிலேயே ரயில் அட அழகு ஆனால் தினமலர் செய்தியும் பயம் அளிக்கிறது. விபத்துகள். கோயில் அருகில் பேருந்து விட முடியாது போலும் தண்டவாளம் குறுக்கில் வருவதால்?
பதிலளிநீக்குஅருமையான படங்கள் செய்திகள் தகவல்கள்...
இருவரின் கருத்தும் ----
கீதா: அக்கா ஒரே ஒரு படத்தை மட்டும் பார்க்க முடியவில்லை மனது கஷ்டப்பட்டதால் பார்க்கவில்லை அந்த சேவல் படம் உங்கள் வரியை வாசித்ததும் அப்படியெ கடந்துவிட்டேன்....பாவம் சேவல்.
வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் இருவரும் பழைய பதிவுகளையும் படித்து கருத்து சொல்லி இருப்பது மனதை மகிழ செய்கிறது.
சேவலின் தீனக்குரல் மனதை கனக்கவைத்தது.
என்ன செய்வது, ஆடு, சேவல் பலி நடந்து கொண்டு தான் இருக்கிறது.
Enakku oru help friends intha amma peril manamadurai la innori kovil iruga yarukachum therincha sollunga my namber 9629600484
பதிலளிநீக்குவணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஎனக்கு வேறு கோயில் தெரியாது,தெரிந்தால் சொல்கிறேன்.