திங்கள், 2 ஜூலை, 2018

சொல்லுங்கள் பார்ப்போம்

Image may contain: indoor



No automatic alt text available.

இது என்ன பெட்டி என்று தெரிந்தவர் சொல்லுங்கள்.
விடை நாளை

மந்திரப் பெட்டியா?
தந்திரப் பெட்டியா?
வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு.

வாழ்க வளமுடன்.

49 கருத்துகள்:

  1. இது முன்பு எல்லோரது வீட்டிலும் குறிப்பாக செல்வந்தர் வீடுகளில் இருக்கும் பணப்பெட்டி. இதனுள் வீட்டுப் பத்திரங்கள் மற்றும் முக்கிய கடிதங்கள் வைத்து இருப்பார்கள்.

    இதனுள் ரகசிய அறைகளும் உண்டு இதைத் திறப்பது சிறுவர்கள் அறியாதவாறு இருக்கும். அதை டெக்னிக்கலாக தட்டினால் திறந்து விடும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    நானும் பார்த்து இருக்கிறேன் செல்வந்தர் வீட்டு பணப்பெட்டியை.
    அவர்கள் புது, வீடு, புது வியாபாரம் ஆரம்பித்தால் அதை திறந்து வைத்து இருப்பார்கள்.
    அந்த விழாவிற்கு போகிறவர்கள் லாபம் என்று வாழ்த்தி பணம் வைப்பார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி. விடை நாளை.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் தாத்தா செய்து வைத்தது மூன்று பெட்டிகள் இருந்தன... நானும் திறக்க பழகிக் கொண்டேன்.

    அதை பாதுகாக்காமல் கௌரவக் குறைச்சலாக கருதிய எங்கள் சந்ததியினர் செல்வங்களையும் இழந்து விட்டது உண்மை.

    பதிலளிநீக்கு
  5. தாத்தாவின் பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்.
    எதுவும் கவனிப்பும், அக்கறையும் இருக்கும் போதுதான் நம்மிடம் இருக்கும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி தேவகோட்டை ஜி.

    பதிலளிநீக்கு
  6. கள்ளிப்பெட்டி. புத்தகங்கள் போன்றவை வைக்க உதவியாக இருக்கும்.

    சில வீடுகளில் தானியங்களும், சில வீடுகளில் பாத்திரங்களும் வைத்துக் கொள்வார்கள்!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    இது போன்ற பெட்டிகள் நீங்கள் சொல்வது போல்
    பலவகைகளில் உதவும் தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இது ஏடுகள் வைக்கும் பெட்டி என்று நினைக்கிறேன். எங்கள் அப்பா பிறந்த ஊரில், நான் இதுபோல் ஒரு பெட்டியையும் அது நிறைய ஓலைச் சுவடிகளையும் பார்த்திருக்கிறேன். (வெறும் சுவடி இல்லை. அதன் மேல் கட்டையால் அட்டை போன்று கோர்த்திருப்பார்கள், மேலும் கீழும்). எங்க அப்பா வீட்டை விற்கும்போது அவையெல்லாம் தூரப்போட்டுவிட்டார்கள். எனக்கு மிகுந்த வருத்தம்.

    உங்கள் வீடுகளில் ஓதுவார்கள் இருந்திருப்பதால், இது தேவாரம், திருவாசகம் போன்ற ஓலைச்சுவடிகள் வைத்திருந்திருக்கும் பெட்டியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

    //எங்கள் அப்பா பிறந்த ஊரில், நான் இதுபோல் ஒரு பெட்டியையும் அது நிறைய ஓலைச் சுவடிகளையும் பார்த்திருக்கிறேன். (வெறும் சுவடி இல்லை. அதன் மேல் கட்டையால் அட்டை போன்று கோர்த்திருப்பார்கள், மேலும் கீழும்). எங்க அப்பா வீட்டை விற்கும்போது அவையெல்லாம் தூரப்போட்டுவிட்டார்கள். எனக்கு மிகுந்த வருத்தம்.//

    அப்பாவுக்கு எந்த ஊர்? நீங்கள் சொல்லும் ஓலைச்சுவடியை தஞ்சை சரஸ்வதி மஹாலில் பார்த்து இருக்கிறேன்.
    எதற்கு தூரப் போட வேண்டும் யாருக்காவது கொடுத்து இருக்கலாம். கேட்கவே வருத்தமாய் இருக்கிறது.

    //உங்கள் வீடுகளில் ஓதுவார்கள் இருந்திருப்பதால், இது தேவாரம், திருவாசகம் போன்ற ஓலைச்சுவடிகள் வைத்திருந்திருக்கும் பெட்டியாக இருந்திருக்கும்.//

    நாளை விடை தெரிந்து விடும் நெல்லை.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
    நாளை வாருங்கள் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஆவ்வ்வ்வ் கோமதி அக்கா.. இதுதான் “பெட்டகம்” எனச் சொல்லுவோம். எங்கள் ஊர் வீட்டில் இப்பவும் இருக்கு, ஆனா அது பென்னாம் பெரிசு.. அதை மூவ் பண்ணுவதாயின் பத்துப் பேரைக் கூட்டி வந்துதான் மூவ் பண்ணுவினம், அதன் மூடியைத்திறப்பதே பெரும் போராட்டம் முதிரை மரம் என நினைக்கிறேன் அவ்ளோ பலமானது. ஊர் வீட்டு அறைகள் பென்னாம் பெரியவை.. அதில் கால் பகுதியை இந்தப் பெட்டகம் பிடிச்சிருக்கு.

    உள்ளே 3,4 பிரிவுகளாக இருக்குதென நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. கோயில் திருவிழாக் காலங்களில் இப்பவும் அதில்தான் மாமா வாழைக்க்குலை மாம்பழம் இப்படி வாங்கிப் பழுக்க வைத்து எடுப்பார். நாம் கொடியேற்றத் தினங்களில் திருவிழாச் செய்வோம், அப்போ அபிசேகத்துக்காக வாங்கிக் கொடுப்பவற்றை இதனுள் வைத்தே எடுப்பது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  13. நான் சின்னனாக இருந்தபோது ஆன்ரியாட்கள் திறந்து விட்டுவிட்டு எனைத் தூக்கிப் பிடிப்பார்கள் நான் எட்டிப் பழம் எடுப்பேன்.. அவ்ளோ உயரம்...

    பதிலளிநீக்கு
  14. இப்போ அது வீட்டில் இடம் பிடிக்கிறது என, அம்மா சொல்றா கோயிலுக்குக் குடுத்திடலாம் என..ஆனா எப்படி அதனை தூக்கி ஏற்றிக் கோயிலுக்குக் கொண்டு போவது எனும் பிரச்சனை..

    பதிலளிநீக்கு
  15. எங்கள் வீட்டில் 2009 ம் வருடம் என் அப்பா சாகும் வரை இருந்தது . பிறகு என் அக்கா கைக்கு மாறியது. இப்பத்திய ஸ்டேட்டஸ் தெரியல. பழைய நினைவுகள் ,......

    பதிலளிநீக்கு
  16. எங்க வீட்டிலும் இருந்தது...ஆனா இப்போ இல்ல மா...

    பதிலளிநீக்கு
  17. பழைய காலத்து மர பெட்டி எங்க வீட்டிலும் ஊரில் இருக்கு நாங்க பச்சை பெயிண்ட் அடிச்சி வச்சிருந்தோம் .அதை தூக்க 10 பேராவது வேணும் .,எங்க வீட்டு பெட்டியில் மூடிவிட்டு மேலே துணி விரித்து காலை நீட்டி படுக்குமளவு பெரிசு ..
    இதை கள்ளிப்பெட்டி சாதிக்காய் பெட்டி நும் பாட்டி பேசும்போது சொல்வாங்க .பித்தளை செம்பு வெள்ளி பாத்திரங்களை வைக்க யூஸ் பண்ணுவாங்க அரிசியும் பார்த்த நினைவு இருக்கு

    பதிலளிநீக்கு
  18. அக்கா இப்போ பல் வலி சரியாகிடுச்சா ? ஒரு உப்பு நார்த்தங்கா துண்டை வலி இருக்கும் பகுதியில் வைங்க வலி குறையும்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொன்னது போலவே இலங்கை சகோதரி அவர்கள் இப்போது டென்மார்க்கில் இருக்கிறார்கள். கவிதாயினி அவர்கள் சொன்னது:=

    //Vetha Langathilakam பெட்டகம்..-- இது சிறிது. இது போல 3 பய்கு 10 நெல்லு மூட்டைகள் உள்ளே வைக்கலாம்.
    வருடம் முழுதும் அம்மா கிடாரத்தில் நெல்லு அவித்து
    பெரிய கதிர் பாயில் காய வைத்து
    கூலியாளர் வந்து குத்தி அரிசியாக்கித் தருவினம்.
    எங்கள் பிறந்த வீட்டில் இருந்தது.//

    நான் அவர்களுக்கு கொடுத்த பதில்.

    நீங்கள் சொல்வது பத்தாயம் என்று தஞ்சையில் சொல்வார்கள். நெல்லையில் நெற்குதிர் என்பர்.
    அது மிக பெரிதாக இருக்கும்.

    நீங்கள் சொல்வது போல் பத்து பேர் வேண்டும். இந்த பெட்டியை தூக்கவே எங்க்கள் வீட்டு ஆட்கள் 6, 7 பேர் தூக்கினோம். எங்கள் குடும்பத்தினர்களுக்கு அவ்வளவு பலம் இல்லை.
    பலம் பொருந்தியவர்கள் 4 பேர் போதும்.

    பதிலளிநீக்கு
  20. //நான் சின்னனாக இருந்தபோது ஆன்ரியாட்கள் திறந்து விட்டுவிட்டு எனைத் தூக்கிப் பிடிப்பார்கள் நான் எட்டிப் பழம் எடுப்பேன்.. அவ்ளோ உயரம்..//

    கோவில்களில், வயல் உள்ள வீடுகளில் இந்த பெட்டகம் என்ற குதிர் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் தனி தனியாக தானியம் போடலாம். மொத்தமாய் மொட்டை மாடியில் போட்ட நெல்லை அங்கு இருக்கும் ஓட்டை மூலம் கீழே இருக்கும் குதிருக்கு தள்ளலாம்.
    நீங்கள் சொல்வது போல் மிக உயரமாய் இருக்கும்.

    குதிருக்குள் இறங்கி சுத்தம் செய்வது மிகவும் கஷ்டம்.
    எளிமையான வீடுகளில் மண்ணில் குதிர் இருக்கும்.
    பாட்டியின் வீட்டு பழம் பானை பாட்டு கேட்டு இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  21. ..இப்போ அது வீட்டில் இடம் பிடிக்கிறது என, அம்மா சொல்றா கோயிலுக்குக் குடுத்திடலாம் என..ஆனா எப்படி அதனை தூக்கி ஏற்றிக் கோயிலுக்குக் கொண்டு போவது எனும் பிரச்சனை....//

    நமக்கு வேண்டாம் என்றால் அப்புறபடுத்துவது மிக கஷ்டம் தான்.

    அதன் அருமை தெரிந்தவர்களை எடுத்து செல்ல சொல்லலாம் அதிரா.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் அபயா அருணா, வாழ்க வளமுடன்.

    //எங்கள் வீட்டில் 2009 ம் வருடம் என் அப்பா சாகும் வரை இருந்தது . பிறகு என் அக்கா கைக்கு மாறியது. இப்பத்திய ஸ்டேட்டஸ் தெரியல. பழைய நினைவுகள் ,..//

    பழைய நினைவுகள் வந்து விட்டதா இந்த பதிவைப் படித்து?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் அனுராதாபிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கவீட்டிலும் இருந்ததா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

    பழைய காலத்து மர பெட்டி எங்க வீட்டிலும் ஊரில் இருக்கு நாங்க பச்சை பெயிண்ட் அடிச்சி வச்சிருந்தோம் .அதை தூக்க 10 பேராவது வேணும் .,எங்க வீட்டு பெட்டியில் மூடிவிட்டு மேலே துணி விரித்து காலை நீட்டி படுக்குமளவு பெரிசு //

    எங்கள் வீட்டிலும் சாதிக்காய் பெட்டி உண்டு. ஊர் ஊராக மாற்றல் ஆவாதால் அம்மா அந்த பெட்டி நிறைய வைத்து இருப்பார்கள்.நாங்க்களும் பச்சைபெயிண்ட் அடித்து வைத்து இருந்தோம். கடைசியில் மதுரைக்கு வந்த பின் அப்பா 50 வயதில் இறந்து விட்டதால் மாற்றல் இல்லை. ஒரே இடம். அதனால் பெண்களுக்கு கல்யாண சீர்வரிசை கொடுக்க பாத்திரபெட்டியாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள் அம்மா.

    உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.

    ஏஞ்சல், பல்வலி இப்போது குணம். இருந்தாலும் நாளை டாகடரிடம் போகலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் ஆடுது. வலியும் லேசாக இருக்கிறது.
    உங்கள் யோசனைக்கு நன்றி.





    பதிலளிநீக்கு
  25. //எங்க வீட்டு பெட்டியில் மூடிவிட்டு மேலே துணி விரித்து காலை நீட்டி படுக்குமளவு பெரிசு//

    அப்போ அதை திவானாக மாற்றலாமே! ஏஞ்சல்.

    உள்ளே போர்வை தலயணை, வைத்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  26. ஆமாம் அக்கா .தங்கச்சி சொன்னா .ஆனால் ஒரு கீறல் படாம செய்ய சொன்னேன் .
    பல்வலிக்கு மருத்துவரிடம் முதலில் செல்லுங்கள் ..

    பதிலளிநீக்கு
  27. இந்த அளவுக்குப் பெரிதாக இல்லாவிட்டாலும்
    சிறியதாக ஒரு சாதிக்காய் பெட்டி இருந்தது..

    அதனுள் தான் எங்கள் அப்பாயி அரிசி விற்ற பணத்தை வைத்திருப்பார்கள்..
    பெட்டியின் உள்ளே சிறு சிறு தடுப்பறைகள் இருக்கும்...

    எனது அத்தை (தந்தையின் அக்கா) - ஏழு வயதில் குளிர்ந்து போனார்கள்..
    அவர்கள் கட்டியிருந்த பாவாடை ஒன்று அந்தப் பெட்டியினுள் இருக்கும்...

    அந்தப் பாவாடை தனியொரு நறுமணத்துடன் இருக்கும்...

    நல்ல நாள் பெரிய நாட்களில் அந்தப் பாவாடை எடுக்கப்பட்டு
    சாமி கும்பிடும்போது வைக்கப்படும்...

    குடும்பத்துக்குள் வீசிய புயலில் அந்தப் பொருட்கள் போன இடம் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  28. //ஆமாம் அக்கா .தங்கச்சி சொன்னா .ஆனால் ஒரு கீறல் படாம செய்ய சொன்னேன் .
    பல்வலிக்கு மருத்துவரிடம் முதலில் செல்லுங்கள்//

    தங்கச்சியும் இந்த யோசனை சொன்னார்களா? மகிழ்ச்சி ஏஞ்சல்.

    நாளை எப்படியும் போய்விட வேண்டும் வலி அதிகம் இருந்தால் டாகடரிடம் போக வேண்டும் என்று நினைப்பேன் கொஞ்சம் சரியாகி விட்டால் வேண்டாம் என்ற நினைப்பு வந்துவிடும் எனக்கு.
    எனக்கு நானே உறுதி செய்து கொண்டு இருக்கிறேன் நாளை கண்டிப்பாய் போவேன் என்று.
    மீள் வருகைக்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

    //அதனுள் தான் எங்கள் அப்பாயி அரிசி விற்ற பணத்தை வைத்திருப்பார்கள்..
    பெட்டியின் உள்ளே சிறு சிறு தடுப்பறைகள் இருக்கும்...//

    ஓ ! அந்தக் காலத்து பத்திரமாய் பணத்தை வைக்கும் பெட்டியாக இருந்து இருக்கிறது.

    //எனது அத்தை (தந்தையின் அக்கா) - ஏழு வயதில் குளிர்ந்து போனார்கள்..
    அவர்கள் கட்டியிருந்த பாவாடை ஒன்று அந்தப் பெட்டியினுள் இருக்கும்.//

    வருடா வருடம் ஆடி மாதம் கும்பிடுவார்களா?

    //அந்தப் பாவாடை தனியொரு நறுமணத்துடன் இருக்கும்...//

    சாம்பிராணி, ஊதுபத்தி காட்டி மூடி வைப்பது நறுமணத்துடன் இருக்கும்தான்.

    //நல்ல நாள் பெரிய நாட்களில் அந்தப் பாவாடை எடுக்கப்பட்டு
    சாமி கும்பிடும்போது வைக்கப்படும்...

    குடும்பத்துக்குள் வீசிய புயலில் அந்தப் பொருட்கள் போன இடம் தெரியவில்லை...//

    அடடா ! இப்போது யார் கும்பிடுகிறார்கள் அந்த அத்தையை?

    உங்கள் பகிர்வுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  30. ///நீங்கள் சொல்வது பத்தாயம் என்று தஞ்சையில் சொல்வார்கள். நெல்லையில் நெற்குதிர் என்பர்.
    அது மிக பெரிதாக இருக்கும்///

    ஹையோ கோமதி அக்கா வெடி சோடீஈஈஈஈஈஈஈ.. நான் தான் பிழையாச் சொல்லிட்டேன்ன் நீங்க சொன்னதும்தான் நினைவுக்கு வந்துது நாங்களும் “பத்தாயம்” எனத்தான் சொல்லுவோம்ம், ஆனா இப்போ பல வருடமா கண்ணில காணாமையால் அது பெட்டகம் என எழுதிட்டேன் ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  31. கோமதி அக்கா பல் வலி விட்டு விட்டு வந்தால் போய்க் காட்டுவதே சிறந்தது.. நோர்மல் வலி எனில் வீட்டு வைத்தியத்துக்கே நின்று விடும்.. வலிக்கும் பல்லின் மேல் கராம்பைக் கொஞ்ச நேரம் வைத்திருக்க வலி குறையும்.

    பதிலளிநீக்கு
  32. //ஹையோ கோமதி அக்கா வெடி சோடீஈஈஈஈஈஈஈ.. நான் தான் பிழையாச் சொல்லிட்டேன்ன் நீங்க சொன்னதும்தான் நினைவுக்கு வந்துது நாங்களும் “பத்தாயம்” எனத்தான் சொல்லுவோம்ம், ஆனா இப்போ பல வருடமா கண்ணில காணாமையால் அது பெட்டகம் என எழுதிட்டேன் ஹா ஹா ஹா:))..//

    அதிரா இதற்கு போய் வெடி சோடீஈஈஈஈஈஈஈ. எல்லாம்.
    பத்தாயம் நினைவுக்கு வந்ததே!
    வீட்டு வைத்தியம் பார்த்து விட்டேன், கேட்கவில்லை. நாளை கண்டிப்பாய் போக வேண்டும்.
    மீள் வருகைக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  33. குளுமை என்று கேள்வி பட்டது இல்லை தேவகோட்டை ஜி.
    உங்கள் பக்கம் சொல்வார்களா? (தேவகோட்டையில்)
    மீள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. >>> இப்போது யார் கும்பிடுகிறார்கள் அந்த அத்தையை?...<<<

    நான் தான் முன்னின்று செய்யவேண்டும்...
    ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கின்றது...

    ஆடி வெள்ளியில் எனது மூத்த தம்பி சிறப்பாகச் செய்கின்றான்..
    இளையவனும் செய்கின்றான்...

    விதியின் சதியோ.. தெரியவில்லை..
    எனக்கு அந்த பாக்கியம் எப்போது கிடைக்குமோ தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  35. ஆடி வெள்ளியில் எனது மூத்த தம்பி சிறப்பாகச் செய்கின்றான்..
    இளையவனும் செய்கின்றான்.//

    தம்பிகள் செய்கிறார்களே ! அது போதும்.
    குடும்பம் நன்றாக இருக்கும் என்பார்கள்.
    உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது கும்பிடுங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எப்போது முடியுமோ அப்போது கும்பிடுங்கள்... குடும்பம் நன்றாக இருக்கும்... வாழ்த்துகள்.. ///

      தங்களது அன்பினுக்கும்
      வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  36. இது என்ன பெட்டி? ரொம்ப சஸ்பென்ஸாக இருக்கே

    பதிலளிநீக்கு
  37. பாத்திரங்கள் அல்லது முக்கிய கோப்புகள், புத்தகங்கள் வைக்க ??

    பதிலளிநீக்கு
  38. இப்படி ஒரு மரப்பெட்டி எங்கள் வீட்டில் இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியாது. எங்கள் வீட்டில் பித்தளை பாத்திரம் பொட்டு வைக்கக் கூட இப்படி பெட்டி உண்டு.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்.
    நாளை வாருங்கள் தெரிந்து விடும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    இல்லை ராமலக்ஷ்மி.
    நாளை பார்க்கலாம்.
    நன்றி கருத்துக்கு.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    அந்தக் காலத்தில் நிறைய வீடுகளில் பாத்திர பெட்டிகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள் எல்லாம் இந்த மாதிரி பெட்டியில் வைத்து எடுப்பார்கள்.

    நாளை இதன் உபயோகம் தெரியும் நாளை அவசியம் வாருங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  42. நான் குளுமை என்று சொன்னது பெட்டியை அல்ல!
    டென்மார்க் சகோதரி சொன்ன நெல் கொட்டி வைப்பதை.

    பதிலளிநீக்கு
  43. வாங்க தேவகோட்டை ஜி
    , வாழ்க வளமுடன்.
    வேதா. இலங்கா திலகம் சொன்னதை தான் குளுமை என்றீர்களா?
    சரி சரி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோ, வாழ்க வளமுடன்.
    உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. இது கள்ளிப் பெட்டி என்றும் சொல்லுவார்கள் ஆனால் கள்ளிப் பெட்டி இப்படியான நல்ல மரத்தில் இருக்காதே. இது பாத்திரங்கள், புத்தகங்கள் போட்டு வைக்க உதவும் பெட்டி போல் இருக்கு. வெயிட் அதிகமாக இருக்கும். பத்தாயம் இல்லை அது பெரிதாக இருக்குக்ம்...எங்கள் வீட்டிலும் இருந்தது முன்பு கிராமத்தில் கோமதிக்கா


    கீதா

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    கிராமத்தில் எல்லோர் வீடுகளிலும் இருக்கும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு