"பசுமை நடை" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது.
நேற்று(15.07.2018) காலை ஆறு மணிக்குத் திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அங்கு போனோம். பசுமைநடை இயக்கத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் எங்களைப் பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு கடை முன் காத்து இருக்கச் சொன்னார். 7 மணிக்கு அங்கிருந்து அனைவரும் தென்பரங்குன்றம் பயணித்தோம். 10 நிமிடத்தில் மலையடிவாரம் வந்தது. வாகனங்களை நிறுத்தி விட்டுச் சிறிது தூரம் நடந்தால் குடைவரைக் கோயில்.
கி.பி 8-9 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
படிக்க முடிகிறது அல்லவா?
படித்து விட்டு வாருங்கள், குடைவரைக் கோயிலுக்குப் போய்ப் பார்க்கலாம்.
போகும் பாதையில் பசுமை நடை இயக்கத்தைச் சேர்ந்தவர் நிறைய மரம் புதிதாக நட்டு இருக்கிறார். அரசமரம், ஆலமரம், வேப்ப மரம், பூவரசு போன்ற மரங்கள் வழி நெடுகிலும் நடப்பட்டுள்ளன. அடுத்துப் போகும்போது அவை வளர்ந்து நிழல் தரும் .
கொஞ்சம் படிகள் இருக்கிறது
விழுதுகளாய்ப் பரப்பிக் கொண்டு படிக்கட்டுகளின் இருபுறமும் ஆலமரம் அழகாய்க் காட்சி தருகிறது.
90 பேர் வந்து இருப்பார்கள்.
ஆலமர விழுதுகள் நிறைய ஒன்றாகச் சேர்ந்து நல்ல தடிமனாக இருக்கிறது. வெட்டி விட்டதால் அப்படி இருக்கிறது, ஒரு கிளையை வெட்டிய பகுதி நாய் தன் முகத்தைத் தூக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது அல்லவா?
படிக்குப் பக்கத்தில் நிறைய வேப்பமரம் வளர்ந்து கொண்டு இருக்கிறது பார்க்க அழகு, பச்சை பசேல் என்று.
படியேற சிரமம் இல்லை. ஒரு வாரமாய்க் கொஞ்சம் கால்வலி(கணுக்கால் வலி) இருந்ததால் ஏறமுடியுமா என்று சந்தேகம். அங்கு போய்ப் பார்த்தபோது ஏறலாம் கால்வலிக்காது என்ற நம்பிக்கையோடு ஏறினேன் அங்கு எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சி , புதிய இடம் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. கால்வலி தெரியவில்லை, வீட்டுக்கு வந்தவுடன் வலி தெரிந்தது வெந்நீருக்குள் கால்களை வைத்து அதற்கு நன்றி சொல்லியாச்சு. இன்னும் இரண்டு மூன்று நாள் அதற்குச் சேவை செய்ய வேண்டும். வலி இருக்கிறது. 
படியேறி மேலே போனதும் கோயில் வாசல்
வாசலின் வலது பக்கம் தேவாரம் பாடிய மூவரின் சிற்பங்களும்,
பைரவர் நாய்வாகனத்துடன் செதுக்கப்பட்ட சிற்பமும் உள்ளன.
நடுவில் இருக்கும் திருஞானசம்பந்தர், ஆடும் கோலத்தில் இருப்பார். அதற்கு சாந்தலிங்க ஐயா சொன்ன விளக்கம் நன்றாக இருந்தது. திருஞானசம்பந்தர் சின்னப்பிள்ளை என்றும், நம் வீட்டில் இருக்கும் சின்னப்பிள்ளையை
கடைக்குப் போய்வா என்றால் என்ன செய்யும் ஆடிக் கொண்டே ஓடிக் கொண்டே தான் போகும் . அது போல் அவர் ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரை அது போல் வடித்து இருக்கிறார்கள். என்றார். என் கணவர் அதை மிகவும் ரசித்தார்கள், அவர்களது அம்மா கடைக்கு போய் ரவை வாங்கி வா என்றால் ஆடிக் கொண்டு ஓடிப் போய் வாங்கி வந்து விடுவார்களாம், அவர்கள் அம்மா என்னடா இவ்வளவு சீக்கீரம் வந்து விட்டாய் என்பார்களாம்.
மேலே கடைசியில் உள்ள பைரவர் தெரியவில்லை என்பதால் மீண்டும் தனியாக அவரது படம். கைகள் தான் பின்னப்படுத்தி இருக்கிறது எல்லாச் சிலைகளிலும்
கோவில் வாசல் வலது பக்கத்தில் பிள்ளையார். இரண்டு துறவியர் சிற்பங்கள்.
கோயிலுக்குள் நடுவில் நடராஜர் பக்கத்தில் உமை இருந்தார்கள். இருட்டில் எடுத்ததில் விடுபட்டு இருக்கிறது. இரண்டு கைகளும் இல்லாமல் இருந்தது. நடராஜர் பாதமும் முயலகன் மேல் இருக்கும் காலும் இல்லை. இன்னும் இரண்டு கைகளும் இல்லை , இரண்டு கைகள் மட்டுமே இருக்கிறது. உடுக்கை ஏந்திய கையும் கொஞ்சம் உடைந்து இருக்கிறது.
நடராஜர் கால் அருகில் நான்கு கரங்களுடன் தெரியும் உருவத்தைப்பார்த்தால் நரசிம்மர் போல் இருக்கிரார்.
மேல் பகுதியில் ஒரு புறம் பெரிய விநாயகர் - அவரைச் சுற்றிச் சின்னச் சின்ன விநாயகர்கள்
மற்றொரு புறம் மரத்தின் மீது அழகாய் மயில் வாகனத்தில் முருகன் இருக்கிறார்.
வள்ளி, முருகன், தேவசேனா
குடவரைக் கோயில் பற்றிய அறிவிப்புப் பலகை
கல்வெட்டுக்கள்.
இரு கல்வெட்டுக்கள் உள்ளே இருக்கின்றன
முன் அறை : தரையில் நிறைய விளையாட்டுக்குரிய வரைகோடுகள் வரையப் பட்டு இருக்கின்றன.
"ஆடு -புலி" ஆட்டம்
மெலிந்த யானையின் ஓவியம்
இது என்ன விளையாட்டு என்று தெரியவில்லை
"தாயக்கட்டம்" போல் இருக்கிறது
படி ஏறி வரும்போது பக்கத்தில் உள்ள திண்ணையில் பாதங்களும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.
கோயிலில் மேல் பகுதிச் சிற்பங்கள் எல்லாம் சிதைந்து இருக்கின்றன.
"பசுமை நடை"யின் தலைவர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் பேசுகிறார். அவருக்கும் இந்த இடத்திற்கும் 30 வருட பந்தம் உள்ளது என்றார். இதை சுற்றுலா ஸ்தலமாக என்ன முயற்சி செய்யமுடியுமோ அதைச் செய்ததாகவும், செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
தொல்லியல் துறை அறிஞர் திரு சாந்தலிங்கம் அவர்கள் பேசுகிறார்.
வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த இடத்தின் வரலாற்றைச் சொல்கிறார்.
முதலில் குடவரைக் கோயிலைப் பார்த்து வந்த பின் அவர் பேச்சின் மூலம் மேலும் சில விஷயங்கள் தெரிந்துகொண்டு மீண்டும் போய்ப் பார்த்து வந்தோம் அனைவரும்.
இந்த இடத்தைப் பாதுகாத்துக்கொண்டு இருக்கும் பெருமாள் என்பவரையும் அவரது உதவியாளரையும் பாராட்டிப் பரிசு வழங்கப்பட்டது. (புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு வேலி ஓரத்தில் இருப்பவர் தியாகராஜன் . இங்கு 30 வருடங்களாய் தொடர்ந்து வருகிறார் அவருக்கும் புத்தகம் நினைவு பரிசாக வழங்கபட்டது. அவர் பக்கத்தில் இருப்பவர்தான் பெருமாள் அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பெருமாளின் உதவியாளர் இந்த இடத்தையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாத்து வருபவர்.
அருவிகள், சிங்கம், புலி, கரடி , மயில்கள் போன்றவைகள் அங்கு இருந்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன, இப்போது இவை எல்லாம் எங்கே என்றும் கேள்விகள் கேட்டார்.
மலேஷியாவிலிருந்து வந்த எழுத்தாளர் மலர்விழி அருமையாகப் பேசினார். ("கடாரம்' என்ற நூலை எழுதி இருக்கிறார். ராஜேந்திர சோழனைப்பற்றி என்று சொன்ன நினைவு)
"தமிழ்மொழி தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியாவில் எல்லாம் பரவி இருந்தது . 'ரொம்ப காலமாக 'பாரதம் , பாரதம்' என்று குறுகிய வட்டத்தில் சிந்தனை இருந்தது, கொஞ்ச காலமாய் தான் உலகளாவிய சிந்தனை (குளோபல்) வந்து இருக்கிறது' என்கிறார்கள், ஆனால் சோழர்கள் காலத்திலேயே கம்போடியா, சீனா, இந்தோனேசியா, போன்ற கீழை நாடுகளுடன் பரந்த அளவில் எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு உலகளாவிய தொடர்பு உடையதாக இருந்தது "என்று சில சான்றுகளுடன் தெரிவித்தார்.
அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது, அதற்கு அமீரகத்திலிருந்து வந்து இருந்த இஸ்லாமிய சகோதரரை அளிக்கச் சொன்னார்கள்.
உள் அறையில் இருந்த அர்த்தநாரி சிற்பம் .
காளைமாடு பின்புறம் இருட்டுக்குள் இருக்கிறது
மற்றவர்களின் அலைபேசியின் வெளிச்சத்திலும், என் கணவரது டார்ச் லைட் வெளிச்சத்திலும் எடுத்த படம்.
தலைக்கு மேலே அசோகமரத்தின் கிளைகள் காணப்படுகிறது.
தேவாரம் பாடிய மூவர்
விலங்குகளுக்கு தண்ணீர்த் தொட்டி அமைத்து இருக்கிறார்கள். புதிதாக நிறைய மரங்கள் நடப்பட்டு உள்ளன, பசுமை நடை அமைப்பின் மூலம்
மலை அருகில் விலங்குகள் தண்ணீர் அருந்தத் தொட்டி வைத்து இருக்கிறது. ஒரு அன்பர் நிறைய மாம்பழங்களைத் தண்ணீர்த் தொட்டியின் மேல் வைத்துச் சென்றார்.
கிணறு வெகு ஆழமாய் இருக்கிறது. இப்போது அதில் நீர் இல்லை. கம்பித் தடுப்பு போட்டுப் பூட்டப்பட்டு இருக்கிறது .
உணவு இடைவேளையில் வந்து இருந்தவர்கள் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.
கல்மேல் அமர்ந்து இங்கு என்ன கூட்டம் என்று பார்க்கிறது.
முகம் சிவந்து இருக்கிறது.
நான் இன்னும் வளர்ந்தால்தான் மரத்தைக் கட்டிப்பிடிக்க முடியும் என்று நினைக்குது போல!
மரத்தடியில் நிறைய குரங்குகள், மரத்தின் மீதும் குரங்குகள் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன.
எல்லாம் பார்த்து முடித்தவுடன் 8.30 மணிக்குக் காலைச்சிற்றுண்டி வழங்கப்பட்டது. இட்லி, தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என்று. வழக்கம் போல் ஞாயிறு என்பதால் நாங்கள் விரதம், சாப்பிட முடியாது 12 மணிக்கு மேல்தான் மதிய உணவு என்றதும் வைத்துக் கொள்ளுங்கள் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்கள் என்று கொடுத்தார்கள்.
குழந்தை வாங்கி வரும் போது போட்டோ எடுக்க நினைத்ததும் அந்த குழந்தை வேண்டாம் என்றாள் உன் தட்டை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்றேன் சரியென்றாள்.
மயில் எல்லாம் நிறைய இருந்தது என்று சாந்தலிங்க ஐயா சொன்னது உண்மை என்பது போல் மயில் அகவும் சத்தம் கேட்டது , போட்டோ எடுக்க
வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு// நாய் தன் முகத்தைத் தூக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது அல்லவா?//
பதிலளிநீக்குஆமாம் அக்கா எஜமானரின் உத்தரவுக்கு காத்திருக்கும் பைரவர் போல் தோற்றமளிக்குது .அந்த கருநிற மூக்கு/நாசி கூட தெரிகிறது .
// கைகள் தான் பின்னப்படுத்தி இருக்கிறது எல்லாச் சிலைகளிலும் //
கலையை உருகுலைக்க எப்படித்தான் மனம் வருமோ :(
பல் வலி சுகமாகிவிட்டதாக்கா .இதுபோன்ற பசுமையான இடங்களுக்கு போனால் வலியெல்லாம் ஓடியே போகிடும் .பசுமையான சூழல் .அழகான படங்கள் .
பதிலளிநீக்குவிலங்குகளுக்கு நீரும் உணவுமளித்த நல்மனம் வாழ்க .
ஆஞ்சிக்கள் அழகா இருக்காங்க .நம் முன்னோர்கள் இல்லையா :)
அழகிய படங்களுடன், பசுமைநடை பற்றிய விடயங்களும் நன்று.
பதிலளிநீக்குஅங்கு நிகழ்ந்த விழாவைப்பற்றி அறிய தொடர்கிறேன்...
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//ஆமாம் அக்கா எஜமானரின் உத்தரவுக்கு காத்திருக்கும் பைரவர் போல் தோற்றமளிக்குது .அந்த கருநிற மூக்கு/நாசி கூட தெரிகிறது .//
தெரிகிறதா ஏஞ்சல்?
//கலையை உருகுலைக்க எப்படித்தான் மனம் வருமோ :(//
ஆமாம் ஏஞ்சல், பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது.
ஏஞ்சல், பல் வலி பல் எடுத்தபின் நலம்.
பதிலளிநீக்குஇப்போது கால்வலி.
//இதுபோன்ற பசுமையான இடங்களுக்கு போனால் வலியெல்லாம் ஓடியே போகிடும்//
ஆமாம் ஏஞ்சல்.
//விலங்குகளுக்கு நீரும் உணவுமளித்த நல்மனம் வாழ்க .
ஆஞ்சிக்கள் அழகா இருக்காங்க .நம் முன்னோர்கள் இல்லையா :)//
அவர்களை வாழ்த்த வேண்டியதுதான்.
உங்கள் உடல் நலமா? ஏதோ பூக்களின் மகரந்தங்கள் பறக்கும் போது ஏற்படும் ஒவ்வாமையா? இப்போது நலமா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான தொகுப்பு. நானும் உங்களோடு ஒரு தடவை சுற்றிப் பார்த்தாயிற்று. நம் வரலாறு பசுமையுடன் வளரட்டும்.
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/
வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
ஆமாம் அக்கா சரியா அந்த கார்னரை மட்டும் கவனிச்சா பைரவரின்/dog கண் காது வடிவம் கூட தெரியும் .ஒரு கதைபுத்தகத்தின் அட்டைப்படத்தில் இப்படி ஒரு படம் வந்தது .
பதிலளிநீக்குஇப்போ அலர்ஜி இன்னும் கொஞ்சம் இருக்குக்கா .வெயில் இருக்குமட்டும் மகரந்தம் பறக்கும் .
மரங்களில் நிறைய வடிவங்களை பார்க்கலாம்.
நீக்குஏஞ்சல் ,
உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
எனக்கும் இதுமாதிரி எதாவது உருப்படியான விசயத்தில் ஈடுபடனும்ன்னு ஆசை..
பதிலளிநீக்குகோவிலுக்கு போகும்போது அங்கிருக்கும், சிற்பம், கல்வெட்டுக்களை படிச்சாலே எங்க வீட்டுக்காரர் காண்டாகிடுவார். வந்தமா சாமி கும்பிட்டோமான்னு போய்க்கிட்டே இருக்கனும்ன்னு...
பசுமை நடையை ரசித்தேன்.
பதிலளிநீக்குஇடங்கள், அனேகமாக சமணர்களிடமிருந்து சைவர்களிடம் வந்திருக்கவேண்டும். பிற்காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது சிலா உருவங்கள் சிதைந்திருக்கலாம். இல்லை, சைவர்களிடமிருந்து சமணர்கள் இந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்களா (பாண்டியன் சமண மதத்திற்கு மாறியபோது)?
நல்லா நடந்தவைகளை படங்கள் மூலம் கொண்டுவந்திருக்கீங்க.
வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//கோவிலுக்கு போகும்போது அங்கிருக்கும், சிற்பம், கல்வெட்டுக்களை படிச்சாலே எங்க வீட்டுக்காரர் காண்டாகிடுவார். வந்தமா சாமி கும்பிட்டோமான்னு போய்க்கிட்டே இருக்கனும்ன்னு...//
நல்ல கொள்கை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
திருப்பரங்குன்றம் போகவேண்டும் என்கிற ஆசை இருப்பதுவும், மீனாட்சி அம்மனுக்கு ஒரு பிரார்த்தனை இருப்பதுவும் மதுரை வரவேண்டி இருக்கிற காரணங்கள். ஏப்ரல் 2016 க்குப்பின் மதுரைமண் மிதிக்கவில்லை. ம்ம்ம்....
பதிலளிநீக்குஆமாம். வெட்டிய கிளை நாய் முகம் தூக்கிப் பார்ப்பது போலதான் இருக்கிறது. இந்த இடம் திருப்பரங்குன்றத்துக்கு எதிரே உள்ள மொட்டைமலையா? இங்கு செல்லவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. இதுவரை சென்றதில்லை.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத்தழிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//இடங்கள், அனேகமாக சமணர்களிடமிருந்து சைவர்களிடம் வந்திருக்கவேண்டும். பிற்காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது சிலா உருவங்கள் சிதைந்திருக்கலாம். இல்லை, சைவர்களிடமிருந்து சமணர்கள் இந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்களா (பாண்டியன் சமண மதத்திற்கு மாறியபோது)?//
இடங்கள் சமணர்களிடமிருந்து சைவர்களிடம் வந்து இருக்கலாம் என்றாலும், குடைவரை கோவிலில் குடைந்து தானே சிற்பங்கலை செதுக்கி இருப்பார்கள். ஏற்கனவே இருந்த சிலைகளை நீக்குவது எளிது. குடைந்து செய்தவற்றை மாற்ற முடியுமா ?
இஸ்லாமியர் படையெடுப்புகளில் அழிந்தாக இங்கு சரித்திர குறிப்புகள் இல்லை.
சுற்று வட்டாரங்களில் சமணபடுகை இருப்பதால் இதையும் அப்படி குறிப்பிட்டார்களா என்று ஆராய்ச்சி செய்தவண்ணம் இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கடாரம் என்றால் ராஜேந்திர சோழன் பற்றிதான் இருக்கும் இல்லையா? விலங்குகள் தண்ணீர்தொட்டி நல்ல சேவை. மாம்பழங்கள் நம் முன்னோர் நண்பர்களுக்காகவா?!!
பதிலளிநீக்குபசுமை நடை... கொஞ்ச காலம் கழித்து அந்த இடம் பசுமையாய் விளங்கட்டும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//திருப்பரங்குன்றம் போகவேண்டும் என்கிற ஆசை இருப்பதுவும், மீனாட்சி அம்மனுக்கு ஒரு பிரார்த்தனை இருப்பதுவும் மதுரை வரவேண்டி இருக்கிற காரணங்கள்//
இறைவன் பிரார்த்தனை நேரம் வந்து விட்டது போல! குலதெய்வம் போய் வந்து விட்டீர்கள் அதனால் மற்ற பிரார்த்தனைகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்துவிடும்.
//ஆமாம். வெட்டிய கிளை நாய் முகம் தூக்கிப் பார்ப்பது போலதான் இருக்கிறது.//
பதிலளிநீக்குஸ்ரீராம், செல்லங்களை உங்களுக்கு தெரியாமல் போகாது மகிழ்ச்சி.
//இந்த இடம் திருப்பரங்குன்றத்துக்கு எதிரே உள்ள மொட்டைமலையா?
இல்லை, காசி விஸ்வநாதர் மலைக்கு நேர் கீழே அந்த படங்கள் அடுத்த பதிவில்.
//இங்கு செல்லவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. இதுவரை சென்றதில்லை.//
உங்கள் குழந்தைகளுடன் வாருங்கள் அவர்கள் ரசிப்பார்கள்.
//கடாரம் என்றால் ராஜேந்திர சோழன் பற்றிதான் இருக்கும் இல்லையா?//
பதிலளிநீக்குஆமாம் , மலர்விழி அப்படித்தான் சொன்னார்கள்.
//விலங்குகள் தண்ணீர்தொட்டி நல்ல சேவை. மாம்பழங்கள் நம் முன்னோர் நண்பர்களுக்காகவா?!!//
ஆமாம், அவர்களுக்கு என்று கொண்டு வைத்தார் பேச்சு நடக்கும் போது கத்தி சண்டையிட்டு கொண்டு இருந்தவைகள் தீடீர் என்று காணாமல் போய்விட்டார்கள்.
சாப்பிடும் போது எல்லோரும் ஒரே வட்டமாய் உட்கார்ந்து சாப்பிடுங்கள் அப்போதுதான் குரங்குகள் தாக்காது என்றார்.
கைபைகளை தூக்கி கொண்டு ஓடி தனக்கு வேண்டிய உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு பையை போட்டு விட்டு போய்விடும் என்றார் காவலர்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதங்களது அருமையான பதிவினால், பசுமை நடை இயக்கத்தின் மூலம் பயணித்த தங்களுடன் நானும் பயணித்த உணர்வு வரப்பெற்றேன். மிக அருமையாக படங்கள் எடுத்து செய்திகளையும், சுவாரஸ்யம் குன்றாது சொல்லியிருக் கிறீர்கள். குடைவரை சிற்பங்கள் ஒவ்வொன்றும் அழகாய் உள்ளன. அதை எதற்கு எந்த காரணத்திற்காக சேதப்படுத்தி யிருக்கிறார்களோ? மரங்களும் அதற்கு தாங்கள் அளித்த வர்ணனைகளும் மிக அழகு. நம் முன்னோர்களின் படங்களும் அதற்கேற்ற தங்களது கமெண்ட்ஸ்களும் படித்து சிரித்து மிகவும் ரசித்தேன். அழகான பயணம்... தங்கள் உடல் நலமின்மையை பொருட்படுத்தாமல், களைப்பை பற்றி கவலைப்படாமல் அனைத்தையும் அறிந்து கொள்ளும் கலை ஆர்வத்துடன் சென்று விபரங்களை அறிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். அதை எங்களுடன் பகிர்ந்த தங்கள் நல்ல மனதிற்கு என்மனம் நிறைந்த நன்றிகள்.
தங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
.// கொஞ்ச காலம் கழித்து அந்த இடம் பசுமையாய் விளங்கட்டும்.//
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், ஏற்கனவே உள்ள பழைய மரங்களும் , இனி வரபோகிற மரங்களும் சேர்ந்து அந்த இடத்தை மேலும் பசுமையாக்கி விடும்.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//தங்களது அருமையான பதிவினால், பசுமை நடை இயக்கத்தின் மூலம் பயணித்த தங்களுடன் நானும் பயணித்த உணர்வு வரப்பெற்றேன்.//
நன்றி.
//குடைவரை சிற்பங்கள் ஒவ்வொன்றும் அழகாய் உள்ளன. அதை எதற்கு எந்த காரணத்திற்காக சேதப்படுத்தி யிருக்கிறார்களோ?//
தொல்லியல் துறை ஐயா சொன்னார் சமூகவிரோதிகள் அழித்து இருக்கலாம் என்று.
//நம் முன்னோர்களின் படங்களும் அதற்கேற்ற தங்களது கமெண்ட்ஸ்களும் படித்து சிரித்து மிகவும் ரசித்தேன்//
அவர்கள் செய்யும் குறும்புகளை , குட்டியை தூக்கிகிட்டு ஓடும் குரங்குகளை எல்லாம் மற்றவர்கள் எடுத்து இருந்தார்கள் முக நூலில் அழகாய் பகிர்ந்து இருக்கிறார்கள் நான் பேசுவதை குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்ததால் சில காட்சிகளை தவற விட்டேன்.
உங்கள் உடல்நல விசாரிப்புக்கு நன்றி கமலா.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது//
பதிலளிநீக்குஓ திருப்பரங்குன்றம் தெரியும் இது இப்போதான் அறிகிறேன்.. என்ன ஒரு அழகிய மலைக்குன்று..
நோட்டீஸ் படிக்க முடிகிறது. இப்படி ஒரு சுற்றுலா வசதி இருப்பது எவ்வளவு நல்லது, பாதுகாப்பானதும்கூட எல்லோ...
//விழுதுகளாய்ப் பரப்பிக் கொண்டு படிக்கட்டுகளின் இருபுறமும் ஆலமரம் அழகாய்க் காட்சி தருகிறது. //
பதிலளிநீக்குபொதுவாக ஆலமரம் மொத்தமாக வந்தபின்புதானே நிறைய விழுதுகள் வரும்.. இது மெல்லிசாக இருக்கும்போதே நிறைய விழுதுகள் வந்து விட்டதே. அழகான இடம் தோப்புப்போல இருக்கு பார்க்க.
இவ்ளோ பேரும் பஸி இல் வந்தார்களோ.. சூப்பர்.. அப்போதான் இப்படியான இடங்களுக்கு பயமில்லாமல் போகலாம்.
// ஒரு கிளையை வெட்டிய பகுதி நாய் தன் முகத்தைத் தூக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது அல்லவா?//
பதிலளிநீக்குஎனக்கு வாழைப்பொத்தி தொங்குவதைப்போல இருக்கு. பொத்தியின் மேலே ஒரு சாரைப்பாம்பு தலையைத்தூக்கிப் பார்ப்பதைப்போல இருக்கு ஹா ஹா ஹா.
90 பேரா போனீங்க ஓஓஓஒ...
ஆவ்வ்வ் கோமதி அக்கா, நிங்கள் இருவரும் நல்ல ஹெல்த்தியாக இருக்கிறீங்க.. திருஷ்டி சுத்திப் போட்டிடுங்கோ பின்பு அதிராவால் கண்பட்டுவிட்டது எனச் சொல்லிடப்போறீங்க ஹா ஹா ஹா... இப்படி இடைக்கிடை போய் வருவது மனதுகும் உடலுக்கும் நல்ல பயிற்சிதானே.
பதிலளிநீக்குஅது சரி என்ன இவ்ளோ வெயிக்கப்பட்டு:) இடைவெளி விட்டு நிக்கிறீங்க இருவரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
ஆனா ஒன்றை அவதானிச்சேன் பல நாட்களாக.. மாமா கொஞ்சம் கோபக்காரரோ?:) எப்பவும் சீரியசாகவே இருக்கிறாரே படங்களில்.. ஹையோ சொல்லிக் குடுத்திடாதீங்கோ:)..
நடுவில் இருக்கும் துறவிக்கு பிள்ளையாரைப்போல பெரிய வண்டி ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குஓ தெய்வானையை தேவசேனா எனவும் சொல்வதுண்டோ? இது புதுசு எனக்கு...
ஏன் எல்லாச் சிலைகளும் உடைக்கப்பட்டிருக்கு.. முன்பு ஏதும் யுத்தம் நடந்திருக்குமோ இவ்விடத்தில்.. இது பழையகாலக் கோயில்தானே.
kஅல்வெட்டுக்கள் அருமை... எத்தனை வருடங்கள் பழமையானது...
பதிலளிநீக்குஎன் கிரேட் குருவையும் பார்த்ததில் மகிழ்ச்சி எனக்கு.
இவை செங்குரங்கு இனம் கோமதி அக்கா .. அதாவது வெள்ளைக்காரக் குரங்குகள்... ஹா ஹா ஹா..
ஓ சாப்பாடும் தருவினமோ? அங்கு சமைப்பார்களோ?
மைனாப்பிள்ளையையும் விடவில்லை நீங்க ஆனாலும் இம்முறை மைனாக்கா கோமதி அக்காவோடு கோபமாம்:) ஹா ஹா ஹா அழகிய சுற்றுலா.. சுபம்_()_.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//நோட்டீஸ் படிக்க முடிகிறது. இப்படி ஒரு சுற்றுலா வசதி இருப்பது எவ்வளவு நல்லது, பாதுகாப்பானதும்கூட எல்லோ...//
ஆமாம் அதிரா, இந்த மாதிரி இடங்களுக்கு இப்படி போவது பாதுகாப்பு ஒரு பக்கம் இருந்தாலும், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் குழு முன்பே போய் அந்த இடத்தை ஆய்வு செய்து விடுகிறார்கள்.
//இவ்ளோ பேரும் பஸி இல் வந்தார்களோ.. சூப்பர்.. அப்போதான் இப்படியான இடங்களுக்கு பயமில்லாமல் போகலாம்.//
எல்லாம் அவர் அவர் வாகனங்களில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் வந்து ஒரு இடத்தில் கூடி எல்லோரும் முன்னால் போகும் வாகனத்தை பின் தொடர்ந்து போக வேண்டியதுதான்.
//எனக்கு வாழைப்பொத்தி தொங்குவதைப்போல இருக்கு. பொத்தியின் மேலே ஒரு சாரைப்பாம்பு தலையைத்தூக்கிப் பார்ப்பதைப்போல இருக்கு ஹா ஹா ஹா.//
பதிலளிநீக்குஉங்களுக்கு கற்பனை வளம் அதிகம். நான் கண்ட காட்சி நீங்கள் காணவில்லை, அதிரா கண்ட காட்சி கோமதி அக்காவிற்கு தெரியவில்லை.
90 பேரா போனீங்க ஓஓஓஒ...
ஓ! ஆமாம் .
//ஆவ்வ்வ் கோமதி அக்கா, நிங்கள் இருவரும் நல்ல ஹெல்த்தியாக இருக்கிறீங்க.. திருஷ்டி சுத்திப் போட்டிடுங்கோ பின்பு அதிராவால் கண்பட்டுவிட்டது எனச் சொல்லிடப்போறீங்க ஹா ஹா ஹா... இப்படி இடைக்கிடை போய் வருவது மனதுகும் உடலுக்கும் நல்ல பயிற்சிதானே.//
பதிலளிநீக்குஆமாம் அதிரா மனதுக்கும், உடலுக்கும் நல்ல பயிற்சிதான்.
மாயவரத்தில் இருக்கும் போது உறவினர்கள் குறைவு, நட்பு வட்டம் அதிகம்,
பலவருடங்கள் பழக்கம் அனைவர் வீட்டு நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு , மாயவரத்தைச்சுற்றி உள்ள கோவில்களுக்கு போய் கொண்டு என்று இருந்தோம்.
நான் அப்போது ஒல்லியாக இருந்தேன், இப்போது தடித்து விட்டேன்.
அது சரி என்ன இவ்ளோ வெயிக்கப்பட்டு:) இடைவெளி விட்டு நிக்கிறீங்க இருவரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
வெக்கம் இல்லை அதிரா நாங்கள் பக்கத்தில் பக்கத்தில் நின்றால் பின்னால் உள்ள சிற்பங்கள் உங்க்களுக்கு தெரியாது என்பதால். உங்களுக்காக தான் இருவர் படமும்.
மாமா படம் மட்டும் போட்டால் கதாநாயகன் மட்டும், கதாநாயகி எங்கே என்று கேட்கிறீர்கள். படம் எடுக்கும் அன்பர் கொஞ்சம் சிரிங்க பாஸ் என்று சொல்லவில்லை அதனால் சிரிக்கவில்லை.
//ஆனா ஒன்றை அவதானிச்சேன் பல நாட்களாக.. மாமா கொஞ்சம் கோபக்காரரோ?:) எப்பவும் சீரியசாகவே இருக்கிறாரே படங்களில்.. ஹையோ சொல்லிக் குடுத்திடாதீங்கோ:)..//
அதிராவின் கணிப்பு தப்பாகுமோ!
கொஞ்சம் கோபம் வரும், வந்தவுடன் மறைந்து விடும்.
கல்லூரியில் இந்த பேராசிரியருக்கு புன்னகைமன்னன் என்று பெயர் குழந்தைகளிடம்.
சாருக்கு கோபம் வரும் என்று அவர் கற்பிக்கும் மாணவ மாணவிகளிடம் சொன்னால் என்னிடம் சண்டைக்கு வந்து விடுவார்கள்.
//நடுவில் இருக்கும் துறவிக்கு பிள்ளையாரைப்போல பெரிய வண்டி ஹா ஹா ஹா.//
பதிலளிநீக்குஆமாம், கவலை இல்லா வாழ்க்கை.
//ஓ தெய்வானையை தேவசேனா எனவும் சொல்வதுண்டோ? இது புதுசு எனக்கு...//
இந்திரன் மகளை அப்படித்தான் அழைப்பது.
//ஏன் எல்லாச் சிலைகளும் உடைக்கப்பட்டிருக்கு.. முன்பு ஏதும் யுத்தம் நடந்திருக்குமோ இவ்விடத்தில்.. இது பழையகாலக் கோயில்தானே.//
யுத்தம், சமூக விரோதிகள் போன்ற பல காரணங்கள் சிதைவுக்கு.
பழைய காலக் கோவில்தான். பூஜைகள் கிடையாது. தொல்லியல் துறையிடம் உள்ளது.
மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டில் இக் கோவில் கி.பி. 1233ல்
பதிலளிநீக்குபிரசன்னதேவர் என்னும் சைவ அடியாரின் வேண்டுகோளின்படி சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்னும் பெயரில் சிவன் கோவிலாக மாற்றபட்டது என்கிறது.
மேலே நோட்டிஸ் படிக்க முடிகிறது என்று சொன்னீர்கள் படிக்கவில்லையா அதிரா?
//என் கிரேட் குருவையும் பார்த்ததில் மகிழ்ச்சி எனக்கு.//
அதுதான் இத்தனை துள்ளல், மகிழ்ச்சியா?
//இவை செங்குரங்கு இனம் கோமதி அக்கா .. அதாவது வெள்ளைக்காரக் குரங்குகள்... ஹா ஹா ஹா..//
ஆமாம், முன்பு ஒருவருக்கு ஒருவர் திட்ட(வசைபாட) பயன்படுத்துவார்கள் .
ஓ சாப்பாடும் தருவினமோ? அங்கு சமைப்பார்களோ?
கிரிவலம் வரும் அன்பர்கள் தருவார்கள்.
//மைனாப்பிள்ளையையும் விடவில்லை நீங்க ஆனாலும் இம்முறை மைனாக்கா கோமதி அக்காவோடு கோபமாம்:) ஹா ஹா ஹா அழகிய சுற்றுலா.. சுபம்_()//
மயிலை எடுக்க வந்து என்னை எடுக்கிறாய் என்று கோபம் மைனாவிற்கு.
உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
அன்பு கோமதி,
பதிலளிநீக்குபள்ளி நாட்களில் சுற்றுலா செல்வது போல
தெங்குன்றம் போய் வந்திருக்கிறீர்கள்.
படங்கள் அத்தனையும் பொறுப்புடன் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.
விளக்கங்களும் அருமை.
பார்க்கக் கிடைக்காத காட்சிகள் எல்லாம் உங்கள் வழியே
எங்களை வந்தடைவது எங்கள் அதிர்ஷ்டம்.
வாழ்க வளமுடன்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//பள்ளி நாட்களில் சுற்றுலா செல்வது போல
தெங்குன்றம் போய் வந்திருக்கிறீர்கள்.//
அக்கா, அந்தக் காலம் வந்தால் நன்றாக இருக்கும் பள்ளி பருவத்தில் ஓட்டம் ஓட்டம் ஒரு இடத்தில் நிற்காமல் தோழிகளோடு எதற்கு சிரிக்கிறோம் ஏன் சிரிக்கிறோம் என்று தெரியாமல் சிரித்து மகிழ்ந்த காலம் !
//படங்கள் அத்தனையும் பொறுப்புடன் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.
விளக்கங்களும் அருமை.//
ரசித்துப் பார்த்து கருத்து சொல்லும் அன்பர்களால்தான் இது நடந்து கொண்டு இருக்கிறது.
உங்கள் உற்சாக பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா.
அழகிய படங்களுடன் அருமையான விளக்கங்கள்... எவ்வளவு கவனிப்பு...! அருமை அம்மா...
பதிலளிநீக்குஉங்கள் பார்வை வழியாக நாங்களும் ஒரு அழகிய இடத்தை பார்த்து அறிந்துக் கொண்டோம் மா...
பதிலளிநீக்குமிக அருமையான நிகழ்வுகள் மிக மகிழ்ச்சி..
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி
வணக்கம் அனுராதா, பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி அனு.
அழகான சுற்றுலா தளம். வல்லிம்மா சொன்னமாதிரிதான் எனக்கும் பள்ளிநாட்களில் சுற்றுலா போன ஞாபகம். பிரச்சனையால் உள்ளூரில் இருக்கும் இடங்களையே பார்க்கபோவோம். தென்பகுதிக்கு போகமுடியாது. பார்த்த இடமெனினும் ப்ரெண்ட்ஸு டன் போகும்போது சந்தோஷமாக இருக்கும்.
பதிலளிநீக்குஇப்படியான பதிவுகளால்தான் நாம் பார்க்கமுடியாத இடங்கள்,அதன் தகவல்கள் அறிய முடிகிறது. வரலாற்று இடங்கள் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கு. படங்கள் எல்லாமே அழகா இருக்கு.
உங்க உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்க அக்கா.
நீறைய தகவல்கள் நிறைய படங்கள். மிக பொறுமையாக எழுதி பதிவிட்டு இருக்கிறீர்கள் போல....பாராட்டுக்கள்
பதிலளிநீக்குவணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅழகான இடம் தான்.
//எனக்கும் பள்ளிநாட்களில் சுற்றுலா போன ஞாபகம். பிரச்சனையால் உள்ளூரில் இருக்கும் இடங்களையே பார்க்கபோவோம். தென்பகுதிக்கு போகமுடியாது. பார்த்த இடமெனினும் ப்ரெண்ட்ஸு டன் போகும்போது சந்தோஷமாக இருக்கும்.//
பார்த்த இடமோ, பார்க்காத இடமோ நட்புகளுடன் பேசி, சிரித்து சுற்றுலா சென்று வருவது என்றால் மகிழ்ச்சிதான்.
//இப்படியான பதிவுகளால்தான் நாம் பார்க்கமுடியாத இடங்கள்,அதன் தகவல்கள் அறிய முடிகிறது. வரலாற்று இடங்கள் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கு. படங்கள் எல்லாமே அழகா இருக்கு.//
அதற்காக தான் இந்த பதிவு அம்மு. மதுரையில் இருப்பவர்களே பார்க்க மாட்டேன் என்கிறார்கள் நம் ஊரின் பெருமை தெரியவேண்டும் எல்லோருக்கும் அதுதான் பசுமை நடையின் லட்சியம். சுற்றுலா சென்ற இடங்களை அசுத்தம் செய்யாமல் வர வேண்டும் அதிலும் உறுதியாக இருக்கிறார்கள். சாப்பிட்ட தட்டுகளை, கவரில் போட்டு கட்டி குப்பைகள் போடும் இடத்தில் போட்டு மீண்டும் அந்த இடத்தை தூய்மை செய்து என்று இந்த இளைஞர்கள் இருப்பது பாராட்டபட வேண்டிய ஒன்று.
//உங்க உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்க அக்கா.//
கவனிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஒய்வு எடுத்து கொண்டு மீண்டும் பணிகளை செய்கிறேன்.
உங்கள் அக்கறையான விசாரிப்புக்கு நன்றி அம்மு.
உங்கள் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//நீறைய தகவல்கள் நிறைய படங்கள். மிக பொறுமையாக எழுதி பதிவிட்டு இருக்கிறீர்கள் போல....பாராட்டுக்கள்//
அவர்கள் பேசுவதை காணொளி எடுத்தேன் போடவில்லை, சுட்டி கொடுத்து இருக்கிறேன் வேறு ஒருவர் எடுத்ததை. வரலாறு அறிய ஆவல் இருந்தால் படிக்கலாம்.
குறிப்பு எடுத்தவரை சொல்லி இருக்கிறேன்.
படங்களும், காமிரா, அலைபேசி இவற்றில் எனக்கு தெரிந்தவரை எடுத்து இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
பதிவு போட்டு நாளாகி விட்டது போல! நிறையக் கருத்துகள். தாமதமாய் வந்திருக்கேன். பொறுமையாப் படிக்கணும், படங்களைப் பார்க்கணும், நாளைக்கு மறுபடி வரேன்.
பதிலளிநீக்கு///உங்களுக்காக தான் இருவர் படமும்.
பதிலளிநீக்குமாமா படம் மட்டும் போட்டால் கதாநாயகன் மட்டும், கதாநாயகி எங்கே என்று கேட்கிறீர்கள். ///
ஹா ஹா ஹா பறவாயில்லையே ஒரு பூஸ்க்கு கோமதி அக்கா பயப்பிடுறா :)
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிங்கள் கிழமை பதிவு போட்டேன்.
வாங்க மெதுவாய்.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபூஸ்க்கு கிட்ட பயம் இல்லை அன்புதான்.
பூஸ் மாமாவை சிரிக்க சொன்னா அடுத்த படம் போடும் போது சிரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபூஸ்க்கு கிட்ட பயம் இல்லை அன்புதான்.
பூஸ் மாமாவை சிரிக்க சொன்னா அடுத்த படம் போடும் போது சிரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.
உடம்பு சரியாகி விட்டதா? நல்ல அருமையான சுற்றுலா. அறிவை விருத்தி செய்யும் சுற்றுலா. ஆனால் சிற்பங்கள் அனைத்தும் உடைந்து காணப்படுவது மனதை வருந்தச் செய்தது. எல்லாமும் அருமை! மாசம் ஒரு தரம் இப்படிப் போறீங்க போல! நல்ல விஷய தானங்கள் செய்து வருகிறீர்கள். சாந்தலிஙம் ஐயா அவர்கள் கல்வெட்டுக்களைப் படித்துச் சொன்னாரா?
பதிலளிநீக்குஇவ்வளவெல்லாம் என்னால் ஏற முடியும்னு தோணலை! திரும்பி வந்த இடத்தில் என்ன விழா என்பது குறித்துத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தேவார மூவர் சிலைகளும் ஞானசம்பந்தர் பற்றிய குறிப்பும் அருமை! தெரியாத புது விஷயம். தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குகீதா, உடம்பு இன்னூம் பூரணமாக சரியாகவில்லை காலில் வலி இருக்கிறது.
பதிலளிநீக்குஇடுப்பு பகுதியிலும் பரவி இருக்கு, ஆனாலும் போய் வந்து விட்டோம்.
இன்று சங்கரன் கோவிலுக்கு அண்ணி, தங்கைகள் கூப்பிட்ட்டார்கள் என்று போய் விட்டு வலியில் அவதிபட்டுக் கொண்டு இருக்கிறேன்.
கோமதி அம்மன் உடல் வலுவைதர வேண்டும்.
மாதம் ஒரு தடவை வரும் சில நேரம் குழந்தைகள் பரீட்சை போன்ற நாட்களில் மாதம் ஒருதடவை என்று பயணம் கிடையாது. போன மாதம் போகவில்லை.
சாந்தலிங்க ஐயா தான் விஷயங்களை சொல்கிறார் கீதா.
பதிலளிநீக்குகஷ்டமில்லாத படிதான் கொஞ்சபடிதான் ஏறலாம்.
விழாவை கேட்க பிரியபடுவதற்கு மகிழ்ச்சி கீதா.
விழாவும் மகிழ்ச்சியை அலையை பரவவிட்ட நிகழ்ச்சிதான்.
சம்பந்தர் பற்றிய செய்தி எனக்கும் மிக பிடித்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான விளக்கங்களோடு நல்ல பதிவு. உடைந்த சிற்பங்கள் மனதிற்கு வருத்தம் தருகின்றன.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசிலைகள் உடைந்து இருப்பது மனதிற்கு வருத்தம்தான், காலம் செய்யும் கோலங்கள் அவை என்ன செய்வது?
உங்கள் வர்வௌக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதிக்கா வந்துட்டோம்...ஸாரி அக்கா..உங்கள் பதிவுகளை மிஸ் செய்துவிட்டேன்....இனி தவற விடாமல் இருக்கப் பார்த்துக் கொள்கிறேன்...
பதிலளிநீக்குதுளசிக்கும் அனுப்பிவிட்டேன்..இதோ நானும் சுற்றிப் பார்த்துவிட்டு வரேன்...
கீதா
அக்கா இடம், படம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. குடவரைக் கோயில்கள் பெரும்பாலும் சமணர்கள் காலத்தவை என்றுதான் சொல்லப்படுகிறது. திருச்சியிலும் கூட. அழகா இருக்கு படங்கள்...
பதிலளிநீக்குஇதோ மீண்டும் வரேன்
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசுற்றிப்பார்த்து விட்டு வாருங்கள்.
குடவரை கோயில்கள் எல்லாம் சமணர்களும் நிறைய கட்டி இருக்கிறார்கள்.
வாங்க வாங்க
ஆமாம் கோமதிக்கா அந்த வெட்டிய பகுதி பைரவர்/வி தன் முகத்தைத் தூக்கிப் பார்ப்பது போல் உள்ளது.
பதிலளிநீக்கு//ஒரு வாரமாய்க் கொஞ்சம் கால்வலி(கணுக்கால் வலி) இருந்ததால் ஏறமுடியுமா என்று சந்தேகம். அங்கு போய்ப் பார்த்தபோது ஏறலாம் கால்வலிக்காது என்ற நம்பிக்கையோடு ஏறினேன் அங்கு எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சி , புதிய இடம் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. கால்வலி தெரியவில்லை, வீட்டுக்கு வந்தவுடன் வலி தெரிந்தது வெந்நீருக்குள் கால்களை வைத்து அதற்கு நன்றி சொல்லியாச்சு. இன்னும் இரண்டு மூன்று நாள் அதற்குச் சேவை செய்ய வேண்டும். வலி இருக்கிறது.//
அக்கா ஆமாம் சந்தோஷத்தில் காலின் வலி கூடத் தெரியாது. ஆனால் அதன் பின் தான் தெரியும்...இப்போது எப்படி இருக்கிறது அக்கா? தேவலாமா?
கீதா
படங்கள் அத்தனையும் அழகு. மூதாதையர்க்ளின் படம், மயில் குயிலானது எல்லாமே!! குடவரைக் கோய்ல்கள் சிதைந்திருப்பது தெரிகிறது.
பதிலளிநீக்குபல உருவங்கள் தெளிவாக இல்லாமல் இல்லையா...
விவரணங்கள் எல்லாம் ஸ்வாரஸ்யமாக இருந்தது. புதிய ஒர் இடத்தை அறிய முடிந்தது. வேம்பு நிறைய வளர்ந்திருப்பது அழகா இருக்கு இன்னும் கொஞ்ச மாதங்கள் போனால் மரங்களாகி செம குளு குளுனு இருக்கும்..
பசுமை நடை நிறைய மரங்கள் நட்டு வைத்திருப்பதும் பாராட்டிற்குரியது...அருமையான பயணம் ரசித்தோம் அக்கா
கீதா
ஆமாம் கோமதிக்கா அந்த வெட்டிய பகுதி பைரவர்/வி தன் முகத்தைத் தூக்கிப் பார்ப்பது போல் உள்ளது.//
பதிலளிநீக்குஉங்களுக்கும் தெரிந்ததா கீதா பைரவரின் வாகனம் !
//அக்கா ஆமாம் சந்தோஷத்தில் காலின் வலி கூடத் தெரியாது. ஆனால் அதன் பின் தான் தெரியும்...இப்போது எப்படி இருக்கிறது அக்கா? தேவலாமா?//
இரண்டு நாள் வலி இருந்தது ஓய்வு எடுத்துக் கொண்ட பின் நலம் கீதா.
அக்கறையான விசாரிப்புக்கு நன்றி கீதா.
//படங்கள் அத்தனையும் அழகு. மூதாதையர்க்ளின் படம், மயில் குயிலானது எல்லாமே!! குடவரைக் கோய்ல்கள் சிதைந்திருப்பது தெரிகிறது.//
பதிலளிநீக்குகோயில் சிற்பங்கள் சிதைந்து இருப்பது கஷ்டமாய் தான் இருந்தாது.
இப்போது தொல்லியல்துறை கவினிப்பதால் மேலும் சிதைவுறாமல் இருக்கும்.
//விவரணங்கள் எல்லாம் ஸ்வாரஸ்யமாக இருந்தது. புதிய ஒர் இடத்தை அறிய முடிந்தது. வேம்பு நிறைய வளர்ந்திருப்பது அழகா இருக்கு இன்னும் கொஞ்ச மாதங்கள் போனால் மரங்களாகி செம குளு குளுனு இருக்கும்..
பசுமை நடை நிறைய மரங்கள் நட்டு வைத்திருப்பதும் பாராட்டிற்குரியது...அருமையான பயணம் ரசித்தோம் அக்கா//
மரங்கள் வளர்ந்து நிழலும், காற்றும் கொண்டு வரும். இனி போகிறவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
அனைத்தையும் ஒன்றுவிடாமல் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
இரண்டு நாள் வலி இருந்தது ஓய்வு எடுத்துக் கொண்ட பின் நலம் கீதா.//
பதிலளிநீக்குஹப்பா நல்லதாயிற்று மகிழ்ச்சி அக்கா. பல் வலி கூட இருந்ததாக ஏஞ்சல் கருத்திலிருந்து அறிந்தென். காது வலி போய் திருகு வலி வந்ததுனு சொல்வது போல் பல்வலி போய் கணுக்கால் வலி என்றிருந்த இரண்டுமே குணமானது மகிழ்ச்சிக்கா....
கீதா
படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன. திருப்பரங்குன்றம் கோயில் சென்றதுண்டு ஆனால் இந்த இடம் சென்றதில்லை. அழகான இடமாகத் தெரிகிறது. குடைவரைக் கோயில்கள் எல்லாம் இருப்பது அப்போதெல்லாம் தெரியவில்லை உங்களின் இந்தப் பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன்.
ஆலாமரம் அந்த விழுது அழகாக இருக்கிறது. குடைவரை கோயில் சிற்பங்கள் பராமரிப்பு இல்லை போலும்.
மிக மிக நன்றாக இருக்கிறது பசுமை நடை. என்ன விழாவாக இருக்கும் என்று யோசித்து அடுத்தபகுதிக்குச் செல்கிறேன்.
துளசிதரன்