சனி, 21 ஜூலை, 2018

தென்பரங்குன்றம் - பகுதி 2

அடுத்து நாங்கள்  வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன். போகும் வழியில் பூத்துக் குலுங்கும் மரங்கள், பூங்கா, மலை அழகு  எல்லாம் பார்த்து விட்டு விழாவிற்குப் போவோம்.
தென்பரங்குன்றம் முந்திய பதிவு படிக்க.


மஞ்சள் பூக்களும், சிவப்புப்  பூக்களும்  கண்ணுக்கு விருந்தளிக்கிறது
வரும் வழியில் சிறுவர் பூங்கா இருக்கிறது. ஆனால் பூட்டி இருந்தது, மாலை திறப்பார்களா, தெரியவில்லை . கம்பித் தடுப்பு வழியாக  எடுத்த படங்கள்.
சுத்தமாக இருக்கிறது பூங்கா, ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் நாய் .
ஊஞ்சல், சீ-சா பலகை, குப்பை கொட்ட அழகிய முயல் சிலை எல்லாம் தெரிகிறது.

சறுக்கு மரம் யானைவடிவில். ஆனால் உபயோகம் இல்லை போலும். முள் போடப்பட்டு இருக்கிறது.
மலையடிவாரம் , மரங்கள் எல்லாம் அழகு, அடுத்துப் போகும்போது புதிதாக நடப்பட்ட மரங்களும் வளர்ந்து, இந்த இடம் மேலும் அழகு மிளிரும். 
மலை மேல் காசி விஸ்வ நாதர் கோவில் 650 படிகள் ஏறிப் பார்க்க வேண்டும். முன்பு போய் இருக்கிறோம்.

எங்கள் வாகனத்தை எடுக்கப் போன இடத்தில்  ஒருவர் குழந்தைகளுக்குத் தன் கால்களை கவனிக்கும்படி சொல்லிக் கொண்டு இருந்தார்.  இது என்ன விளையாட்டு என்று நினைத்து கண்களைச் சுழலவிட்டுச் சுற்றுப்புறத்தைப்பார்த்தேன். குழந்தைகள் கையில் கம்புகளுடன் இருந்தார்கள். ஓ! சிலம்புப் பயிற்சியா என்று நினைத்துக் கொண்டேன், நாம் தான் எத்தனை சினிமாவில் இந்தச் சண்டையைப் பார்த்து இருப்போம், நம் பழைய கலை இது அல்லவா? விழா ஊர்வலங்களின் முன்  சிலம்பாட்டம் செய்துகொண்டு போவதையும் பார்த்து இருக்கிறோம்.

கம்பு வைத்து பயிற்சி செய்யும் முன் கால் வைத்து கொள்ளும்  முறையை சொல்லித் தருகிறார்.
ஆண், பெண் குழந்தைகள் சிலம்புப் பயிற்சி செய்கிறார்கள்.
சிலம்பு கற்றுக் கொள்ள நல்ல இடம்
ஆட்டம் முடியும் நேரம்
குருவிற்கு நன்றி சொல்கிறார்கள்.

சிலம்பம் ஒரு தற்காப்புக் கலை.   அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக  சிலம்பத்தைச் சொல்கிறார். இந்த விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் சொல்வார்கள் கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் கலை.  இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறுமாதம்  வேண்டுமாம். திருவிழா, கோவில்விழாக்கள், ஊர்வலங்களில்  சிலம்பாட்டம்  இடம்பெறுகிறது.  ஆண், பெண் இருவருமே கற்றுக் கொள்கிறார்கள். இக் கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்  சிறந்து விளங்குகிறது.
"கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை"

- நாட்டுபுறப்பாடலில் வரும் கும்மிப் பாடல்.

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினார்  என்று இந்த கும்மிப் பாடல் சொல்கிறது.

வாதம், பித்தம், கபம் நீக்கும் என்று பழைய "பதார்த்த குண சிந்தாமணி நூலில் சொல்லப்படுகிறது. அகத்தியர் முதலில் சிலம்பம் கற்ற பின்தான் யோகம், மருத்துவம் போன்ற கலைகளைக் கற்றார் என்றும் சொல்கிறது. 
சிலம்பாட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும், கம்பு எடுத்துச் சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி , நரம்பும் , தசைகளும் இயக்கப்பட்டுகிறது. (இந்த குறிப்புகள் விக்கி பீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். விக்கிபீடியாவிற்கு நன்றி.)

இப்போது உள்ள காலக்கட்டத்திற்கு பெண் குழந்தைகளுக்கு இந்த தற்காப்புக் கலை அவசியம் என்று தோன்றுகிறது.

இந்த இடம் அருமையான இடம்.  நல்ல காற்றோட்டம்.  உள்ள இடத்தில் காலை நேரப் பயிற்சி அந்தக் குழந்தைகளுக்கு உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்கள்,  பயிற்சி செய்வதை மலர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது," மழைத்தூறல் போடுது சார்! கேக் வெட்டிடுவோம் !"என்று ஒரு சிறுவன் குரல் கொடுத்தார்.

சிலம்பு கற்றுக் கொடுக்கும் வாத்தியாருக்குத் தான் பிறந்த நாள்.
இந்த மாஸ்டர் பேரு பாலா. அவருக்குத்தான்  அவர் நண்பர்களும் அவரிடம் கற்கும் மாணவ மாணவிகளும்  இந்த விழாவை நடத்தினர். அதில் பங்கு கொண்டு பாலாவை வாழ்த்தினோம் , நான் அவரிடம் கேட்டுப் படம் எடுத்துக் கொண்டேன்.  எளிமையாக மெழுவர்த்தி அது இது என்று இல்லாமல் வானம் பன்னீர் தூறல் போட, பைக் மேல் வைத்து கேக் வெட்டப்பட்டது, பிறந்த நாள் பாடலுடன். எல்லோருக்கும் கையில் தான் கேக் துண்டங்கள் கொடுக்கப்பட்டது.  எனக்கும் கொடுத்தார்கள், ஞாயிறு விரதம் என்பதால்  வேண்டாம் என்று சொல்லி அவர்களை வருத்தப்பட வைக்காமல் கையில் வாங்கிக் கொண்டு அதை மறுநாள் சாப்பிட்டேன்.  கேக்  வைத்து இருக்கும் படத்தைச் சிறுபையன் எடுத்தார். "நான் எடுக்கிறேன் அக்கா" என்றார் உச்சி குளிர்ந்து விட்டது. இப்போது  'அம்மா!', 'பாட்டி!' என்று சில குழந்தைகள் என்னை அழைக்கும். இந்தச் சிறுவன் 'அக்கா!' என்று சொல்லிப் படம் எடுத்தார்.


மகிழ்ச்சியால் பூரிக்கிறது முகம் ,இல்லே!
விழா  முடிந்தவுடன் அந்தத் திடலில் உள்ள காக்கும் தெய்வம்  கருப்பண்ணசாமியை வணங்கினோம்.   

இருளப்பசாமி, சீலைக்காரி அம்மன், ஐயனார் சாமி


சப்த கன்னியர் இருக்கிறார்கள்.

ஆட்டுக்கல் 

                       பொங்கல் வைத்து வழிபட அடுப்புக் கற்கள்

இந்த சாமிகளைக் குலதெய்வமாய்க் கும்பிடும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட அருமையான இடம்.  கிராம தெய்வங்களின் இருப்பிடம் அழகிய இடங்கள் தான்.

                                                   வாழ்க வளமுடன்!
                                                        ----------------------


47 கருத்துகள்:

 1. எங்க வீட்டு மாமாவுக்கு நல்லாவே சிலம்பாட்டம் தெரியும். திருவிழாக்களில் சுத்தி இருக்கார். கல்யாணமாகி நான் கம்பு சுத்த ஆரம்பிச்சபின் அவர் சிலம்பம் சுத்துவதை நிறுத்திட்டார்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
  உங்க மாமாவின் சிலம்பாட்டம் தொடரவில்லையா?
  உங்கள் கம்பு வீச்சு முன் அவர் சிலம்பாட்டம் எடுபடவில்லையா?
  என்னம்மா இப்படி செய்து விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 3. சென்ற பதிவில் பார்த்த இடங்களுக்கும் இந்த இடங்களுக்கும் எவ்வளவு வேறுபாடு.. பசுமை கண்நிறையக் காணக் கிடைக்கிறது இங்கே..

  பதிலளிநீக்கு
 4. விசாலமான. சுத்தமான பூங்கா... அந்த இடம் எவ்வளவு அமைதியாக இருக்கும் என்பதற்கு அந்த ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நாலுகால் செல்லம் சாட்சி!

  பதிலளிநீக்கு
 5. பாறையின் மேல் காசி விஸ்வநாதர் கோவில் உச்சி தெரிவது கவர்ச்சி.
  மொட்டைப்பாறை பயமுறுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 6. குருவிற்கு நன்றி சொல்லும் போஸ் கவர்கிறது. உற்சாகமான சிறுவர்கள். நல்ல குரு.

  பதிலளிநீக்கு
 7. // "நான் எடுக்கிறேன் அக்கா" என்றார் உச்சி குளிர்ந்து விட்டது. //

  சிரித்து விட்டேன் அக்கா... மதுரைக்காரங்களா சும்மாவா?

  பதிலளிநீக்கு
 8. சப்த கன்னியரும், காவல் தெய்வமும் எங்கள் குலதெய்வம் கோவிலிலும் உண்டு. ஆனால் அவருக்கு வேறு பெயர்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்க வளமுடன் என்று நீங்கள் தொடங்கி வைத்திருப்பது டிக் மார்க் போட்டு கமெண்ட்டை பாக்ஸுக்கு வரவழைக்க என்று நினைக்கிறேன். நீங்கள் கமெண்ட்டே போடாமல் டிக் மார்க் மட்டும் போட்டால்கூட மெயில் பாக்ஸுக்கு வரும்!

  பதிலளிநீக்கு
 10. சப்த கன்னியர் இருக்கும் கோயில் எனில் மிகப் பழமையான கோயில் எனத் தெரிகிறது. அதே போல் ஜேஷ்டா தேவி இருந்தாலும் பழமையான கோயில் என்பார்கள். மிக அருமையான பல விஷயங்களை அறிந்து கொள்ள வைக்கும் சுற்றுப் பயணம். இத்தகைய சுற்றுலாக்களால் இளைஞர்கள் மனம் பண்பட்டு வரும். அமைப்பு நிர்வாகிகள் பயனுள்ள இந்தச் சுற்றுலாவைத் தொடர்ந்து நடத்துவது குறித்து மனம் மகிழ்கிறது. உங்களால் நாங்களும் பயன் பெறுகிறோம். அனைத்துப் படங்களும் அருமை. பிறந்த நாள் கொண்டாடிய ஆசானுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. அழகிய படங்கள் சகோ விடயங்களை சொன்னவிதம் அழகு.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் அருமை...

  சிலம்பாட்டம் : சிறு வயதில் பத்து பாடங்கள் கற்றுக் கொண்ட ஞாபகம் வந்தது அம்மா...

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  //சென்ற பதிவில் பார்த்த இடங்களுக்கும் இந்த இடங்களுக்கும் எவ்வளவு வேறுபாடு.. பசுமை கண்நிறையக் காணக் கிடைக்கிறது இங்கே..//

  இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் தான்.
  அங்கு நிழல் அதனால் இவ்வளவு பசுமை கண்ணுக்கு தெரியவில்லை.
  இங்கு வெயில் இருப்பதால் பசுமை பளிச் என்று தெரியுது.

  //விசாலமான. சுத்தமான பூங்கா... அந்த இடம் எவ்வளவு அமைதியாக இருக்கும் என்பதற்கு அந்த ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நாலுகால் செல்லம் சாட்சி!//

  சரியாக சொன்னீர்கள் ஸ்ரீராம். அமைதியான இடம், கூட்டமாய்தான் இங்கு போக வேண்டும். நிழலும், காற்றும் இருப்பதால் செல்லம் நல்லா தூங்குது.

  பதிலளிநீக்கு
 14. //பாறையின் மேல் காசி விஸ்வநாதர் கோவில் உச்சி தெரிவது கவர்ச்சி.
  மொட்டைப்பாறை பயமுறுத்துகிறது.//

  பயமுறுத்துகிறதா ஸ்ரீராம் ? பயப்பட வேண்டாம் படிகள் இருக்கிறது ஏறிச்செல்ல.

  முன்பு படி இல்லாத போது என் கணவரும், என் தம்பியும் மலை மேலே சென்று சாமி தரிசனம் செய்தார்களாம். விரைவில் சென்று விட்டார்களாம், (1974ல் ) நான் என் சகோதரி மற்றும் உறவினர்களுடன் படி கட்டிய பின் ஒரு முறை ஏறி போய் வந்தேன். பிரதோஷம் அன்று கூட்டம் இருக்கும் பயமாக இருக்காது என்று போனோம்.
  மேலே சுனை இருக்கும். அழகான இடம்.

  பதிலளிநீக்கு
 15. //குருவிற்கு நன்றி சொல்லும் போஸ் கவர்கிறது. உற்சாகமான சிறுவர்கள். நல்ல குரு.//

  ஆம் ஸ்ரீராம், உற்சாகமான சிறுவர்கள் தான். குரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார்.

  //சப்த கன்னியரும், காவல் தெய்வமும் எங்கள் குலதெய்வம் கோவிலிலும் உண்டு. ஆனால் அவருக்கு வேறு பெயர்.//

  ஆமாம், ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு காவல் தெய்வம் இருக்கும், சில இடங்க்களில் மாடசாமி, அக்னி வீரபத்திரர். இருப்பார்.


  பதிலளிநீக்கு
 16. //வாழ்க வளமுடன் என்று நீங்கள் தொடங்கி வைத்திருப்பது டிக் மார்க் போட்டு கமெண்ட்டை பாக்ஸுக்கு வரவழைக்க என்று நினைக்கிறேன். நீங்கள் கமெண்ட்டே போடாமல் டிக் மார்க் மட்டும் போட்டால்கூட மெயில் பாக்ஸுக்கு வரும்!//

  ஆமாம் சரியாக் சொன்னீர்கள் ஸ்ரீராம். அதற்குதான் போட்டேன். முதலில் இப்படி ஆரம்பித்தேன். இப்போது அதை வழக்கப்படுத்தி விட்டேன்.உங்களை எல்லாம் வரவேற்க முன்பே வாழ்க வளமுடன் சரியா?.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. நானும் கமென்டே போடாமல் "டிக்" செய்கிறேன் ஶ்ரீராம் சொன்னதுக்கு அப்புறம். ஆனால் கமென்டை வெளியிட்டால் தான் மெயில் பாக்ஸுக்கு வருது! அது வரை வருவதில்லை! :(((( எப்போவும் போல் மாடரேஷனில் தான் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

  //சப்த கன்னியர் இருக்கும் கோயில் எனில் மிகப் பழமையான கோயில் எனத் தெரிகிறது. அதே போல் ஜேஷ்டா தேவி இருந்தாலும் பழமையான கோயில் என்பார்கள்.//

  ஆமாம், பழைமையான கோவில்தான்.

  //மிக அருமையான பல விஷயங்களை அறிந்து கொள்ள வைக்கும் சுற்றுப் பயணம். இத்தகைய சுற்றுலாக்களால் இளைஞர்கள் மனம் பண்பட்டு வரும். அமைப்பு நிர்வாகிகள் பயனுள்ள இந்தச் சுற்றுலாவைத் தொடர்ந்து நடத்துவது குறித்து மனம் மகிழ்கிறது.//

  ஆமாம், இந்த பயணத்தால் பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். பசுமை நடையில் உள்ள இளைஞர்கள் பண்பட்ட மனதுடன் இருக்கிரார்கள் என்பது உண்மை.
  சிலம்பு கற்று தரும் ஆசானுக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி. அவர் பணியில் மேலும் சிறப்படைய வாழ்த்து உதவும்.

  உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
  பதிலளிநீக்கு
 19. / "நான் எடுக்கிறேன் அக்கா" என்றார் உச்சி குளிர்ந்து விட்டது. //

  //சிரித்து விட்டேன் அக்கா... மதுரைக்காரங்களா சும்மாவா?//

  ஆமாம் ஸ்ரீராம், மதுரைக்காரார்கள் பாசம் மிகுந்தவர்கள்தான்.
  கடைக்கு போனால் என் அண்ணன் மகன் எல்லோரையும் அண்ணே அதை கொடுங்கள், இதை கொடுங்கள் அண்ணே என்பான்.
  அவன் ஒரு முறை மாயவரம் வந்த போது கடைக்கு போய் அண்ணே! என்று கூப்பிட்டு இருக்கிறான் மதுரைக்கார பையனா நீ? என்று கடைக்காரர் அடையாளம் கண்டு பிடித்து விட்டார்.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

  //அழகிய படங்கள் சகோ விடயங்களை சொன்னவிதம் அழகு.//

  உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

  //சிலம்பாட்டம் : சிறு வயதில் பத்து பாடங்கள் கற்றுக் கொண்ட ஞாபகம் வந்தது அம்மா..//

  ஆஹா! அதற்கு பின் தொடரவில்லையா பயிற்சியை?

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  .

  பதிலளிநீக்கு
 22. அந்தச் சிவப்புப் பூக்கள் வாகைப்பூக்கள் எல்லோ அழகு. சிறுவர் பூங்கா என்றாலே ஒருவித அழகுதான்.. புதிதாக வளரும் மரங்கள் பச்சைப்ப்சேலென இருக்கு.

  பதிலளிநீக்கு
 23. மலை அருகே மைதானம் மைதானத்தில் விளையாட்டு கம்புப் பயிற்சி நல்லா இருக்கு.

  //நாட்டுபுறப்பாடலில் வரும் கும்மிப் பாடல்.
  //
  ஓ நன்றாக இருக்கு.

  //கம்பு எடுத்துச் சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி , நரம்பும் , தசைகளும் இயக்கப்பட்டுகிறது. (இந்த குறிப்புகள் விக்கி பீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். ///
  ஓ.. இதை வைத்துத்தான் நாம் சாப்பிட்ம் கம்பு அரிசியும் உடலுக்கு நல்லதென்கிறார்களோ.. பொதுவில் கம்பைத்தொட்டாலே நன்மைதான் போலும்.

  பதிலளிநீக்கு
 24. //இப்போது உள்ள காலக்கட்டத்திற்கு பெண் குழந்தைகளுக்கு இந்த தற்காப்புக் கலை அவசியம் என்று தோன்றுகிறது//

  தற்காப்புக் கலை தெரிந்திருந்தாலும்.. செண்டிமெண்டாக அணுகி கெட்ட வேலை செய்வோரை, எல்லாப் பெண்களாலும் அடையாளம் காண முடிவதில்லையே கோமதி அக்கா.

  //இப்போது 'அம்மா!', 'பாட்டி!' என்று சில குழந்தைகள் என்னை அழைக்கும். இந்தச் சிறுவன் 'அக்கா!' என்று சொல்லிப் படம் எடுத்தார்.//
  பார்த்தீங்களோ நான் சொன்னேனே நீங்க ரொம்ப யங்காகவே இருக்கிறீங்க....

  இந்தப் படத்தில் கட்டியியிருக்கும் சாஅறி கலர் ரொம்ப அழகு, போனதடவை போட்ட படத்தை விட இப்படத்தில அழகா தெரியுது கலர்.

  பதிலளிநீக்கு
 25. கறுப்பண்ணசாமி அழகு, நானும் வணங்கிக் கொண்டேன் உங்கள் புண்ணியத்தினால்.. அழகிய சுற்றுலா...

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

  //அந்தச் சிவப்புப் பூக்கள் வாகைப்பூக்கள் எல்லோ அழகு. சிறுவர் பூங்கா என்றாலே ஒருவித அழகுதான்.. புதிதாக வளரும் மரங்கள் பச்சைப்ப்சேலென இருக்கு.//

  இங்கு நல்ல வெளிச்சம் அதனால் படங்கள் அழகாய் தெரியுது.

  பதிலளிநீக்கு
 27. //மலை அருகே மைதானம் மைதானத்தில் விளையாட்டு கம்புப் பயிற்சி நல்லா இருக்கு.//
  இப்போது பள்ளிகளில் கூட விளையாடும் மைதானம் பெரிதாக இல்லை.
  இங்கு பெரிதாக நல்ல காற்றோட்டமாய் வசதியாக இருக்கிறது.

  //கம்பு எடுத்துச் சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி , நரம்பும் , தசைகளும் இயக்கப்பட்டுகிறது. (இந்த குறிப்புகள் விக்கி பீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். ///
  ஓ.. இதை வைத்துத்தான் நாம் சாப்பிட்ம் கம்பு அரிசியும் உடலுக்கு நல்லதென்கிறார்களோ.. பொதுவில் கம்பைத்தொட்டாலே நன்மைதான் போலும்.//

  உடலுக்கு கம்பு சுழற்றுவதும், கம்பு சாப்பிடுவதும் நல்லது தான்.

  பதிலளிநீக்கு
 28. //தற்காப்புக் கலை தெரிந்திருந்தாலும்.. செண்டிமெண்டாக அணுகி கெட்ட வேலை செய்வோரை, எல்லாப் பெண்களாலும் அடையாளம் காண முடிவதில்லையே கோமதி அக்கா.//

  நீங்கள் சொல்வது உண்மைதான்.

  //யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம்//
  இந்த பாடல்தான் நினைவுக்கு வருது.
  தெரிந்த தெரியாத இடங்களிலும் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லைதான்.


  //பார்த்தீங்களோ நான் சொன்னேனே நீங்க ரொம்ப யங்காகவே இருக்கிறீங்க...//
  ஆஹா அதிரா! தலைஎல்லாம் நரைத்து விட்டது.

  இந்தப் படத்தில் கட்டியியிருக்கும் சாஅறி கலர் ரொம்ப அழகு, போனதடவை போட்ட படத்தை விட இப்படத்தில அழகா தெரியுது கலர்.

  முதலில் எடுத்த இடம் வெளிச்சம் இல்லை, இங்கு நல்ல வெளிச்சம் அதனால் சாரி கலர் நன்றாக தெரிகிறது.  பதிலளிநீக்கு
 29. //கறுப்பண்ணசாமி அழகு, நானும் வணங்கிக் கொண்டேன் உங்கள் புண்ணியத்தினால்.. அழகிய சுற்றுலா...//

  அவர் எல்லோருக்கும் நல்லதே அருளட்டும்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

  பதிலளிநீக்கு
 30. சிலம்பம் கற்றுக்கொண்டு, பயிற்சி செய்யும் பொழுது, கண் பார்வை குறைபாடுகள் ஏற்பட்டதாம். நல்ல கலை.
  //கேக் வைத்து இருக்கும் படத்தைச் சிறுபையன் எடுத்தார். "நான் எடுக்கிறேன் அக்கா" என்றார் உச்சி குளிர்ந்து விட்டது. இப்போது 'அம்மா!', 'பாட்டி!' என்று சில குழந்தைகள் என்னை அழைக்கும். இந்தச் சிறுவன் 'அக்கா!' என்று சொல்லிப் படம் எடுத்தார்.//
  ஹா ஹா! எனக்கும் இதே உணர்வு தோன்றும்.
  படங்கள் தெளிவு.

  பதிலளிநீக்கு
 31. படங்கள் எல்லாம் அழகோ அழகு .அந்த சிவப்பு மலர்கள் மரங்கள் எங்க ஸ்கூல் முழுக்க இருந்தது .இப்போ எப்படி இருக்கோ தெரில .

  // / "நான் எடுக்கிறேன் அக்கா" என்றார் உச்சி குளிர்ந்து விட்டது. //

  ஹாஹ்ஹா :) எனக்கு இங்கே பிரச்சினை இல்லவேயில்லை வெள்ளைகாரப்பிள்ளையாகி பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க :)
  ஸ்ரீலங்கன் தமிழர்கள் மட்டுமே பிள்ளைங்ககிட்ட அங்கே பாருங்க ஆண்டிக்கு விஷ் பண்ணுங்க தேங்க்ஸ் சொல்லுங்கன்னு முதலிலேயே சொல்விடுவாங்க :)

  பதிலளிநீக்கு
 32. அந்த யானை சறுக்குமரம் ஹெல்த் safety இல்லாதமாதிரி இருக்கு அதான் முள்ளால் தடுப்பு போட்டிருக்காங்க

  பதிலளிநீக்கு
 33. // அங்கே பாருங்க ஆண்டிக்கு விஷ் பண்ணுங்க தேங்க்ஸ் சொல்லுங்கன்னு முதலிலேயே சொல்விடுவாங்க //

  ஹா.. ஹா.. ஹா.. ஏஞ்சல் உங்களுக்கு ஒன்று புரியவில்லையா? இங்கே தேங்க்ஸ் சொன்னது இல்லை சந்தோஷம்... அக்கா என்று அழைக்கப்பட்டதுதான் சந்தோஷம்!

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.

  //சிலம்பம் கற்றுக்கொண்டு, பயிற்சி செய்யும் பொழுது, கண் பார்வை குறைபாடுகள் ஏற்பட்டதாம். நல்ல கலை.//

  ஓ! நல்ல தகவல். உடல் நலம் காக்கும் பயிற்சி என்று தெரிகிறது.

  //ஹா ஹா! எனக்கும் இதே உணர்வு தோன்றும்.
  படங்கள் தெளிவு.//

  உங்களுக்கும் இந்த அனுபவ உணர்வு உண்டா? மகிழ்ச்சி.
  உங்கள் கருத்துக்கு நன்றி பானு.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

  //.அந்த சிவப்பு மலர்கள் மரங்கள் எங்க ஸ்கூல் முழுக்க இருந்தது .இப்போ எப்படி இருக்கோ தெரில .//

  நான் கோவையில் படிக்கும் போது எங்கள் பள்ளியிலும் நிறைய இருந்தது.
  கோவையில் தான் முதன் முதல் இந்த மரத்தைப்பார்த்தேன்.
  இப்போது எங்கள் குடியிருப்பு வளாகத்திலும் இருக்கிறது.


  //ஹாஹ்ஹா :) எனக்கு இங்கே பிரச்சினை இல்லவேயில்லை வெள்ளைகாரப்பிள்ளையாகி பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க :)
  ஸ்ரீலங்கன் தமிழர்கள் மட்டுமே பிள்ளைங்ககிட்ட அங்கே பாருங்க ஆண்டிக்கு விஷ் பண்ணுங்க தேங்க்ஸ் சொல்லுங்கன்னு முதலிலேயே சொல்விடுவாங்க :)//

  பேர் சொல்லி கூப்பிட்டால் இன்னும் நெருக்கம் அதிகம்தான்.
  எங்கள் மன்றத்தில் எங்களை வயதில் மூத்தவர்களையும் பேர் சொல்லி வாங்க , போங்க என்று கூப்பிடுவோம். என்னப்பா, வாப்பா, போப்பாதான். அதுவும் நன்றாக இருக்கும் பழக.

  //அந்த யானை சறுக்குமரம் ஹெல்த் safety இல்லாதமாதிரி இருக்கு அதான் முள்ளால் தடுப்பு போட்டிருக்காங்க//

  ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  //ஹா.. ஹா.. ஹா.. ஏஞ்சல் உங்களுக்கு ஒன்று புரியவில்லையா? இங்கே தேங்க்ஸ் சொன்னது இல்லை சந்தோஷம்... அக்கா என்று அழைக்கப்பட்டதுதான் சந்தோஷம்!//

  ஸ்ரீராம், எதனால் சந்தோஷம் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
  என்னை எப்படி அழைத்து பேசினாலும் சந்தோஷம் தான்.
  மதுரை சிறுவனின் அழைப்பைக் குறிப்பிட விரும்பினேன்.

  மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. கற்கவேண்டிய கலைகளுள் ஒன்று சிலம்பாட்டம்.

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
  குழந்தைகள் கற்கவேண்டிய கலைகளில் ஒன்றுதான் சிலம்பாட்டம்.
  உடல், மனம், உறுதிபடும்.

  பதிலளிநீக்கு
 39. அழகிய படங்கள்..

  மெழுகுவர்த்தி இல்லாமல் வானம் பூ தூவ நடைபெற்ற விழா ..மிக சிறப்பு


  மிக ரசித்தேன்..

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.


  //மெழுகுவர்த்தி இல்லாமல் வானம் பூ தூவ நடைபெற்ற விழா ..மிக சிறப்பு


  மிக ரசித்தேன்..//

  பதிவை ரசித்தமைக்கு நன்றி அனு.

  பதிலளிநீக்கு
 41. வண்ணப் படங்களுடன் பதிவு , அருமை...

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் கவிதைகள், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 43. பூங்கா செம அழகு....ஆரம்பமே பசுமையாக இருக்கிறது அந்தச் சிவப்பு பூக்கள் மரம் என்று அசத்தல்...என்ன அழகு கண்ணுக்குக் குளிச்சியா இருக்கு...

  சிலம்பாட்டம் நல்ல ஆட்டம். அருமையான தற்காப்புக் கலை. சிலம்பு, களரி யிலிருந்துதான் கராத்தே டெவலப் ஆச்சு என்று சொல்லுவார்கள். பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். என்ன என்றால் சரியான சமயத்தில் அதைப் பயன்படுத்தும் அந்த நொடிப் பொழுது வேண்டிய காமன்சென்ஸ் அப்போது வேலை செய்ய வேண்டுமே அக்கா...

  மலை உச்சியில் கோயில் செம அழகு!!!

  பார் ரொம்பவே அழகா இருக்கே அதுவும் சுத்தமாக!! யாரும்வ் அருவதில்லையோ அபப்டித்தான் தெரிகிறது..

  "நான் எடுக்கிறேன் அக்கா" என்றார் உச்சி குளிர்ந்து விட்டது. இப்போது 'அம்மா!', 'பாட்டி!' என்று சில குழந்தைகள் என்னை அழைக்கும். இந்தச் சிறுவன் 'அக்கா!' என்று சொல்லிப் படம் எடுத்தார்.//

  ஆஹா அக்கா நிங்க யங்கோ யங்குதான்!!! சாரியும் அழகா இருக்கு....நீங்களும் அழகுதான் அக்கா..!! ரொம்பவே! ஹையோ இந்த வரிகள் பாட்டி அதிரா கண்களில் பட்டிருக்க வேண்டுமே!!! வைரவா!!! ஹா ஹா ஹா ஹா

  மிகவும் ரசித்தோம் அக்கா செம பயணம்

  கீதா  //

  பதிலளிநீக்கு
 44. அருமையான படங்கள் இன்னும் பசுமை இந்தப் பதிவில். அங்கெல்லாம் கூட பார்க் இருக்கிறதே. மலைக்கோயில் கொஞ்சமே தெரிந்தாலும் அழகாக இருக்கிறது.

  ஓ சிலம்பம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்குப் பிறந்த நாளா! மாணவர்களின் அன்பு உண்மையாகவே நானும் நிறைய அனுபவித்திருக்கிறேன். இத்தனை நாட்கள் பள்ளியில் என்றால் பணி ஓய்வு பெற்றதும் உடனே இப்போது கல்லூரியில். எனவே அந்த ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்கியாக இருந்த்ருக்கும்.

  உங்கள் பயணத்தை நன்றாக விவரமாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி. எனவே உங்களுடனேயே பயணித்து இடங்களைக் கண்டோம். மிக்க நன்றி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 45. வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.

  //அங்கெல்லாம் கூட பார்க் இருக்கிறதே. மலைக்கோயில் கொஞ்சமே தெரிந்தாலும் அழகாக இருக்கிறது. //

  கிரிவல பதையில் இருப்பதால் பார்க் இருக்கிறது.

  //ஓ சிலம்பம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்குப் பிறந்த நாளா! மாணவர்களின் அன்பு உண்மையாகவே நானும் நிறைய அனுபவித்திருக்கிறேன். இத்தனை நாட்கள் பள்ளியில் என்றால் பணி ஓய்வு பெற்றதும் உடனே இப்போது கல்லூரியில். எனவே அந்த ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்கியாக இருந்த்ருக்கும்.//

  கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பெருமை இல்லையா?
  ஆசிரியராக இருக்கும் நீங்கள் நிறைய இது போல் அனுபவித்து இருப்பீர்கள்.
  ஆசிரியராக இருந்து மாணவர்களுடன் இருந்த காலம் என் கணவருக்கு பொற்காலம்.
  அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருபார்கள்.

  தினம் ஒரு நிகழ்வு மாணவர்களைப் பற்றி கண்கள் மகிழ்ச்சியில் மின்ன கதைகள் சொல்வார்கள். பணி ஓய்வு பெற்றபின்னும் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்கள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

  //பூங்கா செம அழகு....ஆரம்பமே பசுமையாக இருக்கிறது அந்தச் சிவப்பு பூக்கள் மரம் என்று அசத்தல்...என்ன அழகு கண்ணுக்குக் குளிச்சியா இருக்கு...//

  ஆமாம் , பசுமை என்றுமே கண்ணுக்குக் குளிர்ச்சிதான்.

  //சரியான சமயத்தில் அதைப் பயன்படுத்தும் அந்த நொடிப் பொழுது வேண்டிய காமன்சென்ஸ் அப்போது வேலை செய்ய வேண்டுமே அக்கா...//

  செய்யவேண்டும் தான், கற்பிப்போம் அப்புறம் இறைவன் விட்ட வழி.
  நாட்டில் நடப்பது பெண் குழந்தை வைத்து இருப்பவர்களுக்கு பயத்தை தருகிறது.

  //பார் ரொம்பவே அழகா இருக்கே அதுவும் சுத்தமாக!! யாரும்வ் அருவதில்லையோ அபப்டித்தான் தெரிகிறது..//

  யாரும் வராமல் பூட்டி இருந்தால் பாழ் பட்டு கிடக்குமே!
  மாலை திறந்து பின் மூடுவார்கள் என்று நினைக்கிறேன்

  //ஆஹா அக்கா நிங்க யங்கோ யங்குதான்!!! சாரியும் அழகா இருக்கு....நீங்களும் அழகுதான் அக்கா..!! ரொம்பவே! ஹையோ இந்த வரிகள் பாட்டி அதிரா கண்களில் பட்டிருக்க வேண்டுமே!!! வைரவா!!! ஹா ஹா ஹா ஹா//

  கீதா, அதிரா கண்ணில் பட்டு அவரும் உங்களைப் போல் என்னை, என் சேலையை பாராட்டி விட்டார்.

  உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி நன்றி.


  பதிலளிநீக்கு